Showing posts with label தனி ஒருவன் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label தனி ஒருவன் - சினிமா விமர்சனம். Show all posts

Monday, August 31, 2015

தனி ஒருவன் - சினிமா விமர்சனம் ( சி.பி)

ஒரு கமர்ஷியல் ஆக்சன் படம்  மெகா ஹிட் ஆக வேணும்னா வில்லன் கேரக்டர்  மிக பிரமாதமா வடிவைமைச்ட்டா போதும், அந்த வில்லனை  ஹீரோ எப்படி மடக்கறார்? என்பதை திரைக்கதையில்  சாமார்த்தியமாக்காட்டிட்டா மேட்டர்  ஒவர் , இப்படி வில்லன்  கேரக்டரை முன்னிலைப்படுத்திய  படங்கள் தமிழ்  சினிமாவில்  சூப்பர்  ஹிட் ஆகி  இருக்கின்றன. உதா  கேப்டன் பிரபாகரன் , முதல் வசந்தம் , அமைதிப்படை,
இந்த  லிஸ்ட்டில் தனி    ஒருவன்  தனி இடம் பிடிச்சு கமர்ஷியல்  ஹிட் ஆகி இருக்கு, வாழ்த்துகள்  டூ   மோகன் ராஜா டீம்


ஹீரோ & கோ  போலீஸ் ட்ரெய்னிங்க் ல  இருக்காங்க.எடுபுடியா இருக்கும்போதே அரசியல்வாதி பி ஏ  ஊழல்  செய்யத்துவங்குவ்து  போல  இவங்க  ட்ரெய்னிங்ல இருக்கும்போதே  நைட்  டைம்ல  ராபின்  ஹூட் போல குற்றவாளிகளை  நைட்  டைம்ல களை  எடுக்கறாங்க.பகலில்  போலீஸ் ட்யூட்டி , நைட்டில் ராபின்  ஹூட்  ட்யூட்டி ( இவங்க  எப்போதான்  தூங்குவாங்கன்னு எடக்கு மடக்கா கேட்கக்கூடாது)


 வில்லன்  சின்ன  வயசுலயே  கலைஞரை  விட  சாணக்கியத்தனமா  யோசிச்சவன். சி எம்  ஒரு  கொலைக்குற்றத்தில்  ஈடுபட்டு  சிக்கலில்  இருக்கும்போது  தன்னோட  தொண்டன் கிட்டே  இந்தக்கொலைப்பழியை ஏத்துக்கிட்டா  தொண்டனோட குடும்பத்தை  நல்ல  விதமா  கவனிச்சுக்கறேன்னு  வாக்கு  தர்றார். அப்போ  தொண்டனோட  பையன், நானே  கொலைக்குற்றத்தை  ஏத்துக்கறேன், சிறார்  பள்ளியில் சில வருசம்  இருந்தாப்போதும், ரிலீஸ் ஆகிடலாம், அப்பாவுக்கு  எம் எல் ஏ  சீட்  தர்றியா?ன்னு சி எம் கிட்டேயே  கேட்டு  ஜெயிச்ச மூளைக்காரன்


இந்த  ஜாம்பவான்  வில்லன்  கிட்டே  ஹீரோ  அண்ட்  டீம்  எப்படி  மோதி  ஜெயிக்குது? என்பதே  திரைக்கதை.


ஹீரோவா இந்தப்படத்தில்  களை கட்டும் அநாயசமான  நடிப்பை  வெளிப்படுத்தி  இருப்பது  அர்விந்த் சாமிதான். சமீபத்தில் வந்த  தமிழ்  சினிமாவில் இவ்வளவு ஸ்டைலிஷான  வில்லனைப்பார்த்ததே  இல்லை.அவர்  பாடி லேங்குவேஜும், அசால்ல்டான   டயலாக்  டெலிவரியும் , டிரஸ்சிங்  சென்சும் அபாரம்


இன்னொரு  ஹீரோவா ஜெயம்  ரவி , இவரும்  போலீஸ்  கெட்டப்பில் , ஜிம் பாடியில்  தன்  முத்திரை  பதிக்கிறார், ஜெயம்  ரவியின்  லைஃப்  டைம் கேரக்டர்  இது  

ஹீரோயினா   நயன்  தாரா, வழக்கமா  லூசுத்தனமான  ஹீரோயின்  கேரக்டர்களை  வடிவமைக்கும்  தமிழ்  சினிமாவுக்கு  ஒரு மாறுதலான  நாயகி  கேரக்டர்.


காமெடி  கம்  கேரக்டர்  ரோலுக்கு  தம்பி  ராமய்யா அசலாட்டா  நடிச்சிருக்கார்.பின் பாதியில் இவருக்கு  வாய்ப்பு  அதிகம் 


பிரமாதமா  திரைக்கதை   அமைத்த  மோகன்  ராஜா & திரைக்கதை , வசனத்தில்  உதவிய  சுபாவுக்கு  ஒரு  பெரிய  பூங்கொத்து





மனதைக் கவர்ந்த  வசனங்கள்


மக்களோட தலை எழுத்தைத்தீர்மானிப்பது  அரசியல்வாதிகளா இருக்கலாம், ஆனா அந்த அரசியல்வாதிகள் தலை எழுத்தைத்தீர்மானிப்பது  வியாபாரிகள் தான்# த ஒ 


உன்  நண்பன்   யார்னு  தெரிஞ்சா  உன் கேரக்டர் தெரிஞ்சிடும், ஆனா உன்  எதிரி  யார்?னு தெரிஞ்சாதான்  உன் கெப்பாசிட்டி என்ன?னு தெரியும் # த ஒ




இருட்டை  விரட்றதுக்கு  சூரியன் தேவை இல்லை, ஒரே ஒரு தீக்குச்சி போதும் # த ஒ ஹீரோ பஞ்ச்



நல்லதை மட்டுமே  பண்றதுக்கு  கடவுளால கூட முடியாது, நாமெல்லாம் எம்மாத்திரம்? # த ஒ  வில்லன் பஞ்ச்



வாழ்க்கை  பூரா  பணம்  எங்கே  இருக்கு?னு  தேடிப்போறவன்  அவன், வாழ்க்கை  பூரா  குற்றம் எங்கே  இருக்கு?னு  தேடிப்போறவன்  நான் #  த ஒ




6  என்னைக்கும் ஆசைக்கும், பேராசைக்கும் இடையில்  நடக்கும் போரில்  பேராசை தான் ஜெயிக்கும், மத்தவங்களுக்கு  நல்லது பண்ணனும்கற  பேராசை எனக்கு#  த ஒ




இல்லாத ஒரு வாய்ப்பை  உருவாக்கவும்  எனக்குத்தெரியும், கை நழுவிப்போன  வாய்ப்பை  தக்க வெச்சுக்கவும் தெரியும் # த ஒ  வில்லன் பஞ்ச்



கெட்டது  செய்ய  நேரம் , சமயம்  யாரும் பார்க்கறதில்லை,ஆனா  நல்லது  செய்ய  எல்லாருமே  நேரம் காலம்  பார்ப்பாங்க # த ஒ


9  ஆண்  செய்யும் தப்பை  தானும் வரிஞ்சு கட்டிட்டு செய்வது பெண் சுதந்தரம் அல்ல # த ஒ


10  ஒரு உண்மையானவன்  பொய்யான  கேஸ்ல இருந்து  தப்பிக்க  40 வருசம் ஆகுது, ஆனா  ஒரு பொய்யானவன் உண்மையான கேஸ்ல இருந்து 4 நாள்ல  தப்பிடறான்#த ஒ


11 நம்ம   எல்லார்க்கும்   மீடியா   காட்டும் செய்திகள்  தான் உலகமே # த ஒ


12 எவன்  ஒருவனை  அழிச்சா 100  கெட்டவங்க அழிவாங்களோ  அவனை  முதல்ல  தேடி ஒழிக்கனும்  ஒ


13 அதிக  பணம் இருக்கும் இடத்தில் தான் அதிக குற்றமும் இருக்கும் # த ஒ (  அறிவாலயம், போயஸ்)



14 வாழ்க்கைல   ஒரே ஒரு ஐடியாவை  எடு, அந்த ஐடியாவையே  உன் லைஃப் ஆக்கிடு # த ஒ


15 நீங்க  எனக்குக்குடுத்தது  வேலை இல்லை, வாய்ப்பு # த ஒ



16 ஆசைப்பட்டுப்பார், எதுவுமே தப்பில்லை # த ஒ


17  இந்தியா  பின்னால  எல்லாரும் வரனும்னு நீ ஆசைப்படறே, ஒரு இந்தியன் பின்னால  அவங்க வரனும்னு நான் ஆசைப்படறேன்,அவ்வளவுதான் வித்தியாசம் # த ஒ


18 நிதானத்தை  இழந்துட்டா  எல்லாத்தையும்  இழந்த மாதிரி # த ஒ


19  எதிரியும் வாழனும், நாமும் வாழனும், எதிரி முன்னால  வாழ்ந்து காட்டனும், அதுதான் வீரம் # த ஒ




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  துப்பாக்கி ,ரமணா பட பாணியில் புத்திசாலித்தனமான திரைக்கதை + ஆக்சன் காட்சிகள் அள்ளுது # தனி ஒருவன்



2 காட்சி அமைப்பில் ஏ ஆர் முருகதாஸ் டச் பல இடங்களில் ஒத்துப்போகுது # தனி ஒருவன்




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   ஓப்பனிங்  சீனில்  சி எம் இடம்   அந்தபையன்  எம் எல் ஏ  சீட்  பேரம்  பேசும்  சீன்  டாப் ரகம்.  அந்தக்கொலைக்காட்சியும்  நல்ல  பதட்டத்தைத்தரும்  ரியல்  சீன்


2 நாயகன்  - நாயகி  காதல்  காட்சிகள்  இதம். நாயகியின்  காதலை  நாயகன்  மறுக்கும் காரணம், அதுக்குப்பின்பும் நாயகி மாறாத காதல்  வைத்திருப்பது  அழகு


3   ஹீரோ  உடம்பில்  ஒட்டுக்கேட்கும்  கருவியை  ஒளிய  வெச்சு  அவர்  திட்டங்களை  வில்லன் அறிந்து  கொண்டு  ஒவ்வொரு    மூவாகச்செய்வது , ஜெயிப்பது  எல்லாம்  ஒரு  கொரியன்  மூவியில்  இருந்து  சுட்டது  என்றாலும்  அபராமான  படமாக்கம்


4  ஒட்டுக்கேட்கும் கருவி  தன்னில்  இருப்பதை  ஹீரோ  உணர்ந்த  பின்  ஹீரோ  ஹீரோயின்  மவுனமாக  காதலை  வெளிப்படுத்தும்  காட்சி  கிளாஸ்


5   வில்லனை  திசை  திருப்பி அந்த  உலக அழ்கி கொலையை , நயன் தாரா  கொலையை  தடுப்பது சாணக்கியத்தனம்


6   திரைக்கதை  , வசனம்  டாப்  ரகம். வில்லனின்  டாமினேஷன்  கலக்கல்  ரகம்   இறக்கும்போது  கூட  வில்லன்  காட்டும்  கெத்து  செம


7   ஏஞ்சலீனா  கேரக்டருக்குப்பதிலாக  நாயகி நயன் தாராவை  பலிகடா ஆக்க  நாயகன்  முயல்வது  துப்பாக்கி  படத்தில் விஜய்  தன் தங்கயை  பணயமாக  வைப்பதை  நினைவு  படுத்தினாலும்  அந்த  சீனில்  நயன்  பேசும்  வசனம் , நடிப்பு  செம



இயக்குநரிடம்  சில கேள்விகள்

1 30 க்கும்  மேற்பட்ட  களப்பணிகளில்  இரவில்  ஈடுபட்டு  குற்றவாளிகளை  பிடிக்கும்  ஹீரோ  ஒரு முறை  கூட  போலீசில்  சிக்காமல்  இருப்பது  எப்படி?


2 எடுத்த  எடுப்பிலேயே  எந்த  ஊரில்  போலீஸ்  கண்காணிப்பாளர்  வேலை  கிடைக்குது?


3  நாயகி  ஒரு சீனில் கூட  போலீஸ்  யூனிஃபார்மில்  வராதது ஏன்? செம கிளுகிளுப்பா  டைட்  டிரஸ் ல  காட்டி  இருக்கலாமே?


4  நண்பர்கள்  5  பேரும்  ஹீரோவும்  ஒரே  ரேங்க்கில்  இருக்கும்போது  ஹீரோ மட்டும்  எல்லோருக்கும்   ஆர்டர்  போடுவது  எப்படி?


5  பல  கோடி மதிப்புள்ள  ஒ ரு  டாக்குமெண்ட்டில்  சைன்  பண்ண வரும்  ஏஞ்சலீனாவுக்கு ஏன்  இவ்வளவு  கேவலமான  பாதுகாப்பு  வசதி?


6  கோடீஸ்வரனான  வில்லன்  ஒரு கார்  டிரைவர்  கூட வெச்சுக்காம  அவரே செல்ஃப்  டிரைவிங்க்லயே  படம்  முழுக்க  வருவது  ஏனோ?


7   கோர்ட்டில்   வீடியோ  ஆதாரத்தை  ஹீரோ  எடிட்  செய்து  கொடுப்பது தவறாச்சே. அப்படி செஞ்சா  கோர்ட்  ஏத்துக்காதே





சி  பி  கமெண்ட் =தனி ஒருவன் = விறுவிறுப்பான ஆக்சன் த்ரில்லர் ,ஆல் சென்டர் சூப்பர் ஹிட் பிலிம் ,விகடன் மார்க் =46 .ரேட்டிங் = 3.5 / 5 வில்லன் நடிப்பு பட்டாசு


ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 46



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= நன்று



 ரேட்டிங் =3.5 / 5


மதுரை பிக் சினிமாஸ் ஜாஸ் ல படம் பார்த்தேன்




Saturday, August 29, 2015

தனி ஒருவன் - சினிமா விமர்சனம்

அண்ணன் 'ஜெயம்' ராஜா (இப்போது மோகன் ராஜா) இயக்கத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார் ஜெயம் ரவி. ஆனால், இது வேற மாதிரி. தொடர்ந்து ரீமேக் படங்களாகவே அளித்து வந்த இந்த சகோதரக் கூட்டணி இப்போது முதல் முறையாக அசல் சினிமாவில் கரம் கோத்துள்ளது.
இந்த அசல் விஷயம் மட்டுமின்றி, கடல் படத்துக்குப் பிறகான அரவிந்த் சுவாமியின் மறு மறுவருகையும் எதிர்பார்ப்பை சற்றே எகிறவைத்தது.
ஆனால், நம் எதிர்பார்ப்பையும் தாண்டி, நமக்கு சிறப்பு விருந்து அளிக்கும் 'தனி ஒருவன்', தமிழ் சினிமாவில் தனது அழுத்தமான கால்களைப் பதித்துள்ளான்.
அரவிந்த் சுவாமிக்கு தன் தந்தைக்காக கொலைப்பழி ஏற்கும் சிறுவனாக ப்ளாஷ்பேக்கில் அறிமுகம். சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து திரும்பும் அவர், 'கடலை'க் கடந்து அதிரடி கெட்டப்பில் வருகிறார். இம்முறை எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிடுகிறார்.
'பேராண்மை'யில் போராடிய ஜெயம் ரவிக்கு மீண்டும் செம தீனி கிடைத்துள்ளது. போலீஸ் ஆஃபிஸராக அவர் மக்களுக்காக தனி ஒருவனாகவே சாகசங்கள் நிகழ்த்துகிறார். கதைப்படி தீய சக்திகளுக்கு எதிராக மட்டுமல்ல, படத்தையும் ரசிகர்களிடம் விறுவிறுப்பு குறையாமல் கொண்டுவந்து சேர்த்துவிட்டதில் ரவிக்கு ஜெயம்!
அரவிந்த் சுவாமியின் அத்தனை வியூகங்களையும் முறியடித்து நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுபவர்தான் அதிரடி நாயகன் ஜெயம் ரவி. ஆனால், படம் முழுக்க வந்து நம்மை ஆக்கிரமிப்பது அரவிந்த் சுவாமியே!
இடைவேளைக்கு சிறிது நேரத்துக்க்கு முன்பான அரவிந்த் சுவாமியின் என்ட்ரி... கடைசி ப்ரேம் வரைக்கும் அந்த கேரக்டருக்கான ஜஸ்டிஃபிகேஷன்... தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒப்பிடத்தகுந்த ஸ்ட்ராங்கான வில்லன் சித்தரிப்பும் கனக்கச்சிதமான வெளிப்பாடும் பார்க்கவில்லையென்றே சொல்லலாம். அல்லது அரிதாகத்தான் பார்த்திருக்கிறோம்.
நயன்தாரா வெறும் தமிழ் சினிமாவுக்கு ஊறுகாய் ஹீரோயினாக இல்லை என்பதை இப்படத்தில் மீண்டும் நிரூபித்துவிட்டார். வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தன் சகல பிரதாபங்களையும் முன்வைக்கும் தம்பி ராமையாவின் நகைச்சுவை படத்தின் தடத்தை உறுத்தாதவண்ணம் நம்மை ஈர்க்கிறது. மற்றபடி நாசர், ஜெயம் ரவி நண்பர்களாக வரும் நான்கு பேர், வில்லனாக வரும் என்று எல்லாருமே பக்காவாக பொருந்துகிறார்கள்.
நல்ல தொழில்நுட்ப ரீதியான ராம்ஜியின் ஒளிப்பதிவு, ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை, கோபி கிருஷ்ணா எடிட்டிங் அனைத்துமே படத்தின் வேகத்தோடு பாய்ந்து வருகிறது.
ஓர் அதிரடி த்ரில்லர் படம் என்றால் கண்டிப்பாக போர் அடிக்காத பாய்ச்சல் இருக்கவேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் வைத்து படத்தில் அங்கங்கே திரைக்கதையில் இயக்குநரின் விளையாட்டு பளிச்.
தனி ஒருவன் அப்படி சாதாரணமாக வேகமான படம் என்று இல்லாமல், படத்தில் நிறைய இடங்களில் இயக்குநர் தன்னோட புத்திசாலித்தனத்தையும் காண்பித்துள்ளார். அதற்கான பிரதிபலிப்பு அரங்கு முழுவதும் கைத்தட்டலில் தெரிகிறது.
மற்றபடி, போரடிக்காத ஆக்‌ஷன் படத்தில் சின்னச் சின்ன சறுக்கல்கள்... முதல்பாதியில் அவ்வப்போது ஜெயம் ரவி கருத்து கந்தசாமியாக மாறிவிடுவதுதான். அந்த ஒரே ஒரு டூயட் கூட படத்தின் வேகத்தை குறைத்துவிடுகிறதோ என்றும் தோன்றுகிறது.
கத்தி, துப்பாக்கி, ரமணா, ஏழாம் அறிவு, பேராண்மை போன்ற படங்களின் நல்ல அம்சங்கள் எல்லாம் கலந்து ஒரு உல்டாவாக இல்லாமல் தரமான கலவையாக மிளிர்கிறான் தனி ஒருவன்.
ஜெயம் ராஜா எனும் இயக்குநர் எம்.ராஜா, கடந்த 4 வருடங்களாக இந்த ஸ்க்ரிப்டைத் தான் எழுதிக் கொண்டிருந்தாரா? இவ்வளவு திறமையான திரைக்கதையாசிரியர் எதற்கு இவ்வளவு நாள் இந்த மாதிரி ஒரு சொந்தக் கதையை எடுக்காமல், மொழிமாற்றுப் படமாகவே இயக்கிக் கொண்டிருந்தார் என்று நிறைய கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.
அந்த எல்லா கேள்விகளுமே படத்துக்கு வரும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் நல்ல பதிலாக இருக்கும். மொத்தத்தில், விறுவிறுப்பு சினிமா விரும்பிகள் தவறவிடக்கூடாத படம் இது

நன்றி - த  இந்து