ஒரு சினிமாப்படம் எடுக்க வேண்டும் எனி;ல் ஷூட்டிங் ஸ்பாட் வாடகை , நடிகர்கள் , ந்டிகைகள் சம்பளம், டெக்னீஷியன்கள் சம்பளம், ஆடை அலங்கார செலவுல ஆரம்பித்து ஏகப்பட்ட செலவுகள் லைன் கட்டி நிற்கும், ஆனால் ஒரு திறமையான இயக்குநர் , நல்ல திரைக்கதை இருந்தால் செலவே இல்லாமல் ஒரு படத்தை எடுத்து விட முடியும் என ஆல்ரெடி இரா பார்த்திபன் தன் ஒத்தை செருப்பு சைஸ் ஏழு படம் மூலம் நிரூபித்திருக்கிறார். அதே பாணியில் ஒரே ஒரு நடிகை நடிக்க ஒரு முழுப்படத்தையும் தன் கிரிஸ்ப் ஆன திரைக்கதை மூலம் இயக்குநர் ஸ்ரீநிவாசு காகரிலா நிரூபித்திருக்கிறார். இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சி. வரவேற்கலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்\
நாயகி ஹைதராபாத்தில் ஐ டி ஊழியர் ஆகப்பணி புரிகிறார். இன்னும் இரண்டு நாட்களில் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது . அதற்காக தன் சொந்த ஊரான விஜயவாடா விற்கு காரில் தனிமையில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு ஃபோன் கால் வருகிறது . நாயகியின் முன்னாள் காதலன் தற்கொலை முயற்சி செய்து சீரியசாக ஹாஸ்பிடலில் இருக்கிறான். இது பற்றி விசாரிக்க போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டும் , இதுதான் தகவல்
நாயகி அதிர்ச்சி அடைகிறார். அப்போது தோழியிடம் இருந்து ஒரு ஃபோன் கால் வருகிறது . நாயகி முன்னாள் காதலனுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில்,ஃபேஸ்புக்கில் போட்டு நான்காவது திருமண நாள் வாழ்த்துக்கள் மை டியர் மனைவி என முன்னாள் காதலன் போஸ்ட் போட்டிருக்கிறான்
முன்னாள் காதலனின் அப்பா ஒரு அரசியல்வாதி . அவர் அடியாட்களை நாயகியின் வீட்டுக்கு அனுப்பி மிரட்டுகிறார். நாயகியின் வருங்காலக்கணவன் ஃபோன் செய்து விளக்கம் கேட்கிறான்.
நாயகிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . இந்தப்பிரச்சனைகளை எல்லாம் அவர் சமாளித்தாரா? இல்லையா? அவர்கள் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பது பின் பாதி திரைக்கதை
நாயகி ஆக கார்கேயி எல்லா பிரகேட் நடித்திருக்கிறார். மெழுகு பொம்மை மாதிரி அழகான முகம், முடிந்தவரை நன்றாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். சிரிப்பு , கொஞ்சல் நன்றாக வந்த அளவு பயம், பதட்டம் கை கூடி வரவில்லை
ஒன்றரை மணி நேரம் ஓடும் அளவு கச்சிதமாக ட்ரிம் பண்ணி இருக்கிறார் எடிட்டர் . ஒளிப்பதிவாளருக்கு சவாலான வேலை . ஒரே ஒரு காரில் சாலையில் பயணிக்கும் நாயகி . இதை போரடிக்காமல் வெவ்வேறு கோணங்களில் காட்சிப்படுத்த வேண்டும் . திறமையாக சவாலை சமாளித்திருக்கிறார்
ஃபோன் கால் மூலம் மட்டுமே முழுக்கதையும் நடப்பதால் குரல்களை வைத்தே திரைக்கதையை நகர்த்த வேண்டிய சூழல் .,இயக்குநர் நன்றாக சமாளித்திருக்கிறார்.
படத்துகான ப்ரமோஷனில் இது சைக்காலஜிக்கல் ட்ராமா என விளம்பரப்படுத்தப்பட்டதால் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆக இது மொத்தமும் நாயகியின் கற்பனை என பல்டி அடிப்பார்கள் என எதிர்பார்த்தேன். அப்படி நடக்கவில்லை .
மாமூல் மசாலாப்படங்கள் பார்த்து சலித்தவர்கள் இது போன்ற வித்தியசமான கான்செப்ட்டை வரவேற்கலாம்
அமேசான் பிரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது . தமிழ் , தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இருக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 படம் முழுக்க வெறும் ஃபோன் கான்வெர்சேஷன் தான் என்பதை சிம்பாலிக்காக டைட்டிலில் உணர்த்திய விதம் அருமை
2 படம் ஆரம்பித்த அடுத்த ஐந்தாவது நிமிடத்துலயே நாயகியின் பதட்டம் பார்வையாளர்களையும் தொற்றிக்கொள்ள வைத்த கச்சிதமான ரைட்டிங்
ரசித்த வசனங்கள்
1 எனக்கு சத்தியத்தின் மேல நம்பிக்கை இல்லை. ஏன்னா சத்தியம் என்பதே மீறுவதற்காகத்தான்
2 சந்தோஷமா இருக்கும்போது தைரியமா இருக்கற மாதிரிதான் இருக்கும், ஆனா ஒரு கஷ்டம் வரும்போதுதான் நமக்கு அப்படி எந்த தைரியமும் இல்லைனு தெரியு வரும்
3 லவ் பண்றதுன்னா டெய்லி ஃபோன் பண்ணி குட்மார்னிங்னு அப்டேட் குடுக்கறது இல்லை , சிக்கலான சூழ்நிலை வரும்போது துணையை புரிஞ்சுக்கிட்டு துணையா இருப்பதுதான் லவ்
4 எல்லாருடைய நி;லைமையையும் நாம தான் புரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு , நம்ம நிலைமையை யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க
5 லவ் பண்றப்ப எல்லாமே சந்தோஷமாதான் இருக்கும், ஆனா அந்த சந்தோஷம் நிலைக்குமா?னு நமக்கு அப்போத்தெரியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 சாதாரண குடிமகள் ஆன நாயகியே அந்த இன்ஸ்டா போஸ்ட் போலி . சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஃபோட்டோ என்பதை தெரிந்துகொள்ளும்போது சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் அது ஃபேக் என்பதை போலீஸ் கண்டு பிடிக்காதா?
2 நாயகியின் ஃபோன் ஆண்ட்ராய்டு ஃபோன். அப்போதுதான் 15 லட்ச ரூபாய் பணம் அவரது அக்கவுண்ட்டில் ட்ரான்ஸ்ஃபர் ஆகி இருக்கிறது .அது போக அவரது பர்சனல் பணமும் இருக்கும், ஆனால் நாயகி டெய்லருக்கு தர வேண்டிய 5000 ரூபாய் பணத்தை ஈசியாக நெஃப்ட் பண்ணாமல் தம்பிக்கு ஃபோன் செய்து கொண்டு போய் கொடுக்கச்சொல்வது ஏன் ?
3 பஞ்சர் ஆன நாயகியின் கார் டயர் எப்படி மாற்றப்பட்டது அந்த நள்ளிரவில் எப்படி உதவி கிடைத்தது என்பதை காட்சி ரீதியாகவோ வசனமாகவோ காட்டவே இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான முயற்சி தான் ., ஆனால் எல்லா செண்ட்டர் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என சொல்லி விட முடியாது . ஏ செண்ட்டர் ஆடியன்சை கவரும் ரேட்டிங் 2.25 / 5