Showing posts with label த ஹிந்து தமிழ். Show all posts
Showing posts with label த ஹிந்து தமிழ். Show all posts

Thursday, September 26, 2013

நிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நானே - ஜெயம் ரவி பேட்டி @ த ஹிந்து தமிழ்

 

ஜெயம்' படத்தில் அப்பாவியாய் பார்த்த ரவியா இது..? முறுக்கேறிய கைகள், ஒட்டிய வயிறு, சற்றே கறுத்துப் போயிருக்கும் முகம் என அப்படியே வடசென்னைவாசியாகவே தோற்றமளிக்கிறார் ‘ஜெயம்' ரவி. பேச்சில் நிதானமும், நம்பிக்கையும் நிறைந்திருக்கிறது. இனி, 'ஜெயம்' ரவியுடனான நம் மழைநாள் சந்திப்பிலிருந்து.. 



‘ஜெயம்', ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' மாதிரி ரீமேக் படங்கள்ல நடிக்கிறது கியாரண்டி ஹிட். 'பேராண்மை', ‘பூலோகம்', ‘நிமிர்ந்து நில்' அப்படினு இப்ப நிறைய நேரடி தமிழ் படங்கள்ல தான் நடிக்கிறீங்க.. என்ன காரணம்?


 
முதல்ல ரீமேக் படங்கள் எல்லாம் கியாரண்டி ஹிட் அப்படினு யார் சார் சொன்னது?. 10 லட்ச ரூபாய் இருந்தா ஒரு படத்தை டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ணலாம். ஆனா ரீமேக் உரிமை வாங்கி அதை தமிழுக்கு ஏற்றமாதிரி மாத்தி பண்றது சுலபமில்லை. அதுக்கும் நிறைய உழைப்பு தேவை. ரீமேக் படங்கள்ல நடிச்சுக்கிட்டே தான், ‘தாஸ்', ‘பேராண்மை','தாம் தூம்' படங்கள்ல நடிச்சேன். ரீமேக் படங்கள்ல நடிச்சா மக்களுக்கு உடனே தெரிய ஆரம்பிக்குது அவ்வளவு தான். 



'ஆதிபகவன்' படத்துக்காக நிறைய மெனக்கெட்டீங்க.. ஆனா படம் சரியா போகல.. வருத்தப்பட்டீங்களா?


 
ரொம்ப வருத்தப்பட்டேன். மத்த படங்களைவிட அந்த படத்துக்காக நான் உழைச்சது அதிகம். அதுக்காக படம் சரியா போகலயேனு வருத்தப்பட்டுகிட்டே இருந்தா, அடுத்தடுத்த படங்கள்ல நடிக்க முடியுமா?. ஒரு ஜெயிப்பு எல்லாத்தையும் மறக்க செய்யும். அதுக்காக தான் ஓட ஆரம்பிச்சுட்ட்டேன். 

 

'சாக்லேட் பாய்' ஜெயம் ரவி அதுக்குள்ள வில்லன் ஆகவேண்டிய அவசியம் என்ன?


 
உலகம் எங்கயோ போய்கிட்டு இருக்கு. நான் 25 வயசுல தான் ஐ-போன் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன். இப்ப 3 வயசு பசங்களே ஐ-போன்ல பிரிச்சு மேயறாங்க.. இப்ப இருக்க டிரெண்ட்டுக்கு ஏத்தமாதிரி எதாவது வித்தியாசமா ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கணும். 25 படங்கள்ல நடிச்சப்பறம் தான் வில்லனா நடிப்பேன்னு அடம்பிடிச்சுகிட்டு நின்னா, காணாம போயிருவோம். எந்த ஒரு வித்தியாசமான கேரக்டர் வந்தாலும் ஸ்கோர் பண்றது தான் இப்போதைக்கு பெஸ்ட்னு பட்டுது. நம்ம மனசு தானே சரியான வழிகாட்டி. வந்த வாய்ப்புகளை பயன்படுத்திகிட்டேன். 



‘பூலோகம்' படத்துல பாத்தீங்கன்னா பாக்ஸர், ‘நிமிர்ந்து நில்' படத்துல ரெண்டு ரோல்ல நடிக்கறேன். அதுல வில்லன் ரோல் ரொம்ப வித்தியாசமா இருக்கும். கண்டிப்பாக ரெண்டு படங்களையுமே மக்கள் ஏத்துக்குவாங்கனு நம்பறேன். 



உங்க வாரிசு ஆரவ் என்ன சொல்றார்? ஆரவ் கூட விளையாடற அளவுக்கு நேரம் இருக்கா? உங்க படங்களை பாக்க ஆரம்பிச்சாச்சா?


 
ஆரவ்வுக்குகு என்னோட டான்ஸ் தான் ரொம்ப பிடிக்கும். இப்போதைக்கு ‘பேராண்மை', ‘ஜெயம்' ரெண்டு படத்தையும் அடிக்கடி பாக்கறார். ‘ஆதிபகவன்' படத்துக்காக ரெண்டரை வருஷம் நடிச்சேன். அப்ப ஆரவ் கூட செலவழிக்க நிறைய நேரம் கிடைச்சுது. ஆரவ் கூட இருக்குறப்ப நேரம் போறதே தெரியாது. ஆரவ் வளர்ச்சியை ரொம்ப உற்சாகமாக பாத்துகிட்டு இருக்கேன். 



திரையுலக நண்பர்கள் கிட்ட ஜெயம் ரவிக்கு ரொம்ப நல்ல பேர்.. திரைக்கு வெளியே நண்பர்கள் இருக்காங்களா?


 
(சிரித்துக் கொண்டே..) என்ன இப்படி கேட்டுட்டீங்க.. என்னோட ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே. இப்பக் கூட டெல்லியிலிருந்து என்னோட நண்பன் சென்னை வந்தான். உடனே நாங்க எல்லாம் சேர்ந்து ஒண்ணா சுத்து சுத்துனு சுத்தினோம். புருஷ், உப்பிலி, திலீப், சசி அப்படினு நாலு பேர் இருக்காங்க. என்னோட ப்ளஸ், மைனஸ் ரெண்டும் தெரிஞ்சவங்க. ரெண்டு பேர் சி.ஏ பண்ணிருக்காங்க, ரெண்டு பேர் ஐ.டில இருக்காங்க. இவங்களோட சேர்ந்து மாடி கிரிக்கெட், சென்னையை சுத்துறது அப்படினு ஜமாய் தான். 


 
'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்'னு படம் பண்ணிட்டிருந்த உங்கண்ணன் ராஜா, படார்னு விஜய் கூட கைகோத்து ‘வேலாயுதம்'னு மாஸ் கமர்ஷியல் பண்ண ஆரம்பிச்சுட்டாரு..மறுபடியும் படம் ரெண்டு பேரும் சேர்ந்து படம் ஆரம்பிக்கப் போறீங்க..


 
ஆமா. எப்போ படப்பிடிப்புனு ரொம்ப ஆவலா இருக்கேன். ஆனா, இந்த முறை ரீமேக் இல்லை. ரொம்ப நாளா எங்க அண்ணன் வைச்சிருந்த கதையை இப்போ எனக்காக இன்னும் கொஞ்சம் மெருக்கேத்தி இருக்கார். நயன்தாரா எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. இது ‘வேலாயுதம்',‘சந்தோஷ் சுப்பிரமணியம்' ரெண்டும் சேர்ந்த ஒரு காக்டெய்ல் மாதிரி இருக்கும். 



வரவர உங்க படங்கள்ல ஹாலிவுட் வில்லன்களா நடிக்கிறாங்க.. 'பேராண்மை', இப்ப ‘பூலோகம்'னு ஹாலிவுட்டையே புரட்டி எடுக்கறீங்க?


 
எல்லாமே என்னோட இயக்குநர்கள் முடிவு தான். ‘பூலோகம்' படத்துக்காக நாதன் ஜோன்ஸ் கூட நடிச்சது ஒரு நல்ல அனுபவம். ஹாலிவுட் படங்கள்ல ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தான் வேலை செய்வாங்கன்னு நாதன் ஜோன்ஸ் சொன்னார். அவருக்கு இங்குள்ள WORKING STYLE ரொம்ப பிடிச்சிருக்கு. படத்தோட க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்கும்போது அவருக்கு கால்ல நல்லா அடிபட்டிருச்சு. அதக்கூட பெரிசா எடுத்துக்காம தொடர்ந்து நடிச்சு கொடுத்தார். இப்போதைக்கு நாதன் ஜோன்ஸ் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.! 


நன்றி - த ஹிந்து தமிழ்