தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள்
அனைத்தையும் ஜூன் 1 முதல் அறவே நீக்க, தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர்
ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற
நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் தான் பெருமிதம்
அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டின் மின்
நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று (27.5.2014) தலைமைச் செயலகத்தில்
ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ.
பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
நத்தம் ஆர். விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக
வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ்
சுங்கத், இ.ஆ.ப., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் துறை வளர்சிக்கும் இன்றியமையாததாக
விளங்குவது மின்சாரமே ஆகும். 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக
நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12,000
மெகாவாட் என்ற அளவில் இருந்தது. ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8,000
மெகவாட் தான். அதாவது கிடைத்த மின்சாரத்திற்கும், தேவைப்பட்ட
மின்சாரத்திற்குமான இடைவெளி 4,000 மெகாவாட்டாக இருந்தது.
மேலும், தமிழ்நாடு மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்
தவித்து வந்தது. இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான பகீரத முயற்சிகளை எனது
தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2,500
மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம்
கொள்முதல் செய்ய நடுத்தர கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த மின்சாரம்
பெறப்பட்டு வருகிறது.
இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில்
வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் வரும் ஆகஸ்ட்
மாதத்திலிருந்து படிப்படியாக பெறப்படும்.
புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும், கொள்முதல் செய்யப்படும்
மின்சாரத்தின் மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கப்
பெற்று வருகிறது. எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே
இல்லாத நிலை உருவாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் காற்றாலை மூலம் அதிக
அளவில் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும்
மின்சாரம் 2 முழுவதையும் பயன்படுத்திட வேண்டும் என்று நான் தமிழ்நாடு
மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளேன்.
ஜூன் மாதம் முதல் கிடைக்கப் பெறும் காற்றாலை மின்சாரத்தையும் கருத்தில்
கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள்
அனைத்தையும் 1.6.2014 முதல் அறவே நீக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி, தற்போது உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின்
நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90
விழுக்காடு மின் கட்டுப்பாடு 1.6.2014 முதல் நீக்கப்படும்.
இதே போன்று, உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு
மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 விழுக்காடு மின்
கட்டுப்பாடும் 1.6.2014 முதல் நீக்கப்படும். இதன் மூலம் 1.11.2008 முதல்
தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட
மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகவும்,
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும். நான் ஏற்கெனவே உறுதி
அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே
ஆண்டுகளில் கொண்டு வந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்" என்று முதல்வர்
ஜெயலலிதா கூறியுள்ளார்.
- chandran from Chennaiகண்ணைனம்பாதே.....உன்னை ஏமாற்றும் .உன்னை ஏமாற்றும் ..நீ காணும் ... எப்பையோ கேட்டது . இன்று ஞாபகம் வருகிறதுabout 2 hours ago · (3) · (0) · reply (0) · promote to News Feed
- IBRAHAM Ali from Jeddahஇப்படியெல்லாம் ஒரு முதல்வர் அவருடைய அறிக்கையில் எந்த ஒரு உண்மையும் இல்லை. ஒரு முதல்வரே இப்படி பொய் சொன்னால் இவருடைய அமைச்சர்கள் யப்படியல்லாம் பொய் சொல்லுவார்களோ. கேட்பதற்கு தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்துள்ளார்.about 3 hours ago · (6) · (1) · reply (0) · promote to News Feedஜெய்.ரமணா Up Voted
- Kandasamyஎன்னமோ போங்க, இப்படி கேட்டுக் கேட்டு காது மரத்துப்போய் விட்டது. ஆனால் ஒன்று புரிகிறது. இந்த 3 ஆண்டுகளும் வாக்கு வங்கியைத் தக்க வைக்கவே கழிந்திருக்கிறது. இனியுள்ள 2 ஆண்டுகளுக்கும் அதை மட்டுமே குறியாகக் கொண்டு இம்மாதிரி அறிவிப்புக்கள் அவ்வப்போது வரும். இதெல்லாம் சகஜமப்பா!about 3 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feed
- gopalakrishnan vilathikulam from Mumbaiதமிழக முதல்வர் திட்டமிட்டபடி தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறினால் தமிழகம் வளர்ச்சி பாதைக்கு சென்று விடும் ஏராளாமான விவசாயிகள், , தறிநெசவாளர்கள், மின்சாரம் பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் மற்றும் சிறிய குறிய தொழில் முனைவர்கள் அனைவரும் மின்வெட்டு இல்லாத நிலையினை எதிர்நோக்கி இருக்கிறார்கள். வெறும் வார்த்தை அளவில் விளம்பரமாக இல்லாமல் முதல்வர் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதற்கு அதிகாரிகளும் துணை நிற்க வேண்டும்about 3 hours ago · (2) · (0) · reply (0) · promote to News Feed
- baskaran Karan from Chennai37 இடங்களில் வெற்றி பெற்று விட்டதால் மக்கள் என்ன சொல்லிவிட்டாலும் நம்புவார்கள் என்று நம்பி விட்டார்கள் போலும். நீங்கள் ஆட்சிக்கு வரும் முன் 3 மாதங்களில் செய்வதாக கூறியதை மூன்று வருடங்களில் செய்த இருப்பாதாக கூறி உள்ளீர்கள். ஆனால் காற்றலை மூலம் ஜூன் முதல் மின்சாரம் கிடைக்கும் என்பது யாவரும் அறிந்ததே. 2015 ஜனவரிக்கு பிறகு மின்வெட்டெ இல்லாமல் இருந்தால் தான் நீங்கள் சொன்னது உண்மையாகும். அதுவரை இந்த செய்தி கானல் நீர்தான்.....about 3 hours ago · (4) · (0) · reply (0) · promote to News FeedRajasekar Up Voted
- AbdulHameed from Muscatமின்வெட்டு இருந்தாலும் காசு கொடுத்து மற்றும் 144 உத்தரவுகளின் மூலம் நீங்கள்தான் வெற்றிபெற்றீர்கள் ஆகையால் மின்வெட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை நீங்களும் கவலைபடதேவையில்லை.about 3 hours ago · (3) · (1) · reply (0) · promote to News Feedஜெய்.ரமணா Up Voted
- மு.நாட்ராயன் from Maduraiகாற்றாலை மின்சாரத்தை எப்படி நம்புவது. காற்று நின்றுவிட்டால் மின்சாரமும் நின்றுவிடும். ஆகையால் மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும். உடனடி தேவை!about 3 hours ago · (0) · (0) · reply (0) · promote to News Feed
- Abul Hassan from Livingston"புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கப் பெற்று வருகிறது. எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது." அண்ட புளுகு ஆகாச புளுகு என்பார்களே அது இதுதானா? இன்று காலை 9 மணி முதல் என் வீட்டில் மின்சாரம் இல்லை.about 4 hours ago · (2) · (3) · reply (0) · promote to News FeedKandasamy Up Voted
- abuadnan.ksa. baharudeenநல்ல காமெடி? இன்னும் மூன்று ஜூன்கள்தான் பாக்கி இருக்கிறது?about 4 hours ago · (16) · (12) · reply (0) · promote to News Feedkannan · Mauroof, Dubai Up Voted
- AR Raja Sr. Sales Executive at ARR Seeval Factory, Kumbakonam from Bangalore////// இதன் மூலம் 1.11.2008 முதல் தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ///////// அடேங்கப்பா..! என்ன சாமர்த்தியம்டா ராமா..! ஏம்மா.. அவங்க போட்ட தலைமைச் செயலகத்தைத் தூக்கி எறிஞ்சதுபோல, இந்தக் கட்டுப்பாட்டையும் தூக்கிப் போட்டிருக்கலாமேம்மா..? ஏம்மா 3 வருஷமா வச்சிருந்தீங்க..? நீங்க அறிவாளியா இருங்க.. மக்களை ரொம்ப மடையர்கள் ஆக்காதீர்கள்..about 4 hours ago · (14) · (9) · reply (0) · promote to News Feedஜெய்.ரமணா Up Voted
- Mannan Mannenதமிழக முதல்வர் அவர்களக்கு மிக பெரிய நன்றி