Showing posts with label டி.என்.பி.எஸ்.சி.. Show all posts
Showing posts with label டி.என்.பி.எஸ்.சி.. Show all posts

Monday, August 20, 2012

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மர்மங்கள்

http://resultsbuzz.in/wp-content/uploads/2012/05/TNPSC-Images.jpg 
கேள்வித்தாளை லீக் செய்தவர் யார்?

பிடிக்கத் துடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை


நல்ல நம்பிக்கையை பெற்றுவந்த டி.என்.பி.எஸ்.சி.க்கு திருஷ்டிப் பரிகாரம்... கடந்த வாரத்தில் நடந்தது. எல்லாம் ஒழுங்காய் போய்க்கொண்டு இருப்பதைப் பொறுக்காத மனிதர்கள் புகுந்து விளையாட.. எது ஓட்டை என்பதற்கான தேடுதல் துரிதமாய் நடக்கிறது!


சமீபத்தில் நடந்த தேர்வில் மட்டும் அல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே  டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வினாத்தாள் லீக் ஆகி இருக்கிறது என்று அதிர்ச்சியைக் கிளப் புகிறார்கள், லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரத்தினர். ''டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு, கல்வித்துறை ஆசி ரியர்கள், டியூஷன் சென்டர்கள், டுடோரியல் கல்லூரிகள் என்று ரகசியத் தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு மூலம் கோடிக்கோடியாக கொள்ளை அடித்திருக்கிறார்கள்.


 இந்த முறை சென்னையில் இருந்து கேள்விகள், பாலன் என்பவருக்குப் போய் இருக்கிறது. பாலன் மூலம் இ-மெயிலில் பல்வேறு நபர்களுக்கு வினாக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பாலன் யார்? அவருக்குக் கேள்வித்தாள் யார் மூலம் கிடைத்தது என்பதைத்தான் விசாரித்து வருகிறோம்'' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். அவர்களே கடந்த ஆண்டு நடந்த இரண்டு சம்பவங்களைச் சொல்கிறார்கள்.




டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுகிறவர்கள் சென்னையைச் சேர்ந்த பாலன் அண்டு கோ நெட்வொர்க் ஆட்களிடம் பணம் கொடுத்தால் போதும். ஒரு துண்டுக் காகிதத்தில் பீச் ரோட்டில் உள்ள ஒரு நூலகத்தில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கச் சொல்வார்கள். 'புத்தகம் கொடுக் கவும்' என்ற வார்த்தை மட்டும்  பென்சிலால் அதில் எழுதப்பட்டு இருக்கும்.

 அங்கே போனால், ஒரு குறிப்பிட்ட புத் தகத்தைக் கொடுத்து, அதை நன்றாகப் படித்து தேர்வு எழுதச் சொல்வார்கள். அந்தப் புத்தகத்தில் வினாத்தாளில் வர விருக்கும் கேள்விகளில் 80 சதவிகிதம் வரை இருக்குமாம். கடந்த வருடம்தான், டி.என். பி.எஸ்.சி. உறுப்பினர் ஒருவரின் அரவ ணைப்பில் இந்த நெட்வொர்க் இயங்குவதைக் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அந்த நூலக நபரையும் பிடித்து விட்டனர். ஆனால், இந்த வருடமும் அதேபோன்று நெட்வொர்க் இயங்கி உள்ளதுதான் ஆச்சர்ய்ம்! 



சென்னையில் இருந்து உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு சென்டருக்கு குரூப் 2 தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, அங்கே படிக்கும் மாணவர்களை எல்லாம் வரவழைத்து இருக்கிறார்கள். தலைக்கு ஒரு லட்சம் வீதம் வசூல் செய்துகொண்டு, பாடம் நடத்தும் போர்டில் வினா - விடைகளை எழுதிப் போட்டு இருக்கிறார்கள். அந்த போர்டில் எழுதி யதை அழிக்காமலேயே போய்விட்டதால், அடுத்த நாள் விஷயம் வெளியே கசிந்து விட்டது என்கி றார்கள்.



இந்த வருடம் நடந்த சம்பவம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''எங்களைப் பொறுத்தவரை, நிஜ வினாத்தாளை எடுத்து, யாரோ மற்றவர்களுக்குப் படித்துக் காட்டியிருக்கிறார்கள். அதைக்கேட்டு, தப்பும் தவறுமாக எழுதியுள்ளனர். வினாக்களுக்கான பதில்களிலும் தவறுகள் இருக்கின்றன.


இதையெல்லாம் தவறு செய்தவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களில் இருந்து அறிய முடிகிறது. திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, நாமக்கல், ஆயக்குடி ஆகிய இடங் களில் உள்ள சில சென்டர்களில் படித்துத் தேர்வு எழுதி யவர்கள் இதுவரை 100% வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். இவை எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதையெல்லாம் ரகசியமாக சர்வே செய்து வருகிறோம்'' என்றனர்.


http://www.thehindu.com/multimedia/dynamic/01072/TH-EXAM_1072396f.jpg

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி களிடம் பேசியபோது, ''பயங்கரமான நெட்வொர்க் அமைத்து வேட்டை நடத்தி இருக்கிறார்கள். இதை நிச்சயம் லோக்கல் போலீஸாரால் டீல் செய்ய முடியாது. முன்னர் நாங்கள் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியபோது பல்வேறு ஆதாரங்களைக் கைப்பற்றினோம்.


மேற்கொண்டு விசார¬ணையைத் தொடர முடியாமல் தடை வாங்கி விட்டனர். அதனால், தமிழக அரசு உடனே தலையிட்டு எங்களுக்கு இருக்கும் தடையை உடைத் தால், திடுக்கிடும் பல விவரங்களைக் கொண்டு வருவோம். இப்போதைய வினாத்தாள் லீக்கின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது என்பதால் வேறு வழியின்றி வேடிக்கை பார்க்கிறோம்'' என்றனர் வருத்தத்துடன்.



இந்தச் சூழலில் கடந்த வருடம் குரூப் 2 தேர்வு எழுதித் தோற்றுப் போன, சென்னையைச் சேர்ந்த  போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன், நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார்.



''கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வுக்காக நான் மெனக்கெட்டுப் படித்து எழுதினேன். அப்போது மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து, 'கஷ்டப்பட்டுப் படிச்சா, வேலை கிடைக்காது. எங்களைக் கவனி. அப்பத்தான் உனக்கு வேலை கிடைக்கும்' என்று என்னிடம் சொன்னார்கள். வினாத்தாள் முன்கூட்டியே வாங்கித் தருவதாகப் பேரம் பேசியவர்கள், மூன்று லட்சம் கேட்டனர். அந்த அளவுக்கு வசதி இல்லை என்பதைவிட, குறுக்குவழியில் போக விரும்பாமல் நோ சொல்லி விட்டேன்.


ஆனால், என்னை அணுகிய அதே நபர், தேர்வில் மிகஅதிக மதிப்பெண்கள் பெற்று அரசுப்பணியில் சேர்ந்துவிட்டார். அவருக்கு வேண்டப்பட்ட பலரும் அதிக மதிப்பெண்கள் எடுத்து அரசுப் பதவிகளைப் பிடித்து விட்டனர். குறுக்கு வழியில் பதவியைப் பிடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கொதித்தார்.



என்ன செய்யப்போகிறது அரசு?


  நன்றி - ஜு வி 



http://i.ytimg.com/vi/utTdVEjTb9E/0.jpg