பிஜி மோகன் , எல் ஆர் சுந்தர பாண்டி ஆகிய இரண்டு இயக்குநர்க்ளும் இணைந்து சத்யராஜை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறார்கள் . பர பரப்பாக ஓடும் திரைக்கதை , பிரமாதமான எடிட்டிங் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இவை மூன்றும் மட்டுமே ஒரு படத்தைக்காப்பாற்றுமா? என்பதைபார்ப்போம்
ஸ்பாய்லர் அலெர்ட்
காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம் டெலி ஃபோன் கால் வருகிறது . நக்ரின் முக்கியமான பகுதியைக்குறிப்பிட்டு அங்கே ஒரு கொலை , தற்கொலை , விபத்து நடக்க இருப்பதாக அடுத்தடுத்து தகவல் வருகிறது . ஆரம்பத்தில் அது ஏதோ அனாமதேயக்கால் என அலட்சியப்படுத்தும் போலீஸ் அந்தக்குரல் சொன்னபடி ஒவ்வொரு நிகழ்ச்சியும் உண்மையில் நடப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறது
இந்த மர்மக்குரல் நடக்க இருப்பதை முன் கூட்டியே அறிவிக்கும் தீர்க்க தரிசி என மக்களிடையே பாராட்டு பெறுகிறார்., ஏனெனின் போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் முன்பே அந்த நபர் மீடியாக்களுக்கும் தெரிவித்து விடுகிறார்
இந்த மர்மக்குரலோன் யார்? நடக்கும் க்ரைம்களுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம் ? இவன் நிஜமாகவே தீர்க்க தரிசியா? அல்லது இவன் தான் மெயின் வில்லனா? இவனே ஃபோன் பண்ணி தகவல் சொல்லி விட்டு கொலை , விபத்தை நிகழ்த்துகிறானா? என்பதை எல்லாம் கண்டு பிடிக்க ஒரு ஸ்பெஷல் போலீஸ் டீம் அமைக்கப்படுகிறது. அவர்கள் கண்டு பிடித்தார்களா? இல்லையா? என்பது மீதி திரைக்கத
காவல் துறை கட்டுப்பாட்டு கணிணி அறையில் அதிகாரியாகப்பணியாற்றுபவராக ஸ்ரீமன் ஆரம்பக்கட்ட பரபரப்புக்காட்சிகளில் பாராட்டுப்பெறுகிறார். அவரது மனைவியாக தேவதர்சினி கச்சித,மான நடிப்பு
இந்தக்கேசை விசாரிக்கும் போலீஸ் ஆஃபீசர்களாக துஷ்யந்த் ராம்குமார் மற்றும் ஜெய்வந்த் இருவருக்கும் குறை சொல்ல முடியாத நடிப்பு . டெபுடி கமிஷனர் ஆக அஜ்மல் கேரக்டருக்கு ஏற்ற கம்பீரத்துடன் , வேகத்துடன் , துடிப்புடன் படம் முழுக்க வந்தாலும் அவருக்கு வாய்ப்புகள் குறைவே
இது சைக்காலஜிக்கல் த்ரில்லரா? க்ரைம் த்ரில்லரா? என ஆடியன்சை குழப்பும் வகையில் மன நல மருத்துவராக ஒய் ஜி மகேந்திரன் கேர்க்டர் டிசைன் அமைந்துள்ளது . ஆரம்ப கட்டப்படங்களீல் மொக்கையான காமெடி கேரக்டர்கள் செய்து சிரிப்பே வராமல் ஒப்பேத்தும் ஒய் ஜி மகேந்திரன் இது போன்ற கேரக்டர்களில் நடிப்பது ஆறுதல்
குரல் மூலம் கம்பீரமாக அறிமுகம் ஆகி க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை ஏற்படுத்தும் சத்யராஜ் முக்கியமான பங்களிப்பை செய்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக பூர்ணிமா பாக்யராஜ்
மெயின் க்தைக்கு சம்ப்ந்தமே இல்லாமல் சைடு காமெடி டிராக் செய்யும் இமான் அண்ணாச்சி எடுபடவில்லை
பி சதீஷ் குமாரின் திரைக்கதையில் நல்ல வேகம், சரக்கு இருக்கிறதோ இல்லையோ படம் செம ஸ்பீடாக நகர்கிறது ஜெ ல்ட்சுமணனின் ஒளிப்பதிவும் ஜி பாலசுப்ரமணியின் இசையும் படத்துக்கு பக்க பலமாக இருக்கின்றன
சபாஷ் டைரக்டர்
1 ஒரு குறும்படமாக எடுக்க வேண்டிய ஒன் லைன் ஸ்டோரியை 2 மணி நேரப்படமாக சுவராஸ்யமாக இழுத்த விதம்
2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ரோலுக்கு சத்யராஜை தேர்ந்தெடுத்த முடிவு
3 கே ரஞ்சித்தின் அட்டகாசமான எடிட்டிங்
ரசித்த வசனங்கள்
1போலீஸ்காரன்னா தப்பு நடந்த பின் தான் கண்டு பிடிக்க முடியும் , தப்பு நடக்காம பார்த்துக்கறது பொதுஜனங்க கைல தான் இருக்கு
2 அவர் சொல்றதெல்லாம் நடக்குதா? ந்டக்கறதை சொல்றாரா? சொல்லிட்டு அவரே அதை எல்லாம் நடத்தறாரா?
3 நாம் சிலரிடம் பேசும்போது நம்மையும் அறியாம அவங்க மேல அபரிதமான நம்பிக்கை வெச்சுடறோம்
4 தூக்கம் பல வியாதிகளை குணப்படுத்தும்
5 பிறக்கும்போதே அந்தஸ்தோட பிறப்பவங்களை விடு. அந்த அந்தஸ்துக்காக போராடி ஜெயிச்சவங்க சிலர்தா
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டி வி யில் போட்டால் பார்க்கலாம் என்ற அளவு சராசரியான படம் தான் ., ரேட்டிங் 2.25 / 5