Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Tuesday, January 05, 2016

நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெயலலிதாவுக்கு 3 கேள்விகள்!

பேச்சுதான் அரசியலுக்கு மூலதனம். 'பேசிப்பேசியே ஆட்சியை பிடித்தார்கள்' என திராவிடர் இயக்கத்தை சொல்வார்கள். ஆனால் இன்று மேடைப்பேச்சு சுவாரஸ்யம் இழந்து விட்டது.

இதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது பல மணி நேரம் காத்திருந்து மேடைப்பேச்சை ரசித்து கேட்ட தலைமுறை இப்போது ஓய்ந்து விட்டது. மற்றொன்று கொள்கையை பற்றி பேசிய மேடைகள் எல்லாம் இப்போது கட்சித்தலைமையை வரம்புக்கு மீறி புகழ்வது, எதிர்கட்சிகளை அளவு கடந்து விமர்சிப்பதுமாக மாறி விட்டது. தமிழகத்தில் பேச இப்போது ஆட்களில்லை. இருக்கும் சிலரும் கட்சியின் உத்தரவுக்கிணங்க (?) பேச வேண்டி இருப்பதால் அவர்களில் பேச்சு சுவாரஸ்யம் இழந்து விட்டது. 


நாவை சுழற்றி பேசியவர்கள் எல்லாம் இப்போது எதை பேசுவது என தெரியாமல் தத்தளிக்கும் நிலைதான் இன்று உள்ளது. அதில் ஒருவர்தான் நாஞ்சில் சம்பத். அபாரமான பேச்சாற்றலுக்கு சொந்தமானவர். பெரும்பாலும் கட்சி விட்டு கட்சி மாறும் பேச்சாளர்கள்,  தங்கள் சுயத்தை இழந்து விடுகிறார்கள். எந்த பேச்சால் பெரும்பாலானோரால் கவரப்பட்டாரோ அதே பேச்சால் இப்போது கட்சி பதவியை இழந்து, அவமானப்பட்டு நிற்கிறார் நாஞ்சில் சம்பத். 



'மதிமுகவில் நாஞ்சில் சம்பத்'



அரசியலில் பின்னால் நடக்கப்போகும் மாற்றங்களை முன்கூட்டியே அறிவிக்க கூடியவர்களாக கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் இருப்பார்கள். தங்களால் வெளிப்படையாக சொல்ல முடியாததை, கட்சியின் நம்பிக்கையான இரண்டாம் கட்டத்தலைவர்கள் மூலமாகத்தான் கட்சித்தலைவர்கள் வெளிப்படுத்துவார்கள். அப்படி ஒருவர்தான் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க.வில் இருந்த போது வைகோவின் போர்வாள் என புகழப்பட்டவர், கட்சியில் வைகோவுக்கு அடுத்தபடியாக அபாரமான பேச்சாற்றலுடன் வலம் வந்தவர் நாஞ்சில் சம்பத். நெருக்கடியான நேரங்களில் கட்சி எடுக்க கூடிய முடிவுகளை முன்கூட்டியே தெளிவுபடுத்துபவராகவும் அவர் இருந்திருக்கிறார்.



2006 சட்டமன்ற தேர்தல் நேரம் அது. தி.மு.க.வுடன் கூட்டணி என அறிவித்து, கலைஞரை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் இருந்தது ம.தி.மு.க. அப்போது அ.தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மதிமுகவோடு உறவு வைத்துக் கொள்ள, வைகோவின் கைது படலம் தடையாக இருக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார் காளிமுத்து.

'அதிமுக உடன் கூட்டு என்பதை முதலில் அறிவித்தவர்'


அந்த நேரத்தில் காளிமுத்துவின் அழைப்புக்கு நன்றி சொல்லி பேசியதோடு, தி.மு.க.வுக்கு தனது பேச்சின் மூலம் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார் நாஞ்சில் சம்பத். "மதிமுகவை அலட்சியப்படுத்திவிட்டு இனி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.  வைகோ கை காட்டுபவர்தான் அடுத்த முதல்வர், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதிமுகதான் எதிர்க்கட்சியாக அமரும், மதிமுகவுக்கு அதற்குரிய கெளரவம் கொடுக்காவிட்டால் தனித்துப் போட்டியிட நாங்கள் முட்டாள்கள் இல்லை, அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிடுவோம்" என அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து முதலில் பேசியது நாஞ்சில் சம்பத்தான்.



நாஞ்சில் சம்பத்தின் பேச்சுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவிக்க, அதற்கு வைகோ வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அடுத்த சில நாட்களில் நாஞ்சில் சம்பத் பேசியபடியே போயஸ் கார்டனுக்கு சென்று அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தது ம.தி.மு.க. "நேற்று வரை தி.மு.க.வில் இருந்து கூட்டணி பேச்சு நடத்திக்கொண்டே, அ.தி.மு.க.விலும் கூட்டணி பேச்சை நடத்தியிருக்கிறார்" என வைகோ மீது விமர்சனங்கள் வந்து விழுந்தபோது அதையும் தன் பேச்சால் சமாளித்தவர் நாஞ்சில் சம்பத்.



"மு.க.முத்துவை முன்னிலைப்படுத்த எம்.ஜி.ஆரை நீக்கினார்கள். மு.க.ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வைகோவை வெளியேற்றினார்கள். இரண்டு இயக்கமும் ஒரே நோக்கத்துக்காக துவங்கப்பட்டவை. ஒரே நோக்கத்துக்காக துவங்கப்பட்ட இரு இயக்கங்கள் ஒன்றிணைவதில் என்ன தவறு இருக்கிறது?" என நாஞ்சில் சம்பத் எழுப்பிய கேள்விகள்தான் அதிமுக உடனான கூட்டணியை நியாயப்படுத்தியது. அதன் பின்னர் வைகோவின் பேச்சைப்போல் நாஞ்சில் சம்பத்தின் பேச்சை கவனிக்கத்துவங்கினர் அரசியல் விமர்சகர்கள்.



'நெருக்கடியை பேச்சால் சமாளித்த சம்பத்'



ம.தி.மு.க.வுக்கு அது ஒரு சோதனை காலம். கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்தடுத்து கட்சி மாறிய சூழலில், மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்தது ம.தி.மு.க. கட்சியின் எதிர்காலம் அவ்வளவுதான் என விமர்சனங்கள் முன்வந்தபோது தன் பேச்சால் சமாளித்தவர் நாஞ்சில் சம்பத். "கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது. கண்ணப்பன் போனார். அவர் வைகோவை விட சீனியர் பொலிட்டீசியன். அவர் கட்சியை விட்டு போகையில், அவருக்கு 40 ஆண்டுகாலம் காரோட்டிய கந்தனூர் கருப்பையா என்பவர் போகவில்லை. அதேபோல கண்ணப்பனை சார்ந்திருந்த ஆலாம்பாளையம் கிளைக்கழகத்தின் செயலாளர் போகவில்லை. செஞ்சி ராமச்சந்திரனும் போனார். ஒரு பாதிப்பும் இல்லை. ஆகவே எங்கள் கட்சியில் இருந்து யார் போனாலும் அவர்கள் அகதிகள் பட்டியலில் போய் சிக்கிக்கொள்கிறார்களே தவிர அரசியலில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. 



ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டு போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது. ஆகவே எங்கள் கட்சி ஒரு முடிவை எடுப்பதை ஏற்க முடியாதவர்கள், பதவி நல விரும்பிகள், ஆதாயத்தை நாடுபவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தால் அவர்கள் காணாமல் போவார்களே தவிர கட்சியின் கட்டுமானத்தில் ஒரு கல்லை கூட பெயர்க்க முடியாது," இப்படி நாஞ்சில் சம்பத் மேடைக்கு மேடை பேசிய பேச்சு, ம.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்தது. நாஞ்சில் சம்பத்தின் பேச்சு கட்சிக்காரர்களை கட்டிப்போட்டது.



'கலைஞருக்கு வைகோ... வைகோவுக்கு சம்பத்...'



தொடர் தோல்விகளால் தி.மு.க. தொண்டர்கள் சோர்வுற்ற எம்.ஜி.ஆர் ஆட்சி காலம் அது. அ.தி.மு.க.வின் தலைவர்கள் ஒரு கோஷத்தை திரும்ப திரும்ப சொன்னார்கள். 'கருவாடு மீனாகாது. கறந்த பால் மடியேறாது. கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது' என்பதுதான் அது. அதற்கு பதில் சொன்னவர் கருணாநிதியின் போர்வாளாக இருந்த வைகோ. 'எங்கள் தலைவன் வெற்றிகளை இழந்திருக்கலாம். ஆனால் களம் காண்பதை நிறுத்தி விடவில்லை' என வைகோ பேசிய பேச்சு தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் கொடுத்தது போல, ம.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தது நாஞ்சில் சம்பத்தின் பேச்சுதான்.

ம.தி.மு.க.வில் தான் நினைத்ததை எல்லாம் பேசும் வல்லமை பெற்றவராக இருந்தார் நாஞ்சில் சம்பத். 2006 தேர்தலின்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை நாஞ்சில் சம்பத் பேசியது ஒன்றே அதற்கு சாட்சி. அதற்கு வைகோ மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டாரே தவிர, நாஞ்சில் சம்பத் மீது கட்சி நடவடிக்கை பாயவில்லை. ஆனால் ம.தி.மு.க.வில் இருந்து வெளியேறி அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்த பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், நெருக்கடிகளும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதன் உச்சம்தான் கட்சி பதவி நீக்கம். 


'பேச்சாளர்களை பற்றி கவலைப்படாத அதிமுக'



பொதுவாக பேச்சாளர்கள், கட்சியின் நடவடிக்கை குறித்து முழுமையாக அறிந்திருப்பார்கள். கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பேச்சாளர்களுக்கு கட்சித்தலைமை தெளிவாக விளக்கும். நெருக்கடியான சூழலில் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், மக்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக கட்சித்தலைமை சொல்லும். சில நேரங்களில் பயிற்சி பட்டறைகளை கூட நடத்தும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை பின்பற்றுவதில்லை. பேச்சாளர்களைப்பற்றி கவலைப்படாத கட்சி அ.தி.மு.க. கட்சி பொதுக்குழுவில் கூட யாரும் பேச அனுமதிக்காத கட்சியாகத்தான் அ.தி.மு.க. இருக்கிறது. 



கூட்டணி குறித்து தேவைக்கேற்ப முடிவு செய்வோம் என ஜெயலலிதா பேசியதோடு சரி. ஜெயலலிதா எதை நினைத்து அதை பேசினார் என்பது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாருக்கும் தெரியாது. இந்த சூழலில் பேச்சாளார்கள் என்ன முடிவெடுப்பார்கள்? மக்களிடம் எதை கொண்டு சேர்ப்பார்கள். கட்சித்தலைமையை புகழ்வதும், எதிர்கட்சிகளை எல்லை மீறி திட்டித்தீர்ப்பதும்தான் பேச்சாளர்களின் வேலை என நினைப்பதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.



'பாவம்... நாஞ்சில் சம்பத் என்ன செய்வார்?'



நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்ட விவகாரத்துக்கு வருவோம். நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்டதற்கு சொல்லப்படும் ஒற்றை காரணம் தொலைக்காட்சி பேட்டிதான். இரு தொலைக்காட்சிக்கு ஒரே நேரத்தில் பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், அதில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள்தான் காரணம். பேட்டியில் 3 சர்ச்சைகள் எழுந்தன. ஒன்று தமிழக முதல்வர் குறித்து அவர் தெரிவித்த கருத்து. இரண்டாவது அ.தி.மு.க. கூட்டணி அமைக்க கூடும் என்ற கட்சிகளை திட்டித்தீர்த்தது. மூன்றாவது ஏற்கனவே அ.தி.மு.க. மீது கோபத்தில் இருக்கும் மக்களை மேலும் கோபப்படுத்தும் வகையில் பேசியது.



முதலாவது முதல்வர் ஜெயலலிதா குறித்து நாஞ்சில் சம்பத் சொன்ன கருத்துகளை பார்ப்போம். நாஞ்சில் சம்பத்திடம், வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவில்லையே என கேட்டதற்கு, 'ஆம் முதல்வர் மக்களை நேரில் சந்திக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். சந்திக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அவரால் முடியும்போது சந்தித்தார்கள். இப்போது சந்திக்க முடியவில்லை" என பதிலளித்திருந்தார். இதில் என்ன பொய் இருக்கிறது?



மற்றொரு தொலைக்காட்சி பேட்டியில், ஏன் ஜெயலலிதாவை வரவேற்க இவ்வளவு ஆடம்பரம் என்ற கேள்விக்கு பதிலளித்த சம்பத், "அத்திப்பூ பூப்பதை போல எப்போதாவது வரும் ஜெயலலிதாவை கட்சியினர் ஆர்வம் காரணமாக ஆடம்பரமாக வரவேற்கிறார்கள்' எனசொல்லியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிலிலும் உண்மை இல்லை என சொல்லி விட முடியாது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஜெயலலிதா சந்தித்திருந்தால், அடிக்கடி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஜெயலலிதா நிகழ்த்தி இருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது.

'கோபப்பட வேண்டியது சம்பத் மீது மட்டுமல்ல'


இரண்டாவது பாரதிய ஜனதா, ம.தி.மு.க., இடதுசாரிகள் போன்ற கட்சிகளை விமர்சித்தது. இந்த கட்சிகள் யாவும் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கின்றன. மறுபுறம் அ.தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது என்ற விவரம் முக்கிய நிர்வாகிகளுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை. இந்த சூழலில் கட்சியின் பேச்சாளராக தங்களை கடுமையாக விமர்சிக்கும் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் கடமையைதான் நாஞ்சில் சம்பத் செய்திருக்கிறார். யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை முதலில் தெளிவுபடுத்தியிருந்தால், நாஞ்சில் சம்பத் கவனமாக இருந்திருக்க கூடும். ஆனால் அந்தக்கட்சியில்தான் அந்த உரிமை யாருக்கும் கிடையாதே. அவரென்ன செய்வார்...பாவம்!



மூன்றாவது மக்களைப்பற்றி பேசியது. வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, ஒரு வீட்டில் இழவு விழுந்து விட்டது என்பதற்காக, இன்னொரு வீட்டில் கல்யாணம் நடக்காமல் இருக்குமா? யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் சாகத்தான் செய்யும் என்பன போன்ற பதில்கள் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அது. 



நேரடியாக நாஞ்சில் சம்பத் இந்த பதில்களை சொல்லவில்லை. ஆனால் எப்படியோ சமாளிக்க முயன்று, தோற்றுபோன தருவாயில்தான் இந்த பதிலை நாஞ்சில் சம்பத் உச்சரித்தார். சென்னையில் பெரு வெள்ளம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அங்கு மிக பிரம்மாண்டமாய் பொதுக்குழுவை நடத்தியது தான் இதற்கெல்லாம் காரணம். எனவே கோபப்பட வேண்டியது நாஞ்சில் சம்பத் மீது மட்டுமல்ல.

'கட்சிகள் விரும்புவதில்லை'


வெள்ள பாதிப்பின் போது மக்களை நேரில் சென்று சந்தித்திருந்தால்... யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு, யாரை எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை கொள்கை பரப்பு செயலாளர்களுக்காவது தெரிவித்திருந்தால்...பொதுக்குழுவை குறைந்த பட்சம் விமரிசையாக நடத்தாமல் எளிமையாகவாவது நடத்தியிருந்தால், சர்ச்சைக்குரிய இந்த 3 கேள்விகளுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. பதில்களும் சர்ச்சைக்குரியதாகியிருக்காது. ஆக அந்த 3 கேள்விகள் ஜெயலலிதாவுக்குரியது!



அரசியல் பற்றி பேசும்போது பிழைகள் கூடாது என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பிழைகளுடன் பேசவே அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் நாக்கு பிறழாமல், ஒரு சொல் கூட மாறாமல், சொற்களை செதுக்கும் வல்லமை வாய்ந்தவராய் இருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் இப்போது அவர் அப்படியில்லை என்பது உண்மை. ஆனால் அதற்கு அவர் மட்டும் காரணமல்ல. எந்த பேச்சும் இதயத்தில் இருந்து வரும்போதுதான், மக்களை ஈர்க்கும் என்பார்கள். ஆனால் இப்போது இதயத்தில் இருந்து எந்த பேச்சாளர்களும் பேசுவதில்லை. காரணம் எந்த கட்சித்தலைமையும் அதை விரும்புவதில்லை.

- ச.ஜெ.ரவி

thanx - vikatan

Tuesday, August 18, 2015

ஈ வி கே எஸ் இளங்கோவன் எந்தத்தப்பும் செய்யவில்லை - குஷ்பூ அதிரடி பேட்டி


கோப்புப் படம்
இளங்கோவன் தவறாக எதுவும் பேசவில்லை. அவர் தவறாக பேசக் கூடியவர் அல்ல. நாகரிமானவர் என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவதூறாக பேசியதாக, அவரைக் கண்டித்து அதிமுகவினர் இன்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, செய்தியாளர்களிடம் பேசினார்.
''இளங்கோவன் தவறாக எதுவும் பேசவில்லை. அவர் தவறாக பேசக் கூடியவர் அல்ல. அவர் மனைவி, மகன், பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர், நாகரிமானவர். அதிமுக அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை திசை திருப்பவே இளங்கோவனுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
அதிமுகவினருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் இதுபோன்ற போராட்டங்களை நடத்துகின்றனர்'' என்று குஷ்பு கூறினார்.





ஈவிகேஎஸ் இளங்கோவன் | கோப்புப் படம்: கே.பிச்சுமணி
ஈவிகேஎஸ் இளங்கோவன் | கோப்புப் படம்: கே.பிச்சுமணி

நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியதாக, அவரைக் கண்டித்து அதிமுகவினர் இன்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இது குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் யார் சென்னை வந்தாலும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால், மாநில பாஜகவோ ஆளும் அதிமுகவை எதிர்ப்பதுபோல் நடந்துகொள்கிறது.
இதைத்தான் நான் குறிப்பிட்டேன். இதில் என்ன அவதூறு இருப்பதாக அதிமுகவினர் கருதுகின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை. எனவே நான் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.
நான் கூறிய கருத்தில் உடன்பாடில்லை என்றால் ஜனநாயக ரீதியாக எதிர்க்க வேண்டும் அதை விடுத்து அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அதிமுகவினர் வன்முறை செய்தால் எங்களுக்கும் வன்முறையில் ஈடுபடத் தெரியும். மதுவிலக்கு போராட்டங்களை திசை திருப்பவே அதிமுகவினர் திட்டமிட்டு இத்தகைய வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
வரும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதியளித்தால் அதிமுக - பாஜக தொடர்பு குறித்த விமர்சனத்தை திரும்பப் பெறுகிறேன்" என்றார் இளங்கோவன்.


முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 14-ம் தேதி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை அவதூறாகப் பேசினார்.
இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து உண்மைக்கு மாறாக, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவர் பேசியிருக்கிறார். அந்த அவதூறு பேச்சு முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவதூறு சட்டத்தின் கீழ் ஈவிகேஎஸ் இளங்கோவனைத் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Sunday, January 25, 2015

தியாகி ஜெ விடுதலையாக ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்ளேன்: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் பேட்டி

ஜெயலலிதா| கோப்புப் படம்
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தினந்தோறும் அனல் பறக்கிறது.
கடந்த 18 ஆண்டுகளாக இவ்வழக்கில் சிக்கி தவிக்கும் ஜெயலலிதாவை மீட்பதற்காக நாட்டின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான நாகேஸ்வர ராவ் களமிறக்கப்பட்டுள்ளார்.
அடுக்கடுக்கான ஆதாரங்களை யும், இதுவரை சொல்லாத புதிய தரவுகளையும் நாகேஸ்வர ராவ் தனது வாதத்தின்போது எடுத்துரைத்தார். அவரை `தி இந்து' சார்பாக சந்தித்தோம். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
ஜெயலலிதாவின் வழக்கில் 8 நாட்கள் இறுதி வாதம் நிகழ்த்தி யுள்ளீர்கள். உங்களுடைய வாதம் திருப்திகரமாக இருந்ததா?
கடந்த 8 நாட்களில் 40 மணி நேரத்துக்கும் மேலாக 10 நிமிடம் கூட இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் வாதிட்டுள்ளேன். எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஆவணங்களைக் கொண்டு திருப்திகரமாக வாதிட்டுள்ளேன். இதற்காக பல நாட்கள் இரவு பகலாக ஓயாமல் உழைத்திருக்கிறேன். இதில் எனது தனிப்பட்ட உழைப்பு மட்டுமல்லாமல், எனது உதவி வழக்கறிஞர்கள் 12 பேரின் கடும் உழைப்பும், ஏற்கெனவே இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களின் உழைப்பும் அடங்கி இருக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் உங்களுக்கு முன்பாக மூத்த வழக்கறிஞர்கள் ராம்ஜெத் மலானி, ஃபாலி நரிமன், பி.குமார் உள்ளிட்ட பலர் வாதிட்டுள்ளார்கள். அவர்களுடைய வாதத்தில் இருந்து உங்களுடைய வாதம் எந்த விதத்தில் வேறுபட்டதாக அமைந்திருக்கிறது?
ராம் ஜெத்மலானி, நரிமன் எல்லாம் பெரிய மனிதர்கள். அவர்களுடைய வாதம் குறித்து எதுவும் கூற முடியாது. என்னுடைய அறிவுக்கு எட்டிய முக்கிய குறிப்புகளைக் கொண்டும், வழக்கில் உள்ள ஆவணங்களைக் கொண்டும் மிக தெளிவாக வாதிட்டுள்ளேன்.
எங்களுக்கு சாதகமான பல உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டியதை நீதிபதி கவனமாக கேட்டுக் கொண்டார்.
உங்களுடைய 40 மணி நேர வாதத்தில், விசாரணை நீதிமன்றத்தில் குறிப்பிடப்படாத முக்கிய தகவல்கள் என்னென்ன?
விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம் குறித்து நான் எதுவும் கூறமுடியாது. ஜெயலலிதாவுக்கு சாதகமாக வந்த வருமான வரித் துறை தீர்ப்பாயத்தின் ஆணைகள், சொத்துகள் மதிப்பிட்டதில் உள்ள குளறுபடிகள், நமது எம்ஜிஆர் செய்தித்தாளின் வருமானம், ஹைதராபாத் திராட்சை தோட்ட வருமானம் உள்ளிட்டவை பற்றி ஆதாரங்களுடன் குறிப்பிட்டேன். குறிப்பாக இறுதி நாளில் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்த ஜெயலலிதாவின் சொத்து பட்டியலில் பல முக்கிய தகவல்களை இணைத்துள்ளேன். என்னுடைய வாதம் இன்னும் முடிவடையவில்லை. அரசு தரப்பின் வாதம் முடிந்த பிறகு, இறுதியாக 2 மணி நேரம் வாதிட திட்டமிட்டுள்ளேன். அப்போது இன்னும் பல முக்கிய தகவல்களை தெரிவிப்பேன்.
உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை முடிக்க நிர்ணயித்த 3 மாத கால அவகாசத்துக்குள் வழக்கை முடிக்க முடியுமா?
அதுபற்றி எனக்கு தெரியாது. சிறப்பு அமர்வு நீதிமன்றத்தைதான் கேட்க வேண்டும்.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் 3-ம் தரப்பாக சேர்க்குமாறு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் கோரி வருகிறார்களே?
மேல்முறையீடு என்பது முந்தைய தீர்ப்புக்கும் மனுதாரருக்குமான பிரச்சினை. இதில் மற்றவர்களை மூன்றாம் தரப்பாக சேர்ப்பது பற்றி நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும்.
உங்களுடைய வாதம் ஜெயலலிதாவை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யும் என உறுதியாக நம்புகிறீர்களா?
ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என்பதற்காகத்தான் வேண்டுதலைப்போல ஆயிரம் மணி நேரத்துக்கும் மேலாக செலவிட்டுள்ளேன்.
நன்றி  - த இந்து

Friday, October 17, 2014

ஜெயலலிதா ஜாமீனுக்கு 'வழிவகுத்த' வழக்கறிஞர் நாரிமன் வாதங்கள்

 மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் | கோப்புப் படம்: துளசி கக்கட்
மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் | கோப்புப் படம்: துளசி கக்கட்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜரானார். ஃபாலி எஸ்.நாரிமன் சிறப்பாக வாதாடினார். ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி அவர் வாதாடினார்.
நாரிமன் வாதம்:
ஊழல் வழக்கில் ஒரு நபர் குற்றம் நிரூபிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு தண்டனையும் பெறப்பட்ட நிலையில் அவர் சார்பில் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை உச்ச நீதிமன்றம் சற்று தாராள கொள்கையுடன் அணுக வேண்டும்.
உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னர் சந்தித்த பல்வேறு வழக்குகளில், தண்டனை கைதி மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது அவரை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு எதிரானது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு முடியும் வரை உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளது. இதை கருத்தில் கொண்டே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என பவானி சிங் தெரிவித்தார்.
பவானி சிங் வாதத்தில் தவறேதும் இல்லை. ஆனால், அவர் ஏதோ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பேசப்பட்டது. எனவே, ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தேவைப்பட்டால் ஜெயலலிதா வீட்டுக் காவலில் இருக்கவும் தயாராக இருக்கிறார்" என்று நாரிமான் வாதிட்டார். 


thanx - the hindu 

  • Natarajan  
    கர்நாடக நீதிமன்றத்தில் ஜெயாவின் வழக்கறிஞர்கள் ஜெயாவை போலவே மிகவும் ஆணவத்தோடு உடனே ஜாமீன் வேண்டும், தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று வாதாடினார்கள், ஆனால் உச்சநீதி மன்றத்தில், எசமான் நீங்கள் எது சொன்னாலும் நாங்க ஏற்றுகொள்கிறோம் என்று மிகவும் பணிவாக நடந்து கொண்டார்கள், நல்லா இறுக்கமாக பிடித்து இறுக்கினால் தான் சரிவரும், நீதிபதிகளை ஜெயாவின் அமைச்சர்கள் என்று நினைத்து விட்டார்கள் போல.
    Points
    760
    about an hour ago ·   (5) ·   (2) ·  reply (0) · 
       
  • venkatesan  
    நீங்க உள்ள irundhaa என்ன? வெளிய irundhaa என்ன ? யார பத்தி எங்களுக்கு என்ன கவலை ?எங்களத்தான் சிந்திக்க விடாம குடி நோயாளியா ஆக்கிட்டிங்களே. எங்களின் தேவை எல்லாம் விடுமுறை விடாம டாஸ்மாக் இருக்கணும்.(பேருந்தில் பயணம் செய்யும்பொழுது இரு கல்லுரி மாணவர்கள் சத்தமாக பேசிக்ககொண்டது)
    Points
    410
    about an hour ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
  • மல்லன்  
    தீர்ப்பை விமர்சிக்கும் அ.தி.மு.க.வினரை கேலியும் கிண்டலும் செய்கிற இணையதள புரட்சியாளர்கள் இப்போது ஜாமீன் பற்றி விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவே இவர்களின் நீதி. நீதியை மதிக்கும் லட்சணம்.
    Points
    600
    about an hour ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
    Shan-Shan  Up Voted
  • moorthy  
    நீதிக்கே அக்னி பிரவேசம் ! சட்டம் படித்தவர்கள் தாம் தனது எதிர் தரப்பு வாதத்தை உடைக்க வேண்டும் என்று மட்டுமே படிக்கிறார்கள். நாடு, சமுதாயம் இவற்றின் நலன்களை மனதால் நினைத்துக் கூட பார்க்க மறுக்கிறார்கள். அதனால் தான் நம் நாடும், சமுதாயமும் இவ்வளவு கீழ்மை நிலைக்கு சென்றுள்ளது. இந்தமுறையும் அரசு அங்கீகாரம் பெற்ற கட்டப் பஞ்சாயத்து என்றே கொள்ளலாம்.இதில் வல்லரசு கனவு வேறு. அனைத்தும் வேதனைக்குரிய விஷயங்களாக உள்ளது.
    Points
    215
    about an hour ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
  • raj  
    எல்லாம் இனி முனு மாசம்தான் என்ஜாய்
    Points
    860
    about 2 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
    Natarajan  Up Voted
  • MANIKANDAN  
    நல்லதொரு தீர்ப்பு
    about 2 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) · 
    Natarajan  Up Voted
  • Nagarajan  
    "குறிப்பிட்ட காலத்திற்கு தண்டனையும் பெறப்பட்ட நிலையில்" என்ன சார் இது, 21 நாள் சிறைவாசம் நீங்கள் குறிப்பிட்ட தண்டனை காலம். கொடுமை சார், அப்போ 18வருசம் இழுத்தடிச்சதுக்கு ஒரு கேஸ் போடலாமா?
    Points
    715
    about 2 hours ago ·   (9) ·   (1) ·  reply (0) · 
    Natarajan  Up Voted
  • tree  
    "தண்டனை கைதி மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது அவரை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு எதிரானது." பல கேள்விகள் எழ்கின்றது இங்கே. 1. மேல் முறையீடு செய்ய இயலாதவர்களின் கதி என்ன ஆகும், அவர்கள் கதை முடிந்ததா? 2. மேல் முறையீட்டின் மூலம் தீர்ப்பு இவருக்கு சாதகமாக வருமே ஆயின், இவர் அனுபவித்த தண்டனைக்கு கோர்ட் compensation வழங்குமா இல்லை மன்னிப்பு கேட்குமா? 3. சு. சாமி மீது மான நஷ்ட வழக்கு தொடுக்க இயலுமா? 4. இவர் கடைசிவரை உடல் நிலை காரணமாக ஜாமீனில் இருக்கும் குற்றவாளி என்று கருதப்படுவாரா?
    Points
    6405
    about 2 hours ago ·   (13) ·   (0) ·  reply (0) · 
  • perungopakaran  
    இனிமே அவங்க என்ன பன்னலுமே சரியாததன் படுது .............. பண்ணுங்கப்பா ...பண்ணுங்க ..... இனிமே தமிழ்நாடு என்ன பாடுபடபோவுதோ ..பொறுதிருந்து பர்ர்போம்...
    about 2 hours ago ·   (5) ·   (3) ·  reply (0) · 
    Natarajan  Up Voted
  • Murali  
    Vayadhai paarthaal Paavam . Aanaal avargalin Irumaappai paarthaal......
    about 2 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
    Natarajan  Up Voted
  • SENTHIL  
    தொண்டர்கள் பாவம் வெடி வெடிக்கிறார்கள, அவர்களுக்கு இந்த வழக்கின் அபாயம் தெரியவில்லை. இப்போது சுப்ரிம் கோர்ட் தீர்ப்பினால் ஜெயலலிதாவிற்கு மேலும் சிக்கல்தான். 5 மாதத்தில் கர்நாடக ஹைகோர்ட்ல் கேஸ்ய் முடிக்கவேண்டும், வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது, வேரூ யாரையும் சந்திக்க கூடாது (டாக்டர்ஐ தவிர), இன்னும் பலகண்டிஷன்கல். தலை சுற்றுகிறது. இந்த மாதிரி கண்டிஷன் பெயில் தீர்ப்பு சுப்ரிம் கோர்ட்ல் வாங்கியதற்கு பேசாமல் ஜெயிலிலேயே இருந்து கர்நாடக ஹைகோர்ட்லேயே பெயில் அப்பிள் செய்து இருக்கலாம். அங்கு இந்த மாதிரி கண்டிஷன் போடப்படாது வக்கில், ஆடிடர் மற்றும் அல்லகைகள் எல்லோரும் சேர்ந்து ஜெயலலிதாவிற்கு மிகப்பெரிய துரோகம் செய்கிறார்கள். இதை ஜெயலலிதாவும் உணர்ந்தார்போல் தெரியவில்லை. இனிமேலாவது ஜெயலலிதா நேரடியாக இந்த வழக்கில் தலையிடவேண்டும் அப்போதாவது இந்த வழக்கில் இருந்து விடுபட முடியுமா என்று பார்க்கலாம். செந்தில்
    about 2 hours ago ·   (4) ·   (2) ·  reply (1) · 
    • Shan Shan  
      வந்துவிட்டாரே என்ற விரக்தி !
      about an hour ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
      SENTHIL  Up Voted
  • SENGO  
    எல்லாரும் (அதிமுக )போயதாடியெல்லாம் எடுத்திட்டு சந்தோசமா கொண்டாடி ஜமாய்ங்க .உடன்பிரவாசகோதரியை பிரிச்சிட்டு எப்பிடி சந்தோசப்படரதுன்னு பயப்படாதிங்க
    Points
    650
    about 2 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) · 
  • gurunathan  
    இப்போது ஜெயா விற்கு ஜாமீன் கிடைத்தது ஒரு வக்கீலால்தான் என்றால் தண்டனை கிடைத்தது கூட ஒரு வக்கீல்(பவானி சிங் )மூலம்தான் .எனவே தயவுசெய்து எவைரயும் விமர்சிக்கும் முன் சற்று கண்ணியம் தேவை
    about 2 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
    SUNDARARAMANM  Up Voted
  • natarajan  
    இனி தமிழகத்தில் அராஜகம் தலைவிரித்து ஆடும்
    about 2 hours ago ·   (11) ·   (10) ·  reply (0) · 
    Natarajan  Up Voted
  • SUNDARARAMAN.M  
    அம்மா உள்ளே இருந்தால்தான் தங்களுக்கு எதிர்காலம் என்று இறுமாப்புடன் இருந்த எதிர்கட்சிகள் தலையில் இடி விழுந்துவிட்டது.
    Points
    100
    about 2 hours ago ·   (33) ·   (10) ·  reply (0) · 
    Krishnaswami  Up Voted
    Natarajan  Down Voted
  • Valluva Chelvan at Samsung Electronics 
    நன்றி .............ஆல்
    Points
    275
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • nithiyanandam  
    நிதி வென்றது (நாரிமன்), பாவம் நீதி