1. குத்து விளக்கு, குத்து ரம்யா என்ன வித்தியாசம்?
அஞ்சு பக்கமும் திரியோட ஆயிலொட இருந்தா அது குத்து விளக்கு, திரும்புன பக்கம் எல்லாம் ஃப்ரீயா இருந்தா அது குத்து ரம்யா..
------------------------------------
2. ஆல் ஈஸ் வெல் -னு எங்க ஊர்ல சொல்ல முடியாது..
ஏன்?
கிணறு மட்டும் இல்லை, வாய்க்கால், ஏரி, போர் வெல் எல்லாம் இருக்கும்.. எப்படி ஆல் ஈஸ் வெல்னு மட்டும் சொல்ல முடியும்?
---------------------------------
3. டாக்டர்! என்ன சொல்றீங்க? செத்தவன் பிழைக்க ஐடியா இருக்கா? எப்படி?
யாராவது ஒரு பெண்ணை சின்சியரா லவ் பண்ணு... அவ உன்னை தினம் தினம் உயிரோட சாகடிச்சுட்டே இருப்பா..
----------------------------------
4. மோஹனா உன்னை லவ் பண்றா-ன்னு எப்படி சொல்றே?
டைவர்ஸ்னு ஒண்ணு செஞ்சா அது உன்னைத்தான்னு அடிச்சு சொன்னாளே..
-------------------------------------
5. டேய்.. புத்திசாலிப்பசங்க கூட மட்டும் சேர்ந்திரு, அப்போதான் உனக்கு மூளை வளரும்..
டாடி.. பணக்காரங்க கூட மட்டும் சேருங்க, அப்போதான் நிறைய பணம் சேர்த்த முடியும்னு நான் எப்பவாவது சொல்லி இருக்கேனா?
--------------------------------------
6. மிஸ்.. எனக்கு கம்ப்பெனி தர முடியுமா?
ஸாரி, எங்கப்பா கிட்டே இருக்கறது இந்த ஒரே ஒரு கம்பெனி தான், அதை உங்க கிட்டே கொடுத்துட்டா நான் பூவாவுக்கு என்ன பண்ண?
-----------------------------------
7. மிஸ்.. ஐ லவ் யூ
சாரி, இப்போதான் நான் முதன் முதலா உங்களை பார்க்கறேன்
சரி, நான் வேணா போய்ட்டு நாளைக்கு காலைல வரவா?
-------------------------------
8. சார், 3 கோடாலி, விரகு வெட்டி, தேவதை கதையை மெகா பட்ஜெட்ல எடுக்கப்போறோம்..
அதுக்காக அமேசான் காட்டுல சந்தன மரம் வெட்டறவர் தான் ஹீரோன்னு சொல்லி ஃபாரீன் லொக்கேஷன்க்கு கூட்டிட்டு போறதா?
--------------------------------
9. உங்க வீட்டுக்கிணற்றித்தண்ணி இளநீர் மாதிரி இருக்கும்னியே, அவ்ளவ் டேஸ்ட்டா?
ம்ஹூம், அவ்ளவ் கம்மியா..
-------------------------
10. டியர், நீங்க அப்பா ஆகப்போறீங்க..
அய்யய்யோ, நான் ஏதும் செய்யலையே?
பயம் வேணாம்.. நான் தான் ஒரு குழந்தையை தத்து எடுத்தேன்.
------------------------------------
11. தீக்குளிக்கத்தயாரா?ன்னு தலைவர் கேட்கறாரே?
அக்னிப்பரீட்சை வைக்கப்போறார் போல..
---------------------------------------
12. தலைவர் கேரளா போய்ட்டு வந்திருக்காரா?
ஆமா, எப்படித்தெரியும்?
எதிர்கட்சித்தலைவர் செஞ்ச ஊழலை புட்டு புட்டு வைப்பேன்னாரே?
------------------------------
13. தலைவர் ஊழல் கறை படியாதவர்னு எப்படி சொல்றே?
டெயிலி கட்சி ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு வர்றப்போ ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வந்து மக்களை ஐ வாஷ் பண்ணிடுவார்..
-----------------------------
14. ஹீரோ படம் பூரா கேமராவைப்பார்த்து “ கொன்னுடுவேன், தொலைச்சுடுவேன்” அப்டிங்கறாரே?
படம் மிரட்டலா வந்திருக்குன்னு எல்லாரும் சொல்லட்டும்னு தான்
------------------------------------
15. ஐ ஆம் அட்டெண்டிங்க் என் இண்ட்டர்வியூ ( I AM ATTENDING AN INTERVIEW)
தென்?
ஐ வாஷ் இண்ட்டர்வியூ ( eye wash)
------------------------------------------