விஸ்வரூபம் திரைப்படத்தை சன் டி டி ஹெச் சில் பார்ப்பதற்கு சப்ஸ்கிரைப்
செய்திருந்தேன்
விஸ்வரூபம் திரைப்படம் முதலில் டி டி ஹெச் சானலில்
வராது.. தியேட்டருக்குக்தான் முதலில் வரும் என காலையில் செய்தி பார்த்ததும்
சன் டி டி ஹெச் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தேன்..
அவர்களைப்
பாராட்ட வேண்டும் .. அதிகாலை நாலு மணிக்கு கூட அவர்கள் கால் சென்டர் சுறு
சுறுப்பாக இருக்கிறது
அவர்களும் இந்த தகவலை உறுதி செய்தார்கள்..
தியேட்டருக்கு
வருவதற்கு முன்னால் படம் டி டி ஹெச் சில் வருகிறது என்பதை வைத்து தான்
நான் சப்ஸ்கிரைப் செய்தேன்.. இப்போது தியேட்டருக்கு வந்து விட்டுதான்
உங்கள் சானலுக்கு படம் வருகிறது என்று நீங்களும் சொல்கின்றீர்கள்.. ஆகவே
நான் இந்த படம் பார்க்க என சப்ஸ்கிரைப் செய்த காசை என் கணக்கிலே ரீஃபண்ட்
செய்து வரவு வைக்கவும் என்று சொன்னேன்
அது முடியாது.. இதே படம்
பின்னர் எந்த நாளில் டிவி சானலில் வருகிறதோ அன்றைக்கு பார்த்து
கொள்ளுங்கள்.. என்றைக்கு என்பது மெயில் வரும்.. எஸ் எம் எஸ் வரும் .. பணம்
வாபஸ் எனும் பேச்சுக்கு இடமில்லை என்று சன் டி டி ஹெச் கஸ்டமர் கேரில்
தீர்மானமாகச் சொல்கிறார்கள்
அவர்கள் சேனலில் உத்தேசமாக என்றைக்கு
இந்தப் படம் டெலிகாஸ்ட் ஆகும் என்பதும் சொல்லமாட்டார்களாம்
இந்த
தொலைபேசி உரையாடலை பதிவு செய்திருக்கிறேன்
தியேட்டருக்கு ஜனவரி 11
ம் தேதி தான் படம் வரும் உங்கள் வீட்டு டிவியிலே ஜனவரி 10 ம் தேதியே
வரும்.. அந்தப் படத்தின் த்யாரிப்பாளரும் ஹீரோவுமான கமல்ஹாசன் விளம்பரம்
செய்து கொண்டிருந்தார் , அந்த விளம்பரமும் இப்போது நின்று போனது
இப்படி
இந்தப் படத்தை தியேட்டருக்கு வருவதற்கு வீட்டு டிவியில்முன்பே வருகிறது
என்று படத்தின் தயாரிப்பாளர் தந்த விளம்பர் கவர்ச்சியில் பல டி டி ஹெச்
சானல்களில் சந்தாதாரர்கள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில்
சப்ஸ்கிரப்ஷன் செய்திருந்த தொகை,, பல கோடியைத் தாண்டுகிறது என பெருமையாக
ஊடகங்களில் செய்தி வேறு சொல்லியிருந்தார்கள்
ஆனால் இப்போது முதலில்
தியேட்டரில் தான் படம் முதலில் வருகிறது.. டி டி ஹெச் சானலில் பின்னர் தான்
வரும் என்று சொல்லியிருப்பது சரியல்ல
இது மோசடி .. கிரிமினல்
குற்றம் என்றும் சொல்லலாம்
சந்தாதாரர் என்பவர் வாடிக்கையாளாராகவும்
ஆகிறார். அவரிடம் குறிப்பிட்ட சேவைக்கென காசு வாங்கிக் கொண்டு அந்த
சேவையினை குறித்த நேரத்தில், குறித்த தரத்திலே தர இயலாமல் போவது deficiency
of Service
இப்படி சந்தாவாக வசூலான கோடிக் கணக்கான பணத்தின் வட்டி
யாருக்குப் போய் சேர்கிறது.. இப்படியான முடிவு மாற்றம் தற்செயலானதா அல்லது
பணத்தினை இப்படி வசூல் செய்வதற்கு என திட்டமிட்டு நடத்தப்பட நடவடிக்கையா
விளம்பரம்
செய்தபடி முதலில் டி டி ஹெச்சில் வெளியிடாமல் தியேட்டரில் வெளியிட முடிவு
செய்திருப்பதற்கு, விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்களின் நிர்பந்தம் காரணம்
என்பதால் இந்த action மோசடி , சேவைக் குறைவு எனும் தன்மையை இழக்காது என்றே
நினைக்கிறேன்.
இப்படியான செயலில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் (
திரைப்படத்தின் தயாரிப்பாளர், டி டி ஹெச் சானல்கள்) அனைவரும் மோசடி ,
சேவைக் குறைவு எனும் குற்றம் செய்தவர்களாக கருதப்பட வேண்டும்.
இதே
கமல்ஹாசன் நடித்த திரைப்படமான மஹாநதியில் ஒரு வசனத்தில் OPM (other people
money ) வைத்து பிசினஸ் பண்ண வேண்டும் என்று ஒரு படத்தில் வரும் மோசடி
ஆசாமி கேரக்டர் சொல்லுவார். அது தான் நினைவுக்கு வருகிறது.
இந்தப்
படம் தியேட்டரில் வருவதற்கு முன்பு டி டி ஹெச்சில் வரவில்லை எனில் அப்படி
வரும் என்று விளம்பரம் செய்து , தனி சானலுக்கு சந்தா கட்டுங்கள் என கேட்டு
திரைப்பட ரசிகர்களிடம் சந்தா வசூல் செய்ய காரணமான படத்தின் தயாரிப்பாளர்
மீதும், சந்தா வசூல் செய்த டி வி சானலக்ள் மீதும் வழக்கு தொடருவேன்
இப்படி
பல கோடி ரூபாய் வசூல் செய்து நடந்த நடவடிக்கையினை புலனாய்வு செய்யவும்
வழக்கிலே கோரிக்கை வைக்க உள்ளேன்
நன்றி -