இந்தப்படத்தில் முரளியை புக் பண்ணப்போனப்போ அவர் இரு வருடங்கள் பிசி அதுக்குப்பின் தான் கதையே கேட்க முடியும் என்றாராம், பின் கதை கேட்டு பிடித்து இருந்ததால் உடனே கால்ஷீட் கொடுத்தாராம்
நாயகனின் நண்பனாக இயக்குநரே நடித்த சம்பவம் பற்றியும் சொன்னார் . அந்த ரோலில் முதலில் நடிகர் கரண் தான் நடிக்க இருந்தாராம். ஏனோ அவர் விலகிக்கொள்ள இவர் நடித்தாராம். லொட லொட என பேசும் டைப்பான இவர் எழுதிய கதையில் நாயகனின் கேரக்டர் டிசைன் பேசவே கூச்சப்படும் கேரக்டராக டிசைன் செய்த விதம் ஆச்சரியம் தான்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு வெட்டாஃபிஸ். நண்பர்களுடன் ஊர் சுற்றுவதுதான் வேலை . வேறு வேலை வெட்டி ஏதும் இல்லை . கடந்த எட்டு வருடங்களாக பூமா என்ற பெண்ணைக்காதலிக்கிறார். ஆனால் அவளிடம் சொல்லவில்லை .ஒரு கட்டத்தில் நாயகி நாயகனின் காதலை தெரிந்து கொள்கிறாள் . அவளும் காதலிக்கிறாள் . ஒரு கட்டத்தில் வீட்டுக்கு விஷயம் தெரிய வந்ததும் இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு வருகிறது . இத்ற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதிக்கதை
ஒன் லைன் ஆகக்கேட்கும்போது வெகு சாதாரணமான , பத்தோடு பதினொன்று மாதிரி கதையாக தெரிந்தாலும் திரைக்கதை , நடிப்பு மூலம் இதை கமர்ஷியல் ஹிட் ஆக்கி விட்டார் இயக்குநர்
நாயகன் ஆக முரளி . அவருக்கு என்றே உருவாக்கப்பட்ட ரெடிமேடு ரோல். காதலை சொல்ல தயங்குபவர் ஆக இதயம் , காலமெல்லாம் காதல் வாழ்க உட்பட 50 படங்களில் நடித்திருப்பார். நடிப்பு கச்சிதம்
நாயகி ஆக சுவலட்சுமி . தமிழ் சினிமா நடிகைகளில் பானுமதி , ரேவதி , சுஹாசினி , நதிய போன்ற வெகு சில நடிகைகள் மட்டும் தான் கிளாமர் காட்டாமல் கண்ணியமான உடை அணிந்து திரையில் தோன்றினர். அந்த பட்டியலில் சுவல்ட்சுமியும் இடம் பிடிக்கிறார். நல்ல , பெரிய கண்கள் அவரது பிளஸ் பாயிண்ட். என் ஃபேவரைட் ஃபிலிம் அவர் நடித்ததில் கோகுலத்தில் சீதை தான்
மணிவண்ணன் அரசியல்வாதியாக கலகலப்பு ஊட்டுகிறார். இயக்குநர் நாகராஜ் நான்கு நண்பர்களில் ஒருவராக வந்து படம் முழுக்க பொரிந்து தள்ளுகிறார்.
நாயகனின் தங்கை ஆக தீபா வெங்கட் .க்ளைமாக்சில் தீபா வெங்கட் - நாகராஜ் லவ் போர்சனுக்கு தியேட்டரில் அபார வரவேற்பு . நாகராஜ் வசன உச்சரிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார். பேசும்போது அவர் புருவங்கள் தானாக உயர்வது அவர் மேனரிசம் போல
நாயகனின் அக்காவாக ரேணுகா பிரமாதமாக நடித்திருந்தார் .இவர் நாயகிஆகவே நடிக்கலாம் போல அழகு
நாயக்னின் தந்தை ஆக கிட்டியும், நாயகியின் தந்தை ஆக ம்லேசியா வாசுதெவனும் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் . நாயகனின் அம்மாவாக வடிவுக்கரசியு ம் , நாயகியின் அம்மாவாக சத்தியப்பிரியாவும் சும்மா வந்து போகிறார்கள் , அதிக வாய்ப்பில்லை
வில்லன் ஆக மகாநதி சங்கர் கச்சிதம் .
ஓவியன் என்பவரின் இசையில் ஏழு பாடல்கள் , அவற்றில் நான்கு பாடல்கள் ஓக்கே ரகம் . அப்துல் ரகுமான் ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை . கே பழனிவேலின் எடிட்டிங்கில் படம் ரெண்டே கால் மணி நேரம் ஓடுகிறது
கதை , திரைக்கதை ,வசனம் , இயக்கம் நாகராஜ்
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் நண்பன் எழுதிக்கொடுத்த மொக்கைக்கவிதையை நாயகன் நாயகியிடம் தர அவள் அதைப்படித்துப்பார்த்து ஆற்றில் பறக்க விடுவது கண்டு நாயகன் பதறும் காட்சியும், அதற்கான விளக்கத்தை நாயகி கூறுவதும் அழகு
2 ரேணுகாவின் கேரக்டர் டிசைனும் அவர் காதலுக்கு உதவும் பாங்கும் அருமை
3 தீபா வெங்கட் - நாகராஜ் காதல் காட்சிகள் கலகலப்பு
4 படம் முழுக்க நாகராஜின் டயலாக் மாடுலேஷன் , டாமினேசன் குட்
செம ஹிட் சாங்க்ஸ்
1 பூக்கள் மலருதே தினந்தோறும், வாசம் வீசுதே தினந்தோறும், ( ஹீரோ ஓப்பனிங் சாங் )
2 என் வானம் நீ தானா? அதில் நிலவும் நீ தானா? ( ஹீரோ ட்ரீம் சாங்)
3 தேவதையை அசத்திப்புட்டான் நம்ம நண்பன் தான் ( ஃபிரண்ட்ஸ் சாங்)
4 ஓ , கண்ணுக்குள் சுகம் பாய்ந்ததென்ன? பெண்ணுக்குள் சுகம் காண்பது என்ன?
ரசித்த வசனங்கள்
1 நீ ஸ்டேட் கவர்மெண்ட்டா இருந்தாலும் , செண்ட்ரல் கவர்மெண்ட்டா இருந்தாலும் , மேரேஜ் ஆகிட்டா சம்சாரம் தான் உன் அரசாங்கம்
2 நீ இப்படியே ரவுடித்தனம் பண்ணிட்டு இருந்தா ஜெயில்ல கழி தான் திங்கனும்
இப்போ மட்டும் வீட்ல கட்லெட்டா போடறீங்க?
3 அயோக்கியத்தனம், சந்தர்ப்பவாதம் இதைத்தான் அரசியல்ல ராஜ தந்திரம்னு சொல்லிக்கறோம்
4 பொண்டாட்டி சொல்றதுக்கு எல்லாம் ரைட்டுனு சொல்லிட்டா ஃபைட் எதுக்கு வருது ?
5 நிறைய பேருக்கு நிறைய விஷயம் தனிமைல உக்காந்து யோசிக்கும்போதுதான் கிடைச்சிருக்கு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கிராமத்தில் காதலிக்க ஏகப்பட்ட இடங்கள் இருக்க நாயகன் , நாயகியின் காலை கோயில் பிரகாரத்தில் தடவுவது கண்ணியமான காதலையே கொச்சைப்படுத்துகிறது. அப்போது அதைக்கண்டிப்பவரை நாயகி அட்டாக் பண்ணுவதும் செயற்கை
2 நாயகனுக்கு நாயகி மேல் காதலை விட காமமே அதிகமோ என சந்தேகம் கொள்ள வைக்கும் காட்சிகள் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை
3 மகாநதி சங்கர் என்ன தான் வில்லன் கேரக்டர் என்றாலும் நாயகி , நாயகியின் அம்மா, 12 வயசு சிறுமிகள் இருவர் என கண்ணில் படுவோரை எல்லாம் இது நல்லாருக்கே? இதுவும் நல்லாருக்கே என சிலாகிப்பது ஓவர்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - நைண்ட்டீஸ் கிட்ஸ்க்கு மட்டும் பிடிக்கும். முர்ளி - சுவலட்சுமி ரசிகர்கள் பார்க்கலாம், இயக்குநர் நாகராஜ் பேட்டியைப்பார்த்தவர்கள் தாராளமாகப்படம் பார்க்கலாம் . ரேட்டிங் 2. 25 / 5
டிஸ்கி - தனது முதல் படமான மின்னலே டைட்டிலில் வசனம் - நாகராஜ் என க்ரெடிட் கொடுத்த கவுதம் காக்க காக்க படத்தில் வசனம் - நாகராஜ் என போடுவதில் சில சிக்கல்கள் உண்டு , அதனால் கூடுதல் வசனம் - நாகராஜ் என போடவா? எனக்கேட்ட போது நாகராஜ் பெருந்தன்மையாக அதை மறுத்து விட்டாராம், எனவே டைட்டிலில் நாகராஜ் பெயர் இடம் பெறவில்லை, அதற்கான சம்பளம் மட்டும் கிடைத்தது . இதே போல் பல படங்களுக்கு கோஸ்ட் ரைட்டர் ஆக செயல்பட்டதாக சொல்கிறார்
தினந்தோறும் | |
---|---|
இயக்கம் | நாகராஜ் |
தயாரிப்பு | ஆர். லாவன்யா |
கதை | நாகராஜ் |
இசை | ஓவியன் |
நடிப்பு | முரளி சுவலட்சுமி |
ஒளிப்பதிவு | அப்துல் ரகுமான் |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | மதர் மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | 13 பெப்ரவரி 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |