Showing posts with label தமிழருவி மணியன். Show all posts
Showing posts with label தமிழருவி மணியன். Show all posts

Sunday, May 18, 2014

தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறாதது ஏன்?- தமிழருவி மணியன் விளக்கம்

தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: " மோடி ஆதரவலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. 


மதச்சார்பின்மையும் சாதிய அழிவுச்சக்திகளும் இத்தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன. மாயாவதி, முலாயம்சிங், லாலு பிரசாத் போன்றோரின் வீழ்ச்சியும், காங்கிரஸின் வரலாறு காணாத தோல்வியும் சாதி மதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் இழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் முயற்சியாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. 


தமிழகத்தில் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக தேசிய ஜனநாயக் கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரசை வீழ்த்தவும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கவும் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் நோக்கங்கள் ஓரளவு நிறைவேறியுள்ளன. 


காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவி மீண்டும் எழ முடியாமல் விழுந்து விட்டது. தி. மு. க. ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பெற முடியாமல் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை முற்றாக இழந்துவிட்டது. 


இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, சட்ட மன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதில் ஈடுபட வேண்டும். 



தமிழகத்தில் 75 லட்சம் வாக்காளர்கள் இக்கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம் மாற்று அரசியல் மலர தங்கள் ஆதரவைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். 



விஜயகாந்தின் ஆரம்பகால அரசியல் ஊசலாட்டங்களும், மருத்துவர் ராமதாசின் பிடிவாதமான புறக்கணிப்பும், மாதக்கணக்கில் தொகுதி உடன்பாடு காண்பதில் கடைப்பிடித்த கேலிக்கூத்துகளும், கூட்டணித் தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரு மேடையில் கூட வாக்காளர்களைச் சந்திக்காமல் தவிர்த்ததும் மோடியை மையமாகக் கொண்டு மக்களிடம் மலர்ந்த எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டன. 


இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம்.
இதில் வாக்காளர்களைக் குறைசொல்வதற்கு ஒன்றுமில்லை. தவறுகளிலிருந்து பாடம் பெறுவதுதான்அரசியல் பண்புடைமை. ஆனால், ராமதாசும் விஜயகாந்தும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி சேர்ந்து களத்தில் நிற்பார்கள் என்பது சந்தேகத்திற்குரியது. 



தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த இருவர் மூலம் வலுப்பெறுவதற்கு வாய்ப்பில்லை. மாற்று அரசியல் மலர்வதற்குத் தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட வைகோவின் தோல்வியை தமிழினத்தின் ஒட்டு மொத்தத் தோல்வியாக காந்திய மக்கள் கட்சி (கா.ம.க.) கருதுகிறது. 



இரண்டு ஆண்டுகளுக்குள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்றுள்ள சாதகமான சூழல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. மாற்று அரசியல் வளர்த்தெடுக்கப்படுவதற்கு ஏற்ற வியூகத்தை இனி காலம் தான் நமக்கு காட்ட வேண்டும்". இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 


  • gnanavel.s Shanmugam at Govt. of Puducherry 
    ஒரு இலக்கியவாதியாகப் பார்த்த உங்களை நாங்கள் ,இத்தகு அரசியல் பேசுவதால் அரசியல்வாதியாகப் பார்க்க நினைக்கிறோம் ! வாருங்கள் அரசியலுக்கு!!
    about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • seeni.sethuraman  from Chennai
    தமிழகத்தில் தேசிய ஜனநாய கூட்டணியில் உள்ள பிஜேபி கட்சியை தவிர மற்ற கட்சிகளான பாட்டாளி மக்கள் , வைகோ , விஜயகாந்த் ,பாரி வேந்தர் .சண்முகம் போன்றவர்களுக்கு தங்கள் கட்சி உறுப்பினர்களை தவிர நடுநிலையாளர் ஆதரவு இல்லை என்பதை இந்த தேர்தல் மூலம் உணர்ந்து தமிழக பிஜேபி 2016 தேர்தலை தனியாக சந்திக்க வேண்டும் .
    about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Muthu Selva at Singapore from Singapore
    வைகோ 2016 சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்றாலும் கூட்டனியாக நின்றாலும் அவரை வெற்றி பெற வைப்பது தமிழர்களின் கடமை
    about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Kelvigal Ayiram  from Wheeling
    வைகோ தனியாக நிற்பதே 2016 சட்ட மன்ற தேர்தலில் வெற்றியை அடையும் வழி என தோன்றுகிறது.
    about 14 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
  • Arul George  
    இவரது தரகு பேச்சை நம்பி வைகோவும், விஜயகாந்தும் அழிந்து போனது தான் மிச்சம். வரும் சட்டமன்ற தேர்தலில்லாவது வைகோவும், விஜயகாந்தும் இவரது தரகு பேச்சை கேட்காமல் இருந்தால் ஒருவேளை சில சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறலாம். இவர் தரகு கூட்டணியில் சாதியவாதம் மற்றும் மதவாதம் பேசிய கட்சிகள் தான் வெற்றி பெற்றுள்ளன. இவரது பேச்சை கேட்டுதான் நரேந்திரமோடியும், பாஜகவும் இலங்கைக்கான வெளியுறவு கொள்கைகளை செயல்படுத்துவார்கள் என்றும் வாய் சவுடால் விடுவார். இவர் மாற்று அரசியல் என்று கூறுவது சாதியவாதம் மற்றும் மதவாதம் சார்ந்த கேடுகேட்ட அரசியலை தான்.
    about 15 hours ago ·   (13) ·   (2) ·  reply (1)
    • muthu  from Dharapuram
      செம காமெடி
      about 14 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
    அம்மாவின் சுனாமி அலைகளுக்கு முன், மோடியின் அலை தோற்றுப்போயினவோ? ஆனால் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். அம்மா மட்டும் வட இந்தியாவில் பிறந்திருந்தால், என்றோ பிரதமராகி இருப்பார்!!
    about 15 hours ago ·   (1) ·   (6) ·  reply (0)
  • haroonbasha,tiruvannamalai  
    கூட்டணி அமையவேண்டும் என்று சொல்லி ம.தி.மு.க.க்கு இவ்வளவு சதம் தே.மு.தி.க.க்கு இவ்வளவு சதம் என்றெல்லாம் கணக்கு சொல்லி இவர்கள் கூட்டு சேர்ந்தால் தமிழ்நாடே நமக்கு என்றதெல்லாம் பொய்யா?
    about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Harikumar Harikumar  
    தமிழ் அருவி மணியன் ஐயா, நீங்கள் பா.ஜ. க மற்றும் ம.தி.மு. க மற்றும் இணைத்திருந்தால் போதுமானது, இல்லை தனியாக நின்றிருந்தால் பா.ஜ. க வின் தனிப்பெரும்பான்மை தெரிந்திருக்க கூடும் . மேலும் சில இடங்கள் கிடைத்திருக்க கூடும். மூப்பனார் அவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பம் செய்த போது செய்த அதே தவரை தமிழக பா.ஜ. கவும் செய்துவிட்டது.என்னைப்போல் பலர் போடியை விரும்பினோம், பா.ஜ.க கட்சியை நம்பினோம் . ஆனால் ஒருபோதும் குடும்ப்ப கட்சியையும் , ஜாதிய கட்சியையும் ஒருபோதும் விரும்பவில்லை அதுவே பா.ஜ. காவின் தேர்தல் களம் காட்டியுள்ளது. இதே கூட்டணி தொடர்ந்தால் ஒருபோதும் தமிழகத்தில் பா.ஜ. க பெரிய அலவிற்கு கால் ஊன்ற முடியாது. இப்பொழுது கேப்டனிடன் கேட்டிர்கள் என்றால் வாய் கூசாமல் இன்று மோடிக்கு கிடைத்த வெற்றியே என்றுடன் கூட்டணி வைத்ததால் தான் என்று கூறக்கூடும். இராமதாஸ் அவர்களுக்கு கவலை இல்லை அவருக்கு வேண்டியது கிடைத்துவிட்டது.
    about 15 hours ago ·   (4) ·   (1) ·  reply (0)
  • sivashanmugam Vasu retd.,deputy secretarytogovt., at Government of Puducherry from Pondicherry
    தமிழன் எப்பொதும் ஒத்துமையாக .போவதில்லை
    about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Pachaimuthu Dakashna  from Mumbai
    பேசுவதெல்லாம் நல்லதே பேசுறிங்க. ராமதாஸ் விஜயகாந்த் அணுகுமுறை சரியில்லை என்பது இப்பொழுதுதான் உங்களுக்கு தெரியுதா!!!!!!!!! மாறி மாறி அவர்களுக்கு தூது போன பொது தெரியலையா...... ஆ. தி. மு. க உடன் இருந்த கூட்டணியில் அதிக அளவில் வெற்றி பெற்றோம் என்பதை மறந்து மமதையில் இருந்த விஜயகாந்த் கட்சி உங்களுக்கு பெரிய கட்சி pola eppadi therindhadhu.
    about 15 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • raj  
    வாழ்த்துக்கள் தமிழ் .............
    about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • vetri  from Rajapalayam
    அமெரிக்க அதிபர் ஒபாமாவை வீழ்த்த ஆலோசனை தந்தால் உலக ஆலோசகர் பட்டம் கிடைக்கும்
    about 17 hours ago ·   (7) ·   (3) ·  reply (0)
    raj   Down Voted
  • Seetharaman  from Chennai
    அ.இ.அ.தி.மு.க திராவிட கட்சியாக தெரியவில்லையா?
    about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • mani  from Noida
    எப்போதும் மணி சார் தவறாதான் முடிவு செல்வர் போல ஜாதி ரீதியான அரசியல் மாறும் வரை ஜனநாயகம் என்பது இருக்காது
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Mohan Ramachandran at I am doing my own business 
    ஒரு மாபெரும் திருப்பம் நிகழ்ந்துள்ளது .வாக்குகள் குவிந்தன ஆனால் சீட் கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டம் .தமிழருவி மணியன் சொல்வது சரியென்றே படுகிறது . பெருவாரியான மக்களின் நம்பிக்கை கிட்ட கூட்டணி தலைவர்களின் செயல் திருப்தி இல்லை இதுவே முதல் காரணம்
    about 17 hours ago ·   (5) ·   (1) ·  reply (0)
  • saro  from Bangalore
    இனி உங்கள் பெய்ட் தமிழ்நாட்டு சுப்ரமணிய சாமி.
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Jeeva  
    Correct. I agree. .
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • eral mani  
    எது எப்படியோ வைகோ என்கின்ற ஒரு பாராளுமன்ற புயலை வாய்ப்பிருந்தும் தவறவிட்ட தொகுதி பறிதாப த்திர்க்குரியதுதான் .பொது வாழ்வில் தூய்மையானவர் .மற்ற அரசியல் வாதிகளுடன் ஒப்பிடும் போது எளிதில் உணர்ச்சி வசப்படும் . ஒரு எளிமையாக அணுகக்கூடிய மனிதன் .
    about 17 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • Raju  from Chennai
    உங்கள் கருத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியாக அமைந்திருப்பது வரவேற்புக்கு உரியது. சட்டசபை தேர்தலுக்கும் நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்.
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • vijai  
    இந்த தேர்தல் முறை பழமையானது பிழையானது . சில இடங்க்களில் 2 லட்சம் வாக்குகள் எடுத்தவன் மக்கள் பிரதினி . சில தொகுதில் 3 லட்சம் வாக்குகள் எடுத்தவர் மன்னைகவ்வுகின்ரா . விகிதாசார முறை என்றால் , 75 லட்சம் வாக்கு பெற்றகட்சி ஆகக்குறைந்தது 7 மக்கள் பிரநிதிகளை வென்றிருப்பார்கள் ,(10 லட்சத்திற்கு ஒருபிர்தினி )
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • pugalenthi  from Noida
    சட்டமன்ற தேர்தலில் இவர் பேச்சை அல்லது இவரது அறிவுரையை கேட்டால் மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வரும் யாருக்கும் ஒரு சீட்டுகூட கிடைக்காது .இந்த காந்தியவாதி நீலகிரியில் அதிமுகவை ஆதரித்தார் ,அதற்க்கு இவர்சொன்ன காரணம் ராஜாவின் 2ஜீ வழக்கு .அப்படியானால் ஜெவின் சொத்துகுவிப்பு வழக்கு காந்திய தர்மத்தில் சேராதா .தயவு செய்து காந்தி பெயரை கெடுக்கவேண்டாம்.
    about 18 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • sanj  from Chennai
    மாற்று அரசியல் மலர்வதற்குத் தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட வைகோவின் தோல்வியை தமிழினத்தின் ஒட்டு மொத்தத் தோல்வியாக கருதுகிறது.
    about 18 hours ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • Govindarajan  from Chennai
    தமிழருவி மணியன் உண்மையை சொல்ஹிறார். அம்மையார் இந்த தேர்தல் வெற்றியில் இருமந்துவிட வேண்டாம். எதிர் கட்சிகள் நேர்மயஹா கூட்டணி அமைதுவிட்டலோ, பிஜேபி சிங்க்லிய முயற்சி செய்தலோ தமிழகத்துக்கு விடிவுகாலம் pirakkumகற்றல் g
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • saro  from Bangalore
    இனி தங்கள் பெயர் தமிழருவி மணியன் அல்ல. தமிழ்நாட்டு சுப்ரமணிய சாமீ.
    about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Magesh Meena  
    ரொம்ப ரொம்ப சரியாக சொல்லப்பட்டுள்ளது. விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் கண்டிப்பாக திருந்துங்கள் . மாற்று அரசியலுக்கான நேரம் இது. வீனாக்காதிர்கள்.
    about 19 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
  • Raj  from Mountain View
    Congress and BJP both are anti Tamils, we must get rid of these evils...
    about 19 hours ago ·   (3) ·   (5) ·  reply (0)
    P.Padmanabhan   Up Voted
    Mohan Ramachandran  Down Voted
  • Raj  from Mountain View
    Who are you!!!!!
    about 19 hours ago ·   (1) ·   (1) ·  reply (0)
    vetri   Up Voted
  • பா.நாகராஜன்  from Salem
    வைகோவை தவறவிட்டுவிட்டார்கள்
    about 19 hours ago ·   (6) ·   (3) ·  reply (0)
    raman RAMAN  Down Voted
  • gummanguthu GOPI  from Abu Dhabi
    தமிழக ப ஜ க விற்கு தேர்தலை சந்திக்கும் எந்த எண்ணமும் திட்டங்களும் இல்லாமல் போனதே இந்த தோல்விக்கு காரணம்
    about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • lion  
    என்ன என்ன ஏன் இந்த விமர்சனம்
 நன்றி - த இந்து

Wednesday, May 29, 2013

தள்ளாடும் தமிழகம்... திண்டாடும் டாஸ்மாக்!


தள்ளாடும் தமிழகம்... திண்டாடும் டாஸ்மாக்!

ஒரு போதை நிலவரம்

டி.எல்.சஞ்சீவிகுமார், ஓவியம்: ஹாசிப் கான்

பூரண மதுவிலக்கு கோரி நடையாக நடக்கிறார் வைகோ. ராமதாஸ், தமிழருவி மணியன் தொடங்கி காங்கிரஸின் ஞானதேசிகன் வரை மதுவிலக்கை அமல்படுத்த அறிக்கைப் போர் நடத்துகிறார்கள். தியாகி சசிபெருமாள் வாரக் கணக்கில் உண்ணாவிரதம் இருக்கிறார். தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின் மனதில்கூட அப்படி ஓர் எண்ணம் இழையோடுவதாகச் செய்திகள் கசிகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன? பூரண மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியமா?

இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, நீங்களே இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியும்!  

முன்பெல்லாம் டாஸ்மாக் கடைக்குச் சென்று ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட வகை மதுபானம் வேண்டும் என்று கேட்டு வாங்கிவிட முடியும். ஆனால், இப்போது கேட்கும் பிராண்ட் கிடைப்பது குதிரைக்கொம்பு. 'கேட்ட குவார்ட்டர் கிடைக்காதது ஒரு குற்றமா?’ என்று உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு, இதன் பின்னணியில் இயங்குவது அசுர அரசியல்!

வெளியே தெரியாத ஒரு சிறு புள்ளிவிவரம்... ஒரு டாஸ்மாக் கடையில் உயர் ரக மதுபானப் பெட்டி ஒன்றை (48 குவார்ட்டர் பாட்டில்கள் அடங்கியது) விற்பனை செய்தால் அந்தக் கடையின் பணியாளருக்குக் கிடைக்கும் கமிஷன் 25 ரூபாய். இது அரசாங்கம் கொடுப்பது அல்ல... சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் கொடுப்பது. தங்கள் நிறுவனத்தின் மதுபானத்தை விற்பனை செய்வதற்கு ஒரு பணியாளருக்கே இவ்வளவு ரூபாய் கமிஷனாகத் தர முன்வரும் மதுபான நிறுவனங்கள், தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் சுமார் 50 லட்சம் பெட்டிகளைத் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் சங்கிலித் தொடர் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எவ்வளவு லட்சம் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும்?  

சரி, அப்படி கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து கொள்முதல் 'செய்யப்படும்’ மதுபானங்கள் முழுமையாக விற்பனையாகின்றனவா? இல்லை... இல்லவே இல்லை! ஏனெனில், மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் அதிகாரவர்க்கத்தின் லாபத்துக்காக வாடிக்கையாளர்கள் விரும்பாத, மார்க்கெட்டில் விலைபோகாத மதுபானங்களே அதிக அளவில் டாஸ்மாக்கால் கொள்முதல் செய்யப்படுகின்றன. இப்படிக் கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக்கில் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கும் மதுபானங்களின் மதிப்பு மட்டும் சுமார் 2,465 கோடி ரூபாய்! இவ்வளவு மதிப்புள்ள மதுபானங்கள் தேக்கம் அடைந்திருக்கும் நிலையிலும், மேலும் மேலும் விற்பனை ஆகாத, சந்தையில் டிமாண்ட் இல்லாத மதுபான வகைகளையே கொள்முதல் செய்து குவிக்கிறதே டாஸ்மாக்... ஏன்?  

பொதுவாக, தமிழகத்தில் ஆட்சி மாறினால் காட்சி மாறும். புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக்கப்படுவது முதல் தலைமைச் செயலாளர் டம்மி ஆக்கப்படுவது வரை தலைகீழ் மாற்றங்கள் நிகழும். சாமான்ய வாக்காளன்கூட உணரும் அரசியல் சுழற்சி இது. ஆனால், சாராய வியாபாரத்தில் மட்டும் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கிறார்கள் அரசியல்வாதிகள். கடந்த தி.மு.க. ஆட்சியில் சசிகலா சம்பந்தப்பட்ட மிடாஸ் நிறுவனம் எந்த அளவுக்குக் கோலோச்சியதோ, அதைவிட அதிகமாகவே தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் கோலோச்சுகின்றன தி.மு.க. பிரமுகர்களின் மதுபான ஆலைகள்! (பார்க்க பெட்டிச் செய்தி)


தமிழகத்தில் தற்போது 11 மதுபான ஆலைகள் இருக்கின்றன. மேற்கண்ட நிறுவனங்களில் ஓரிரு நிறுவனங்கள் தவிர, மற்றவை அனைத்திலும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் முக்கியஸ்தர்கள்தான் நேரடி, மறைமுகப் பங்குதாரர்களாக இருக்கின்றனர். மேற்கண்ட நிறுவனங்களிடம் மதுபானம் கொள்முதல் செய்வது தொடங்கி டாஸ்மாக் நிர்வாகத்தின் கொள்கை முடிவுகளை வரையறுப்பது வரை முடிவெடுக்கும் அதிகாரம்கொண்ட கமிட்டி ஒன்று இருக்கிறது. அந்தக் கமிட்டியின் தலைவராகக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமிழக உள்துறைச் செயலர் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பதவி, துறையின் அமைச்சர் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அப்போதே இது பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.  


பொதுவாக, டாஸ்மாக் நிர்வாகத்தின் கொள்கை முடிவுப்படி, சாதாரண ரக மதுபானங்கள் 40 சதவிகிதம் (மானிட்டர், ஓரியன் பிராந்தி, ஓல்டு மங்க் ரம் போன்றவை) நடுத்தர ரகம் 40 சதவிகிதம் (எம்.சி., எஸ்.என்.ஜே., டே அண்ட் நைட் பிராந்தி, பேக் பைப்பர் விஸ்கி போன்றவை), உயர் ரகம் 20 சதவிகிதம் (மார்பியஸ், பிரிட்டிஷ் எம்பயர், ஹாப்சான்ஸ் பிராந்தி, சிக்நேச்சர் விஸ்கி) என மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படும். உயர் ரக வகை மதுபானங்கள் டாஸ்மாக்கின் சில்லறை விற்பனையில் அதிக அளவு விற்பனை ஆகாது என்பதாலேயே இப்படி ஒரு முடிவு. ஆனால், துறையின் அமைச்சர் எப்போது டாஸ்மாக் கமிட்டியின் தலைவராக மாற்றப்பட்டரோ அப்போது 'கன்செய்ன்மென்ட் ஆர்டர்’ என்கிற ஒரு புதிய விதிமுறை புகுத்தப்பட்டது. அதாவது, எந்த மதுபான ரகம் அதிகம் விற்பனை ஆகிறதோ அந்த மதுபானத்தைக் கூடுதலாகக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்பதே அந்த விதி.

''மேலோட்டமாகப் பார்த்தால் இந்த முடிவு நியாயமானதாகப்படும். ஆனால், அதில் இருக்கும் அரசியல் வேறு. ஒரு குறிப்பிட்ட ரக மதுபானம் கொள்முதல் செய்யப்பட்டு, டாஸ்மாக்கின் சில்லறை விற்பனைப் பிரிவுக்குச் சென்று வாடிக்கையாளர் கைகளுக்குச் சென்று காசாக மாறினால் மட்டுமே அது விற்பனை ஆனதாக அர்த்தம். ஆனால், குடோனில் இருந்து கடைகளுக்குக் குறிப்பிட்ட ரக மதுபானங்களை அனுப்பிவிட்டாலே அந்த ரகம் விற்பனை ஆகிவிட்டதாகக் கணக்குக் காட்டப்படுவதுதான் அந்தப் புதிய விதிமுறையின் நடைமுறையில் இருக்கிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கொள்முதல் ஆர்டர் அளிக்கப்படுகிறது.


 சரக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு டெலிவரி செய்யப்படும். ஆனால், அவற்றை வாங்குவதில் குடிமகன்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இதனால், டாஸ்மாக் கடைகளில் ஏராளமான மதுபானங்கள் விற்பனை ஆகாமல், தேங்கிக்கிடக்கின்றன. நிறைய கடைகளில் அவற்றை வைக்க இடம் இல்லாமல், அருகில் இன்னொரு கட்டடத்தை வாடகைக்குப் பிடித்து இருப்பு வைத்திருக்கிறார்கள்!'' என்கிறார்கள் ஊழியர்கள். ஒரு கடையின் ஒருநாள் விற்பனையைப் பொறுத்து, அதைப் போல் அதிகபட்சம் 10 மடங்கு மதிப்பு கொண்ட மதுபானங்களை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். அப்போதுதான் கடையில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் காப்பீடு கிடைக்கும். இது அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், இப்போதோ நாளன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் விற்பனை ஆகும் கடையில், சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அதிலும் கடந்த இரண்டு மாதங்களாக நிலைமை இன்னும் மோசம். மேற்கண்ட மோசடிக் கொள் முதல் விதியும் தூக்கி எறியப்பட்டுவிட்டது. எந்தச் சாராய ஆலை நிறுவனங்கள் அதிகம் கமிஷன் அளிக்க முன்வருகின்றனவோ, அவற்றின் மதுபான வகைகள்தான் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன.

ஆனால், இவ்வளவு முறைகேடுகள், ஊழல்கள் நடந்தும் டாஸ்மாக் நிர்வாகம் லாபத்தில்தானே இயங்குகிறது. அந்த வருவாயை வைத்துத்தானே தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்கிற கேள்வி எழலாம். நியாயமான சந்தேகம்தான்! இவ்வளவு சீர்கேடுகளைத் தாண்டியும் டாஸ்மாக் கொள்ளை லாபத்தில் கொழிப்பதற்குக் காரணம், அவ்வளவு அநியாயமாகக் குடிக்கிறார்கள் தமிழகக் 'குடி’மகன்கள்! அப்படி எனில், டாஸ்மாக் நிர்வாகத்தைச் சீராக்கினால், இன்னும் எவ்வளவு லாபம் குவியும். (அதற்காக டாஸ்மாக்கை லாபகரமாக நடத்துங்கள் என்று சொல்லவில்லை!)

டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த நடைமுறைகள் குறித்து அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியிடம் விளக்கம் கேட்டேன். தன் பெயரையோ, பொறுப்பையோ வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டவர் பகிர்ந்துகொண்டது பகீர் தகவல்கள். ''துறைரீதியிலான எந்தச் செயல்பாடுகளுக்கும் கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டுமே எங்கள் வேலை. டாஸ்மாக் கடைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவருக்கு நெருக்கமான ஒரு அதிகாரிதான் மொத்த முடிவுகளையும் எடுக்கிறார். இருவரும் பக்கத்துப் பக்கத்து ஊர்க்காரர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளின் கைகள்கூடக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இவை எல்லாம் முதல்வருக்குத் தெரியுமா... தெரியாதா என்பதே எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது!'' என்றார்.

2012-13ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் மாநிலத்தின் மொத்தத் துறைகளின் வருவாய் சுமார் 1 லட்சத்து 500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் நான்கில் ஒரு பங்கு வருமானம் டாஸ்மாக்  நிறுவன விற்பனை மூலம் திரட்டப்பட்டது. இந்த நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டின் மீதான விவாதங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் தமிழகத்தின் பட்ஜெட்டை மட்டும் அல்ல... அரசியலை, பணப்புழக்கத்தை, குற்றச் செயல்கள் உள்ளிட்ட சமூகத்தின் எதிர்மறை நிகழ்வுகளை... எதிர்காலத் தமிழகத்தின் கணிசமான பகுதியை மறைமுகமாக நிர்ணயிப்பது சாராய ஆலை அதிபர்கள்தான். கசப்பான உண்மை என்றாலும் இது நம் சாபக்கேடு!

இப்போது நீங்களே சொல்லுங்கள்... தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமா?


யார் யாரிடம் எந்தெந்த நிறுவனங்கள்?

கோல்டன் வாட்ஸ் டிஸ்டெல்லரீஸ். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா தொடர்புடைய நிறுவனம் இது.


 எலைட் டிஸ்டெல்லரீஸ். தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் இதன் உரிமையாளர்.


 எஸ்.என்.ஜே.டிஸ்டெல்லரீஸ். இதன் இயக்குநர்கள் ஜெயமுருகன், கீதா. கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான 'உளியின் ஓசை,’ 'பெண் சிங்கம்’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் இந்த ஜெயமுருகன்.


 கால்ஸ் டிஸ்டெல்லரீஸ். காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் இதன் மேலாண்மை இயக்குநர். தி.மு.க. முகாமில் நெருக்கமான தொடர்புடையவர்.


 இம்பீரியல் ஸ்பிரிட்ஸ். உரிமையாளர் தரணிபதி ராஜ்குமார். இவரது தந்தை கிருஷ்ணசாமி கவுண்டர் தி.மு.க. ஆட்சியில் தென்னை விவசாயிகள் நல வாரியத் துணைத் தலைவராக இருந்தவர்.

 மிடாஸ். சசிகலாவின் உறவினர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்.

இது போக, திண்டுக்கல் அருகே ஆளும்கட்சியின் முக்கியப் பிரதிநிதிகள் இருவர் அனுமதி பெற்று ஒரு சாராய ஆலையைத் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் உற்பத்தி தொடங்கலாம்!

லேபிள் கலாட்டா!  
.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் தங்களுக்கான கொள்முதல் விலையையும் உயர்த்தி அளிக்கும்படி மதுபான ஆலை அதிபர்கள் கேட்டார்கள். சட்ட நடைமுறைகளால் கொள்முதல் விலையை உயர்த்த முடியாது என்று கைவிரித்தது அரசு. அதைச் சமாளிப்பதற்கு இன்னொரு குறுக்கு வழியைச் சொல்லித் தந்தார்கள் அதிகாரிகள். அதாவது, ஏற்கெனவே இருக்கும் பிராண்டின் பெயரில் சப்ளை செய்தால் தானே கொள்முதல் விலையை உயர்த்தித்தர முடியாது? புதிய பிராண்டுகளை உருவாக்கி, அடிப்படைக் கொள்முதல் விலையை உயர்த்தி சப்ளை செய்யுங்கள். 

அந்த பிராண்டுகளுக்கு அதிக விலை தருகிறோம் என்று ரூட் போட்டுக்கொடுத்தார்கள். அதாவது, மதுபான பாட்டிலின் லேபிளை மட்டும் மாற்றுவது. இதனால்தான் மேன்சன் ஹவுஸ் பிராந்தி, மேன்சன் ஹவுஸ் அல்ட்ரா ஆனது. கிங்ஃபிஷர் ஸ்டிராங் பியர், கிங்ஃபிஷர் சுப்பீரியர் ஸ்டிராங் ஆனது. இப்படியாக உருவானவைதான் லா மார்ட்டின், பிரிட்டிஷ் எம்பயர், எம்.ஜி.எம். கோல்டு, மென்ஸ் கிளப், அரிஸ்டோகிராட், ராயல் அக்கார்டு போன்றவை எல்லாம். இன்றும் வாரத்துக்கு நான்கைந்து புது பிராண்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி வெறும் லேபிள்கள் மட்டும் மாற்றப்பட்ட மதுபானங்களுக்குக் 'குடி’மகன்கள் கொடுக்கும் கூடுதல் விலை எவ்வளவு தெரியுமா? குவார்ட்டருக்கு ரூபாய் 10 முதல் 30 வரை. அரசு கொடுக்கும் கூடுதல் கொள்முதல் விலை ரூபாய் 5 முதல் 10 வரை. இரண்டுமே... மக்கள் பணம்தான்!

thanx - vikatan 

 readers views

1.வார்த்தைக்கு வார்த்தை அம்மா, புரட்சி தலைவி என்று சொல்லும் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் இந்த மதுக்கடை புறச்சியைப் பற்றித்தான் சொல்கிறார் என்பது தெளிவாகிறது. ஜெயலலிதா ஆட்சிக்கும் வந்ததிலிருந்து மக்கள் நல திட்டங்களில் வறட்சிதான். மதுக்கடையில் மட்டும் திமுக வை விட, அதிமுக புரட்சி படைத்துள்ளது.

2. திமுக, அதிமுக இரண்டும் ஒரே (ஊழல்) குட்டையில் ஊறிய இரு மட்டைகள் ' என்று சும்மாவா சொன்னார் கர்ம வீரர் காமராஜர் ! சசி கலாவுக்கும் , டிஆர்பாலுவுக்கும் ஒரு கேள்வி ! அமிர்தமும் ஓர் அளவிற்கு மேல் போனால் விஷமாகி விடுமே ! வரும் போது எதை எடுத்துக் கொண்டு வந்தீர்கள் ? போகும் போது எதை எடுத்துக் கொண்டு போகப் போகிறீர்கள் ? இத்தனை குடும்பங்கள் வயிறெரிந்தால் அந்தப் பாவம் உங்கள் இருவரையும் சும்மா விடுமா? விடாது ! அது இறைவன் ஆணை!

3. மதுக்கடைகளால் ஒரு நாளைக்கு சாராசரியாக ஆறாயிரம் தாலிகள் அடகு கடைக்கு ஹிந்தி பயில போகின்றன, மதுகடைகளால் ஒரு நாளைக்கு சாராசரியாக ஆறுநூறு தாலிகள் கழுத்தில் இருந்து இறங்குகின்றன... ஆம், அரசு தரும் "தாலிக்கு தங்கம் திட்டம்" ரொம்ப முக்கியமாக்கும்....


4. பாஸ்பரஸ் குண்டு போட்டு 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே என்ற மிருகத்தை விட இவர்கள் கொடியவர்களே!

இந்தியாவின் முக்கிய பிரச்சினை புற்றீசல் போல் மக்கள் தொகை பெருக்கம். இப்படி மதுவை எதிர்ப்பவர்கள் முதலில் இந்த மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்க்க வெண்டும். இந்தியாவில் எல்லாவற்றிக்கும் தட்டுப்பாடு - தண்ணி, மின்சாரம், மணல், நிலம் ... ஒன்றை தவிர அது தான் மக்கள் தொகை. மக்கள் தொகை பெருக்கத்திற்கு முன் இந்த மது ஒன்றுமில்லை. முதலில் இதை நிவர்த்திக்க போராடுங்கள்.

6. ஒரு காலத்தில் இதே திராவிட கட்சிகள் ஜமீந்தார்கலையும் நிலசுவந்தார்களையும் கையை காட்டி ஏழையின் சிரிப்பில் இறைவனை காட்டுகிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி இன்று அனைத்து திராவிடகழக கட்சிகாரர்கள் பெரிய நிலசுவாந்தார்கள் ஆகிவிட்டர்கள் ஆனாலும் இன்னும் தமிழர்கள் இவர்களை இனம் கண்டு கொள்ளவில்லை உதாரணம் கருணாநிதி,மாறன் குடும்பங்கள்,இந்திய அளவில் எடுத்தால் மத்தியில் சோனியா குடும்பம் மகாராஷ்ட்ராவில் சரத்பவார் குடும்பம் சிவசேன குடும்பம்,நிதீன்கட்காரி குடும்பம் உ பில் மாயாவதி,முலயன்சிங்க்ஹ் குடும்பம் ஆந்திராவில் மறைந்த முதல்வரின் குடும்பம்,கர்நாடகாவில் ரெட்டி குடும்பம் இவ்வாறு அடிக்கிக்கொண்டே போகலாம்,ஒட்டு மொத்தமாக இந்தியாவில் உள்ள எந்த அரசியல் வாதியும் யோக்கியர்கள் இல்லை என்பது தெள்ள தெளிவு.

7. இந்த மதுவெனும் குடும்பத்தை வெட்டி அழிக்கும் கோடாரியை தினமும் குடித்து நாசம் செய்யும் பெருங்குடிகாரர்களே, இது தினமும் குடும்பத்தினரை துன்புறுத்தி,குருதி கண்ணீர் சிந்த வைப்பதற்கு பதிலாக நீங்கள் ஏன் ஒரே ஒரு நாள், ஒரே ஒரு முறை, ஒரே ஒரு குடுவை, நஞ்சை குடித்து விட்டு மடியக்கூடாது?.... உங்களது பிரிவை எண்ணி உங்களது குடும்பத்தினர் ஒரு வாரம் வேண்டுமானால் அழுவார்கள், அதன் பிறகு உங்களது குடிவெறி தந்த பெரும் தொல்லைகள் எல்லாம் தொலைந்து, நன்குழைத்து நிம்மதியாக வாழ்வார்கள்....

Saturday, March 30, 2013

மாணவர்கள் இனி என்ன செய்யனும்? - தமிழருவி மணியன் -ன் வழிகாட்டல் கட்டுரை @ ஜூ வி

இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது...
மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை நான் தடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவதற்காக வருந்துகிறேன். உலகம் முழுவதும் மாணவர்கள் போராடுகின்றனர். சீனாவிலும், எகிப்திலும் உருவான தேசிய இயக்கங்களுக்கு மாணவர்கள் தங்கள் பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்திய மாணவர்களிடம் அந்த உணர்வையே நான் எதிர்பார்க்கிறேன். பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் வெளியேறி, அவர்கள் சிறை புகும் துணிவுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. அந்தக் குரலே இப்போதும் எதிரொலிக்கிறது. 


தமிழக மாணவர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான மூன்று திருப்புமுனைகள் உண்டு. அவர்கள் முதலில், இந்தித் திணிப்புக்கு எதிராக 1965 ஜனவரியில் களமிறங்கினர். அவர்​களது சாதனை மகத்​தானது. தமிழக மாணவர்​களின் போராட்​டத்தால்​தான் இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தித் திணிப்பு நிகழ்வது நிறுத்தப்பட்டது; இந்தியோடு ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடர்கிறது.


இந்தியை இந்தியாவின் ஒரே தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் அரசமைப்புச் சட்டத்தில் அரங்கேற்ற நடந்த முயற்சிகள் அளப்பரியவை. 'சகிப்புத்தன்மையற்ற இந்தப் போக்கு வலிமைமிக்க மத்திய அரசின் கீழ் இந்தி பேசாத மக்களை அடிமைகளாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறேன். இந்தி மொழி பேசும் நண்பர்களே... உங்களுக்கு முழு இந்தியா வேண்டுமா? அல்லது, இந்தி பேசும் இந்தியா போதுமா என்று முடிவெடுங்கள்’ என்றார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. சமீபத்தில் மாநிலங்களவையில் அறிவார்ந்த திருச்சி சிவா, மன்மோகன் சிங் அரசைப் பார்த்து, 'உங்களுக்கு இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா?’ என்று கேட்டதற்கு முன்மாதிரியாக அன்று அமைந்தது டி.டி.கே.வின் முழக்கம்.


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்​கள் தீவிரமாகக் களமாடியபோது லால்பகதூர் சாஸ்திரியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தனர். அவர்களுடைய ராஜினாமாவை ஏற்கும்படி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணனிடம் சாஸ்திரி பரிந்துரைத்தபோது, 'இந்தியாவின் ஓர் அங்கமாகத் தமிழ்நாடு இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று நேர்படக் கேட்டார் அந்த மாபெரும் தத்துவ மேதை. அதற்குப் பின்புதான் சாஸ்திரி, 'இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காலவரையறையின்றிக் காக்கப்படும்’ என்று அறிவித்தார்.


பெரியார், திரு.வி.க., மறைமலை அடிகள், அண்ணா, நாவலர் சோம​சுந்தர பாரதியார் போன்றவர்கள் போராடியும், மூவாலூர் ராமாமிர்தம், டாக்டர் தர்மாம்பாள் உட்பட 73 பெண்கள் 32 கைக்குழந்தைகளுடன் சிறை சென்றும், நடராசன் - தாளமுத்து இருவரும் சிறையில் உயிர்​நீத்தும், 1937 முதல் 1965 வரை திராவிட இயக்கங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் முற்றாக விலக்கப்படாத இந்தித் திணிப்பு, மதுரையில் கொழுந்துவிட்டு மாநிலம் முழுவதும் மாணவர்களால் பெருந்தீயாய் வளர்த்தெடுக்கப்பட்ட பிறகுதான் முடிவுக்கு வந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றி, மாணவர்களின் மகத்தான சரித்திரச் சாதனை.


மாணவர்கள் தங்கள் இனவுணர்வை 1983-ல் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் வெளிப்படுத்திய விதம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்று. இலங்கையில் 13 சிங்கள ராணுவத்தினர் விடுதலைப்புலிகளால் வீழ்த்தப்பட்டதற்கு எதிர்வினையாற்றப் புறப்பட்ட சிங்களர்கள், அரசின் ஆதரவோடு நடத்திய ஊழிக் கூத்தில் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50 ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் கொழும்புவில் அனைத்தும் இழந்து, அகதி முகாம்களில் அடைபட்டனர். இலங்கைத் தமிழர் வாழ்வில் என்றும் மறக்க முடியாத 'கறுப்பு ஜூலை’ மாதத்தில் மாணவர்கள் தன்னெழுச்சியாய் தமிழகத்தில் அணி திரண்டனர்; மக்கள் அவர்​களுடைய போராட்டத்தை ஆசீர்வதித்தனர். 'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு’ என்ற பாவேந்தரின் இலக்கிய வரிக்கு மாணவர்கள் அன்று இலக்கணமாயினர்.


இப்போது.....

வீரத்தின் விளைநிலம் பிரபாகரனின் 12 வயது பிள்ளை பாலச்சந்திரன் மரணத்தைத் தழுவும் நிலையில் எடுக்கப்பட்ட மூன்று படங்கள் ஒட்டுமொத்த மக்களின் ஆன்​மாவையும் அதிரச்செய்தது. வியட்நாம் போரில் ஒரு சின்னஞ் சிறுமி ஆடையின்றி அழுத விழிகளுடன் ஓடும் கோலத்தை வெளிப்படுத்திய ஒரேயரு நிழற்படம் அமெரிக்காவுக்கு எதிராக உலக மக்களை அணிதிரளச் செய்தது போன்று, குழந்தைமை கலையாத பாலச்சந்திரனின் அழகு முகத்தில் கனத்துக்கிடந்த ஆதரவின்மையும், வேதனை விழுங்கிய வெறித்த பார்வையும், ஐந்து குண்டுகளை மார்பில் தாங்கி மண்ணில் சரிந்துகிடந்த கோலம் தீட்டிய சோகச் சித்திரமும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக்கிடந்த தமிழகத்தின் மனச்சான்றை உலுக்கிவிட்டது. மாணவர்கள் மூன்றாவது முறை இனநலன் காக்க அணி திரளத் தொடங்கினர். லயோலா கல்லூரி மாணவர்கள் முன்வந்து ஏற்றிவைத்த இனவிளக்கு இன்று வரை அணையாமல் இருள் கிழித்து ஒளிச்சுடரைப் பரப்பி வருகிறது.



மாணவர்கள் இதுவரை நடத்திய போராட்​டங்களின் பின்புலமாக அரசியல் கட்சிகள் இருந்துவந்தன. அரசியல் தலைவர்களின் பதவி ஆசைக்கும், பழிவாங்கும் போக்குக்கும் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் பயன்பட்டன. ராஜாஜி 1937-ல் கொண்டுவந்த இந்தியை எதிர்த்துப் பல்வேறு வடிவங்களில் படை நடத்திய பெரியார், 1965-ல் மாண​வர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போரை ஆதரிக்கவில்லை. பள்ளிகளில் இந்தியைப் புகுத்து​வதில் தீவிரம் காட்டிய ராஜாஜி பின்னாளில், 'இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் அரச​மைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியை அரபிக் கடலில் வீசியெறியுங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார்.


தி.மு.கழகத்தை 1967-க்கு முன்பு பெரியாருக்குப் பிடிக்கவில்லை. அதனால், தி.மு.க-வின் பின்புலத்தில் இயங்கிய மாணவர் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தார். ராஜாஜிக்கு நேருவையும், காமராஜரையும், காங்கிரஸையும் பிடிக்கவில்லை. அதற்காக, இந்தியை எதிர்த்த மாணவர் போராட்டத்தை ராஜாஜி ஆதரித்தார். மாணவர் போராட்டத்தைப் பயன்படுத்தி அண்ணா ஆட்சியைக் கைப்பற்றினார். ராஜாஜி, காங்கிரஸ் மீது பழிதீர்த்துக்கொண்டார். இந்தச் சூழல் இப்போது இல்லை. இன்று, மாணவர்​கள் எந்த அரசியல் கட்சியின் வலையிலும் விழவில்லை. இந்தி எதிர்ப்புப் போரில் பெரிதாக உருவெடுத்த வன்முறையின் நிழல் கூடத் தங்கள் மீது படிய அவர்கள் இப்போது அனுமதிக்கவில்லை. அவர்கள் முன்னெடுத்திருப்பது அப்பழுக்கற்ற காந்தியப் போராட்டம்.


மாணவர்களின் மூன்றாம் கட்ட இந்தப் போராட்​டம் மத்திய, மாநில அளவில் மிகப் பெரிய மாற்றங்களைச் சாதித்திருக்கிறது.

1. அமெரிக்கத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. 

2. சுவரில் ஒட்டிய பல்லியைப் போல் கடந்த ஒன்பது ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பசை போட்டு அமர்ந்திருந்த தி.மு.கழகம், இனி காங்கிர​ஸோடு கைகோத்து நின்றால் காலநடையில் காலாவதியாகி விடுவோம் என்ற கலக்கத்தில் பதவி மேனகையின் கவர்ச்சியிலிருந்து விடுபட மன​மில்லாமல் விடுபட்டு, நவீன விசுவாமித்திரனாய் நடுத் தெருவில் நாடகம் போட வந்து நின்றது. 


3. இனப்பற்றோ, மொழியுணர்வோ, சமூகப் பிரக்ஞையோ சிறிதுமின்றிப் பதவிப் பல்லக்கில் அமர்ந்து பவனி வருவதற்காகவே அரசியல் நடத்தும் காங்கிரஸ்காரர்கள் ஆதரிப்பாரின்றி அனாதைகளாக மாறிப்போயினர்.

 4. ஈழத் தமிழர் நலனுக்காக அதிகமாகக் குரல் கொடுப்பது யார் என்ற போட்டியில் இரண்டு கழகங்களையும் இறங்கச் செய்தது.

 5. ஐ.பி.எல் போட்டியில் இலங்கை வீரர்கள் சென்னையில் இடம்பெறாமல் செய்தது. 

6. தமிழீழம் காண ஐ.நா.சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தவும், இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கவும், இலங்கையை நட்பு நாடென்று கூறாதிருக்கவும் இந்திய அரசை நிர்ப்பந்தித்து நம் சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றியது. 


7.காமன் வெல்த் நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடக்கலாகாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதும் அளவுக்கு இலங்கை எதிர்ப்பலையை மாநிலம் முழுவதும் சூறாவளியாய் வீசச் செய்தது. இதுபோன்ற சரித்திரச் சாதனைகளை எந்த அரசியல் கட்சியும், எந்த இனவுணர்வாளரும் இன்று வரை சாதிக்கவில்லை.

எல்லாம் சரி. இனி மாணவர்கள் என்ன செய்யப்​போகிறார்கள்? நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் ஜெனிவாவில் அரங்கேறிவிட்டது. போர்க் குற்றங்கள், இனப்படுகொலை என்ற பதப் பிரயோகங்கள்கூட இடம்பெறாத அந்தத் தீர்மானத்தால், ஈழத் தமிழருக்கு எந்த நலனும் வாய்க்காது. மாணவர்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் அமெரிக்கத் தீர்மானத்தை ஆரம்பத்திலேயே புறக்கணித்துவிட்டனர்.


இலக்கு மிகச்சரியானது. ஆனால், அதை அடைவதற்கான பயணம் நீண்டது. 'ரோம் ஒரு நாளில் கட்டப்பட்டது அல்ல’ என்பதுபோல், ஈழம் ஒரே நாளில் சாத்தியமாவது அல்ல. இன்று வளர்த்தெடுக்கப்பட்ட இனவுணர்வு நெருப்பு, சாம்பல் பூத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்​டும். மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் அடுத்த நான்கு மாதங்களுக்குப் பிறகே நடக்கும். காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க இடையில் ஏழு மாதங்களுக்கு மேல் இருக்கின்றன. மாணவர்கள் இந்த இடைவெளியைத் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


 தேர்வுகள் முடியட்டும். அதன் பிறகு, இந்திய அரசே ஈழத் தமிழர் உரிமை காக்க மனித உரிமை மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரவும், காமன்​வெல்த் மாநாடு இலங்கையில் நடக்காமல் தடுக்க இந்திய அரசு செயற்படவும் அறப் போராட்டம் மூலம் மாணவர்கள் மீண்டும் களமாடலாம். பாசறைக்குப் படை திரும்புவது, களைப்பு நீங்கி முன்னிலும் முனைப்பாகப் போராடுவதற்குத்தான். தொடர்ந்து போரில் ஈடுபட்ட அலெக்சாண்டரையும், நெப்போலியனையும் சோர்வு தழுவிக்கொண்டதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். வெற்றி வேண்டுமெனில், வியூகங்கள் முக்கியம்.


இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குப் பின், மாணவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கை மீறியது. இன்றும் அந்த விபத்து நேர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. போராட்டத்தின் திசை மாறினால், வன்முறை​யாளர்களின் வலையில் விழ நேரிடும். தமிழீழம் கோரிக்கையோடு 'தனித் தமிழ்நாடு’ என்ற கோஷம் கலந்துவிட மாணவர்கள் எந்த நிலையிலும் அனுமதிக்கக் கூடாது. இந்தியத் தமிழராய் இருப்பதுதான் எல்லா வகையிலும் உயர்ந்தது. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கூட்டணி, தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவது மறுக்க முடியாத உண்மை. தேர்தல் களத்தில் அதற்குப் பாடம் புகட்ட நம்மிடம் ஜனநாயகம் தந்திருக்​கும் 'வாக்கு’ என்னும் வலிமையான ஆயுதம் இருக்கிறது. அதை 40 இடங்களிலும் நாம் பயன்​படுத்துவோம். இனவுணர்வோடு செயலாற்ற உறுதி ஏற்போரை மட்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைப்போம்.


தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி மற்றும் சுயநிர்ணயம் ஆகியவற்றை அடைவதற்கும், அதற்கான போராட்டத்தைப் பாதுகாப்பதற்கும், முன்னகர்த்துவதற்கும் உரிய உயர்மட்ட ராஜதந்திரத்தைப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் வகுத்தெடுப்பார்கள். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசுத் துறையினர், கொள்கை நெறியாளர்கள், சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து ஈழம் நோக்கி அறவழியில் பயணிப்பதற்கான பணிகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவார்கள். அவர்களுக்கான ஆதரவை இந்திய அரசு வழங்கு​வதற்கான வழிமுறைகளைக் கண்டெடுத்துப் போராடுவதோடு மாணவர்கள் இப்போது நிறை​வடைய வேண்டும்.


இப்போது மாணவர்கள் தன்னெழுச்சியாகத் தெருக்களில் கூடிக் குரல் கொடுப்பது, அவர்​களுடைய அரசியல் விழிப்பு உணர்வை அடையாளப்படுத்துகிறது. சமூகத்தின் சகல தளங்களிலும் ஊடுருவி நிற்கும் ஊழல் பேர்வழிகளுக்கும், மதுக் கடைகளுக்கும் எதிராக இவர்கள் கிளர்ந்தெழ இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது. ஈழத்துக்குப் பிறகு, மாணவர்கள் பார்வை இந்தப் பக்கம் திரும்பும்போது பொன்விடியலைத் தமிழகம் சந்திக்கும். இனி மக்களின் மரியாதைக்குரியவர்கள், அரசியல் தலைவர்கள் இல்லை; மாணவர்களே!


நன்றி - ஜூ வி