தனிப்பட்ட முறையிலோ, அல்லது தனது சொந்தம் , நண்பர்கள் குழாம்களில் யாரோ ஒருவர் ஐ சி ஐ சி பேங்க்க்கால் பலமாக பாதிக்கப்படாமல் ஒரு இயக்குநரால் இவ்வளவு விலாவரியான தனியார் பேங்க் மோசடி பற்றி ஒரு படம் தந்து விட முடியாது, அந்த வகையில் சமூக விழிப்புணர்வு ஊட்டும் முறையில் கமர்ஷியல் பாதையை முடிந்த வரை தவிர்த்த இயக்குநர்க்கு ஒரு பூங்கொத்துடன் வரவேற்பு..
சென்சார் விதியின் காரணமாகவோ, அல்லது வழக்கு வகையறாக்களை தவிர்க்கும் பொருட்டோ ஓசி ஓசி பேங்க் என குறிப்பிட்டாலும் படம் பார்க்கும் பார்வையாளன் மிக எளிதாக புரிந்து கொள்கிறான்.. இயக்குநர் யாரை ப்பற்றி சொல்கிறார் என்று..
படத்தோட கதை என்ன? ஹீரோவோட அக்கா கணவர் ஒரு காலேஜ் லெக்சரர். அவர் ஹீரோவின் படிப்பு செலவுக்காக தனியார் பேங்க்கில் ரூ 2 லட்சம் கடன் வாங்குகிறார்..முன் தேதியிட்ட காசோலைகள் தர்றார் ( போஸ்ட் டேட்டெட் செக்).அதுல 2 செக் பேங்க்ல பிரசண்ட் பண்ணாம விட்றாங்க.. 6 மாசம் கழிச்சுத்தான் மேட்டர் தெரியுது.. தப்பு பேங்க் மேல, ஆனாலும் வட்டியோட அபராதம் கட்ட சொல்றாங்க.. காலேஜ் , அபார்ட்மெண்ட் என போற பக்கம் எல்லாம் டார்ச்சர்.. ஒரு கட்டத்துல எல்லார் முன்னாலயும் தவறா ஹீரோவோட அக்காவை வசூல் ஏஜெண்ட்ஸ் பேசிட்டதால அவமானத்துல ஹீரோவோட அக்கா, அக்கா கணவர், குழந்தை 3 பேரும் தற்கொலை செஞ்சுக்கறாங்க. பாதிக்கப்பட்ட ஹீரோ அந்த பேங்க்க்கை எப்படி அவங்க வழிலயே சீட்டிங்க் பண்ணி ரூ 300 கோடி சுருட்டறார் என்பதே கதை..
சம்பத் ஆறுமுகம் என்பவர்தான் டைரக்ஷன்.. எடுத்துக்கொணட கரு, சொல்லப்பட்ட விதம் எல்லாம் ஓக்கே என்றாலும் மாதம் ரூ 22,000 சம்பலம் வாங்கும் ஒரு காலேஜ் லெக்சரர் வெறும் ரூ 40000 கடனுக்காக ( அது வட்டியோட ரூ 1 லட்சம் ஆனாலும்) தற்கொலை செஞ்சுக்குவாரா? என்ற பெரிய லாஜிக் கேள்வி எழுவதை தவிர்க்க முடியலை.. ஆனாலும் வெல் டரை..
ஹீரோ ரமணா.. ஓக்கே ரக நடிப்பு.. பாடியை ஜிம் போய் பிரமாதமா ரெடி பண்ணி வெச்சிருக்கார் போல , ஆனா முக பாவனைகள்க்கு ரொம்ப மெனக்கெடறார் பாவம்..
ஹீரோயின் ரிச்சா சின்ஹா.. ஓப்பனா சொல்லனும்னா பச்சக்னு மனசுல ஒட்ட முடியாத ஃபேஸ்கட். எந்த அடிப்படைல ஹீரோயின் ஆனாங்கன்னே தெரியலை.. வழக்கம் போலவே ஹீரோயின் தோழியாக வரும் ஜிகிடி நல்லாவே இருக்கு.. ஹி ஹி ஹி
ஹீரோவுக்கு அக்காவாக வரும் தேவ தர்ஷிணியின் நடிப்பும் , அவர் கணவர் நடிப்பும் கன கச்சிதம்.. போலீஸாக வரும் மனோ பாலா, ஆட்டோகாரர் ஆக வந்து லோன் வாங்கும் முத்துக்காளை சிரிக்க வைக்க ட்ரை பண்றாங்க..
கலெக்ஷன் ஏஜென்சி இன்சார்ஜ் ஆக வருபவர், ஓசி ஓசி பேங்க் ஹையர் ஆஃபீசர் இருவரும் கம்பீரமான நடிப்பை தந்திருக்காங்க..
சீரியசாகவும் , விறு விறுப்பாகவும் செல்லும் திரைக்கதையில் ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகள் மனசில் ஒட்டவே இல்லை.பொதுவாக இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் ஒரு த்ரில்லர் மூவி எடுப்பதாக இருந்தாலும் சரி , வித்தியாசமான சப்ஜெக்ட் எடுக்க நினைத்தாலும் சரி ஹீரோவுக்கு டூயட் வைக்க வெண்டும் ஆடியோ சி டி பிஸ்னெஸ் ஆகவேண்டுமே என்பதற்காக . தேவை இல்லாமல்லவ் ட்ராக் வைக்கவே தேவை இல்லை..
பாடல் காட்சிகளில் அரைத்த மாவு.. கொக்கரக்கோ கொக்கரக்கோ என்னை பார்த்து சேவல் கூவுதே கொக்கரக்கோ போன்ற இலக்கிய நய வரிகள் எல்லாம் காமெடி.. ( இந்தப்பாட்டின் மெட்டு தத்தோம் தகிந்தனத்தோம் தோம் தோம் தகதீனதகனீதத்தோம் பாட்டின் அப்பட்ட காப்பி )
சமீப காலமாக க்ளைமாக்ஸில் ஒரு பாட்டு சேர்க்கும் ஃபேஷன் இந்தப்படத்திலும்.. ( ராஜ பேட்டை .டான் -2 ஆகிய படங்களிலும் இதே நிலைமை) )அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை காட்றாங்க.. தியேட்டர்ல அவருக்கு கிளாப்ஸ் வேற.. தாராளமா அந்த பாட்டை இடைவேளை டைம்ல இணைச்சிருக்கலாம்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. அக்காவின் மரணத்துக்கு காரணமானவங்களை பழிவாங்கும் கதையாக போய் இருக்கும் அபாயம் இருந்தும் அதை தவிர்த்து ஹீரோ தனியார் வங்கிகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஒரு ட்ரஸ்ட் அமைப்பது போலவும், அதற்காக பாடுபடுவது போலவும் காட்டியது இயக்குநரின் புத்திசாலித்தனம்..
2. க்ளைமாக்ஸ் கோர்ட் வசனங்களில் ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் அவர்களைப்போலவே இந்தியாவுக்குள் பிழைப்புக்காக உள்ளே நுழைந்து நம்மை லோன் கொடுத்து அடிமைப்படுத்தும், படுத்திய பிரைவேட் பேங்க்கிற்கு எதிரான வசனங்கள் கலக்கல் ரகம்..
3. எல்லா பேங்குகளும் லோன் ரூல்ஸை ஏன் இங்கிலீஸ்ல வெச்சிருக்காங்க? அந்த நாட்டின் பிராந்திய மொழியில் ஏன் வைக்கலை? தமிழ் நாட்டில் தமிழில் ரூல்ஸை பொடய்யா.. என்ற கேள்வி அழகு
4. சட்டம் தெரிஞ்ச லாயர்ஸ், போலீஸ் இவங்களுக்கு யாரும் லோன் தர்றதில்லை, ஏன்னா நெகடிவ் புரொஃபைல்ஸ்.. இவங்க டார்கெட் எல்லாம் சாதாரன பொது ஜனம் தான் என்ற வசனமும் கலக்கல்
5. டார்கெட் அச்சீவ் பண்றதுக்காகவும், இன்செண்ட்டிவ்க்காகவும் பிரைவேட் பேங்க் மார்க்கெட்டிங்க் எக்சிக்யூட்டிவ்ஸ் பண்ற தில்லு முல்லுகளை அப்பட்டமா காட்டிய விதம் .. செம
6. பாராளுமன்றம் பட்ஜெட் வாசிக்கறப்ப ஃபைனான்ஸ் மினிஸ்டருக்கே லோன் வேணுமா?ன்னு ஃபோன்ல டார்ச்சர் கொடுத்த பிரைவேட் பேங்க்கை நக்கல் அடிச்ச சீன் டைமிங்க்..
7. பிரைவேட் பேங்க் அனைத்தும் நேஷனலிஸ்டு பேங்க் ஆக்கப்படனும், அது ஏன் என விளக்கும் சீன் துக்ளக் -ல் எழுதும் குருமூர்த்தி கட்டுரைக்கு சமம்.. வெல்டன் வசனகர்த்தா...
இயக்குநரிடம் சில கேள்விகள், சில சந்தேகங்கள், ஆலோசனைகள்
1. ஹீரோவின் அக்கா கணவர் லோன் வாங்கும் பிரைவேட் பேங்க் எக்சிகியுடிவ் “ இந்த வீடு வாடகை வீடா? ஆனா வெரிஃபிகேஷனுக்காக எங்க ஆளுங்க வருவாங்க, அவங்க கிட்டே சொந்த வீடுன்னு சொல்லுங்க போதும், மீதியை நாங்க பார்த்துக்கறோம் “ அப்டினு சொல்றார்.. ஆனா எந்த பேங்க்லயும் அப்படி பண்ன முடியாது, வீட்டு வரி ரசீது, அல்லது டாக்குமெண்ட் ஜெராக்ஸ் காபி கேப்பாங்க..
2. வெரிஃபிகேஷன் பண்ண ஆள்கள் நேரில்தான் வருவாங்க, ஃபோனில் முடிக்கறதா வர்ற சீன் லாஜிக் மீறல். அதை விட பெரிய லாஜிக் மீறல் ஃபோனில் வெரிஃபிகேஷன் நடந்துட்டு இருக்கும்போதே லோன் டி டி வீட்டுக்கு வருவது, 100% சான்ஸே இல்லை.. ஏன்னா லோன் சாங்க்ஷன் ஆகி டி டி மும்பைல இருந்து வரவே 3 நாட்கள் ஆகும்..
3. மனோபாலா படத்தோட 3 வது ரீல்ல போலீஸ் ஸ்டேஷன்ல புகார் எழுதும் போலீஸா வர்றார்.. ஆனா 5 வது ரீல்ல அவரே டிராஃபிக் கான்ஸ்டபிளா வர்றார்.. ( அதுக்கு ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத சமாளிஃபிகேஷனை மனோபாலாவே சொல்றார்)
4. பேங்க் மேனேஜர் ஹீரோவோட மச்சினர் கிட்டே அவர் பேரு, பிறந்த தேதி , லொட்டு லொசுக்கு எல்லாம் கேட்டு கம்ப்யூட்டர்ல செக் பண்றாரு , ஆனா அதெல்லாம் தேவை இல்ல, லோன் நெம்பர் ( அக்ரீமெண்ட் நெம்பர் மட்டும் போதும்)
5. ஹீரோயின் தோசை சுடறப்ப அடுப்புல அதாவது கேஸ் அடுப்புல தீயையே காணோம். ஹி ஹி நான் நல்லா நோட் பண்ணேன் அவ்வ்
6. லோன் தொகை ரூ 2 லட்சம். அதுக்கு 2 டியூ பெண்டிங்க், அபரத வட்டி எல்லாம் சேர்த்து ரூ 40,000னு சொல்றாங்க, ஆனா அதே தொகை கோர்ட்ல ஏன் ரூ 98,000 சொல்ராங்க?
7. தற்கொலை செஞ்ச 3 பேர் உடலும் நேரா சுடுகாட்டுக்கு போகுதே, ஏன் போலீஸ் கேஸ் ஆகலை, போஸ்ட்மார்ட்டம் பண்ணலை?
8. ஹீரோ பேங்க்கை ஏமாற்றி ரூ 300 கோடி ஏமாத்துனார்னு ஒரு இடத்திலும், இன்னொரு சீனில் ரூ 360 கோடின்னும் வருதே/
9. கதைப்படி ரூ 98,000 பாக்கி இருக்கறதா சொல்லப்பட்டதும் மாதம் ரூ 22,000 சம்பளம் வாங்கும் ஒரு காலேஜ் லெக்சரர் பணி புரியும் காலேஜிலேயே அந்த தொகையை கடனாக பெற்று அடைச்சிருக்கலாமே? ஒய் சூசயிடு?
10. செகண்ட் ஆஃப்ல ஹீரோ ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன் படத்துல பாண்டியராஜன் பண்ற மாதிரி பிச்சைக்காரங்களை, மன நலம் பாதிக்கப்பட்டவங்களை செட்டப் பண்ணி ஆஃபீசர் போல் நடிக்க வெச்சது ஓக்கே, ஆனா காரியம் ஆனதும் அவங்களை அப்படியே அம்போன்னு தெருவுல விடுவாங்களா? அதான் கைல ரூ 300 கோடி இருக்கே? அதுல ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தா அவங்க செட்டில் ஆகறாங்க.. ,எதுக்கு அவங்களை பழைய நிலையில் தள்ளனும்? போலீஸ்ல மாட்டனும்?
கமர்ஷியலா இது பெரிய சக்சஸ் படம் கிடையாது, ஆனாலும் வித்தியாசமான ஒரு முயற்சியே..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே
ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்
டிஸ்கி - 1 - சில மாதங்களுக்கு முன் தனியார் வங்கிகளில் நடக்கும் மோசடிகள் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு