தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப்
பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை என்று
சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியிருந்தார்.
அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள்
மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள்.
![ஜெயமோகன் ஜெயமோகன்](http://tamil.thehindu.com/multimedia/dynamic/01960/509xNxjeya_1960767g.jpg.pagespeed.ic.64rhw72Rec.jpg)
இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க
வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம்
கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை
உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள்
சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை
இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.
வெகு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் (ஆண் எழுத்தாளர்தான்!) ஒரு மூத்த
ஆண் எழுத்தாளருக்கு எழுதிய கடிதத்தில் என் கதைகளைப் பற்றிக்
குறிப்பிட்டிருந்தார். ‘அம்பையின் கதைகளைப் படிக்கும்போது அவர் உடல்
ரீதியாகத் திருப்தியுறாதவர் என்று தெளிவாகத் தெரிகிறது’ என்ற தொனியில்
அமைந்திருந்தது அவர் விமர்சனம். கருணை உள்ளம் கொண்ட அந்த மூத்த எழுத்தாளர்,
அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார் தன் கருத்தொன்றையும் கூறாமல்.
உடனே அந்தக் கடிதம் எழுதியவர் எழுதியிருந்த கதைத் தொகுப்பு ஒன்றைப்
படித்தேன். தாங்க முடியவில்லை. ‘திருப்தியுற்றவர்கள் கதைகளின் தரம் இதுதான்
என்றால், நல்லவேளை நான் திருப்தியுறவில்லை’ என்று தோன்றியது.
பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த
நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர்
கண்ணியாக இருந்துவருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான
இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக்
குறை பாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம்
பல காலமாக இருந்துவருவதுதான்.
இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின்
துணையின்மை, பெண்களுக்கு இருக்கக்கூடாத அதீத காம இச்சைகள் இவைதான் பெண்களை
இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து
நிலவிவருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை. இவை மட்டும்
இல்லாதிருந்தால் பெண்ணின் செயல்பாடும் வெளிப்பாடும் வேறு மாதிரி
இருந்திருக்கும் என்ற நோக்கு. பெண் மட்டும் ஆண்கள் உவகையுறும் “பெண் தன்மை”
கொண்டவளாக இருந்திருந்தால் சரித்திரத்திலும் இலக்கியத்திலும் அவள் பங்கு
வேறு வகைப்பட்டிருக்கும் என்ற கணிப்பு.
பாரதி எழுதிய விமர்சனம்
இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு
மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி
பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி
எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள்,
திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை
ஒன்றைக் குறித்து குகப்ரியை விமர்சித்தபோது, “குகப்ரியை மாமி மடியாக
எழுதுபவர்” என்று தி. ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம்
குறிப்பிட்டதுண்டு.
ஒரு பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆபாசமான முறைகளில்
எழுத்திலும் செயலிலும் என்னைக் கேவலப்படுத்திய பெரும் கவிஞர்
கூறியதெல்லாம், இவள் சுதந்திரமானவள் அதனால் நடத்தை கெட்டவள் (நடத்தை
கெட்டவள் எனக் குறிப்பிடும் பெண்கள் இத்தகையவர்கள் கணிப்பில்
எப்படிப்பட்டவர்கள் என்ற விளக்கங்களை ஆராய்ச்சி செய்யப் பல பக்கங்களும்
அசாத்தியப் பொறுமையும் வேண்டும்) என்பதுதான்.
சமீபகாலத்தில், திருமணம்
செய்துகொள்ளாத அல்லது தனிப் பெண்ணாக வாழும் பெண் எழுத்தாளர்களை “உய்விக்க”
வரும் சில ஆண் எழுத்தாளர்கள் வைக்கும் முதல் கட்டுப்பாடு இலக்கியக்
கூட்டங்களுக்குப் போகக் கூடாது, கவிதைகள் எழுதக் கூடாது என்பதுதான். ஓர்
ஆணின் மேலான துணை கிடைத்த பின் ஒரு பெண்ணுக்கு இவை எல்லாம் தேவையா என்ன?
இப்படி உய்விக்கப்பட ஆதரவு தராத பெண்களுக்கு ஊடகங்களிலோ வேறு எங்காவதோ வேலை
கிடைத்துவிட்டால் தொலைபேசியில் இரவு கூப்பிட்டு “யாருடன் உறவு கொண்டதால்
(அவர்கள் இதற்கு உபயோகிக்கும் விரசமான மொழி வேறு) இந்த வேலை கிடைத்தது?”
என்று கேட்கும் ஆண் எழுத்தாளர்களையும், தொடர்ந்து இரவில் தொலைபேசியில்
கூப்பிட்டு, விரசமாகப் பல ஆண் எழுத்தாளர்கள் பேசுவதால் இரவு வேளைகளில்
தொலைபேசித் தொடர்பையே துண்டித்துவிடும், அஞ்சலட்டைகளில் அருவருக்கத்தக்க
படங்களை சிலர் வரைந்து அனுப்பித் தொடர்ந்து செய்யும் இம்சைகளால் வீட்டையே
மாற்றிய பெண் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும்.
இவற்றை எல்லாம்
பார்க்கும்போதும், இது குறித்து எங்களுக்குள் நாங்கள் பேசிக்
கொள்ளும்போதும், சமீபத்தில் பெண் எழுத்து மற்றும் செயல்பாடுகள் குறித்த
விமர்சனங்களை நோக்கும்போதும், பெண் வெறுப்பு என்பது எவ்வளவு தீவிரமான,
இன்னும் பெயரிடப்படாத மனநோய் என்பது தெரிகிறது.
இலக்கிய உலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் இடம் எந்த வகையிலும் ஆணின்
இடத்தைக் குலைக்கக் கூடாது, அது இரண்டாம் நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற
எண்ணமும் தொடர்ந்து இருக்கும் ஒன்றுதான். ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்
நாவலுக்கும், ஜெகச்சிற்பியனின் திருச்சிற்றம்பலம் நாவலுக்கும் முதல் பரிசு
ஆனந்த விகடனில் பகிர்ந்து அளிக்கப்பட்டபோது, அவை தொடர்களாக ஆனந்த விகடனில்
வெளிவரத் தொடங்கின. தாயற்று, தான் வளரும் உறவுக்காரர்களின் குடும்பத்தில்
சிறுமைபடுத்தப்படுவதால் தாழ்வு மனப்பான்மையால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றிய
கதையாகப் பல பக்கங்கள் கொண்ட நாவல் மலர்கள். திருச்சிற்றம்பலம் நாவலைவிட
மிகப் பெரியது.
மலர்கள் நாவலில் பாதிகூட முடிந்திராதபோது ராஜம்
கிருஷ்ணனுக்குக் கடிதம் போயிற்று, ஜெகச்சிற்பியனின் நாவல் தொடர் இன்னும்
ஓர் அத்தியாயத்துடன் முடிவதால் மலர்கள் நாவலையும் அடுத்த ஓர்
அத்தியாயத்துடன் முடிக்கும்படி. ஒரே பரிசு பெற்ற ஓர் ஆண் எழுத்தாளரின்
நாவல் முடியும்போது பெண் எழுத்தாளரின் நாவல் தொடர்ந்து வருவது அவரை அவமானப்
படுத்துவதாகும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கடிதம். சென்னைக்கு வெளியே
இருந்த ராஜம் கிருஷ்ணன் விரைந்து வந்து நாவலைத் தேர்ந்தெடுத்தவர்களில்
ஒருவரான, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதனை அணுகி, தனக்கு நியாயம்
கிடைக்கும்படிச் செய்யக் கோரினார். கி.வா.ஜ. எடுத்துக் கூறிய பின்தான்
மலர்கள் தொடர்ந்து தொடராக வந்தது.
பெண்களின் பொறுப்பு?
நாற்பதுகளில் குமுதினி திவான் மகள் நாவலை எழுதியபோது அதை வெளியிடப்
பத்திரிகைகள் முன்வரவில்லை. காரணம் அதில் கலப்புத் திருமணம் இருந்தது.
பிறகு அது தொடராக மணிக்கொடியில் வெளிவந்தது. ஒரு பிரபல பதிப்பாளர் ஒரு முறை
ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, என்
பேராசிரியரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கே இருந்ததால் என்னைப்
பேராசிரியர் அறிமுகப்படுத்தியபோது, சம்பிரதாயத்துக்கு என்னையும்
எழுதும்படிக் கூறி, என் எழுத்துக்களை வெளியிட ஆர்வமிருப்பதாகக் கூறினார்.
கூறிய உடனேயே நம் பண்பாட்டைக் குலைக்காமல் எழுதும் எதையும் தான் வெளியிடத்
தயார் என்று சேர்த்துக்கொண்டார். என் எழுத்து பண்பாட்டைக் குலைப்பது என்ற
முடிவுக்கு அவர் முதலிலேயே வந்திருந்தார் என்பது தவிர, பண்பாட்டை
நிலைநிறுத்துவது பெண்களின் பொறுப்பு என்ற கருத்தும், பண்பாட்டுக்கான
விளக்கம் ஒன்றும் அவரிடம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர்
வெளியிடக்கூடிய புத்தகங்களை நான் எழுதவில்லை என்பது வேறு விஷயம்.
எழுத்துக்கான மரியாதை
எழுத்தை அதன் இலக்கியத் தன்மை கொண்டு அளந்த நல்ல கணங்களும் தமிழ் இலக்கிய
வரலாற்றில் இருந்திருக்கின்றன. கௌரி அம்மாள் எழுதிய கடிவாளம் நாவலுக்கு
வ.ரா. முன்னுரை எழுதினார். மங்கை என்ற பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த
குகப்ரியைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. குமுதினி, சாவித்திரி அம்மாள்,
சரஸ்வதி அம்மாள், ராஜம் கிருஷ்ணன், குகப்ரியை, அநுத்தமா, ஆர். சூடாமணி
போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் கதைகளையும் மட்டுமல்ல, அவர்கள்
ஆங்கிலத்திலிருந்து செய்த பல மொழிபெயர்ப்புகளையும் வெளியிட கலைமகள் போன்ற
பத்திரிகைகள் முன் வந்தன.
குமுதினி போன்ற எழுத்தாளர்களுக்கு ஆங்கில
இலக்கியத்துடன் நல்ல பரிச்சயம் இருந்ததுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும்
நன்கு உணர்ந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆங்கில இலக்கியத் தின் பல நல்ல
எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சூடாமணி. எந்த வித சமரசமும்
செய்துகொள்ளாமல் எழுதியவர். அப்படி எழுத என்னைத் தூண்டியவர். பல ஆண்
எழுத்தாளர்கள் தீபாவளிக் கதைகளை தீபாவளி மலர்களுக்கும், அரைப் பக்க ஒரு
பக்கக் கதைகள், மோதிரக் கதைகள் என்று மற்ற பத்திரிகைகளுக்கும் எழுதிக்
குவித்துக் கொண்டிருந்தபோது தனக்குப் பிடித்ததை மட்டும் எழுதியதுடன், என்
கவனத்தைச் சிறப்பான இலக்கியத்தின்பால் திருப்பியவர்.
இலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும்
மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான
விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும்
இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர்
கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும்
ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம்
செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும்
வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார்
வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில்
எழுதியோ பெண்கள் உய்வுறப்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை
கருணை உள்ளம் இவர்களுக்கு!
பெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே
ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும்
நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும்
தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு
உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும்
மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான்
இப்போதைய தேவையும்கூட.
இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு
மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல.
![அம்பை அம்பை](http://tamil.thehindu.com/multimedia/dynamic/01960/441xNxambai_1960769g.jpg.pagespeed.ic.6CFC-ssUX-.jpg)
நன்றி - த இந்து
- saravanakumar saravanakumarஜெயமோகனின் வாதங்களில் எள்ளளவு நியாயம் இருந்தது என்றால் அதற்கு எதிர்வினையாற்றுகிறோம் என்கிற பெயரில் அவருடைய வாதங்களை முழுமையாக நியாயப்படுத்தும் காரியம்தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அம்பையின் கட்டுரை செஞ்சோற்றுக் கடனுக்காக சேராத இடம் சேர்ந்து செத்துப் போன கர்ணனைத்தான் நினைவுட்டுகிறது.about an hour ago · (1) · (0) · reply (0) · promote to News Feed
skv
எதனா ஜெயமொஹனுக்கு இவ்ளோ கடுப்புன்னுதான் புரியலே அன்று பெண் வேலைக்கிபோலே எழுத முடிஞ்சுது இப்போ நெறையபேர் வேலைக்கிபோராங்க வீட்டுலேயும் ஓய்வே இல்லே எழுத ஆர்வம் இருந்தாலும் முடியலே ,ஆனால் பேஷன் என்று திரியும் பெண்கள் நிச்சயம் எழுதவே மாட்டாabout 7 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feedskv
ஒரு முக்கியகாரணம் இன்று பெண்கள் பலரும் ஆங்கிலவஜிக்கல்வியே தான் படிக்குறாங்க ,அவாளுடைய நோக்கம் எல்லாம் படிப்பு நெறைய மார்க்ச்வாங்கனும் முதல் ரேங்க் படிச்சுமுடிச்சு வெளிநாடுபரக்கணும் என்பதே தான் , மேலும் பெத்தவாளும் என்கரேஜ் பண்றதே இல்லே , பாடப்புத்தகம் மட்டுமே தான் அவா உலகம் பொது அறிவு பெரிய ஜீரோ நாங்களெல்லாம் படிப்பும் படிச்சுண்டு நஊலகம்போயி புக்ஸ் கொனாந்துபடிப்போம் , இப்போதுமே நெறைய படிக்கறோம் ஆனால் இளைய சமுதாயம் சினிமா பாக்கும் டிவி பாக்கும் ரீடிங் என்றால் சுத்த போர் நு சொல்லுறாக என்ன செய்றது படிக்கவே சொம்பும் இவிக எல்லாம் எழுதரதாவுது நோ சான்ஸ்about 7 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feedபொன்.முத்துக்குமார் Ponnambalam
ஜெயமோகன் சொல்லும் - விவாதிக்கும் கருத்துக்கும் அம்பையின் கட்டுரைக்கும் எங்காவது தொடர்பு இருக்கிறதா ? இவர்களால வலுவான பதில் சொல்ல இயலாமையும் போராட்டத்திற்குப்பின் மறைந்துகொள்ளும் கோழைத்தனமுமே ஜெயமோகன் சொன்ன கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.about 9 hours ago · (1) · (0) · reply (0) · promote to News Feedsaravanakumar
இந்து நாளிதழ் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் எப்படி திரு. ஜெயமோகன் அவர்களின் புகைப்படம் போட்டு இப்படி ஒரு கட்டுரை வெளியிடலாம். அவரது படைப்புகள் என்ன என்று தெரியுமா? "இலக்கிய நோக்கர்களை பொறுத்தவரையில் இது மன நோயா?" அந்த இலக்கிய நோக்கர்கள் யார் என்று கூறினால் அவர்களின் ஆலோசனை பெற்று நாங்களும் நல்ல இலக்கிய வாசகர்கள் ஆவோம். ஒரு படைப்பு கூட நல்ல இலக்கிய தரத்தில் எழுத தெரியாதவர்களின் படைப்புகள் குறித்து விமர்சித்து இருந்தார். உங்களது படைப்புகளை எடுத்து வையங்கள். உங்கள் அனைவரது படைப்புகளையும் வைத்தாலும் ஜெயமோகன் அவர்களின் ஒரு சிறுகதைக்கு கூட இணையாகாது.about 11 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feedsaravanakumar
பெண்களை பற்றியோ அவர்களை பாலியல் குறித்து விமர்சித்தோ எந்த ஒரு கருத்தையும் திரு. ஜெயமோகன் சொல்லியிராத நிலையில், அவரின் படத்துடன் வெளியாகி இருக்கும் இந்த கட்டுரை முற்றிலும் அருவருக்கத்தக்கது. பாலியல் குறித்தும் அதை தன் சொந்த அனுபவம் போல எழுதி உள்ள எழுத்தாளர்களை குறித்து விமர்சித்து இருந்தார் ஜெயமோகன். அதுவும் பல வருடம் முன்பு. தற்சமயம் அவர் குறிப்பிட்டது நல்ல படைப்புகள் குறித்தே. இதில் எங்கே பெண் அடிமைத்தனம், பெண் வெறுப்பு வந்தது. அவர் தரத்தில் எழுத நினைத்துகூட பார்க்க முடியாதவர்கள் இப்படி அவரின் பெயர் போட்டு விமர்சித்து விளம்பரம் தேடி கொள்ளலாம்.about 11 hours ago · (0) · (0) · reply (0) · promote to News FeedSrinivasan Bhargavan at Enjoying Retirement
அனுராதா ரமணன், சிவசங்கரி ,வாஸந்தி ,போன்றவர்களின் எழுத்துகளை பற்றி திருமதி அம்பை அவர்கள் அறிந்திருக்க கூடும்....ஜெயமோகன் போன்றவர்கள் அந்த மாதிரி (அனுராதா ரமணன், சிவசங்கரி ,வாஸந்தி ,போன்றவர்களின்) எழுத்துகளை மனதில் கொண்டு விமரிசித்து இருக்கலாம் ,அல்லவாabout 14 hours ago · (0) · (0) · reply (0) · promote to News FeedSu Agathiyalingam Journalist at Chennai, Tamil Nadu
அம்பையின் அறச்சீற்றம் நியாயம் ! நியாயம் ! ஆணாதிக்கம் எங்கும் கோலோச்சுகிறது .. எழுத்துலகில் ஜெயமோகன் , சாருநிவேதா போன்றோர் வடிவில் தலை நீட்டுகிறது . சமூகநீதிக்கும் பெண்ணுரிமைக்கும் எதிரான நிற்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கியாக வேண்டும் . பெண்கள் தங்கள் கோபங்களை ஏக்கங்களை ஆவேசங்களை ரசனைகளை சிந்தனைகளை விரக்திகளை ஏமாற்றங்களை மெய்களைப் பொய்களை எழுதும் முழு உரிமை படைத்தவர்கள் . அதனை வக்கிரமாக விமர்சிப்பவன் மனநோயாளியே ! ஆக்கபூர்வமான காய்தல் உவத்தலற்ற விமர்சனங்களுக்கு பால்பேதம் இல்லை .about 20 hours ago · (9) · (8) · reply (4) · promote to News Feedசுரேஷ் Down VotedVenkatachalam Saravanan
1. ஜெயமோகனது வக்கிரமான விமர்சனம் என்ன ஐயா!?about 20 hours ago · (1) · (0) · reply (2) · promote to News FeedHariharan
அது புரிஞ்சா அகத்தியலிங்கம் ஏன் இப்படி ஒரு கமெண்ட் போட்டு இருக்க போகின்றார் ?!?1?1?1about 18 hours ago · (8) · (0) · reply (0) · promote to News FeedVenkatachalam Saravanan Up Voted
பொன்.முத்துக்குமார் Ponnambalam
ஐயா, ஜெயமோகனது விமர்சனம் என்ன என்பது முழுமையாக தெரியுமா ? பெண்களை எழுதக்கூடாது என்று அவர் சொல்லவே இல்லையே ? பின்னர் எதற்கு அவர்களது உரிமை பற்றியெல்லாம் இங்கு இழுக்கிறீர்கள் ?about 9 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feedsaravanakumar
அரசீற்றமா? அப்படி ஜெயமோகன் அவர்கள் என்ன அறப்பிழை செய்து விட்டார் திரு.அகத்தியலிங்கம் அவர்களே. பொறாமையில் வெந்து இப்படி உண்மை அல்லாததுக்கு எல்லாம் வக்காலத்து வாங்காதீர்கள். என்ன செய்தாலும் எழுத்துலக சூரியன் ஜெயமோகன் அவர்களை உங்கள் கரங்களால் மறைத்து விட முடியாது.about 11 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feedsaravanakumar
சாரு நிவேதிதா அப்டி என்னப்பா பெண்ணடிமை பண்ணிட்டாரு.. அட ஒரு விதவையை கல்யாணம் பண்ணி சமையல் முதற்கொண்டு அவரே சமைச்சு குடுத்துட்டு இருக்காரு. ஜெயமோகன் அவர்களோ, சாருவோ எந்த ஒரு மேடையிலும் எந்த பெண்ணையும் அசிங்கமா பேசினது இல்ல. பாலியலை முதன்மை படுத்தி தன சொந்த அனுபவம் போல எழுதும் பெண் எழுத்தாளர்களை நல்ல படைப்புகள் எழுத சொல்லி கேட்டுகிட்டாரு. இதுல எங்கிங்க அறபிழை செய்துட்டாறு ஜெயமோகன்? எல்லா பெண் எழுத்தாளர்களையும் சொல்லலையே.about 11 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feed
ஆனந்த் Anandaraj
பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் புத்திசாலிகளும் இல்லை. வாசகர்கள் மடையர்களும் இல்லை. தரமானவற்றை பத்திரிக்கைகள் பிரசுரிப்பதும் இல்லை பத்திரிகைகளின் ஒரு கும்பல் தானே ஆக்கிரமித்து இருக்கிறது. அவர்களுக்குள் அரசியல்.about 22 hours ago · (3) · (0) · reply (0) · promote to News FeedJohn
ஜெயமோகனின் அடிப்பொடிகள் முதலில் அம்பை சொல்லும் குற்றச்சாட்டுக்குப் பதில்சொல்லட்டும். அந்த மூத்த எழுத்தாளர்ரிடம் ஜெயமோகன் சொன்னதெல்லாம் தரமான இலக்கியமா என்று சொல்லட்டும். அம்பை வெளிவந்து கருத்துக்களைச் சொல்லவேண்டும்about 23 hours ago · (1) · (0) · reply (3) · promote to News FeedVenkatachalam Saravanan
1.அம்பையின் குற்றச்சாட்டுதான் என்ன!? 2.ஜெயமோகன் அம்பையிடம் என்ன சொன்னார்!?!? 3.நீங்கள் கட்டுரையைப் படித்துவிட்டுதான் கருத்து வைக்கிறீர்களா!? 3.அம்பை / ஜெயமோகன் படைப்புகளில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் எவை?about 21 hours ago · (4) · (0) · reply (0) · promote to News Feedபொன்.முத்துக்குமார் Ponnambalam
எந்த மூத்த எழுத்தாளரிடம் ஜெயமோகன் என்ன சொன்னார் என்று கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம் ?about 7 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feedsaravanakumar
அடிபொடிகளா. சரி அப்படியே இருக்கட்டும். நீங்க மொதல்ல கட்டுரைய நல்ல படிங்க. அம்பையிடம் ஜெயமோகன் எதுவும் சொல்லவில்லை. அவர் வெளியிட்டிருந்த கட்டுரையின் இரண்டு வரிகளை மட்டும் குறிப்பிட்டு மேற்கொண்டு கட்டுரை வேறு திசையில் செல்கிறது. அங்கே இருக்கும் எல்லா கருத்துக்களும் ஜெயமோகன் சொன்னவை அல்ல. இது கூட புரியாத நீங்கள் கண்டிப்பாக ஜெயமோகன் அவர்களுக்கு அடிப்பொடியாக கூட இருக்க தகுதி அற்றவர்.about 11 hours ago · (1) · (0) · reply (0) · promote to News Feed
முருகன்
ஜெயமோகன் இந்தப் பெண்மணிகளைப்போல லூஸ்டாக் விடுபவர் அல்ல. தரமான இலக்கியங்கள் படைப்பதோடு நில்லாமல் பிறர் எழுதிய இலக்கியங்களையும் பிறர் அறியத் தருபவர். இன்றைய சூழலில் சரக்கு இருக்கும் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். மேலதிக அரசியல் காரணங்களால் தனது படைப்புகள் அரசு பீடத்தில் இருப்பவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டவர். மேற்கண்ட கட்டுரை, அறிக்கையில் கையெழுத்திட்டவராக, இன்னும் கொஞ்சம் சந்தோஷத்தைத் தருமே ஒழிய இலக்கியத்தைத் தராது. 1. பாலினம் வைத்து நோக்காது படைப்பை வைத்து மட்டுமே எழுத்தாளர்கள் தரம் நிர்ணயிக்கப்படல் வேண்டும். 2. 'அய்யோ பாவம் பெண்' என்று சொல்பவர்களில் முக்கால்வாசிப்பேர் ஆணாதிக்க மடையர்கள். பெண்கள் செய்யும் தவறைச் சுட்டுபவன் அல்ல. வெட்டி சத்தம் போடாமல் தங்கள் படைப்பு வேலையை எல்லாரும் கவனியுங்கள்.about 23 hours ago · (8) · (2) · reply (0) · promote to News FeedJohn
ஜெயமோகன் பெண் எழுத்தாளர்களிடம் நடந்துகொண்ட முறைகளைப்பற்றிய பழைய கதைகளை அம்பை சொல்லும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் எழுதிய அந்தக்கடிதத்தையும் தனிப்பட்ட பேச்சுக்களையும் அம்பை வெளியிட்டு இம்மாதிரியான பச்சோந்திகளின் முகத்திரையைக் கிழிக்கவேண்டும்about 23 hours ago · (1) · (2) · reply (2) · promote to News Feedraajaa Up Votedமுருகன் Down Votedமுருகன்
பெண் எழுத்தாளர்களிடம் அப்படி என்ன முறையில நடந்துக்கிட்டாருங்க. கொஞ்சம் தெளிவா சொல்லுங்கabout 23 hours ago · (2) · (0) · reply (0) · promote to News FeedVenkatachalam Saravanan Up Votedsaravanakumar
What the hell.. Jeyamohan has to file case against people like you. Jeyamohan didnt misbehave with anyone you senseless. Just Ambai pointed two lines from his posting and wrote a general writing. Read it properly before making comments.about 11 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feed
Venkatachalam Saravanan
ஜெயமோகனின் கருத்துக்களுக்களுடன் தொடர்பே இல்லாத பத்தி அம்பையுடையது. ஆச்சரியத்துக்கும் வருத்தத்துக்கும் உரியது. பெண் எழுத்தாளர்கள் எவ்வாறெல்லாம் இலக்கியப் பரப்பில் தாழ்த்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் ஜெயமோகனின் கருத்தே வேறு - தற்காலப் பெண் எழுத்தாளர்களில், தங்கள் எழுத்துகளின் சிறப்பு மூலம் மட்டும், ஆண் பெண் உட்பட குறிப்பிடப்படும் எழுத்தாளர்களாகத் தேர்ச்சி பெற்றவர்கள் கிட்டத்தட்ட எவரும் இல்லை என்பதே அது. முதலில் அதைப் புரிந்து கொள்வதற்கோ, கருது சொல்வதற்கோ, தமிழ் இலக்கியம் குறித்த பரந்த வாசிப்பும் நுண்ணறிவும் தேவை. தொன்று தொட்ட அகநானூறில் இருந்து, புதுமைப் பித்தன் மற்றும் தி.ஜா.ரா-வை உட்படுத்தி, இன்றைய சல்மா வரை வாசிப்பு இருந்தாலே இவ்விவாததைப் புறிந்து கொள்ள முடியும் - கருத்து சொல்வது அதற்கப்புறம்! அம்பையின் கடுமையான இந்த எழுத்தை வெளியிட்டிருக்கும் 'இந்து', இவ்விவாதத்தின் அடிப்பொருளை உணர்ந்திருக்கிறதா என்பதே சந்தேகம்!about 23 hours ago · (12) · (1) · reply (0) · promote to News FeedSneha
பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றி இன்னும் அறியாமையுடன் இருக்கும் ஜெயமோகனுக்கும் தொடர்ந்து இத்தகைய கேள்விகளை முன் வைக்கும் ஆண் மேட்டிமையாளர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.about 24 hours ago · (2) · (4) · reply (3) · promote to News FeedVenkatachalam Saravanan
சபாஷ்! அப்படியே, ஜெயமோகனின் படைப்புகளில் சிறந்தது என்று நீங்கள் கருதுவதையும், அதற்கு ஒப்புடைமை செய்யக்கூடிய எவராவது ஒரு பெண் எழுத்தாளரது படைப்பையும் சொல்லுங்களேன்!about 22 hours ago · (0) · (1) · reply (0) · promote to News Feedபொன்.முத்துக்குமார் Ponnambalam
பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களைப்பற்றி ஜெயமோகன் அறியாமையுடன் இருக்கிறாரா ? வெளங்கிடும். ஜெயமோகன் யார் என்றாவது உங்களுக்குத்தெரியுமா ?about 7 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feedsaravanakumar
ஆஹா.. என்னே ஒரு இரக்க சுபாவம். தங்களது இரங்கலுக்கு நன்றி. தயவு செய்து ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடாத பெண் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை சுட்டிக்காட்டி எங்களது அக கண்களை திறந்து வையுங்கள்.about 11 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feed
raajaa
பலவகை உத்திகள் மூலம் ஊடக பிம்பமாகி விடுகிறார்கள் என்று பெண் எழுத்தாளர்களை நோக்கி சுட்டு விரல் நீட்டும் ஜெயமோகனுக்கு, மற்ற நான்கு விரல்கள் தன்னை நோக்கியிருக்கிறது என்பதை அறியவில்லை போலும்.a day ago · (2) · (3) · reply (1) · promote to News Feedபொன்.முத்துக்குமார் Ponnambalam
ஆஹாஆஆஆஆ அடடாஆஆஆஆஆ என்னே அற்புதமான பதில் !!! எப்படி மற்ற நான்கு விரல்களைப்பற்றி அறியாமலே போய்விட்டார் ?? உங்களுக்குத்தெரிந்த இந்த மாபெரும் தத்துவ விளக்கம் அவருக்குத்தெரியாமல் போய்விட்டது பாருங்கள் !!! என்ன எழுத்தாளர் இவர் ?about 7 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feed
K R
ஜெயமோகனுடைய புகைப்படத்துடன் இந்தக் கட்டுரையை வெளியிட்டிருப்பது ஏதோ அவர்தான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பெண்களை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தொலைபேசியிலேயோ, இணையதளத்திலேயோ, பெண்களை அவதூறாகப் பேசினாரா? எழுத்தாளர்கள் என்ன எழுதினார்கள் என்று தானே கேட்கிறார்? கேள்வி கேட்கப்பட்ட தளத்திலேயே பதில் சொல்லலாமே? அம்பையுடைய கட்டுரை அவர் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலாகாது. பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதியுள்ள கடிதம் அவதூறு மட்டுமே.