Showing posts with label ட்விட்டர். Show all posts
Showing posts with label ட்விட்டர். Show all posts

Wednesday, December 23, 2015

அஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்?

எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல் ஆகியோரைத் தொடர்ந்து அஜித் - விஜய் என்று சொல்கிறது தமிழ்த் திரையுலகம். முன்னால் உள்ள இரண்டு கூட்டணிக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷ வாய்ப்பு அஜித் - விஜய் கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் சமூக வலைதளம். சமூக வலைதளத்தின் வளர்ச்சி இருவரின் வளர்ச்சிக்கும் மிக முக்கியக் களப்பணி ஆற்றி வருகிறது.
மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரையுலகில், அஜித் - விஜய் ரசிகர்களைப் போல எந்த நடிகர்களின் ரசிகர்களும் மோதிக் கொள்வதில்லை. மற்றொரு நடிகரின் படம் வெளியாகும்போது, அதற்கு எதிராக மனம் புண்படும் விதமான கருத்துக்களைத் தெரிவிப்பதும் இல்லை!
அஜித் நடித்த படம் வெளியாகும்போது, “படம் நலலாயில்லை” என்று கருத்து தெரிவித்தால்கூட தப்புதான். உடனே நீங்கள் விஜய் ரசிகராகச் சமூக வலைதளத்தில் சித்தரிக்கப்படுவீர்கள். அதோடு, விஜய் ரசிகனாக இருப்பதே எத்தனை கேவலமான ஒரு விஷயம் என்பதாகக் கூட்டம் கூட்டமாக வலை தளத்தில் வாரித் தூற்றுவார்கள் - கூடவே, விஜய்க்கும் அர்ச்சனை நடக்கும். இதேதான் விஜய் படம் நல்லாயில்லை என்று கருத்து கூறுபவன் கதியும். அஜித் ரசிகராக அவரை முடிவு கட்டி... அவருக்கும் அஜித்துக்கும் சேற்று அபிஷேகம் நடத்திவிட்டுத்தான் ஓய்வார்கள் - விஜய்யின் ஆன்லைன் காவலர்கள்!
அஜித் - விஜய் இருவரைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்குக்கூடச் சில விமர்சகர்கள் பயப்படுகிறார்கள். காரணம், ரசிகர்கள் ஒன்றுகூடித் திட்டுவார்களே என்றுதான். இது குறித்துப் பிரபல இணைய விமர்சகர் ஒருவரிடம் பேசியபோது, “என் பெயரை வெளியிடாதீர்கள். கலை என்பது விமர்சனத்துக்கு உட்பட்டது என கமல் தெரிவித்தார். ஆனால், அஜித் - விஜய் படத்தை நீங்கள் விமர்சனம் செய்யவே முடியாது. ஒரு வேளை படம் நல்லாயில்லை என்று தெரிவித்துவிட்டீர்கள் என்றால் முடிந்தது.
எங்கிருந்தாவது உங்களது மொபைல் நம்பரைப் பிடித்து வெளியிட்டுவிடுவார்கள். அன்று முழுவதும் ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்குவதுதான் உங்களது வேலையாக இருக்கும். அஜித் - விஜய் இருவரது விஷயங்களில் கருத்துரிமை என்பது சுத்தமாக கிடையாது” என்று வருத்தமாகத் தெரிவித்தார்.
ட்விட்டர் தளத்தில் அஜித் - விஜய் ரசிகர்களின் பணிகளைப் பார்க்கும் போது, அவர்கள் இதையொரு தொழில் போலவே பண்ணுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசு வருமானத்துக்கு எப்படி மதுவிற்பனையைப் பயன்படுத்துகிறதோ, அதேபோலத்தான் அஜித் - விஜய் தரப்பிலிருந்தே, அவர்களின் புகழுக்காக சமூக வலைதளத்தில் ரசிகர்களை பயன்படுத்தும் வேலையும் நடக்கிறதோ என்று எண்ணத் தோன்றும்! அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைப் பரப்பவும், தங்கள் எதிரிக் கட்சிகளை சிக்கலில் மாட்டிவிடவும் தனியார் ஏஜென்சிகளை வைத்து இணையதளத்தில் கொடி பிடிக்கும் பாணியை இந்த வகை ‘மெகா’ போற்றல் மற்றும் தூற்றலில் காணலாம்.
சில காலமாக அஜித் - விஜய் ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வரும் சண்டைகள் கைகலப்பாகவும் மாறி இருக்கிறது. 'வேதாளம்' படம் வெளியானபோது, தூத்துக்குடியில் இரு தரப்பு ரசிகர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சண்டை குறித்து செய்திகள் வெளியானபோது கூட இரு நடிகர்களிட மிருந்தும் மவுனமே பரிசாகக் கிடைத்தது.
தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் மனம் விட்டுப் பேசும்போது சொல்லும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சினிமா வட்டாரத்துக்கே வெளிச்சம். அதாவது. நடிகர்களின் ரசிகர்கள் பெயரால் இணையத்திலும், நேரடிக் களத்திலும் அடிதடி உக்கிரம் அடையும்போது இவர்கள் மாஸ் நடிகர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, இவர்களின் சம்பளமும் ஏறிக்கொண்டே போகிறது?!
'திருப்பதி' படத்துக்கு அஜித் வாங்கிய சம்பளத்தையும் 'சிவகாசி' படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளத்தையும் சுட்டிக்காட்டும் இந்தத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் “ரசிகர்களின் மோதல் வலுத்துக்கொண்டே செல்லச் செல்ல இவர்களின் சம்பளமும் விஷ வேகத்தில் ஏறிக்கொண்டே போனது” என்று கூறுகிறார்கள்! இவர்கள் இருவரையும் வைத்துப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாப விகிதம் இதே அளவுக்கு உயர்ந்துகொண்டே போனதா என்றால், இல்லை என்பதுதான் பதில் என்று சுட்டிக் காட்டும் இவர்கள்,
“ரசிகர்களின் இந்த வேகத்தையும் பாசத்தையும், தங்கள் பணப் புழக்கத்தையும் தமிழகத்தின் வெள்ள நிவாரணம் போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களை நோக்கிக் கொஞ்சமாவது திருப்பி விட்டிருந்தால் எத்தனையோ ஏழைகளுக்குப் பலன் கிடைத்திருக்கும்” என்றும் ஆதங்கப்படுகிறார்கள்.
அஜித் - விஜய் இருவருமே கடவுள் அல்ல, தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிப்புக் கலைஞர்கள்... மற்ற எல்லாத் துறைகளிலும் உள்ளது போன்ற திறமையும், உழைப்பும் கொண்ட ‘புரொஃபஷனல்கள்’ என்பதை இந்த ரசிகர்கள் உணரும் வரை இது போன்ற ஆதங்கம் நீடிக்கத்தான் செய்யும்!
பின் குறிப்பு :இந்தக் கட்டுரையில் அஜித் - விஜய் இருவரையும் குறிப்பிடும் விதத்தை வைத்தே இரண்டு ரசிகர்களுக்கும் சண்டைக்கு வருவார்கள், எங்க தலைவர் பெயரை எப்படி பின்னாடி போடலாம் என்று. மேலும் இக்கட்டுரையின் பின்விளைவாக ’ஹேஷ்டேக்’ உருவாக்கி இரு தரப்பு ரசிகர்கள் பெயரிலும் ட்ரெண்ட் செய்யக்கூடும். அதில்கூட யாருக்கு மாஸ் அதிகம் என்று பலப்பரீட்சை நடக்கலாம். ட்விட்டர் தளத்திற்கு வந்தீர்கள் என்றால் அதையும் நீங்கள் பார்த்துவிடலாம்!

-தஹிந்து


Tuesday, October 06, 2015

புலி'யை வேட்டையாடியசமூக வலைதள விமர்சனங்கள்

ஒரு படத்தின் வசூலில், இணையதளத்தில் பிரபலமான விமர்சகர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடிச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்களில் குறும்பதிவுகள் இடுபவர்கள் ஒருபுறமிருக்க, தொடர்ச்சியாக திரைப்பட விமர்சனங்களை வெளியிட்டு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பிரபல இணையதள விமர்சகர்களாகத் திகழ்கின்றனர்.
'அஞ்சான்' படம் வெளிவந்தபோது, அப்படத்தின் வசூலுக்கு, இத்தகைய இணையதள விமர்சகர்களால்தான் பாதிப்பு ஏற்பட்டது. பலரும் படம் பார்க்காமல் விமர்சனம் செய்கிறார்கள் என்றெல்லாம் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, 'அஞ்சான்' நிலைமையே 'புலி'க்கும் வந்திருக்கிறது என்கிறார்கள். அப்படம் வெளியான அன்று காலை 10 மணிக்கு காட்சி ஆரம்பமானது. இடைவெளி வரும் முன்னரே 'மொக்கை படம்' என்று கருத்து தெரிவித்ததாக கூறுகிறார்கள். முதல் மூன்று நாட்கள் வசூல் என்பது விஜய் படத்துக்கு மிகவும் பெரியது என்பதால், இம்மாதிரியான கருத்துக்களால் பாதிக்கப்படுவதாகவும் ஆதங்கப்படுகிறார்கள் படக்குழுவினர்.
விமர்சனங்களால் வசூல் பாதிப்பா?
இணையதள விமர்சனங்களின் தாக்கம் குறித்து யூடியூபில் வீடியோ வடிவில் விமர்சனம் பதிவேற்றுபவர்கள், ஃபேஸ்புக்கில் முழுமையான விமர்சனம் எழுதுவோர் என சமூக வலைதளங்களில் பிரபல விமர்சகர்கள் சிலரிடம் பேசினேன். அவர்களில் பலரும், தங்களது பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துதான் தங்கள் கருத்தைச் சொன்னார்கள்.
"சார்.. எங்களுக்கு என்று சிறப்புக் காட்சி எல்லாம் திரையிடப்படுவதில்லை. நாங்கள் மக்களோடு மக்களாக 120 ரூபாய் செலவழித்து படம் பார்க்கிறோம். அப்படி பார்க்கும்போது, எங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.
நல்ல படமாக இருக்கும் பட்சத்தில், அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க "கண்டிப்பாக திரையரங்கில் போய் பாருங்கள். நல்ல படம்" என்று கூறுகிறோம்.
'தனி ஒருவன்' என்ற ஒரு திரைப்படம், காலையில் நாங்கள் டிக்கெட் புக் பண்ணும்போது மாலை காட்சிக்கு கூட டிக்கெட்கள் இருந்தன. சரியாக புக் ஆகவில்லை. இடைவெளியில் அற்புதமான படம் என்று கூறினோம். படம் முடிந்தவுடன் "One of the best movie of this year" என்றோம். அனைத்து விமர்சகர்களுமே நல்லாயிருக்கு என்றவுடன், டிக்கெட் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்தன. இரண்டாம் நாள் நல்ல வசூல் பெற்று வெற்றியும் பெற்றது. இதற்கு காரணம் சமூக வலைத்தள விமர்சகர்கள்தான் என்றால் ஏற்றுக் கொள்வார்களா?
பத்திரிகையாளர்கள் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கும் போய் விமர்சனம் அடித்து, இணையதளம் அல்லது அலுவலகம் சென்று பதிவேற்ற வேண்டும். நாங்கள் அப்படியில்லை. படம் நல்லாயிருக்கா, நல்லாயில்லையா உடனே கூறிவிடுவோம்.
எங்களை இவ்வளவு குறைச் சொல்கிறார்கள் அல்லவா, ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம். நாங்கள் சூப்பர் படம் என்று கூறிய 'குற்றம் கடிதல்', 'கிருமி' ஆகிய படங்களின் வசூல் நிலவரம் என்ன? நாங்கள் எவ்வளவுதான் நல்ல படம் என்றாலும், மக்கள் மிகவும் தெளிவு சார். எங்களை குறை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். முதலில் நல்ல படம் எடுக்கச் சொல்லுங்கள். அப்புறமாக குறை சொல்ல சொல்லுங்கள்" என்றார்கள் ஆதங்கமாக.
"இன்னொரு விஷயமும் இருக்கிறது. படம் நல்லாயில்லை என்று போட்டுவிட்டால் நாங்கள் படும் அவஸ்தை இருக்கிறதே. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. தயாரிப்பு தரப்பில் இருந்து போன் பண்ணுவார்கள். ரசிகர்கள் போன் பண்ணி எங்களது குடும்பத்தினர் பற்றி அசிங்க அசிங்கமாக திட்டுவார்கள். இதை எல்லாம் வாங்க வேண்டும். இவற்றை மீறி தான் விமர்சனம் பண்ணி வருகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்" என்றார்கள் கோபமாக.
சமூக வலைத்தள விமர்சனங்களால் தவறில்லை
இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது, "என் பெயரை வெளியிட்டுவிடாதீர்கள். பிறகு சமூக வலைதள விமர்சகர்களுக்கு கொடி பிடிக்கிறான் என்பார்கள். உண்மையில், சமூக வலைதள விமர்சனம் தான் டிக்கெட் புக்கிங்கில் மாற்றம் தெரியப்படுத்தும். என்னைப் பொறுத்தவரை அது வரவேற்கத்தக்கது தான். என்னுடைய படங்களுக்கு சமூக வலைத்தளத்தில் என்ன சொல்கிறார்கள் என்றுதான் முதலில் பார்ப்பேன்.
அஜித் - விஜய் ரசிகர்கள் இணையத்தில் போடும் சண்டையால்தான் 'புலி' படத்தின் விமர்சனத்துக்கு முதலில் பிரச்சினை. நல்லாயில்லை என்ற கருத்து வெளிவந்த அடுத்த நிமிஷம் அஜித் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அதோட புகைப்படம் எல்லாம் கூட இணையத்தில் வந்ததை நான் பார்த்தேன். இப்படியிருக்கும் போது சமூக வலைதள விமர்சகர்கள் உள்ளிட்டவர்களை குறைச் சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை. எவ்வளவு பெரிய பட்ஜெட் படம் என்றாலும் தயாரிக்கலாம், அதற்கு படத்தில் விஷயம் வேண்டும்" என்றார்
என்ன சொல்கிறது 'புலி' படக்குழு?
'புலி' படக்குழுவினரிடம் விசாரித்தபோது, "இணையத்தில் வந்த விமர்சனங்களால் பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், படத்தின் வசூல் இதுவரைக்கும் குறையவில்லை. ஸ்பெஷல் காட்சிகள் போன்றவை இருந்திருந்தால் இன்னும் வசூல் கூடியிருக்கும். வார விடுமுறை முடிந்த நிலையில் இனிதான் தான் மக்களிடையே படம் எப்படி வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது தெரியவரும்" என்றனர்.
இதனிடையே, அஜித், விஜய் ரசிகர்களிடையே ட்விட்டர், ஃபேஸ்புக்கில் நடந்து வரும் 'யுத்த' சேதாரங்களையொட்டி, வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோ ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ:
கா.இசக்கி முத்து, தொடர்புக்கு: [email protected]

thanx-thehindu


  • N  
    ஒரு திரை படத்தை விமர்சிப்பது ,ஒருவரின் ரசனையையும் அவரது தொழில் நுட்ப ஆர்வத்தையும் பொறுத்தது.தற்கால ரசிகர்களின் எதிர்பார்ப்பு காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. ஒரு நக்ஷத்திர நடிகரை வைத்து படத்தை விமர்சிப்பது என்பதே தவறு.கதை அம்சம் ,பொழுதுபோக்கு ,இனிமயான பாடல்கள், நடிப்பு, இவைகளை வைத்தே திரைப்படத்தை விமர்சிக்க வேண்டும்.
    Points
    2265
    about 11 hours ago
     (2) ·  (0)
     
    LINGESH · Narmadha Up Voted
    • SShankar  
      அப்போது ஏன் அஞ்சான் மாஸ் லிங்கா போன்றவைகளை கேவலமாக விமர்சனம் செய்தீர்கள். மேலும் இந்த படம் பல ஆங்கில படங்களின் அப்பட்டமான காபி
      about 11 hours ago
       (0) ·  (0)
       
      • KKathirnadar  
        உண்மையிலே படம் நல்ல இல்ல எனக்கு
        Points
        100
        about 12 hours ago
         (1) ·  (0)
         
        Ram Up Voted
        • RRaghavan  
          When you are justifying your views unknowingly you are degrading other hit movie Bahubali and its scenes which is not good also.
          about 12 hours ago
           (0) ·  (0)
           
          • RRaghavan  
            When you are justifying your views you are unknowingly criticised Bahubali movie and it s seens .It is not correct .
            about 12 hours ago
             (0) ·  (0)
             
            • VVikram  
              விஜய் ரசிகர்கள் ஏதோ மிக நல்லவர்கள் போல பேசி கொண்டிருகிறார்கள். அஞ்சான் படம் வெளி வந்த போது லிங்குசாமியை சமூக தளங்களில் ஓட ஓட விமர்சனம் செய்தவர்கள் இவர்கள். கொச்சடையான் மிக வித்தியாசாமாக அவதார் போல் முயற்சியில் வெளி வந்த போது அதை குழந்தைகள் படம் என கேலி செய்தார்கள் . லிங்கா படம் வந்த போது ரஜினியை மிக மோசமாக வசைபாடியவர்கள்.
              Points
              2195
              about 12 hours ago
               (3) ·  (0)
               
              prabu · shankar · Ram Up Voted
              • GGanesh  
                என்ன டா!!! கலர் கலர் ah ரீல் விடுற!!! நான் அஜித் fan உம் இல்ல... விஜய் fan உம் இல்ல!!! துப்பாக்கி, கத்தி கு இந்த மாறி எவனும் troll பண்ணல... துபாக்கி படம் "A -கிளாஸ்" படம்... ஆனா புலி படம் not for விஜய்... costume same like 23-புலிகேசி... மியூசிக் படத்துக்கு மேட்ச் ஆகல... வடிவேலு வெச்சி படம் எடுத்து இர்ருந்தலும் இப்படி தன இர்ருந்து இருக்கும்... ஹன்சிகா படத்துக்கு தேவையே இல்ல... விஜய், சுதீப், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி, விஜய குமார், நன்திதா... எல்லாரும் weight characters in தமிழ் சினிமா... ஆனா படம் அந்த அளவுக்கு weight இல்ல... and dont compare with baahubali ... its a historical movie ... and ஹீரோ was தி god சிவா... he nli can get to நீர்மலை... thats a history already in our subjects ...
                about 13 hours ago
                 (1) ·  (0)
                 
                Ram Up Voted
                • KK.SUBRAMANIAN  
                  மூன்றாது முறையாக இப்பபவும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
                  about 13 hours ago
                   (0) ·  (1)
                   
                  Prabha Down Voted
                  • Rraja  
                    புலி படம் தேவை இல்லாமல் காழ்ப்பு உணர்ச்சியுடன் விமர்சனம் வருகிறது இணையத்தளம் மூலமாக . கோடி கணக்குல முதல் போட்டு ஒரு (தொழில்) படம் எடுத்து படத்தை பார்க்காமல் மோசமாக விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.புலி ஒரு entertainment movie .
                    Points
                    1545
                    about 13 hours ago
                     (4) ·  (5)
                     
                    nellai · karthi · Kishan · Honey Up Voted
                    Ganesh · prabu · prasad · Muthu · Vikram Down Voted
                    • Cchandrakumar  
                      படம் பார்த்து விட்டு சோஷியல் மீடியாவில் கருத்து பதிபவர்கள் இளைய தலைமுறையினர். அவர்கள் அரச கட்டளை,அடிமைப்பெண் போன்ற எம் ஜி ஆர் காலத்தில் வர வேண்டிய இந்த படத்தை பார்த்து விட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லுவார்கள் என்றெல்லாம் நம்பபடாது.
                      about 13 hours ago
                       (0) ·  (0)
                       
                      • VVikram  
                        ஐம்பது வருடங்களுக்கு முன்பு வந்த படத்துடன் நேற்று வந்த படத்தை ஒப்பிட்டு பார்ப்பதில் இருந்தே தெரிகிறது. நீங்கள் விஜய் ரசிகர்கள் என்று. பின் ஏன் கொச்சடயான் படத்தை விஜய் ரசிகர்கள் கலாயத்தர்கள்??? டோராவின் பயணங்கள் கூட அருமையாக இருந்தது. கத்தி படம் வந்த பொது வந்த நேர்மையான விமர்சனங்களை ஏற்று கொண்ட நீங்கள் இதையும் ஏற்று கொள்ள தான் வேண்டும்.
                        about 13 hours ago
                         (0) ·  (0)
                         
                        • Cchandrakumar  
                          அட கடவுளே...அடித்து கொள்ள ரெண்டு கை பத்த வில்லை. .நான் ஒன்னு சொன்னா நீங்க ஒண்ணுபுரிஞ்சுக்கிறீங்க...சரி விடுங்க...உங்களுக்கு புரிஞ்சுக்கிற கபசிடி அவ்வளோதான்..
                          about 11 hours ago
                           (1) ·  (0)
                           
                          prabu Up Voted
                      • Suriya Narayanan Venkatesan  
                        வீட்டில் செய்தால் களி. தியேட்டரில் வச்சு செய்தால் அது புலி.
                        about 14 hours ago
                         (0) ·  (2)
                         
                        nellai · Kishan Down Voted
                        • II  
                          Mokka படம் Enoda paaem veen
                          about 14 hours ago
                           (0) ·  (3)
                           
                          nellai · Kishan · Honey Down Voted
                          • SSanjay  
                            150 கோடில படம் எடுத்தேன்னு சொன்ன அது கோட பரவால... ஆனா பாகுபலி மாதிரி இருக்கும்னு உட்டியே ஒரு பீலா...
                            about 14 hours ago
                             (3) ·  (3)
                             
                            Muthu · Vikram · kathirnadar Up Voted
                            nellai · Kishan · Honey Down Voted
                            • JJaffnamenan  
                              கடந்த 10 வருடங்களில் எந்த படத்துக்கும் கிடைக்காத எதிர்மறை விமர்சனம் புலி பெற்றிருக்கு . பேஸ்புக் ட்விட்டர் மட்டும் அல்லாமல் தெனிந்திய பத்திரிகைகள் தொடங்கி வட இந்திய பத்திரிகைகள் வரை மட்டமாக விமர்சனம் பெற்ற ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் . ஒரு மாஸ் ஹீரோவை வைத்து எப்படி படம் எடுக்கணும்நு தெரியாம வித்தியாச முயச்சின்னு மக்களை ஏமாற்றிய படம்
                              about 15 hours ago
                               (2) ·  (2)
                               
                              Muthu · Vikram Up Voted
                              Kishan · Honey Down Voted
                              • PJPraveen jeyan  
                                புலி ஒரு தடவ பார்க்கலாம்
                                about 15 hours ago
                                 (1) ·  (2)
                                 
                                nellai Up Voted
                                Vikram · kathirnadar Down Voted
                                • Ddhivyanathan  
                                  சூப்பர் ப்ரோ
                                  about 15 hours ago
                                   (0) ·  (0)
                                   
                                  • Ddilli  
                                    Watched Puli.. One of the best movie in tamil cinema.Thanks to haters for Promoting Puli Movie.
                                    about 15 hours ago
                                     (3) ·  (3)
                                     
                                    dilli · nellai · balasundaram Up Voted
                                    Rajendrakumar · Jayaraman · Vikram Down Voted
                                    • Vvellaiyanson  
                                      நானும் ஏதோ சரியில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். நேற்றுத்தான் படம் பார்த்தேன். உண்மைலேயே படம் நன்றஹவே இருக்கிறது. மேலும் சொல்லப்போனால் பஹுபளியை விடவும் நன்றஹவே உள்ளது. செட்டிங்க்ஸ், கிராபிக்ஸ், டான்ஸ், முக்கியமாஹா கேமரா, ஆடை அலங்காரம், பி.ஜி.எம். இதுவரை தமிழ் படங்களில் பார்த்திராத ஒன்று. hats off புலி டீம் என்று தைரியமாய் சொல்லலாம். மேலும் குடும்பம் குடும்பம்மாஹா குழந்தை குட்டிஹளுடன் இரவு 10 மணி சாவுக்கு கூட பார்த்துகொண்டிருக்கிரார்ஹல் படத்தை. ஆஹாவே புலி நிஜமஹவே தமிழில் ஒரு மைல் கல் தான் என்பதில் எந்தவித சந்தேஹமும் இல்லை.
                                      Points
                                      410
                                      about 16 hours ago
                                       (0) ·  (5)
                                       
                                      nattu · prabu · Vijay · Jayaraman · Narendran Down Voted
                                      • NNarendran  
                                        பஹுபாலி படத்தை பற்றி கேள்விபட்டதாவது உண்டா? அந்த படத்துடன் புலியை எல்லாம் ஒப்பிட்டுக் கொண்டு..
                                        about 15 hours ago
                                         (6) ·  (2)
                                         
                                        Vijay · Prabha · Rajendrakumar · Mayilvahanan · Vikram · balasundaram Up Voted
                                        Vimal · nellai Down Voted
                                        • MManikandan  
                                          நீங்க நல்லாவே வடை சுடுறீங்க , பாகுபலியை விட நல்லா இருக்குன்னு சொல்றீங்களே இதுலே தெரிஞ்சுரும் , ஒரு முறை பார்க்கலாம் அவ்ளோதான்
                                          about 15 hours ago
                                           (4) ·  (2)
                                           
                                          prabu · thalavijay · Vijay · Vikram Up Voted
                                          Rajendrakumar · Mayilvahanan Down Voted
                                          • JJaffnamenan  
                                            என்ன பேசுரம்னு தெரியாமலே பேசிட்டு இருகிங்க போல , இல்ல புலின்னு சொல்லி வேற படம் ஏதும் பார்த்திட்டு வந்திங்களா
                                            about 15 hours ago
                                             (6) ·  (2)
                                             
                                            prabu · Vijay · Prabha · Jaffnamenan · Mayilvahanan · Vikram Up Voted
                                            nellai · subramanian Down Voted
                                          • kumar vadivel  
                                            Overa build up kodutha itu than gadhi.. Ex : Linga, Anjaan, Puli...