தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்!
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஹீரோ,
ஹீரோயினாக சித்தரிக்கிறார்கள். பெரும்பாலும் ஹீரோயினை பள்ளி மாணவியாகவும்,
ஹீரோவை வேலைவெட்டிக்கு செல்லாமல், குடித்துவிட்டு பொறுப்பில்லாமல்
ஊர்சுற்றும் இளைஞனாகவும் காட்டுகிறார்கள். அந்தப் படங்களும்
வெற்றிபெறுகின்றன. அந்த வெற்றிக்குப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை
குறிவைத்தே இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களை எடுக்கிறார்கள் என்பதுதானே
காரணம். தங்களின் வியாபாரத்திற்காக இப்படிப்பட்ட படங்களை எடுப்பது சரியா?
சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் என்று சொல்பவர்களே, அதைத் தவறாக
உபயோகப்படுத்தலாமா? நாட்டில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று
காரணங்கள் சொல்வது நியாயமாகாது. இளம் தலைமுறை எப்படி இருக்கிறது என்று
காட்டுவதைவிட, எப்படி இருக்கவேண்டும் என்பதைக் காட்டுவதுதானே சமூக
அக்கறையுள்ள படைப்பாளிகளின் கடமை.
மாணவப் பருவத்தில் உள்ளோர் காதலில் விழுவதில் சினிமாவின் தாக்கம் நிச்சயமாக
உள்ளது. ஏனென்றால், மாணவர்கள் பெற்றோரைவிட தங்களின் நண்பர்களுடன்தான் அதிக
நேரம் இருக்கிறார்கள். நண்பர்களிடம்தான் மனம்விட்டு பேசுகிறார்கள்.
அப்படிப் பேசும்போது சினிமாதான் அவர்களின் முக்கியமான பேசுபொருளாக
இருக்கிறது. தொலைக்காட்சி, செல்பேசி, இணையம் போன்ற எல்லாவற்றிலும் சினிமாவே
பிரதானமாக இருக்கிறது.
இதுபோன்ற திரைப்படங்கள் இங்கே U-சான்று பெற்று வெளிவருகிறது. ஆனால் இதே
படங்களை வெளிநாடுகளில் 13 அல்லது 15 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க அனுமதி
கிடையாது. ஆனால் இங்கே எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பிறந்த குழந்தை முதல்
அனைவரும் பார்க்கிறார்கள். தணிக்கை குழுவும் இதுபோன்ற கதையம்சம் உள்ள
படங்களுக்கு அனுமதி அளிக்கிறதே?
பெற்றோரும் இதுபற்றி எதுவும் கவனிப்பதில்லை. அவர்களுக்கு குடும்பத்தின்
பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யவே நேரம் போதவில்லை போலும். தமிழ்த்
திரையுலக படைப்பாளிகள், பள்ளி மாணவ, மாணவியரின் காதலைப்பற்றி படம்
எடுப்பதில் தங்களின் படைப்புத்திறமையைக் காட்டுவதை விடுத்து, பள்ளிகளில்
இருக்கவேண்டிய கண்ணியமான ஆண்-பெண் நட்பைக் காட்டலாமே? அதுபோக திரைப்படமாக
எடுக்க இன்னும் எவ்வளவோ வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறதே. தனது மகள்/மகன்
பள்ளியில் படிக்கும்போதே காதலிப்பதைக் கண்டு எந்த பெற்றோராவது
மகிழ்ச்சியடைவரா?
இங்கு யாரும் காதலுக்கு எதிரியல்ல. காதல் என்பது வாழ்வில் சரியான
தருணத்தில் சரியான நபரைச் சந்தித்து, பரஸ்பர புரிதலுக்குப்பிறகு
ஏற்படவேண்டிய ஒரு உணர்வு. ஆனால் அதைத் தூண்டுகிற வேலையை யாரும்
செய்யவேண்டாமே. படைப்பாளிகள் அதைத் தவிர்க்கலாமே.
படைப்பாளிகள் மட்டுமல்ல, பெற்றோருக்கும் இதில் பெரும்பங்கு உண்டு. இப்போது
காதல் செய்யும், காதலர்தினம் கொண்டாடும் கல்லூரி மாணவர்களைவிட, பள்ளி
மாணவர்களே அதிகம். பல குடும்பங்களில் குழந்தைகளும் பெற்றோரும் மனம் விட்டு
பேசுவதில்லை. குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடைவெளி உண்டாகிவிட்டது. இது
மிகவும் ஆபத்தானது. இந்த வயதில் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி என்பதை
யார் அவர்களுக்குப் புரியவைப்பது? தன்னைப்பற்றித் தனக்கே முழுமையாகத்
தெரியாத வயதில், எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரைப் புரிந்துகொண்டு,
தேர்ந்தெடுத்துக் காதலிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? காதல் ஒன்றும்
பள்ளியிலேயே ஆரம்பித்து அங்கேயே முடிந்து விடுகின்ற உணர்வு அல்லவே.
அடுத்து இணையம், செல்பேசி போன்றவை சினிமாவைவிட பலமடங்கு மோசமானவை.
இவற்றால்
எந்த அளவுக்கு நமக்கு நன்மை கிடைக்கிறதோ அதே அளவு தீமையும் உள்ளது.
சினிமாவைப் பார்த்து மாணவர்கள் அறியாத வயதில் காதலில் விழுகிறார்கள்
என்றால், இதுபோன்ற தொழில்நுட்பங்களைத் தவறான முறையில் உபயோகித்து அவர்கள்
குற்றவாளிகளாகவே மாறுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சமூக அவலம்?
இப்போதுள்ள சூழ்நிலையில், மாணவர்களுக்குத் தனிமையும் இணையம், செல்பேசி
போன்ற தகவல்தொடர்பு சாதனங்களும் சுலபமாகக் கிடைப்பதே, மாணவர்கள்
மற்றவர்களின் துணை இல்லாமலேயே தீயப்பழக்கங்களைக் கற்று தீயவழியில் செல்ல
காரணமாக இருக்கின்றது. இப்படி இருந்தால் எப்படி ஒழுக்கமான சமுதாயம்
உருவாகும்?
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சில நிகழ்ச்சிகள் சினிமாவைவிட
ஆபாசமானவை. 'நெடுந்தொடர்' என்ற பெயரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் நமது
பண்பாட்டை சீர்குலைத்துக்கொண்டு இருக்கின்றன. இவையெல்லம் பெற்றோரும்
தங்களின் குழந்தைகளுடன் அமர்ந்து, பார்த்து ரசிக்கிறார்கள் என்பது கொடுமை.
குழந்தைகள் எதைப் பார்க்கவும், கேட்கவும், படிக்கவும் அவர்களின்
பெற்றோர்தான் தணிக்கைக் குழுவாக இருந்து கண்காணிக்க வேண்டும்.
தொலைக்காட்சி, இணையம், செல்பேசி இவை எல்லாவற்றையும் குழந்தைகள் பயன்படுத்த
பெற்றோர்தான் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இதுபோன்ற சாதனங்களை குழந்தைகள்
உபயோகப்படுத்தும்போது பெற்றோரும் உடன் இருக்க வேண்டும்.
தேவையான அளவு மட்டும் இதுபோன்ற தொழிநுட்ப சாதனங்களை உபயோகப்படுத்திவிட்டு,
மற்ற நேரத்தை அறிவார்ந்த புத்தகங்களை வாசிக்கச் சொல்லிப் பழக்கலாம். அதற்கு
முதலில் பெற்றோர் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை
ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களைப்பார்த்துதானே குழந்தைகள பழகுவார்கள்.
மேலும் நேரம் கிடைக்கும்போது வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்குக்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்ளலாம். நல்ல புத்தகங்களும்,
பயணங்களும் வளரும் இளம் பருவத்தினருக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்கும்.
'அதற்கெல்லாம் நேரம் இல்லை' எனச் சொல்வது நியாயமாகாது. குழந்தைகளைப்
பெற்றுக்கொள்ள நேரம் ஒதுக்கியதுபோல, அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக,
பண்புள்ளவர்களாக வளர்க்கவும் நேரம் ஒதுக்குவது ஒவ்வொரு பெற்றோரின்
கடமைதானே.
குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க மற்றவர்களை நம்பி எந்த பயனுமில்லை.
இதற்கு உதாரணமாக, சமீபத்தில் இணையத்தில் படித்த ஒரு செய்தியைக் கூறலாம்.
ஒரு குழந்தை, வேலைக்கு செல்லும் தன் தாயிடம் கேட்கிறது: "அம்மா, நீ வெளியே
செல்லும்போது உனது பணப்பை அல்லது வேறு எதாவது விலையுயர்ந்த பொருளை,
வேலையாட்களை நம்பி விட்டுச்செல்வாயா?" என்று கேட்கிறது. அதற்கு அந்தத் தாய்
'நிச்சயமாக மாட்டேன்" என்று பதில் கூறுகிறாள். பெண் குழந்தை கேட்கிறது
"பின் எந்த நம்பிக்கையில் என்னை அவர்களுடன் விட்டு செல்கிறாய்?" என்று.
இந்தக் கேள்விக்கு அந்தத் தாயால் என்ன பதில் கூற முடியும்? இதுதானே இன்று
பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிறது.
மொத்தத்தில் இதில் நாம் எல்லோருமேதான் தவறு செய்கிறோம். அதை உணர்ந்து,
தவறுகளைத் திருத்தி, நமது சமூகத்தை நாம்தானே நல்வழிபடுத்தவேண்டும்.
வெ.பூபதி, கட்டுரையாளர், தொடர்புக்கு [email protected]
நன்றி = த தமிழ் இந்து
- இதைச் சொன்னால், பிற்போக்குவாதிகள், கலையை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று விமர்சிப்பார்கள். காதலைச் சொல்கிறோம் என்று திரைப்படம் எடுப்பவர்களே, தன்னுடைய மகளின் காதலை எதிர்த்துப் போராடுவதைப் பார்க்கிறோம். எல்லாம், உபதேசமெல்லாம் ஊருக்குதான், நமக்கல்ல என்ற கதைதான்.4 days ago · (20) · (0) · reply (0)Raj Up Voted raajaa 's comment
- Vaidhyanathan Sankar at Department Of Agrl.Engg.,Government of Tamilnadufrom Chennaiபிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை vithaikkuம் இவர்களுக்கு தயாரிப்பு செலவில் மான்யங்கள் ஒரு கேடா?3 days ago · (4) · (0) · reply (0)சரவணன் சுதந்திரன் Up Voted Vaidhyanathan Sankar's comment
- Sultanabdulkader from Dubaiநல்ல அருமையான கட்டுரையை பிரசுரித்த இந்து தமிழ் நாளிதழுக்கு என் நன்றி. நல்ல குடும்பத்தை உறுவாக்குவது பெண்களே. அவர்களுக்கு அவர்களுடைய கடமையை செய்ய ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களையும் பொருளீட்ட அனுமதித்தால் உங்களுடைய உண்மையான செல்வங்கள் கவனிப்பாரற்ற , கண்காணிப்பு இல்லாத தலைமுறை தீராத தீவினையே. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற சொல் படிப்பதற்கு மட்டும் இல்லை. வாழ்கையை அதுபோல் அமைத்துக் கொள்வது சிறப்பு. அம்மாவின் கண்காணிப்பு, அரவைப்பில் வளரும் குழ்ந்தை தவறுவது மிக குறைவு.3 days ago · (11) · (0) · reply (0)
- Bala from Madrasசரியாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர், இன்று நம் நாட்டில் சினிமாவை பார்த்துதான் அனைத்து காரியங்களும் நடைபெறுகின்றன. படிக்கிற வயதில் மாணவர்கள் காதல் செய்கிறார்கள், உடை அணிகிறார்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற அணைத்து தேசதுரோக செயல்களுக்கும் சினிமாதான் முழுமுதல் காரணமாக உள்ளது. பழைய சினிமாக்கள் தேசப்பற்றையும், பண்பாட்டையும் வளர்த்தன ஆனால் இப்போது வரும் புதிய சினிமாக்கள் நாட்டு மக்களின் பண்பாட்டையும் நல்ல பலக்கவளக்கங்களையும் கெடுப்பதாகவே உள்ளது. இப்படிப்பட்ட சினிமாக்களுக்கு வரிச்சலுகைவேறு. சினிமா நடிகர்களும் நடிகைகளும் நாட்டை ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். பெற்றோராகிய நாம்தான் நம் குழந்தைகளை நம் கண்ணின் இமைபோல காத்து நல்வழிப்படுத்தவேண்டும். முக்கியமாக இதுபோன்ற சினிமாக்கள் பொருளாதாரத்திலும், கல்விஇலும், பின்தங்கிய தலித் மக்களின் வாழ்க்கையை சீர்குலைப்பதில் மக்கிய பங்கு வகிக்கிறது.3 days ago · (3) · (0) · reply (0)
- Conjivaram from Chennaiஇளம் வயது பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது .. ஒழுக்கம் இல்லை என்றால் ஒரு நாடே சிதைந்துவிடும் .. காலையில் அலுவலுக்கு செல்லும்போது ஒரு பள்ளி சிறுமி சுவரொட்டியில் ஒட்டப்பட்ட ஒரு நடிகரின் படத்தை தனது கைபேசியில் படம் பிடித்த காட்சி அதிர்ச்சியை உண்டுபண்ணியது .. தமிழ்நாட்டில் திரைத்துறை உடனடியாக இழுத்து மூடவேண்டும் .. இதனால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை .. .. இளம் பிள்ளைகள் கைபேசி உபயோகிப்பதை தடை செய்யவேண்டும் .. ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து நீக்கவேண்டும் .. அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இருபாலார் சேர்ந்து படிப்பதை தடைசெய்ய வேண்டும் .. பிஞ்சிலே பழுத்துவிடுகின்றனர் ..3 days ago · (1) · (2) · reply (1)
- Deepak VS at Studentfrom Erodenalla karuthu sir appdiyae current shock adichu neriya per irandhu poranga so curret ah cut pannalam rail mariyal, tharkolainu neriya nadakkuradhala adhayum thadai senijudalam appuram road acc neriya nadukkudhu so yaarun road use panna koodadhunnu sollidalam ok va sir... eandha technology naalum nalladhum kettadhum irukkuradhu than so we have to decide the wise use of it.. eaduthadhukkellam bane pannanum na oru achievementum panna mudiyahu sir....3 days ago · (1) · (4) · reply (0)
- மோகன்இன்றைக்கு மாணவ சமுதாயம் சீரழிவதற்கு சினிமா மட்டுமே காரணமல்ல.. அரசும்தான்... புரியலயா? 1, 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச (விலையில்லா) மடிக்கணினி வழங்குகிறார்களே... அதனை எத்தனை மாணவர்கள் முறையாக பயன்படுத்துகிறார்கள்.... 80%க்கும் மேலானவர்கள் (பலான) சினிமா பார்க்கவே உபயோகிக்கிறார்கள்... உண்மைதானே... அப்புறம் பிஞ்சிலே பழுக்காம?3 days ago · (0) · (0) · reply (0)
- Vaidhyanathan Sankar at Department Of Agrl.Engg.,Government of Tamilnadufrom ChennaiMaanavarkalai பிஞ்சிலேயே பழுக்கவிட்ட பெருமை திரைஉலகத்தினர்க்கெ உரியதுodippogalaamaகலாச்சாரத்தை உருவாக்கியவர்களும் இவர்களே.2 days ago · (0) · (0) · reply (0)
- சரவணன் சுதந்திரன்திரு.பூபதி அவர்களே, இதையெல்லாம் நீங்கள் இன்னும் இருநூறு பக்கம் எழுதினாலும் படிக்க சுயநினைவு நம் செல்வங்களிடம் இருக்கவேண்டுமல்லவா? உங்களுடைய இந்தச் செய்திக்கு உங்களுக்கு எத்தனை பாராட்டுக்கள் வருகின்றனவோ அதெல்லாம் பெற்றோராயிருக்கும் நேற்றைய இளைஞர்களிடமிருந்து. எத்தனை "கிண்டல்கள்" வருகின்றனவோ அவை நம் செல்வங்களிடமிருந்து..காலம் அவர்களுக்கு விடை சொல்லும்!!2 days ago · (3) · (0) · reply (0)raajaa Up Voted சரவணன் சுதந்திரன்'s comment
- சரவணன் சுதந்திரன்நல்ல கருத்தைச்சொல்ல பின்வரிசையில் நிற்காதே! முன்வரிசையின் நின்று தைரியமாகவும் அமைதியாகவும் அன்பாகவும் சொல் என்று "அய்யம்பேட்டை அரிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்" என்ற ஒரு மகான் கி.பி. 2ல் சொல்லியிருக்கிறார். அதைச்செய்த திரு.பூபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். "மாற்றம் என்பது நம்மிடமிருந்துதான் தொடங்க வேண்டும் எதிர்வீட்டில் இருந்து அல்ல!" என்று அட நம்புங்க இதுவும் அ.அ.க.ச சொன்னதுதான். அப்புறம் ஒரு சிறிய ஆனால் வலுச்செய்தி..நிறைய நல்ல இளைஞர்களும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் இன்று தவறான பாதைகளைத் தேர்ந்தெடுத்துள்ள தங்கள் நண்பர்களால் சூழப்பட்டுள்ளனர்2 days ago · (2) · (0) · reply (0)
- சரவணன் சுதந்திரன்பெற்றோர் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதை நாம் தெளிவாகப்புரிந்துகொண்டால் இந்தக் கட்டுரைக்கு எதிர்காலத்தில் வேலையிருக்காது! நேற்று நாம் நம் தாத்தா பாட்டி வீட்டுக்கோ அல்லது நம் உறவினர் வீட்டுக்கோ சென்றால் அவர்கள் நம்மிடம் பெரும்பாலும் உரையாடினர். இன்று அவர்கள் கூட தொ(ல்)லைத்தொடர்களில் மூழ்கிவிட்டனர். பிள்ளைகள் சிதறாமல் என்ன செய்யும். முதலில் அன்பைப் பகிருங்கள் பிறகு அன்பைக் கேளுங்கள்! தனித்து விடப்படும் பிள்ளைகள் என்ன செய்யும் அதற்குத்தெரியாதே விடமும் இனிப்பாய் இருக்கலாம் என்பது!! "தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது, தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும்!! நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...2 days ago · (0) · (0) · reply (0)
- Saran Rajநல்ல, அருமையான கட்டுரை. இன்றைய பள்ளி மாணவர்கள் காதலில் விழுவற்கு சினிமா முக்கிய காரணம். சில படங்கள் பள்ளி மாணவர்களை காதல் செய்யத் தூண்டும் விதமான கதைகளையும், பாடல்களையும் கொண்டுள்ளன. இது போன்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதால் மீண்டும் இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்கள் வெளிவருகின்றன. சினிமா ஒரு பெரிய வியாபாரம். அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற படங்களை எடுக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் தணிக்கைக்குழு என்று ஒன்று உள்ளதே. அந்த தணிக்கைக்குழு இது போன்ற கதையம்சம் உள்ள படங்களை வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்று ஏன் கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை? சினிமாவைவிட செல்போனே, இன்டர்நெட் போன்றவை எந்த தணிக்கைக்குழுவின் கண்காணிப்பும் இல்லாதவை. மிக மிக ஆபத்தானவை. எனவே பெற்றோரே தனிக்கைக்குழுவாக செயல்படவேண்டும் என்று கட்டுரையாளர் கூறுவது மிகச்சரியானதே. மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களின் பெற்றோரும் ஒரு முக்கிய காரணம். பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்களை கட்டுரையாளர் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள்.a day ago · (3) · (0) · reply (0)Saran Raj Up Voted Saran Raj's comment