மக்கள் மனசு - ஜூ.வி. சர்வே அதிரடி ரிசல்ட்


தொடர் சர்வே நடத்தி வருகிறது ஜூ.வி. 25 கேள்விகள் கொண்ட முதல் கட்ட சர்வே முடிவுகள் கடந்த இரண்டு இதழ்களில் வெளியாகின. அதைத் தொடர்ந்து, 23 கேள்விகள் அடங்கிய இரண்டாம் கட்ட சர்வே பணியை ஜூ.வி. டீம் மின்னல் வேகத்தில் நடத்தி முடித்திருக்கிறது.
2,701 நபர்களை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் சந்தித்தது ஜூ.வி. நிருபர் படை. கிராமம், நகரம் எனப் பலதரப்பட்ட மக்கள் பங்கேற்ற சர்வேயில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். விகடன் இணையதளமான விகடன் டாட் காம் மூலமும் சர்வே நடத்தப்பட்டது. இதில், 5,055 நபர்கள் பங்கெடுத்தனர். மொத்தமாக 7,756 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வே முடிவில் அத்தனை சுவாரஸ்யம்.
மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகியது தொடர்பான கேள்விக்கு... தாமதமான முடிவு, எந்தப் பயனும் ஏற்படாது என்ற இரண்டு பதில்களிலும் சரிசமமாக டிக் அடித்திருந்தனர்.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமா என்ற முக்கியமான கேள்விக்கு, 'ஆம்’ என 75 சதவிகித நபர்கள் கருத்து சொல்லியிருக்கின்றனர்.
தமிழக அமைச்சர்கள் செயல்படவே இல்லை என 52 சதவிகிதத்தினர் சொல்லியிருக்கிறார்கள்.
தி.மு.க-வின் அடுத்த தலைவராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு, ஸ்டாலின் என்று 60 சதவிகித நபர்கள் டிக் அடித்துள்ளனர்.




thanx - vikatan