Showing posts with label டாப். Show all posts
Showing posts with label டாப். Show all posts

Tuesday, January 01, 2013

2012 - டாப் 10 அழகிகள்

உலக நாயகிகள்!

ஆ. அலெக்ஸ் பாண்டியன்
ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜோலிகளை ஓரங்கட்டிவிட்டது அழகிகள் படை. உலகின் டாப் செக்ஸி லிஸ்ட், பியூட்டி லிஸ்ட், காஸ்ட்லி லிஸ்ட் என அனைத்துப் பட்டியல்களிலும் இடம் பெற்றிருக்கும் டாப் 10 பட்டாம்பூச்சிகளின் இனிய இன்ட்ரோ இங்கே... 


செலினா கோம்ஸ்

'ஸ்பை கிட்ஸ்’ படம் மூலம் சின்னதாக அறிமுகமாகி, பரபர வளர்ச்சி அடைந்து 20 வயதுக்குள்ளாகவே 'வுமன் ஆஃப் தி இயர்’ பட்டம் வென்ற ஏஞ்சல். ஆரம்பத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி வந்தவருக்கு 'விசார்ட்ஸ் ஆஃப் வேவர்லி பிளேஸ்’ படம் பெரிய பிரேக்.  இடையில் பாப் பாடகர் ஜஸ்டின் பைபருடனான இரண்டு வருட டேட்டிங், பிரிவு, மீண்டும் காதல் எனக் காதல் பஞ்சாயத்துக்கும் பஞ்சம் இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் இயக்கத்தில் ஈடுபாடு காட்டும் செலினா, 'ப்யூர் லவ் வெயிட்ஸ்’ என்ற எழுத்துக்கள் பொறித்த மோதிரத்தை அணிந்திருக்கிறார். யார் எங்கே காத்திருக்கிறார்களோ!
வெனஸா ஹட்ஜென்ஸ்

ட்டு வயதிலேயே மேக்கப் போட்டு போஸ் கொடுக்க ஆரம்பித்த வெனஸா, 'பலானா பலான’ விஷயங்களில் பிரபலம். படுக்கையறையில் அவரை அவரே எடுத்துக்கொண்ட செம செக்ஸி படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்த, அதுவரை அவர் நடிப்பதற்கென கமிட் ஆகியிருந்த படங்களில் இருந்து கழட்டிவிடப்படும் நிலை உண்டானது. ''அது என் அனுமதி இல்லாமல் வெளியான படங்கள். எக்ஸ்கியூஸ்மீ!'' என்று சமாளித்தார் ஐஸ்க்ரீம் அழகி. படங்களை லீக் செய்தது யார் என்பதை அறிய எஃப்.பி.ஐ. ஆட்கள் விசாரிக்க வந்ததெல்லாம் டாப்பிக்கல் தகராறு. ஹாலிவுட்டின் பிரபலப் பத்திரிகைகளின் அட்டைப் படங்களை அலங்கரித்திருக்கும் வெனஸா, 22 வயதுக்குள் வாழ்க்கையின் எல்லா இன்ப துன்பங்களையும் அனுபவித்துவிட்டதாக அலுத்துக்கொள்கிறார். ''வாழ்க்கை போரடிக்கிறது!'' என்று அடிக்கடி சொல்பவர், அப்படி உணரும் தருணங்களில் தனது காமாசோமா வீடியோக்களை இணையத்தில் அப்லோடுவார். அதை முழுக்கப் பார்த்து ரசித்துவிட்டு, மறக்காமல் திட்டிக் குவித்துவிடுவார்கள் இணைய தலைமுறையினர்!
விக்டோரியா ஜஸ்டிஸ்

கிறங்கடிக்கும் அழகையும் தாண்டி உருகவைக்கும் கேரக்டர், விக்டோரியா ஜஸ்டிஸ். நடிப்பு மீது இவருக்கு இருந்த தீராக் காதலால், இவரது குடும்பமே லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தது. குடும்பத்தின் நம்பிக்கையைப் பொய்க்காமல் நடிக்கத் துவங்கி, இப்போது வருடம் மும்மாரி விருது மழை பொழிகிறது. பன்னிரண்டாவது வயதிலேயே 'சிறந்த நடிகை’ விருது தட்டியிருக்கிறார். ''என் 17 வயதில் எனக்கு இருந்த சுதந்திரமான சூழல் இப்போது பல பெண்களுக்குக் கிடைப்பது இல்லை. அதை அவர்களுக்கு உருவாக்குவதற்காகப் பாடுபடுவேன்!'' என்று சொல்லி பெண்கள் முன்னேற்றத்துக்காக அமெரிக்கா முழுக்கச் சுற்றுகிறார். ''உங்கள் கனவைச் சிதைக்க யாருக்கும் அனுமதி அளிக்காதீர்கள்!'' - இதுதான் விக்டோரியாவின் வேதம்.
எம்மா ஸ்டோன்

ச்சைக் கண் பளிங்குப் பொண்ணு. 'தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’ படத்தில் நடித்ததன் மூலம் அதீத லைம்லைட் பெற்றவர். சினிமாவுக்கு வரவில்லை என்றால், பத்திரிகையாளர் ஆகியிருப்பேன் என்று சொல்பவர், கடந்த ஒரு வருடமாக 'ஸ்பைடர் மேன்’ பட ஹீரோவுடன் கோயிங் ஸ்டெடி. கூந்தலை பிரவுன், சிவப்பு என விதவிதமாக நிறம் மாற்றிக்கொள்வது இவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு.
ஜெனிஃபர் லாரன்ஸ்

'மிகவும் திறமையான இளம் நடிகை’ என்று ஜெனிஃபரை அமெரிக்கா கொண்டாடுகிறது. 'எக்ஸ் மேன்’, 'தி ஹங்கர் கேம்ஸ்’ படங்களில் அதிரடி செய்ததன் மூலம், 'எப்போதைக்குமான ஆக்ஷன் ஹீரோயின்’ என ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் பாராட்டப் பெற்றிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸுடன் தேவதைக்குக் காதல். 'உலகிலேயே என்னை அதிகம் சந்தோஷப்படுத்தக்கூடிய மனிதர் நிக்கோலஸ்தான்!’ என 'உருகுதே மருகுதே’கிறார்!
க்ரிஸ்டன் ஸ்டூவர்ட்

க்ரிஸ்டன் ஸ்டூவர்ட் என்பதைவிட 'பெல்லா’ என்றால் உலகமே பாசப் பார்வை பார்க்கும். டிராகுலா கதையான ட்வைலைட் படங்கள் மூலமாக உலகப் பிரபலம் அடைந்த ஹோம்லி ஏஞ்சல். தனது 19-வது வயதில்தான் ஹைஸ்கூல் படிப்பையே முடித்தார். ட்வைலட் பட நாயகன் ராபர்ட்டுடன் இவருக்கு நிஜத்திலும் வளர்ந்த காதல் உலகம் அதிகம் விவாதிக்கும் அந்தஸ்து பெற்ற செய்தி. இப்போது க்ரிஸ்டன் பிற ஆண்களுடனும் கெமிஸ்ட்ரி பாராட்டுவதால், இருவருக்கும் இடையே லடாய்... கடாய்!
மேகன் ஃபாக்ஸ்

ந்து வயதில் மேடை நாடகத்தில் தொடங்கிய கலைச் சேவை, பதின்பருவ வயதுகளில் பல மில்லியன்கள் சம்பளம் வாங்கும் அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஜெனிஃபர்ஸ் பாடி படங்களில் நடித்ததன் மூலம் சர்வதேசக் கவனம் ஈர்த்தவர். உடல் முழுக்க விதவிதமாக டாட்டூ குத்திக்கொள்பவர், காதலன் பிரையன் க்ரீனின் பெயரை இடுப்பில் பதித்திருக்கிறார். வால் மார்ட் கடை ஒன்றில் ஷாப்பிங் செய்யும்போது சில மேக்கப் அயிட்டங்களைத் திருடி, மாட்டிக்கொண்டு முழித்தது மேகனின் சாதனைகளுள் ஒன்று!
டக்கோடா ஃபேன்னிங்

'தெய்வத் திருமகள்’ படத்தின் ஒரிஜினல் 'ஐ யாம் சாம்’ படத்தில் குட்டி நிலாவாக நடித்த பியூட்டி. ''இயக்குநர் ஆக வேண்டும் என்பதே லட்சியம்'' என்று சொல்லும் டக்கோடா, இப்போதும் செல்லும் இடங்களில் எல்லாம் பொம்மைகளை வாங்கிக் குவிக்கிறார். 'இவ்வளவு கலாட்டா செய்கிறீர்கள். ஆனால், 'ஐ யாம் சாம்’ படத்தில் எப்படி அவ்வளவு சீரியஸாக நடித்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, 'நான் வளர்க்கும் தங்க மீன் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்வேன். கண்ணீர் பொலபொலவென வந்துவிடும்!'' என்றார் சமத்தாக!
அன்னா சோபியா ராப்  

டிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, 'சினிமா... சினிமா’ என அழுது அடம்பிடித்து நடிக்க வந்தாலும், 42 ஆடிஷன்களுக்குப் பிறகும் சினிமா கதவு திறக்கவே இல்லை அன்னாவுக்கு. இப்போது அன்னாவின் கால்ஷீட் 2015 வரை ஃபுல். 'சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி’ இவரது லேட்டஸ்ட் ஹிட். இவர் அணியும் எந்த ஆடையையும் சிலாகித்து வர்ணித்துப் போற்றிப் பாராட்ட பெரும் கும்பல் உண்டு இணையத்தில். குழந்தைத்தனம் மாறாத முகத்தாலேயே பலரைக் கவர்ந்த அன்னாவை டூ-பீஸ் ஆடையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. அதனாலேயே இப்போதெல்லாம் டவுசர் சட்டை தாண்டி, கவர்ச்சி எல்லை தாண்டுவதே இல்லை.
எல்லி ஃபேன்னிங்

'ஐ யாம் சாம்’ புகழ் டக்கோடா ஃபேன்னிங்கின் அன்புத் தங்கை எல்லி. ஹாலிவுட்டின் மிக மிகக் குட்டிப் பாப்பா ஹீரோயின். ஹாலிவுட் சினிமா வரலாற்றில் முதல் முறையாக மூன்றரை வயதிலேயே பிரீமியர் ஷோவில் கலந்துகொண்ட ஹீரோயினான இவருக்கு இப்போது வயது 14. தனது ஏழாவது பிறந்த நாளுக்கெல்லாம் தனது மொத்தக்  குடும்பத்தையும் தனது செலவில் ஆஸ்திரேலியா டூர் அழைத்துச் சென்றவர். சினிமாவில் ஒன்றாகப் பயணம் துவக்கி இப்போது வெவ்வேறு பாதையில் அக்காவும் தங்கையும் பிரிந்துவிட்டார்கள். ஆனாலும், இப்போதும் எனக்குப் பிடித்த நடிகை என எல்லி சொல்வது அவரது அக்காவைத்தான்!



நன்றி - விக்டன் 

Sunday, December 30, 2012

2012 - டாப் 25 கலக்கல் காமெடிகள்

2012 டாப் 25 பரபரா

விகடன் டீம்
ஓவியங்கள் : கண்ணா

இருட்டுக்கடை அல்வா!

'1997-ல் மின்சாரக் கனவு... 2012-ல் மின்சாரமே கனவு’ என்று பப்ளிக்கை டெரர் கவிதை வாசிக்கவைத்தது பவர்கட். 'நான் ஆட்சிக்கு வந்தால், மூன்றே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பேன்’ என்று முழங்கிய ஜெயலலிதா 'பவர்’ வந்ததும், பவர்கட்டை மறந்துபோனார். 14 மணி நேரம் 16... 18 என எகிறிக்கொண்டே போக, அத்தனை பேரும் 'பவர் ஸ்டார்’களாகி கிறுக்குப் பிடித்துத் திரிந்தார்கள். ''மின்வெட்டுப் பிரச்னை இவ்வளவு சீரியஸாவா இருக்கு? யாருமே என்ட்ட சொல்லவே இல்ல...'' என்ற ஜெ-வின் ரியாக்ஷன் அதிபயங்கர ஷாக். ஆற்காட்டாரிடம் மன்னிப்புக் கேட்டு ஆங்காங்கே போஸ்டர் ஒட்டிய தமிழன், பவர்கட் ஜோக்குகள் படித்துச் சிரித்தது அவலச் சுவை. '25 மணி நேர மின்தடை’ என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தில் யாரோ ஆஃப் அடித்துவிட்டு அறிவிக்க, 'அடிடா அவனை’ என்று ஈ.பி. அலுவலகங்களைத் தாக்கி, மறியலில் அமர்ந்தார்கள் சிறு, குறு தொழிலாளர்கள். சீரியல்களுக்கு டி.ஆர்.பி. குறைந்ததில் இருந்து ஏகப்பட்ட தொழில் நசிவு வரை பிரச்னை எகிறி அடிக்க, 'மழை பெய்யும்போது மின் கம்பங்களுக்கு அருகே மக்கள் செல்ல வேண்டாம்!’ என்று மின் வாரியம் இருட்டுக்கடை அல்வா கிண்டியதில், கிறுக்குப் பிடித்தது தமிழகம்!



'முன்னாள்’ அஞ்சா நெஞ்சன்!



ஞ்சா நெஞ்சன்தான் இந்த வருடத்தின் பஞ்ச்சர் நெஞ்சன். 'இடப் பற்றாக்குறை’ என அழகிரியின் மதுரை எம்.பி. அலுவலகத்தை நெம்பி எடுத்தார்கள். 'நானும் வருவேன்... ஆட்டையக் கலைப்பேன்’ என்று ஸ்டாலின் நெல்லை வரை வந்து தொல்லை கொடுக்க, 'இளைஞர் அணிப் பதவி நியமனங்களில் என்னுடைய சிபாரிசுகளைக் கட்சி மேலிடம் ஏற்கவில்லை’ என்று கோனார் கடையில் இருந்து குரூப் மெசேஜ்கள் அனுப்பினார் அழகிரி. 'மலையைக் காணோம்!’ என்று மதுரை அலற, 'மகனைக் காணோம்!’ என்று அலறினார் அப்பா. பிரஸ்ஸைப் பார்த்தாலே பிரஷர் எகிறுபவர், 'துரையின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணைமுடியும் வரை அவரைக் கைதுசெய்யக் கூடாது!’ என 'டூ மினிட்ஸ் நூடுல்ஸ் பேட்டிகள்’ தட்டினார். துரையைத் தேடிபோலீஸ் நுரை கக்க, அழகிரிக்கு கருணாநிதி தினமும் 108 மிஸ்டு கால்கள் கொடுத்தார். போலீஸ், அமெரிக்க மருமகனுக்குச் சம்மன் அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததில், ஆண்டர்சன் பந்துக்குப் பம்மும் சச்சின் மாதிரி ஆனார் கிரிகிரி. உள் கட்சிக் கொசுக்கடியில் சிக்கியது, பிரதமர் கொடுத்த விருந்துக்குப் போகாமல் அடடே 'டயட்’டில் இருந்தது, ஒப்பணக்கார வீதியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸ் போனது... என ஏகப்பட்ட பல்புகளுக்கு நடுவே, மகனுக்கு முன் ஜாமீன் கிடைத்தது மட்டுமே அண்ணனுக்கு இந்த வருட ஆறுதல்!



கொல வெறி கய்ஸ்!



ந்த வருடத்தின் 'கொல வெறி’ கிசுகிசு. '3’ என டைட்டில் வைத்ததில் இருந்தே டைட்டடித்தது பிரச்னை. மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த தனுஷ§க்கும் ஸ்ருதிக்கும் பத்திக்கிச்சு எனக் கலரடித்தன கவர் ஸ்டோரிகள். 'தனுஷ§ம் ஸ்ருதியும் பார்க்ல இருந்தாங்களாம்... ஐஸ்வர்யா காரை பார்க் பண்ணும்போது பார்த்துட்டாங்களாம்’ என சினிமா ரிப்போர்ட்டர்கள் பரபரப்பானார்கள். 'வலைபாயுதே’ குரூப் நெட்டில் கொட்டடித்தனர். ''தனுஷ§டன் எனக்குக் காதல் என்று வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என்று சூடானார் ஸ்ருதி. இந்த மேட்டர்களால் '3’ படத்துக்குச் செலவில்லாமல் செம பப்ளி குட்டி. ''ஒரு இயக்குநரா அந்தக் காட்சி சரியா வந்திருந்தாலும், ஒரு மனைவியா அவங்க நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா கோபப்பட்டது உண்மைதான். மருமகளுக்கும் மகனுக்கும் அப்பப்போ சின்னச் சின்ன சண்டை வரும். அதுக்காக அவங்க பிரிஞ்சிட்டாங்கன்னு சொல்றதுலாம் டூ மச்!'' என்று 'பஞ்சாயத்து’ கஸ்தூரிராஜா வேறு பாலிடாயில் தெளிக்க, 'ஏய்ய்ய் கொமாரு... படம் ஃப்ளாப்புராஆஆஆ...’ என ரிசல்ட் வர, கொல வெறி தணிந்தது!



'ஃபுல்லா குடுத்துரு!’ 



ந்த வருடமும் டாஸ்மாக்தான் மாஸ் டைம்பாஸ். 'புத்தாண்டுக்கு 142 கோடி ரூபாய் மது விற்பனை... இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 கோடி ரூபாய் அதிகம். பொங்கலுக்கு 276 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 35 கோடி ரூபாய் அதிகம்!’ என்று வருடம் முழுக்க 'வெற்றிக் கொடி கட்டு... லட்சியம் எட்டும் வரை எட்டு’ என அறிவித்துக்கொண்டே இருந்தது டாஸ்மாக் நிர்வாகம். 'பத்தலையே...’ என யோசித்த அரசு, 'அடுத்தது எலைட் பார்’ என்று அறிவிக்க, 'ட்ரீட் எங்க... ட்ரீட் எங்க...’ எனக் குதூகலம் ஆனார்கள் பிரேம்ஜிக்கள். சரக்கில் தண்ணீர் ஊற்றிக் கலப்பட சரக்கு விற்பதைத் தட்டிக்கேட்க விரும்பிய சில போராளிக் குடிமகன்கள் 'கலப்பட சரக்குக்குப் பதில் கள்ள நோட்டு’ என்று இருட்டில் ரவுண்டு கட்ட, அலறியடித்து டாஸ்மாக்கில் கள்ள நோட்டைக் கண்டுபிடிக்க தனிப் படைகளை நியமித்தார்கள். ராமதாஸில் இருந்து வைகோ வரை யார் என்ன சொன்னாலும் 'போங்க பாஸு...’ என லெஃப்ட் அடிக்கும் குடிமகன்களுக்கு ஓர் இடி செய்தி... நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் ஓட்டை அள்ள, 'மதுவிலக்கு’ அறிவிப்பு வரலாம் எனக் கிசுகிசுப்பு வர, 'அப்போ ஃபுல்லாக் குடுத்துரு...’ என எகிறியது விற்பனை!


மிஸ்டர் அந்தர்பல்டி!



ந்த வருடத்தின் 'சினேஏஏஏக் பாபு’, மத்திய அமைச்சர் நாராயணசாமி. ''15 நாள்ல அணு உலை செயல்படும்...'' என இவர் முதல் தடவை சொன்னபோது, நிஜமாகவே டெரராக இருந்தது. அப்புறம், 'அது போன மாசம்... இது இந்த மாசம்’ என அதையே இவர் பேச, 'ஓ... இவரு அவருல்ல..?’ எனக் காமெடிப் பீஸானார். 'கொம்பன் வர்றான்... கொம்பன் வர்றான்...’ என ஆன் தி வேயில் இவர் தட்டிய ஏர்போர்ட் பேட்டிகள் அத்தனையும் காமெடி க்ளிப்பிங்ஸ். ''விமானமே வந்து மோதினாலும் அணு உலை நொறுங்காது!'' என்று பேசிய சூட்டோடு, ''அணு மின் நிலையத்தில் விபத்துகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க மத்திய அரசு 1,500 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது'' என்று திகீர் திரி கொளுத்தினார். நாடாளு மன்றத்தில் இவர் வாதிட்ட சட்ட மசோதாவை எம்.பி. ஒருவர் பிடுங்கிக்கொண்டு ஓடியது குபீர் திகீர்! ''பேச்சைக் குறைத்துக்கொள்ளுங்கள்'' என்று கோர்ட்டே காட்டம் காட்டுகிற அளவுக்கு 'கீரிப்பிள்ளை’ காமெடி காட்டினார்!


அம்மம்மா..! 



டிதம் தட்டுவதில் கருணாநிதி வைத்திருக்கும் கின்னஸ் ரெக்கார்டைக் கைப்பற்றக் கிளம்பினார் ஜெ. நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும், பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை கட்டுவதைத் தடுக்க வேண்டும், முல்லைப் பெரியாறு பிரச்னை, சிங்கள வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி கொடுப்பதை எதிர்த்து என அடுத்தடுத்து டெல்லிக்கு லெட்டர்கள் தட்டினார். வக்கீல்கள் ஷிஃப்ட் போட்டு வேலை செய்கிற அளவுக்குச் சகட்டுமேனிக்கு சகலர் மீதும் வழக்கு மழை பொழிந்தார். ஒன்றரை வருடத்தில் ஐந்து முறை அமைச்சரவையைக் கலைத்துப் போட்டு கபடி விளையாடினார். 'ஜெ-வின் மனசாட்சி’ என்று வர்ணிக்கப்பட்ட செங்கோட்டையன் முகத்திலேயே புரட்சித் தலைவி பூரான் விட, பன்னீர் பயங்கரமாகப் பம்மினார். உச்சகட்டமாக தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக, சபாநாயகரையே நீக்கி அதிரடித்தார் ஜெ. அத்தனை அமைச்சர் களும் 'தாயில்லாமல் நானில்லை’ என்ற ரிங்டோன்களுடன் சாம்பார் வாளி தூக்கித் திரிகிறார்கள். ''அண்ணா வளைவை இடிப்பதுகுறித்து யாரும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை'' என்று அப்புராணி அறிக்கைவிட்டவர், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மகா மெகா இரட்டை இலையை வைத்தபிறகு, 'அது குதிரையின் சிறகுகள்’ என்று பயாலஜியையே மாற்றி எழுதினார்!


திராணி மேளா!



ந்த ஆண்டும் பொளந்தது இடைத்தேர்தல் காமெடிகள். ''சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராணி இருந்தால் எங்களை ஜெயித்துப் பாருங்கள்'' என்று சட்டமன்றத்தில் சவால்விட்டார் ஜெ. மொத்த அமைச்சர்களும் சங்கரன்கோவிலில் அங்கப்பிரதட்சணம் உருண்டார்கள். சாயங்காலம் தூங்கி எழுந்தவர் மாதிரியே தேர்தலை எதிர்கொண்டார் கருணாநிதி. பிரசாரத்தில் பேசிய விஜயகாந்த், ''நான் மக்கள் பணிகளைப் பார்ப்பதற்காக சினிமாவில்கூட நடிப்பது இல்லை என்பது தெரியுமா?'' என்று கமா போட்டவர், ''எனக்குப் பதிலாக என் மகனை நடிக்க அனுப்புகிறேன்''! என ஃபுல்ஸ்டாப் வைக்க... அரண்டுபோன தொகுதி மக்கள், அ.தி.மு.க-வுக்கு அமோக ஆதரவளித்து தே.மு.தி.க. டெபாசிட்டைப் பறித்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. மரணம் அடைய, புதுக்கோட்டையில் இடைத்தேர்தல். தா.பாண்டியனைக் கேட்டிலேயே வெயிட்டிங் போட்டு, அ.தி.மு.க. தன் வேட்பாளரை அறிவித்தது அதிர்ச்சிக் காமெடி. ''நாங்க ஆட்டத்துக்கு வரல...'' என கலைஞர் பேக்கடிக்க, ''புறநானூற்றிலே... புறமுதுகிலே...'' என வைகோவும் எஸ்கேப். ''ஏய்ய்ய்... தப்பு... நான் உப்பு வித்தே தீருவேன். ஆங்...'' என அடைமழையில் கேப்டன் களம் இறங்கினார். அமைச்சர்களின் அட்ராஸிட்டி எகிற, ''பப்ளிக்... பப்ளிக்...'' என ஜெயாவே சிக்னல் காட்டினார். அ.தி.மு.க. ஜெயிக்க, தே.மு.தி.க-வுக்கு டெபாசிட் கிடைத்தது ஆறுதல் காமெடி!


கரகர ராஜா!



பாரதிராஜா இந்த வருஷத்தின் கரகர ராஜா. பெப்ஸி ஊதியப் பிரச்னையில், ''என் படத்தை எப்படி எடுக்குறதுனு எனக்குத் தெரியும்!'' என்று தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக ஆணியடித்தார். ''நீங்க வரலைன்னா... ஐ பெர்சனலி டூ தட் அன்னக்கொடி... ஆன் மை ஓன் பவர்'' எனத் தன்னிச்சையாக தேனிப் பக்கம் போய் ஆடு மேய்த்தார். ஒரு பக்கம் ஆடுகள் மிரள, இன்னொரு பக்கம் பெப்ஸி தொழிலாளிகள் ஷூட்டிங்குக்கு வராமல் போக, கைகளால் ஆங்கிள் பிடித்துத் தேவுடு காத்தார். தா.பாண்டியனின் பிறந்த நாள் விழா மேடையில் வைகோவை வைத்துக்கொண்டு, ''திராவிடம் பேசிப் பேசி தமிழ்நாட்டையே அழிச்சிட்டாங்க... ஈழத்தையும் அழிச்சிட்டாங்க...'' என பாரதிராஜா கிழக்கே போகும் கிறுகிறு ரயில் ஓட்ட, ''வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்'' என்று பாரதிராஜாவுக்கு பவுன்சர் வீசினார் வைகோ. இது போக 'அ கொவும் கொ வீயும்’ படத்துக்கு 'அவன் நடிகன்யா’ என்று முதலில் பார்த்திபனை புக் பண்ணினார். சொல்லாமல் கொள்ளாமல் அவரைத் தூக்கிவிட்டு, 'அவன் என் தம்பிய்யா’ என்று அமீருக்குத் தாடியெடுத்தார். அப்புறம் அவரையும் நீக்கி, 'அவன் என் மகன்யா’ என்று கடைசியில் மனோஜுக்கு மேக்கப் போட, 'ஆக்ச்சுவலா அந்தக் கட்டுவிரியனே நீங்கதான்...’ எனப் புலம்பியது பாதிக்கப்பட்ட கும்பல்!


மூன்று கில்லாடிகள்!

ந்த வருடத்தின் செம காமெடி சேஸிங்! திடீரென அ.தி.மு.க-வை விட்டு சசிகலா நீக்கப்பட்டதாக அம்மா அறிவிக்க, 'உய்ய்ய்... உய்ய்ய்... உய்ய்ய்...’ என நாலு ஷோவுக்கு ரெடியானது தமிழகம். முதல் ஷோவாக, ராவணனுக்கு லாடம் கட்டியது போலீஸ். 'போடு தில்லாலே ஆடு தில்லாலே’ என ஜாலியானார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அடுத்தடுத்து வழக்குகள் மண்ட, 'சிக்குனான்யா சீஃப்’ என ர.ர-க்கள் ராவாக அடித்தார்கள். அடுத்து பெசன்ட் நகர் பெரியவர் நடராஜனை, சென்ட் அடிப்பதற்கு முன் தூக்கியது போலீஸ். நில அபகரிப்புப் புகாரில் அடுத்த குத்து விழுந்தது திவாகரனுக்கு. போலீஸ் விரட்ட, காரை எடுத்துக்கொண்டு தனியே திவா ரிஷிகேஷ் வரை போக, 'தப்பிக்கிறாராமாம்’ எனப் பொளந்தன காமெடி ஸ்கூப்புகள்.  அம்மா 'பேக்அப்’ சொல்ல, சசிகலா மீண்டும் தோட்டத்துக்குள் வர... கதம்... சுபம்!



''நான் கடுப்பு எம்.ஜி.ஆர்... ஆங்!''



'ரூபம்... ரூபம்... ரூபம்...’ என விஜயகாந்த் விஸ்வரூபம் காட்டியதுதான் இந்த வருடத்தின் சீரியஸ் காமெடி.
'முல்லைப் பெரியாறு, பாலாறு தடுப்பணை என தமிழகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்க்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக’ விஜயகாந்த் அறிவிக்க, 'தலைவர் தல-தளபதி சலூன் நடத்தப்போயிருவாரோ?’ என ஜெர்க் ஆனார்கள் தொண்டர்கள். ''இனி சுட்டுப்போட்டாலும் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்'' என்று காலையில் கண் சிவந்தவர், ''தேவைப்பட்டால், தி.மு.க-வோடு கூட்டணிவைப்பேன்!'' என்று சாயங்காலமே சைடு வாங்கினார். சட்டசபையில் திடுதிப்பென்று ஆளும் கட்சி ஆட்களைப் பார்த்து கேப்டன் நாக்கைத் துருத்தி 10 நாள் சஸ்பெண்ட் ஆக, நெட்டில் கேப்டன் காமெடிகள் ஹிட்ஸ் அள்ளியது. தே.மு.தி.கழக எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் அடுத்தடுத்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க, கேப்டன் ஷிப்பில் விழுந்தது கெக்கேபிக்கே ஓட்டை. ''துரோகிங்க போனாப் போறாங்க... கோழிங்க என்ன அம்மான்னா கத்துது... கொக்கொக்கொக்னுதான கத்துது...'' என விஜி சளைக்காமல் பவுடர் அடிக்க, பிரேமலதாவும் பண்ருட்டியாரும் ஃபுல் க்ளாப்ஸிலேயே இருந்தார்கள். திடீரென்று விஜயகாந்தே ஜெ-வைப் பார்க்க நேரம் கேட்டுக் கடிதம் கொடுக்க, 'கலாய்ச்சுட்டாராமாம்!’ என ஜாலியானார்கள் தமிழர்கள். உச்சகட்டமாக ஏர்போர்ட்டில், 'நீயா எனக்குச் சம்பளம் கொடுக்குற?’ என்று நிருபரின் கண்ணைக் குத்த, 'விஜயகாந்துக்குச் சம்பளம் கொடுக்கும் போராட்டம்’ என பத்திரிகையாளர்கள் கூட... ஒரே காமெடி சடுகுடு!



ஆக்டரா... டாக்டரா? 




ராமதாஸ்தான் இந்த வருடத்தின் சூப்பர் டிங்கர். டாஸ்மாக்குக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தைத் தலைவர் அறிவிக்க, ட்ரீட் வைத்து ஆர்ப்பரித்தார்கள் தொண்டர் கள். ''இனிமே திராவிடக் கட்சிகளோட கூட்டணியே கிடையாது. கோ.க.மணி மேல சத்தியம்...'' எனப் பேட்டிகள் தட்ட, ''நாம் ரத்தம் கக்கப்போறது கன்ஃபர்ம்...'' என கிலியானார் கோ.க. ''சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் ஓய்வு  பெறுவதால் ஏற்படும் காலி இடங்களில் வன்னியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நியமிக்க வேண்டும்'' என்று ஜாதிமல்லி கட்டியவர், அடுத்தடுத்த அழும்புகளில் இறங்கினார். மகாபலிபுரத்தில், ''எவன் கலப்புத் திருமணம் பண்ணாலும் வெட்டுவேன்...'' என்கிறரீதியில் பா.ம.க-வின் 'பொன்னம்பலம்’ காடுவெட்டி குரு பேச... ''வாரே வா... பகுத் அச்சா'' எனத் தொடை தட்டினார் டாக்டர். தர்மபுரியில் ஒரு காதல் ஜோடிக்காக ஊரே எரிக்கப்பட்டது. ''நான் சாதி வெறியன்!'', ''கலப்புத் திருமணங்களை ஆதரிக்கக் கூடாது!'' என்று அய்யா போட்ட ஒவ்வொன்றும் சமூக ஒற்றுமைக்கான வேட்டுகள். ''விடுதலைச் சிறுத்தைகள் ஒரு ரௌடிக் கட்சி'' என அறிக்கைவிட்டு, திருமாவுக்கும் தீப்பொறி திருமுகம் ஆனார். ''திராவிடக் கட்சிகளை அழிக்கவே நான் பிறந்துள்ளேன். இனி, நான் எடுக்கப்போவது புதிய அவதாரம்!'' என்று அய்யா பஞ்ச் அடிக்க, ''இவர் டாக்டர் தாத்தாவா... ஆக்டர் தாத்தாவா..?'' என இமான் அண்ணாச்சி வரைக்கும் காமெடி எகிறியது!



அரியர் தோழர்!

கூடங்குளம் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, ''அணு உலை திறக்க வேண்டும்'' என்று தா.பா. சொம்படிக்க, ''போப்பா'' எனப் பொங்கினார்கள் போராளிகள். ''போராடினால் மட்டும் மின்சாரம் வந்துவிடுமா? போராட்டத்தால் என்ன லாபம்?' என்று புதுப் பித்தாந்தம் வாசித்தவர், ''சிறுவாணியில் புது அணையைக் கட்டும் கேரளாவைக் கண்டித்தும், ஐரோப்பாவுக்கு 56 ஆயிரம் கோடி நிதி கொடுக்கப்போவதாகச் சொன்ன பிரதமர் மற்றும் நிதி அமைச்சரைக் கண்டித்தும் ஜனாதிபதி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது!'' என்று ஒரு சைஸாகக் குழப்பி அடித்துக் குழம்பு ஊற்றினார். ஓசூரில் பெரியார் தி.க-வின் மாவட்ட அமைப்பாளர் பழனிசாமி கொலை வழக்கில், தன் கட்சி தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கைதுசெய்யப்பட, ''அய்யய்யோ... ராம்ஸ் ரொம்ப நல்லவருங்க'' என தா.பா. சர்ட்டிஃபிகேட் கொடுத்தது க்ரைம் காமெடி. அப்படியே 'ஸ்டார்ட் மீஜிக்’ என இந்திய கம்யூனிஸ்ட் வரலாற்றில் முதல்முறையாகத் தனது 80-வது பிறந்த நாளை பிளிறலாகக் கொண்டாடினார். ஜெயலலிதா வீட்டுக்கே போய் வாழ்த்த, 'அங்க நான் கால்ல்லி...’ எனப் பரவசமாகிப் பம்மினார். கசாப் தூக்கிலிடப்பட்டபோது, ''ஆமாம், கசாப் ரகசியமாகத்தானே இந்தியா வந்தான். ரகசியமாகத் தூக்கிலிட்டதில் என்ன தவறு?'' என்று லாஜிக் சொல்ல, ஒபாமாவுக்கே கை கால் நடுங்கியது. அரியர் வைத்து அவமானப்படுத்தினாலும் 'அம்மாவே சரணம்’ என்று வருடம் முழுக்க போயஸிலேயே சரணடைந்துகிடந்தார்!



மண்டபம் நிரப்புப் போராட்டம்!



''பாத்துக்க ஜெயிலுக்குப் போறோம்... நாங்களும் ரௌடிதான் நாங்களும் ரௌடிதான்...'' என தி.மு.க. அறிவித்த சிறை நிரப்பும் போராட்டம் இந்த ஆண்டின் காமெடி டாப் டென்னில் உண்டு. நில அபகரிப்பு வழக்குகளில் கே.என்.நேரு, என்.கே.கே.பி.ராஜா என கழகப் புள்ளிகள் பலரையும் பாத்ரூம் போவதற்கு முன் தூக்கியது போலீஸ். உடன்பிறப்புக்கள் டாஸ்மாக்குகளில் ஒளிய, கண் ஆபரேஷன் பண்ணி கால் நீட்டியிருந்தார் ஸ்டாலின். 'கனிமொழி சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்ளப்போகிறார்’ என செய்தி பரவ, 'கண்ணாவது ஒண்ணாவது’ எனக் களத்துக்கு எகிறி வந்தார் தளபதி. 'நடுவுல கொஞ்சம் அழகிரியைக் காணோம்’ என்று தொண்டர்களைத் தேடவைத்து, சுவிட்ச் ஆஃப் ஆனார் அழகிரி!



''போடுறா... கொல்றா... ஒதரா!''  



2012-ன் அன்னபோஸ்ட் அப்பாடக்கர்கள். 'மசாஜ் எடுத்தோமா, ஞானப்பால் கொடுத்தோமா’ என அமைதியாக வாழ்ந்த மதுரை ஆதீனத்தின் பேட்டையில் கும்மிஅடித்தது கூடா நட்பு. திடுதிப்பென்று நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமிக்க, 'போடுறா... போடுறா’ எனக் குஜாலானது தமிழகம். ''கனவுல வந்து சிவன் சொன்னாப்ல...'' என அதற்கு 'ஜலக் பொலக்’ விளக்கம் வேறு கொடுக்க, ''கொல்றா... கொல்றா...'' எனக் கொந்தளித்தது தமிழகம். நித்தி பேசுவதற்கெல்லாம், ''தம்பி கருத்தாப் பேசுறாப்ல...'' என ஆதீனம் சோப்படிக்க, ''ஒதரா... ஒதரா...'' என உதறியது தமிழகம். ''ஆயிரம் சந்நியாசிகளைப் பலி கொடுத்தாவது ஆதீனத்தின் சொத்துக்களை மீட்பேன்'' என நித்தி கொமட்டைத் தூக்க, ''தம்பி... ஆர்ம்ஸை எறக்கு... ஆர்ம்ஸை எறக்கு...'' என மிரண்டார் சீனியர். கவலையே இல்லாமல் நித்தி 'ரிங்கா ரிங்கா’ டூரடிக்க, நித்தியின் சூப் பாய்ஸின் கண்காணிப்பில் அச்சப் பேட்டிகள் தட்டினார் அருணகிரி. ''தமிழக அரசுக்கு மதுரை ஆதீனத்தைக் கையகப்படுத்தும் எண்ணம் உண்டு'' என்று அரசுத் தரப்பு வக்கீல் சொன்னதும், ''சாத்தானே அப்பாலே போ'' என நித்தியை டிஸ்மிஸ்ஸினார் ஆதி. அப்படியே வைஷ்ணவி கல்யாணத்துக்குப் போய் அஞ்சு லட்சம் மொய் செய்து, விகடனுக்கு ஜாலி பேட்டி தட்டி செல்ஃப் சேவிங்கிலேயே இருந்தார்!



ரொமான்ஸ் ரௌடி!

சிம்பு போய் பிரபுதேவா வந்தது போன வருஷம். பிரபுவும் போனது இந்த வருஷம். 'ராமராஜ்யம்’தான் கடைசிப் படம் என ஃபேர்வலே கொண்டாடிவிட்டார் நயன். ''ஏழரை மணிக்கு எங்களுக்குக் கண்ணாலமுங்க...'' என பிரபுதேவாவும் பட்டு வேட்டி பர்ச்சேஸ் முடித்தார். சாயங்காலமே, 'அங்கிட்டு பிள்ளைகளப் பாக்க பிரபுதேவா போறாரு... இங்கிட்டு தாரா ராவா அடிக்கிறாங்க’ என்றெல்லாம் சினிமா ரிப்போர்ட்டர்கள் டாப்அப் பண்ண, பணாலானது காதல். ''பிரேமம் முறிஞ்சு போயி... பிரபு ஒரு பிராந்து...'' என அறிவித்தபடியே ஆர்யா வீட்டுக்குப் போனார் நயன்தாரா. 'அடுத்த விக்கெட் ஆர்யா’ என மிஸ்டர் மியாவ் வரைக்கும் போட்டுத்தாக்க, ''ஆமான்டா மச்சான்... இல்லடா மச்சான்'' என விஷால், சிம்பு குரூப்பை வெறுப்பேற்றினார் ஆர்யா. இடையில், ஜெ-விஜயகாந்த் சந்திப்பு ரேஞ்சுக்குத் திடீர் பரபரப்பைக் கிளப்பியது சிம்பு-நயன் மீட்டிங். 'பார்த்துக்கிட்டாங்க... கோத்துக்கிட்டாங்க’ என போட்டோவெல்லாம் வர, 'பார்கே... பார்கே...’ எனக் கொந்தளித்தது கோலிவுட். நீயெல்லாம் இன்னும் நல்லா வருவம்மா!



கலைஞர்... காமெடி வலைஞர்!

''ஆனாவும் வேணாம்... ஊனாவும் வேணாம். பேனாவ மூடுங்க தலைவரே... ஃபேஸ்புக்குக்கு வாங்க...'' என துரைமுருகன் வெற்றிக்குறி காட்ட, எஃப்.பி-யில் அக்கவுன்ட் ஆரம்பித்தார் கருணாநிதி. 'கேகே’யெனக் கிளம்பிய இளவட்டம் கழுவிக் கழுவி ஊற்ற... ஒரே நாளில் லாக் அவுட் ஆனார். ''பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால், கூட்டணியைவிட்டு வெளியேறவும் தயங்க மாட்டோம்'' என்று காது விடைத்தவர், இரண்டு மணி நேரத்திலேயே, ''அப்படிச் சொல்லவே இல்லையே... இது பத்திரிகைகளின் சதி...'' என்று தோசையைத் திருப்பிப்போட்டுக் கருக்கினார். ''கலாம் என்றால் கலகம் என்று பொருள்'' என்று நடுவில் கலாமைக் கலாய்க்க, மூக்கு விடைத்தன முஸ்லிம் அமைப்புகள். ''பொழுது போயிருச்சு... ஒண்ணும் நடக்கலையே...'' எனப் பொட்டு தட்டியவர், 'டெசோ’வில் இறங்க, 'ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது’ என்கிற மத்திய அரசின் அறிவிப்பைப் பார்த்து அல்லு விட்டார். நடுவில் திடீரென கறுப்புச் சட்டையை மாட்டிக்கொண்டு வந்து, ''காஸ்ட்யூம் சேஞ்ச்...'' எனத் தலைவர் பண்ணியதெல்லாம் அன்பிலீவபிள் காமெடி.



எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!

சினேகா-பிரசன்னா ஜோடிதான் இந்த வருடத்தின் பப்ளிகுட்டி டார்லிங்ஸ்.
'சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் சம்திங் சம்திங்’ என கொஞ்ச நாளாகவே புகைந்தது. ''ஆமா... அதேதான்'' என இருவரும் ஓப்பன் பேட்டி தட்டினார்கள். இல்லறம் கண்டது ஜோடி. அதுவரை அழகு... வாழ்த்துகள். அப்புறம் இருவரும் அடித்த விளம்பர அலப்பறைகள் அத்தனையும் 'பிச்சு... பிச்சு’ காமெடிகள். திருமண வீடியோவையே தனியார் சேனலுக்கு விற்றார்கள். திடீரென்று, 'சினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன?’ என்று போஸ்டர்கள் பொளக்க, 'அச்சச்சோ... அதுக்குள்ளயா?’ என டாஸ்மாக்கில் கூடிக் குமுறினான் தமிழன். அப்புறம் அது 'ஆடி மாச’ விளம்பர ஸ்டன்ட் எனத் தெரியவர, 'பெட்ரோல் குண்டு வீசிருவோமா...’ என வெறியானான். சாம்பார், ரசப் பொடி, நகை, துணி என்று வெறித்தனமாக விளம்பரங்களில் வர ஆரம்பிக்க... ''இவங்க கல்யாணமே ஒரு விளம்பரம்தானோ?'' எனத் தலைகீழ் டவுட்டு சிரசாசனத்திலேயே இருந்தான் தமிழன்!



ஹி இஸ் வெயிட்டிங்!

எஸ்.ஏ.சி-தான் இந்த வருடத்தின் புஸ்ஸ்ஸ்ஸ்.ஏ.சி!
ஜெயலலிதா ஜெயித்ததும் ரவுண்டு கழுத்து பனியனோடு விஜய்யை அழைத்துக்கொண்டு பொக்கே தட்ட கார்டனுக்குப் போனார். ''யாரு... மணப்பாற சுப்பிரமணியா?'' என ஜெ. கேட்க, அரசியல் புரிந்து பொறி கலங்கினார் புரட்சி இயக்குநர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சேரில் அமர்ந்தது என்னவோ பக்கா... அடுத்தடுத்த பஞ்சாயத்துக்கள் அவரை ஆக்கியதே சுக்கா. எதிர் அணியில் சுமார் 200 தயாரிப்பாளர்கள் குரூப் கட்டி, 'அதுக்கெல்லாம் அவர் சரிப்பட்டு வர மாட்டாருங்க...’ என டவுசரைக் கிழிக்க, 'சட்டம் ஒரு இருட்டறை’ டி.வி.டி-யைப் பலமுறை பார்த்து மயக்கமாகியிருக்கிறார்.
ஒரு பாடல் வெளியீட்டு விழாவில், 'விஜய் ஒன்றும் அழகான ஹீரோ இல்லை’ என்று பேசிவைக்க, வீட்டில் டின்னரை கட் பண்ணியிருக்கிறார்கள். துப்பாக்கி - கள்ளத் துப்பாக்கி டைட்டில் விவகாரத்தில், கள்ளத் துப்பாக்கி படத் தயாரிப்பாளர் ரவிதேவன், 'எஸ்.ஏ.சி. என்னைக் கொலை செய்யறதா துப்பாக்கி காட்டி மிரட்டுறாரு’ என்று எஸ்.ஏ.சி. மீது போலீஸில் புகார் கொடுக்க, 'யாரு... நானு... துப்பாக்கியக் காட்டி... மூலிகை ஆயில் எங்கங்க கிடைக்கும்?’ எனப் பேசி பிரச்னையை முடித்தார் டாடி!



கிளாமர் தாதா!

டந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பிஸி யான புவனேஸ்வரிக்கு இந்த வருஷம் என்ன வேலை என ஆவலோடு காத்திருந்தான் தமிழன். சும்மா இருப்பாளா சுகுமாரி..? நடிகை ஆக்குவதாகச் சொல்லி 40 லட்சம் மோசடி, ஃபைனான்ஸ் வாங்கித்தருவதாக மோசடி, கார் வாங்கியவரிடம் பணம் செட்டில் செய்யாமல் கொலை மிரட்டல் என 10-க்கும் மேற்பட்ட 'சமூகசேவை’ வழக்குகளில் சிக்கி லைட்டடித்தார் புவனேஸ்வரி. ஹை லைட்டாக கிழக்குக் கடற்கரை சாலைத் தகராறில் சமாதானம் செய்ய வந்த போலீஸையும் பொளக்க, 'புட்றா... புட்றா’ என விரட்டியது காக்கி. புவாவுக்கு இப்போ புவ்வா ஜெயிலில்!



ஈமு சாப்பிடு மாமு!  

2012-ன் கொக்கரக்கோ காமெடி. 'ஈமு கோழி... சாப்பிடு மாமு’ என்று ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குப் போட்டியாகக் கிளம்பியது இந்தக் கோழி பிசினஸ். கடை திறக்க நமீதா வர, 'கோழியப் பாக்கறதா கொமரியப் பாக்கறதா...’ எனக் கும்மியடித்தது ஜனம். சினேகா, சத்யராஜ், பாக்யராஜ், சரத்குமார் என எல்லா சமூக சேவகர்களும் விளம்பரத்தில் வூடுகட்ட, பிச்சுக்கிச்சு பிசினஸ். சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் பக்கம் இருந்த நூற்றுக்கணக்கான பண்ணைகளில் தங்க நாணயத் திட்டம்... அது இதுவென வரிசை கட்டிய வாடிக்கையாளர்களை மொட்டை அடித்தார்கள் ஈமு மாமூக்கள். சுமார் 20 ஆயிரம் பேரிடம், 500 கோடிக்கும் மேல் சுருட்டினார்கள். இரை இல்லாமல் பசியால் ஈமு கோழிகள் செத்தது பெரும் துயரம்!



2012ன் டாம் அண்ட் ஜெர்ரி!



மாற்றான்களாக வளைய வந்த வைகோ - நாஞ்சில் சம்பத்துக்கு நடுவிலான உள்குத்து 2012-ன் காமெடிக் குத்து. ''ஆலம்பனா... நான் உங்கள் அட்ட்ட்டிமை...'' என விளக்கு பூதம் மாதிரி வைகோ-வின் பின்னால் திரிந்த சம்பத், திடுதிப்பென ஸ்க்ரூ கழட்ட, கழன்றது உறவு. ''பல பிரச்னைங்க... வைகோ அய்யா உள்ள வரும்போது, 'ம்மேஏஏஏ...’னு கத்திக்கிட்டே சம்பத் வெளிய போவாரு. அவரு பேசும்போது இவரு, 'ஹல்லோ... ஹல்லோ... சித்தன் சவுண்ட் சர்வீஸ்’னு குரல் கொடுப்பாரு. பல பிரச்னைங்க...'' எனத் தார் பூசியது தாயகம் வட்டாரம். 'என்னை வேலைய விட்டு நீக்குங்கடா... கப்பல்ல வேல கிடைச்சுருக்குடா...’ என சம்பத்தின் சலம்பல் உக்கிரமாகவே, 'சங்கொலியில்’ ஜாடையாகச் சாணி அடித்தார் வைகோ. 'அங்க போவாரு... இங்க போவாரு’ பூச்சி காட்டிய நாஞ்சில், அம்மா கட்சியில் வளைந்து கும்பிட்டபடி கூட்டுப் பொரியல் வாங்கினார். குரு வழக்கம்போல வாக்கிங் கிளம்ப, ஜெ. கொடுத்த இன்னோவாவில் பழிப்பு காட்டியபடி பயணம் போகிறார் சிஷ்யன்!



'பாதாள பைரவி’ பார்ட் டூ!

இந்த ஆண்டின் செம கெடா வெட்டு, கிரானைட் பி.ஆர்.பி-க்குத்தான். மதுரை கலெக்டராக இருந்த சகாயம் வீசிய அணுகுண்டில், நொறுங்கியது பி.ஆர்.பி. கோட்டை. சகாயத்தின் ரகசிய அறிக்கை லீக் ஆக, பி.ஆர்.பி-யில் இருந்து துரை தயாநிதி வரைக்கும் சிக்கிச் சிதைந்தார்கள். தலைமறைவான பழனிச்சாமி டெல்லி வரைக்கும் உருண்டுவிட்டு, 10 நாள் தாடியோடு, 'அய்யா கும்புட்டுக்கறேன்...’ என சரண்டர் ஆனார். அப்புறம்தான் அதிர்ச்சிக் காமெடிகள். 'அய்யா... என் கிணத்தைக் காணோம்’ மாதிரி 'அய்யோ... எங்க ஊரு கண்மாயைக் காணோம்... மலையைக் காணோம்’ எனக் கிளம்பி வந்தார்கள் நாட்டாமைகள். தென் மாவட்டங்களில் வருவாய்த் துறையின் பியூனைக்கூடத் தூங்கவிடாமல், விடிய விடியக் கணக்கெடுத்ததில்... ஏகப்பட்ட சுரண்டல்கள் அம்பலமாயின. பல கண்மாய்களைத் தோண்டி எடுத்து, அதன் மீது கிரானைட் கழிவுகளைக் கொட்டிக் கட்டடங் களையே எழுப்பிவிட்டார்கள். பி.ஆர்.பி. கைதுக்குப் பிறகு நடந்ததெல்லாம் 'பாதாள பைரவி’ பார்ட் டூ!



தமிழகத்தைத் தாக்கரே!

'முஷ்டி முறுக்கும் அண்ணனின் புகைப்படத்தைத்தான் சுவரொட்டியில் பதிக்க வேண்டும்’ என்பதுபோல, 'நாம் தமிழர்’ கட்சியின் 'கண்டிஷன்ஸ் அப்ளை’கள் வெளியாக, இணையத்தில் எகிறி எகிறி கமென்ட் போட்டார்கள். வேளாங்கண்ணிக்கு இலங்கையில் இருந்து வந்தவர்களின் வாகனங்களை சீமான் ஆட்கள் வெளுக்க, 'அடிவாங்கியவர்களில் இலங்கைத் தமிழர்களும் உண்டு’ என்று விவகாரம் கிளம்ப, சீற்றத்தைக் குறைத்து சைலன்ட் மோடுக்குப் போனார் சீமான். 'பெரியாரால்தான் தமிழன் கெட்டான்’, 'திராவிடத்தால்தான் தமிழகம் நாசமானது’ என 'ஹய்யோ ஹய்யோ’ ஆவணத்தை சீமான் வெளியிட, கோவணத்தைக் கிழித்துத் தோரணம் கட்டினார்கள் பெரியார் தொண்டர்கள். கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், ''ஆவணமா, அப்படியா, வந்துடுச்சா? அதுக்குள்ளேயேவா?'' என்று பிதுங்கிப் பிதுங்கிப் பேஸ்த்தடித்தார். ''கொளத்தூர் மணி விமர்சிக்கிறாரே, வைகோ கண்டனம் தெரிவிக் கிறாரே'' என்று கேள்வி கேட்டால், ''நான் பெரியாரின் பேரன்தான், கொளத்தூர் மணி என் அண்ணன்தான்'' என்று கூச்சப்படாமல் 'குடும்பப் பாட்டு’ பாடினார் சீமான்!


அன்லைக்!

சிட்டி சென்டர் ரவுண்ட்அப் முடிந்தும் பாடகி சின்மயிக்குப் போரடிக்க, ட்விட்டரில் பொங்கல் வைத்தார். 'மீன்களை மீனவர்கள் கொல்றாங்கோ... மீனவர்களை இலங்கைக் கப்பல் படை கொல்லுது. இதுல என்ன தப்பு’ என்கிறரீதியில் அவர் ட்விட்டியதாகச் செய்தி கிளம்ப... கொந்தளித்தார்கள் இணையப் புரட்சியாளர்கள். 'சின்னாத்தா... இப்ப வந்து பதில் சொல்லு மங்காத்தா’ என வம்படி கமென்ட்டுகள் வலை போட்டு இழுக்க, போலீஸ் கமிஷனரிடம் வந்து 'மசாலா தடவுறாங்கோ... மசாலா தடவுறாங்கோ’ எனக் கூவினார். உடனே, ட்விட்டர் கரடிகளுக்குக் காப்புப் போட்டது போலீஸ். ''நான் தமிழர்களுக்கு எதிரானவ இல்லை. மறவர் சீமையில் தமிழ் வளர்த்த குடும்பப் பெண்...'' என சின்ஸ் பன்னீர்க் காவடி தூக்க, ''ராஜன் லீக்ஸுக்கு சஸ்பெண்ட் ஆகிருச்சு...'' எனப் பால் காவடி எடுத்துவந்தது எதிர் குரூப். நடிகர் சிம்பு திடீரென எதிர் சந்தில் ஓடி வந்து, ''என்னைக்கூடத்தான் காமெடி பண்றாங்க... மிமிக்ரி பண்றாங்க. நாங்க எல்லாம் கூலா இருக்கோம்ல. இதை எல்லாம் அப்படியே விட்டுறணும்...'' என்று சின்மயிக்கு அட்வைஸ, ''ஊர்க்கட்டு சொல்லிருச்சு... நகரு நகரு...'' எனக் கலைந்தது கூட்டம்!



பகீர்... திகீர்... டகீர்!

ந்த வருடம் வதந்தி வருடம்... 'அஸ்ஸாமில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்குப் பதிலாக, இங்கே உள்ள வடகிழக்கு மாநிலத்தவரை சிறுபான்மையினர்கள் தாக்கப்போகிறார்கள்’ என டெரர் ரூமர் கிளம்ப, வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில்வே ஸ்டேஷன் களில் எகிற ஆரம்பித்தார்கள். 'ரம்ஜானுக்கு மெஹந்தி வைத்துக்கொண்ட பெண் ஒருவர் இறந்துவிட்டார்’ என்று கிளம்பிய வதந்தியால், மெஹந்தி பார்ட்டிகள் மிரண்டார்கள். கிருஷ்ணகிரி - தர்மபுரி ஏரியாவில், 'மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்று, பிறந்த உடனேயே பிரசவம் பார்த்த டாக்டரைப் பார்த்துக் கண்களை உருட்டி, 'நாலாயிரம் குழந்தை களைப் பழிவாங்காம விட மாட்டேன்!’ என்று தெலுங்குப் பட ஸ்டைலில் மிரட்டியது எனக் கிளம்பிய வதந்தியால் ஃபுல் த்ரில்லானது தமிழகம்!





நன்றி - விக்டன் 

Thursday, October 25, 2012

இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன்

விகடன் மேடை - கே.பாக்யராஜ்

அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.


 ''தாங்கள் தி.மு.க-வில் சேர்ந்து தேர்தல் காலங்களில் முழு ஈடுபாட்டோடு பிரசாரம் செய்தீர்கள். ஆனால், கட்சியில் தங்களுக்கு எந்தப் பதவியும் தரப்படவில்லை. அதனால்தான், கே.பாக்யராஜுக்கு அரசியல் தேவை இல்லை என்று ஒதுங்கிவிட்டீர்களா?''  



''தப்பு செஞ்சாங்களோ இல்லையோ... ஆனா, பதவியில் இருக்கிறதாலேயே நாட்டுல நிறையப் பேர் குற்றம்சாட்டப்பட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. நல்லவேளை... நான் அந்த வகையில் பேர் கெட்டுப் போக வைக்கிற பதவிக்கு ஆசைப்பட்டு எந்த விஷயத்தையும் செய்யலைனு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். திருப்தியா இருக்கேன்!''



எம்.ராஜன், சென்னை-4.


 ''தமிழிலும் பிற மொழிகளிலும் நீங்கள் வியந்து ரசிக்கும் திரைக்கதை ஆசிரியர்கள் யார் யார்?'' 



''பி.ஆர்.பந்துலு சார், பீம்சிங் சார், ஸ்ரீதர் சார், கே.பாலசந்தர் சார், ஜி.பாலசுப்ரமணியம் சார், ஜாவர் சீதாராமன் சார்... இவங்கள்லாம் தமிழ்ல. இந்தியில் சலீம் ஜாவத், பாசு சட்டர்ஜி, ரிஷிகேஷ் முகர்ஜி, 'ஷோலே’ இயக்குநர் ரமேஷ் சிப்பி. இப்படி நிறையப் பேர் இருக்காங்க. சிவாஜி சாரை வெச்சு 'முரடன் முத்து’ சக்சஸ் கொடுத்தாரு பி.ஆர்.பந்துலு சார். அவரே எம்.ஜி.ஆர். அவர்களை வெச்சு 'ஆயிரத்தில் ஒருவன்’ படமும் ஹிட் கொடுத்தாரு. இப்படி ஒவ்வொருத்தருக்கும் நான் சொல்ல ஆரம்பிச்சா, தனிப் புத்தகமாத் தான் போடணும்!''




ஆ.கோவிந்தன், செங்கல்பட்டு.


 ''அதென்ன, உங்களுக்கு ஜோடியா நடித்திருக்கும் பெரும்பாலான ஹீரோயின் கள் மூக்குக் கண்ணாடி அணிகிறார் கள்... என்ன சென்டிமென்ட்?''



''சென்டிமென்ட்லாம் எதுவும் கிடையாது. நான் கண்ணாடி போடுறதால ஜோடியும் கண்ணாடி போட்டாலாவது ஏதாவது கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகுமேனு ஒரு நப்பாசைதான்!''



என்.நாராயணன், செங்கம்.



 ''உண்மையைச் சொல்லுங்க... உங்க டான்ஸைப் பார்த்தா உங்களுக்கே சிரிப்பு வருமா... வராதா?''



''சில விஷயங்களை எப்போ, எத்தனை தடவை பார்த்தாலும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும். உதாரணத்துக்கு...



1. அழகான குழந்தை முகம்
2. ஆகாய விமானம்
3. யானை
4. என் டான்ஸ்.
இப்போ உங்களுக்கும் சிரிப்பு வருதுல்ல!''




இரா.தோணி, தூத்துக்குடி.



''என்னதான் இருந்தாலும் சில்க் ஸ்மிதாவிடம் இருந்த கிளுகிளுப்பு, கிறக்கம் இப்போதைய ஹீரோயின்களிடம் இல்லைதானே. தலைவா... உண்மை சொல்லுங்க?''



''அது வேற ஒண்ணும் இல்ல... சில்க் ஸ்மிதா கண்ணுல ஒரு மாதிரி மயக்கமும் கிறக்கமும் உண்டாக்குற வசீகரம் ஒளிஞ்சிருக்கும். அந்தப் பொண்ணு கோபமா பார்த்தாக்கூட சுண்டி இழுக்குற மாதிரி இருக்கும். சில்க்கோட ரெண்டு கண்களை மட்டும் க்ளோஸப்ல பார்த்தாலே, ஜிலீர்னு இருக்கும். அது அவங்களுக்குக் கிடைச்ச வரம். என்ன... சினிமாலயும் ரொம்ப நாள் இல்லாம, சொந்த வாழ்க்கை யிலயும் நிம்மதியா இல்லாம இறந்துட்டாங்க. அவங்க ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்!''



கி.ராஜேஷ், தஞ்சாவூர்.



 ''அடிக்கடி 'சமாசாரம் சமாசாரம்’னு சொல்லிட்டே இருக்கீங்களே... என்னங்க அது சமாசாரம்?''



''அப்போ நான் ஸ்கூல் பையன். பள்ளி ஆண்டு விழா வுக்கு ரவீந்திரநாத் தாகூரின் 'தி ஹோம் கம்மிங்’ சிறுகதையை நாடகமாப் போடலாம்னு முடிவுபண்ணி, ரிகர்சல் போய்ட்டு இருக்கு. நான் நடிக்கிறதோட அப்பப்ப மத்தவங்க நடிக்கிறதையும் கவனிச்சு, தோணுற விஷயங்களைச் சொல்லிட்டு இருந்தேன். வாத்தியார் பாராட்டி தட்டிக் கொடுத்துட்டு இருந்தாரு. அப்போ ஒரு நாள், லேடி டீச்சர்ஸும் ரிகர்சல் பார்க்க வந்திருந்தாங்க. அப்ப ஒரு சீன் முடிஞ்சு அடுத்த சீனுக்குப் போகலாம்னு வாத்தியார் சொல்ல... நான், 'இல்ல... இதே சீனை இன்னொரு தடவை நடிக்கவைங்க’னு சொன்னேன்.


அந்த சீனை மறுபடி நடிக்கவெச்சுப் பார்த்துட்டு, 'எல்லா ரும் சரியாத்தான் டயலாக் பேசுறாங்க’னு வாத்தியார் சொல்ல, நான் ஒரு பெரிய கிளாஸ் பையனைக் காட்டி, 'அவர் நடிக்கும்போது கவனிங்க’னு சொன்னேன். இன்னொரு தடவையும் ரிகர்சல் பார்த்துட்டு, 'அவர் டயலாக் எல்லாம் சரியாத்தானே பேசினார்’னு வாத்தியார் சொல்ல, 'இல்லை... அந்தப் பையன் சரியாப் பண்ணலை’னு ஒருமாதிரி மென்னு முழுங்கி சொல்றேன். 'என்ன சரிஇல்லே?’னு வாத்தியார் கேட்க, நான் தயங்கி நிக்க, 'டேய்... என்ன தப்புனு சொன்னாத்தானே தெரியும்’னு வாத்தியார் என் வாயைப் புடுங்க... லேடீஸ் டீச்சர்ஸைப் பார்த்துட்டே நான் முழுங்கி முழுங்கிப் பேசுறேன். 'சார்... அந்தப் பையன் இடது பக்கம் சட்டை பாக்கெட் மேல ஸ்கூல் பேட்ஜ் குத்தியிருக்கார். நடிக்கும்போது அவரை யும் அறியாம இடது கை அந்த பேட்ஜைத் திருகிட்டே இருக்கு’னு சொன்னேன்.



 புரியாமப் பார்த்த வாத்தியார், 'ஏண்டா... இது ஒரு தப்பா டா?’னு கோபப்பட்டார். 'இல்ல சார்... மூணு தடவை நடிக்கிறப்பவும் அவர் விடாம பேட்ஜை அப்படித் திருகிட்டே இருந்தார். இப்ப ரிகர்சல்ல யூனிஃபார்ம்ல இருக்கார். ஆனா, மேடையில நடிக்கும்போது, எல்லாருக்கும் அந்தந்த கேரக்டர் மேக்கப்தான் போட்டிருப்பாங்க. அப்போ இவர் பேட்ஜைத் திருகிற மாதிரி கை போனா ரொம்பத் தப்பா இருக்கும் சார். ஏன்னா, இவர் நாடகத்துல லேடீஸ் வேஷம் போடுறார். இதே பழக்கதோஷத்துல அப்போ கை வெச்சா தப்...’னு நான் முடிக்கிறதுக்குள்ள லேடீஸ் டீச்சர்ஸ், 'ஐயோ’னு சவுண்டு கொடுத்துட்டே வெட்கப்பட்டு எந்திரிச்சு வெளியே போயிட்டாங்க. வாத்தியாரும் சிரிச்சுட்டு, 'உனக்கு மட்டும் எப்படிறா அந்த சமாசாரத்துல கண்ணுபோச்சு’னு கேட்டாரு. 'பொம்பள வேஷம்கிறதால உத்துக் கவனிச்சேன்’னு சொன்னேன். ஆக, எட்டாவது படிக்கும்போதே அந்த சமாசாரத்துல கவனம் போனது, இன்னும் அந்த சமாசாரமாவே தொடருது!''



சா.தருமன், காஞ்சிபுரம்.



 ''நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன்?''



'' 'ஒரு கை ஓசை’ படத்துல வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியா நடிச்சது ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அப்போ சில முன்னணி நடிகர்கள் இது மாதிரி கேரக்டர்ல நடிக்க முயற்சி பண்ணி, அது பெரிசா வெற்றியடையல. அதனால் நான் அப்படி நடிச்சப்போ, 'எதுக்கு இந்த வேண்டாத வேலை?’னுதான் பலரும் சொன்னாங்க. ஆனா, எனக்குக் கதை மேல நம்பிக்கை இருந்துச்சு. அது மட்டும் இல்லாம அந்தப் படத்துல ஹீரோ பேச முயற்சி செஞ்சு நிறைய விநோதமான சத்தங்களை வெளிப்படுத்துவான்.



அதை எல்லாம் மக்கள் ரசிப்பாங்கனு எதிர்பார்த்தேன். ஏன்னா, எங்க ஊர்ல தேவராஜ்னு ஒருத்தர் அப்படித்தான் தான் சொல்ல வேண்டிய சங்கதி யைச் சொல்லுவாரு. அது புரியுதோ இல்லையோ, கேட்க நல்லா இருக்கும். நான் எதிர்பார்த்த மாதிரியே 'ஒரு கை ஓசை’ வெற்றி அடைஞ்சது. அடுத்ததா, பாலக்காட்டு மாதவன் கேரக்டர் பிடிக்கும். ஏன்னா, நிஜமாவே அப்படி சூதுவாது இல்லாம ஒருத்தன் இருந்தா, எல்லாருக்கும் அவனைப் பிடிச்சுப்போகும்ல. அந்த கேரக்டர் தான் என்னை எல்லார்கிட்டயும் போய்ச் சேர்த்தது!''



சொல்வேந்தன், திருச்சி-4.



 ''சுயநலம் யாருக்கு அதிகம்... ஆணுக்கா... பெண்ணுக்கா?'' 



''இதுல என்ன சந்தேகம்... பெண்களுக்குத்தான்! 'தன்’ புருஷன், 'தன்’ புள்ளைங்க நல்லா இருக்கணும்னு பார்த்துப் பார்த்துச் செய்யிற பாசமான சுயநலத்துல, பெண்கள் கிட்டகூட ஆண்களால நெருங்க முடியாது!''



மா.சின்னய்யா, ராமேஸ்வரம்.



'' 'அந்த 7 நாட்கள்’ படத்தின் க்ளைமாக்ஸில், அம்பிகா உங்களோட சேர்ந்து வாழ ராஜேஷ் அனுமதிக்கிற மாதிரி சீன் வெச்சிருந்தா, அதே வெற்றி சாத்தியமா?''




''இல்லைங்க... அந்தப் படத்துல ஸ்பெஷலே அந்த க்ளைமாக்ஸ்தான். 'சங்கராபரணம்’ இயக்குநர் கே.விஸ்வநாத் சார் 'சப்தபதி’னு ஒரு படம் பண்ணியிருந்தாரு. அதுவும் கிட்டத்தட்ட 'அந்த 7 நாட்கள்’ கதைதான். ஒரு ப்ரிவியூ ஷோல என்னை அவர் பார்த்தப்ப, 'நானும் நீங்களும் ஒரே மாதிரி ஒரு படம் பண்ணோம். ஆனா, க்ளைமாக்ஸ் மட்டும் வித்தியாசம். அந்த க்ளைமாக்ஸ்னால மட்டும்தான் என் படம் ஃபெயிலியர் ஆச்சு. யுவர் க்ளைமாக்ஸ் இஸ் வெரி பவர்ஃபுல்’னு சொன்னாரு. நம்ம ஊர் எவ்வளவு மாடர்ன் ஆனாலும் நாகரிகம் வளர்ந்தாலும் சில சென்ட்டிமென்ட்கள் எப்பவும் எடுபடும்!''




ச.வேலு, சென்னை-17.



 ''இப்போதைய ஹீரோயின்களில் யாருடன் நடிக்க விரும்புவீர்கள்?''




''ஒருத்தர் ரெண்டு பேர் பேரை மட்டும் சொன்னா ஏதாவது கசமுசா ஆயிடும். அதனால எல்லார்கூடவும் நடிக்க ஆசைனு சொல்லி எஸ்கேப் ஆயிடுறேன்!''



நா.பழனி, வந்தவாசி.



''உங்கள் படங்களில் முதலில் ஹீரோவைக் கோமாளியாகக் காட்டி சிரிக்க வைத்துவிட்டு, பிறகு அவரைப் புத்திசாலியாகச் சித்திரிப்பது ஏன்?'



'
'' 'முந்தானை முடிச்சு’ வாத்தியார், 'இது நம்ம ஆளு’ கோபால் எல்லாம் பார்த்தா உங்களுக்குக் கோமாளியாவா தெரியுது! வாழ்க்கையில ஒவ்வொருத்தரும் ஏதாவது சில விஷயங்கள்ல ஏமாந்து போறவங்கதான். ஒரு சில விஷயங்கள்ல சபாஷ் வாங்குறவங்கதான்!''




- நிறைய பேசலாங்க...



அடுத்த வாரம்



 ''தமிழக எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் கருத்து?''



 ''டி.வி. ஷோல ஆரம்பிச்சு கிராமத்து மேடைகள் வரை மிமிக்ரி பண்றவங்க உங்க குரல் இல்லாமப் பண்றதே இல்லை. அதை எப்படி எடுத்துக்குறீங்க?''



''முருங்கைக்காய் போன்ற சமாசாரங்களை அப்பவே லேடீஸை ரசிக்கவெச்சீங்களே... எப்படி?''

 பாகம் 1 படிக்க கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன் 

http://www.adrasaka.com/2012/10/blog-post_7561.html

நன்றி - விகடன்

 பாகம் 2- தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி 

http://www.adrasaka.com/2012/10/10.html

பாகம் 4 -சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி

http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html

Thursday, October 18, 2012

தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி

எம்.கே.கதிர்வேலன், திருத்துறைப்பூண்டி. 


1. ''ரஜினி, கமல் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு படம். ஒன் லைன் சொல்லுங்க பார்ப்போம்?''


''ம்க்க்கும்... ஆச... தோச... அப்பளம்... வட!


நான் எழுதி யாராவது சுட்டுட்டா அப்புறம் வெல்லம் திங்கறது ஒருத்தன், விரல் சூப்பறது இன்னொருத்தன் கதை ஆயிடும்!''



இசக்கிமுத்து, திருநெல்வேலி.



2. ''இப்போதைய ஹீரோக்களில் உங்களைப் போல டான்ஸ் ஆடுறவங்க யார்?''



''ஒருத்தர்கூட இல்லைனு தைரியமா காலரைத் தூக்கிவிட்டுக்கிறேன்!''



கு.கிருஷ்ணமூர்த்தி, கம்பம்.



3.  ''உங்க பார்வையில் திரைக்கதையைப் பொறுத்து தமிழ் சினிமாவின் தலைசிறந்த 10 படங்களை வரிசைப்படுத்துங்க?''



''கஷ்டமான விஷயம், வெறும் பத்துங்கறது... சரி உங்களுக்காக...


1.நாடோடி மன்னன்

 2.அடுத்த வீட்டுப் பெண் 

3.தில்லானா மோகனாம்பாள்

 4. கல்யாணப் பரிசு

 5.அவள் ஒரு தொடர்கதை

 6. 16 வயதி னிலே 

7.முள்ளும் மலரும் 

8.ஆட்டோகிராஃப்

9.காதல்


 10.சுப்ரமணியபுரம்.


இன்னும் நிறையச் சொல்ல முடியாதது வருத்தமா இருக்கு!''



விடியல் ராஜன், மதுரை-3.



'4. 'இயக்குநர் ஆகணும்னு வந்த பாக்யராஜ் எப்படி நடிகர் ஆனார்?''



''நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் - இது விவேகானந்தரின் உபதேசம். ஆனா, கலைத் துறையை நோக்கி வர்றவங்களுக்கு அது பொருந்தாது. பத்திரிகையில் வேலை பார்க்க வந்து, சினிமாவுல பாடலாசிரியராகி 'கவியரசு’னு பேர் வாங்கினார் கண்ணதாசன். நடிக்க ஆசைப்பட்டு வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் சார் மெல்லிசை மன்னர்னு பேர் வாங்கினார். 


நடிப்பு ஆசையோட வந்த ஷங்கர், இயக்குநர் ஆனார். அப்பாவின் நடன இயக்கத்தைப் பார்க்க வந்த பிரபுதேவா நடிகர், இயக்குநர்னு எல்லாமுமா ஆகிட்டார். ஆக நம்ம கதையும் அதேதான். நடிக்க நினைச்சு வந்து, வேண்டாம்னு உதவி இயக்குநர் ஆகி, அப்புறம் மறுபடியும் வசனகர்த்தா, கதாசிரியர், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பத்திரிகையாளர்னு சங்கிலித் தொடரா நீண்டிருச்சு. ஆனா, இதுல ஒரு விஷயம்... சினிமாவை ஆத்மார்த்தமா ரசிச்சு வர்றவங்க அதுல டீ, காபி கொடுக்கிற வேலைக்கு வந்தாலும் ஜொலிக்க முடியும். அது தான் சினிமாவின் புதிர்.''


மே.நாகராஜன், மன்னார்குடி.





5.  ''இயக்குநர் பாக்யராஜ் எப்ப ரிட்டர்ன்?''



''2012 - கேது புத்தி முடிஞ்சி இப்ப சுக்ரபுத்தி ஸ்டார்ட் ஆகிடுச்சி. 2 0 1 3=6. என் பிறந்த தேதி 7-1-1951.7 1 1 9 5 1=24-2 4=6. ஆக, என் தன்னம்பிக்கை பழையபடி தெம்பாவே இருக்கு. ஜாதகப்படியும் அந்தந்த வீட்ல அது அது வந்து உட்கார்ந்து 2013-ல மக்கள் உங்க எல்லார் வீட்டுக்குள்ளயும் பழையபடி நான் குடியேறி குஷிப்படுத்தப்போறேன்.''



பவளநாதன், திருச்சி-2.


6. ''உங்கள் நண்பர் கவுண்டமணி ஏன் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருக்கார்?''



''முன்னணித் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமில்ல... முன்னணி ஹீரோக்களுக்கே அவர் தேதி அவ்ளோ டிமாண்டா இருந்தது ஒரு காலம். இப்ப ஒரு சின்ன கேப் எடுத்துருக்காருனு நெனைக்கிறேன். 'கேப்’தான். தொடர்வார். தொடரணும்!''



எம்.செல்வகுமார், சென்னை.



7.  '' '16 வயதினிலே’ படத்தை இப்ப எடுத்தா, சப்பாணி, மயிலு, பரட்டை கேரக்டர்களுக்கு யார் யார் பொருந்துவாங்க?''



''உங்க ஆசை - ஆதங்கம் எனக்குப் புரியாம இல்லை. ஆனா, அதுல அவ்வளவு லயிச்சு வேலை பார்த்தவன் நான். அந்த மூணு கேரக்டர்லயுமே நடிச்சவங்க அதுக்குப் பிறகு அவ்வளவு பிரமாதமா ஷைன் பண்ணி சினிமாவில் இன்னும் கோலோச்சிட்டு இருக்காங்க. அதனால என்னால வேற யாரையும் மாத்தி யோசிக்க முடியலை!''




தா.மலர், திருச்சி-2.



8. ''நீங்க எடுத்த காட்சிகளில் உங்கள் மனதில் இன்னும் பசுமையாகப் பதிந்திருக்கும் காட்சி எது?''



''நிறையச் சொல்லலாம்... 'ஒரு கை ஓசை’ படத்துல பேச்சு வந்தும் ஊமையாவே இருந்துடுறது. 'மௌன கீதங்கள்’ படத்துல சினிமா, ஹோட்டல்னு போயிட்டு வந்த பின்னால என்கிட்ட சரிதா 'நான் 'மூணு’ நாள் லீவு’ன்னதும் நான் சண்டை போட்டு பிரளயம் பண்றது. 'அந்த 7 நாட்கள்’ க்ளைமாக்ஸ்ல, 'என்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரலாம். பச்சே... உங்க மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது!’னு சொல்ற டயலாக், 'முந்தானை முடிச்சு’ல பொய் சத்தியம் பண்ணி ஊர்வசி குழந்தையைத் தாண்டுறது... 'தாவணிக் கனவுகள்’ படத்துல தியேட்டர்ல தங்கச்சிகளுக்காகக் காசு போட்டுட்டே இருந்துட்டு பிறகு நானே மறந்து, என் தங்கச்சியே காசு போடச் சொல்றது... அது கெடக்குங்க ஒரு வண்டி நிறைய!''




எம்.எஸ்.சேகர், தஞ்சாவூர்-3.



 9. ''அப்போ மேட்னி ஷோவுக்குப் பெண்கள் கூட்டத்தை அலைபாய வைத்த, பெண்களின் மனம் கவர்ந்த இயக்குநர் நீங்க... இப்ப யாரை அப்படிச் சொல்வீங்க?''



''சேரன், வசந்த பாலன், பிரபு சாலமன், சுசீந்திரன். இன்னும் கமர்ஷியல் ஹீரோ இல்லாமப் படம் எடுக்கும் நிறையப் பேர் பெண்கள் விரும்புற மாதிரி இருக்கணும்னுதான் முயற்சி பண்றாங்க.''



வி.மருதவாணன், தஞ்சாவூர்.



10.  ''உங்களால் மறக்க முடியாத பாராட்டு?''



''என் கதை 'ஒரு கைதியின் டைரி’யை - இந்தியில் 'ஆக்ரி ராஸ்தா’னு அமிதாப் பச்சன் அவர்களை வெச்சு நான் டைரக்ட் பண்ணேன். அதுல ஒரு கல்லறை சீன் வரும். முன் பகுதி கதைல மனைவி புருஷனுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்திருப்பா. அப்ப கர்ப்பமா இருக்குற மனைவி 'நாளைக்கு என் பையன் வந்து இங்கிலீஷ்ல பிச்சு உதறப்போறான். ஆனா, உங்களால அவனுக்கு ஈடு கொடுத்துப் பேச முடியாதுனு கிண்டல் பண்ண, கர்ப்பஸ்திரீ வயித்தைத் தொட்டு அப்பா அமிதாப் பச்சன், 'No No No... I can talk English... Walk English... Come on, Come out My son... Let us see’னு தமாஷா சேலஞ்ச் பண்ணுவார்.



 பின்னால் கதையில் அப்பா வுக்கு மகனைத் தெரியும்... மகனுக்கு அப்பாவைத் தெரியாது. கல்லறையில் தன் மனைவிக்கு மெழுகுவத்தி ஏற்றி அப்பா அமிதாப் பிரார்த்தனை பண்ணிட்டு இருப்பார். அப்போ போலீஸா இருக்குற மகன் அங்கே ஒரு குற்றவாளியோட வந்து, 'எந்தக் கல்லறையில் ஒளிச்சு வெச்சிருக்க.. காட்டு... 'Come on Show me’னு ஆங்கிலத்தில் அதட்ட, அதைக் கவனிக்கும் அமிதாப் தன் மனைவியிடம், 'நீ சொன்ன நேரம் வந்துருச்சு. என் மகனுடன் நான் இங்கிலீஷ்லயே சண்டை போடுறேன் பார்’னு சொல்லிட்டு வருவார். மகன்கிட்ட வந்து இங்கிலீஷ்லயே பேசுவார். 'உன்னைக் கேள்வி கேட்க ஆள் இல்லைனு நினைச்சியா? கல்லறை யில் பக்கத்தில் இறுதிச் சடங்கு பிரார்த்தனையில் உள்ளவர்களைப் பத்திக் கவலையே இல்லாம கத்திட்டு இருக்க’னு சத்தம் போடுவார்.



 அவர் தன் அப்பானு தெரியாத மகனும் பதிலுக்கு வாக்குவாதம் செய்வான். இது 150 அடிக்கு மேல ஆங்கிலத்திலேயே வசனம் பேச வேண்டிய காட்சி. ஆனா, அமிதாப் இங்கிலீஷ்ல பேச மறுத்து, 'பளிச் வசனங்கள் மூலமா எனக்கு இமேஜ் பில்ட்-அப் கொடுத்த எழுத்தாளர்கள் சலீம் ஜாவேத் கதையில்கூட நான் நாலு வரிக்கு மேல இங்கிலீஷ் பேசினதுஇல்லை. இந்தி ரசிகர்களுக்கும் அந்த அளவு ஆங்கிலம் புரியாது. ரசிக்கவும் மாட்டாங்க. அதனால இவ்ளோ நீளமா இங்கிலீஷ் பேசுற மாதிரி சீன் வேண்டாம்’னு சொன்னார்.



'அமிதாப்ஜி... இந்த சீனுக்கு இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லை. புரியலைன்னாலும் அப்பா மகனை அதட்டி இங்கிலீஷ்ல பேசுறார்ங்கிற அந்த மூடுக்கே, ரசிகர்கள் ரசிச்சுக் கை தட்டுவாங்கனு சொன்னேன். ரொம்ப நேரம் சமாதானப்படுத்திய பிறகுதான் அமிதாப்ஜி, 'சரி... நீங்க டைரக்டர்... உங்க முடிவை நான் ஏத்துக்கிறேன்’ என்றார்.  படம் ரிலீஸ் ஆச்சு. பாம்பேயில் இருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு போன் வந்தது. லைன்ல அமிதாப். 'சார்... நீங்க சொன்னது நூறு பெர்சன்ட் சரி... இங்கிலீஷ் தெரியாத என் டிரைவர், சமையல் காரங்கலாம் முன் வரிசைல உக்காந்து படம் பார்த்துட்டு இருந்தாங்க. அந்தக் கல்லறை சீனுக்கு அவங்கதான் முதல்ல கை தட்டி உற்சாகமானாங்க. 



அஸ் எ கேப்டன் ஆஃப் த ஷிப், யுவர் ஜட்ஜ்மென்ட் இஸ் கரெக்ட். என் கேரியர்ல இதுக்கு முன்னாடி எப்பவும் 'அமிதாப் படம் சூப்பர்’னு சொல்லித்தான் கேட்டுருக்கேன். ஆனா, இப்போ என் மனைவி ஜெயா, படம் பார்த்துட்டு, 'ஸாரி... இது அமிதாப் படம் இல்லை. இது டைரக்டர் பாக்யராஜ் படம்னு சொன்னாங்க’னு விடாமப் பேசிட்டே இருந்தார்.



அப்புறம் ஒரு நாள் ரைட்டர் ஜாவேத்தைச் சந்திச்சப்போ, முதல்ல ஒரு தடவை கை குலுக்கி, 'இது படத்துக்கு’ என்றார். மீண்டும் ஒருமுறை கை குலுக்கி, 'இது அமிதாப்பை 120 அடிக்கு ஆங்கிலத்தில் பேசவெச்சதுக்கு. ஒரு ரைட்டரா நாங்க எவ்வளவோ போராடி இருக்கோம். அவர் சம்மதிச்சதே இல்லை. ஆனா, நீங்க அவரையே அவ்வளவு நீளமா பேசவெச்சு ரைட்டர்களுக்குப் பெருமை ஏற்படுத்திக் கொடுத்துட்டீங்க’னு சொன்னாங்க. அந்தப் பாராட்டுகள் இன்னும் மனசைவிட்டு அகலாம இருக்கு!''



- நிறைய பேசலாங்க...



அடுத்த வாரம்


''அரசியலுக்கு கே.பாக்யராஜ் தேவையே இல்லை; கே.பாக்யராஜுக்கு அரசியல் தேவையா?'' 


''நீங்கள் வியந்து ரசிக்கும் திரைக்கதை ஆசிரியர் யார்? தமிழிலும் பிற மொழிகளிலும். காரணத்துடன் சொல்லுங்களேன்?''



''அதென்ன... உங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அனைத்து ஹீரோயின்களும் மூக்குக் கண்ணாடி அணிகிறார்கள்... என்ன சென்டிமென்ட்?''

 பாகம் 1 படிக்க

கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன் 

http://www.adrasaka.com/2012/10/blog-post_7561.html

 

பாகம் 3 படிக்க -இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன் |..

http://www.adrasaka.com/2012/10/11.html 

நன்றி - விகடன்

பாகம் 4 படிக்க சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி
http://www.adrasaka.com/2012/11/blog-post_159.html