Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Tuesday, January 08, 2013

பள்ளி கல்லூரி காலை 7.30 க்கு திறப்பது சாத்தியமா? மக்கள் கருத்து

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாணவ, மாணவியர் உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம், சென்னை, பெருங்குடியில், பஸ் படிக்கட்டுகளில் பயணித்த மாணவர்கள் நான்கு பேர், லாரி மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை, சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை, ஐகோர்ட்டில் ஒரு பதில் அறிக்கையை சமர்ப்பித்தது. 



அதில் கூறியுள்ளதாவது: சென்னையில், பள்ளி வேலை நேரத்தை, காலை, 7:30 மணியில் இருந்தும், கல்லூரி வேலை நேரத்தை, 8:00 மணியில் இருந்தும் துவங்கும் வகையில், மாற்றம் செய்யலாம். இந்தக் கருத்தை, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம் தெரிவித்துள்ளோம். மேலும், கல்வி நிறுவனங்கள் துவங்கும் நேரம் மற்றும் முடியும் நேரங்களில், கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மத்தியில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், காலை, 8:45 மற்றும் 9:00 மணிக்கு துவங்குகின்றன. தனியார் பள்ளிகள், 8:00 மணியில் இருந்து, 8:30க்குள் துவங்கப்படுகின்றன. தற்போதைய நேரத்தை மாற்றினால், பள்ளியின் தூரத்தை பொறுத்து, முன்கூட்டியே மாணவர்கள் கிளம்ப வேண்டியிருக்கும். குறைந்தபட்சம், 6:45 மணி முதல் கிளம்ப வேண்டியிருக்கும். இதற்கு, அதிகாலை, 5:00 அல்லது 5:30க்கே எழுந்து, குளித்து முடித்து, தயாராக வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், 





மாணவர்கள், ஆரம்பத்திலேயே எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர்.


மாணவர்கள் பாதிப்பர்:
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறியதாவது: காலை, மாலை நேரங்களில், பஸ்களின் ண்ணிக்கையை இப்போதே,அதிகரிக்கலாம். மாணவர்களுக்கென, தனியாக சிறப்பு பஸ்களை இயக்கலாம். அனைத்து பஸ்களிலும், கதவுகள் அமைப்பதை கட்டாயமாக்கலாம். இதில் எதையுமே செய்யாமல்,பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றினால், நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் கண்டிப்பாக வரும்.காலையில் சரியாக சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து, மயக்கம் அடைந்து விழுகின்றனர்.

இதுபோன்றசம்பவம், அரசுப் பள்ளிகளிலும் நடக்கிறது; தனியார் பள்ளிகளிலும் நடக்கின்றன. இதனால், மாணவர் மட்டுமில்லாமல், பெற்றோர், ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படும். ஆசிரியர்கள், நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளில் வேலை பார்க்கின்றனர். அதிகாலையில் எழுந்து தயாரானால் தான், ஆசிரியர்களாலும், 7:30க்கு, பள்ளிக்குச் செல்ல முடியும். எனவே, நேர மாற்றம் செய்யும் முயற்சியை, அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


கல்வித்துறை தயார் : இந்த விவகாரம் குறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தற்போதுள்ள நேரத்திற்கு, பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும், பிரச்னை தீராது; போக்குவரத்து நெரிசல் தான் அதிகமாக ஏற்படும். நேரத்தை மாற்றுவது தான் ஒரே தீர்வு. அரசு உத்தரவிட்டால், நேரத்தை மாற்ற நாங்கள் தயார்' என்றார். இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டம், 10ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

 மக்கள் கருத்து  



1. அனைத்து பள்ளிகளும் அரசு மயமாக வேண்டும் பள்ளிகள் 2 கி மீ சுற்றளவில் உள்ள மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் பெற்றோர் பிள்ளைகளை நடந்தே சென்று விட்டு விடலாம் 


2. வட மாநிலங்களில் குளிர் ஒரு டிகிரி இருக்கும்போதே கூட குழந்தைகள் ஏழு மணிக்கெல்லாம் ஆட்டோவில் ஏறி பள்ளி செல்வதை காணலாம். தமிழ்நாடு குளிரால் அவ்வளவு பாதிக்காத பகுதி மாலை இரண்டு மணிக்கு பள்ளி முடிந்து விடும். இதில் என்ன இவர்களுக்கு கஷ்டம் என்று தெரியவில்லை 


3. இதையெல்லாம்,ஜென்மத்திற்கும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.....மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் ஒப்புக்கொண்டாலும் ஆசிரியர் வர்க்கம் இதை ஏதனும் ஒரு காரணம் கொண்டு எதிர்க்கும் ....இவையெல்லாம் நடைமுறை படுத்துவது அவ்வளவு எளிதல்ல ...


.பெற்றோர் ,ஆசிரியர், ..காவல் துறை, கல்வித்துறை .மற்றும் ..அதற்கான பொறுப்புள்ள அமைச்சர்கள் உள்துறை செயலர் ...கல்வி துறை செயலர் இவர்களை கொண்ட கூட்டு கூட்டம் நடத்தி அவர்களது கருத்து கேட்டு ... அதன் படி ஒரு முடிவினை எடுக்கவேண்டும் ....அரசு தனது கொள்கையை ஏதேனும் ஒரு வகையில் திணிக்க முயலக்கூடாது 


4. Changes are never change. சார் நானும் தமிழ் நாட்டில் இருந்து இருந்தால் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தான் தெரிவித்து இருப்பேன். தமிழகம் தொடர்ந்து பின் நோக்கி செல்ல ஒரு காரணம் மக்களாகிய நாம் மட்டங்களை ஏற்காததே. திர்ப்பு தெரிவிப்போர் தமிழ் நாடு அல்லாத மற்ற மாநில நகர்களை சென்று பார்த்தல் சென்னை எவ்வளவு பின் தங்கியுள்ளது என்று தெரியும். 



பாம்பே மற்றும் பெங்களூர் நகர்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் காலை 7.30 ஆரம்பித்து மாலை 3.00 அல்லது 3.30 க்கெல்லாம் முடிந்துவிடும். இதனால் மாணவர்கள் பேருந்துகளை சிரமம் இல்லாமல் பயன் படுத்தமுடியும், படி கட்டு பயணம் தவிர்க்க படும் மற்றும் போக்கு வரத்தும் பீக் ஹவர் நேரங்களில் குறையும். நேரம் இல்லை, சிக்கிரம் எழ வேண்டும் என்று புலம்புவதை விட்டு நம் வாழ்க்கை முறையை மட்டற்ற வேண்டும் 


அதாவது பிள்ளைகளை ஒன்பது மணிக்கு முன் படுக்க செய்து அதிகாலை எழ பழக்க வேண்டும். இன்று சென்னை போன்ற நரக வாழ்க்கையில் தனி மனித மாற்றம் களை ஏற்காத வரை சமுதாய மாற்றம் ஏற்படாது. 



5. போக்குவரத்து துறை தங்களிடம் உள்ள குறைகளை தீர்க்காமல், பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தை மாற்றுவதற்கு ஆலோசனை கொடுப்பது வியப்பாக இருக்கிறது. ஏற்கனவே பள்ளிகள் 8.30 மணிமுதல் 9.00 மணிக்குள் தான் துவங்குகின்றன. இதற்கே நேரத்திற்கு போகமுடியாமல் அனைத்து பள்ளிகளிலும் சில மாணவ, மாணவிகள் வெளியில் நிற்பதும், கடவுள் வாழ்த்து முடிந்தவுடன் அவர்களை உள்ளே விடுவதும் நடக்கிறது. முதலில் போக்குவரத்து துறை அனைத்து பேருந்துகளிலும் மகாராஷ்டிரா,கர்நாடகா, மற்றும் ஆந்திரா போல இரும்பு கதவுகள் போருத்தட்டும். தானாகவே விபத்துகள் குறையும். 


6. எந்த ஒரு துறையிலும் எந்த ஒரு மாற்றத்தையும் எந்த ஒரு மக்களும் உடனடியாக ஏற்று கொள்வதில்லை.. அது போல்தான் இதுவும்.. எல்லாமும் சாத்தியம்தான்... நடைமுறைபடுத்தபட்டால் எல்லாம் ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும்.... இங்கு கருத்து சொல்லும் எத்தனை பேர் தங்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு காலை வேளைகளில் உதவுகின்றனர்... 


எதிர் கட்சியினர் போல் எல்லா திட்டங்களையும் எதிர்த்து கொண்டே இருந்தால் என்னதான் செய்ய..? தவிர மதியம் மற்றும் மாளை வேளைகளில் பல விசயங்களை செய்யலாம், கற்று கொள்ள நேரமும் மிஞ்சும்... காலை பொழுதில் வெறும் தூக்கம் மட்டுமே மிஞ்சும்... தவிர நடைமுறைபடுத்தபட்டு சாத்தியம் இல்லையெனில் மீண்டும் பழைய நடை முறைகே வரலாமே.... சமச்சீர் கல்வியில் என்ன நடந்தது...? காலையில் ஒரு மணி நேரம் முன்பே எழுந்தால் உடலுக்கும் நல்லதுதான். எல்லாமே பழக்கத்தில் மாறுபவனவே.... முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்... 


7. அரசு என்றால் மக்களுக்கு எதிராக செயல்படுவது என்பதுதான் ஜனநாயகம் . பிள்ளைகள் நிம்மதியாகத் தூங்குவது இந்த காலகட்டத்தில்தான், அதிகாலை எழுந்து தூக்கம் கலையுமுன், அவர்களுக்கு உணவை வாயில் திணித்து, திட்டி, பெற்றோகள் அவதிக்குள்ளாகி, டென்ஷனாகி, இவர்களும் நிம்மதியை இழந்து, குழந்தைகளையும் நிம்மதி இழக்கச் செய்து, பள்ளி சென்றவுடன் எமன் பாசக்கயிறு போல் ஆசிரியர்கள் தங்கள் கடமையைச் செய்கிறோம் என்ற பெயரில் பிள்ளைகளை தாங்கள் வீட்டில் பட்ட கஷ்ட்டங்களுக்கு இந்த பிள்ளைகளின் மீது காட்டி, மொத்தத்தில் எல்லோரும் பயித்தியம் பிடித்து ஆளாகவேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம் என்றால் நடக்கட்டும், தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் கல்விமுறைக்கு மாற்றாக பல நல்ல கருத்துக்களை சான்றோர்கள் அள்ளி தர ஆர்வமாக இருக்கும்போது, அவர்களை எல்லாம் மனிதனாகவே மதிக்காமல், இவர்கள்தான் எல்லாம் என்று ஈடுபட்டால் யார்தான் என்ன செய்ய முடியும்? 



ஒவ்வொன்ற்க்கும் மக்கள் நீதிமன்றம் சென்றுதான் தங்கள் வாழ்க்ககை நடத்தவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்றால் மிகையாகாது. பள்ளி மாணவர்களிடமே கருத்துக் கேட்கலாமே? இவர்களுக்கு இல்லாத மூளையா இன்று ஆள்பவர்களிடம் இருக்கப்போகிறது? இன்றைய மாணவர்களிடம் இருக்கும் அறிவு வளர்ச்சி மிக மிக ஆற்றல் கொண்டது, ஆகவே அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கும் மாணவர்கள், நாட்டுப்பற்றுள்ள மாணவர்கள், பெற்றோர்களுக்குக் கீழ்ப்பட்டு நடக்கும் மாணவர்கள், இப்படி பல கிளைகளாக உள்ள பல தரப்பு மாணவர்களிடம் கலந்து ஆலோசித்து , கடைசியில் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுத்தால் நல்லது. வந்தே மாதரம் 



8. நல்ல திட்டம். 2 - 2:30 க்கு வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடங்ககளை முடித்துவிட்டு மாலையில் 2 மணி நேரம் தொலைக்காட்சியின் முன்னால் உட்காராமல் விளையாட நேரம் கிடைக்கும். இதனால் உடம்பு குண்டாவதைத் தடுப்பதுடன் பல்வேறு வியாதிகளுக்கும் விடை கொடுத்திடலாம். 



9. காலை 7 1/2 மணிக்கு பள்ளி ஆரம்பித்தால் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு செல்லலாம். மேலும் பள்ளிகளும் 3-5 KM க்குள் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து சேர்க்கவேண்டும். அப்போது தான் ஊரில் உள்ள அனைத்து பெற்றோர்களும் தம் குழந்தைகளை ஒரே பள்ளியில் சேர்க்க முற்பட மாட்டார்கள். இது தேவையில்லாத டிராபிக்கை கட்டுப்படுத்தும். மேலும் பள்ளிக்காக குழந்தைகள் வெகு தொலைவு செல்வதும் தவிர்க்கப்படும். செய்வார்களா? 



10. நேரம் மாற்றம் நல்லது தான் பள்ளிக் குழந்தைகளுக்கு, ஆனால் இன்று இருக்கும் போக்குவரத்து நெரிசல்கள் , வாகனங்கள் அதிகமின்மை மற்றும் பலதரப்பட்ட மக்கள் வேலைக்கு அவரசமாக பணிக்கு செல்லும் அதிகாலையில் இந்த நேரம் மாற்றம் மீண்டும் பெற்றோர்களுக்கு, குழந்தைகளுக்கும் பல சிரமத்தை கொடுக்கும் அதற்கு பதிலாக அரசு சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனிப் பேருந்துகளை என்று காலையும் , மாலையும் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகளை இயக்கலாம் மற்ற அரசு பேருந்துகள் காலையிலும் , மாலையிலும் தனியார் பேருந்துகளுக்கு இனியாக வருவாயை ஈட்டலாம் .


 பள்ளிக்குழந்தைகளும் இனிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்யலாம் மற்றும் படியில் பயணம் செய்யாமலும் தவிர்க்கலாம் இலவசங்கள கொடுப்பதை தவிர்த்து விட்டு, நல்ல பயனுள்ள திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்


 நன்றி - தினமலர்

Thursday, December 27, 2012

டெல்லி கூட்டத்தில் ஜெ அவமதிக்கப்பட்டாரா? மக்கள் கருத்து




தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது: டெல்லி கூட்டத்தில் ஜெ. குற்றச்சாட்டு 

புதுடெல்லி: தமிழகத்தின் சிறிய கோரிக்கையை கூட மத்திய அரசு ஏற்கவில்லை என்றும், தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமயில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து முதலமைச்சர்களுக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 10 நிமிடம் மட்டுமே வழங்கபட்டது. இதனால் அவர் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தார்.

இக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுவதற்கு தயாரிக்கப்பட்ட உரை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் சுருக்கம் வருமாறு: 


கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் ஏராளமான முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது 12 ஆவது ஐந்தாண்டு திட்டம் குறித்த மதிப்புமிக்க நல்ல பயனுள்ள திட்டங்களை நான் எடுத்துரைத்தேன். அதன் அடிப்டையில் இத்திட்டம் 14 மாதங்களுக்கு பிறகு இறுதி வடிவம் பெற்றுள்ளது.

கடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்த குறைந்த பட்ச கருத்துக்களாவது இதில் இடம் பெற்றிருக்கும் என நான் நம்புகிறேன். திருத்தப்படாத திட்ட நகலை படித்த போது, அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது ஜனநாயக விரோத அணுகுமுறைகள் இருப்பது தெரிய வருகிறது.

வறுமையை குறைக்க வேண்டும் என்ற கருத்தில் மத்திய அரசு மாறுபட்டு இருப்பதாக கருதுகிறோம். ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் போதும் வறுமை மற்றும் சமத்துவமற்ற நிலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை பல தடவை மாநில தேவைகள் குறித்து நினைவூட்டினாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டை மட்டும் குறிப்பாக மத்திய அரசு கடுமையாக வஞ்சிக்கிறது. எந்த ஒரு சட்ட பூர்வமான கோரிக்கையும் தொடக்கத்திலேயே மறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறது. அது குறித்து மறு படியும் கோரிக்கை விடுத்தாலும் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

முதலீடுகளை ஊக்கு விக்க தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையங்கள், மெட்ரோ-ரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு துறை நிலங்கள் வழங்குவதில் தாமதப்படுத்துகிறது.அதனால் திட்ட மதிப்பீடும் அதிகரிக்கிறது. காவிரி நதி நீர் பிரச்னையில் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு தமிழ்நாட்டுக்குரிய உரிமையை பெற்று தருவதில் முழு திறமையற்று மத்திய அரசு விளங்குகிறது.

கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதன் மூலம் நாட்டு மக்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது. தமிழகத்தின் மிக சிறிய கோரிக்கையான சென்னை நகருக்கு கேபிள் டிஜிட்டல் மயமாகும் திட்டத்துக்கு கூட உரிமம் வழங்குவதற்கு மறுக்கிறது. அது தொடர்ந்து பரிசீலனையில் உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட துறை மத்திய மந்திரிக்கும் இது குறித்து பல முறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்து வருகிறது. இதற்கு டிஜிட்டல் உரிமை வழங்குவதில் தாமதம் செய்வதன் மூலம் மத்தியில் ஆளும் கூட்டணியில் ஈடுபட்டுள்ள ஒரு கட்சியின் குடும்ப டி.வி. நெட்வொர்க்கில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சேர வழிவகுக்கும். கடந்த முறை நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் வளர்ச்சி விகிதம் 2 இலக்கமாக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை வலியுறுத் தியிருந்தேன்.

ஆனால் வரைவு திட்டத்தை படித்த போது நான் ஏமாற்றம் அடைந்தேன். அதில் 9 சதவீதமாக வளர்ச்சி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. எனது தலைமையிலான தமிழ்நாட்டில் வளர்ச்சி விகிதம் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் 2 இலக்கு வளர்ச்சி விகிதமாக இருக்கும்.

நான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய அரசின் செயல்பாடு இன்மையால் வளர்ச்சி விகிதம் குறைந்து இருந்தது.தற்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் தேசிய வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும்.

பயிருக்கு நீர் இன்றியமையாதது. மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர், முல்லைப் பெரியாறு, பெண்ணையாறு, அட்டப்பாடி அணை உள்ளிட்ட நீர் பகீர்மானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஆனால் இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் ஆதரவும், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வில்லை. 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்திலும், இந்த நதிநீர் பங்கீடு தொடர்பாக எந்த முக்கியத்துவமும் தரப்பட வில்லை என்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். தண்ணீர் விலை மதிப்பற்றது என்றாலும் அதை எப்போதும் வணிக ரீதியாக பார்க்கக்கூடாது.

தமிழக மீனவர்கள் இலங்கை கப்பல் படையினரால்  தாக்கப்பட்டு பலியாகும் நிலை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். இந்த விஷயத்தில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

பேச நேரம் ஒதுக்காததால் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலிருந்து ஜெ. வெளிநடப்பு ! 

Posted Date : 11:39 (27/12/2012)Last updated : 12:38 (27/12/2012)
புதுடெல்லி: பிரதமர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில்  கூட்டத்தில் பேச தமக்கு போதிய நேரம் ஒதுக்காததை கண்டித்து முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
கூட்டத்தில் முதல்வர்கள் தங்கள் மாநில பிரச்னைகள் குறித்து பேச வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.

பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நிமிடங்கள் மட்டுமே தம்மை பேச அனுமதித்ததாகவும், அதன் பின்னர் மணி அடித்து  பேச்சை நிறுத்துமாறு கூறி தம்மை அவமதித்துவிட்டதாகவும்  குற்றம் சாட்டினார் . 


இது தமக்கு மட்டுமல்ல;தமிழ்நாட்டிற்கும்,தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பு என்றும் அவர் கூறினார்.

தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து தம்மால் முழுமையாக பேச முடியவில்லை என்றும், தாம் பேச நினைத்ததில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே பேசியதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார். 

மாநிலத்தின் பிரச்னையை எடுத்துரைக்க போதிய கால அவகாசம் வழங்க முடியாது என்றால்,   மாநில முதல்வர்களை ஏன் அழைக்க வேண்டும்  என்றும் அவர் மத்திய அரசுக்கு அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்




 மக்கள் கருத்து




ஒரு கூட்டம் இங்கே வந்து ஜெயா ஒரு அகம்பாவம் பிடித்தவர், கோவத்தின் வெளிப்பாடு தான் இது என்று கூவ ஆரம்பிக்கும். அவர்களுக்கும் நமது தானைய தலைவர் கருணாவுக்கும் ஒரு கேள்வி
கடந்த 13 ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக அங்கம், மத்திய அரசை தாங்கிப் பிடிப்பதே திமுகதான். இதனை தவிர மத்திய அரசில் முக்கிய அமைச்சர்கள் தமிழக காங்கிரஸ் கட்சியினர். இவர்களால் தமிழகத்துக்கு கிடைத்த பயன் என்ன?
1. முல்லை பெரியாறு சாதகமாக தீர்ப்பு வந்தும் இன்னும் அதன் பலன் கேரளாவுக்குத் தான்
2. கேரளாவில் மீனவன் சுடப் பட்டால் உடனே தண்டனை, இங்கே பல முறை நடந்தும் கடிதத்துக்கு பதில் கூட எழுதாத மத்திய அரசு.
3. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்து 5 வருடங்கள் ஆகின்றன. இன்னும் அது அரசு இதழில் வரவில்லை. கருணா இதற்காக செய்த நடவடிக்கை என்ன? திமுக ஆதரவு இல்லை என்றால் மத்திய அரசே இல்லை என்கிற நிலையில் இருந்து இன்று குடியரசு தலைவரே வீட்டுக்கு வந்து சந்திக்கும் அளவுக்கு மத்திய அரசை தாங்கி பிடித்ததன் பலன் தான் என்ன?
4. காவிரி நீருக்காக மத்திய அரசு கைவிட்ட பின்னர், நீதிமன்றத்தை நாடி வெற்றித் தீர்ப்பும் வாங்கி அதனை செயல் படுத்த கர்நாடக மறுத்த நிலையில் நாடு நிலையாக செயல் படவேண்டிய மத்திய அரசு வேடிக்கை ஒரு துரும்பு கூட அசைக்காதது ஏன்? மத்திய அரசை திமுக இதற்காக கண்டிக்காதது ஏன்?
5. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க கட்டமைப்பு இல்லை (இனிமேலும் கட்டமைப்பு அமைக்கப் படாது) என்று சொல்லும் மத்திய அரசு தமிழகத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழகத்துக்கே தர மறுப்பது என்? மின்சாரம் வெளியே செல்ல மட்டும் கட்டமைப்பு உள்ளதா? உள்ளே வர மட்டும் மின்சாரம் மறுக்குமா?
6. எத்தனை முறை தமிழக பிரச்சனைகளுக்காக திமுக தலைவர் சோனியாவை சந்தித்திருக்கிறார்? தினம் ஒரு அறிக்கை விட்டு அதிமுக அரசை குறை சொல்வதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் மக்கள் பிரட்சைகளுக்காக?

மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு கூட செவி மடுக்காத மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம் தான் மிக அதிகம். இதில் உச்ச கட்டம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்ச நீதிமன்றமே சொல்லியும், உச்ச நீதிமன்றத்தில் இந்த மாதத்தில் வெளியிடப் படும் என்று மத்திய அரசே வாக்குறுதி கொடுத்தும் இன்னும் நிறைவேற்ற தயங்குவது. இப்போது கர்நாடக இதனை வெளியிட மறுப்பு தெருவிப்பதும், மத்திய அரசே நடுவர் மன்ற தீர்ப்பை மாற்ற செய்யும் சதி.

காங்கிரஸ் கட்சியின் எதிரியான பாஜக ஆளும் கர்நாடக மத்திய அரசால் பெற்ற நம்னைகளை விட திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம் தான் அதிகம். இதில் முக்கிய பங்கு கருணாவுக்கு தான். மறந்தும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்துவிடக் கூடாது என்பது இட்ட கட்டளை. நாளொன்றும் அதிமுக அரசை குறை சொல்லியே அறிக்கை விடும் கருணா மத்திய அரசின் துரோகம் மட்டும் கண்ணுக்கு தெரியாது. சோனியாவின் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மட்டுமே தெரியும். இதன் மூலம் தமிழகத்துக்கு நல்ல நன்மை கிடைக்கும்.

வழக்கம் போல உள்ளூர் பிரச்சனைக்கு நாடாளுமன்ற தேர்தலில் பதில் சொல்லும் தமிழக மக்கள் பிரச்சனைகளின் மூலத்தை அறியாமல் மீண்டும் இந்த கூட்டத்தை தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்!!



2. இதுல அவமதிப்பு என்ன இருக்கு. ஒருவருக்கு எவ்வளவு நேரம் பேச அனுமதி என்பது ஏற்கன்வே முடிவு செய்த ஒன்றாகத்தானே இருக்கும்.
மற்ற முதல்வர்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினார்கள். அதே 10 நிமிடம் தானே. பின்ன இதில் அவமதிப்பு எங்கிருந்து வந்ததோ?

ஏற்கனவே நான்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டவுடன், அதற்கு மத்திய அரசும், மு,க.வும் தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்தவராயிற்றே, இவர் சொல்வதை நம்பலாமா?



3. அது ஒண்ணும் தமிழக சட்டசபையல்ல. நீங்கள் வந்ததும் அனைவரும் எழுந்து நின்று கை கூப்பி 45 சாய் கோணத்தில் நிற்க. மாநிலத்தின் தேவையறிந்து பேசி இருக்க வேண்டும் 10 நிமிடத்தில். மற்ற மாநில முதல்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம்தானே உங்களுக்கும். அல்லது அனைவரையும் 1 மணி நேரம் பேசவிட்டு உங்களுக்கு மட்டும் 10 நிமிடம் கொடுத்து மணியடித்தார்களா?. நமது அரசியல் சட்டத்தின்படி மத்திய அரசை அண்டித்தான் பிழைக்க வேண்டும்.கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு "ஆடி கறக்க வேண்டிய மாட்டை ஆடி கறக்க வேண்டும். பாடி கறக்க வேண்டிய மாட்டை பாடி கறக்க வேண்டும்". நமக்கு தேவை பால். அதை பெற எதை செய்தால் என்ன? முறுக்கிட்டு திரிந்தால் 16 மணிநேர மின்வெட்டு 24 மணிநேரமாகிவிடும்.




4.
அழுதால் தான் பால்! உதாசீனம் செய்தால் பாழ் தான்!

தேசிய வளர்சிக்குழு கூட்டட்தில் நம் முதல்வர் அம்மா அவர்கள் கோவிச்சுகிட்டு வெளியேறினார். அங்க கிட்ட தட்ட யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்ப்பட்ட முதல்வர்கள் இருக்கும் நிலையில் பத்து நிமிடம் மட்டுமே பேச அனுமதி அளிக்கப்படும். இது நடைமுறை. பொதுவாக இது போன்ற கூட்டங்களுக்கு கலைஞர் போகும் போது தமிழக தேவைகளை ஒரு மணி நேர பேச்சாக தலைமைசெயலரை விட்டு ஒரு ட்ராப்ட் தயார் செய்து கொண்டு போவதும், பத்து நிமிடத்தில் அழகாய் தலைப்பு செய்திகளாக சொல்லி "இதன் மீதி விபரங்கள் இந்த பெட்டிஷனில் இருக்கு" என கூட்டத்தில் சமர்ப்பிப்பதும், அப்படி சமர்பிக்கும் போது அது "ரெக்கார்டட் டாகுமெண்டாக" ஆவதும் இயல்பு. இது ஒரு அப்பட்டமான புத்திசாலித்தனம்.

இந்த விபரங்கள் கூட தெரியாத அம்மையார் அவர்கள் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு தமிழக தேவைகளை சொல்லாமல் அல்லது ரெக்கார்ட் செய்யாமல் வந்தமை குறித்து நாம் வெட்கப்பட வேண்டும்! "அம்மா கோவக்காரங்க" என சொன்னா நமக்கு பெருமை இல்லை. அங்க வந்த பல முதல்வர்களும் "ஹய்யே, சரியான லூசா இருக்கே இந்தம்மா"ன்னு சக முதல்வர்களிடம் முனுமுனுத்து இருப்பர். இது ஒட்டுமொத்த தமிழர்களின் அவமானம்! இதைக்கூட "அம்மாவின் அதிரடி" என தினமலத்தில் நாளை போடுவானுங்க! "ஆமாம் ஆமாம்"னு இணைய போராளிகள் குதிப்பாங்க! பேசாம 21.12.2012ல உலகம் அழிஞ்சு தொலைச்சி இருக்கலாம்!



5. இது என்ன கூட்டம் என்று கூட தெரியாமல் பலர் கருத்து சொல்கிறார்கள். 10 நிமிட நேரம் என்கிற நடைமுறை இன்றைய கூட்டத்தில் மட்டுமே அறிமுகப் படுத்தப் பட்டது. இதற்க்கு முன்னர் இதே கூட்டத்துக்கு முதல்வர்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரம் 30 நிமிடங்கள். 5 ஆண்டுகளுக்காக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட கூட்டத்துக்கு 30 நிமிடம் கூட பேசாம என்ன திட்டம் போடப் போறாங்க? ஓர் ஆண்டுக்கு போடப் படும் பட்ஜெட் கூட்டத் தொடர் நாள் கணக்கில் நடைபெறும் பொது 5 ஆண்டு திட்டடக் கூட்டம் 10 நிமிடம் போதும்? 5 வருட செயல் திட்டம் பற்றி ஒரு மாநில முதல்வர் சொல்ல 10 நிமிடம் போதும் என்றால் இந்தக் கூட்டமே தேவை இல்லை. வழக்கம் போல இவர்கள் திட்டத்தை அறிக்கையாகவே வெளியிடலாம். தமிழகத்துக்கும் ஒன்னும் கிடைக்கப் போவது இல்லை.

வழக்கம் போல கருணாவின் துரோகத்துக்கு பதில் சொல்லாமல் ஜெயாவையே திட்டுவோம். அப்புறம் என்ன காங்கிரஸ் அரசு மீண்டும் அமைந்து தமிழன் நீருக்கு கர்நாடகாவையும் உயிருக்கும் சிங்களனையும் எதிர்பாத்து இருக்கட்டும். உள்ளூரில் அறிக்கை மட்டுமே விட்டுக் கொண்டு இணக்கமான மத்திய அரசில் வளம் கொழிக்கும் துறையை மிரட்டி வாங்குவோம்.
 
ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில்! 
 
 இந்நிலையில் ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.இது  தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்  ராஜீவ்சுக்லா,"தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில  முதலமைச்சருக்கும் தலா 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச  வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி நேர அளவு நிர்ணயம்  செய்து ஏற்பாடு செய்யப்பட்டது.

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும்,
 
காங்கிரஸ் அல்லாத மாநில  முதல்வர்களுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில  முதல்வர்கள் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது.எனவே இதில்  எப்படி அவமானம் செய்து விட்டதாக சொல்ல முடியும்?

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பயன்படுத்தி மாநில முதல்வர்கள், தங்கள்  மாநிலத்துக்கு வேண்டியதை பெற்று கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இத்தகைய  கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல.  இதுவரை எந்த முதல்வரும் இப்படி குற்றம் சாட்டியதில்லை" என்று கூறினார்.

டெல்லியிலே ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்...தமிழகத்தில் இருக்கிறதா?: கருணாநிதி

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அனுமதி  மறுக்கப்பட்டு,மேடை மற்றும் பந்தல் அகற்றப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள   கருணாநிதி,தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி  கூறியதாவது:

திமுகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் - நாளை நடைபெறவுள்ள  தூத்துக்குடி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி கொடுத்து விட்டு தற்போது  அனுமதியை மறுத்து அமைக்கப்பட்ட மேடை, பந்தல்களைப் பிரிப்பதைப் பற்றி தங்கள்  கருத்து என்ன?
 
 
 
 
 
ஜெயலலிதா கட்சியினர் டெல்லியிலே ஜனநாயகம் இல்லை என்கிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு,  அதற்காக அதை நம்பி போடப்பட்ட பந்தலை எல்லாம் அரசுக் காவலர்கள் பிரிக்கிறார்கள்.  இந்த ஜனநாயகவாதிகள் தான் மத்திய அரசைப் பற்றி குறை கூறுகிறார்கள்,  கண்டிக்கிறார்கள், வேடிக்கையாக இருக்கிறது.

தமிழக அரசின் பல தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று  தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே? குறிப்பாக கேபிள்   டி.வி.க்கு உரிமம் தரவில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?
 
  அதிலே ஏதாவது விவகாரங்கள் இருக்கலாம். உண்மை என்ன என்பது  பற்றி முழு விவரம் தெரியாமல் பதில் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.



ஜெ. அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது: கருணாநிதி
Posted Date : 14:19 (27/12/2012)Last updated : 14:19 (27/12/2012)
சென்னை: தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா  அவமதிக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி  கூறியுள்ளார். 

டெல்லியில் 57 ஆவது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று காலை பிரதமர்  மன்மோகன் சிங் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பேச போதிய கால அவகாசம் வழங்கப்படாததை கண்டித்து தமிழக  முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.10 நிமிடங்களுக்கு மட்டுமே தம்மை பேச  அனுமதித்து,அதன் பின்னர் பேச்சை நிறுத்துவதற்கான மணியை ஒலிக்கச் செய்து தம்மை  மத்திய அரசு அவமதித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். 



இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர்  கருணாநிதியிடம் இது குறித்து கேட்டபோது,தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில்  ஜெயலலிதா கூறுவதுபோன்று அவமதிக்கப்பட்டிருந்தால், அது கண்டிக்கத்தக்கது என்றார்.

பொதுவாக தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் மாநில முதல்வர்களுக்கு 10  நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் பேச நேரம் ஒதுக்கப்படும் என்று கருணாநிதி மேலும்  கூறினார்.


நன்றி - விகடன்
+

Tuesday, October 16, 2012

எம் ஜி ஆர் என்னிடம் வாங்கிய சத்தியம் - ஜெ பர பரப்பு கடிதம்

http://www.alaikal.com/news/wp-content/mgr101.jpg 

சென்னை: அதிமுக தொண்டர்களைக் காப்பாற்ற தம்முடைய வாழ்வை அர்ப்பணிக்க  வேண்டும் என்று எம்.ஜி.ஆர். தன்னிடம் சத்திய வாக்கினை பெற்றார் என்று அதிமுக  பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  




அ.தி.மு.க. 41-வது ஆண்டு தொடக்க விழாவை கோலாகலமாக கொண்டாட  வேண்டுகோள் விடுத்து,அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில் கூறியிருப்பதாவது:





இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும்  மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!



நம் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 40  ஆண்டுகள் நிறைவடைந்து, 41-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியான  தருணத்தில் இந்த மடல் வழியாக உங்களை சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி  அடைகிறேன்.



அறநெறி சார்ந்த வாழ்வினை கைக்கொள்ளவேண்டும்; அடுத்தவர்களுக்கு பயன் தரும்  வாழ்வை மேற்கொள்ளவேண்டும்; இயன்ற பொழுதில் எல்லாம், இயன்ற வகைகளில்  எல்லாம் எளியோர்க்கு உதவ வேண்டும்; ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்  என்று தன் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்தே கொள்கை உறுதி கொண்டு வாழ்ந்த  ஒப்பற்ற மனிதராம் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அன்புச்  செல்வம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2012/01/1967_MGR.jpg

இந்த இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏன் தோற்றுவித்தார் என்பதை ஒரு  நிமிடம் எண்ணிப் பார்ப்போம். பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, மிகுந்த  எதிர்பார்ப்போடு தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியாக, அவரை நம்பி  திமுக-விற்கு தந்த தேர்தல் வெற்றியை, ஆட்சிப் பொறுப்பை, ஒரு சுயநலக் கும்பலின்  தலைவனாகிய ஒரு தீய சக்தி தன் மனம் போனபடி ஆயுதமாக்கிக் கொண்டு தமிழகத்தை  தனது வேட்டைக் காடாக மாற்றியது.



அண்ணா அவர்கள் தோற்றுவித்த இயக்கத்தை குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டது.  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்தது. ஆனால், தமிழக  மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தங்கள் இதயத்தில் ஏந்திக் கொண்டார்கள்.



புதிய இயக்கம் கண்டு தங்களை வழிநடத்த வேண்டும் என்று வேண்டுகோள்  வைத்தார்கள். அனைத்துத் தரப்பினரும் விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று 1972 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ஆம் நாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்தார்.



ஐந்து ஆண்டுகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் தமிழகத்தின் ஆட்சிப்  பொறுப்பை வென்றெடுத்தது. தன்னுடைய இயக்கமும், ஆட்சியும், மக்கள் இட்ட  கட்டளையால் உருவான வரலாற்று நிகழ்வுகள் என்பதையும், இவற்றைக் கொண்டு  தமிழக மக்களுக்கு எந்நாளும் பணியாற்ற வேண்டும் என்பதையும் புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டிருந்தார்.



திராவிட இயக்கக் கொள்கைகளை காக்கவும், அண்ணாவின் அரசியல் பணிகளை  தொடர்ந்திடவும், தமிழக மக்கள் மீது தான் கொண்ட பேரன்பை செயல் வடிவில் காட்டி  அவர்களுக்கான பணிகளை ஆற்றிடவும், தனக்கு பின் இயக்கத்தைக் கட்டிக் காக்கவும்  ஒருவர் வேண்டும் என்பதற்காக என்னிடம், இந்த இயக்கத்திற்கு தலைமையேற்கும்  தியாக உணர்வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வளர்த்தார்.



தன்னுடைய தொண்டர்களைக் காப்பாற்ற நான் என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க  வேண்டும் என்பதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் வைத்த  கோரிக்கையாக இருந்தது. அதற்கான சத்திய வாக்கினை என்னிடம் அவர் பெற்றார்.



புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி இருந்த காலத்தை தங்களுக்கு  சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவருடைய உதவியாலும், கருணையாலும் வாழ்வும்,  வளமும் பெற்றவர்கள், தீயசக்திக்கு ஆதரவாகவும், இந்த இயக்கத்திற்கு எதிரான  நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். என்னை அழித்திடத் துடித்தனர்.



கழக உடன்பிறப்புகளாகிய உங்களை புரட்சித் தலைவரின் காலத்திற்கு பிறகு கட்டிக்  காக்கவேண்டும் என்பதற்காகவே நான் என்னுடைய வாழ்வை கழகத்திற்காக,  உங்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு  நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. இது நெருப்பாறு. இது வஞ்சகமும்,  சூழ்ச்சியும் கொண்டு நன்றி மறந்த பலரும் எழுதும் திரைக்கதை வசனங்கள் நிறைந்தது.  இருப்பினும் இவைகளுக்கு அஞ்சி இந்தக் கடமையை கைவிட்டுவிடக்கூடாது என்பதை  நான் பொது வாழ்வின் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டேன்.



புரட்சித் தலைவருக்கு நான் அளித்த வாக்குறுதியை என் மனசாட்சிக்கு சரியென்று  தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றி வந்திருக்கிறேன் என்ற மன நிறைவும், நிம்மதியும்  இந்த நாளில் எனக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது,  தமிழகம் இந்திய அளவில் தலை நிமிர்ந்து முதலிடம் பெறும் நோக்கில் எண்ணற்ற  திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன்.



தமிழ்நாட்டில் புரட்சித் தலைவரும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும்  அமல்படுத்திய பல திட்டங்கள் இன்றைக்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில்  பின்பற்றப்பட்டு வருகின்றன. ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்ற அண்ணாவின்  அறிவுரையின்படி ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு  நலத் திட்டங்களை நான் செயல்படுத்தி வருகிறேன். எனக்கு எந்த சுயநல நோக்கமும்  கிடையாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும்  அறியேன்.



எனவேதான் ‘உங்களுக்காக நான், உங்களால் நான்’ என்பதை என் வாழ்வின் தாரக  மந்திரமாகக் கொண்டிருக்கிறேன். இந்த நாட்டையே சூறையாடும் வண்ணம் பல்வேறு  துறைகளில் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்தவர்களையும், தேச அரங்கில்  தமிழகம் தலைகுனியும் வகையில் வரலாறு கண்டிராத ஊழல்களில் ஈடுபட்டவர்களையும்,  முன்னேற்றப் பாதையில் தமிழகம் செல்ல முடியாத வகையில் முட்டுக்கட்டை  போட்டவர்களையும் மக்கள் தேர்தல் களத்தில் புறக்கணித்தார்கள்.



மக்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் மறந்திருப்பார்கள் என்ற  நினைப்பிலும், பேராசையிலும் தீய சக்திகள் மீண்டும் தலை தூக்க முயற்சிக்கின்றன.  தமிழக மக்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்த  உண்மை.



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் உங்கள்  அன்புச் சகோதரியாகிய நான் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகளையும், மக்கள்  நலப் பணிகளையும் மனதில் கொண்டு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை  தமிழக மக்கள் என்னிடம் வழங்கி இருக்கின்றார்கள். இன்னும் பல வெற்றிப் பரிசுகளை  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க தமிழக மக்கள்  காத்திருக்கிறார்கள் என்பதை நன்றியோடு உணர்கிறேன்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGeuh8lTBuLomyGdHYrCZ1VyK5-7r-LTwfM751YGMvCQwAu-IshGp13XnPQ7k4ykfMXa89J3KicVpPiy51sEBRAL7kmSe3AA2IDWKDdzN_8ytQgTkfgtBdTtUKE5re2imItH2UWtXrQ7g/s1600/jayalalitha_mgr_20110321.jpg


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் சத்துணவுத்  திட்டம், அனைவருக்கும் கல்வி உதவி, பல லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம், ஏழை  எளிய பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற நலத் திட்டங்கள், பசுமை வீடுகள்  திட்டம், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புரட்சிகர திட்டங்கள்,  வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை எல்லோரும் பெற்றிட உலக அதிசயமாய்  விலையில்லா மடிக்கணினி என்று பல முன்னோடித் திட்டங்கள் தொடர்ந்து  நடைமுறைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இது தொடரும்;



இவற்றின் வழியாக தமிழக மக்களின் வாழ்வு மலரும்; அதற்கு என்னுடைய ஆட்சி  எந்நாளும் துணை நிற்கும் என்ற உறுதிமொழியை இந்த நல்ல நாளில் உங்கள் வாயிலாக  தமிழக மக்களுக்கு அளிக்கிறேன். இந்த நன்னாளில் ஈட்டிய வெற்றிகளின்  எண்ணிக்கையையும், நாம் எதிர் கொண்டு சாய்த்திட்ட எதிரிகளின் கணக்கையும்  கூட்டிப்பார்த்து பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், இந்த ஒப்பற்ற இயக்கத்தின்  வளர்ச்சிக்காக தங்கள் வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி உழைத்திட்ட  செயல்வீரர்களையும், வீராங்கனைகளையும், கழகத் தொண்டாற்றிய காலத்திலேயே  தங்கள் விலை மதிப்பற்ற உயிரையும் நீத்திட்ட உத்தமத் தொண்டர்களின் உயரிய  தியாகங்களையும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறேன்.



எத்தகைய உயர்ந்த நோக் கங்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் தோற்றுவிக்கப்பட்டதோ; எத்தகைய எதிர்பார்ப்புகளோடு அனைத்திந்திய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரித்து வளர்த்து  வருகின்றார்களோ; அவற்றிற்கு உண்மையாக விளங்கும் வகையில் தொடர்ந்து கழக  உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்  கொள்கிறேன்.



என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகளே!



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 41-ஆவது ஆண்டு தொடக்க  விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர,  பேரூராட்சி, பகுதி அளவிலும்; இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும்  ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கொடிக் கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி  கழகக் கொடியினை ஏற்றி வைத்து, விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி  சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அக்கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEierAglw_HdzYojo0c7_fOvXqcepltLpZ89F-ZR5HA1swVxkAJFC4THQrzbz7Mnaq45mpsi5VkPPOUOFChRs32XP9CT5yhdnQTCO1lrW_ukghUFaAUDyqMZDA_VPDq5q0KatvwLzQ96eTPN/s1600/42b.jpg
 மக்கள் கருத்து 

1. சாதனை!சாதனை!! சாதனை!!! மக்களின் வேதனை!வேதனை!! வேதனை!!!


கடந்த ஆட்சிக் காலத்தில் 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று இட நெருக்கடிக்கிடையே பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து இருக்கின்ற இமாலயச் சாதனை!



பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகத்தை ஆட்சிக்கு வந்த நாளிலேயே வெளியே தூக்கி எறிந்த வியத்தகு சாதனை!


திமுக ஆட்சியில் கட்டப்பட்டு பாதியில் நின்றிருந்த தலைமைச் செயலகத்தின் இரண்டாம் கட்டமாக நிறைவேற்ற வேண்டிய கட்டிடங்கள், “கலைவாணர் அரங்கப்” பணிகள் ஆகியவற்றைத் தொடராமலும்; அதுபற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமலும், கிடப்பிலே போட்ட கித்தாப்புச் சாதனை!



ஆசியாவிலேயே மிகப் பெரியதும், அண்ணா நூற்றாண்டு நிறைவை யொட்டி அதன் நினைவாக சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டதுமான நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவதாக அறிவித்த மாபெரும் சாதனை!



ஏழை மாணவர்கள் - வசதி படைத்த மாணவர்கள், நகர்ப்புறத்து மாணவர்கள்- கிராமப்புறத்து மாணவர்கள் என்று வழிவழி வந்த வேறுபாடுகளை அகற்றும் சமச்சீர் கல்வி முறைக்கு 23.5.2011 இல் தடை விதித்த தனிப் பெரும் சாதனை.



சமச்சீர் கல்விக்காக 200 கோடி ரூபாய் செலவழித்து அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையெல்லாம் விநியோகிக்காத விண்ணுயர் சாதனை!


ஆசிரியர்கள் நியமனத்திலும், ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதிலும் குளறுபடிகளை ஏற்படுத்தி, அதில் ஆளுங்கட்சியினர் குளிர் காய்ந்த குதூகலச் சாதனை!


சத்துணவுப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள் நியமனங்களில் ஆளுங்கட்சியினர் புகுந்து விளையாடிய அற்புத சாதனை!



இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு நாள் ஒன்றுக்கு 20 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு செய்த மின்னல் வேகச் சாதனை.




திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்ட மேட்டூர் புதிய அனல் மின்நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் - யூனிட் (1), வடசென்னை அனல்மின்நிலையம் யூனிட் (2), வல்லூர் யூனிட் (1), வல்லூர் யூனிட் (2), வல்லூர் யூனிட்(3), தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதிய யூனிட் ஆகியவற்றை; திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக, உரிய காலத்தில் மினுற்பத்தி செய்வதில் அக்கறை காட்டாத அபார சாதனை!


வரலாறு காணாத மின்வெட்டு காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழில்முனைவோர், விசைத்தறியாளர், தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகி; ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு; தெருவுக்கு வந்து போராடும் திகைப்பூட்டும் சாதனை!


பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்” என்ற வகையில் கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்ட இணையிலாச் சாதனை!



தமிழகத்தில் பொறியியல் உயர்கல்வி பரவலாக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ளோர் பயனடையும் பொருட்டு; திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழகங்களை ரத்துசெய்து உருக்குலைத்த ஒப்பற்ற சாதனை!
ஏழை எளியோருக்குப் பயன் தரும் எந்த இலவசத் திட்டத்தையும் முழுமையாகச் செயல்படுத்தாத முக்கியச் சாதனை!



எடுத்துக்காட்டாக, 2011 பொங்கல் திருநாளையொட்டி வழங்க வேண்டிய இலவச வேட்டி - சேலைகளை எட்டு மாதங்கள் கடந்த பிறகும் இன்னும் வழங்கி முடிக்காத வரலாற்றுப் புகழ் சாதனை


- கல்வியாண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்த பிறகும் இலவச மடிக் கணினிவழங்கும் பணியும் - இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியும் முடிந்த பாடில்லாத முக்கியமான சாதனை!.




இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு அமைச்சர்களை அடிக்கடி மாற்றி, அமைச்சர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், நிரந்தர நடுக்கமும் நிலவுவதற்கு வழிவகுத்த நிகரற்ற சாதனை!



எந்த இடத்திலும் காலூன்ற முடியாத அளவுக்கு அதிகாரிகளை அடிக்கடிப்பந்தாடும் அநியாய சாதனை!
குறுவைச் சாகுபடியைக் கனவாக்கி, சம்பாச் சாகுபடியையும் ஏக்கத்திற்கு உள்ளாக்கிய இணையில்லாச் சரித்திரச் சாதனை!



கட்சி மாச்சரியத்தோடு, நில அபகரிப்பு என்ற பெயரால் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், திமுக முன்னணியினர் மீது சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாகப் பொய்யான வழக்குகளைத் திரும்பத் திரும்பத் தொடுத்து கைது செய்து சிறையிலே அடைத்த சிறப்பான சாதனை!
மதுபான உற்பத்தியாளர்கள் மேலும் லாபம் சம்பாதிக்க ஏதுவாக, மது பானங்களின் விலையை உயர்த்திய மாபெரும் சாதனை!



கொலை இல்லாத நாட்களே இல்லை; கொள்ளை நடக்காத ஊர்களே இல்லை; வழிப்பறி நடக்காத சாலைகளே இல்லை; பெண்கள் வெளியே புறப்பட்டால் கழுத்திலே உள்ள தாலிச் சங்கிலிகள் நிலைத்திருக்குமா என்பதே கேள்விக்குறி; போலீஸ் தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு என்று சட்டம் - ஒழுங்கு நிலையைப் படாதபாடு பட வைத்த பரவச சாதனை!



பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளுக்குக் கூட போலீஸ் படையை அனுப்பி அடக்குமுறை மூலம் தீர்வு காண முயற்சிக்கும் அரிய சாதனை!


பால்விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்று ஏழை எளிய நடுத்தரமக்களை வாட்டி வதைத்திடும் வளமான(?) சாதனை!



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரித்திடும் வகையில்; ஆட்சியினரையும் அவர்தம் செயல்பாடுகளையும் ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்திடும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும், பத்திரிகைகள் மீதும் வழக்குத் தொடுத்து அச்சுறுத்த நினைக்கும் அபார சாதனை!



தமது இயலாமையை மறைத்து மக்களைத் திசை திருப்புவதற்காக; எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீதும், இந்தியப் பிரதமர் மீதும், முன்னாள் ஆளுங்கட்சியான தி.மு.க மீதும் பழி சொல்லிப் புழுதி வாரித் தூற்றும் புரட்சிகர சாதனை!



ஜனநாயக நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மனசாட்சிக்குப்பயந்து, வாக்களித்த மக்களுக்குப் பயந்து, எதிர்க்கட்சியினருக்குப் பயந்து, பத்திரிகைகளுக்குப் பயந்து நடைபெற்ற தி.மு.க ஆட்சிக்கு மாறாக; அனைத்துத் தரப்பினரையும் பயமுறுத்தியே ஆட்சி நடத்தும் பண்பட்ட(?) சாதனை!





2. முருகேஷன் - இதயதெய்வம் வேறு என்னெதற்கெல்லாம் சத்தியம் வான்கினார் என்று இப்பவே மொத்தமாக சொல்லி விடுங்கள். சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை
ஒரு பெண்ணாக தனித்து நின்று தமிழக அரசியலில் சாதித்திருப்பது முன் உதாரணங்கள் இல்லாததுதான்.நிறைகள் பல இருந்தாலும் குறைகளும் உங்கள்
காதுகளில் விழும்படி சுற்றியிருக்கும் அரண்கள் வழி செய்திடல் வேண்டும்.


இடிந்தகரையிலும் மணப்பாட்டிலும் அனியாய சாவுகளை தடுத்திருக்கலாம்.
உங்களுக்கு கூழை குப்பிடு போடுபவரை விட உங்களது குறைகளை சுட்டிக்காட்டுபவரை நம்பலாம்.
ஆதாயத்திற்காக சொல்லப்படுபவை அல்ல அது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCdOVV4go41YIeZ7qC4ypUAsSAiNnYVj0aK_63SNvKUiF2nDR9E-n4MHbbw8DczqIkJmSTvflG5dp4_QsYwRxbzQ38JfYWc7RDAcspjQq4bLgaJniItRQwlBK-1wjn6ZHUI6OxFkoRpnw/s1600/mgr-mk.jpg




3. Dr.Mrs.MeenakshiPrabhakar




அ.தி.மு.க தொண்டர்களை காப்பாற்ற தம் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆருக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கும் நிலையில், ஜெயலலிதா கட்சித் தலைவர் பொறுப்பை மட்டுமே வகிக்க வேண்டும்.முதல்வர் பதவி முழுதும் நாட்டும் மக்கள் பிரதினிதித்துவம்.



அரசு கொள்கைகளான நல்லிணக்கம், சார்பின்மை , தனி நபர் வாழும் உரிமை நிறுவ வேண்டிய தளம்.எம்.ஜி.ஆர் என்றும் அ.தி.மு.க மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதில்லை.உலக அளவிலான விரிந்த சமூக சிந்தனை அவர் பாடல்களில், திட்டங்களில் உண்டு.அவர் நிலைத்த புகழ் பெறவும் அதுவே காரணம்.




கட்சி வித்தியாசமின்றி அரசுத் தளத்தில் மக்கள் நலனை முன்னிறுத்தி அரசியல் தலைவர்கள் செயல்படும் நிலை உண்மையான ஜனனாயகம்.கட்சி தலைவர் பொறுப்பு, மக்கள் நல செயல்களில், மக்களை உயர்த்த திறன் தருவதிலான பகிரும் பொறுப்பே தவிர போட்டியில்லை
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgA8Nh8Nnx8hAg3kdTxxbpfFNBFf0lNVrVh3x6UUhI1Mlqmf9gmar3AC7Ulzk_S-myh_fJKW1jUd0OtWV9QuGVa-UXBLCdVbndJYcKh6QyXZK4mNQD9sImQTMmtr3UFwgsX9lJRnprMoN0/s1600/mgramachandran17.jpg
 a

நன்றி - விகடன்

Monday, October 15, 2012

அம்மா! உன் ஆணைப்படி மின் வெட்டு, எல்லாம் கண் கட்டு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmnrqnQ0-s4poaYUN9lBz9lFYJV6W4TcTZOYbicJQkXBW5H7hF0OjKETaR-56vlaexavETegGMnoz6n3UIjZtlOFQk_Wp3CR6GIn9DGLe9KjeKgscWAsC5OsKchAVwRd1PK8yW0xkJFjzV/s1600/426897_320639244652607_1940552083_n.jpgதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்

 

கோவை. சா.காந்தி,
9
அக்டோபர் 2012
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

 


தமிழகத்தின்
மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.

 

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

 

மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

 

1.தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக. இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்

 


இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.

 

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

 


வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.

 


வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.

 

இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

 


சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

 


இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச்மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

 


ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.

 


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

 


நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.

 

ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

 


ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

 


இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.

 


கூடங்குளத்தில் உள்ள வி.வி..ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும்.

 

எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.

 

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும்.

 

இதில், கம்பி இழப்பான 22% கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது. எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.

 

…………..கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.

மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினைமின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

 


மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.

 


2012
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.

 


அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.

 

பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

 

சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

 

மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

 


• 31
பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

 


பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

 


உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

 


திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள்
ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

 


சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

 

இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.

 


அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

 

பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

 

இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.

 

அன்புடன்

கோவை. சா.காந்தி,

9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தொடர்புக்கு: 9443003111
http://www.vikatan.com/news/images/minvettu_toon.jpg




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuWc200fSRKq_y3ZZt3HVhAMN1oSe6cmuml4ijhFC3HkyHj2GzgUnbHj6PIFc4AlfHYOVYsv2HTIVkiQ7tUKOyy_O1jb1hO3QS-YTI26vZ6mt66TNRz5mA0KnU5171HPbWwlxj9yN28H0W/s400/power_cut_Secrets.jpg
http://img.dinamalar.com/data/large/ECART_1303669261.jpg





http://dc150.4shared.com/doc/5Zb_imOV/preview_html_m3e149585.gif