Showing posts with label டூரிங் டாக்கீஸ். Show all posts
Showing posts with label டூரிங் டாக்கீஸ். Show all posts

Wednesday, January 28, 2015

இளைய தளபதியின் அசுரவளர்ச்சிக்கு யார் காரணம்?

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் 'டூரிங் டாக்கீஸ்' படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது:
"நான் ஒண்ணும் 20 வயசுப் பையனாக இப்படத்தில் நடிக்கவில்லை. 60 வயதான ஒரு மனுஷனுக்கு அந்த வயதில் என்னென்ன குறும்புகள் செய்வாரோ அந்த மாதிரியான வயதான பாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன்.
நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ப்ளாட்பாரத்தில் தூங்கி எழுந்து வாய்ப்பு தேடுவேன். அப்புறம் இயக்குநராகி நிறைய ஹிட் படங்கள் கொடுத்து நல்லா சம்பாதித்து பின்னாடி இதுபோது, இதற்கு பிறகு படங்கள் இயக்க வேண்டாம், தயாரிக்கவும் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
அப்போதுதான் என்னோட பையன் விஜய் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் அப்போது திரையுலகில் ரொம்ப முக்கியமான பெரிய இயக்குநர்கள் எல்லோர்கிட்டயும் என் பையனைக் கூட்டிட்டுப் போய் காட்டி "சார்... என் பையனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கி கொடுங்கள். எவ்வளவு செலவு என்றாலும் நான் பார்த்துக்கிறேன்"னு சொன்னேன். ஆனால் யாருமே விஜய்யை வைத்து படம் பண்ண தயாராக இல்லை" என்று நடிகர் விஜய் புறக்கணிக்கப்பட்ட கதையை உருக்கமாக கூறினார்.
மேலும் தொடர்ந்தவர், "விஜய்யை வைத்து யாரும் படம் இயக்க முன்வரவில்லை என்ற நிலையில்தான், நானே மறுபடியும் இயக்குநராகி என் மகனை வைத்து சொந்தமாக படங்களை எடுக்க ஆரம்பித்தேன். இன்றைக்கு விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ? நல்ல மருமகள், நல்ல பேரக்குழந்தைகள், நிறைய பணம் எல்லா வசதிகளும் இருக்கிறது.
போதும்... இதற்கு மேல் நாம ஏன் படங்கள் இயக்க வேண்டும் என்று நானேதான் முடிவெடுத்தேன். இயக்கம் மட்டும்தான் பண்ண மாட்டேன். மற்றபடி என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் திறமையான இயக்குநர்களை வைத்து படங்களை தயாரிப்பேன்" என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன். 


thanx - the hindu

  • இப்பு மட்டும் என்ன ...............சார்?
    Points
    330
    about 13 hours ago ·   (3) ·   (5) ·  reply (0) · 
  • Haja  
    முதல் படம் வந்த பொது தமிழின் நம்பர் 1 வார இதழ் ஒன்று "இந்த மூஞ்சியெல்லாம் பார்க்கணுமா" என்று ஒரு வரி விமர்சனம் செய்திருந்தது.. காலம் ஒரு ஒரு அற்புதம்...
    Points
    1275
    about 14 hours ago ·   (11) ·   (3) ·  reply (0) · 
  • Naga Nagaiah  
    இது விஜய்யை புறக்கணித்தவர்களுக்கான செய்தியா, அல்லது விஜய்க்கே சொல்லும் செய்தியான்னு சந்தேகமா இருக்குதுங்ணா... ஏம்பா இப்டி காச கரி ஆக்குறேன்னு மகன் வருத்தப்பட்ருக்கலாம்.. அதுக்கான பதிலா இத ஏன் எடுத்துக்க கூடாதுங்ணா..?
    about 16 hours ago ·   (18) ·   (4) ·  reply (0) · 
  • C R  
    வாழ்க்கையில் கஷ்டப் படாமல் ஜெயிச்சவங்க யாருமே இல்லை. அதில் வருத்தம் கொள்ளவும் தேவை இல்லை. இவரை நாடி வந்த அனைவருக்கும் இவர் வாய்ப்புக் கொடுத்திருப்பரா என்ன? இப்போதைக்கு விஜய்யின் பல தோல்விகளுக்கு எவர் தான் காரணம் என்று பலரும் கூறுகிறார்கள். ஒதுங்கி இருந்து அவரை மேலும் வளர விடுவதே இவருக்கு பெருமை. பழைய கதையெல்லாம் கிளறாதீர்கள்.
    Points
    1375
    about 16 hours ago ·   (40) ·   (2) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    "நிறைய பணம் எல்லா வசதிகளும் இருக்கிறது." அனால் ஊருக்கு மட்டும் தன்னோட பணத்த எடுத்து எதுவும் நல்லது செஞ்சிடாதிங்க. ஏமாந்த ரசிகர்கள் எவனோட பணத்தையாவது எடுத்து கல்யாணம், நல்லது, அது இதுன்னு எதாச்சும் பண்ணுங்க. வெளங்கிடும் நாடு.
    Points
    1800
    about 17 hours ago ·   (72) ·   (15) ·  reply (0) · 
  • இருமேனி Irumeni  
    வருத்தப் படுவதற்கும்,புலம்புவதற்கும் இதில் ஒன்றும் இல்லை. விஜய் எந்த ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து விட்டு வந்தார்? அல்லது சினி ஃபீல்டில் எந்த ஒரு இயக்குநர்-நடிகரிடம் தொழில் கற்றுக் கொண்டார்? டைரக்டர் சந்திரசேகரனின் மகன் எனும் ஒரே தகுதியில் சினிமாவுக்குள் வந்தவர்.அவரை வைத்து அன்றைக்கு படம் எடுக்காதவர்கள் சரியான முடிவே எடுத்திருக்கின்றனர். ஒரு வகையில் அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
    Points
    4170
    about 18 hours ago ·   (48) ·   (15) ·  reply (0) · 
  • TMZ  
    இவர் பேசியது "தி ஹிந்து" எடிட் செய்ததா அல்லது அப்படியே செய்தி பதிவு செய்து உள்ளதா? இல்லை என்றால்...இவருக்கு மமதை அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். நிறைய முரண்பாடுகளுடன் பேசியுள்ளார். இன்றைக்கி விஜைய்க்கு வரும் எல்லா எதிர் விமரசனங்கள்ளுக்கு முழு காரணகர்த்தா சத்தியமாக இவர் ஒருவரே