Showing posts with label தயாநிதி மாறன். Show all posts
Showing posts with label தயாநிதி மாறன். Show all posts

Thursday, July 14, 2011

தயாநிதியை அடுத்து உருளும் தலைகள்! காலி ஆகும் திமுக கூடாரம் - விகடன் கட்டுரை

http://www.envazhi.com/wp-content/uploads/2011/06/Dayanidhi-Maran.jpg 
 
தயாநிதியை அடுத்து உருளும் தலைகள்!

டெல்லி ரகசியங்கள்

மாறன் குடும்பத்துக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை போலும்!

 முரசொலி மாறன் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த போதும், பதவிக் காலமான ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட முழுமையாக நீடிக்கவில்லை. பிரதமராக இருந்த வி.பி.சிங் மற்றும் குஜ்ரால் ஆட்சி கவிழ்ந்ததால், பதவியை இழக்க வேண்டி இருந்தது முரசொலி மாறனுக்கு. வாஜ்பாய் காலகட்டத்தில், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மாறனால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியவில்லை.
அதைப்போலத்தான் தயாநிதி மாறனும். கடந்த முறை 'தினகரன்’ இதழில் வெளியான கருத்துக் கணிப்புக் கோபத்தால், தயாநிதி ராஜினாமா செய்தாக வேண்டிய நெருக்கடி. இப்போது உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை காரணமாக, ராஜினாமா செய்துள்ளார்!


ஆ.ராசாவும் கனிமொழியும் கைதானபோது, தயாநிதி மாறன் ஆதரவாளர்கள் வருத்தப்படவில்லை. அதேபோல், இப்போது தயாநிதி குறித்து 'தெஹல்கா’ செய்திக் கட்டுரை வெளியிட்டபோது, அந்த இதழை பாட்டியாலா நீதிமன்றத்தில்வைத்து கனிமொழியும் ஆ.ராசாவும் படித்து மகிழ்ந்த காட்சிகள், டெல்லி மீடியாக்களின் கண்களில் இருந்து தப்பவில்லை.

இவை, தி.மு.க. வரலாற்றின் மிகச் சோகமான இறங்குமுகத்தின் சாட்சியங்கள்!
தயாநிதி பதவி விலகல் குறித்து கருணாநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவராலும் தயாநிதிக்கு வக்காலத்து வாங்க முடியவில்லை. ''உலகத் தில் குறிப்பாக, இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்கு தயாநிதியும் விதிவிலக்கு அல்ல'' என்று சொன்னார்.

''பத்திரிகையாளர்கள் பூதாகாரமாகச் சொன்னதை சி.பி.ஐ. நம்பியது. அதைஉறுதிப் படுத்திக்கொள்ள வழக்குப் போட்டுள்ளது'' என்று ஏற்கெனவே சொன்னவர்தான் கருணாநிதி. பத்திரிகைகள் சொன்ன பொய்யை கருணாநிதி ஏன் நம்பினார்? அப்பாவி ஆ.ராசாவை ஏன் பதவி விலகச் சொன்னார்? அதாவது, தி.மு.க. தலைவர் இன்னமும் தன்னுடைய சகாக்களின் தவறை உணரவோ, ஒப்புக்கொள்ளவோ, முன்வரவில்லை!


தயாநிதி மாறனின் பதவி விலகல் யாரும் எதிர்பாராத திடுக் சமாசாரம் அல்ல. என்றைக்கு ராசா மீது வழக்குப் பதிவு ஆனதோ... அன்றே இதுவும் தீர்மானிக்கப் பட்டது. ''ஆ.ராசா பதவி விலகியே ஆக வேண்டும்'' என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி-க்கள் குரல் கொடுத்தபோது, ''பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் இருந்தே இப்படித் தான் நடக்கிறது. அந்த சமாசாரங்களையும் விசாரிக்க வேண்டும்'' என்று காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், தானே வலியப் போய் விவகாரத்தில் மாட்டிக்கொண்டன.

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக இருந்தார். அடுத்து, அருண்ஷோரி வந்தார். வாஜ்பாய் ஆட்சியில் மூன்றாவதாக இந்தத் துறையைக் கைப்பற்றியவர் தயாநிதி மாறன். சி.பி.ஐ. தன்னுடைய அறிக்கையில் 'மூன்றாவது அமைச்சர்’ என்று சொல்வது, தயாநிதி மாறனைத்தான். அவரது பெயரை இந்த அறிக்கையில் நேரடியாகச் சொல்லாமல், இந்த கோட் வேர்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

http://www.envazhi.com/wp-content/uploads/2011/07/dayanidhi.jpg


தயாநிதி மாறன் குறித்த சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டு புரிந்துகொள்ள கஷ்டமான சுற்றிவளைப்புப் புகார் அல்ல. தமிழகத் தொழில் அதிபர்களில் ஒருவரான சிவசங் கரன், தன்னுடைய ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்தது தொடர்பான ஒரு புகாரை சி.பி.ஐ-யிடம் கொடுக்கிறார். ''என்னுடைய நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக தொலைத் தொடர்புத் துறையிடம் விண்ணப்பம் கொடுத்தேன்.

அவர்கள் லைசென்ஸ் தர மறுத்தார்கள். தரக் கூடாது என்பதற்காகவே தேவை இல்லாத கண்டிஷன்களைப் போட்டார்கள். அதன் பிறகு, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்க தயாநிதி கட்டாயப்படுத்தினார். என்னை மிரட்டினார். அதன் பிறகு, குறைந்த விலைக்கு நான் அதை விற்றேன்.

நிறுவனம் கை மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு தொலைத் தொடர்பு லைசென்ஸ் கிடைத்தது. என்னை மிரட்டியதும், குறைந்த விலைக்கு நிறுவனத்தை விற்கக் கட்டாயப்படுத்தியதும், எனது தொழிலுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது'' என்று தனது வாக்குமூலத்தில் சிவசங்கரன் சொல்லி இருக்கிறார். இவரது பெயரைச் சொல்லாமல், 'ஜென்டில்மேன்’ என்று கோட் வேர்டைச் சொல்கிறது சி.பி.ஐ. தனது அறிக்கையில்!


மூன்றாவது அமைச்சருக்கும் ஜென்டில்மேனுக்கும் நடக்கும் யுத்தம்தான் இந்த வழக்கு. இதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியத்தை சி.பி.ஐ-யும் மத்திய அமலாக்கத் துறையும் கொண்டுவருகின்றன. ''இந்த டீலிங் மூலமாக ஆதாயம் பெற்ற மேக்சிஸ் தன்னுடைய துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.'' என்பதுதான் சி.பி.ஐ. கொண்டுவரப்போகும் குற்றச்சாட்டு.

http://www.writermugil.com/wp-content/uploads/2009/05/mk-fasting1.jpg

அதாவது, கலைஞர் டி.வி. மீது என்ன மாதிரி யான புகார்கள் கூறப்பட்டனவோ, அதேபோன்று இந்த விவகாரத்திலும் வரப்போகிறது. ''நான் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது, எந்த ஒரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்தபோது, நான் அமைச்சராக இல்லை!'' என்று தயாநிதி தரப்பு விளக்கம் வைத்துள்ளது.

''ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் சன் குழுமத்துக்கும் 1998-ம் ஆண்டு முதலே தொடர்புகள் உண்டு'' என்றும் சொல்கிறார்கள். ஆனால், சி.பி.ஐ. இன்னும் என்ன மாதிரியான பூதங்களைக் கோர்ட்டில் கொண்டுவந்து கொட்டப் போகிறது என்று தெரியவில்லை.


''அடுத்து, யாரைக் குற்றப் பத்திரிகையில் கொண்டுவரப் போகிறீர்கள்?'' என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் கிண்டலாகக் கேட்கும் அளவுக்கு, மத்திய அரசாங்கத்தின் முகம் சிதைந்துகொண்டு இருக்கிறது. தயாநிதி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிவசங்கரன் உள்ளிட்ட 10 பேரிடம் வாக்குமூலம் வாங்கி வைத்துள்ளது சி.பி.ஐ.


ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களுக்கு, தயக்கம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு வங்கிகள் மூலமாகக் கடனாகத் தரப்பட்டுள்ளன. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை, பி.ஜே.பி. குறிவைத்து தாக்கி வருகிறது.

எந்தக் கேள்விகளும் கேட்காமல், நிதித் துறை அந்தக் காலகட்டத்தில் செயல்பட்டதன் பின்னணியில் அடங்கி உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும் என்கிறது பி.ஜே.பி.

''மத்திய மந்திரி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ராசா, இந்த ஊழலின் ஒரு பங்குதாரர்தான். இன்னொரு பங்குதாரர் சிதம்பரம்.'' என்கிறது பி.ஜே.பி. இவர்கள் அடுத்ததாக, கபில்சிபலையும் குறிவைத்து உள்ளார்கள். இப்போது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக கபில்சிபல் இருக்கிறார்.

''ரிலையன்ஸ் கம்பெனி தனது தொலைபேசிச் சேவையை கிராமப் பகுதி களில் இருந்து திடீரென ரத்து செய்தது. இது விதிமுறையை மீறிய செயலாகும் என்று சொல்லி தொலைத் தொடர்புத் துறை 650 கோடியை அபராதமாக விதித்தது. அதாவது, 13 மண்டலத்துக்குத் தலா 50 கோடி என்று தொகை முடிவு செய்யப்பட்டது. இந்த 50 கோடியை 5 கோடியாகக் குறைத்து இருக்கிறார் கபில்சிபல். இந்தச் சலுகை மூலமாக அவர் அடைந்த லாபம் என்ன என்று விசாரிக்க வேண்டும்’ என்று பி.ஜே.பி. கேட்கிறது. ஏற்கெனவே, அமைச்சர் சரத்பவார் மீதான குற்றச்சாட்டு எழுந்து அடங்கி இருந்தது. அதையும் மீண்டும் கிளறப்போகிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால், மன்மோகன் சிங் அதிக நாட்கள் நீடிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது! 

நன்றி - விகடன்

Saturday, June 11, 2011

ஏர்செல் ஊழல் vs தயாநிதி மாறன் -அதிர வைக்கும் உண்மைகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_w6TudwSeLIi9hyphenhyphenSEvmFijhf7pY6wvm5A1LjOUmLcbQL5KFVstBp2NnWaiQ5hmbtXsN7XDh0Pqr71e1YBFO9nX5hg9dE-9XoRBlz8fnahqSQpRGio93ep2cDltvLmH7XNPpKIFkgQI14/s1600/Aircel+wifi+service.jpgசிக்கவைத்த சிவசங்கரன்... தவிக்கும் தயாநிதி மாறன்!

16 வருடப் பகையின் கதை

சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி!

'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...!

'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டப்பட்டு இருந்தாலும் அவர் நீதிமன்றத்துக்கு அப்போதே சென்று இருக்கலாம்'' என்று பதில் கூறி இருந்தார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்குவதாக இல்லை!


யார் இந்த சிவசங்கரன்?

சென்னையில் வசிக்கும் 54 வயதாகும் சிவசங்கரன், திருவண்ணா மலைக்காரர். பி.இ. (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (ஹார்வர்டு பல்கலைக் கழகம்) படித்தவர். ஸ்டெர்லிங் குரூப் மற்றும் சிவா வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று ஆரம்பித்து, பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர். பின்லாந்து நாட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று கடந்த 30 வருடங்களில் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டு வந்தாலும், உச்சகட்ட பெரிய டீல் என்றால், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனியிடம் 4,860 கோடிக்கு ஏர்செல் உள்ளிட்ட மூன்று  நிறுவனங்களை விற்று லாபம் பார்த்தது.

 பிறகு, நார்வே நாட்டில் ஷிப்பிங் கம்பெனி, மற்றொரு நாட்டில் மினரல் வாட்டர் பிசினஸிலும் இறங்கினார். மகாராஷ்டிர மாநிலத்தில் ரிசார்ட் பிசினஸ், சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்திலும், தனது பணத்தை முதலீடு செய்தார். லேட்டஸ்ட்டாக, வெளிநாட்டில் படிப்பு முடித்துத் திரும்பிய தனது மகனை ஷிப்பிங் பிசினஸைக் கவனிக்கும்படி பணித்திருக்கிறார்.


கம்ப்யூட்டர் உலகில் நுழைகிறார்!

அது 1983-ம் ஆண்டு. 'கம்ப்யூட்டர்’ என்ற வார்த் தையே பலரை மிரள வைக்கும். அது எப்படி இருக்கும் என்றுகூட அப்போது பலருக்குத் தெரியாது. இனி உலகத்தை இதுதான் ஆட்சி செய்யப் போகிறது என்று மற்ற அத்தனை பேரையும் முந்திக்கொண்டு இனம் கண்டுகொண்ட சிவசங்கரன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜின் அப்பா நடத்திவந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை சகாயமான விலைக்கு வாங்கி, அதற்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்று புதிய பெயர் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில், கம்ப்யூட்டர் என்றாலே லட்சத்தில் விலை சொன் னார்கள். இவர் வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, அதைவைத்து இங்கே கம்ப்யூட்டர் உருவாக்கி, ஒவ்வொன்றையும் சுமார் 33,000 என்று விற்பனை செய்தார். தொலைநோக்குப் பார்வை, கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப மூளை, வியாபார தகிடுதத்தங்கள் என்று அனைத்தையும் சரிவிகிதத்தில் பயன்படுத்தி, ஒரு சில ஆண்டுகளிலேயே மற்ற நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வளர்த்தார்.

அதன் பிறகு சென்னை டெலிபோன்ஸ் 'எல்லோ பேஜ்’ புத்தகத்தை பிரின்ட் பண்ணும்  டெண்டரைக் கைப்பற்றினார்.  கம்ப்யூட் டரை அடுத்து இன்டர்நெட் அறிமுகமானபோது... 'வந்துவிட்டது, அடுத்த புரட்சி’ என்பதை உணர்ந்து கொண்ட சிவசங்கரன், 'டிஷ்நெட் டிஎஸ்எல்.’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன்களில் 'பாரீஸ்தா’ ரெஸ்டாரெண்டுகளை ஆரம்பித்தார். இன்னொரு பக்கத்தில் பிட்னெஸ் சென்டர்களும் நடத்தினார். செல்போன் அறிமுகமானதும், அதன் வீச்சு பலமாக இருக்கும் என்பதை எல்லோரையும்விட மிகமிக முன்னதாகவே மோப்பம் பிடித்த சிவசங்கரன், ஏர்செல் நிறுவனத்தை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு துவக்கினார்.

வேகமாக வளர்ச்சியடைய ஏர்செல் என்ற ஒரு குதிரை போதாது என்பதை உணர்ந்த சிவசங்கரன், 210 கோடி கொடுத்து 'ஆர்பிஜி செல்லுலார்’ என்ற இன்னொரு செல்போன் நிறுவனத்தையும் வாங்கினார்.

சிவசங்கரனின் பாலிசி!

'வியாபாரத்தில் சென்டிமென்ட் பார்க்கக்கூடாது’ என்பது சிவசங்கரனின் தாரக மந்திரம். தான் ஆரம்பித்த டிஷ்நெட் நிறுவனம், எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை என்றதும், சற்றும் தயங்காமல் 270 கோடிக்கு விற்றுவிட்டார்.

கோடிகளில் புரண்டாலும்... அவரின் எண்ண ஓட்டங்கள் எப்போதும் எளிமையானதுதான். தன் சகாக்களிடம் பேசும்போது விஷயத்தை எளிமையாக புரியவைக்க அவர் பல்வேறு உதாரணங்கள் சொல்வதுண்டு. ''என்னோட மனைவி, பிள்ளைகளைத் தவிர நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட விற்பேன்!'' என்று அடிக்கடி சொல்வார்.

''சரவணபவனுக்குப் போற எல்லோருமே இட்லியைத்தான் வாங்குறாங்க. சட்னி, சாம்பாரை வாங்குவதில்லை. ஆனால் சட்னியும் சாம்பாரும் கொடுக்கவில்லை என்றால் இட்லி விற்பனை ஆகாது. அதுபோல, நம்மிடம் கம்ப்யூட்டர் வாங்க வருபவர்களுக்கு நாம் பிரின்டரையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான் கம்ப்யூட்டர் விற்பனை அதிகமாகும்!'' என்பது அவரது பிரபலமான உதாரணம்.

''சிவசங்கரன் தொலைநோக்குப் பார்வை கொண்ட கலர்ஃபுல் தொழில் அதிபர்!'' என்று சொல்பவர்களும் உண்டு. ''ஒரு தொழில் இல்லாமல் பல்வேறு தொழில்களை ஆரம்பித்து நடத்தும் அவரை தொடர் தொழில் தொழிலதிபர்!'' என்றும் சொல்கிறார்கள்.

கம்ப்யூட்டரின் பயன்பாடு மெள்ளத் தொடங்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் சுஜாதாவை தனக்கு ஆலோசகராக வைத்துக் கொண்டவர் சிவசங்கரன். அப்போது உடன்வேலை பார்க்க வந்தவர்தான் கனிமொழியின் கணவர் அரவிந்தன்!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சிறு கட்டடத் தில் அலுவலகம் வைத்திருந்தவர், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் தேனாம்பேட்டை பகுதியில் 24 கோடி களைக் கொடுத்து, ஹரிகந்த் டவர் என்கிற கட்டத்தை விலைக்கு வாங்கி 'ஸ்டெர்லிங் டவர்’ என்று பெயர் மாற்றி னார். அதில் இருந்து அவரை 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார்கள்.

 சிவசங்கரனைப் பற்றி அவரது பிசினஸ் நண்பர்களிடம் கேட்டபோது, ''கடந்த 30 வருடங்களில் அவர் சுமார் 25 தொழில்களில் ஈடுபட்டு இருந்தார். எந்த பிசினஸையும் அவர் தொடர்ந்து நடத்தியது இல்லை. ஒரு தொழிலைத் துவக்குவார்; அதை நன்றாக வளர்ப்பார்; ஒரு லெவலுக்கு வந்ததும், அதைப் பல மடங்கு லாபம் வைத்து வேறு யாரிடமாவது விற்றுவிட்டு வேறு பிசினஸுக்குத் தாவிவிடுவார்.

உதாரணத்துக்கு, ரயில்வே ஸ்டேஷன்களில் காபி ஷாப்-களை பிரமாண்டமாகத் துவங்கி, பிறகு அதை அடுத்தவருக்குக் கைமாற்றிவிட்டார். இதுதான் சிவசங்கரனின் ஸ்டைல். ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு அடிக்கடி மாறியதால், பலத்தரப்பட்ட பிசினஸ் பிரமுகர்களுடன் மோதல், விரோதம் அதிகமானது. இதுவே அவருக்கு நிறைய தொழில்முறை எதிரிகளை உருவாக்கிவிட்டது!’' என்று சொல்கிறார்கள்.

கருணாநிதி, முரசொலி மாறன் அறிமுகம்!

1989-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, டிட்கோ நிறுவனம் சார்பாக பிரபல தொழில திபர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். திடீரென ஒரு பிரமுகர் எழுந்து, 'நான் ஒரு தொழில் அதிபர். பெயர் சிவசங்கரன். டிட்கோவில் போய்க் கடன் கேட்டால், முதலியாரா? ரெட்டியாரா? என்ன சாதி என்றுதான் கேட்கிறார்கள்.

தொழிற்சாலை துவங்குவது பற்றிக் கேட்காமல், இப்படிக் கேட்பது சரியா?’ என்று துணிச்சலாகக் கேட்க... முதல்வர் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தார். 'யாருப்பா நீ? உனக்கு என்ன உதவி வேணும்?’ என்று கேட்டு விசாரித்து, ஒன்றிரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகை செய்தார்.

சென்னை டெலிபோன்ஸ் வெளியிடும் எல்லோ பேஜஸ் டெண்டரை பயங்கரப் போட்டியில் குதித்து வாங்கினார். சென்னையைச் சேர்ந்த பிசினஸ் நிருபர்கள் இதன் பிறகுதான், சிவசங்கரனை நெருக்கமாகக்  கவனிக்க ஆரம்பித்தார்கள்.


தமிழகம் முழுக்க சிவசங்கரன் பிரபலம் ஆனது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை வாங்கியபோதுதான். நாடார் சமூகத்தினர் மத்தியில் பலத்த கொந்தளிப்பைக் கிளப்பியது. 'முரசொலி மாறனின் நண்பரான சிவசங்கரன்தான் இதை வாங்கி இருக்கிறார்’ என்று சொல்லி தி.மு.க-வுக்கு எதிரான பிரச்னையாக மாற்றினார்கள்.

மெர்க்கன்டைல் வங்கி மீட்புக் குழுவினர் ஜெயலலிதாவைப் பார்த்து, அவரது ஆதரவைக் கோரினார். அதன்பிறகு, கணிசமான பங்குகளை மட்டும் நாடார் சமூகத்தவர்களுக்கு கொடுத்தார்.

1995-ம் ஆண்டு தமிழகத்தில் தொலைத் தொடர்புத் துறை லைசென்ஸ் பெற சிவசங்கரன் முயற்சித்தார். 97-98-ல் சென்னையைத் தலைமையகமாகச் கொண்டு ஏர்செல் தொடங்கினார். அப்போது முரசொலி மாறனுக்கும் இவருக்குமான நட்பு அதிகமானது. ஆர்.பி.ஜி. செல் நிறுவனத்தின் பங்குகளை சிவசங்கரன் வாங்க முரசொலி மாறன் உதவி செய்ததாகவும் சொல் கிறார்கள். இந்த நட்பு முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு தொடரவில்லை.

சிவசங்கரனை விரட்டிய சம்பவம்!

2006-ம் வருடம் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஏ.என்.சண்முகம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் (பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கின் எண் சி.சி. 191/2006) கொடுத்தார். அதில், ''சென்னை அய்யப்பன்தாங்கலில் எனக்கு 2.43 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகளைக் கட்டி விற்கும் திட்டத்தைச் செயல் படுத்தலாம் என்று ஸ்டெர்லிங் நிறுவனத் தலைவர் சிவசங்கரன் என்னிடம் கேட்டார்.

அவர் பேச்சை நம்பி, 1.05 ஏக்கர் நிலத்தை மட்டும் பவர் எழுதித் தந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது, அந்த நிலத்தை நான் சிவசங்கரனின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்துவிட்டார்!'' என்று சொல்லப்பட்டது. 

இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார்,  ஸ்டெர்லிங் நிறுவன அலுவலர்கள் ஆறு பேர்களை கைது செய்தனர். நிறுவனத் தலைவர் சிவசங்கரனை விசாரணைக்காக போலீஸ் தேட... சிவசங்கரன் எங்கே போனார் என்று தெரியவில்லை. தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் படியேறினார் சிவசங்கரன்.

ஆனால், அங்கே இவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ''இந்த வழக்கைப் பின்னணியில் இருந்து போட வைத்ததே தயாநிதி மாறன்தான்!'' என்று சிவசங்கரன் ஆட்கள் செய்தியைக் கிளப்பினார்கள்.

இரண்டு தனி மனிதர்களுக்கு மத்தியிலான மோதலாகத் தொடங்கி இன்று இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் போதுதான் இந்தப் பகை யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறது என்பதும் தெரியும்!


தெஹல்காவும் தயாநிதியும்!

''ஏர்செல் கம்பெனியின் சார்பாக 14 சர்க்கிள்களில் செயல்பட, நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தை நொண்டிக் காரணங்களைக் காட்டி, தயாநிதி மாறனின் அமைச்சரகம் தாமதப்படுத்தியது. இது குறித்து, 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி, அமைச்சராக இருந்த தயாநிதிக்குக் கடிதம் எழுதினேன்.

பலன் எதுவும் இல்லை. அதன்பிறகு, என்னுடைய ஏர்செல் கம்பெனியை, தயாநிதி மாறனின் மலேசிய நண்பரான அனந்தகிருஷ்ணின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யச் சொல்லி, எனக்குக் கொலை மிரட்டல் வந்தது. அதனால் வேறு வழி இல்லாமல் ஏர்செல் கம்பெனியின் 74 சதவிகித பங்குகளை அனந்தகிருஷ்ணனின் மலேசிய (மேக்சிஸ் குழுமத்தின்) கம்பெனிக்குக் கைமாற்றினேன்.

என் கட்டுப்பாட்டில் ஏர்செல் இருந்தபோது வருடக்கணக்கில் முயன்றும் கிடைக்காத லைசென்ஸ், அனந்தகிருஷ்ணனின் கைகளுக்கு ஏர்செல் சென்ற ஆறே மாதங்களில் கிடைத்தது!

இந்த  உரிமங்களைக் கொடுத்த நான்கே மாதங்களில் சன் டைரக்ட் டி.வி-க்கு சவுத் ஆசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் என்ற மலேசிய கம்பெனியிடம் இருந்து 600 கோடிகள் முதலீடு வந்திருக்கிறது. இந்த நிறுவனமும் அனந்தகிருஷ்ணனின் நிறுவனம்தான். அதன் பிறகு (அதாவது, பிப்ரவரி 2008-ல் இருந்து ஜூலை 2009 வரை)  சவுத் ஆசியா எஃப்.எம். நிறுவனத்துக்கு அனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் குரூப் மேலும் 100 கோடியை முதலீடு செய்து இருக்கிறது...'' என்று சிவசங்கரன் சொன்னதாக 'தெஹல்கா’ செய்தி வெளியிட்டுள்ளது! 


''சிவசங்கரன் ஒரு மல்டி பில்லியனர். அவரை யாரும் மிரட்ட முடியாது. தவிர, மேக்சிஸ் குழுமம் சன் டி.வி-யில் முதலீடு செய்த காலகட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. தவிர சன் டி.வி-யிலும் நான் பங்குதாரர் இல்லை. ஆகையால், என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தியை தெஹல்கா வெளியிட்டு இருக்கிறது'' என்று சொல்லி தயாநிதி மாறன், தெஹல்காவுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்!


நன்றி - ஜூவி

Tuesday, June 07, 2011

தெஹல்கா ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது,மாட்னாரு தயாநிதி மாறன்


ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு முன்பு டெலிகாம் அமைச்சராக இருந்த தயாநிதிக்கும் தொடர்பும் பங்கும் இருக்கிறதா என்பது தான் இனி அடுத்த கட்ட விசாரணை. எந்த அடிப்படையில் ராசாவும் கனிமொழியும் சரத் ரெட்டியும் பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, அதே அடிப்படையில் தயாநிதி மாறனும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறது தெஹல்கா இதழ். 


தெஹல்காவின் பல முக்கியமான புலனாய்வுக் கட்டுரைகளை எழுதியவரான அஷிஷ் கேத்தனும் ராமன் கிர்பாலும் இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறன் தொடர்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தெஹல்கா சொல்வது என்ன என்று பார்ப்போம். 

தயாநிதி மாறன் மே 2004 முதல் மே 2007 வரை டெலிகாம் அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் நடத்தும் ஏர்செல் கம்பெனி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தொடர்பு சேவை லைசன்சுகளுக்கு விண்ணப்பித்தது. ஆனால் ஒவ்வொரு விண்ணப்பத்தின் மீதும் தயாநிதியின் அமைச்சகம் கேள்விகளை எழுப்பியது. ஏர்செல் பதில் தந்து கொண்டே இருந்தது. ஆனால் லைசன்ஸ் வழங்கப்படவே இல்லை.

இரண்டாண்டுகள் இப்படியே நீடித்த நிலைமை திடீரென மாறியது. சிவசங்கரன் தன் கம்பெனியில் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு, சுமார் 7800 கோடி ரூபாய்களுக்கு விற்றார். மேக்சிஸ் கம்பெனியின் அதிபர் இலங்கைத் தமிழரான ஆனந்தகிருஷ்ணன். இன்னொரு 26 சதவிகிதப் பங்குகளை மாறன் குடும்பத்துக்கு நெருக்கமான சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரதாப் ரெட்டியின் குடும்பத்தினர் வெறும் 34 கோடிக்கு வாங்கினர். 

அக்டோபர் 2005ல் ஏர்செல்லை வாங்க விரும்புவதாக ஆனந்தகிருஷ்ணன், சிவசங்கரனிடம் தெரிவித்தார். அடுத்த இரண்டே மாதங்களில் டிசம்பர் 14 அன்று தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளுக்கான புதிய விதி முறைகளை அறிவித்தது. டிசம்பர் 30ந் தேதி ஏர்செல்லை மேக்சிஸுக்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo3thjebkJfF3rfK6-5ICuI3duWZ689Ij5gudXmKcKBAHRsT1QQ4HcZbQt7hZ4YXMsi03qVO4b2XHogvWL8b2gfUZLftm1NhzjwKW9tSlVOYal6Li8KImkNyEHdY7KO5mc2LIr1qhymkyF/s1600/dayanithi+maran+cartoon.jpg
அடுத்த மூன்றே நாட்களில் தயாநிதி மாறனின் அமைச்சகம் புதிய விதிமுறைகளின் கீழ் தகவல்களை அனுப்பும்படி ஏர்செல்லைக் கேட்டுக் கொண்டது. அடுத்த பதினேழே நாட்களில் ஏர்செல் தகவல்களைக் கொடுத்தது. ஜனவரி 12 அன்று மேலும் புது வட்டாரங்களுக்கு லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தது.

பிப்ரவரி மாதத்திலிருந்து ஏர்செல்லுக்கு தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளை வழங்கத் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் மொத்தமாக ஏர்செல்லுக்கு 14 வட்டாரங்களுக்கான லைசன்சுகள் கிடைத்துவிட்டன. மொத்தமாக லைசன்ஸ் கட்டணமாக ஏர்செல் செலுத்திய தொகை 1399 கோடி 47 லட்சம் ரூபாய்கள். ஆனால் தணிக்கைக் கணக்கீடுப்படி இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 22 ஆயிரம் கோடி ரூபாய்கள்.

ஆனந்தகிருஷ்ணன் கைக்கு ஏர்செல் மாறி லைசன்சுகள் கிடைத்த நான்காவது மாதத்தில், அவரது மேக்சிஸ் குழுமம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட் டி.வி. கம்பெனியில் 20 சதவிகிதப் பங்குகளுக்காக 150 மில்லியன் டாலர்கள் ( சுமார் 600 கோடி ரூபாய்கள்) கொடுத்தது. அடுத்தபடியாக 2008-2009ல் மேக்சிஸ் குழுமம் சன் குழுமத்தின் எஃப்.எம். வானொலி கம்பெனியில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்தது.

தெஹல்கா மேலும் சொல்லும் மூன்று தகவல்களும் முக்கியமானவை. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விலை நிர்ணயிப்பது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அமைச்சரவையின் குழுவிடம் இருந்ததை தயாநிதி மாறன் மாற்றி முழு அதிகாரமும் தமது அமைச்சகத்திடமே வைத்துக் கொண்டார். இதை நிதி அமைச்சகம் கடுமையாக ஆட்சேபித்தது. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்தார். (இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அடுத்து வந்த ராசாவும் முடிவுகள் எடுக்க முடிந்தது.) 


சிவசங்கரன் ஏர்செல்லை நடத்தி வந்தபோது டாடா குழுமத்துடன் தொழில் ரீதியான கூட்டு வைத்திருந்தார். டாடாக்களுக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே நல்லுறவு இருக்கவில்லை. அதற்குக் காரணம் டிஷ் டி.வி. தொழிலில் டாடாவுக்கும் சன் குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்ற வழக்கு வரை சென்றதுதான்.

எனவே சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தவரை தயாநிதி மாறனின் அமைச்சகம் லைசன்சுகளைத் தரவில்லை. தமக்கு எதிராக அமைச்சகத்தில் யாரோ தொடர்ந்து வேலை செய்வதாக சிவசங்கரன் 2005ல் புகார் கடிதமே எழுதியிருக்கிறார்.

மூன்றாவது தகவல்தான் அரசியல்ரீதியாக முக்கியமானது. உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டி வந்ததும், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல், 1998 முதல் 2009 வரை ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் வழங்குவதில் பின்பற்றிய அனைத்து நடை முறைகள் , நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சிவராஜ் பாட்டில் கமிஷனை நியமித்தார்.


அந்த கமிஷனும் அறிக்கையைத் தந்து விட்டது. அந்த அறிக்கையில், ஏர்செல்லுக்கு லைசன்ஸ் தராமல் விதவிதமான கேள்விகள் கேட்டு வருடக்கணக்காக தயாநிதிமாறனின் அமைச்சகம் இழுத்தடித்தது சரியல்ல என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகம் ஏர்செல்லிடம் கேட்ட விவரங்கள், தேவையற்றவை, பொருத்தமற்றவை, லைசன்ஸ் விதிமுறைகளுக்குப் புறம்பானவை என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்ல; பணம் தொடர்பான எந்தக் கொள்கை முடிவானாலும் அதுபற்றி நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அமைச்சகமும் உத்தரவுகள் போடக் கூடாது என்ற மத்திய அரசின் நடத்தை விதியை தயாநிதி மாறனின் அமைச்சகம் பின்பற்றவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.


ராசா அமைச்சராக இருந்தபோது பால்வாவின் ஸ்வான் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும் பால்வா, தன்னுடைய வேறு கம்பெனிகள் மூலம் கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் கடன் கொடுத்தார். அது லஞ்சப் பணம்தான் என்பது சி.பி.ஐ.யின் வாதம். அந்த அடிப்படையில்தான் ராசா, கனிமொழி, சரத் ரெட்டி, பால்வா எல்லாருமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தயாநிதி மாறன் ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல்லுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும், ஆனந்தகிருஷ்ணனின் கம்பெனி தயாநிதி மாறனின் சகோதரர் நடத்தும் சன் குழுமத்தில் 700 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இதுவும் லஞ்சப் பணம்தானே. இது லஞ்சப்பணம் இல்லை, தற்செயலாக நடந்தது என்றால் அதே விதி ராசாவுக்கும் பொருந்தும் அல்லவா? தமக்கு சன் குழுமத்தில் எந்த முதலீடும் இல்லை என்று தயாநிதி மாறன் அறிவித்திருக்கிறார். இதே வாதப்படி ராசாவுக்கும் கலைஞர் டி.வி.யில் எந்த முதலீடும் இல்லை.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimd7jEPF9dOg2TVEL8H0PXoGJCzRFbFmSrOumA3GP1dO2IK4sGmcLO0-rFQ2mMff92xWWtPY-t5jQZRjtcCcgR7EN831WaiINdYBHBdoekayOnOsjtoV-aNYuYWdaXSRlH10HPHLL9gX0/
தெஹல்கா இந்தச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆங்கில டி.வி. சேனல்கள் எல்லாம் தொடர்ந்து இதை எழுப்பி வருகின்றன. பி.ஜே.பியும் இடதுசாரிக் கட்சிகளும் தயாநிதி மாறனும் பிரதமரும் விளக்கம் தரவேண்டுமென்று கோரியுள்ளன. ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரித்துவரும் பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை வரம்புக்குள் இது வரும்; மேற்கொண்டு கருத்து சொல்ல முடியாது என்று காங்கிரஸ் சொல்லிவிட்டது. 


உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தொடுத்த பொதுநல வழக்கின் அடிப்படையில்தான் இதுவரை விசாரணை கைதுகள் எல்லாம் நடந்துள்ளன. புதிதாக தெஹல்கா வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையிலும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று பூஷண் இன்னொரு மனு இந்த வாரம் தாக்கல் செய்யவிருக்கிறார். 

எனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்து தயாநிதி மாறனும் உட்படுவாரா மாட்டாரா என்பது இனி உச்ச நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

தெஹல்கா ஆசிரியருடன் ஒரு சந்திப்பு!
தயாநிதி மாறன் ஏர்செல் விவகாரம் பற்றி தெஹல்காவில் எழுதியிருக்கும் தெஹல்காவின் புலனாய்வுப் பிரிவு ஆசிரியர் அஷிஷ் கேத்தன் வேறு ஒரு கட்டுரை தொடர்பான புலனாய்வுக்காக மே 31 அன்று சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்தார். (ஞாநி அவர்களை)


தெஹல்கா எனக்குப் பிரியமான இதழ். அது ஓர் அசாதாரணமான இதழ். பத்து வருடங்களுக்கு முன்னால் இணைய இதழாக ஆரம்பித்தபோது பி.ஜே.பி. ஆட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராணுவ அமைச்சராக இருந்த சமயத்தில், ராணுவத்துக்கு அதிநவீன பைனாகுலர்கள் வாங்குவதில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தியது. பி.ஜே.பி செயலாளர் பங்காரு லட்சுமண் லஞ்சப் பணம் வாங்குவதை ரகசிய வீடியோவில் படமெடுத்து வெளியிட்டது.

அவர் பதவி இழந்தார். பெர்னாண்டஸ் ராஜினாமா செய்தார். தெஹல்காவை பாகிஸ்தானின் கைக்கூலிகள் என்று அவதூறு செய்தார்கள். வீடியோ மோசடி என்றார்கள். ஆனால் கடைசியில் வீடியோ மெய்யானது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. 

பி.ஜே.பி. அரசு தெஹல்கா இணைய இதழை நடத்த முதலீடு செய்த கம்பெனிகள் மீதெல்லாம் வரித்துறை ரெய்டு நடத்தி அவற்றை முடக்கி தெஹல்கா இணையத்தை மூடவைத்தது.

தெஹல்கா குழுவினர் சோர்ந்து விடாமல் மறுபடியும் 2003ல் அதை அச்சில் வார இதழாகக் கொண்டு வந்தனர். இதற்காக இந்தியா முழுவதும் பல துறைகளில் இருக்கும் பிரபலங்களிடம் இருந்து ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் நன்கொடையாக மொத்தம் சுமார் நான்கு கோடி ரூபாய் வரை திரட்டினார்கள். இப்படி ஒரு பத்திரிகை தொடங்கி நடத்துவது இதுவே முதல்முறை. 
 http://snapjudge.files.wordpress.com/2007/07/anbumani-ramadoss_dayanidhi_maran_quote.jpg

அஷிஷ், லக்னோவைச் சேர்ந்த 35 வயது இளைஞர். தெஹல்காவுக்காக இதுவரை அவர் செய்திருக்கக்கூடிய புலனாய்வுகள் பிரமிப்பானவை. அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் மன்மோகன் ஆட்சிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதும் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாராளுமன்றத்துக்@க கட்டுக் கட்டாக பணம் கொண்டு வந்து காட்டி ரகளை ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

அந்த விவகாரத்தில் மூன்று பி.ஜே.பி. எம்.பி.கள் தாமாகவே காங்கிரஸ் தரப்பை அணுகி பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடத் தயார் என்று முன்வந்ததை அஷிஷ் அவர்களுடன் பேட்டிகளின் மூலம் அம்பலப்படுத்தினார். அதில் சமாஜ்வாடி கட்சி அமர்சிங்குக்கு இருந்த தொடர்பையும் வெளிப்படுத்தினார்.


அதற்கு முன் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் பங்கேற்ற தீவிர இந்துத்துவா ஊழியர்களைப் பேட்டி எடுத்து அவர்களின் பின்னணி, அவர்களுக்கும் மோடி அரசின் சில அமைச்சர்களுக்கும் இருந்த தொடர்பு ஆகியவற்றை அம்பலப்படுத்தினார். அவர்கள் மீது இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த புலனாய்வுக்காக, அஷிஷ் வேறு பெயரில் தானே ஓர் இந்துத்துவ வெறியராக நடித்து ஆறு மாத காலம் குஜராத்தின் பல பகுதிகளில் தங்கியிருந்து ஒலி/ஒளிப் பதிவுகள் மூலம் பலரை அம்பலப்படுத்தினார். 

மேலகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவ தீவிரவாதி சுவாமி அசீமானந்தாவின் 42 பக்க ஒப்புதல் வாக்குமூலத்தை வெளிப்படுத்தியதும் அஷிஷ்தான்.

ஏர்செல்-தயாநிதி மாறன்-சன் குழுமம் விவகாரம் பற்றி அஷிஷ் உறுதியாக இருக்கிறார். “நாங்கள் எழுதிய அத்தனையும் ஏற்கெனவே ஆவணங்களாக இருக்கும் தகவல்கள்தான். அவற்றின் அடிப்படையில் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியது சி.பி.ஐ.யின் பொறுப்பு. நிச்சயம் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் அடுத்து எடுத்துச் செல்லும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இதுவரை தெஹல்கா வெளியிட்ட எந்தப் புலனாய்வுக் கட்டுரையிலும் நாங்கள் தவறு செய்தோம் என்று காட்டப்படவில்லை. சரியென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் அஷிஷ்.

நன்றி - கல்கி வார இதழ் + ஓ பக்கங்கள் ஞாநி

Thursday, June 02, 2011

தயாநிதி மாறனின் 440 கோடி ஊழல்,ஆதாரம் சிக்கியது,சி பி ஐ அதிர்ச்சி- தினமணி அம்பலம்

 http://www.thehindu.com/multimedia/dynamic/00003/DAYANIDHI_MARAN_AGEND_3888f.jpgநினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

 இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு. 

 பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். 

ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.  அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. 

இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.  323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. 
http://cdn.wn.com/pd/c7/3d/a1d2a393b9a381f561d57b0e160d_grande.jpg
சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். 

தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 

 இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது

.  இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.
http://www.hindu.com/gallery/0274/027406.jpg
 டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.  இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.  இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. 

 மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

 கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும். 
http://www.cinepicks.com/blog/wp-content/uploads/2009/06/jayam-ravi-marriage-reception-photo-15.jpg
 இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 

ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும்.

கதை இத்தோடு முடியவில்லை.  இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை. 

நன்றி - தினமணி