சென்னை - குமுதம் - ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பு பாகம் 2-
குமுதம் பத்திரிக்கை எங்களை எல்லாம் மதிச்சு அழைச்சு விழா நடத்துவதில் ரொம்ப சந்தோஷம்.. 12 வருடங்களுக்குப்பின் சந்திக்கிறோம். இங்கே பேசுனவங்க எல்லாம் குமுதம் பத்திரிக்கை பற்றி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க.. நான் என் மனசுல உள்ளதை எந்த ஒப்பனையோ,அலங்காரங்களோ செய்யாம சொல்றேன்..
2000 ஆம் வருஷ தீபாவளி மலர்ல இதே மாதிரி நிகழ்ந்த ஜோக் ரைட்டர்ஸ் சந்திப்பை 2 பக்க கட்டுரையா போட்டீங்க.. அப்போ இதே மாதிரி குமுதம் புக்ஸின் ஜோக்ஸ் தரத்தை கூட்டுவது எப்படி?ன்னு பேசுனோம்.. அப்போ குமுதத்தின் விலை ரூ 6. குமுதத்தோட சேல்ஸ் ஏழரை லட்சம். அப்போ என்ன டாக் இருந்துச்சுன்னா குமுதம் புக்கை ஏழரை லட்சம் பேருக்கும் இலவசமா குடுத்தாலே அதுல வர்ற விளம்பரங்கள் மூலமா குமுதத்துக்கு வர்ற லாபம் ஒரு புக்குக்கு ரூ 1.80 அப்டினு சொல்வாங்க.
அப்போ ஒரு ஜோக்குக்கு ரூ 50 சன்மானம் குடுத்தீங்க.. ஒரு பக்க கதைக்கு ரூ 100 குடுத்தீங்க.. அப்போ ஒரு பவுனோட விலை ரூ 3900. பெட்ரோல் விலை ரூ 34 .குமுதம் விலை ரூ 6 . இப்போ 12 வருஷங்கள் கழிச்சு பார்த்தா ஒரு பவுனோட விலை ரூ 24,000 + . பெட்ரோல் விலை ரூ 72 .குமுதம் விலை ரூ 10 . எல்லாமே டபுள் மடங்கை தாண்டிடுச்சு. ஆனா சன்மானம் 12 வருடங்களுக்கு முன்னால என்ன சன்மானம் தந்தீங்களோ அதே 50 ரூபா தான் தர்றீங்க..
போட்டி பத்திரிக்கைகளான தின மலர் வார மலர்ல ஒரு ஜோக் குக்கு ரூ 500 தர்றாங்க.. அது போக ஸ்பெஷல் ஜோக் 1 க்கு 1000 தர்றாங்க. ஆனந்த விகடன்ல ஒரு ஜோக் = ரூ 100. ஆனா குமுதம் இதழ்ல ஏன் சன்மானத்தை உயர்த்தலை?
உங்களை விட பல மடங்கு சேல்ஸ்ல குறைவா இருக்கும் கல்கி வார இதழ்ல 2000 ஆம் வருஷத்துல ஒரு ஜோக்குக்கு ரூ 15 குடுத்தாங்க. இப்போ 3 மடங்கா 45 தாண்டி ரூ 50 தர்றாங்க.. அட்லீஸ்ட் நீங்க ரூ 100 ஆவது தர வேண்டாமா?
அடுத்து செலக்ஷன் டீம். பொதுவா இப்போ இருக்கும் அனைத்து பத்திரிக்கைகளிலும் ஜோக் செலக்ஷனுக்கு அனுபவம் மிக்க ஆட்களை போடுவது கிடையாது. செலக்ஷன் டீம்ல இருக்கறவங்க பல வருசங்கள் எல்லா பத்திரிக்கைகளும் படிச்சவரா இருக்கனும். அப்போதான் உல்டா ஜோக்ஸ் வந்தா கண்டு பிடிக்க முடியும்..
ஆல்ரெடி வந்த ஜோக்குகள் தான் இப்போ மீண்டும் மீண்டும் ரீ மேக் ஜோக்குகளா உலா வந்துட்டு இருக்கு. ஒரு நல்ல படைப்பாளி ஒரு நாளுக்கு 10 ஜோக் அனுப்பினா ஒரு உல்டா படைப்பாளி பல புக்ஸ்ல இருந்து சுட்டு 100 ஜோக்ஸ் அனுப்பறார். செலக்ஷன் டீம்ல இருக்கறவங்க அடடே, இத்தனை அனுப்பி இருக்காரே என அவருக்கே அதிக வாய்ப்பு தர்றீங்க.
இதுக்கு நல்ல உதாரணமா எம் அசோக் ராஜா அரவக்குறிச்சிப்பட்டி அவர்களை சொல்லலாம்.. அவர் புக் ஷாப்ல தான் இருக்கார். எல்லா பழைய புக்ஸும் அத்துபடி.. அது போக நடை பாதைக்கடைகள்ல விற்கும் பழைய குமுதம், விகடன், பாக்யா வாங்கி அதுல வரும் ஜோக்ஸ் காப்பி அடிச்சு எழுதறார்.. ஏன் அப்படிப்பட்டவங்களுக்கு வாய்ப்பு தர்றீங்க? புது ஆட்களுக்கு புது ஜோக்ஸ்க்கு வாய்ப்பு தாங்க..
புது ஜோக்ஸ் போட ஒரு குறுக்கு வழி இருக்கு. அது டாபிக்கல் ஜோக்ஸ் போடறதுதான்.. உதாரணமா இந்த மன்னர் ஜோக்ஸ், வேலைக்காரி ஜோக்ஸ், நர்ஸ் ஜோக்ஸ் எல்லாம் கட் பண்ணுங்க.. அந்தந்த வாரத்துல எது ஹாட் டாபிக்ஸோ அது சம்பந்தமான ஜோக்ஸ்.. உதாரணமா ஆண்ட்ரியா-அனிரூத் கிஸ் மேட்டர்,அழகிரி மகன் கைது ஆகும் சூழல்,கார்ட்டூனிஸ்ட் கைது இந்த மாதிரி மேட்டர்ஸ் கைல எடுங்க.. அப்போ காப்பி ஜோக்ஸ் உல்டா ஜோக்ஸ் குறைஞ்சுடும். நீங்க மீண்டும் மீண்டும் தலைவர் ஜோக், டாக்டர் ஜோக், வேலைக்காரி ஜோக் போட்டா எல்லாம் ரிப்பீட் ஆகிட்டே தான் இருக்கும்
இன்னைக்கு ஆனந்த விகடனும், குங்குமமும் நெட்ல அப்டேட்டா இருக்காங்க.. ட்வீட்ஸ் வலை பாயுதே , வலைப்பேச்சு என்ற டைட்டில்ல வருது,.,. ஆனா குமுதத்துல வர்றது இல்லை. குமுதம் ரிப்போர்ட்டர்ல ஆன் லைன் ஆப்பு என்ற பெயரில் வருது.. ஆனா ஏன் குமுதத்துல. ட்வீட்ஸ்க்குன்னு 2 பக்கங்கள் ஒதுக்கக்கூடாது?
ஒரு ட்வீட்க்கு ரூ 50 என சன்மானம் குடுத்து படைப்பாளிகளை ஊக்குவியுங்கள்.. ஏராளமான திறமைசாலிகள் சமூக வலைத்தளங்களில் இருக்காங்க.. அவங்களை உபயோகப்படுத்துனா அவங்களும் வளர்வாங்க, குமுதமும் வளரும்.
குமுதம் இதழில் முதல்ல எல்லாம் ஆறு வித்தியாசங்கள் டாபிக்ல ஒரு ஜோக் செமயா வரும், ஆனா இப்போ அதுல குவாலிட்டி குறைஞ்சுடுச்சு.. அதில் நல்ல கவனம் செலுத்தனும்.
குமுதம் பத்திரிக்கைல வாரம் மினிமம் 25 ஜோக்ஸாவது போடனும். ரெகுலரா ஜோக்ஸ் எழுதறவங்க 50 பேர் இருக்காங்கன்னா அவங்க தலா 50 ஜோக்ஸ் வாரம் அனுப்பினாலே வாரா வாரம் 2500 ஜோக்ஸ் வந்துடும். ஆனா நீங்க என்ன பண்றீங்க? குமுதம் இதழில் பணி புரியும் குட்டி மு வெங்கடேஷன், மாதவரம் பால்பண்ணை, ஜெயாப்ரியன், சென்னை இவங்க 2 பேருக்கும் தலா 2 பக்கம் ஒதுக்கிடறீங்க. அவங்க ஜோக்ஸ் போட்டது பொக ஏதோ போனா போகுதுன்னு தர்மம் போடற மாதிரி வாசகர்கள் ஜோக்ஸ் அஞ்சோ பத்தோ போடறீங்க? அது எப்படி பத்தும்?
உங்க ஆஃபீஸ் ஆட்கள் ஜோக்ஸை போட வேண்டாம்னு சொல்லலை.. அதை கணக்குல வெச்சுக்காதீங்கன்னு சொல்றேன்.. வாசகர்கள் ஜோக்ஸ் மினிமம் 25 வாரா வாரம் போடுங்க.. அப்போதான் உற்சாகமா ஜோக்ஸ் எழுத முடியும்,..
வாரா வாரம் ஒரு ஸ்பெஷல் ஜோக் கை ஒரு முழுப்பக்கத்துக்கு போட்டு முத்திரை ஜோக்னு போடுங்க.. ஆல்ரெடி இது ஆனந்த விகடன் ஒரு டைம் செஞ்ச மேட்டர் தான்... நல்ல விஷயங்களை நம ஃபாலோ பண்ணறது தப்பில்லை.
சினிமா விமர்சனங்கள் உங்க யூனிட் ஆட்கள் எழுதறாங்க.. அவங்க பெரும்பாலும் தமிழ்ப்படங்க மட்டும் தான் விமர்சனம் எழுதறாங்க. மற்ற மொழிப்படங்களான ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஹாலிவுட் பட விமர்சனங்களை வாசகர்கள் எழுத வாய்ப்பு குடுங்க.. படிக்கறவங்களுக்கும் ஒரு வெரைட்டி கிடைக்கும்.
குமுதம் புக்ல கண்ட்டெண்ட் ரொம்ப கம்மியா இருக்கு.. ஒரு குமுதம் புக்கை கேப் விடாம படிச்சா 45 நிமிஷங்கள்ல ரெகுலர் வாசகனும், 1 மணி நேரத்துல புது வாசகனும் படிச்சுடலாம்.. ஆனந்த விகடன், இந்தியா டுடே எல்லாம் படிச்சு முடிக்க 2 மணி நேரத்துக்கும் மேல ஆகுது..
- தொடரும்
என் பேச்சு முடிஞ்ச பின் ஆசிரியர்கள், எடிட்டர்கள் பேசுனாங்க.. பின் கார்டூனிஸ்ட் கண்ணா 3 நகைச்சுவை கார்ட்டூன் வரைஞ்சு ஜோக்ஸ் போட்டி வைச்சாங்க.. அது பற்றி பிறகு....
இதன் முதல் பாகம் படிக்காதவங்க
http://www.adrasaka.com/2012/