பெண்: லல லல லல லல
இந்தப்பாட்டைக்கேட்டதும் ரொம்பவே மனம் கவரப்பட்டு கூகுள் சர்ச்ல என்ன படம்?னு தேடிப்பார்த்தேன்.ரொமாண்டிக் டிராமாவா எடுத்துட்டு கடைசில சம்பந்தமே இல்லாம க்ரைம் த்ரில்லரா மாத்தி இருக்காங்க
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு ஓவியர் .தத்ரூபமா வரைபவர் . ஹீரோயின் ஒரு மீடியா ரிப்போர்ட்டர். அவங்க மேகசின்ல வர்ற ஒரு பேட்டிக்காக ஹீரோ கிட்ட டைம் கேட்டு பழகறார், பேசறார். லவ் ப்ரப்போஸ் பண்றார்
கட் பண்ணா ஹீரோ க்கு ஒரு ஃபிளாஸ்பேக் ஒரு பொண்ணு ரொம்ப ஏழ்மையான குடும்பத்துல இருக்கு. அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை . மாடலிங்கா போஸ் கொடுத்தா தேவையான பணம் கிடைக்கும்னு மாடலிங்க்கு வருது . ஹீரோதான் அந்தப்பெண்ணை வரையறார். ஆனாலும் அம்மாவைக்காப்பாத்த முடியல
அந்தப்பொண்ணுக்கு ஒரு குற்ற உணர்ச்சி , அம்மாவையும் காப்பாத்த முடியல , நிர்வாணமா போஸ் வேற கொடுத்துட்டோம். இனி நம்ம வாழ்க்கை என்ன ஆகறது ?னு.. இந்தக்குணம் பிடிச்சோ அல்லது அழகுல மயங்கியோ ஹீரோ அந்தப்பொண்ணுக்கு ப்ரப்போஸ் பண்றார், ஓக்கே சொல்லிடுது ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆகுது
லைஃப் நல்லாப்போய்க்கிட்டு இருக்கு . ஒரு கார் விபத்துல அந்தப்பொண்ணு இறந்துடுது. அதனால ஹீரோ சோகமா ஆகிடறார்
இதுதான் ஹீரோவோட ரெண்டு லவ் ஸ்டோரிஸ்
இப்போ ஊர்ல வரிசையா கொலைகள் நடக்குது. கொலை செய்யப்படும் நபர்கள் எல்லாம் பெண்கள் . அவங்களுக்குள்ளே எந்த தொடர்பும் இல்லை . இந்த சீரியல் கில்லர் யார்?னு போலீஸ் ஒரு பக்கம் தேடுது
நாயகன் ஓவியர் என்பதால் சாட்சிகள் அடையாளம் சொன்னபடி கொலைகாரன் உருவத்தை வரைஞ்சு தர்றார். இது;ல ட்விஸ்ட் என்னான்னான் கொலைகாரனின் லேட்டஸ்ட் டார்கெட் ஹீரோவின் தற்போதைய காதலி
ஹீரோவும் , போலீசும் காதலியைக்காப்பாத்துனாங்களா? சீரியல் கில்லரை உயிரோட பிடிச்சாங்களா? என்பதுதான் க்ளைமாக்ஸ்
ஹீரோவா மோகன் . அந்தக்காலத்துல மோகன் பாடகரா நடிச்சா படம் வெள்ளி விழா என்ற ஒரு செண்ட்டிமெண்ட்டை மதர்லேண்ட் பிக்சர்சின் கோவைத்தம்பி உருவாக்கி வெச்சிருந்தார் ( உதய கீதம் , நான் பாடும் பாடல் , உன்னை நான் சந்தித்தேன்). தைரியமா ஓவியரா நடிச்சதுக்கு ஒரு ஷொட்டு . இவரது டிரஸ்சிங் சென்ஸ் அபாரமா இருக்கும் . தெற்றுப்பல்; சிரிப்[பு இவரது ஸ்பெஷல்
ஹீரோயினா ரேவதி. இவரது துடுக்குத்தனம் , காதல் வயப்படுதல் எல்லாம் ஒக்கே ஆனா ஹேர் ஸ்டைல் இதுல நல்லாலை
இன்னொரு ஹீரோயினா மனைவியா நளினி இவருக்கு நடிக்க அதிக வாய்ப்பு . இவரு யார் படத்தின் மூலம் பயம் காட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட்டா ஆனார் . இதில் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர் . போலீஸ் ஆஃபீசரா நிழல்கள் ரவி ஓக்கே ரகம்
இசை இளையராஜா
, பாடல்களூம் ஹிட் பிஜிஎம்மும் குட் . மொத்தப்பாடல்கள் 5 அதில் 3 பாடல்கள் செம ஹிட்
சபாஷ் டைரக்டர் ( எம் ஆர் பூபதி )
1 ஹீரோவின் இரண்டு காதல் கதைகளையும் ரசமாக படம் ஆக்கியது , சூப்பர் ஹிட் பாடல்களை தந்தது ( தர வைத்தது )
2 கவுண்டமணி யின் செம ஹிட் காமெடி டிராக் ஆன “ அடிச்சேன்னா உயிர் மேலே போய்டும் , டெட் பாடி கீழே விழுந்திடும்” அமைத்த விதம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ரத்த தானம் கொடுப்பது அவரவர் விருப்பம் . அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.. ஆபத்தான டைமில் பிளட் டொனேஷன் பண்ணலை என கொலைகாரன் டார்கெட் வைத்து கொல்வது ஓவர்
2 பொதுவா பொண்டாட்டின்னா புருசன் குடிப்பதை அனுமதிக்க மாட்டா , ஆனா இதில் சம்சாரமே குடிங்க கொஞ்சமா குடிங்க என பார்ட்டியில் அனுமதிப்பது நெருடுது
3 ஒய் விஜயா வீட்டு வேலைக்காரி தன் கள்ளக்காதலன் உடன் ஜாலியாக இருக்கும்போது அங்கே வரும் விஜயா அவளை வெளீயே அனுப்பி விட்டு கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்து ஆஃபர் கொடுப்பது கரும்பு தின்னகூலி எதுக்கு ? என கேட்க வைக்குது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியான ரொமாண்டிக் ஃபிலிம் பார்ப்பவர்கள் இதைப்பார்க்கலாம், யூ ட்யூப்ல கிடைக்குது. செம ஹிட் சாங்க்ஸ் வேற . ரேட்டிங் 2.25 / 5