2020 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய படம், கொரானா காலத்தால் 3 வருடங்கள் தாமதமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது ம், சர்வதேச அளவில் THE BANG என்ற டைட்டிலில் ரிலீஸ் ஆன போது கலவையான விமர்சனங்களை சந்தித்தது ம், பாக்ஸ் ஆஃபீசில் இது ஒரு வெற்றிப்படம் அல்ல
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் , ஆனால் பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் . அதனால் அவர் சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்து பட்டணம் சேர்கிறார். என்ன என்ன எல்லாமோ வேலைகள் எல்லாம் பார்ப்பவர் கடைசியில் ஒரு டாக்சி டிரைவராக பணிக்கு அமர்கிறார்.
வில்லன் பெண்களைக்கடத்தி வந்து அவள் பெற்றோருக்கு ஃபோன் பண்ணி மிரட்டி பணம் பிடுங்கி சம்பாதிப்பவர்.
நாயகி பெரிய கோடீஸ்வரரின் மகள் . அவளுக்கு நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையை பிடிக்கவில்லை , அதனால் அப்பாவிடம் இவரைக்கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என கறாராக சொல்லி விடுகிறாள்
இப்போது வில்லன் நாயகியைக்கடத்த திட்டம் போடுகிறான். நாயகனை நாயகி விரும்புகிறார். நாயகனே நாயகியைக்கடத்தியது போல அப்பாவிடம் பணம் பிடுங்கிக்கொள்ள நாயகியே ஐடியா கொடுக்கிறாள் , இதற்குப்பின் நிகழும் காமெடிக்குழப்பங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக சித்தார்த். நல்ல பர்சனாலிட்டி . அவரது ஸ்டைலிஷான கெட்டப் ரசிகைகளை விசில் அடிக்க வைக்கும் . ஆக்சன் காட்சிகளில் வேகம் போதவில்லை , ரொமான்ஸ் காட்சிகளில் விவேகம் போதவில்லை .
நாயகி ஆக திவ்யான்சா தாராள மனம் படத்தை தயாளு கிளாமரினியாக வருகிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் ஓப்பன் யுனிவர்சிட்டி சிம்பாலிக் டச் காட்சிகள் தான் . நடிப்பு பாஸ் மார்க்
யோகி பாபு காமெடியனாக படம் முழுக்க வந்து இரண்டு இடைங்களில் சிரிக்க வைத்து விடுகிறார்
முனீஷ் காந்த் காமெடி நன்றாக இருக்கிறது
நிவாஸ் கே பிரசன்னா வின் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம் . பின்னணி இசை சுமார்தான் ஜி ஏ கவுதம் எடிட்டிங்கில் பின் பாதியில் நல்ல விறு விறுப்பு
கார்த்திக் ஜி கிருஷ் இயக்கத்தில் பல படங்களின் காட்சிகளை ஒரே படத்தில் கோர்வையாகப்பார்த்த அட்லீ எஃபக்ட் கிடைக்கிறது
சபாஷ் டைரக்டர் ( கார்த்திக் ஜி கிருஷ்)
1 நாயகன் கார் சேசிங்கில் அந்த குற்ரவாளிகளை போலீசிடம் இருந்து காப்பாற்றும் காட்சி ஆங்கிலப்படங்களுக்கு நிகராகப்படம் ஆக்கபப்ட்டுள்ளது
2 நாயகனின் ஸ்டைலிஷான கெட்டப் , அவரது ஆக்சன் சீக்வன்ஸ்
3 முனீஷ் காந்த்தின் யதார்த்தக்காமெடி
ரசித்த வசனங்கள்
1 இந்த உலகத்துல தன்மானத்தோட வாழனும்னு நினைச்சா ஒண்ணு தகுதி இருக்கனும், இல்லைன்னா தைரியம் இருக்கனும், என் கிட்டே ரெண்டுமே இல்லை
2 பணம் சம்பாதிக்கப்போறேன்னு சொல்லு , ஆனா பணக்காரன் ஆகப்போறேன்னு சொல்லாத
3 நல்ல குணம் ஆனவனா ஆவான்னு குணசேகரன்னு பேரு வெச்சா ரொம்பக்கோபப்படறானே?
கோபப்படறதும் நல்ல குணம் தான் , ஆனா அதுக்கும் ஒரு தகுதி வேணும்
4 இந்த உலகத்துல ரெண்டே கேட்டகிரிதான் 1 ரொஷமான ஏழை 2 மோசமான பணக்காரன்
5 வாழ்க்கை அதுவா ஒரு ஆஃப்ஃபர் தரும்போது அது ரைட்டா , ராங்கா என யோசிக்காம ஒரு தடவை ட்ரை பண்ணிப்பார்க்கலாம்னு தோணுது
6 லவ் வேற அட்ஜஸ்ட்மெண்ட் வேற . வேற வழியே இல்லாம அட்ஜஸ் பண்ணி வாழ்வது லவ் ஆகாது , இது எங்கேஜ்மெண்ட் ரிங் மாதிரி தெரியல , சர்க்கஸ் ரிங் மாதிரி தெரியுது
7 ஐ சேஞ்ச்டு மை கீப் ,யூ கீப் மை சேஞ்ச்
8 சாக தைரியம் இல்லாதவனுக்கு செத்தாலும் தைரியம் வராது
9 வாழ்க்கையும் ஒரு விளையாட்டு மாதிரிதான் , எப்போ எல்லாம் ஜெயிக்கறமோ அப்போ எல்லாம் ஒரு வெற்றிக்கோப்பை கிடைக்கும், ஆனா அதை தக்க வெச்சுக்கறமா ? இல்லையா? என்பதில்தான் நம்ம வெற்றியே இருக்கு
10 நான் உன்னை அப்பப்ப விண்டோ ஷாப்பிங் பண்ணி இருக்கேன்
அப்டின்னா??
கிடைக்காதுனு தெரிஞ்சும் அப்பப்ப பார்த்து சந்தோஷப்பட்டுக்கறது
11 என் லைஃப்ஃபோட செகண்ட் ஆஃப் தான் எனக்கு பெட்டர் ஆஃப். எனக்கு பெட்டர் ஆஃப் கிடைச்சதும் அப்போதான்
12 நூடுல்ஸ் சாப்பிடற உனக்கே இவ்ளோ அதுப்பு இருந்தா கொத்து புரோட்டா சாப்பிடற எனக்கு எவ்ளோ இருக்கும் ?
13 அந்த பச்சைக்கலர் காரை நான் பார்த்தேன்
அதை ஏன் இப்போ சொல்றே? 3 கிமீ தாண்டி வந்துட்டோமே?
ஏன்னா இங்கே தானே யூ டர்ன் இருக்கு
14 ஒரு டபுள் ரூம் குடுங்க
மேரீடா? அன் மெரீடா?
என்? அன் மேரீடுனு சொன்னா ரூம் கொடுக்க மாட்டீங்களா?
மேரீடு அப்டினு சொன்னாதான் ரூம் கொடுக்க மாட்டேன்
15 ரொம்ப நடிக்காதடா, நீ மாறலைனு ஒத்துக்கறேன்
நடிப்புனு தெரிஞ்சாலும் அதானே உங்களுக்கு எல்லாம் பிடிக்குது
16 உங்களுக்கெல்லாம் தேடவே தெரியல. ஸ்பை யா இருக்க லாயக்கு இல்லை ,அவரு எப்போதும் பீரோக்குபின்னாலதான் ஒளிவார்
அவர் இவ்ளோ ட்ரேடிஷனலா இருப்பார்னு எனக்கு தெரியாது
17 வாழ்க்கைல எல்லா வலியும் நான் பார்த்துட்டேன் , ஆனா கிடைக்காதுனு தெரிஞ்சும் மீண்டும் மீண்டும் கிடைக்காததுக்கு ஆசைப்படறதுதான் என் தப்பு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் நாயகியைக்கடத்திட்டு வந்து அவள் அப்பாவிடம் பேரம் பேசுகிறான் , சரி ,நாயகியை ஒரு அறையில் அடைத்து வைக்காமல் காரில் டிக்கியில் ஏன் வைத்திருக்கிறான் ? எப்படி சாப்பாடு , மற்ற விஷயங்கள் எல்லாம் நடக்கும் ?
2 நாயகனுக்கு நாயகி அடைக்கப்பட்ட காரின் சாவி எப்படி கிடைத்தது ? காரிலேயே விட்டுட்டுப்போவாங்களா? யாராவது ? வெறும் கார் எனில் ஓக்கே , காரில் நாயகி பணயக்கைதியா இருக்கா
3 காரை வில்லனிடம் இருந்து ஆட்டையைப்போட்ட நாயகன் அதே காரில் நெம்பர் பிளேட்டையோ, காரின் கலரையோ மாற்றாமல் ஊரை ரவுண்ட் அடிச்ட்டு இருக்கான், போலீசும் கண்டுக்கலை, கார் ஓனரும் கண்டுக்கலை
3 நாயகனை வில்லன் க்ரூப் , ஓனர் க்ரூப் , நாயகியின் வருங்காலக்கணவன் க்ரூப் என பல கேங் தேடுது . நாயகன் தன் செல் ஃபோனை ஆன் ல வெச்சிருந்தா ஜிபிஎஸ் ட்ராக் பண்ணி ஆளை லொக்கேட் பண்ணிடுவாங்கனு தெரியாதா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - நாயகியின் கிளாமர் காட்சிகள் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வழக்கமான ரொமாண்டிக் மசாலாதான் பார்க்க போர் அடிக்காமல் இருக்கிறது . ரேட்டிங் 2.25 / 5
Takkar | |
---|---|
Directed by | Karthik G Krish |
Written by | Shrinivas Kaviinayam Karthik G Krish |
Produced by |
|
Starring | |
Cinematography | Vanchinathan Murugesan |
Edited by | G. A. Gowtham |
Music by | Nivas K. Prasanna |
Production company | Passion Studios |
Release date |
|
Country | India |
Language | Tamil |