Showing posts with label ஜெயேந்திரர். Show all posts
Showing posts with label ஜெயேந்திரர். Show all posts

Wednesday, May 16, 2012

ஜெயேந்திரர் ரஞ்சிதாவிடம் பம்முவது ஏன்? கோர்ட் காட்சிகள்

திலும் கருத்துச் சொல்​லாமல் ஒதுங்கிச் செல்​லும் ஜெயேந்திரர், நித்தியானந்​தா விவகாரத்தில் ரஞ்சிதா குறித்துப் பேச... நீதிமன்றத்தில் நிற்கிறது சிக்கல். 
கடந்த 9-ம் தேதி, ஆன்மிகசுற்றுப்​பயணத்தில் இருந்த ஜெயேந்​திரர், கிருஷ்ணகிரியில் பத்திரிகையாளர்​களைச் சந்தித்​தார்.


 சி.பி - சாமியார், ஆதீனம் இந்த மாதிரி துறவிகள் எதுக்கு சுற்றுப்பயணம்கற பேர்ல ஊர் சுத்தறாங்க? மனசுக்குள்ள ஜனாதிபதின்னு நினப்பா? 


 ''மதுரை ஆதீனமாக நித்தியானந்தர் நியமிக்கப்பட்டது சரி​யானது அல்ல. நாங்கள் அதை ஆதரிக்கவும் இல்லை. ஆதீனமாக வருபவர் மொட்டை அடித்து ருத்ராட்சம் அணிந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். ஆனால், நித்தியானந்தர் அப்படிச் செய்யவில்லை. 


சி.பி - இதெல்லாம் ஒரு பிரச்சனையா?  அவர் தான் இந்துக்கள் அனைவர்க்கும் காது குத்தி மொட்டை போட்டுட்டாரே.. போதாதா?


அதோடு, நித்தியானந்​தாவோடு எப்போதும் ரஞ்சிதா என்ற பெண் உடன் இருக்கிறார். இது, ஆன்மிகத்துக்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்று ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டார். அதுதான் இப்போது பற்றி எரிகிறது.



சி.பி - ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.. நித்தி எப்போதும் ஜிஞ்ஜிதா வுடன் தான் இருக்கிறார் என்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். அவர் பலருடன் இருப்பார். 10 ஓடு 11 தான் அவர் ஹி ஹி 


''10 நாட்களுக்குள் ஜெயேந்திரர் இந்தக் கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்'' என்று, நித்தியானந்தர் எச்சரித்தார். '10 நாட்கள் எதற்குப் பொறுக்க வேண்டும்?’ என்று நீதிமன்றப் படி ஏறிவிட்டார் ரஞ்சிதா.



 



எழும்பூர், தலைமை மாநகரக் குற்றவியல் நீதிமன்றத்​துக்குக் கடந்த 11-ம் தேதி வந்தார் ரஞ்சிதா. போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரஞ்சிதா வந்து சேருவதற்குத் தாமதமாகிப்போனது. நீதிமன்றத்தில் அழைத்தபோது ரஞ்சிதா வராத காரணத்தால், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் 14-ம் தேதி காலை கோர்ட்டுக்கு வேகமாகவே வந்து சேர்ந்தார்.



 'என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஜெயேந்திரர் மீது, இ.பி.கோ. 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரவீந்திரன், மனு மீதான விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவு போட்டார்.


ரஞ்சிதாவிடம் பேசினோம். ''நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். ஜெயேந்திரர் தேவை இல்லாமல் என்னை வம்புக்கு இழுத்திருக்கிறார். நடிகைதானே... என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு அமைதியா போயிடுவானு நினைச்​சிட்டார். கண்டிப்பா இந்த விஷயத்தை நான் சும்மா விட மாட்டேன். எப்படி ஊரைக் கூப்பிட்டு என்னைப் பத்தி அவதூறாகப் பேசினாரோ, அதைப் போன்று, 'நான் பேசியது தப்பு’ என்று, அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்றார்.

http://2.bp.blogspot.com/-M98tr8t_cvE/TlsDzGnQAnI/AAAAAAAAC_8/IhqGJPIaeWo/s1600/Actress-Ranjitha-Hot-First-Night-Pictures.jpg


ரஞ்சிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முருகைய்யன்​ பாபு, அப்ரார் அஹமது ஆகியோரிடம் பேசினோம். ''ரஞ்சிதாவின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஜெயேந்திரர் பேசி இருக் கிறார். அந்தப் பேச்சு ரஞ்சிதாவின் மனதை ரொம்பவே பாதித்து விட்டது. அதனால் எந்தச் சூழ்நிலையிலும் வழக்கை வாபஸ் வாங்க மாட்டோம்'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.


ஜெயேந்திரரின் கருத்தை அறிய,  காஞ்சி மடத்தைப் பல முறை நாம் தொடர்பு​கொண்​டோம். இது பற்றி அவர் பேச விரும்பவில்லை என்றதும், மடத்துக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.


''ரஞ்சிதாவைப் பற்றி தேவை இல்லாமல் பேசிவிட்டோமோ என்று, ஜெயேந்திரர் இப்போது வருத்தத்தில் இருக்கிறார். மடத்துக்கு வேண்டப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர் ஒருவரும் இந்தப் பேச்சை ரசிக்கவில்லை.


 அதனால், ஜெயேந்திரருக்குப் போன் செய்து அந்த முக்கியப் பிரமுகர் கோபத்தோடு பேசி இருக்கிறார். அதில் ஜெயேந்திரர் ரொம்பவே அப்செட். அதனால்தான் யாரையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் ஜெயேந்திரரை முடக்கிவிடலாம் என்று சிலர் திட்டம் போட்டு பல்வேறு காரியங்களைச் செய்கிறார்கள். இந்த சலசலப்புக்கு எல்லாம் காஞ்சி மடம் அஞ்சாது. எல்லாப் பிரச்னைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்'' என்றனர்.


இதற்கிடையில், ரஞ்சிதாவைத் தொடர்புகொண்ட காஞ்சி மடத்து நிர்வாகி ஒருவர், 'பேசியது தவறு என்பதை ஜெயேந்திரர் உணர்ந்து கொண்டார். உங் களிடம் போன்ல வருத்தம் தெரிவிக்கத் தயாராக இருக் கிறார்.அதனால் நீங்க வழக்கை வாபஸ் வாங்கிடுங்க..’ என்று கேட்டுக்கொண்டாராம். ஆனால் ரஞ்சிதாவோ, 'பிரஸ் மீட் வெச்சு என்னை அசிங்கப்படுத்திட்டு, போன்ல மன்னிப்பு கேட்பாரா..? பிரஸ் மீட் நடத்தி மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க, பிறகு பார்க்கலாம்’ என்று போனை கட் செய்து விட்டாராம்.


சி.பி - விடம்மா விடம்மா.. இதெல்லாம் பெரிய மேட்டரா? டைம் லைன்ல ஏடாகூடமா பேசிட்டு டி எம் ல கால்ல விழறது தமிழர்களூக்குபுதுசா என்ன? அட்ஜஸ் பண்ணிக்குங்க..  


http://schlaepfer-beck.ch/wp-content/uploads/2011/08/ranjitha-i0.jpg


மக்கள் கருத்து 


1.ஜெயந்திரர் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்க வேண்டும். மடாதிபதி என்பதால் யாரை வேண்டுமானாலும் நிந்திக்கலாம் என்ற அகங்காரம் இந்த விஷயத்தில் மட்டுமல்ல மற்ற எல்லா விஷயத்திலும் பின்பற்றலாம். இனி "பேச்சுரிமை" என்று அசிங்கமாக (தேர்தல் மேடைகளில் ஜெஜெ-வை திட்டியது ஒரு உதாரணம் - இதில் எல்லா கட்சிகளும் அடக்கம், ஜெஜெ ஒரு உதாரணமே), ஆபாசமாக, பூடகமாக பேசுவது குறைந்தால் மக்கள் குறைகளை, தேவைகளை பற்றி பேசுவார்களோ என்னமோ?

காஞ்சி மடாதிபதி என்றால் என்ன? இன்னமும் எச்சரிக்கையுடன் அல்லவா இருக்க வேண்டும் ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ இந்த மனிதரை தங்கள் தலைவராக அல்லவா ஒரு கூட்டமே (அல்லது சமுதாயமே) ஏற்று கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும் இது போல கீழ்தரமாக பேசுபவர்கள் என்ற எண்ணத்தை அல்லவா இது தோற்றுவிக்கிறது.

பகிங்கரமாக மன்னிப்பு கேட்டால் இவரின் மதிப்பு கூடுமே தவிர குறையாது (குறைவது போல தோன்றினாலும்). தன் தவறை உணர்ந்து அதற்காக தைரியமாக மன்னிப்பு கேட்கும் அளவிற்கு தெளிவானவர் என்று. இதனை மூடி மறைத்தால் அது இவருக்குதான் இன்னமும் அசிங்கம் - ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கி அவமானப்பட்டவர்..


2.Cavitha3
ரஞ்சிதா இந்தியாவின் பலம் மிக்க பெண்களில் ஒருவர் ஆகிவிடுவார் போல இருக்கிறதே. ஒரு பெண்ணின் உடலுக்கு இவ்வளவு சக்தியா
3. Senthilnathan3
இந்த சாமியார்கள் சண்டை மாமியார்கள் சண்டைய மிஞ்சிடும் போலிருக்கே!
4.
Thiyagarajan4 Hours ago
எதற்காக ஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் ! நித்தி மொட்டையா போட்டுக் கொண்டு ஆதீனகர்த்தா ஆகியுள்ளார்? ரஞ்சிதா நித்தி கூடவே இல்லையா? உண்மையைத்தானே கூறியுள்ளார் ! உண்மை சுடும் ! சுடட்டுமே !
5. Suresh6 Hours ago
ஒரு பிராடிற்கு உன்னொரு பிராடு மேல் இருக்கும் வயிற்றெரிச்சல். வேறென்ன சொல்ல. 
1.சச்சின் டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா’ பட்டம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் நீதிபதியும் இப்போதைய 'பிரஸ் கவுன்சில்’ தலைவருமான மார்கண்டேய கட்ஜு, பாரதிக்கு அந்த விருது தரப்பட வேண்டும் என்கிறாரே?
  பாரதி அதைவிடப் பெரிய விருது பெற்றவன். 'மக்கள் கவிஞன்’ என்ற மகத்தான விருதுக்குப் பிறகு மற்றது எதற்கு?


பாப்லோ நெருடா சொன்னது பாரதிக்கும் பொருந்தும். ''நான் கத்தையாக இலக்கியப் பரிசு​களை அள்ளிக் குவித்திருக்கிறேன். வண்ணத்துப் பூச்சிகளைப் போல அற்பாயுசுப் பரிசுகள் அவை. ஆனால், நானே ஈட்டிய பரிசுகள் மகத்​தானவை. பலர் அதைக் குறை கூறினாலும் எவருக்கும் எட்டாத ஒன்று. கலோபாசனையாலும், சுய தேடலாலும் எழுத்துக் கோர்வைகளால் மாய்மாலம் செய்வதற்கு மாறாக, நான் மக்கள் கவிஞனானேன். அதுதான் எனக்குக் கிடைத்த மகத்தான விருது'' என்றான் நெருடா. இது, மகா கவி பாரதிக்கும் பொருந்தும்.


'பாரத ரத்னா’ பட்டத்தைவிட பாரதிக்கு அவசரமாய்ச் செய்ய வேண்டிய ஒன்று உண்டு. புதுச்சேரியில் அவர் வாழ்ந்த வீட்டை மராமத்து செய்கிறோம் என்று, இரண்டு ஆண்டு​களாக அந்த வீட்டைப் பூட்டி வைத்து இருக்கிறது ரங்கசாமியின் அரசு. அந்தப் பூட்டை உடைக்க பாரதி பக்தர்கள் புறப்படட்டும். புண்ணியம் வாய்க்கும்!



2. நாடாளுமன்றம் 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதே? 



கடந்த 10-ம் தேதி, மாநிலங்கள் அவையில் காலை 11 மணிக்கு ஒரு எம்.பி. எழுந்தாராம். ''ஏதோ நாற்றம் வீசுகிறது'' என்றாராம். சபைத் தலைவராக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இருந்துள்ளார். அவர் உடனே, அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி இருக்கிறார். அப்போது, அதே அவையில்தான் பிரதமரும் இருந்துள்ளார். அனைவருமே அந்த கெட்ட நாற்றத்தை உணர்ந்துள்ளார்கள். சபை, அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. ஏ.சி. இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு கேஸ் கசிந்ததால் ஏற்பட்ட நாற்றம் என்று கண்டுபிடித்துச் சரிசெய்துள்ளார்கள்.



நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் 'ஊழல்’ என்ற துர்நாற்றம், அதிகமாக விவாதப் பொருளாகி வீசுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பற்றி நம்முடைய தலைவர்கள் யோசிக்க வேண்டும். ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனால், நாம் அந்த ஓர் ஆண்டில் எவ்வளவு பக்குவப்பட்டுள்ளோம் என்பதே மரியாதையைத் தரும்!





3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆ.ராசா ஜாமீன் கேட்டு விட்டாரே? 


இப்படி ஒரு ஆள் உள்ளே இருக்கிறார் என்பதே தி.மு.க. தலைமைக்கு மறக்க ஆரம்பித்து விட்டது. எனவே, அவர் வெளியே வந்துதானே ஆக வேண்டும். கடந்த மே 10-ம் தேதி, தனது 49-வது பிறந்த நாளை ஆ.ராசா, திஹாரில் கொண்டாடினார். பொன்விழா நேரத்திலாவது வெளியில் இருக்க அவர் நினைக் கலாம்தானே? ஆனால், 'நான் நிரபராதி என்று தீர்ப்பு பெற்ற பிறகுதான் வெளியில் வருவேன்’ என்று, அவர் செய்த அறிவிப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது!




4. புதுக்கோட்டையில் பரபரப்பையே காணோமே? 


காற்றில் கத்தியைச் சுழற்றினால் எப்படிச் சத்தம் வரும்? எதிரிகளே இல்லாத களம், ஆளும் கட்சிக்குத்தான் அவமானம்!



5.   2ஜி விவகாரத்தில் 122 உரிமங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதை, மறுஆய்வு செய்ய வேண்டும் என்று முதலில் மனு போட்ட மத்திய அரசு, திடீரென வாபஸ் வாங்கிக் கொண்டது ஏன்? 



உச்சி மண்டையில் மீண்டும் உச்ச நீதிமன்றம் கொட்டிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் மறுஆய்வு மனுவை வாபஸ் பெற வைத்துள்ளது.


122 உரிமங்கள் முறையாகத்தான் வழங்கப்பட்டன என்று வாதிடத் துப்பு இருக்குமானால், ஏன் மனுவை வாபஸ் பெற வேண்டும்? இதில், தன்பலம் இல்லாததால், குடியரசுத் தலைவர் மூலமாக நெருக்கடி கொடுக்கும் காரியத்தையும் காங்கிரஸ் அரசு பார்த்தது. மொத்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதையே அப்பட்டமாக உணர்த்து​கின்றன இந்தக் காட்சிகள்!



6.மூவருக்கும் ஜாமீன் கிடைத்து விட்டதே? 


உள்ளே ஒழுங்காக இருந்தார்கள். வெளியில்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொம்பு சீவி விடுபவர்கள், கொள்ளை நோக்கம் கொண்டவர்கள், கொடுக்கல் - வாங்கல் பேர்வழிகள் ஆகிய மூன்று தரப்பிடம் இருந்தும் இவர்கள் விலகி இருந்தால் எதிர்காலமாவது நிம்மதியாய் அமையும்!



7. கூடங்குளம், இடிந்தகரையில் மீண்டும் போராட்டம் தொடங்கி விட்டதே?


அணுஉலை குறித்த அச்சம் அந்தப் பகுதி மக்களுக்கு அப்படியே இருக்கிறது. இந்த அச்சத்தை நீக்க வேண்டிய பொறுப்பு, தமிழக முதல்வருக்கு இருக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை பகுதிக்குச் சென்று அந்த மக்களிடம் முதல்வர் நேரடியாகப் பேசினால் மட்டுமே, அரசு எதிர்பார்க்கும் முடிவை எட்ட முடியும்!



அந்தப் பகுதி மக்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை, முதல்வரிடம் அதி காரிகள் சொல்லவில்லை. பத்து மாதங்களைக் கடந்து நடக்கும் ஒரு போராட்டப் பகுதிக்கு ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.-யுமே இதுவரை போகவில்லை என்பது நிர்வாகக் கோளாறு. அக்கறை இன்மையின் வெளிப்பாடு!



8. ஜெயேந்திரருக்கு இது தேவையில்லாத வேலை’ என்கிறாரே மதுரை ஆதீனம்? 


தேவையில்லாத 'வேலைகள்’ பார்ப்பது​தானே பல மடாதிபதிகளின் முழு நேர வேலையாக ஆகிவிட்டது.


'என்றும், எப்போதும் தூங்காத கண் ஒன்று நமது இதயங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறது. நமது எண்ணங்களைப் பதிவு செய்துகொண்டு இருக்கிறது’ என்பார்கள். இதை, சாமான்ய மக்கள் உணர்ந்து திருந்தி வருகிறார்கள். ஆனால், சில மடாதிபதிகள் உணரத் தவறுகிறார்கள்!



9. லோக் பால் மசோதா அவ்வளவுதானா? 


இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேறுவதற்கு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டத் தொடர் முடிவதற்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. கிடப்பில் போட்டு​விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.

Thursday, August 11, 2011

வெளியான ரகசிய ஆடியோ டேப் , காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் நடுக்கம் , மடம் கப் சிப்

ஆடியோ சர்ச்சையில் ஜெயேந்திரர்?

அது யார் குரல்?

ங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சர்ச்சைக்குள்ளான  காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மீது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது.  ஜெயேந்திரர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி கைக்கு முதலில் இந்த ஆடியோ கிடைத்துள்ளது. அவர் இதை  முதல்வரின் தனிப் பிரிவு, டி.ஜி.பி., உயர் நீதிமன்றக் கண்காணிப்புப் பிரிவு பதிவாளர், விழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். இது தொடர்பாக ஒரு புகாரையும் துரைசாமி அத்து டன் அளித்துள்ளார். அந்த ஆடியோ, நமக்கும் கிடைத்தது.

இரண்டு பாகங்களாக இருக்கும் அந்தப் பதிவில் ஒரு முதியவர், நடுத்தர வயதுக்காரர் மற்றும் ஒரு பெண் மூவரும் கான்ஃபெரன்ஸ் வசதியில் உரையாடுகிறார்கள்.

முதியவர்: ''சௌக்கியமா இருக்கீங்களா..?''

நடுத்தர வயதுக்காரர்: ''ம்...  நல்லா இருக்கேன். நமஸ் காரம்...''

முதியவர்: ''ஒரு வாரத்தில், பாக்கி எல்லாத்தையும் முடிச்சிடுறேன். மொத்தமா முடிச்சிடலாம்... அக்கவுன்ட்ல கொடுக்க முடியலை. பணத்தை எடுத்து மாத்தி, ஒரு வாரம், பத்து நாளில் அனுப்பிடுறேன். கடன் எடுத்துத்தான் கொடுத்திருக்கோம். மொத்தத்தையும் நானே கொடுத்து அனுப்பிடுறேன். அதுவரைக்கும் சிரமம் பாக்காதீங்க. கவலைப்படாதீங்க... ஃபுல்லா வந்துரும். கொஞ்சம் பொறுமையா இருங்க...''

நடுத்தர வயதுக்காரர்: ''அதான் எனக்கும் ஈஸியா இருக்கும்...''

முதியவர் பேச முயல, குறுக்கிட்ட பெண்: ''சார், பெரியவா சொல்லிட்டா. இப்ப இவர் உங்ககிட்ட சொல்றார். இப்பத்தான் என்கிட்ட பேசினார். 'வேர்டு ஹானர்’ (உறுதிமொழி) பண்ணுங்க. பணம் கொடுக்கிறேனு சொல்லுங்க, இல்லே... இல்லைனு சொல்லுங்க...’ன்னார் பெரியவா. இதை கீப்அப் பண்ணிக்குவோம் சார்.''

(இதன் பிறகு, முதியவரும் பெண்ணும் தனியாக...)

முதியவர்: ''அவர்கிட்ட சொல்லிட்டேன்... அக்க வுன்ட்ல பணம் இருக்கு. மாத்தி ஒரு வாரம், பத்து நாளில் கொடுத்துடறேன்னு சொல்லிட்டேன்.''

குறுக்கிட்ட பெண்: ''இல்லை... பெரியவா என்னைத்தான் கேட்டுண்டு இருக்கா... அதான்...''

முதியவர்: ''நீ சொல்லிடு... பெரியவா சொல்லிட்டாங்க. ஒரு வாரத்தில் வந்துடும்னு...''

பெண்: ''ஓகே பெரியவா... வெச்சிடட்டா பெரி யவா..?'' - இப்படியாகப் போய் கட் ஆகிறது அந்த உரையாடல்.

பரபரப்பைக் கிளப்பிய இந்த விவகாரம் தொடர்பாக, தகவல் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டுள்ள வழக் கறிஞர் துரைசாமியிடம் பேசினோம்.

''மூன்று பேர் பேசும் உரையாடலை, யாரோ ஒருவர் என்னுடைய செல்போனுக்கு அனுப்பி இருக்கிறார். அந்த மூன்று குரல்களைக்கொண்டவர்கள் யார் என்று நான் விசாரித்தேன். காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், அவருக்கு அறிமுகமான கௌரி என்ற பெண் ஆகியோரின் குரல்கள் என்று கூறப்படுகிறது.

இன்னொரு குரல் யாருடையது என்பதை போலீஸாருக்கு கொடுத்த மனுவில் தெளிவுபடுத்தி உள்ளேன். ஏதோ பணம் கொடுக்கல் வாங்கல் பற்றியதாக அது இருக்கிறது. இதுபற்றிய உண்மைகளை விசாரித்துத் தரவேண்டும் என்றுதான் நான் கேட்டி ருக்கிறேன்.

என்னுடைய கேள்விகள் இதுதான்.

1. அந்தக் குரல்கள், குறிப்பிட்ட அந்த மூவருடையதுதானா?

2. பணம் கொடுப்பதாகப் பேசுவது எந்த விஷயத்துக்காக?

3. இந்த உரையாடலை நிகழ்த்தியது அந்த மூவர்தான் என்றால், பணப் பரிமாற்றம் தொடர்பாக என்ன விதமான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது?

4. அந்த உரையாடலின்படி இதுவரை பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதா?

5. அந்த உரையாடலில் மறைந்திருக்கும் உண்மை களை ஊருக்குச் சொல்ல வேண்டும்... என வரிசை யாகக் கேட்டு இருக்கிறேன். அரசு மற்றும் நீதித் துறையின் பதில்களுக்காகக் காத்திருக்கிறேன்...''

என்றார் துரைசாமி.
ஜெயேந்திரரின் கருத்தை அறிய காஞ்சிபுரம் மடத்தில் ஆஜரானோம். மடத்தின் அலுவலர்களின் அனுமதியுடன், தியான மண்டபத்துக்கு அருகில் தனி அறையில் பக்தர்களுக்கு ஆசி தந்துகொண்டு இருந்த ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்து நம் விசிட்டிங் கார்டைக் கொடுத்தோம். சட்டென முகம் சிவந்து நம்மை வெளியே போகுமாறு  சைகையால் சொன்னார்.

உடனே, அவரின் உதவியாளரிடம் விஷயத்தைக் கூற... மடத்தின் நிர்வாகி ஸ்ரீராமசர்மாவைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். அவரைச் சந்தித்தோம்.  
''ஏதோ புதுக் கதை மாதிரி சொல்றீங்க. இது பழைய கதை. ஒரு வாரமா ஓடிக்கொண்டு இருக்கே. மடத்தின் கருத்தை நீங்க கேட்க வேண்டாம். சட்டமும் நீதிமன்றமும் அதைப் பார்த்துக்கும். நீங்க உங்க வேலையைப் பார்த்தா போதும். மடத்தைப் பத்தியும் பெரியவாளைப்பத்தியும் பக்தர்களுக்குத் தெரியும்.

இப்போதான், மடம் பழைய நிலைக்குத் திரும்பி சந்தோஷமா இருக்கோம். அது பொறுக்காமக் கிளம்பி வந்துட்டீங்களா? தயவுசெஞ்சு, வெளியே போங்க'' என்ற ஸ்ரீராமசர்மா, என்ன நினைத்தாரோ...  மறுபடியும் நம்மை அழைத்து,
''பெரியவா... அதுபோல யாரிடமும் எந்தக் காலத் திலும் பேசியது இல்லைனு வேணும்னா மடத்தோட கருத்தாப் போட்டுக்குங்க!'' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

 நன்றி - விகடன்