Showing posts with label தா மினி யின் காதலன் பேட்டி. Show all posts
Showing posts with label தா மினி யின் காதலன் பேட்டி. Show all posts

Sunday, August 04, 2013

சே ரன் மகள் தாமினி பேட்டி , தா மினி யின் காதலன் சந் துரு துரு பேட்டி , சேரன் பதிலடி

காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம்காதல் வலையில் சிக்கிய சேரன் மகள், காதலனுடன்தான் செல்வேன் என்று தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். டைரக்டர் சேரன் மகள் தாமினியும், உதவி இயக்குனர் சந்துருவும் காதலிக்கிறார்கள். அவருடைய காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமினி புகார் கொடுத்தார்.

காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சேரன், அவரது மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடம் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் ஷியாமளாதேவி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது தாமினிக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.

தற்போது படித்து கொண்டு இருக்கும் தாமினியிடம் படிப்பை முடித்த பிறகு திருமணம் பற்றி முடிவு செய்யலாம். அதுவரை பெற்றோரிடம் இருக்கும் படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை தாமினி ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்று கூறினார். நேற்று நடந்த விசாரணையின்போது காதலன் சந்துரு வரவில்லை. அவர் கோவைக்கு சென்று இருந்தார். ஆனால் சந்துருவின் அம்மா, அக்காள் ஆகியோர் வந்திருந்தனர். மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.

நள்ளிரவு வரை போலீசார் தாமினிக்கு ‘கவுன்சிலிங்’ கொடுத்தனர். ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை. இந்த நிலையில் இன்று 2–வது நாளாக தாமினிக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தாமினி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்திற்கு இன்று வந்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார். படிக்க கூடிய வயதில் படிக்க வேண்டும், காதல், திருமணம் போன்றவற்றை அதன் பிறகு முடிவு செய்யலாம். பெற்றொருடன் செல்வதுதான் தாமினிக்கு பாதுகாப்பு என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதேபோல காதலன் சந்துருவுக்கும் தனியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவரும் தாமினியுடன் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறினார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, தாமினி காதல் வலையில் விழுந்து விட்டார். அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். அவருக்கு வயது 19 ஆகிறது. சான்றிதழ் பார்த்த பிறகு தான் அவர் மேஜர் வயதை கடந்துள்ளார் என்று தெரிந்தது. அதனால் ஓரளவிற்கு தான் அவருக்கு அறிவுரை கூற முடியும். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரது விருப்பம்.

ஆனால் தாமினி பெற்றோருடன் செல்ல விரும்ப வில்லை. காதலனுடன் செல்லவே விரும்புகிறார் என்றார். இதற்கிடையே சேரனின் மனைவி செல்வராணி நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார். கணவர் மீது போலீசில் மகள் புகார் கொடுத்தது, போலீசார் விசாரணைக்கு சேரனை அழைத்தது சென்றது போன்றவற்றால் செல்வராணி மன உளைச்சலுக்கு ஆளானதால் அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் டைரக்டர் சேரன் மகள், காதலன் நேரில் ஆஜர்



டைரக்டர் சேரன் மகள் தாமினியை காதலிக்கும் உதவி டைரக்டர் சந்துரு இன்று காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சேரன் மகள் தாமினியும் நானும் இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். சேரனுக்கு தெரிந்ததும் என்னை மிரட்டினார். மகளுடன் பேச் கூடாது என்றார். நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். அதன் பிறகு சேரனிடம் மன மாற்றம் ஏற்பட்டது. இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார். சந்தோஷப்பட்டோம்.

இந்த நிலையில் தாமினிக்கு உடல் நிலை சரி இல்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து போனார். கோடம்பாக்கம் பெட்ரோல் பங்கில் வைத்து சேரன் பெரிய டைரக்டர் அவர் மகளை மறந்து விடு இல்லாவிட்டால் காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என்று சொல்லிவிடுவோம். நீ சினிமாவில் இருக்கிறாய் உன்னை வளர விட மாட்டோம் என்று அச்சுறுத்தினர். அப்போது சேரனும் ஆட்களுடன் அங்கு வந்தார். இவனிடம் என்ன பேச்சு என்று சொல்லி சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை அடித்தனர் நான் அங்கிருந்து ஓடினேன்.

ரோட்டில் என்னை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இது பற்றி எனது குடும்பத்தினருக்கு தெரிந்ததும் பயந்தனர். சேரன் செல்வாக்குள்ள டைரக்டர். அவரால் உன் உயிருக்கு ஆபத்து வரலாம். எனவே காதலை விட்டு விடு என்று நிர்ப்பந்தித்தனர். நான் மறுத்தேன். இதனால் கோவையில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டனர். என்னை சேரன் மிரட்டியது தாமினிக்கு தெரிய ஆரம்பித்து உள்ளது. இதனால் அவர் காலேஜ் போவதாக பொய் சொல்லி விட்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். எனக்கு போன் செய்து தகவல் சொன்னார்கள். நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லும் படி கூறினேன். காதலில் நான் உறுதியாக இருப்பேன்.

இவ்வாறு சந்துரு கூறினார்.

பின்னர் போலீசார் அவரிடம் கவுன்சிலிங் நடத்தினார்கள்.


நன்றி - மாலை மலர்


4


: சினிமா இயக்குனர் சேரன் மகள் தாமினி, சந்துரு காதல் விவகாரம் மற்றும் மிரட்டல் புகார் குறித்து, சென்னை, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று நடந்த விசாரணையில், ஏராளமான உதவி இயக்குனர்கள் குவிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேரன் மகள் தாமினி புகாரை அடுத்து, தாமினி, சந்துரு தரப்பினரிடமும், சேரன் தரப்பினரிடமும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் துவங்கிய பேச்சு வார்த்தை, நேற்று இரவு வரை நீடித்தது. ஓட ஓட விரட்டி அடித்தனர்

புகார் குறித்து சந்துரு கூறியதாவது: துவக்கத்தில் எங்கள் காதலை அங்கீகரித்த சேரன், பின், என்னை மிரட்டத் துவங்கினார். தாமினியை மறந்து விடும்படி வற்புறுத்தினார். கோடம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு அழைத்துச் சென்ற சிலர், "என்னை காரை ஏற்றி கொன்று விட்டு, விபத்து என்று கூறி விடுவோம்; தாமினியை மறந்து விடு' என்றனர்.

மேலும், "சினிமாவில் உன்னை வளர விட மாட்டோம்' என்றும் அச்சுறுத்தினர். சேரன் உள்ளிட்டோர் என்னை சாலையில், ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனால், என் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதால், நான் கோவைக்கு சென்று விட்டேன்.

என்னை சேரன் மிரட்டுவது தாமினிக்கு தெரிய வந்ததை அடுத்து, அவர் கல்லூரிக்கு செல்வதாகக் கூறி, எங்கள் வீட்டுக்கு வந்தார். அவருடன் என் குடும்பத்தாரும் சென்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இவ்வாறு, அவர் கூறினார். போலீசார் கவுன்சிலிங்
ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், தாமினி மற்றும் சந்துருவுக்கு, போலீசார், கவுன்சிலிங்

அளித்தனர். அப்போது, தாமினி தன் காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. "படிப்பு முடிந்த பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாம்; அதுவரை பெற்றோரிடம் இருக்கலாம்' என, போலீசார் தாமினியிடம் தெரிவித்தனர். ஆனால், தாமினி பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது. எப்படியும் தாமினியை அழைத்துச் செல்வதில், சேரன் தரப்பினர் உறுதியாக இருந்தனர். அதே போல் தாமினி, சந்துரு தரப்பிலும் அவர்களது காதலில் உறுதியாக இருந்ததால், போலீசார் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையில், தொடர்ந்து இழுபறி நீடித்தது. சேரனுக்கு ஆதரவாக, 50க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குவிந்தனர். ஒரு கட்டத்தில், சந்துரு குடும்பத்தாரை, அவர்கள் மிரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால், காவல் நிலையத்தில் இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தற்கொலை முயற்சி வதந்தி



நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் சேரனின் மனைவி செல்வராணிக்கு, திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், தற்கொலைக்கு முயற்சித்ததாக வதந்தி பரவியது.

பின்னர், ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மயங்கி விழுந்தார்; அதனாலேயே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என, மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

நன்றி- தினமலர் 



சேரன் பேட்டி


நான் காதலுக்கு எதிரானவன் அல்ல, அதேசயம் எனது மகளுக்கு கணவராக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் சேரன்.

பிரபல இயக்குனரும், நடிகருமான சேரனின் 2வது மகள் தாமினி(வயது 20), தனது தந்தைக்கு எதிராக நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.


அதில், சேரன் தன்னை காதலனிடம் இருந்து பிரிக்க பார்ப்பதாகவும், காதலனை கொல்ல நினைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் இன்று சேரன் மகளின் காதலன் சந்துரு மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.


அதில், சந்துரு செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனது மகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு அச்சுறுத்தியதாகவும், பின்னர் தனது மகளை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.


கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேரன்,


நான் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பவன் அல்ல.
நானும் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். நானும், என் மனைவியும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம்.
எனது மகள் தாமினி சந்துருவை காதலிப்பதாக கூறியதை நான் ஏற்றுக்கொண்டேன்.



ஆனால் படிப்பு முடியும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டு கொண்டேன்.
இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் எனது மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது.


அப்போது அந்த பையன்(சந்துரு) தன்னை டார்ச்சர் செய்வதாகவும், பயமாக இருப்பதாகவும் எனது மகள் கூறினாள்.


உடனே உனக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த பையனை விட்டுவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன்.


இது தொடர்பாக 10 தினங்களுக்கு முன்னர் காவல்துறை ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தேன். இந்நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.
எனது மகள் எனக்கு எதிராக நேற்று காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளாள்.




ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது?


நியாயமானதுதானே..? என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கமிஷனர் அலுவலகத்திற்கு சேரனுடன் இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், கரு. பழனியப்பன், நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.