Showing posts with label தயாரிப்பு செலவு. Show all posts
Showing posts with label தயாரிப்பு செலவு. Show all posts

Wednesday, March 18, 2015

தமிழ் திரையுலகம் 3 மாதங்கள் முடக்கம்?- மக்கள் கருத்து


கோப்புப் படம்: பிஜோய் கோஷ்
தமிழ் திரையுலகை 3 மாதங்கள் முடக்க கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தாணு பொறுப்பேற்ற பிறகு அதன் பொதுக்குழு நேற்று முதல் முறையாக கூடியது. இதில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்குழுவில் பேசிய தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் “தற்போது ‘கியூப்’ தொழில்நுட்பத்துக்கு நிறைய பணம் செலவாகிறது. சென்சாரில் நீக்கச் சொன்ன காட்சியை கியூபில் நீக்கவேண்டுமென்றால் அதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்கிறார்கள்.
இதுபோன்ற பல்வேறு விஷயங்களால் படத்தை தயாரிப்பதற்கான செலவு அதிகமாகி வருகிறது” என்றார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தயாரிப்பாளர்கள் படத்தை தயாரிப்பதில் உள்ள சிரமங்களைப் பற்றி பேசினார்.
ஒரு கட்டத்தில் திரையுலகம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் 6 மாதங்களுக்கு முடக்கிவைக்க வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மூன்று மாதங்களுக்காவது திரையுலகப் பணிகளை முடக்கிவைக்க வேண்டும் என்று இப்ராஹிம் ராவுத்தர் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் “மூன்று மாதக் காலத்துக்கு திரையுலகம் முடக்கப்படும்” என்றார். அனைத்து தயாரிப்பாளர்களும் இதற்கு கைதட்டி ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இதைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, இப்பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை.
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜாவுக்கு விழா எடுப்பது, விளம்பரங்களை கட்டுப்படுத்துவது, தொலைக்காட்சி களுக்கு படங்களின் உரிமைகளை வழங்குவது உள்ளிட்ட சில விஷயங்களோடு தனது உரையை முடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழ் திரையுலகை முடக்குவது குறித்த இறுதி முடிவை தயாரிப்பாளர் சங்க செயற்குழு எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது. செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.
பொதுக்குழுவில் நடந்த விஷயங்கள் குறித்து தயாரிப் பாளர் தாணுவைத் தொடர்புக் கொண்டு கேட்டபோது, “தமிழ் திரையுலகை முடக்குவது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது. நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் என பல்வேறு சங்கங்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவரிடமும் பேசித்தான் இறுதி முடிவு எடுக்க முடியும். தற்போது தமிழ் திரையுலகில் படம் ஆரம்பிக்கும் போது தயாரிப்பாளர்கள் பணக்காரர் களாக இருக்கிறார்கள்.
படம் முடிவடையும் போது அவர்கள் ஒன்றுமே இல்லாத வர்களாக ஆகிவிடுகிறார்கள். சினிமா தொடர்பான அனைத்து விஷயங்களிலும் செலவுகள் கூடிவிட்டது” என்றார்.


  • Vikram  

    திரைப்பட துறை என்பது ஒரு மிகவும் ஆபத்தான துறை. அந்த காலங்களில் தான் தயாரிப்பாளர்கள் இதில் பணம் சம்பாதிக்கலாம் என்கிற நிலை இருந்தது. இப்போது அப்படி இல்லை. கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற இத்தொழில் உபயோக படுகிறது. பெரும் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பயன் படுத்துகின்றனர். சிறு தயாரிப்பாளர்கள் நிலை தான் மோசம். அவர்களை சீர் குலைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது திருட்டு டி வி டி மற்றும் இணையம். இப்போதெல்லாம் எந்த ஒரு படமும் திரையில் பார்பதற்கு இணையான அளவிற்கு தரத்துடன் திருட்டு தனமாக வந்து விடுகிறது. அதுவும் படம் வந்த அடுத்த நாளே. திரையரங்கில் வேலை பார்க்கும் ஊழியர்களே இதனை செய்கின்றார்கள். பத்து வருடங்களுக்கு முன் இந்த பிரச்சனை இருந்தாலும் அப்போதெல்லாம் மிக மட்டமான தரத்துடனே கிடைக்கும். இப்போது அப்படி இல்லை. நான் சமீபத்தில் வந்த ஒரு படத்தை முதல் நாள் பார்த்து விட்டு வீடு திரும்பினேன். என் நண்பன் அதே படத்தை லேப்டாப்பில் எனக்கு காட்டினான். நாம் அனைவரும் திரைப்படங்களை திரையரங்கில் மட்டுமே பாப்போம் என்று உறுதி எடுத்தால் தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள்.
    Points
    1705

    about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       


    • Ramani  

      திரைப்படங்களே எடுக்காதீங்க எல்லோரும் பழையபடி விவசாயம் செய்யுங்கள் ஒன்னும் கேட்டு போகாது ஐந்து லக்ஷம் பேருக்கும் அம்மா உணவு தண்ணீர் சிமெண்ட் டிவி மிசி க்ரிண்டெர் இன்னும் என்னவெல்லாம் தேவையோ இலவசமாக வாங்குங்கள் திரை அரங்குகளை நல்ல தமிழ் பள்ளிகளாக மாற்றி திராவிட இயக்கதிளுருக்கும் அனைவருக்கும் இலவச கல்வி வழங்குங்கள் இன்னும் எதாவது யோசினை வேண்டுமென்றால் சொல்லுகிறேன் - கடைசியாக ஒன்று சம்படிதவர்களை மற்றவர்களுக்கு திருப்பி கொடுக்க சொல்லுங்கள்,
      Points
      920

      about 15 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 


      • Kanan  

        அதிக சம்பளம் தரவேண்டாம் .சரி ஆனால் அதே நடிகருக்கு மார்க்கெட் போனால் சீந்துவீர்களா?
        Points
        3165

        about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


        • JP  

          இத முதலில் செய்யுங்கள்...உங்களுக்கு கோடி புண்ணியமாவது கிட்டும். உடனே திரை பட தொழிலாளர்கள் வெகுண்டு எழுவார்கள், அவர்களுக்கு என்ன..!! திரைப்படங்களில் என்ற பெயரில் எது காண்பித்தாலும் பரவாயில்லை...!!! வெளியில் செல்லும் மகன், கணவர், தகப்பன் அனைவரும் பத்திரமாக வீடு சேர வேண்டும் என்ற கவலை படும் நிலை இருக்கும் போது வெளியில் செல்லும் பெண்கள் பற்றின பாதுகாப்பை குறித்து சொல்ல வேண்டியது இல்லை.
          Points
          1280

          about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



          • Good decision, because then only most student will concentrate on exam in the month of march, april .....
            Points
            115

            about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


            • Kalyani  

              "தற்போது தமிழ் திரையுலகில் படம் ஆரம்பிக்கும் போது தயாரிப்பாளர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். படம் முடிவடையும் போது அவர்கள் ஒன்றுமே இல்லாத வர்களாக ஆகிவிடுகிறார்கள்". 30 கோடி ,50 கோடி என்று ஒண்ணுத்துக்கும் உதவாத நடிகர்களுக்கு கொட்டிக்கொடுங்கள் பிறகு ஏன் நடுத் தெருவிற்கு வரமாட்டீர்கள்.1 கோடிக்கு மேல் எந்த நடிகருக்கும் கொடுக்க மாட்டோம் என்று முடிவெடுங்கள் உங்களுக்கு நஷ்டமே வராது, நாங்களும் 20,30 ரூபாய்க்கு படம் பார்க்க முடியும்.
              Points
              235

              about 18 hours ago ·   (2) ·   (1) ·  reply (2) · 



              • அருமையான யோசனை நான் இதனை வரவேற்கிறேன்...

                about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 


                • prasath  

                  அருமையான பதிவு கல்யாணி அவர்களே ...

                  about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 



                • பண ஆசையில்தான் இவர்கள் படம் எடுக்கின்றார்கள். நஷ்டம் என்றால் வேறு தொழில் செய்யலாமே ? உங்களை யார் அதிக முதல் போட்டு படம் எடுக்க சொன்னது ? சுய அறிவில்லாத வீண் செலவு செய்யும் இயக்குனர்களை அனுமதிக்காமல். திட்ட மிட்டு செயல் பட்டால் எல்லாம் ஒழுங்காக இருக்கும் . விடுவார்களா ?
                  Points
                  330

                  about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 


                  • Murugan  

                    ஒரு பொறுப்புள்ள முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுபவர் மனைவி உயிரோடு இருக்கும்போதே தனக்கு திருமணமே ஆகவில்லை என்று வேட்புமனுவில் பொய் சொல்கிறார்.அதே மனைவி அவர் பிரதமரான பிறகு தன்னை கொல்ல முயற்சி நடக்கிறது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். இன்று தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்துகிறவர்க்ள் ஏன் மோடியை எதிர்த்து புனிதமான திருமண பந்தத்தை அவமதித்ததற்காக போராட்டம் நடத்தக் கூடாது? குறைந்த பட்சம் சட்டமன்றத்தில் திருமணமான பெண்களை ஆபாசப்படமாகப் பார்க்கிற பிஜேபி எம் எல் ஏக்களை எதிர்த்து போராட்டம் நடத்தலாம் இல்லையா
                    Points
                    605

                    about 19 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 



                    • இதனால் ஒன்றும் குடி முழுகி விடாது.
                      Points
                      13055

                      about 19 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 



                      • ஏன் 3 மாதம் , ஒரு ஒருவருடம் நிறுத்தி வேய்யுங்கள் , ரொம்ப நல்லா இருக்கும், திரைக்கே வராத பல படங்கள் வரும் , மேலும் நல்லா படங்கள் ரொம்ப நாள் ஓட முடியும் .
                      நன்றி - த இந்து