Showing posts with label தரவரிசை. Show all posts
Showing posts with label தரவரிசை. Show all posts

Monday, December 13, 2010

நெம்பர் ஒன் ஸ்டார் ரஜினியின் டாப் 10 படங்கள்



தமிழ்நாட்டில் எம் ஜி ஆருக்கு அடுத்ததாக மக்களிடையே பிரம்மாண்டமான வரவேற்பு பெற்றவர் யார் என்பதில் யாருக்குமே கருத்து வேற்றுமை இருக்க முடியாது.கரிஷ்மா எனப்படும் ஆகர்ஷ்ண சக்தி ரஜினிக்கு உண்டு.வேறு எந்த நடிகருக்கும் இந்த அளவு ரசிகர்களும் இல்லை.ரஜினியின் தோல்விப்பட வசூல்  மற்ற ஒரு நடிகரின் வெற்றிப்பட வசூலுக்கு நிகர் என்றால் ரஜினியின் வெற்றிப்பட வசூல் எவ்வளவு இருக்கும் என சொல்லத்தேவை இல்லை.ரஜினி படங்களின் டாப் 10 பட வரிசை எழுத அழைத்த நல்ல நேரம் சதீஷ்குமார்,  முறைமாமன் கார்த்திக் குமார் இருவருக்கும் நன்றி சொல்லி அவர்கள் அழைத்து மிக தாமதமாக எழுதுவதற்கு ஒரு சாரி சொல்லி கட்டுரையை தொடங்குகிறேன்.ரஜினியின் பிறந்த நாள் அன்று எழுதலாம் என தள்ளிப்போட்டு விட்டேன்.

10. நினைத்தாலே இனிக்கும். - கே பாலச்சந்தரின் படங்களில் மிக ஜாலியான படம்.கதை ஒரே வரியில் சொல்லி விடலாம்.படத்தின் ஹீரோ கமல் என்றாலும் ரஜினி இதில் செம கலக்கலாய் பண்ணி இருப்பார்.படம் முழுக்க சம்போ என்ற பஞ்ச் அடிக்கடி சொல்வார்.அந்தக்காலத்தில் அது ஃபேமஸ்.சம்போ சிவ சம்போ சிவனே மந்திரம் பாட்டுக்கு ரஜினியின் எக்ஸ்பிரஸ்ஸன் மார்வலஸ்.இதில் உதட்டில் ஸ்டைலாக சிகரெட் தூக்கிப்போடும் சீன் செம ஹிட்.பந்தயம் வைத்து கடைசி தடவை தூக்கிப்போடும்போது அவருக்கு கை நடுங்கி போட்டியை கேன்சல் பண்ணுவது செம காமெடி.


9. முள்ளும் மலரும் -ஸ்டைலுக்கு மட்டும்தான் ரஜினி,ஃபைட் தவிர அவருக்கு வேறு சரக்கில்லை என்று கதை கட்டிக்கொண்டிருந்தவர்களின் வாயை அடைக்கும் வண்ணம் பிரமாதமான குணச்சித்திர நடிப்பை வாரி வழங்கி இருப்பார்.நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாட்டு செம ஹிட் மேலும் அந்தப்பாட்டுக்கு ரஜினியின் இன்வால்மெண்ட் அருமை.


8. தில்லுமுல்லு - ரஜினிக்கு முதல் முழு  நகைச்சுவைப்டம் தம்பிக்கு எந்த ஊரு என பலர் நினைத்துக்கொண்டு உள்ளனர்.ஆனால் தில்லுமுல்லுதான் அவருக்கு செம ஹிட் காமெடி படம்.மீசை இல்லாமல் ஒரு ரஜினி ,மீசையுடன் ஒரு ரஜினி என நம்ப வைத்து கோல்மால் பண்ணுவது ,தேங்காய் சீனிவாசன் ஏமாறுவது இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது.

7.வேலைக்காரன் - பொதுவாக ரஜினி சிகை அலங்காரத்தில் அவ்வளவாக அக்கறை காண்பிக்க மாட்டார்.கலைந்த முடிதான் அவருக்கு அழகு,அதை ஸ்டைலாக ஓரம் ஒதுக்கும் அவர் ஸ்டைலுக்கு விசில் அடிக்க தமிழ்நாட்டில் கூட்டம் காத்துக்கொண்டிருக்கும்.அவரே மிக அக்கறை எடுத்து அழகாக தலை சீவி வந்தார் என்றால் அது வேலைக்காரன்தான்.கோல்டு ஃபிஷ் என வர்ணிக்கப்பட்ட அமலா அவருக்கு ஜோடி என்பது ஒரு காரணம்.இந்தப்படத்தில் ரஜினி இங்கிலீஷ் பேசும் ஸடைல் செம ஹிட்,இதற்குப்பிறகு வந்த பல படங்களில் அப்படி இரு சீன் வைக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் கேட்டு வாங்கினர்.தொடர்ந்து 3 படங்கள் சரியாக ஓடாத நிலையில் இந்தப்படம் மெகா ஹிட் ஆகி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.



6.அண்ணாமலை - இந்தப்படத்தில்தான் முதன்முதலாக டைட்டிலில் ர ,  ஜி  ,னி என ஒவ்வொரு எழுத்தாக வந்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றது.இந்தப்படத்திலிருந்துதான் அதே ஸ்டைல் தொடரப்பட்டது.நான் பாட்டுக்கு என் வழில போய்ட்டிருக்கேன்,வீணா என்னை சீண்டாதீங்க என அவர் பேசிய பஞ்ச் டயலாக் செம ஹிட்.இந்தப்படம்தான் அவரது ரசிகர்களிடம் அவர் அரசியலுக்கு வரப்போறார் என எதிர்பார்க்கவைத்த படம்.ஓப்பனிங்க் சாங்கில் வந்தேண்டா பால்காரன் பாட்டு ரஜினியின் அறிமுகம் செம கலக்கல்.

5. மாப்பிள்ளை - சவால் விடும் கேரக்டர் எப்போதும் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்தமானது.இதில் மாமியாருடன் சவால் விட்டு ஜெயிப்பது சூப்பராக இருக்கும்.உன்னைத்தான் நித்தம் நித்தம் அக்கம் பக்கம் பாட்டுக்கான் டான்ஸ் வித்தியாசமான ஸ்பீடு ஸ்டெப்ஸ் கலக்கி இருப்பார்

4.மன்னன் - ஒரு சூப்பர் ஸ்டார் கன்னத்தில் அறை வாங்குவது மாதிரி நடிக்க ஒப்புக்கொண்டதே அவர்து பெருந்தன்மையை காண்பிப்பது.விஜயசாந்திக்கு சரி சம கேரக்டர்.இருவரும் மோதிக்கொள்ளும் ஒவ்வொரு சீனும் தூள்.இதில் ரஜினி கூலிங்க் கிளாஸ் உடன் தொன்றும் முதல் சீன் கலக்கல்.மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ பாட்டில் ரஜினி ராஜா கெட்டப்பில் ஒரு நடை நட்ப்பாரே ,சோ க்யூட்.

3. தளபதி - மணிரத்னம் ரஜினி இணைந்த இந்தப்படம்தான் முதன்முதலாக ரஜினி நடித்த படங்களில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளானது.ஈரோடு அபிராமி தியேட்டரில் பால்கனி டிக்கெட் ரூ 6 க்கு விற்கப்பட்ட டைமில் இந்தப்பட டிக்கெட் ரூ 90 க்கு விற்கப்பட்டது.ரேஷியோ அடிப்படியில் பார்த்தால் இது எந்திரன் டிக்கெட் ரேட்டை விட அதிகம்.(எந்திரன் ரூ 50 டிக்கெட் ரூ 250க்கு விற்கப்பட்டது) தளப்தி பட டிக்கெட் 15 மடங்கு அதிகமாக விற்கப்பட்டது.

இந்தப்படத்தில் ரஜினி படம் முழுக்க ஒரு இறுக்கமான முகத்துடன் நடித்துஇருப்பார்.அடி ராக்கம்மா கையைத்தட்டு பாட்டுக்கு அவரது  உற்சாகத்துள்ளல் டாப்
1.தேவா உயிர் பிழைச்சுடுவான்
யார்?டாக்டர் சொன்னாரா?
இல்லை ,தேவாவே சொன்னான்.

2. வெறும் பணம்.

3. தப்பு செஞ்சான் ,அடிச்சேன்,போயிட்டான்.

4. உன் தம்பின்னு தெரிஞ்சுமா நீ எனக்கு சப்போர்ட்டா இருக்கே?ஏன்? ஏன்?

ஏன்னா நீ என் நண்பன்.

இந்த டயலாக் பேசும்போது ரஜினியின் முக உணர்ச்சிகளும் ,ரசிகனின் ரசிப்புத்தன்மையும் அட்டகாசம்.


2.படையப்பா - இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியக்காரணம் ரம்யா கிருஷ்ணன் கேரக்டர் வில்லி என்பது மட்டும் அல்ல ,அவர் ஜெயலிலிதா மாதிரி சித்தரிக்கபட்டதும் ஒரு காரணம்.ரஜினி ரம்யாவை எதிர்த்து டயலாக் பேசும்போது ஜெவையே எதிர்ப்பதாய் ரசிகர்கள் ஆரவாரம் இட்டனர்.ரம்யா சேர் போடாமல் அவரை நிற்க வைத்து அவமானப்படுத்தும்போது தோளில் இருந்த துண்டால் ஊஞ்ச்லை இறக்கி அமர்வது ஒரிஜினல் ரஜினியின் அக்மார்க் முத்திரை.


1.பாட்ஷா - இது போல் ஒரு படம் இதுவரை வந்ததும் இல்லை,இனி வரப்போவதும் இல்லை.கமிஷனர் ஆஃபீசில் தம்பியின் போலீஸ் வேலைக்காக ரஜினியை பார்க்க அழைக்கப்பட ரஜினி ஒரு நடை நடந்து வருவாரே...வேறு எந்த நடிகராலும் நடக்கவே முடியாது.அதே போல் தங்கைக்கு காலேஜில் சீட் கேட்கும் சீனில் பிரின்சில் ரூமில் அவர்து ஸ்டைல் செம.வெளியே வந்ததும் சீட் எப்படி கிடைச்சது?என்ன சொன்னே? உண்மையை சொன்னேன் என தெனாவெட்டாக ரஜினி சொல்லும்போது கைதட்டல் தியேட்டரை குலுக்கும்..இடைவேளை வரை பொறுமைகாக்கும் ரஜினி தங்கை உதட்டில் ரத்தம் பார்த்ததும் பொங்கி பாய்வது தூள்.அவர் காக்கிச்சட்டையை இடதும் வலமுமாக இழுத்து விட்டு ஸ்டைலாக நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்ற வசனம் பேசும் ஸ்டைல் சரித்திரப்பிரசித்தி பெற்றது.

டிஸ்கி - 1  : நெம்பர் ஒன் என டைட்டில் வைத்ததற்கும் ,இந்த வார தமிழ்மணத்தில் நெம்பர் ஒன் பிளேஸ் கிடைத்ததும் எதேச்சையானவை,திட்டமிட்டு வைக்கப்படவில்லை.(தன்னடக்கமாம்)

டிஸ்கி 2  - தமிழ்மணம் டாப் 20 யில் முதல் வாரம் 13 வது இடம், 2வது வாரம் 13 வது இடம், 3வது 4 வது வாரம் 10 வது இடம்,5வது வாரம் 13வது இடம்,6வது வாரம் 2ம் இடம், 7வது வாரம் முதல் இடம் என தொடர்ந்து எனக்கு இடம் அளித்த  தமிழ்மணத்துக்கும்,உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

டிஸ்கி 3 -  சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவர்களுக்கு

1.

அய்யனார் - சஸ்பென்ஸ் திரில்லர் - சினிமா விமர்சனம்

2.

விருதகிரி -பிரச்சார நெடி - சினிமா விமர்சனம்

 

3. கே பாக்யராஜ் டைரக்‌ஷனில்

சித்து + 2 சினிமா விமர்சனம்