பிரபுதேவா நடிச்ச குலேபகாவலி படக்கதையை இயக்கிய அதே இயக்குநர் அதே கதையை பட்டி டிங்கரிங் பண்ணி இன்னொரு காமெடி ஹிட்டைக்கொடுத்திருக்கிறார்
புராணக்கதையான மகா பாரதத்துல பாஞ்சாலி கைலயும்
மணி மேகலை கிட்டேயும் அள்ள அள்ளக்குறையாத அட்சய பாத்திரம் இருந்ததாகவும் அதன் மூலம் ஏழை மக்களின் பசியைத்தீர்த்து வைத்ததாகவும் ஒரு நம்பிக்கை உண்டு
அந்த அட்சய பாத்திரம் நவ நாகரிக உலகில் இருந்தா என்ன ஆகும்? என்பதன் கற்பனைக்கதைதான் இது
ஜோதிகா வும் , ரேவதியும் இதுல திருடிகளா வர்றாங்க அவங்க அட்சய ;பாத்திரம் புதைக்கப்பட்ட இடத்தை தெரிஞ்சுக்கிட்டு அதை அபேஸ் பண்ண போடும் மொக்கை திட்டங்கள் தான் திரைக்கதை
ஜோதிகா வழக்கம் போல் தனது அக்மார்க் ஓவர் ஆக்டிங் , காமெடி முக பாவனைகள் கூட புதுசா ஆக்சன் சீக்வன்சும் பண்ணி இருக்காங்க , சொந்தபடம் வேற இது கூட செய்யலைன்னா எப்படி? குட்
ரேவதி சுமார் ரகம் தான். ஜோ பக்கத்தில் அவரை விட இளமையா தெரியனும்கற அவர் ஆர்வம் புரியுது , ஆனா 11 வருச வித்தியாசம் , முடியுமா?
இந்தப்படத்தின் மெயின் ஹீரோ ஆனந்தராஜ் தான் , புலன் விசாரணை , மாநகரக்காவல் படங்களில் வில்லனாக மிரட்டியவர் இதில் காமெடி கலக்கல் நாயகனாக உலா வருகிறார், இது போக இவருக்கு இன்னொரு பெண் ரோல் வேற , அசால்ட்டா ;போட்டுத்தாக்கறார்
படத்தின் மெயின் வெற்றிக்கு இவ்ருதான் முதல் காரணம்
அடுத்தது மொட்டை ராஜேந்திரன் , இவர் ரேவதிக்கு ப்ரப்போஸ் பண்ற்து பழைய காமெடி என்றாலும் ஜனங்க ரசிக்கறாங்க
யோகிபாபு இவர் பெரிசா எந்த காமெடியும் பண்ணல, பாதி நேரம் தன் முகம் அகோரமா இருக்கு அப்டினு சுய இரக்க வசனமாவே பேசறார் , போர் , இதெல்லாம் நாசர் நாயகனா நடிச்ச முகம் படத்துலயே சொல்லியாச்
ஆனா ஒரே ஆறுதல் வழக்கமா இவரு பண்ற அடேய் அந்த மண்டையா இந்தத்தலையா டைப் காமெடி இதுல இல்ல
பாடல்கள் பரவால்ல , க்ளைமாக்ஸ் வர்ற டைம்ல ஒரு பாட்டு தேவை இல்லாம
ஒளிப்பதிவு இசை ஓக்கே ரகம்
நச் வசனங்கள்
1 கோடில ஒருத்தர்தான் சிரிக்கற உணர்வே இல்லாம இருப்பாங்க
பொண்ணுக்கு அழகே சிரிப்புதான் #JackpotFDFS
2 உங்க பையனுக்கு சின்னதா பேரு வெச்ட்டு சோறு ஜாஸ்தியா வெச்ட்டீங்களா? இவ்ளோ பெருசா வளர்ந்திருக்கான் ? ( யோகி பாபு இன்ட்ரோ) #JackpotFromToday
3 நமக்கு 3 ராசி இல்லையெ,இப்படி 3 பேரா கார்ல போறோமே ,போற காரியம் உருப்படுமா?
நிலா வுக்கே 3 பேராதானே போனாங்க?
அது moon (மூன்) அதுனால மூணு பேரா போனாங்க,சக்சஸ் ஆகிடுச்சு ,கிரேசி மோகன் டைப் வசனங்கள் ,வசனகர்த்தா ராக்ஸ் #JackpotFromToday
4 சுவாமி!அவங்களை நியூ வா பாக்க ஆசைப்படறேன்
புரியல
அதான் டிரஸ் இல்லாம....
ஓ,நியூடா? விளங்கிடும் #JackPotReview
5 நீ நிர்வாணமா இருக்கற போட்டோ என்கிட்ட இருக்கு
ஆ.ராஜ் =எவ்ளோ பணம் கேட்டாலும் தந்துடறேன்
என் போட்டோக்கு அவ்ளோதான் வேல்யூவா? #JackPotReview
2000 ரூ
6 இந்த வீட்டை சர்ச் பண்ணப்போறோம்
அய்யய்யோ ,கோயில் மாதிரி இருக்கற வீட்டை சர்ச் ஆக்கப்போறாங்களே?
யோவ் ,சர்ச்னா தேடறது...சோதனை போடறது #JackPotReview
7 சார்,நீங்க பாக்க ஐஜி மாதிரியே இருக்கீங்க
மொட்டை ராஜே = தேங்க்ஸ்பா
யோவ் ,அது சாக்பீஸ்
கைல வெச்சிருக்கற தம் குடுத்தா....
பரவால்ல,வாய் நமநமங்குது
நம்மை விடப்பெரிய பிக்காலியா இருப்பான் போல #JackPotReview
8 அவசரப்பட்டு ஸ்லோவா வந்துட்டீங்கண்ணே
என்ன லேங்க்வேஜ்டா இது? #JackPotReview
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 18/10/1977 ல பிறந்த ஜோதிகா (42)தலைமுடியைவிட
20/7/1966ல பிறந்த ரேவதி((53) தலைமுடி அவ்ளோ கறுப்பா இருக்கே எப்டி? பாம்பே "டை"யிங்க்கா? #JackPotReview
2 அட்சயப்பாத்திரம் என்பது உணவுப்பொருள் மட்டுமே அள்ள அள்ளக்குறையாம வரும்னு ஒரு கற்பனைக்கதை உண்டு.அதை பணம் ,வைரம்,தங்கம் ,பால் எதா இருந்தாலும் அள்ள அள்ள சுரக்கும்னு கற்பனை.அது தான் கதையின் மையம் #JackPotReview
3 மொட்டை ராஜேந்திரன்,ஆனந்தராஜ் & கோ வின் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத காமெடி டிராக்கில் ,பி,சி சென்ட்டர் ரசிகர்களுக்கான காமெடி கலாட்டா @இடைவேளை #JackPotReview
4 நல்ல மனம் கொண்ட விஜயகாந்த் ,அகரம் சூர்யா மாதிரி ஆட்களின் படங்கள்வெற்றி பெறுவது சமூகத்துக்கு நல்லது #JackPotReview
சபாஷ் டைரக்டர்
1 மொக்கை தாதா வாக வரும் ஆனந்த ராஜ் அவரது அடியாட்களாலேயே கலாய்க்கப்படுவதும் அதை அவர் காமெடியாக எடுத்துக்கொள்வதும் அருமை
2 பின் பாதியில் ஆந்திரா பார்டரில் தமிழ்க்கொலை செய்யும் போர்டுகளுக்கு அவர் தரும் நையாண்டி சமாளிப்புகள் அதகளம்
3 மொட்டை ராஜேந்திரனின் பாத்திரப்படைப்பு அ வர் நடிப்பு
4 ஓப்பனிங்கில் வரும் அட்சய பாத்திர ஃபிளாஸ்பேக் காட்சி
லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 லாஜிக் மிஸ்டேக் 1− 5 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பித்தளைப்பாத்திரம் ஆற்று வெள்ளத்துல ஒரு கிமீ தூரம் அடிச்ட்டு (மிதந்து)போகுது.ஒரு மீட்டர் தூரத்துலயே தண்ணீர் முகண்டு உள்ளே போகாது ? #JackPotReview ( அட்சய பாத்திரம் தண்ணீரில் மூழ்காதுனு யாராவது சால்ஜாப் சொன்னா அவருக்கு பதில் ரெடியா இருக்கு , க்ளைமாக்ஸ்ல எப்படி மூழ்கிடுது?
2 லாஜிக் மிஸ்டேக் 2- 5 ரூபா ரயில் டிக்கெட் எடுக்காததுக்காக டிக்கெட் பரிசோதகர் 5000 ரூபா அபராதம்கறார்,அந்தப்பையன் 2000 ரு தான் இருக்குங்கறான்.சட்டப்படி 20 மடங்கு கட்டணம் அல்லது ரூ 500 இரண்டில் எது அதிகமோ அதுதானே அபராதம்? #JackpotFromToday
3 அட்சய பாத்திரம் என்பது தெய்வீகத்தன்மை கொண்டது , அதை க்ளைமாக்ஸில் ஜோதிகா காலில் பாதத்தில் மாட்டி தூக்கிக்காட்டுவது என்ன செயல்? ( விஸ்வரூபம் 1ல் இப்படித்தான் கமல் பணத்தை தூக்கி விசிறி பல இன்னல்களை சந்தித்தார் . பணம் லட்சுமி அல்லவா? )
4 க்ளைமாக்ஸ் ல ஜோ கண் முன் ரேவதி தண்டவாளத்தை கிராஸ் பண்ணிடறாரு , ரயில் அதுக்குப்பின் தான் கிராஸ் ஆகுது , அதுக்குள்ள அவர் செத்துட்டாரா? என ஓவரா சலம்புவது தேவை அற்ற செண்ட்டிமெண்ட்
விகடன் மார்க் ( யூகம்) 43
குமுதம் ரேட்டிங் ( யூகம்) 3.5 ? 5
சி,பி கமெண்ட் -ஜாக்பாட் − அட்சய பாத்திரத்தை கைப்பற்றப்போராடும் திருடிகளின் காமெடி கலாட்டா.ஆனந்த்ராஜின் டூயல் ரோல்,மொட்டை ராஜேந்திரனின் ரோல் கலக்கல் காமெடி,யோகிபாபு காமெடி சுமார் ரகம்,பி,சி ல கலெக்சன் அள்ளிடும் ,முதலீடு போல 2 மடங்கு சம்பாதிக்கும் .விகடன் 43 ,ரேட்டிங் 3/5 #JackPotReview
அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2 அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி, பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)
3/5