ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பல நீதிபதிகள் விசாரித்துள்ளனர். அவர்களில் மல்லிகார்ஜுனையாவும், குன்ஹாவும் முக்கியமானவர்கள். தீர்ப்பு வழங்கியது டி’குன்ஹா என்றால் பெரும்பான்மை விசாரணையை முடித்தது மல்லிகார்ஜுனையா. மல்லிகார்ஜுனையாவுக்குப் பிறகு பாலகிருஷ்ணா, சோமராஜு, முடிகவுடர் ஆகிய நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர். இறுதியாக டி’குன்ஹா வழக்கின் தீர்ப்பை வழங்கினார்.
விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி பி.எம். மல்லிகார்ஜுனையா முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜெயலலிதா முதல்வராக இருந்த 91-96 காலகட்டத்தில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தமிழகம் முழுவதும் 197 இடங்களில் சுமார் 3,000 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.22.52 கோடி.1991-க்கு முன்னாள் வருமான வரி செலுத்தும் அளவுக்கு கூட வருமானம் இல்லாத மூன்று பேரால், எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு கிராமம் அளவுக்கு சொத்துக்கள் வாங்கப்பட்டது?'' எனக் கேள்வியெழுப்பினார் அவர்.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகிய மூவரும் குடியேறினர்.அப்போது சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்ஷன்,மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ்,ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் டிவி பிரைவேட் லிமிடெட் என 32 தனியார் நிறுவனங்களை தொடங்கினர். இந்த நிறுவனங்களுடன் மூவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்தனர்.
தனியார் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனைக்காகவும், நிலம் வாங்குவதற்காகவும் பல்வேறு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்கினர். அந்த வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தனர்.
இதே போல தோட்டக்கலைத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் (அரசு தரப்பு சாட்சி 71) அளித்துள்ள வாக்குமூலத்தில், “சுதாகரன் நிர்வாக இயக்குநராக இருந்த ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்காக 1994-ம் ஆண்டு தூத்துகுடி, திருநெல்வேலியில் மீரான்குளம், சேரகுளம், வல்லகுளம் ஆகிய கிராமங்களில் 1,163 ஏக்கர் உட்பட ஒரு ஏக்கர் ரூ. 16 ஆயிரம் விலையில் மொத்தம் 1,300 ஏக்கர் வாங்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.
மற்றொரு அரசு தரப்பு சாட்சி சார்பதிவாளர் ராஜகோபால், “சசிகலா நிர்வாக இயக்குநராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்காக காஞ்சிபுரம் மாவட்ட வெலகாபுரம், கருங்குழிப்பள்ளம், ஊத்துக்காடு, கலவை ஆகிய கிராமங்களில் 850 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சிறுதாவூரில் இசையமைப்பாளர் கங்கை அமரனிடம்(அரசு தரப்பு சாட்சி 40) இருந்து 25 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது'' என தெரிவித்துள்ளார்.
இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரிலும்,மூவரும் நிர்வாக இயக்கு நராக இருந்த 32 தனியார் நிறுவனங்களின் பெயரிலும் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக் காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சோழிங்கநல்லூர், செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என பல மாவட்டங்களில் 3,000 ஏக்கர் நிலம்,கட்டிடம்,கடைகள் வாங்கப்பட்டுள்ளது அரசு தரப்பில் தக்க ஆவணங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என ஆதாரங்களுடன் வாதிட்டார்.
நிறுவனங்களின் சொத்து
இதற்கு மூவர் தரப்பிலும், “குறிப்பிட்ட 32 தனியார் நிறுவனங்களில் சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட மூவரும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டுமே நிர்வாக இயக்குநர்களாக இருந்தனர். அதன் பிறகு மூவரும் பங்குதாரர்களாக மட்டுமே அங்கம் வகித்தனர். வாங்கப்பட்ட சொத்துகள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இயக்குநருக்கோ, பங்குதாரருக்கோ சொந்தமானவை அல்ல.
நிலம் அதிகமாக வாங்கப்பட்டதாக சொல்லப்படும் ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் பி.டி.ஷர்மா என்பவருக்கு சொந்தமானது. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அந்த நிறுவனத்தை சுதாகரனுக்கு சொந்தமானது எனக்கூறியுள்ளது. ஆனால் இதற்கு போதுமான ஆதாரங்களை அரசு தரப்பில் சமர்ப்பிக்கவில்லை.
இதே போல மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனம் கிருஷ்ணா ரெட்டி, அணில் குமார் ரெட்டி ஆகியோருக்கு சொந்தமானது. ஆனால் சசிகலாவுக்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ளது. எனவே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை இவ்வழக்கில் இணைத்தது ஏற்கத்தக்கதல்ல'' என வாதிட்டனர்.
ஜெயலலிதாவின் பணம்
நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில், “அரசுத்தரப்பு சாட்சி ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் சாட்சியத்தின்படி சசிகலாவின் ஒரே வருவாய் ஆதாரம் அவருடைய கணவர் நடராஜன் மட்டும்தான். அரசில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன் மோட்டார் சைக்கிள் வாங்கவும், வீடு வாங்கவும் கடன் வாங்கியுள்ளார்.1988-ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்த நடராஜனுக்கு மன்னார்குடி அருகே மூன்றரை ஏக்கர் நிலமும், வீடும் மட்டுமே இருந்தது. சசிகலாவுக்கு வேறு எதுவும் சொந்தமாக இருக்கவில்லை.
அரசுத் தரப்பு சாட்சி பாலகிருஷ்ணனின் சாட்சியத்தின்படி,1992-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்குவதற்காக விண்ணப்பித்த சுதாகரன் தன்னுடைய ஆண்டு வருமானம் ரூ.44 ஆயிரம் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். 1992-ம் ஆண்டுக்கு பிறகு சுதாகரனுக்கு வேறு வழியில் வருமானம் வந்ததாக ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.
இதே போல இளவரசிக்கும் பெரிய அளவில் வருமானமும், பூர்விக சொத்தும் இல்லை. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்குவதற்காக இளவரசி சமர்ப்பித்த வருமானச் சான்றிதழில் ஆண்டு வருமானம் ரூ 48 ஆயிரம் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட 32 நிறுவனங்களுக்காக வாங்கப் பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நில பத்திர பதிவில் வாங்கப்பட்டவரின் பெயரோ, நிறுவனத்தின் முத்திரையோ பயன்படுத்தப்படவில்லை.ஆனால் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் பற்றிய ஆதாரங்களை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.மூலதனமே இல்லாத `ரப்பர் ஸ்டாம்ப்’ நிறுவனங்களுக்கு எப்படி இவ்வளவு சொத்துகள் வந்தன?
எனவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரின் பெயரிலும் உள்ள சொத்துகள் அனைத்தும் அவர்கள் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறிய பிறகு குவித்த சொத்துகள்தான் என்பது தெரியவருகிறது. இதன் அடிப்படையில் ஜெயலலிதாவின் பணத்தைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களின் பெயரில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவித்தது நிரூபிக்கப்பட்டுள்ளது''என குறிப்பிட்டுள்ளார்.
6 நிறுவனங்கள் மட்டும் மேல்முறையீடு
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து 32 தனியார் நிறுவனங்களில் 6 தனியார் நிறுவனங்கள் மட்டுமே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கதவை தட்டின. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, “ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்களை இணைத்தது சட்டப்படி தவறு. தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களுடன் மட்டுமே தொடர்பு உள்ளது.மற்ற 30 நிறுவனங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை. இவ்வழக்கில் இருந்து தனியார் நிறுவனங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்''என வாதிட்டனர்.
அப்போது நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “தனியார் நிறுவனங்களின் சொத்துகள் 1997-ம் ஆண்டு முடக்கப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள சொத்துக்களை விடுவிக்கக் கோரி தனியார் நிறுவனங்களின் சார்பில் நீதிமன்றத்தை உடனடி யாக நாடாதது ஏன்? திடீரென 1999-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்துக்களை விடுவிக்க மனு போடப்பட்டது.அந்த மனு தள்ளு படி செய்யப்பட்டது.அதன்பிறகு அமைதியாக இருந்த தனியார் நிறுவனங்கள் சார்பில் 2014-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடியானது. சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்கள் என்றால் இவ்வளவு அலட்சியமாக தனியார் நிறுவனங்கள் நடந்துக்கொள்ளுமா?'' என்றார். அதற்கு தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆஜரான எந்த வழக்கறிஞரும் பதில் சொல்லவில்லை.
-இன்னும் வரும்
நன்றி - த இந்து
- மற்றவர்கள் பார்பது எல்லாம் தம் மக்கள் நலன் ஆனால் நான் பார்ப்பதோ குடி(?) மக்கள் நலன் என்று கூவும் தனி ஒருவருக்கு எதற்கு இத்தனை சொத்துகள் நிலங்கள் கம்பெனிகள் என்று தெரியவில்லையே இத்தனைக்கும் இவர் இது வரை சொந்த பணத்தில் ஒரு பைசாவை கூட(கட்சி பணம் மற்றும் முதல்வர் நிதியை தவிர்த்து ) ஏதேனும் தான தர்ம்மம் செய்தது போல் தெரியவில்லை ?பிறகு அதெல்லாம் யாருக்காக ?Points7240
- Abdul Kader“ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 32 தனியார் நிறுவனங்களை இணைத்தது சட்டப்படி தவறு. தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களுடன் மட்டுமே தொடர்பு உள்ளது.மற்ற 30 நிறுவனங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை. இவ்வழக்கில் இருந்து தனியார் நிறுவனங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதில் இருந்து முந்தய அரசு வேண்டுமென அம்மா மீது வழக்கு போட்டு வுள்ளர்கள். மக்கள் ஸ்ரீரங்கம் இடை தேர்தலில் இதை நிருபித்து வுள்ளர்கள்.about 4 hours ago · (2) · (3) · reply (0) ·
- Andalஇந்த வழக்கினை ஏன் ஆவண படமாக எடுத்து உலகம் முழுவதும் ஏன் வெளியிடக்கூடாது? ஒரு ரூபாய் சம்பளம் பெற்றவர் சிக்கனம் ஆக இருந்து கோடிகணக்கில் சொத்து சேர்த்தார் என்ற கின்னஸ் சாதனை கிடைக்குமே! அதுமட்டும் அல்ல வாய்தா வாங்கி வாங்கி 18 ஆண்டுகள் வழக்கை கொண்டு சென்றதே மற்று ஒரு சாதனைதானே?Points3715
- Hariநதியைத் தேடிய கடல் என்ற ஒரு படம் ஜெ யால் தயாரிக்கப்பட்டது. அதில் ஜெ எவ்வளவு இழந்தார் என்றுக் கூற முடியுமா? சொத்துக்களை இழந்த அவர் காவிரி தந்த கலைச் செல்வி என்ற நாட்டிய நாடகம் நடத்திப் பொருளீட்டினார் என்பது நினைவு உள்ளதா? வேதா நிலையத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியிருந்தது என்பதனை எத்தனைப் பேர் அறிவார்கள்?Points4410
- mad1971 ஆம் ஆண்டே 1 லட்சம் ரூபாய்க்கு வருமான வரி கட்டி உள்ளார்என்பதனை எத்தனைப் பேர் அறிவார்கள்?about 5 hours ago · (0) · (0) · reply (1) ·
- ஸ்ரீபாலாஜிஅது தெரியுமோ இல்லையோ ஆனால் 1996 இல் டான்சி நிலத்தை ஜெயா பப்ளி கேசன் பெயரில் வாங்கி விட்டு முதலில் அது என்னுடைய கையெழுத்து இல்லை என்று மறுத்து விட்டு பின்னர் அது என்னுடையதுதான் திரும்ப கொடுத்து விடுகின்றோம் எங்களை விட்டு விடுங்கள் என்று மன்னிப்பு கோரி வெளியில் வந்தவர் என்பது எல்லோருக்கும் நினைவில் இருக்கும் அனபரே !about 3 hours ago · (0) · (0) · reply (0) ·
- Elangovan Velayutham at All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)எனது முந்தைய விமர்சனத்தில் கடைசி இரண்டு வரிகளை .. , ' சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கவில்லை,வருமானவரியும் கட்டியுள்ளார் என்று திருத்தி வாசிக்கவும்.about 7 hours ago · (0) · (0) · reply (0) ·
- Elangovan Velayutham at All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)மொத்த செலவுத்தொகையான 67 கோடி ரூபாயும் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள வங்கிக்கணக்குகளிலிருந்து பரிவர்த்தனை செய்யப்பட்டதா, டெபாசிட் செய்யப்பட்டு செலவுகளுக்கு எடுக்கப்பட்டதா? அல்லது ஜெயலலிதா ஏதாவது ரொக்கம் கொடுத்து செலவு செய்தார் என்பதற்கு நேரடி சாட்சியம் இருக்கிறதா? . இல்லை. அடுத்த கேள்வி ஜெயலலிதா சட்டவிரோதமாக வருமானம் ஈட்டினார் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்மீது ஏதாவது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளனவா? தீர்ப்புகள் எதுவும் உள்ளதா? வழக்குகள் நிலுவையில் உள்ளதா? பின்பு எப்படி அவர் சட விரோதமாக வருமானம் ஈட்டினார் என்பதை நிரூபித்தீர்கள்...? இவையெல்லாம் நீதிபதி குமாரசாமி எழுப்பிய வினாக்கள். இவற்றின் அடிப்படையில் தான் தீர்ப்பு ... ஜெயலலிதாவைப் பொருத்த வரையில் அவர் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு முறைப்படி கணக்கு காட்டி வருமானவரியும் செலுத்தியுள்ளார். சட்ட விரோதமான முறையில் சம்பாதித்துள்ளார், வருமான வரியும் கட்டியுள்ளார்.about 8 hours ago · (6) · (3) · reply (1) ·
- ஸ்ரீபாலாஜிஎன்ன தப்பு செய்தாலும் எவ்வளவு ஊழல் செய்தாலும் ஆதாரம் இருந்தால் தான் தவறு மனசாட்சி என்று ஒன்று இல்லை என்கின்றது இவர்களின் இலவசத்தையும் ,மலிவையும் ருசித்த உங்களது மனசாட்சி அப்படித்தானே!about 3 hours ago · (0) · (0) · reply (0) ·
- Elangovan Velayutham at All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)வழக்கில் தெரிவித்துள்ள சொத்துக்கள் வாங்கிய செலவு, பதிவு செலவு, கட்டிடம் கட்ட ஆன செலவு, வாகனங்கள் வாங்கிய செலவு, தங்கம்,வைரம், வெள்ளி நகைகள் வாங்கிய செலவு, புடவை, செருப்பு, கைகடிகாரம் வாங்கிய செலவு .... அடுத்ததாக வங்கிகளுக்கு வட்டி கட்டிய செலவு, மின்சார கட்டண செலவு, வருமான வரி கட்டிய செலவு, சுதாகரன் திருமண செலவு, மற்றும் வீட்டு செலவு இப்படியாக மொத்த செலவுகளுக்கும் ஜெயலலிதாவின் வருமானம் 9 கோடிக்குள் எப்படி முடியும்? எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் வருமானம் ஈட்டினார் என்பது தானே இந்த வழக்கு? மொத்த சொத்துகள் வாங்கியது மற்றும் செலவுகள் சேர்த்து ரூபாய் கிட்டத்தட்ட 67 கோடி என்பது வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட தொகை. மற்ற மூவரும் சம்பாதிக்க லாயக்கற்றவர்கள் என்பது வாதம், வழக்கு. எனவே அவர்கள் தரப்பில் வந்த வருமானத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் பணம் தான் பல வங்கிகளில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு சொத்துகள் வாங்கப்பட்டன, செலவுகள் செய்யப்படன என்பது தீர்ப்பு. மொத்த செலவுத்தொகையான 67 கோடி ரூபாயும் ஜெயலலிதாவின் பெயரில் உள்ளது.about 9 hours ago · (1) · (4) · reply (1) ·
- Kannanஇதற்கு முன் வந்த கட்டுரைகளை ஹிந்து நாளிதழ் ஜெவிற்கு ஆதரவாக எழுதுகிறது என்றார்கள். இப்போது அவர்கள் பதில் என்ன? எந்த ரத்த சம்பந்தம் இல்லாதர்களை பினாமி என்று சொல்ல முடியாது. சசிகலா இளவரசி சுதாகரன் ஜெ வீட்டில் தங்கி இருந்து தவறு செய்து இருந்தால் அதற்கு ஜெ பொறுப்பு ஏற்க முடியாது. அந்த தொகை எப்படி வந்தது என்று அந்த மூவரும்தான் நிருபிக்க வேண்டும். அதற்குமேல் ஒரு படியை நீதிபதி குமாரசாமி நேற்றே ஆரம்பித்து விட்டார்.போயஸ் கார்டன் கொடநாடு ஹைதரபாத் கட்டிடங்களின் 1991-96 கால உண்மையான மதிப்பை வெளிக்கொண்டு வர குழுவை அமைத்துவிட்டார். அதேபோல் இந்த வழக்கில் சாட்டப்பட்ட எல்லா குற்றங்களுக்கும் உண்மையான மதிபிட்டை குமாரசாமி குழு அமைத்து அறிய வேண்டும் பின் தீர்ப்பு வழங்க வேண்டும். இதே பணியை ஏன் குன்ஹா செய்யவில்லை. குமாரசாமி தீர்ப்பு வருவதற்கு முன்பே அருண் ஜெட்லி - ஜெ சந்திப்பை கொச்சையாக்கி தீர்ப்பின் மீது அழுத்தம் என கூறுவோர், எந்த அழுத்தம் மூலம் எந்த சாட்சி விசாரணையையும் நேரில் பார்க்காத குன்ஹா வெறும் வாக்குமூல அடிப்படையில் வரலாறு காணாத தீர்ப்பு வழங்கினார். எதிர்பாலர்களே சொல்லுங்கள் - கண்ணன் ஸ்ரினிவாசலுPoints850
- செ.மற்ற மூன்று குற்றவாளிகளும் காலணாவுக்கு உழைத்து உன்ன வழியோ தொழில் திறமையோ இல்லாதவர்கள். இவர்கள் எதற்காக ஜே. வீட்டில் தங்கினார்கள்? என்ன செய்வதற்குத் தங்கினார்கள்? அதை முதலில் விளக்கவும். உறவோ, தொடர்போ இல்லாதவர்களை வீட்டுக்குள்ளே வைத்துக்கொண்டு திருமணம் செய்துவைத்து போஷிக்கும் அளவுக்கு உருவான பிடிமானம், நட்பு, காரணம், அவசியம் என்ன? பொதுவாகச் சொல்வதானால், ஊழல் புரிந்து சொத்துக்குவிக்க எந்தத் திருடன், திருடிக்கும் கன்னக்கோல் தேவைப்படும் என்பது உண்மைதானே?about 9 hours ago · (0) · (0) · reply (2) ·
- madநண்பர்கள் இருவர் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க கூடதென்ரு சட்டத்தில் கூரபட்டு உள்ளதா ? இரூவர் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால் கூட்டு சதி செய்தார்கள் என்று அர்த்தமா ?about 8 hours ago · (0) · (0) · reply (2) ·
- hariஅவர்கள் வெறும் நண்பர்கள் அல்லர். சுதாகரன் ஜெ யின் மகனாக வரிக்கப்படுள்ளார். குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் அவரும் (சுதாகரனும்) சுதாகரன் மூலமாக மற்றவர்களும் ஜெ க்கு உறவினர்களே. அனால் அவர்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்பதெல்லாம் ஏமாற்று வேலை. நீங்கள் கூறுவதைப் பார்த்தால் "ஆணும் பெண்ணும் தனியாக ஒரே வீட்டில் இருந்தால் அவர்கள் பய்பிளைப் படிக்க / குரானைப் படிக்க / கீதையைப் படிக்க ஒன்றாக இருந்தார்கள் எனவும் வாதிடலாம்.about 6 hours ago · (0) · (0) · reply (1) ·
- Gandhi Gandhiமன்னார்குடி மாபியா, திருவாதவூர் மாபியா ரெண்டுமே ! அவர்கள் வீட்டு பெண்களை தான் முன்னிறுத்துகிறது ! சொத்துக்களை அவர்கள் பேர்லே சேர்க்கிறது ! எல்லாம் குமாரசாமிக்கு தான் வெளிச்சம்!Points1905
- Half Moonஎந்த கோணத்தில் பார்த்தாலும் ஜெ. சசிகலா கும்பலின் இந்த கூட்டு கொள்ளை அப்பட்டமாய் தெரிகிறது.. என்ன.. கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பீடு மட்டுமே குன்ஹாவின் பார்வையிலும், குமாரசாமியின் பார்வையிலும் கொஞ்சம் வித்தியாசமாய் தெரிகிறது.. அந்த வித்தியாசங்கள் கூட இந்த வழக்கு நடந்து வரும் இத்தனை காலங்களில் " செய்யப்பட்ட மாற்றங்கள் " என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? வழக்கில் சேர்க்கப்படாத மன்னார்குடி கும்பலின் ஒன்றுவிட்ட, ரெண்டுவிட்ட உறவினர்கள் கூட இன்றைக்கும் கோடீஸ்வரர்களாகத்தான் இன்றைக்கும் வலம் வருகின்றார்கள். (கருணாநிதியின் உறவுகளைப்போல) சசிகலா,இளவரசியை சார்ந்த ஒரு சமூகமே ஜெ.யின் குறிப்பிட்ட அந்த 5 ஆண்டு ஆட்சியில் (91-96) பெருமளவு சொத்துக்களை சேர்த்துள்ளது என்பதில் யாருக்கேனும் ஐயமிருப்பில் மன்னார்குடிவாசிகளை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்..Points170
- thuckluck_juniorகுன்ஹா, மாவட்ட நீதிபதி, குமாரசாமி ஒரு மாநிலத்தின் நீதிபதி, குன்ஹா வை விட குமாரசாமி அதிக வழகுகளை கையாண்டவர் ..........வித்தியாசம் இருக்கத்தான் , செய்யும், இது தீர்ப்பிலும், தெர்யும்about 9 hours ago · (0) · (0) · reply (1) ·
- ஸ்ரீபாலாஜிடான்சி நிலம் யாருக்கு சொந்தமோ அவர்களுக்கே சொந்தம் ! அதாவது அனைத்தும் மக்களுக்கே சொந்தம் மக்களின் சொத்து !Points7850
- thuckluck_juniorஇல்லாருக்கும் 6 அடி தான் சொந்தம்about 9 hours ago · (0) · (0) · reply (2) ·
- ஸ்ரீபாலாஜிபாவம் குடும்பம் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி 6 அடிதான் சொந்தம் நீங்களாவது தோழி @ கோ வுக்கு புரிய வையுங்கள் ஜி ! பிறகு எதற்கு 3000 ச .அடி ,என்று ச.அடி கணக்கில் வாங்கி குவிக்கின்றார்கள் என்று தெரியவில்லை ?about 9 hours ago · (0) · (0) · reply (1) ·
- mad3000 இல்லை 30000 மாக கூட இருக்கட்டும். ஜெயா பணம் நேரடியாக இதில் முதலீடு செயப்பட்டு உள்ளதா என்பது தான் கேள்வி ?about 8 hours ago · (0) · (0) · reply (1) ·
- செ.கதியே பினாமி கதை. இதில் எப்படியப்பா நேரடி முதலீடு நடக்கும்? எல்லாம் சூப்பர் டூப்பர். அக்ரோ, மேடோச்தான். பினாமி. ஆனால், ஒத்துக்கொள்ள மாட்டேன் என்பதே இந்த வழக்கு.about 5 hours ago · (0) · (0) · reply (1) ·
- madபினாமி என்று நீருபிக்க உச்ச நீதி மன்றம் பல்வேறு வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளது. அது ஒன்று கூட நீருபிக்க படவில்லை ....about 5 hours ago · (0) · (0) · reply (1) ·
- ஸ்ரீபாலாஜிஅதே உச்ச நீதி மன்றத்தில் கெஞ்சி கூத்தாடி வாங்கிய டான்சி நிலத்தை திரும்ப கொடுத்து தப்பித்து வந்தவர்களுக்கு என்ன தனி பினாமி கணக்கு வேண்டியது இருக்கு mad ஜி ?about 4 hours ago · (0) · (0) · reply (0) ·
- Kingpearlசரியான பகிர்வு. இதற்கு முன் பதியபட்ட மற்ற எல்லா டைரிக்கும் கருத்து சொன்னவர்கள் ஏன் இந்த டைரி பகிர்வுக்கு கருத்து சொல்ல முன்வரவில்லைPoints165
- thuckluck_juniorபடித்து கொண்டு இருக்கிறோம்,,,,, விரைவில் பதில் வரும்about 9 hours ago · (0) · (0) · reply (1) ·
- D.Thirumalai Kumarஅதிமுக என்றால் திருடர் முன்னேத்த கழகம்.Points16765
- Kmsdglஇரா.வினோத் ன் - விரிவாக்க தெளிவுதர நிமிர்ந்துள்ள உண்மையுரை நீண்ட நெடிய கண்ணாடியாக்க உரை - மானிட மனங்களில் சூடு சுடர்கொண்டு ஏறி - சுற்றி சுழன்றலைந்து - வாட்டமின்றி வட்டமிட்டு வளைத்துப்போட்ட பெருஞ்சொத்து பேர்சொல்லப்போமோ - அதுவும் மக்கள்தொண்டென - மக்களின்சேவைஎன - மனந்தொட்டு சொல்லேருமா ? தீர்ப்பே ! தீர்ப்பின் நிலை தேடி தீரா பயணத்தேடலே