சூது கவ்வும்' ஐ.பி.எல்.!
சிக்கலில் நடிகைகள்..
குதிரை ரேஸ், லாட்டரி, ரம்மி என்பதெல்லாம் பழங்கதைகள்.
இன்றைக்கு சூதாடிகளின் சொர்க்கம்... ஐ.பி.எல். கிரிக்கெட்தான். ராஜஸ்தான்
ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை
ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ததற்காக டெல்லி போலீஸார் கைதுசெய்துள்ளதன் மூலம்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்னொரு முகம் வெளிவந்திருக்கிறது.
என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?
யார் காரணகர்த்தா?
காவல் துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது இது...
''ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டம்... ஸ்பாட்
ஃபிக்ஸிங்... மூன்று வீரர்கள் கைது என்று வரும் செய்திகளைப்
பார்க்கும்போதும் படிக்கும்போதும் அபத்தமாக இருக்கிறது. உலகில் எங்கு
எப்போது கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் அதில் சூதாட்டம் நிச்சயம் இருக்கும்.
இந்த விளையாட்டுக்கு இந்தியாவில் மூளையாகச் செயல்பட்ட லலித் மோடி முதல்,
இப்போது உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளைப் பின்னால் இருந்து இயக்கும் சில
பிரமுகர்கள் வரை பட்டியல் போட்டுப் பாருங்கள். அவர்கள் எல்லோருமே
சூதாடிகள்தான்.
அணியின் முக்கியப் பிரமுகர்கள் சிலருக்கு பெட்டிங்
கம்பெனி உள்ளது. அவை அந்த முக்கியப் பிரமுகர்களின் பினாமிகளின்
கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த கம்பெனி சொல்கிறபடிதான் வீரர்கள்
விளையாடுவர். குறிப்பாக, தென் மாநிலத்துப் பிரமுகர் ஒருவரைச்
சொல்கிறார்கள். அவர்தான் வீரர்களுக்கும் சினிமா நடிகைகளுக்கும் இணைப்புப்
பாலம். நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தால் தெரியும்... மேட்ச்
நடக்கும்போது சில நடிகைகள், மாடல்கள் வி.ஐ.பி. வரிசையில்
உட்கார்ந்திருப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபலமான ஒரு நடிகை,
ரெய்னாவுடன் நட்பு பாராட்டுவதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. இதெல்லாம் தென்
மாநிலத்துப் பிரமுகரின் கைங்கர்யம்தான். அந்த நடிகைகளுக்கும் அடுத்து
சிக்கல் காத்திருக்கிறது.
இவரைப்போலவே ஒவ்வோர் அணியிலும் பினாமிகளின் சித்து விளையாட்டுக்கள் உண்டு.
அவர்கள்தான் ஆட்டத்தின் தலைவிதியை தீர்மானிப்பார்கள். அதற்காக
வீரர்களுக்கு என்ன வேண்டுமானாலும் சப்ளை செய்யப்படும். அவர்கள்
சொல்கிறபடியே வீரர்களும் விளையாடுவார்கள். இப்படித்தான் கிரிக்கெட்
சூதாட்டம் ஜெகஜோதியாய் நடக்கிறது. புக்கிகள், ஏஜென்ட்கள் எல்லாம் இந்த
பினாமிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்டிங் கம்பெனிக்கு வேலை பார்க்கும்
ஊழியர்கள்தான். அவர்கள் போய் வீரர்களை வளைப்பது, அவர்களுக்குப் பணம்
கொடுப்பது எல்லாம் சாத்தியம் இல்லாதது. அதற்கான வாய்ப்புகள் மிக மிகக்
குறைவு. அணியின் கோச், களத்தில் நிற்கும் அம்பயர், மூன்றாவது அம்பயர் எனப்
பலரும் அணியின் பெட்டிங் கம்பெனிக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். இப்போது சொல்லுங்கள். சூதாட்டத்துக்குக் காரணம், வீரர்களும் புக்கிகளும் மட்டும்தானா?'' என்று கேட்டு நம்மைக் கிடுகிடுக்கவைத்தார்.
''அப்படியென்றால், ஸ்ரீசாந்த் மாட்டியது எப்படி?''
''அணியின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்டிங் கம்பெனியின்
கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, ஸ்ரீசாந்த் தன்னுடைய நண்பர் ஜுஜுவுடன்
சேர்ந்து தனியாக பெட்டிங்கில் ஈடுபட்டார். அப்படி அவரை வளைத்தது
தமிழகத்திலும் கேரளாவிலும் லாட்டரித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும்
முக்கியப் புள்ளி ஒருவர்தான். அவருடைய பேச்சைக் கேட்டு ஆடிய
ஸ்ரீசாந்த்தால், அணியின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்டிங் கம்பெனிக்கு
ஏகப்பட்ட நஷ்டம். இதைத் தெரிந்துகொண்டு அவர்களாகவே போலீஸுக்கு போட்டுக்
கொடுத்ததுதான் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேரின் கைதுக்குக் காரணம்.
அதனால்தான் போலீஸ்காரர்களால் அவ்வளவு துல்லியமாக ஸ்ரீசாந்த்தைச் சுற்றி
வளைக்க முடிந்தது. ''
''தமிழகத்தில் பெட்டிங் எப்படி நடக்கிறது?''
''சென்னையில் மட்டும் ஏஜென்ட்களையும் புக்கிகளையும்
சேர்த்து 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அப்படியானால் சூதாடிகள் எத்தனை
லட்சம் பேர் இருப்பார்கள் என்று நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.
மீடியேட்டர் பிசினஸுக்கு இரண்டரை சதவிகிதம் கமிஷன் தொகை. அவ்வளவுதான்.
தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், பெட்டிங் கம்பெனி, அதற்குக் கீழ் புக்கிகள்,
அவர்களுக்குக் கீழ் ஏஜென்ட்கள் என்று செயல்படுகிறார்கள்.
பொதுவாக ஒருமுறை
சூதாடியவர்களால், மீண்டும் சூதாடாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு
எதிலாவது பெட் கட்டியே தீர வேண்டும். அப்படிப்பட்டவர்கள் ஏஜென்ட்களை
அணுகுவார்கள். ஏஜென்ட்களை ஒருங்கிணைக்கும் புக்கி, அவர்களிடம் ஒரு
பட்டியல் கொடுப்பார். அதில் வரிசையாக எந்த அணி வெற்றிபெறும் அல்லது
தோற்றுப்போகும், 10-வது ஓவரில் 60 ரன்களைத் தாண்டுமா? தாண்டாதா? என்பதில்
ஆரம்பித்து பெட்டிங் விவரங்களும், அவை ஒவ்வொன்றுக்குமான தொகையும்
நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
அதை சூதாடிகளிடம் காண்பித்து, அவர்கள்
விருப்பப்பட்டதை தேர்வுசெய்யச் சொல்வார்கள். அதற்கான பணம் வசூல்
செய்யப்படும். அப்படிக் கிடைத்த மொத்தத் தொகையும் புக்கி மூலமாக
கம்பெனிக்குப் போகும். அதேபோல், மேட்ச் முடிந்ததும், கம்பெனி புக்கியிடம்
பணம் தரும். புக்கி ஏஜென்ட்கள் வழியே பெட் கட்டியவர்களுக்குப் போய்விடும்.
10 லட்சம் பெட்டிங் தொகை வசூலித்துக் கொடுத்தால், ஒரு மணி நேரத்தில் 25
ஆயிரம் ரூபாய் கமிஷன் தொகை ஏஜன்டுக்கு கிடைக்கும். கடைசி ஏஜென்ட்டுக்கே
இவ்வளவு தொகை என்றால், பல ஏஜென்ட்களிடம் வசூல் செய்து கொடுக்கும்
புக்கிக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.''
''சென்னையில் சி.பி.சி.ஐ.டி ரெய்டுக்குக் காரணம் என்ன?''
''சென்னையின் மையப் பகுதியில் இயங்கும் ஒரு கிளப்தான்
கிரிக்கெட் சூதாட்ட 'ஹப்'. கடந்த சில நாட்களில் 12 லட்ச ரூபாயை சுருட்டிய
பிரமுகருக்கு சக நண்பர்கள் பார்ட்டி வைத்து அசத்தினார்களாம். ஐ.பி.எல்.
கிரிக்கெட் மேட்ச் தொடங்கியதும், சூதாடிப் பணத்தை இழந்த மூன்று பேர்
சௌகார்பேட்டையில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டனர். அப்போது இருந்தே
போலீஸின் பார்வை திரும்பியது.''
அடப்பாவிகளா... இது ஆட்டமா... சூதாட்டமா?
- ஜோ.ஸ்டாலின்
படம்: சொ.பாலசுப்பிரமணியன்
பத்ரீஷ் தத்தின் மர்ம மரணம்!
சூதாட்டத்தில்
ஈடுபடும் முன்னணி நபர்களின் தலைமையகம்... இந்தியாவுக்கு வெளியே
செயல்படுகிறது. பாகிஸ்தான், துபாய் ஆகிய நாடுகளில் உள்ள நிகழ் உலக
தாதாக்கள் இப்ராஹீம் தாவுத், அவரது தம்பி அனீஸ் தாவுத் மற்றும் சோட்டா
ஷகீல் போன்றவர்கள் அங்கிருந்தபடியே ரிமோட் மூலம் தங்கள் புரோக்கர்ளை
இயக்கிவந்தனர். கொல்கத்தாவைச் சேர்ந்த மிட்டல், மும்பையைச் சேர்ந்த சுனில்,
சென்னையைச் சேர்ந்த பிரசாந்த், டெல்லியைச் சேர்ந்த அமரேஷ் போன்றோர்தான்
முக்கியமானவர்கள். இவர்களின் தொடர்பில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான
புக்கிகள் இருக்கிறார்கள். இவர்களிடையே சமூகப் பணி செய்வது போன்ற பெயரில்
ரகசிய சங்கமே உண்டு. கொடுக்கல் வாங்கலில் ஏதாவது பிரச்னை என்றால்,
இவர்களுக்குள் பேசித் தீர்த்துக்கொள்வார்கள். பணம் கட்டுகிறவர்கள் ஏமாற்ற
முயன்றால், இந்த சங்கத்தினரின் இரும்புப் பிடியில் இருந்து தப்பிக்கவே
முடியாது. இப்படியெல்லாம் பயங்கர லாபம் தரும் பிசினஸாக நடந்துவந்த
கிரிக்கெட் சூதாட்டம் பற்றி முதல் க்ளுவை டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு
இன்ஸ்பெக்டர் பத்ரீஷ் தத் கண்டுபிடித்தார்.
டெலிபோன் தொடர்புகளை வைத்து மோப்பம் பிடித்தார்
பத்ரீஷ். இவர் தந்த விவரங்களை வைத்து டெல்லி போலீஸின் உயர் அதிகாரிகள்
அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கியபோது, ஐ.பி.எல். கிரிக்கெட்டில்
விளையாடும் சில வீரர்களின் தொடர்பு பற்றி தெரியவந்தது. இந்த விவரத்தை
படுரகசியமாக வைத்து புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்களின் சந்திப்புகள்,
லஞ்சப் பரிமாற்றம் எங்கெங்கே என்றெல்லாம் துப்பறிவதில் இறங்கினர். ஒவ்வோர்
ஆட்டத்தின்போதும் 40 லட்ச ரூபாய் முதல் 60 லட்ச ரூபாய் வரை வீரர்களின்
சீனியாரிட்டிக்குத் தகுந்த மாதிரி ரேட் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த
விசாரணையில், சுமார் 100 மணி நேர டெலிபோன் உரையாடல்களைப் பதிவுசெய்து அதில்
இருந்து துப்புகளை எடுத்துக்கொடுத்தவர் பத்ரீஷ். இதேபோல், இந்தியன்
முஜாகிதீன் உள்ளிட்ட சில தீவிரவாத இயக்கங்களின் ஆட்களின் டெலிபோன்
உரையாடல்களைக் கேட்டு, அவர்களைப் பிடிக்க உதவினார். இந்த வகையில், இரண்டு
முறை மிகப் பெரிய சதி வேலைகளை முறியடித்தார் என்பதற்காக, மெடல்களைப்
பரிசாகப் பெற்றார் பத்ரீஷ். ஆனால், மே 11-ம் தேதி குர்கானில் உள்ள
அபார்ட்மென்டில் பத்ரீஷ§ம் அவரது பெண் நண்பர் கீதா சர்மாவும் பிணமாகக்
கிடந்தனர். துப்பாக்கி குண்டுக் காயங்களுடன் அவர்கள் மர்மமான முறையில
இறந்துகிடந்தது பற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.
கிரிக்கெட் வீரர்கள், சூதாட்ட புரோக்கர்கள், புக்கிகள்
இடையேயான நெட்-வொர்க் பற்றி நன்றாகவே தெரிந்துவைத்திருந்தவர் பத்ரீஷ்.
அவரின் திடீர் மரணத்தால், சரியான ரூட்டில் டெல்லி போலீஸ் பயணிக்க முடியாமல்
தவிக்கிறது. இருந்தாலும், அதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து மே 15-ம்
தேதியன்று டெல்லி போலீஸ் அதிரடியாகக் களத்தில் இறங்கியது. ஐ.பி.எல்.
கிரிக்கெட் தொடரின் 66 மேட்ச்கள் நடந்து முடிந்திருந்த நிலையில்,
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த்,
அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோரை முதல் கட்டமாக டெல்லி போலீஸார்
கைதுசெய்தனர்.
சூதாட்டத் தரகராக செயல்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித்
சிங்கும் பிடிபட்டார். அவர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, இந்தியாவின்
பல்வேறு நகரங்களில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்கள் 20 பேருக்கு
மேல் கைதாகினர். மேலும் பலர் தலைமறைவாகினர். இந்தத் தரகர்களின் சொகுசு
பங்களா, வங்கி லாக்கரில் உள்ள பணம் அனைத்தையும் போலீஸார் முடக்கியுள்ளனர்.
கைதுகள் மேலும் தொடரும் என தெரிகிறது.
டெல்லியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.
''எங்களுக்கு ரகசியத் தகவல் வந்ததுமே, ஆதாரங்களை சேகரிக்க ஆரம்பித்தோம்.
ஸ்ரீசாந்த் மும்பையில் தங்கிருந்த ஹோட்டலை முற்றுகையிட்டோம். அந்த
ஹோட்டலின் கேமரா பதிவுகளை வாங்கிப் பார்த்தபோது, புக்கிகள் யார் யார்?
எப்போது வந்து ஸ்ரீசாந்தை சந்தித்தனர்? எந்தெந்த நடிகைகள் அவரது அறைக்கு
வந்து சென்றனர் என்கிற விவரங்கள் கிடைத்தன. இன்னொரு கிரிக்கெட் வீரர்
சண்டிலாவுக்கு புக்கி ஒருவர் பல லட்சம் ரூபாய்க்கு வாங்கித் தந்த ஷாப்பிங்
பொருட்கள் சிக்கின. கிரிக்கெட் வீரர்களுக்கும் சூதாட்ட புக்கிகளுக்கும்
இடையே மீடியேட்டர்களாக செயல்பட்டுவந்த சில முன்னாள் வீரர்களை விரைவில்
விசாரணைக்கு அழைக்க இருக்கிறோம்.
எங்களிடம் உள்ள ஆதாரங்களை மேற்கோள் காட்டி
அவர்களிடம் கேள்வி - பதில் முறையில் விசாரிப்போம். ஐ.பி.எல். மேட்ச்கள்
நடந்த ஊர்களில் எந்தெந்த ஹோட்டல்களில் வீரர்கள் தங்கியிருந்தார்களோ அந்த
ஹோட்டல்களில் இருக்கும் ரகசிய கேமரா பதிவுகளை சேகரித்து... புக்கிகள்,
அழகிகள் எந்த கிரிக்கெட் வீரர்களை எப்போது சந்தித்தனர் என்பதை சேகரித்து
வருகிறோம்'' என்றார்.
''சென்னையில்கூட சூதாட்ட புக்கிகளை போலீஸார்
கைதுசெய்திருக்கிறார்களே?'' என்று அவரிடம் கேட்டபோது, ''ஐ.பி.எல். தொடர்
இதுவரை ஐந்து முறை நடந்துள்ளன. இப்போது நடந்துவருவது ஆறாவது தொடர். அனைத்து
தொடர்களிலும் சூதாட்டம் நடந்திருக்கிறது. எங்களிடம் இதுவரை கிடைத்துள்ள
புக்கிகளின் செல்போன், மெயில் தொடர்புகளை வைத்து அவர்களுடன் தொடர்பில்
இருந்தவர்கள் பற்றிய லிஸ்ட் எடுத்துள்ளோம். சென்னையில் மட்டும் சுமார் 30
நபர்கள் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள்'' என்றார்.
அகில இந்திய அளவில் நடக்கும் கிரிக்கெட் சூதாட்டங்களைப்
பற்றி உளவு பார்ப்பது, விசாரிப்பது என்பதற்காகவே டெல்லியில் ஊழல்
தடுப்புப் பிரிவு செயல்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் இந்திய
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இந்தப் பிரிவு செயல்படுகிறது.
இப்போது இதன் இயக்குனராக இருப்பவர் சவாணி ஐ.பி.எஸ். (ரிட்டயர்டு). இவர்
தமிழக கேடர் அதிகாரி. கூடுதல் டி.ஜி.பி. பதவியில் இருந்தவர். ரிட்டயர்டு
ஆவதற்கு ஒரு வருடம் முன்பே பதவி விலகி சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு
வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குனராகப் பணியில் சேர்ந்தார்.
துபாயில் செயல்படும் அந்த அலுவலகத்தில் ஐந்து வருடங்கள் பணியில்
இருந்துவிட்டு, இப்போது டெல்லிக்கு வந்திருக்கிறார். இவர்தான் இப்போது
கிரிக்கெட் சூதாட்டத்தைப் பற்றி துப்பறிகிறார். அவர் தரப்போகும்
ரிப்போர்ட்டில்தான் முக்கியமான கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலமே
இருக்கிறது.
- ஆர்.பி.
''எங்களால் கட்டுப்படுத்த முடியாது''
சூதாட்டப் புகார் குறித்து பி.சி.சி.ஐ. தலைவர்
என்.சீனிவாசனிடம் பேசினோம். ''ஒரு அணியில் உள்ள மூன்று வீரர்கள் தவறு
செய்திருப்பதாக போலீஸ் கூறியிருக்கிறது. மூன்று வீரர்கள் செய்த தவறுக்காக
ஒட்டுமொத்த ஐ.பி.எல்-லையும் தடைசெய்ய வேண்டும் என்று சொல்வதில் நியாயம்
இல்லை. டெல்லி போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு
கொடுப்போம். போலீஸ் விசாரணைக்குப் பிறகு, குற்றம் நிரூபிக்கப்பட்டால்
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வீரர்களைப் பொறுத்தவரை அவர்களை
ஓரளவுக்குத்தான் வாரியத்தால் கட்டுப்படுத்த முடியும். போலீஸைப் போல
எங்களால் ஒவ்வொரு வீரரையும் கண்காணிக்க முடியாது. அதற்கான ஆள் பலமும்
எங்களிடம் இல்லை. அடுத்த ஐ.பி.எல். முதல் ஒவ்வொரு அணிக்கும் ஊழல் தடுப்புக்
குழு அமைக்கப்படும். வீரர்களின் ஏஜென்ட்கள் இனி முறையாகப் பதிவு
செய்யப்படுவர். ஏஜென்ட்கள் தவறு செய்தால் அதற்கு வீரர்களே பொறுப்பு ஏற்க
வேண்டும் என்ற விதிமுறையையும் கொண்டு வந்திருக்கிறோம். சூதாட்டத்தைப்
பொறுத்தவரை எங்களால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. போலீஸும் சட்டமும்தான்
அதைத் தடுக்க வேண்டும்'' என்றார்.
நன்றி - ஜூ வி
வாசகர் கருத்து
1. இப்பொழுது நாம் கிரிக்கெட் எவ்வாறு நமது தேசத்தில் இன்று அது இருக்கும் உயரத்தினை அடைந்தது என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது...
ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்று இருக்கும் இதே அளவு செல்வாக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பள்ளியில் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் எவரும் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது கிடையாது. அவர்களைப் பொறுத்த வரை அது சோம்பேறிகளின் விளையாட்டு.
ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இன்று இருக்கும் இதே அளவு செல்வாக்கு இருந்ததா என்றுத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பள்ளியில் உள்ள விளையாட்டு ஆசிரியர்கள் எவரும் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது கிடையாது. அவர்களைப் பொறுத்த வரை அது சோம்பேறிகளின் விளையாட்டு.
மேலும் அக்காலத்தில் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு தான் மிகவும் சிறப்பான
ஒன்றாக விளங்கிக் கொண்டு இருந்தது. 1928 ஆம் ஆண்டில் தொடங்கி 1956 ஆம்
ஆண்டு வரை தான் கலந்துக் கொண்ட அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கத்தினை
வாங்கிக் குவித்தது இந்திய ஹாக்கி அணி. உலகைப் பொறுத்தவரை ஹாக்கி என்றால்
இந்தியா... இந்தியா என்றால் ஹாக்கி. தொடர்ச்சியாக மொத்தம் 6 ஒலிம்பிக்
தங்கங்கள். ஹாக்கி இந்தியாவின் தேச விளையாட்டானது.
இன்றுவரை ஒலிம்பிக்கில்
இந்தியாவிற்கு அதிகமான பதக்கங்களை வாங்கித் தந்துள்ள விளையாட்டும் அது
தான். ஹாக்கி மூலமாக நமக்கு கிட்டிய கடைசி தங்கப் பதக்கம் 1980 ஆம் ஆண்டில்
மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிட்டியது. அதற்கு பின்னர் ஹாக்கி
விளையாட்டிற்கு இந்தியாவில் இறங்கு முகம் தான். காரணம் எது வேண்டும்
என்றாலும் இருக்கலாம்... அரசாங்கத்தின் கவனக்குறைவு, அரசியல் காரணங்கள்...
எதுவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் என்னுடைய கவனம் ஏனோ 1983 ஆம் ஆண்டில்
கிரிக்கெட் அணி பெற்ற உலகக் கோப்பை வெற்றியின் மீதே செல்கின்றது. அது
சரியானதாகவும் இருக்கலாம் அல்லது தவறான ஒன்றாகவும் இருக்கலாம்....
இருந்தாலும் என்னுடைய எண்ணங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவே
எண்ணுகின்றேன்.
பிசிசிஐ இன் சார்பாக விளையாடி வந்த கிரிக்கெட் அணிக்கு 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை எந்த ஒரு மாபெரும் வெற்றியும் கிட்டியதில்லை என்பதே வரலாறு. ஆனால் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மாபெரும் மாற்றம் கிரிக்கெட் விளையாட்டிற்கு நேர்ந்து தான் இருக்கின்றது. காரணம் உலக கோப்பையை அந்த அணி வென்று விட்டது. போதாதா? பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாட்டில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இல்லாத விளையாட்டான ஹாக்கியே அனைத்து வெற்றிகளையும் பெற்றுக் கொண்டு இருந்த பொழுது முதல் முறையாக பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு மாபெரும் வெற்றியினைப் பெற்று இருக்கின்றது.
இது ஒன்று போதாதா கொண்டாடுவதற்கு. பார்ப்பனர்கள்
அதிகம் உள்ள அணியான பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணியை தலையில் தூக்கிக் கொண்டு
ஆட ஆரம்பித்தன பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள்... அவை
பத்திரிக்கை ஊடகங்களாக இருக்கட்டும் அல்லது காட்சி ஊடகங்களாக
இருக்கட்டும்... பிரச்சனை இல்லை... "இந்திய அணி வென்று விட்டது... உலகை
இந்தியா வென்று விட்டது... நாம் உலகில் சிறந்தவர்கள்... கொண்டாடுங்கள்"
என்றே அவை கிரிக்கெட்டின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தன.
அதாவது பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு விளையாட்டு பெற்ற வெற்றியினை பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் பெரிதுபடுத்த ஆரம்பிக்கின்றன... இன்றும் பெரிதுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. காலங்களில் நாம் தெளிவாகக் கண்டோம் என்றால் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனர்களாலோ அல்லது பார்ப்பனர்களைச் சார்ந்தவர்களாலோ கைப்பற்றப்பட்டே இருக்கின்றன என்பது நமக்குப் புலனாகும். அந்த ஊடகங்களின் வலிமையை வைத்தே இன்றும் அவர்கள் பல காரியங்களைச் செய்துக் கொண்டே இருக்கின்றனர். சரி இருக்கட்டும்.
1983 ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்கின்றது. பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு அணி வென்றதால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தி மக்களின் மத்தியில் கொண்டு செல்கின்றனர். அங்கே ஆரம்பிக்கின்றது வேலை. கிரிக்கெட் அனைத்து ஊடகங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. மற்ற விளையாட்டுக்கள் பின்னால் தள்ளப்படுகின்றன. விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்ற அளவுக்கு கிரிக்கெட்டும் சரி கிரிக்கெட் வீரர்களும் சரி மக்களுக்கு ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
உதாரணமாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியை பாடமாகவே வைத்து இருக்கின்றனர் என்பதனை நாம் அறிவோம். அதாவது தொடர்ந்து ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தினை வென்ற ஹாக்கி அணியைப் பற்றியோ அல்லது அந்த வரலாற்றினைப் பற்றியோ ஒருவன் அறிந்து கொள்ளவில்லை என்றால் யாதொரும் பிழையும் இல்லை. ஆனால் தனியார் நிறுவனமான பிசிசிஐ வென்ற கிரிக்கெட் போட்டியினைப் பற்றி அவன் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட் ஒன்று தான் விளையாட்டு என்று அவன் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே...!!!
இது தான் அரசியல். இக்காலத்தில் தான் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி ஒரு தேச அடையாளமாக மக்களின் மத்தியில் புகுத்தப்பட்டது.
எந்த ஊடகத்தினை எடுத்தாலும் கிரிக்கெட்... கிரிக்கெட் ...மேலும்
கிரிக்கெட்...!!! ஊடகங்கள் என்பன ஒரு மாபெரும் சக்தியினை உடையவை...
மக்களின் மத்தியில் ஒரு கருத்தினை பரப்பவும் அவர்களால் முடியும்; ஒரு
கருத்தினை அழிக்கவும் அவர்களால் முடியும். அவற்றின் வலு அப்பேர்ப்பட்டது.
அத்தகைய ஊடகங்களின் துணை இன்றி மற்ற விளையாட்டுகள் மக்களின் மத்தியில்
இருந்து சிறிது சிறிதாக விடைபெற கிரிக்கெட் தனது இருப்பை வலு பெற செய்து
கொண்டது. வேறு விளையாட்டுக்கள் இந்தியாவில் இருக்கலாம்... பிழையில்லை...
ஆனால் அவை கிரிக்கெட் அளவிற்கு வளரக் கூடாது. அவ்வளவே. இதில் ஊடகங்கள்
தெளிவாக இருந்தன... இருக்கின்றன. நிற்க.
இவ்வாறே மற்ற விளையாட்டுகளைப் பின் தள்ளி ஊடகங்களின் துணையோடு பார்ப்பனர்களின் கையில் உள்ள விளையாட்டான கிரிக்கெட் தனியாரின் வசம் இருந்தும் தேச விளையாட்டாக கருதப் பெறும் அளவிற்கு புகழ் பெறுகின்றது. பார்ப்பனர்களைத் தாங்கிப் பிடிக்கும் அரசும் மற்ற விளையாட்டினை வளர்க்காமல் கிரிக்கெட்டுக்கே பல்லவி பாடிக் கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் இன்றைக்கு இந்தியாவின் விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்றே வழங்கப்பெறும் காலக்கட்டத்தில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு அணியாக இந்த கிரிக்கெட் அணி திகழ வேண்டுமானால் அதில் இன்று இருக்கும் இட ஒதுக்கீட்டு நிலை (70% இடங்களை பார்ப்பனர்களே பிடித்து இருக்கும்) மாறி மக்கள் அனைவரையும் சமமாக திறமையின் அடிப்படையில் தேர்ந்து எடுக்கும் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் தானே. அவ்வாறு கொண்டு வரப்படாவிடில் பிசிசிஐ என்பதன் அர்த்தத்தை பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட் (Brahmins Control Cricket in India) என்றே நாம் வைத்துக் கொள்ளலாம் தானே.
2. முதல் பிரச்சனை,
இந்திய கிரிக்கெட் அணி என்ற ஒரு அணி உண்மையிலேயே நம் நாட்டில் கிடையாது. பிசிசிஐ (BCCI) என்ற தனியார் நிறுவனத்தின் அணி தான் இன்று இந்திய அணி என்ற பெயரில் விளையாடிக் கொண்டு இருக்கின்றது. மற்றபடி இந்திய அரசுக்கும் அந்த அணிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.
இரண்டாவது பிரச்சனை,
அரசு நிறுவனங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டினை அரசு அமல்படுத்த முடியும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வரும் சட்டத்தினை அரசாங்கம் இன்னும் இயற்றவில்லை. ஆகையினால் பிசிசிஐ தேர்ந்து எடுக்கும் கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டினை இந்திய அரசால் கொண்டு வர முடியாது. நிற்க.
இப்பொழுது சில... இல்லை இல்லை பல கேள்விகளும் மாற்றுக் கருத்துக்களும் உங்களின் மனதில் நிச்சயம் தோன்றி இருக்கும். அவற்றிக்கு நான் விடையினைக் கூற வேண்டும் என்றால் நாம் சில விடயங்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
௧) இந்திய அணி என்றால் என்ன?
இந்திய தேசத்து அணி என்றால் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியான விளையாட்டுத் துறையின் கீழ் அவை வர வேண்டும். அரசாங்கமே விளையாட்டு வீரர்களையும் அணிகளையும் தேர்வு செய்யும். அவர்களுக்கு உரிய ஊதியங்கள் மற்றும் இன்ன பிற சலுகைகள் ஆகிய அனைத்தையும் அரசே கவனித்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய அரசாங்கக் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள்... அவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
.. அத்தகைய கல்லூரிகளையே நாம் அரசுக்
கல்லூரிகள் என்று ஏற்றுக் கொள்வோம். மாறாக தனியார் கல்லூரிகளை நாம் அரசாங்க
கல்லூரிகள் என்று அழைக்க முடியாது. அவ்வாறே இந்திய விளையாட்டு அணிகளிலும்
எந்த விளையாட்டுகளில் அனைத்து பொறுப்புகளும் அரசின் வசம் இருக்கின்றனவோ
அந்த விளையாட்டு அணிகளே இந்திய அணிகள் ஆகும். மாறாக எந்த ஒரு தனியார்
நிறுவனமோ தனது அணியினை இந்திய அணியாக கூறுவது இயலாது... அது சரியான
ஒன்றாகவும் இருக்காது.
௨) அப்படி என்றால் பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமா?
ஆம். பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமே. அதனை அந்த நிறுவனமே கூறியும் இருக்கின்றது. சமீப காலமாக இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பிசிசிஐ தனது பண பலத்தையும் மற்ற அரசியல் செல்வாக்கினையும் வைத்துக் கொண்டு அரசுக்கு பிடி கொடுக்காமல் ஆடிக் கொண்டி இருக்கின்றது. அதாவது அரசின் சலுகைகளை அந்த தனியார் நிறுவனம் பெற்றுக் கொள்ளுமாம் ஆனால் அரசின் கீழ் அது வராதாம். இதுவே பிசிசிஐ இன் நிலை.
௩) அப்படி என்றால் பிசிசிஐ இன் சார்பாக விளையாடும் வீரர்கள் இந்திய விளையாட்டு வீரர்கள் இல்லையா?
நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றீர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனம் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கும். நீங்கள் இன்ன பணியினைச் செய்ய வேண்டும் அதற்கேற்றார்ப் போல் அந்நிறுவனம் சம்பளம் வழங்கும். அந்நிலையில் நீங்கள் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகின்றீர்களே தவிர்த்து அரசாங்க ஊழியர்களாக கருதப்படமாட்டீர். அதனைப் போன்றே தான் பிசிசிஐ இன் கிரிக்கெட் வீரர்களும். அவர்களுக்கு பிசிசிஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருக்கின்றது. அவர்கள் பிசிசிஐயிடம் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்காக விளையாடுகின்றனர். அவர்களைத் தேர்வு செய்வதும் அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சம்பளம் போன்றவற்றை முடிவு செய்வதும் முழுக்க முழுக்க பிசிசிஐ நிர்வாகத்தின் கையிலேயே இருக்கின்றது.
இந்திய அரசு அந்த விடயங்களில் தலையிட முடியாது. பிசிசிஐ அதன்
விருப்பத்திற்கேற்ப அணியினைத் தேர்வு செய்துக் கொள்ளும்...விளையாடும்...
பணம் பார்க்கும்... அரசாங்கம் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்!!! இந்நிலையில்
அந்த வீரர்கள் பிசிசிஐயின் வீரர்கள் ஆகின்றனரே தவிர்த்து இந்திய வீரர்கள்
ஆக மாட்டார்கள். நிற்க.
இப்பொழுது இரு கேள்விகள் எழலாம்...!!!
ஒன்று - அட என்னங்க, அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே? ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர். இந்நிலையில் நன்றாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டையும் அரசின் வசம் தந்து விட்டு அதையும் நாசமாக்கச் சொல்லுகின்றீர்களா?
ஒரு விளையாட்டாவது நன்றாக இருப்பது உங்களுக்கு
பிடிக்கவில்லையா? அரசாங்கம் தேர்வு செய்தால் தான் அவன் இந்திய வீரனாக
ஆகின்றானோ...அப்படி என்றால் அரசாங்கம் திறமை இல்லாதவர்களை எல்லாம் சேர்த்து
ஒரு அணியை உருவாக்கும்... அதனை இந்திய அணி என்று ஏற்றுக் கொள்வீர்...
ஆனால் திறமையான வீரர்களை கொண்டு ஒருவன் தனியாக அணியினை அமைத்தால் அதனை
இந்திய அணி என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்? அப்படித் தானே...!!!
பதில்: அரசாங்கம் என்பது மக்கள் தேர்ந்தெடுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பினை மக்கள் கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் தனியார் நிறுவனங்கள் என்பன அவ்வாறு இல்லை. அவர்களை மக்கள் கேள்விக் கேட்க முடியாது. இன்றைய நிலையில் பிசிசிஐ முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்டு ஒரு அணியினை அமைத்தாலும் அதனை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் திறமையின் அடிப்படையில் அணியினைத் தேர்வு செய்யலாம், மொழியின் அடிப்படையில் தேர்வு செய்யலாம், சாதியின் அடிப்படையிலும் தேர்வு செய்யலாம்...அது அவர்களின் விருப்பம்.
அவற்றை
யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் அதன்
விருப்பதிற்கேற்ப தேர்வு செய்யும் ஒரு அணியினை இந்திய நாட்டின் மக்கள்
அனைவருக்கும் பொதுவான ஒரு அணியாக நாம் கருத முடியாது. ஏனெனில் அந்த
அமைப்பினை குறித்து நாம் கேள்விகளோ அல்லது அவற்றின் செயல்பாடுகள் குறித்து
விளக்கங்களோ நாம் எழுப்பவும் கோரவும் முடியாது. எனவே மக்களின் பங்கு
சிறிதும் இல்லாத தனியார் அமைப்புகள் தேர்வு செய்யும் அணியினை நாம்
எக்காரணம் கொண்டும் மக்கள் அனைவரையும் குறிக்கும் இந்திய நாட்டு அணியாக
ஏற்றுக் கொள்ள முடியாது. திறமை இல்லாதவர்களை அரசாங்கம் தேர்ந்து எடுத்தால்
அதனை சுட்டிக் காட்டி கேள்விகளை கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது.
ஆனால் அதே உரிமை தனியார்களிடத்து செல்லுபடியாகாது.
இரண்டு - பிசிசிஐ இன் அணி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அதனை ஏன் ஊடகங்கள் இந்திய அணி என்று கூறுகின்றன... இந்திய அரசும் ஏன் அதனை மெளனமாக வேடிக்கைக் கண்டுக் கொண்டு இருக்கின்றது?
இந்த கேள்விக்கும் சரி முதல் கேள்வியில் நான் பதில் கூறாது விட்ட பகுதியான 'அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே? ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர்' என்பதற்கும் ஒரே விடை.
இந்த கிரிக்கட் என்பது ..ஒரு தனியார் நிறுவனங்கள் நடதுதும் ரெக்கார்ட் டான்ஸ் மாதிரி ......