அங்கே தான் ஒரு ட்விஸ்ட் யாரை போட்டுத்தள்ள உதவினாரோ அந்த டாண் ஹீரோயினோட கார்டியன். இப்போ ஹீரோ யூ டர்ன் அடிக்க வேண்டிய கட்டாயம் . வை கோ எப்படி ம ந கூ ஒர்க் அவுட் ஆகலைனு தன்னை துரோகினு சொன்னவங்க கூடவே சேர்ந்தாரோ அப்படி ஒரு அந்தர்பல்டி அடிக்கறாரு
ஹீரோயின் லேசுப்பட்ட ஆளில்லை , சசிகலா மாதிரியே கிரிமினல் வேலை எல்லாம் பண்றாப்டி . இறுதியில் ஹீரோ ஹீரோயினை வென்றாரா? துரோகம் செஞ்சதுக்கு பரிகாரம் தேடிக்கிட்டாரா? என்பதை நெட் ஃபிளீக்சில் காண்க
ஹீரோவா தென்னக ப்ரூஸ்லீ தனுஷ் . இவருக்கு கேரக்டர் படி புதுப்பேட்டை , வட சென்னை ரோல். கெட்டப் படி பேட்ட ரஜினி மாதிரி .,. புகுந்து விளையாடி இருக்கார் . ஆனா என்ன தான் ஹீரோயிசம் காட்டுனாலும் ஈர்க்குச்சி மாதிரி இருந்துட்டு ஒரே ஷாட்டில் 25 பேரை அடிப்பதெல்லாம் ஓவர் . சரி தமிழ் சினிமா தலைஎழுத்து அவ்ளோ தான்னு சகிச்சுக்கலாம்
ஹீரோயினா ஐஸ்வர்யா லட்சுமி . இலங்கைத்தமிழில் சமாளிக்கிறார். சுமாரான 50 மார்க் ஃபிகரான இவருக்காக ஹீரோ 90 மார்க் ஃபிகரைக்கண்டது போல் உருகுவது எல்லாம், ஓவரோ ஒவர் . ஹீரோயின் வில்லி ஆகப்போறார் என்ற அந்தக்கால சஸ்பென்ஸ் எல்லாம் பெருசா எடுபடலை. முதல்லியே தெரிஞ்சிடுது . அந்த இன்ண்டர்வெல் சஸ்பென்சை ரொம்பவே நம்பி இருக்காங்க
வில்லனா 2 பேரு . அந்த லோக்கல் டாண் நடிப்பு குட்
ஃபாரீன் வெள்ளைக்காரன் கெட்டப் சைக்காலஜிக்கல் த்ரில்லரான த ஆக்குபண்ட் வில்லன் கெட்டப் . இடை வேளை வரை ஓக்கே . கடைசில எடுபடலை
ஒரு சீன்ல சாமார்த்தியமா ஒரு டயலாக் வெச்சிருக்காங்க . வெள்ளைக்காரனான வில்லன் ஏன் இந்தியனான தனுஷ் மேல அவ்ளோ நம்பிக்கை வெச்சான்? அதுக்கு பதில் கடைசி வரை இல்லை நாம யாரும் கேள்வி கேட்டுடக்கூடாதுனு அவங்களே கேட்டுக்கிட்டாங்க போல
தமிழ் மட்டுமே தேரிஞ்ச ஹீரோ , இங்க்லீஷ் மட்டுமே தெரிஞ்ச வில்லன் இருவர் சந்திப்பு காட்சிகள் எல்லாம் ஸ்டாலின் மோடி சந்திப்பு மாதிரி செம காமெடி . அவருக்கு தமிழ் தெரியாது , நம்மாளுக்கு இங்க்லீஷ் ஹிந்தி எதுவுமே தெரியாது . என்னத்தைப்பேசி இருப்பாரோ ?
கலையரசனுக்கு டாணின் தம்பி ரோல் பரவால்லை
வசனங்கள் எல்லாம் பரவால்லை . இலங்கை தமிழ் அகதி மேட்டரை வலுக்கட்டாயமா திணிச்சிருக்காங்க . த ஃபேமிலிமேன் 2 பாதிப்போ ?
இசை சந்தோஷ் நாராயணன்.. தர லோக்கல் இசை . 2 பாட்டு தேவல
ஒளிப்பதிவு , எடிட்டிங் பரவால்ல
இயக்கம் கார்த்திக் சுப்புராஜ் . அக்மார்க் அதே பாணி இயக்கம் . நாட் பேடு நாட் சூப்பர் , பராவல்லை ரகம்
நச் டயலாக்ஸ்
1