Showing posts with label ஜூ வி. Show all posts
Showing posts with label ஜூ வி. Show all posts

Saturday, April 06, 2013

சினிமா நடிகர்களின் உண்ணாவிரதம் - ரிப்போர்ட் @ ஜூ வி

உட்டாலங்கடி உண்ணாவிரதம்
ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் திரண்டனர் தமிழ்த் திரை நட்சத்திரங்கள். ஏப்ரல் 2-ம் தேதி நடிகர்கள் பலரும் கறுப்புச் சட்டையுடன் வந்திருந்தனர். சென்ற தடவை இதே நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தபோது சிலர் மைக்கை பிடித்து மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதுமாதிரியான தர்மசங்கட நிலை இப்போது ஏற்படக் கூடாது என்று நட்சத்திரங்கள் யாரையும் பேசவிடவில்லை. சிலரோ ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் போல தலையைக் காட்டிவிட்டுப் பறந்தனர்.


 உண்ணாவிரதப் பந்தலில் பலரும் கறுப்புச் சட்டையில் அமர்ந்து இருக்க, காலை 11.15-மணிக்கு வெள்ளுடையில் பரபரவென ஆஜரானார் ரஜினி. வந்ததும் சரத், ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா எல்லோரையும் குசலம் விசாரித்தார். 12.45-மணிக்கு தனது இன்னோவா காரில் பறந்துவிட்டார் ரஜினி.


தி.மு.க-வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிடும் குஷ்பு, பொதுப் பிரச்னையான ஈழத் தமிழருக்கு ஆதரவான உண்ணவிரதத்தில் தலையே காட்டவில்லை. 2-ம் தேதி இரவு ஸ்டார் ஹோட்டலில் பிரபுதேவா பிறந்த நாள் கொண்டாடினார். அங்கே நடந்த திருவிழாவில் 'உற்சாகமாக’ பிரபுதேவாவை அரவணைத்தபடி போஸ் கொடுத்தார் குஷ்பு. இருவருமே உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.  
ஏப்ரல் 1-ம் தேதி 'சிறுத்தை’ சிவா இயக்கும் 'வெற்றிகொண்டான்’ படத்தின் படப்பிடிப்பை வைத்திருந்தனர். உண்ணாவிரதத்தில் அஜித் கலந்துகொண்டதால், படப்பிடிப்பை 8-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தலையைக் காட்டாத அஜித், கால் வலியுடன் காலில் வளையம் மாட்டிக்கொண்டு உண்ணாவிரதத்தில்  உட்கார்ந்து இருந்தார்.


அன்று காலை உண்ணாவிரதப் பந்தலுக்கு வராமல்  ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழாவில் கலந்துகொண்டார், த்ரிஷா. விஷயம் கேள்விப்பட்டு, த்ரிஷாவுக்கு போன்செய்த ராதாரவி கடுமையாகவே திட்டிவிட்டாராம். அதன் பிறகே மதியம் ஒன்றரை மணிக்கு வந்தார். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நைஸாக எஸ்கேப் ஆனார். அன்று இரவு நடந்த பிரபுதேவா பார்ட்டியில் த்ரிஷாவும் செம டான்ஸ்.


''சிறுவன் பாலச்சந்திரன் முதுகில் குண்டு பாய்ந்து இறக்கவில்லை. மார்பில் குண்டு வாங்கி, மரணத்தில்கூட தான் ஒரு மாவீரனின் மகன் என்று நிரூபித்து இருக்கிறான்'' என்று கடைசியில் வாகை சந்திரசேகர் பேசியதைக் கேட்டு சிலர் கண் கலங்கினார்கள்.


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார் விஜய். இப்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை. அதைக் கடிதமாக சரத்குமாருக்கு அனுப்ப, உண்ணாவிரதப் பந்தலில் விஜய் கடிதம் படித்துக் காட்டப்பட்டது.


உண்ணாவிரதத்துக்கு வந்தவர்களை வாசல் வரை சென்று ராதாரவியும் வாகை சந்திரசேகரும் அழைத்து வந்தனர். வடிவேலுவை உண்ணாவிரதத்துக்கு அழைத்தார்களாம். ''வேணாம். அங்கே வந்தா, நான் ஏதோ சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுற மாதிரி சிலர் விசாரிப்பாங்க. எனக்கு தர்மசங்கடம் ஆகிடும். ஆளைவிடுங்கப்பா..’ என்று கழண்டுகொண்டாராம் வைகைப் புயல்.


'விஸ்வரூபம்’ விவகாரத்தை உலக மகா பிரச்னை ஆக்கி, 'நான் தமிழ்நாட்டை விட்டுப்போறேன். இந்தியாவை விட்டுப் போகப்போறேன். எனக்கு வாழ்வதற்கு உலகத்தில் இடமே இல்லையா?’ என்றெல்லாம் தழுதழுத்த கமல், உண்ணாவிரதம் முடியும் நேரத்தில் வந்து மற்றவர்கள் பழரசம் குடிப்பதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.


நல்லாத்தாம்பா நடிக்கிறாங்க!


படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

thanx - ju vi 

Saturday, March 30, 2013

மாணவர்கள் இனி என்ன செய்யனும்? - தமிழருவி மணியன் -ன் வழிகாட்டல் கட்டுரை @ ஜூ வி

இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது...
மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை நான் தடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவதற்காக வருந்துகிறேன். உலகம் முழுவதும் மாணவர்கள் போராடுகின்றனர். சீனாவிலும், எகிப்திலும் உருவான தேசிய இயக்கங்களுக்கு மாணவர்கள் தங்கள் பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்திய மாணவர்களிடம் அந்த உணர்வையே நான் எதிர்பார்க்கிறேன். பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் வெளியேறி, அவர்கள் சிறை புகும் துணிவுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க முன்வர வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. அந்தக் குரலே இப்போதும் எதிரொலிக்கிறது. 


தமிழக மாணவர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமான மூன்று திருப்புமுனைகள் உண்டு. அவர்கள் முதலில், இந்தித் திணிப்புக்கு எதிராக 1965 ஜனவரியில் களமிறங்கினர். அவர்​களது சாதனை மகத்​தானது. தமிழக மாணவர்​களின் போராட்​டத்தால்​தான் இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தித் திணிப்பு நிகழ்வது நிறுத்தப்பட்டது; இந்தியோடு ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடர்கிறது.


இந்தியை இந்தியாவின் ஒரே தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் அரசமைப்புச் சட்டத்தில் அரங்கேற்ற நடந்த முயற்சிகள் அளப்பரியவை. 'சகிப்புத்தன்மையற்ற இந்தப் போக்கு வலிமைமிக்க மத்திய அரசின் கீழ் இந்தி பேசாத மக்களை அடிமைகளாக்கிவிடுமோ என்று அஞ்சுகிறேன். இந்தி மொழி பேசும் நண்பர்களே... உங்களுக்கு முழு இந்தியா வேண்டுமா? அல்லது, இந்தி பேசும் இந்தியா போதுமா என்று முடிவெடுங்கள்’ என்றார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. சமீபத்தில் மாநிலங்களவையில் அறிவார்ந்த திருச்சி சிவா, மன்மோகன் சிங் அரசைப் பார்த்து, 'உங்களுக்கு இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா?’ என்று கேட்டதற்கு முன்மாதிரியாக அன்று அமைந்தது டி.டி.கே.வின் முழக்கம்.


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்​கள் தீவிரமாகக் களமாடியபோது லால்பகதூர் சாஸ்திரியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அளகேசனும் ராஜினாமா செய்தனர். அவர்களுடைய ராஜினாமாவை ஏற்கும்படி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணனிடம் சாஸ்திரி பரிந்துரைத்தபோது, 'இந்தியாவின் ஓர் அங்கமாகத் தமிழ்நாடு இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று நேர்படக் கேட்டார் அந்த மாபெரும் தத்துவ மேதை. அதற்குப் பின்புதான் சாஸ்திரி, 'இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காலவரையறையின்றிக் காக்கப்படும்’ என்று அறிவித்தார்.


பெரியார், திரு.வி.க., மறைமலை அடிகள், அண்ணா, நாவலர் சோம​சுந்தர பாரதியார் போன்றவர்கள் போராடியும், மூவாலூர் ராமாமிர்தம், டாக்டர் தர்மாம்பாள் உட்பட 73 பெண்கள் 32 கைக்குழந்தைகளுடன் சிறை சென்றும், நடராசன் - தாளமுத்து இருவரும் சிறையில் உயிர்​நீத்தும், 1937 முதல் 1965 வரை திராவிட இயக்கங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் முற்றாக விலக்கப்படாத இந்தித் திணிப்பு, மதுரையில் கொழுந்துவிட்டு மாநிலம் முழுவதும் மாணவர்களால் பெருந்தீயாய் வளர்த்தெடுக்கப்பட்ட பிறகுதான் முடிவுக்கு வந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றி, மாணவர்களின் மகத்தான சரித்திரச் சாதனை.


மாணவர்கள் தங்கள் இனவுணர்வை 1983-ல் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் வெளிப்படுத்திய விதம் இன்றளவும் மறக்க முடியாத ஒன்று. இலங்கையில் 13 சிங்கள ராணுவத்தினர் விடுதலைப்புலிகளால் வீழ்த்தப்பட்டதற்கு எதிர்வினையாற்றப் புறப்பட்ட சிங்களர்கள், அரசின் ஆதரவோடு நடத்திய ஊழிக் கூத்தில் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50 ஆயிரம் தமிழ்க் குடும்பங்கள் கொழும்புவில் அனைத்தும் இழந்து, அகதி முகாம்களில் அடைபட்டனர். இலங்கைத் தமிழர் வாழ்வில் என்றும் மறக்க முடியாத 'கறுப்பு ஜூலை’ மாதத்தில் மாணவர்கள் தன்னெழுச்சியாய் தமிழகத்தில் அணி திரண்டனர்; மக்கள் அவர்​களுடைய போராட்டத்தை ஆசீர்வதித்தனர். 'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு’ என்ற பாவேந்தரின் இலக்கிய வரிக்கு மாணவர்கள் அன்று இலக்கணமாயினர்.


இப்போது.....

வீரத்தின் விளைநிலம் பிரபாகரனின் 12 வயது பிள்ளை பாலச்சந்திரன் மரணத்தைத் தழுவும் நிலையில் எடுக்கப்பட்ட மூன்று படங்கள் ஒட்டுமொத்த மக்களின் ஆன்​மாவையும் அதிரச்செய்தது. வியட்நாம் போரில் ஒரு சின்னஞ் சிறுமி ஆடையின்றி அழுத விழிகளுடன் ஓடும் கோலத்தை வெளிப்படுத்திய ஒரேயரு நிழற்படம் அமெரிக்காவுக்கு எதிராக உலக மக்களை அணிதிரளச் செய்தது போன்று, குழந்தைமை கலையாத பாலச்சந்திரனின் அழகு முகத்தில் கனத்துக்கிடந்த ஆதரவின்மையும், வேதனை விழுங்கிய வெறித்த பார்வையும், ஐந்து குண்டுகளை மார்பில் தாங்கி மண்ணில் சரிந்துகிடந்த கோலம் தீட்டிய சோகச் சித்திரமும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக்கிடந்த தமிழகத்தின் மனச்சான்றை உலுக்கிவிட்டது. மாணவர்கள் மூன்றாவது முறை இனநலன் காக்க அணி திரளத் தொடங்கினர். லயோலா கல்லூரி மாணவர்கள் முன்வந்து ஏற்றிவைத்த இனவிளக்கு இன்று வரை அணையாமல் இருள் கிழித்து ஒளிச்சுடரைப் பரப்பி வருகிறது.



மாணவர்கள் இதுவரை நடத்திய போராட்​டங்களின் பின்புலமாக அரசியல் கட்சிகள் இருந்துவந்தன. அரசியல் தலைவர்களின் பதவி ஆசைக்கும், பழிவாங்கும் போக்குக்கும் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் பயன்பட்டன. ராஜாஜி 1937-ல் கொண்டுவந்த இந்தியை எதிர்த்துப் பல்வேறு வடிவங்களில் படை நடத்திய பெரியார், 1965-ல் மாண​வர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போரை ஆதரிக்கவில்லை. பள்ளிகளில் இந்தியைப் புகுத்து​வதில் தீவிரம் காட்டிய ராஜாஜி பின்னாளில், 'இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கும் அரச​மைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியை அரபிக் கடலில் வீசியெறியுங்கள்’ என்று அறைகூவல் விடுத்தார்.


தி.மு.கழகத்தை 1967-க்கு முன்பு பெரியாருக்குப் பிடிக்கவில்லை. அதனால், தி.மு.க-வின் பின்புலத்தில் இயங்கிய மாணவர் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தார். ராஜாஜிக்கு நேருவையும், காமராஜரையும், காங்கிரஸையும் பிடிக்கவில்லை. அதற்காக, இந்தியை எதிர்த்த மாணவர் போராட்டத்தை ராஜாஜி ஆதரித்தார். மாணவர் போராட்டத்தைப் பயன்படுத்தி அண்ணா ஆட்சியைக் கைப்பற்றினார். ராஜாஜி, காங்கிரஸ் மீது பழிதீர்த்துக்கொண்டார். இந்தச் சூழல் இப்போது இல்லை. இன்று, மாணவர்​கள் எந்த அரசியல் கட்சியின் வலையிலும் விழவில்லை. இந்தி எதிர்ப்புப் போரில் பெரிதாக உருவெடுத்த வன்முறையின் நிழல் கூடத் தங்கள் மீது படிய அவர்கள் இப்போது அனுமதிக்கவில்லை. அவர்கள் முன்னெடுத்திருப்பது அப்பழுக்கற்ற காந்தியப் போராட்டம்.


மாணவர்களின் மூன்றாம் கட்ட இந்தப் போராட்​டம் மத்திய, மாநில அளவில் மிகப் பெரிய மாற்றங்களைச் சாதித்திருக்கிறது.

1. அமெரிக்கத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. 

2. சுவரில் ஒட்டிய பல்லியைப் போல் கடந்த ஒன்பது ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பசை போட்டு அமர்ந்திருந்த தி.மு.கழகம், இனி காங்கிர​ஸோடு கைகோத்து நின்றால் காலநடையில் காலாவதியாகி விடுவோம் என்ற கலக்கத்தில் பதவி மேனகையின் கவர்ச்சியிலிருந்து விடுபட மன​மில்லாமல் விடுபட்டு, நவீன விசுவாமித்திரனாய் நடுத் தெருவில் நாடகம் போட வந்து நின்றது. 


3. இனப்பற்றோ, மொழியுணர்வோ, சமூகப் பிரக்ஞையோ சிறிதுமின்றிப் பதவிப் பல்லக்கில் அமர்ந்து பவனி வருவதற்காகவே அரசியல் நடத்தும் காங்கிரஸ்காரர்கள் ஆதரிப்பாரின்றி அனாதைகளாக மாறிப்போயினர்.

 4. ஈழத் தமிழர் நலனுக்காக அதிகமாகக் குரல் கொடுப்பது யார் என்ற போட்டியில் இரண்டு கழகங்களையும் இறங்கச் செய்தது.

 5. ஐ.பி.எல் போட்டியில் இலங்கை வீரர்கள் சென்னையில் இடம்பெறாமல் செய்தது. 

6. தமிழீழம் காண ஐ.நா.சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தவும், இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கவும், இலங்கையை நட்பு நாடென்று கூறாதிருக்கவும் இந்திய அரசை நிர்ப்பந்தித்து நம் சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றியது. 


7.காமன் வெல்த் நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடக்கலாகாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதும் அளவுக்கு இலங்கை எதிர்ப்பலையை மாநிலம் முழுவதும் சூறாவளியாய் வீசச் செய்தது. இதுபோன்ற சரித்திரச் சாதனைகளை எந்த அரசியல் கட்சியும், எந்த இனவுணர்வாளரும் இன்று வரை சாதிக்கவில்லை.

எல்லாம் சரி. இனி மாணவர்கள் என்ன செய்யப்​போகிறார்கள்? நீர்த்துப் போன அமெரிக்கத் தீர்மானம் ஜெனிவாவில் அரங்கேறிவிட்டது. போர்க் குற்றங்கள், இனப்படுகொலை என்ற பதப் பிரயோகங்கள்கூட இடம்பெறாத அந்தத் தீர்மானத்தால், ஈழத் தமிழருக்கு எந்த நலனும் வாய்க்காது. மாணவர்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் அமெரிக்கத் தீர்மானத்தை ஆரம்பத்திலேயே புறக்கணித்துவிட்டனர்.


இலக்கு மிகச்சரியானது. ஆனால், அதை அடைவதற்கான பயணம் நீண்டது. 'ரோம் ஒரு நாளில் கட்டப்பட்டது அல்ல’ என்பதுபோல், ஈழம் ஒரே நாளில் சாத்தியமாவது அல்ல. இன்று வளர்த்தெடுக்கப்பட்ட இனவுணர்வு நெருப்பு, சாம்பல் பூத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்​டும். மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் அடுத்த நான்கு மாதங்களுக்குப் பிறகே நடக்கும். காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க இடையில் ஏழு மாதங்களுக்கு மேல் இருக்கின்றன. மாணவர்கள் இந்த இடைவெளியைத் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


 தேர்வுகள் முடியட்டும். அதன் பிறகு, இந்திய அரசே ஈழத் தமிழர் உரிமை காக்க மனித உரிமை மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரவும், காமன்​வெல்த் மாநாடு இலங்கையில் நடக்காமல் தடுக்க இந்திய அரசு செயற்படவும் அறப் போராட்டம் மூலம் மாணவர்கள் மீண்டும் களமாடலாம். பாசறைக்குப் படை திரும்புவது, களைப்பு நீங்கி முன்னிலும் முனைப்பாகப் போராடுவதற்குத்தான். தொடர்ந்து போரில் ஈடுபட்ட அலெக்சாண்டரையும், நெப்போலியனையும் சோர்வு தழுவிக்கொண்டதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். வெற்றி வேண்டுமெனில், வியூகங்கள் முக்கியம்.


இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குப் பின், மாணவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கை மீறியது. இன்றும் அந்த விபத்து நேர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. போராட்டத்தின் திசை மாறினால், வன்முறை​யாளர்களின் வலையில் விழ நேரிடும். தமிழீழம் கோரிக்கையோடு 'தனித் தமிழ்நாடு’ என்ற கோஷம் கலந்துவிட மாணவர்கள் எந்த நிலையிலும் அனுமதிக்கக் கூடாது. இந்தியத் தமிழராய் இருப்பதுதான் எல்லா வகையிலும் உயர்ந்தது. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கூட்டணி, தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவது மறுக்க முடியாத உண்மை. தேர்தல் களத்தில் அதற்குப் பாடம் புகட்ட நம்மிடம் ஜனநாயகம் தந்திருக்​கும் 'வாக்கு’ என்னும் வலிமையான ஆயுதம் இருக்கிறது. அதை 40 இடங்களிலும் நாம் பயன்​படுத்துவோம். இனவுணர்வோடு செயலாற்ற உறுதி ஏற்போரை மட்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைப்போம்.


தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி மற்றும் சுயநிர்ணயம் ஆகியவற்றை அடைவதற்கும், அதற்கான போராட்டத்தைப் பாதுகாப்பதற்கும், முன்னகர்த்துவதற்கும் உரிய உயர்மட்ட ராஜதந்திரத்தைப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் வகுத்தெடுப்பார்கள். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசுத் துறையினர், கொள்கை நெறியாளர்கள், சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து ஈழம் நோக்கி அறவழியில் பயணிப்பதற்கான பணிகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவார்கள். அவர்களுக்கான ஆதரவை இந்திய அரசு வழங்கு​வதற்கான வழிமுறைகளைக் கண்டெடுத்துப் போராடுவதோடு மாணவர்கள் இப்போது நிறை​வடைய வேண்டும்.


இப்போது மாணவர்கள் தன்னெழுச்சியாகத் தெருக்களில் கூடிக் குரல் கொடுப்பது, அவர்​களுடைய அரசியல் விழிப்பு உணர்வை அடையாளப்படுத்துகிறது. சமூகத்தின் சகல தளங்களிலும் ஊடுருவி நிற்கும் ஊழல் பேர்வழிகளுக்கும், மதுக் கடைகளுக்கும் எதிராக இவர்கள் கிளர்ந்தெழ இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது. ஈழத்துக்குப் பிறகு, மாணவர்கள் பார்வை இந்தப் பக்கம் திரும்பும்போது பொன்விடியலைத் தமிழகம் சந்திக்கும். இனி மக்களின் மரியாதைக்குரியவர்கள், அரசியல் தலைவர்கள் இல்லை; மாணவர்களே!


நன்றி - ஜூ வி 

Wednesday, March 27, 2013

ராஜபக்சேவை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கும் மர்மம் - பழ நெடுமாறன் ஜூ வி கட்டுரை

கண்டனமா? கண்துடைப்பா?
'தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்​தினரைத் திரும்பப் பெற வேண்டும்


; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ - இப்படி முக்கியமான கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை, ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக முன்​வைத்தார். இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.



அந்த அறிக்கையில் வேறு முக்கியமான அம்சங்கள் என்ன இருந்தது தெரியுமா?


இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமிகளுமாக ஆயிரக்கணக்கான​வர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையையும் இலங்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.



தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகி​றார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.


போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்தல் போன்​றவை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்​கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.



மனித உரிமை மீறல்கள் குறித்து விசா​ரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய​வில்லை. 2006-ம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. சிறுபான்மையினரான தமிழர்​களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.


தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணு​வத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்​கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.


ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.


அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.


அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான்... 'இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின்போது தமிழர்கள் பலர் காணாமல்போனது கவலை அளிக்கிறது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமை​யாக நிறைவேற்றும் திட்டம் இலங்​கைக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாகச் செய்யப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.’ - இவைதான் அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம்.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர்மானம் புறந்தள்ளிவிட்டதுடன், அதற்கு எதிராகவும் அமைந்துவிட்டது.


அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறது.


இலங்கையின் வடக்கு மாநிலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலை​நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என மறைமுகமாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.


வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கை. ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்குதடையில்லாமலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி ராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.



வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்​தில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓர் ஆண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓர் ஆண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்டபோது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளும் அங்கு நடைபெற​வில்லை.


கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்​பட்டனவே தவிர, நிலைமை சிறிதளவுகூட மாறவில்லை. இப்போது இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும். அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத் தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் தீர்மானமே அது.



அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகர​மானது. தான் நேரடியாக சம்பந்தப்படாமல் பின்னணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவமைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக இலங்கை அரசுடன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப்படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர​மேனன் இம்முறை அனுப்பப்படவில்லை


. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணியன் சுவாமியை, இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்துக்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனி நபர். 


 ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச, இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.



அது மட்டுமா? நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மாறிவிட்டனர். இதற்குப் பின்னணி என்ன? இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம், முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்களை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் டெல்லியைவிட்டு வெளியேச் செல்ல வேண்டுமானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சந்தித்துப் பேசச் செய்திருக்கிறது.



    ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சியாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது.



இலங்கையிலும், குறிப்பாக இந்துமாக்​கடலிலும் சீனாவின் ஆதிக்கம்  ஏற்படுவது தன்னுடைய உலகளாவிய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ராஜபக்ஷே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம். ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.



ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளை வெளிப்படுத்தியும்கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொரு​ளாதார நலன்களை மட்டுமே மனதில்கொண்டு ராஜபக்ஷேவின் ரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.


எனவே, இது கண்டனத் தீர்மானம் அல்ல... கண்துடைப்புத் தீர்மானம்!


நன்றி - ஜூ வி

Thursday, March 07, 2013

பாலியல் பலாத்கார பாரதம் - தமிழருவி மணியன் -ன் ஜூ வி கட்டுரை

காதல் அறியாக் காதலர்கள்!

காதலே என்னு​டைய மதம்’ என்றான் கவிஞன் கீட்ஸ். 'காதலிக்​காமல் உயிர் வாழ்வதைவிட, காதலில் தோற் றுப்போவது உயர்வானது’ என்று வாக்குமூலம் வழங்கினான் டெனிசன். 'காதல் கண்களில் இல்லை. அது காதலிப்பவர் இதயத்தில் இருக்கிறது’ என்று கண்டறிந்து சொன்னான் ஷேக்ஸ்பியர். 'காதல் செய்வீர் உலகத்தீரே’ என்று உரத்த குரலில் அனைவரையும் கூவி அழைத்தான் பாரதி. ஆனால், அவர்கள் சொன்ன காதல் இன்றைய இளைய சமூகத்திடம் காணாமல் போய்விட்டது. இப்போது பார்க்கும் இடமெங்கும் உள்ளக்கலப்பின்றி, உடற்கலப்பில் உருக்குலையும் காமமே 'காதல் முகமூடி’ அணிந்து காட்சி தருகிறது.



 காரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சீர்காழி மதியழகி ஆகியோர் மீது அமிலமும் பெட்ரோலும் ஊற்றி அவர்களுடைய அழகைச் சிதைத்து, உயிரைப் பறித்த இளைஞர்கள் காதலாகிக் கசிந்துருகியவர்களா? விலங்கினும் கீழான இழிமக்கள் இல்லையா இவர்கள்? காதல்... அன்பில் சுருதி கூட்டும் ஆன்ம ராகம். காமம்... சரீரத்தின் மேடு பள்ளங்களில் சரிந்து விழும் சபலத்தின் தாளம். காதல் தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணித்துவிடும் தேவதை. காமம் தன் அகோரப் பசிக்குச் சகலத்தையும் சுயநலமாய்ப் பறித்துக்கொள்ளும் சாத்தான். இந்த அழிவை உருவாக்கும் சாத்தானுக்குத்தான் இன்று ஊரெங்கும் உற்சவம்.


மனித மனதில் தோன்றும் பல்வேறு உணர்ச்சிகளில் மிகவும் வலிமையானதும், கட்டுக்குள் அடங்காததும் பாலுணர்ச்சியே. அதை முழுவதுமாக அழிக்க முனைந்தால், கடுமையான எதிர்வினைகளைச் சமூகம் சந்திக்க நேரிடும். நெறிப்படுத்தப்படாத விலங்குணர்ச்சியாக அது வெளிப்படும்போது, குடும்ப உறவுகளும், சமூகக் கட்டுமானமும் முற்றிலுமாகச் சிதைந்துபோகும். தனிமனிதன் சமூக மனிதனாக வாழ்வதற்கு, நம் முன்னோர்கள் பற்பல வழிகளில் சிந்தித்துப் பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுத்தனர். கட்டுப்பாடற்ற பாலுணர்ச்சியும், பண்பாட்டு விழுமியங்களால் வேலியிடப்பட்ட சமூக உணர்ச்சியும் எந்நாளும் பொருந்திப்போகாது. மனிதர்களை அலைக்கழிக்கும் இந்த இருநிலைப் போக்கால் உளப்போராட்டம் (Psychical conflict) உருவாகி விடுகிறது.


காதல் என்ற பெயரால் அமிலம் வீசியவர்கள் பண்பாட்டு வேலியைத் தகர்த்து அத்துமீறிய பாலு ணர்ச்சியால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள். 'மனித இனமே நோய்வாய்ப்பட்டிருக்கிறது’ என்றார் உளவியல் தந்தை ஃபிராய்ட். நாம் அனைவரும் ஒருவகையில் நோயாளிகளே. அளவில் வேறுபட்டவர்கள். அவ்வளவுதான். பாலுணர்ச்சி நோய்க்கு மனக்கட்டுப்பாடு ஒன்றுதான் மருந்து என்று அனுபவத்தில் தெளிந்தவர்கள் நம் பாட்டன்மார்கள்.


உடலின்பமும் மனநிறைவும், பாலுணர்ச்சியால்தான் வாய்க்கப்பெறுகிறது. அதனால்தான், அதுவே நம் வாழ்வின் ஆதாரமாகி விட்டது. காலம் காலமாகக் குடும்ப உறவுகளும், சமூக உறவுகளும் பாலுணர்ச்சியின் மூலமே கட்டமைக்கப்படுகின்றன. 'பாலுணர்ச்சியே மனிதகுல இயக்க ஆற்றலாக இருக்கிறது’ என்பதுதான் ஃபிராய்டின் அடிப்படைக் கோட்பாடு. பாலுணர்ச்சியே மாந்தரின் பெருவேட்கை​யாகப் பரிணமிக்கிறது. உள்ளத்தை உருக்குலைக்கும் அந்த வேட்கை நிறைவேற முடி யாத நிலையில் உண்டாகும் இறுக்கமே, விபரீத விளைவுகளில் உந்து சக்தியாகிறது.


 வேட்கைக்கான வடிகால் சமூக ஒழுக்கங்களாலும், சட்டங்களாலும் அடைபடும்போது பாலுணர்ச்சி பால் வெறி யாகி விடுகிறது. அந்த வெறியே உறவுகளின் விதிக்கோட்டை தகர்த்துவிடும் இழிகாமமாகக் கனன்று எரிகிறது. கோவையில், சகோதரிக்குப் பிறந்த சின்னஞ்சிறு பிஞ்சை தாய்மாமனே சீரழித்ததற்கு இந்த இழிகாமமே காரணம். பாலுணர்ச்சியில் இருந்து விடுபட்டு விலகி நிற்க நாம் அனைவரும் விவேகானந்தராவது எளிது இல்லை. 



அதேநேரத்தில், வேட்கை வெறியாகிக் காமத்தில் கரிந்துபோவதும் வாழ்வு இல்லையே. நமக்கிருக்கும் ஒரே வழி காமத்தைக் காதலாக்குவதுதான். பப்களின் வாசல்களில் தற்காலிகத் துணைக்குத் தவிப்புடன் தவமிருப்பதும், உடல் தினவைத் தணிக்க ஊர் பேர் தெரியாத ஒரு பெண்ணைப் 'பிக்அப்’ செய்வதும், 'பார்ட்டி’களில் கட்டிப்பிடித்து ஆட்டம்போட்டு, விட்டுப்பிரிந்து வீடு திரும்புவதும், உடனடி நட்பு - உடனடிப் பிரிவுக்காக 'டேட்டிங்’ குறிப்பதும், காதல் இல்லை - கல்யாணம் இல்லை - கண்ணீர் விடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தத்துவம் உதிர்ப்பதும், திருமண பந்தம் இல்லாமலே மனச்சான்றின் உறுத்தலின்றிப் படுக்கையைப் பகிர்ந்துகொள்வதும், 'பல இரவுகள்’ பார்த்துவிட்டு 'முதல் இரவு’ கொண்டாடுவது எந்த வகையிலும் வாழ்க்கையாகாது. 



'நம் இளைஞர்களுக்கு ஷேக்ஸ்பியர் தெரியும்; ஷெல்லி தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும்; கெட்டழிந்த பின்புதான் பட்டினத்தார் புரியும்’ என்று கண்ணதாசன் சொன்னது ஆழ்ந்த அர்த்தமுள்ள வாசகம்.



புதுடில்லியில் நள்ளிரவில், ஓடும் பேருந்தில் 23 வயது நிரம்பிய, மருத்துவம் பயின்ற ஜோதி சிங் பாண்டே, காமவெறி பிடித்த மனித மிருகங்களால் வன்புணர்ச்சிக்கு இரையான செய்தி ஊடகங்களின் உதவியால் நாடு முழுவதும் சேர்ந்த பின்புதான் மத்திய - மாநில அரசுகளின் உறக்கம் கலைந்தது. வர்மா கமிட்டி அமைக்கப்பட்டது. மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது. 



பாலியல் பலாத்காரம் செய்யும் பாவிகளுக்குத் தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா? என்ற விவாதம் எழுந்தது. இதற்குப் பிறகும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. மரண தண்டனை இந்த மண்ணில் இருப்பதனாலேயே படுகொலைச் சம்பவங்கள் இல்லாமற் போய்விட்டனவா? நுகர்பொருள் கலாசாரம் இங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கும் 'எல்லாவற்றையும் எப்படியாவது துய்க்க வேண்டும்’ என்ற மனவிழைவும் வேட்கையும் வளரும் வரை குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை.



பிறக்கும்போது மனித மனம் வெற்றுத்தாளாகவே விளங்குகிறது. காலநடையில் இந்த வெற்றுத்தாளில் புலன் சார்ந்த அனுபவங்கள் சிறிது சிறிதாகப் பதிவாகி, அவற்றிற்கேற்பவே நடத்தைகள் உருப் பெறுகின்றன என்கிறது உளவியல். பெற்றோர், ஆசிரியர், கல்விக்கூடம், குடும்ப உறவு, சமூகச் சூழல், ஊடகம் என்று ஒவ்வொரு திசையிலிருந்தும் வந்து சேரும் பதிவுகளே தனிமனித நடத்தையை நிர்ணயிக்கின்றன. 


 மனம் சார்ந்தவன்தான் மனிதன். மனதை நலமாக வைத்துக்கொள்வதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. நமக்கு வாய்த்திருக்கும் அரசுகளோ, கருவூலத்தை நிரப்பும் அவசரத்தில் நம் பண்பாட்டைப் பள்ளம் தோண்டிப் புதைப்பதில் கவனம் செலுத்துகின்றன. அரசே தவறு செய்யத் தூண்டும். அதன் தூண்டுத​லால் தவறிழைப்பவனை அதுவே வெட்கமின்றித் தண்டிக்கும். 'உனக்கு நீயே ஒளி’ என்றார் புத்தர். நாம்தான் நமக்குரிய பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.



காமம் வேறு... காதல் வேறு. இரண்டு நிமிட இன்பத்தில் காமம் முடிந்துவிடும். வாழ்வின் இறுதிநாள் வரை காதல் இல்லறத்தை இனிமையாக்கும். காதலுக்கென்ற தனியாக ஒரு நாள் கொண் டாடப்படுவதே அபத்தம். இன்றைய இளைஞர்கள் உண்மையான காதல் எதுவென்றறிய, கார்ல் மார்க்ஸ்-ஜென்னி, ஜெயப்பிரகாஷ் நாராயண் - பிரபாவதி காதல் வாழ்க்கையை அறிந்துகொள்வது அவசியம். இவர்கள் புராண - இதிகாசப் பாத்திரங்கள் இல்லை. எலும்போடும் சதையோடும் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தவர்கள்.



உலகுக்கு 'மூலதனம்’ வழங்கிய கார்ல் மார்க்ஸ் தன் காதல் மனைவி ஜென்னியைச் சில நாட்கள் பிரிந்திருக்க நேர்ந்தபோது, அந்தப் பிரிவின் வலியைத் தாங்க முடியாமல் வரைந்த கடிதம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. 'உலகில் எத்தனையோ அழகிய பெண்கள் இருக்கின்றனர். ஆனால் என்னுள் எப்போதும் இனிய நினைவுகளை எழச் செய்யும் உன் அழகு முகத்தைப் போல் வேறொரு முகத்தை எங்கு என்னால் காணக்கூடும்?



 என் எல்லையற்ற துன்பங்களையும், ஈடுசெய்வதற்கு இயலாத இழப்புகளையும், என்னை உள்ளிருந்து வாட்டும் வேதனைகளையும் உன் இனிய முகத்தில் முத்தமிடும்போது முற்றாக மறந்து விடுகிறேன். உச்சி முதல் உள்ளங்கால் வரை உன்னை நான் முத்தமிடுகிறேன். என்னருகில் நீ இருக்கும் தருணங்களில் கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. உன் முன்பு நான் முழந்தாளிட்டுப் பணிகிறேன். உன் தாய்மையான இதயத்தை என் இதயத்துடன் நெருக்கமாக இணைத்துக்கொள்கிறேன். வார்த்தைகள் எதுவுமின்றி மௌனமாகிறேன்’ என்று தன் ஆழமான காதலைக் கடிதத்தில் வெளிப்படுத்திய மார்க்ஸ், புற்றுநோயால் ஜென்னி மரணத்தை நெருங்கியபோது, அந்தக் கணத்தில் வாய்விட்டு அழுதார்.



ஜென்னி, மார்க்ஸுக்காகவே வாழ்ந்தவர்; பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து, மார்க்ஸைக் காதலித்துக் கரம் பற்றியவர். காதல் கணவனுக்காக வறுமையை விரும்பி ஏற்றவர்; இறந்த குழந்தைக்குச் சவப்பெட்டி வாங்க முடியாத நிலையிலும் மார்க்ஸின் மனம் நோகப் பேசாதவர்; மார்க்ஸ் நடத்திய போராட்ட வாழ்க்கையின் வலிமை மிக்க பின்புலமாக இருந்தவர். அவன் கண்ணை மூடும்போதும், 'கார்ல் என் சக்தியை நான் பறிகொடுக்கிறேன்’ என்றுதான் இறுதியாகச் சொன்னார். ஜென்னி மரணித்தபோது, 'மார்க்ஸும் செத்துவிட்டான்’ என்றார் ஏங்கல்ஸ். ஜென்னியின் மறைவுக்குப் பிறகு, தளர்ந்துபோன மார்க்ஸ் 15 மாதங்களில் உலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டார்.



ஜெயபிரகாஷ் நாராயண் இளம் வயதில் பேரழகன். காதல் மனைவி பிரபாவதி, காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்கிவிட, கல்வி பயில்வதற்கு அமெரிக்கா சென்ற ஜெ.பி-யின் அழகில் பல அமெரிக்க மாணவிகள் அவரைச் சுற்றிவந்தபோதும், அவர்களை ஏறிட்டும் பார்க்காதவர்; நாடு திரும்பியதும் தேசம் விடுதலை பெறுவதற்கு முன்பு தேக சுகம் காண்பதில்லை என்ற மனைவியின் விரதத்தை ஏற்றுக் காதலைக் கௌரவித்தவர்.



 பரமஹம்ஸருக்காக சாரதா தேவியும், காந்திக்காக கஸ்தூரி பாயும் பிரம்மசரியம் ஏற்றனர். ஆனால், பிரபாவதிக்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியம் பூண்டவர் ஜெ.பி. இறுதிவரை ஒரே அறையில் இரு படுக்கைகளில் தனித்தனியாக இரவைக் கழித்த ஆன்மநேயக் காதலர்கள் ஜெ.பி-யும் பிரபாவதியும். பிரபாவதி இறப்பைத் தழுவியபோது அனைவரையும் வெளியேற்றிவிட்டுச் சடலத்தின் பக்கத்தில் 15 நிமிடங்கள் தனியே அமர்ந்து அழுத ஜெ.பி., 57 ஆண்டுகள் தன் தாயாய், தோழியாய் உடனி ருந்து சேவை செய்த மனைவியை ஒருநாளும் மறந்ததே இல்லை. அவருடைய  படுக்கை அறையில் அவர் வைத்திருந்த ஒரே நிழற்படம் பிரபாவதியின் படம். அன்பிலே தோய்ந்து, அன்பிலே கரைந்து அன்புருவாய் வாழ்வதுதான் காதல் வாழ்க்கை என்று உணர்த்திய தம்பதி இவர் கள்.



இன்றைய இளைஞர்கள் ஜெ.பி-யாய் வாழ வேண்டியது இல்லை. ஆனால், கார்ல் மார்க்ஸாய் காதல் வாழ்வு வாழ்வதில் என்ன தடை? காமம் சேர்ந்த பாலியல் குற்றங்களே இப்போது பெருகி வருகின்றன. 'காதலர் தினம்’ கொண்டாடும் இளைய சமூகம் உண்மைக் காதலின் உயர்வை அறியா மலேயே 'காதல்’ வசப்பட்டு, அவசரம் அவசரமாய் இச்சையைப் பூர்த்திசெய்து, உறவு கசந்த நிலையில் விவாகரத்துக்காக நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். நான் காணும் உலகங்கள் நீயாக வேண்டும்’ என்று கசிந்துருகிக் காதல் வளர்க்கும் இருவரிடையே வாழ்க்கை எப்படி விரைவில் கசந்துபோகும்?



பாலியல் குற்றங்கள் இல்லாத சமூகத்தில்தான் பெண் பாதுகாப்பாக வாழ முடியும். அந்தப் பாதுகாப்பை ஒருபோதும் சட்டத்தின் மூலம் சாதிக்க முடியாது. பெண் ஆணுக்குரிய போகப்பொருள் என்ற அழுக்குச் சிந்தனை ஆண்களின் மனதிலிருந்து முதலில் அகல வேண்டும். பெண்ணைக் கடவுளாகவும் போற்ற வேண்டாம்; அடிமையாகவும் நடத்த வேண்டாம்; சக உயிரியாக உணர்ந்து அன்புசெய்தால் போதும். பெண்ணைக் காமத்தோடு பார்க்கும் பார்வையில் இருந்து விடுபட ஊடகங்கள் உதவ வேண்டும். பாடத் திட்டங்கள் பள்ளிகளில் பிள்ளைகளின் பண்பாட்டை வளர்க்கும் விதத்தில் வடிவமைக்க வேண்டும். காதல் என்பது வெறும் காமம் இல்லை என்ற புரிதல் வரவேண்டும்.



'காதல் என்பது இன்பம் அல்ல; பொறாமைப்​படுவதும் அல்ல; ஒருவர் மீது மற்றொருவர் செலுத்தும் அதிகாரமோ, ஒருவரையருவர் விரட்டியடிப்பதோ காதலாகாது. உடைமைத்​தனத்திலும், ஒட்டிக்கொள்வதிலும் உண்மையான காதல் இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஒரு யுத்தம் எப்போதுமே இருந்து வருகிறது. அவர்களில் ஒருவர் மற்றவர் மீது அதிகாரம் செலுத்த முயல்கிறார். விளைவு ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம். இதுதான் காதலா? 'ஆம்’ எனில் காதலே ஓர் அர்த்தமற்ற வார்த்தைதான்’ என்று தெளிவுப்படுத்தும் தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி சூத்திரம் போல் சொன்னதை நினைவில் நிறுத்துங்கள்...


'புகையிருக்கும் இடத்தில் ஒளியிருக்காது;
ஒளியிருக்கும் இடத்தில் புகையிருக்காது!

நன்றி - ஜூ வி 


Wednesday, January 30, 2013

ஜெ VS கமல் - மோதல் - உண்மையான காரணம் என்ன?ஜு வி யின் அலசல்

விஸ்வரூப அரசியல்!

சேட்டிலைட் நிழல் யுத்தம்... சென்சார் சண்டை... கோலிவுட் மோதல்
 
'யார் என்று புரிகிறதா
 இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்

ஞாபகம் வருகிறதா’ - 'விஸ்வரூபம்’ படத்தில் வரும் பாடல் வரிகள் இவை. தடைகளைத் தாண்டி கமல் எப்படி வெல்லப்போகிறார் என்பதை தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. விஸ்வரூப விவ காரத்தில் திரைக்குப் பின்னால் நடக்கும் சில விஷ யங்கள் இங்கே..


பிரச்னைக்குக் காரணம், தி.மு.க. நெருக்கமா?


''சென்சார் போர்டில் அசன் முகம்மது ஜின்னா என்ற முஸ்லிம் ஒருவரே படத்தைப் பார்த்து ஓகே செய்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது படத்தை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?’ என்று கமல் தரப்பில் கேட்கிறார்கள். இந்த ஜின்னா யார் தெரியுமா? கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வளர்மதியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.


மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ-வான ஜவாஹிருல்லா, ''முஸ்லிம்களுக்கு எதிரானகாட்சிகள் 'விஸ்வரூபம்’ படத்தில் இருப்பதாக செய்தி வந்ததும் அதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டோம். உடனே, கமல் சார்பில் என்னிடம் பேசியவர் ஜின்னாதான். 'படத்தின் டிரைலரைப் பார்த்து விட்டு எதிர்க்க வேண்டாம். கமல் பேசத் தயாராக இருக்கிறார்’ என்றார். படத்தை சென்சார் செய்வதோடு ஜின்னாவின் வேலை முடிந்து விட் டது. அவர் எதற்காக கமலுக்கு ஆதரவாகப் பேச வேண்டும்? அப்படிப்பட்டவர் எப்படி படத்தை சென்சார் செய்திருப்பார்?'' என்கிறார்.


தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''படத்தின் சேலம் உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார். சென்சார் போர்டில் தி.மு.க-வைச் சேர்ந்த ஜின்னா, ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதியோடு கமல் மேடை ஏறியது, இவற்றை எல்லாம் ஆளும் கட்சி ரசிக்கவில்லை. அதன்பிறகுதான், கமலுக்குப் பிரச்னைகளும் ஆரம் பம் ஆனது'' என்கிறார்கள்.



ஜின்னா என்ன சொல்கிறார்? ''எந்த மதத்தின் உணர்வும் புண்படுத்தப்படுவதை தணிக்கைத் துறை விதிமுறைகள் அனுமதிப்பது இல்லை. வழி காட்டும் முறைகளின்​படிதான் தணிக்கை நடக்கிறது. சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகை யிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்த​தாகவோ காட்சிகள் இருப்பின், அவை நீக்கப்படுகின்றன. ஒரு படத்துக்கான தணிக்கை முறைகளில் அதில் பங்கு பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானது. நான் என் கடமையில் இருந்து ஒரு போதும் தவறியது இல்லை, இஸ்லாத்துக்கு எதிராக மட்டுமல்ல, எந்த மதத்துக்கும் எதிரான தவறான உள்நோக்கம் கொண்ட சித்திரிப்புகளை பலமாகவே எதிர்த்து இருக்கிறேன்'' என்கிறார்.  


சேட்டிலைட் நிழல் யுத்தம்!


'விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு  டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று  டி.வி. தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. 



கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம். இந்த நடவடிக்கை அந்த டி.வி. தரப்பை கொந்தளிக்க வைத்து விட்டதாம். ''சேட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தமே, 'விஸ்வரூபம்’ படத்துக்கு எழுந்த தடை'' என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார்.



'விஸ்வரூபம்’ பிரச்னை நீதிமன்றத்துக்குப் போனதும் நீதிபதி வெங்கடராமன் படத்தைப் பார்க்க முடிவு செய்தார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் 'விஸ்வரூபம்’ ஸ்பெஷலாகத் திரையிடப்பட்டது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும் நீதிபதிகளுடன் படம் பார்த்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு அதிகாரிகளுடன் கமலைப் பேசச் சொன்னது நீதிமன்றம். அநேகமாக, இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும்போது நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கும்.


''நாங்கள் தேசத் துரோகிகளா?''


'விஸ்வரூபம்’ படத்துக்கு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து கமல் வெளியிட்ட அறிக்கையில், ''நியாயமான தேசப்பற்றுமிக்க முஸ்லிம் யாரும் இந்தப் படத்தைப் பார்த்தால் பெருமைப்படுவார்கள்'' என்று சொல்லி இருக்கிறார். இதுவும் முஸ்லிம் கூட்டமைப்பினரை கொதிக்க வைத்திருக்கிறது. ''சிறு குழு எனச் சொல்லி எங்களை தேசப்பற்று இல்லாதவர்களைப்போல் சித்திரித்து இருக்கிறார். கூடங்குளம் தொடங்கி தர்மபுரி கலவரம், எல் லையில் இந்திய வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் வரை குரல் கொடுக்கும் நாங்கள் தேசத் துரோகிகளா?'' என கேள்வி எழுப்பும் அவர்கள், ''படத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்கப் படை தாலிபான்களை சுடும் காட்சி வரும்.



 அதில் அப்பாவியான பெண் ஒருவர் பலியாவார். இதற்காக அமெரிக்க வீரர்கள் பரிதாபப்படுவார்கள். தாலிபான்கள் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தப்பி ஓடும் காட்சியில் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடுவார்கள். அப்போது ஒரு தாலிபான், 'குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு தப்பிச் செல்லலாம்’ என்பார். அதற்கு இன்னொரு தாலிபான், 'அமெரிக்கர்கள் பெண்களை குழந்தைகளை கொல்ல மாட்டார்கள்’ என டயலாக் பேசுவார். இப்படி படம் முழுவதும் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குவதுபோல காட்சிகளை அமைத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்றனர்.


சினிமா மோதல்!
கமலுக்கு ஆதரவாக திரையுலகத்தினரும்அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்கின்றனர். ரஜினி, பாரதிராஜா, பார்த்திபன், அஜித் ஆகியோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ம.க-வும் 'விஸ்வரூபம்’ படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் அமீர் ''யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கருத்து தெரிவிக்கலாம்'' என்று சொல்லி இருப்பதை கோலிவுட் ரசிக்கவில்லை.



'கமலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு திரையுலகம் மௌனமாக இருப்பது ஏன்?’ என்று பாரதிராஜா கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு இன்னொரு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. ''ஈழத் தமிழர்களின் வலியைச் சொல்லும் 'காற்றுக் கென்ன வேலி’ படத்துக்கும் இதேபோல் தடை வந்த போது அந்தப் படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜும் தயாரிப்பாளர் வெள்ளையனும் மட் டுமே போராடினர். அப்போது, இந்த பாரதிராஜா எல்லாம் எங்கே போனார். மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகர்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பது அநியாயம்'' என்று குமுறுகிறது கோலிவுட்டின் ஒரு பிரிவு.


''இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது!''


கமல் ரசிகர்களும் கருத்து சுதந்திரத்தை ஆதரிப் பவர்களும் சொல்லும் வாதம் இதுதான்...


''நடப்பு விஷயத்தை படமாக எடுக்கும்போது தாலிபான் தீவிரவாதிகளை வேறு மதத்தின் அடையாளமாக எப்படிக் காட்ட முடியும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரத்தை இங்கே இருக்கிற முஸ்லிம்கள் தங்களோடு ஏன் தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபான் தீவிரவாதம் பற்றி எத்தனையோ ஆங் கிலப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தக் காட்சிகள் எப்படி அனுமதிக்கப்பட்டதோ, அதே அடிப்படையில்தான் இந்தப் படத்துக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. 




படத்தை தடை செய்வதைவிட, அந்தப் படத்தைப் பார்க்காமல் புறக்கணிப்பது அதைவிட பெரிய தண்டனைதான். அந்த வழியில்தான்  முஸ்லிம்கள் படத்தை எதிர்த்து இருக்க வேண்டுமே தவிர, தடை செய்யச் சொல்வது சரி அல்ல. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் ஆங்கில அரசு பறித்ததால்தான், சுதந்திரப் போராட்டமே நடந்தது. அப்படிப்பட்ட தேசத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போர்க்​கொடி தூக்குவது ஜனநாயகம் அல்ல'' என்கிறார்கள்.



நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடக்கும் விஷயங்​கள் என்ன அதிர்வலைகளை உண்டாக்கப்​போகிறதோ?


- ஜூ.வி. டீம்





மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன்: கமலஹாசன் குமுறல் 
 
 
Posted Date : 11:45 (30/01/2013)Last updated : 18:08 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்திற்காக தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று படமெடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகர் கமலஹாசன்,படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டிருந்தால், கடன் கொடுத்தவர் வசம் தமது சொத்துக்கள் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என்று சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய கமல்,  " இந்த படத்திற்காக நான் மிகுந்த பொருட் செலவு செய்துள்ளேன். நான் நின்று கொண்டிருக்கும் இந்த வீடு உட்பட என்னுடைய அனைத்து சொத்துக்களையும் இந்த படத்திற்காக அடமானம் வைத்திருக்கிறேன்.
படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகப் போக நான் நிற்கும் இந்த கட்டடம் கூட எனக்கு சொந்தமில்லாமல் போகும். அநேகமாக இதுவே கூட நான் இங்கிருந்து அளிக்கும் கடைசி பேட்டியாக அமையலாம்.

நாட்டின் ஒற்றுமையா இல்லை என்னுடைய சொத்தா என்ற கேள்வி வரும் போது, நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நான் கருதுகிறேன். நாட்டின் ஒற்றுமைக்காக சொத்துக்களை இழக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு பணம் முக்கியமல்ல. நாட்டின் ஒற்றுமையே முக்கியம்.


எனக்கு கிடைக்க வேண்டிய நீதி தாமதப்பட்டதாக கருதுகிறேன்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.  இருப்பினும் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.


எனது திரைப்படத்திற்கு தடை, தடைக்குதடை என தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நான் தமிழகத்தை விட்டு வெளியேறவும் தயாராக இருக்கிறேன். மதச்சார்பற்ற மாநிலமாக தமிழகம் இல்லாமல் போனாமல் வேற மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன். தமிழகம் முதல் காஷ்மீர் வரை வேறு மதச்சார்பற்ற மாநிலம் இல்லை என்றால் மதச்சார்பற்ற நாட்டை தேடிச் செல்வேன்.


விழுந்தாலும் விதையாக விழுவேன், எழுந்தால் மரமாக எழுவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைக்கலாம். இந்த மரத்தில் பல பல சுதந்திரப் பறவைகள் வந்து அமரும். சோலைகள் உருவாகும். மீண்டும் விதைகள் பல உருவாகும். ஆனால் அந்த முதல் விதை நான். எனக்கு மதம், அரசியல் சார்பு இல்லை. ஆனால் என் திறமை என்னுடன் இருக்கும்.


விஸ்வரூபம் படம் நடக்கும் களம் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான். இது இஸ்லாமியர்களை கேலி செய்யும் படமல்ல. எனக்கு மதம் இல்லை. மனிதம்தான் உண்டு" என்றார்.

விஸ்வரூபம்: குரான் காட்சியை நீக்க கமல் சம்மதம் 
 
 
 
Posted Date : 15:32 (30/01/2013)Last updated : 16:13 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்தில் குரான் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க நடிகர் கமலஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். 


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் இன்று மதியம்  செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட தாம்  காரணமாக இருக்க விரும்பவில்லை என்றார்.

விஸ்வரூபம் பட தடை விவகாரத்திற்கு பிறகு கமல் இன்று காலை பேட்டி அளித்தார்.  அவருடைய பேட்டி தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. கமலை  அடுத்தடுத்து வி.ஐ.பி.கள் சந்தித்து வருகின்றன.  காங்கிரஸ் எம்.பி. ஆரூண், தேசிய லீக்  கட்சி தலைவர் பஷீர் ஆகியோர் கமலை சந்தித்தார்.


 பின்னர் அவர்களுடன் சேர்ந்து மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல். அப்போது  'விஸ்வரூபம் படத்தில் குரான் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் தொடர்பான சில காட்சிகளை  நீக்க முடிவெடுத்துள்ளதாகவும்,  'ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  22 முஸ்லிம் கட்சிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு   நிர்வாகிகள் யாரும் கமலை சந்திக்காத நிலையில் ஆருணும் பஷீரும்  சந்தித்திருக்கிறார்கள்.

இதுபற்றி கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்  ரீபாயி ''படத்தை தடை செய்ய வேண்டும் என்கிற எங்கள் கோரிகையில் உறுதியாக  இருக்கிறோம். தமிழக அரசின் முடிவை ஆதரிக்கிறோம். அரசு மேல் முறையீடு  செய்திருக்கிறது. அதனை வரவேற்கிறோம். ஆருணும், பஷீரும் கமலை பார்த்ததற்கும்  எங்கள் கூட்டமைப்புக்கும்  எந்த தொடர்பும் இல்லை" என்றார்.

ஆருண் பேசும் போது, காட்சிகள் நீக்கப்படும் என்கிற கமலின் முடிவை கூட்டமைப்பிடம்  தெரிவித்து அவர்களின் ஒப்புதலை பெறுவோம்" என்றார்.



விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை; உச்ச நீதிமன்றத்தை நாட கமல் முடிவு! 
 
 
Posted Date : 15:53 (30/01/2013)Last updated : 16:48 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் அறிவித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாட நடிகர் கமலஹாசன் முடிவெடுத்துள்ளார்.


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அரசு பிறப்பித்த தடையை நீதிபதி வெங்கடராமன் நேற்றிரவு நிறுத்தி வைத்ததார். 

இதனால் இன்று படம் வெளியாகும் என்கிற சுழ்நிலையில் விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று காலை மேல் முறையீடு செய்தது. அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், நீதிமன்றம் தொடங்கியதும்  முதல் வழக்காக ப‌திவு செய்தார். மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிப்பி

அருணா ஜெகதீஷன் அடங்கிய பெஞ்ச், பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கை விசாரிப்பதாகக் கூறியுது.

இதன்படி வழக்கு விசாரணைக்கு வந்ததும் தமிழக அரசின் கோரிகையை ஏற்று தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது.வருகிற திங்கட்கிழமைக்குள் தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம்,  பிப்ரவரி 6 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.


இதனால் படம் வெளியாவது மேலும் தாமதம் ஆகியிருக்கிறது
இந்நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து கமலஹான உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கமலஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


காவல் துறை கெடுபிடி: பாதியிலேயே நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்! 
 
 
Posted Date : 12:26 (30/01/2013)Last updated : 12:27 (30/01/2013)
சென்னை: நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டபோதிலும், காவல்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில்  இன்று காலை திரையிடப்பட்ட விஸ்வரூபம், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தமிழகத்தில்  விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

விஸ்வரூபம் திரைப் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நேற்று சென்னை  உயர் நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று பல இடங்களில்  விஸ்வரூபம் காலையிலேயே திரையிடப்பட்டது. ஆனால், படம் ஓடத் தொடங்கிய சில  நிமிடங்களில் அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள்  படத்தை நிறுத்த சொல்லி தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும்  அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டதால்,தியேட்டர் உரிமையாளர்கள்  படத்தை நிறுத்தினர்.

தூத்துக்குடி, கோவை, ஈரோடு மற்றும் நாகை மாவட்டங்களில் பத்து நிமிடத்திலேயே  விஸ்வரூபம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடும் ஆத்திரம் அடைந்த கமல் ரசிகர்கள்  சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின்  பல இடங்களில் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் திரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், சென்னை தேவி தியேட்டர் எதிரில்  வைக்கப்படிருந்த விஸ்வரூபம் பேனரை தீ வைத்து எரித்தனர்.

கோவையில் ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  விஸ்வரூபம் திரையிட இருந்த தியேட்டர்களில் வீச பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற  கோணத்தில்; காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நன்றி - விகடன்


Kamal hasan's emotional speech - Ananda Vikatan 

 

 

 மக்கள் கருத்து



1.இங்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....ஜெயா செய்துள்ளது அப்பட்டமான மிரட்டல் வேலை. ஆனால், அதே சமயம் பாட்சா, ரஜினி .... விஸ்வரூபம், கமல் ........வாய்ஸ் வரும் அதை வைத்து ஏதாவது செய்யலாம் என்று கணக்கு போட வேண்டாம். ஏற்கனவே, இந்த மாதிரி வாய்ஸ் கொடுக்கப் போய்தான் தி.மு.க. திரும்ப ஆட்சிக்கு வந்து.........டில்லி வரைக்கும் கொடி கட்டி பறந்து, லட்சம் கோடிகளில் ஊழல் என்று புதிய பரிணாமத்தை அரசியல் வானில் புகுத்தினர்.........ஜெயா செய்த தவறுக்கு, இந்த லட்சம் கோடிகளில் புரளும் கேடிகளை திரும்பவும் வாழ வைக்க வேண்டாம். தவிர, கமல் என்ற கலைங்கனை பிடிக்கும் தமிழக மக்களுக்கு, கமல் என்ற தனிப்பட்ட மனிதனை, அவரின் குழப்பத்தனமான சிந்தனைகளை அறவே பிடிக்காது.

 

2. இந்த தீர்ப்பு விஸ்வரூபத்திற்கு கிடைத்த வெற்றி, கமலஹாசன் என்ற தனி மனிதனுக்கு கிடைத்த தோல்வி.

 

 3.உண்மையிலேயே ஜாதி மதம் மொழி என்று எதையாவது இழிவு படுத்தினால் தடை செய்யலாம் அமெரிக்கா விற்கு கமல் வக்காலத்து வாங்கினால் நம்ம ஊரு பாயுக்கு ஏன் வலிக்குது?

 

4. ஜெஜெ இந்த விஸ்வரூபம் படத்தால் தமிழ் சினிமாவை பகைத்துக்கொண்டார். தமிழ் இனிமாவை பகைதவர்களின் கதி ... கஸ்டம் தான். ஜெஜெவின் துவேசம் இதில் தெறிகிரது.இதுவே இவருக்கு தோல்வியை தரும். 

 

 

5. உயர்நீதிமன்றம் தேவையில்லாத தாமதத்துக்கு பிறகு தடையை நீக்கி இருக்கிறது. முதலில் தணிக்கைக்குழு சான்று வழங்கிய படத்தை ஏன் நீதிபதி பார்க்க வேண்டும் என்பதே புரியவில்லை. போகட்டும்.

முஸ்லிம்கள் மனம் புண்படுகிறது என போராடும் இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளா? ஏன் அனைத்து மசூதிக்கூட்டங்களிலும் இவர்களைப் போல யாரும் முடிவுகள் அறிவிக்கவில்லை? இவர்கள் மனம் எதனால் புண்பட்டது என்பதை படம் வெளியிட்ட பின் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து அதற்கு தடை வாங்க வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு மதத்தை அரசியலோடு கலந்து செயல்படுவது ஏன்?

எதிர்ப்பதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்? "பேர்ள்" என்ற பத்திரிகை நிருபரை கட்டிவைத்து குரான் வாசகம் படிக்கும்போதே கழுத்தை அறுத்து அதை வீடியோ எடுத்து காட்டி தங்கள் வீரத்தை ஒளிபரப்பியது உண்மைதானே. அமெரிக்க இரட்டை கோபுரத்தை தகர்த்து 4000 பேரை கொலை செய்யும் முன் குரான் ஓதிவிட்டு சென்றது உண்மைதானே. பம்பாயில் வந்து இறங்கி துப்பாக்கி சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவரை கொன்றவர்கள் குரானை ஓதியபின் தானே அதை செய்தார்கள்? அவர்களை கொடூரர்களாக காட்டினால் இங்கே உள்ளவர்கள் ஏன் கவலை கொள்கிறார்கள், கொதிக்கிறார்கள்? இவர்களும் அவர்களோடு தொடர்பு உடையவர்களா?

பல டி.வி.சேனல்களில் விலை கொடுத்து வாங்கி மதப்பிரச்சாரம் செய்யும் இவர்கள் அந்த நேரங்களில் ஒரு முறையாவது தாலிபான் செயல்பாடுகள் தவறானவை என சொல்லி இருப்பார்களா? எங்கோ இருந்த ஒரு பாழ்மண்டபத்தை இடித்ததற்காக அது இருக்கும் இடம் கூட தெரியாத இவர்கள் நாடு முழுதும் வன்முறையில் இறங்கவில்லையா? இவை எதையேனும் இவர்கள் கண்டித்ததுண்டா?


மொத்தத்தில் தங்களுக்குள்ள 15 சதவீத ஓட்டு வங்கியை வைத்து இந்திய அரசையே பணியவைக்க முடியும் என நம்புவதாலேயே இவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இதில் "வெளியிட்டால் விபரீதமாகும்" என அரசுக்கே எச்சரிக்கை வேறு. வன்முறையை கையாள வக்கில்லாத ஒரு அரசு இவர்களுக்கு ஆதரவு. காரணம் பண வெறி.

முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும் எனவும் கமல்ஹாசன் படத்தை வாங்கிய மற்றையோர் நஷ்டமடைய வேண்டும் எனவும் கணக்கு போடும் ஜெயலலிதா தனக்கு இந்து வோட்டுக்கள் கணிசமாக குறைந்தால் என்ன நடக்கும் என சீக்கிரமே தெரிந்துகொள்வார். 

 

 6.காற்றில்லாமல் புகையாது. முஸ்லீம தப்ப சித்தரிக்கிக்கராங்க அப்படின்ர காரனாத்துக்காக இவ்வளவு முஸ்லீம் பிரமுகர்கள் போராட்டம் பண்ரபோது அரசு சும்மா இருக்க முடியாது. முன்பு சண்டியர்ன்னு ஒரு படத்துக்கு பேர் வைச்சதுனால தலித் பிரச்சனை பண்னங்க அது மாதிரி தான் இதுவும். டிவிக்கு படம் தரலை அது இதுன்னு வெட்டியான காரணம். அது இலவசமா டிவில் காட்டரதுக்கான உரிமை விளம்பரங்கள் மட்டும்தான் வருமானம். ட்டிஎச்ல 1000 ரூபா குடுத்து எவ்வளவு பேர் பாப்பாங்க. இது அந்த டிவிக்கு தெரியாத என்ன (நமக்கே தெரியும்போது)

7. இந்தப் படத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்கள், உண்மையான இஸ்லாமியர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து, படத்தையே தடை செய்ய சொல்வது அறமல்ல.. 

 

 

8
விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று டி.வி. தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம்

படத்தை வீடு, வாசல் விற்று செலவிட்டு எடுத்தவன் எங்கு அதிக விலைக்கு விற்கலாம் என்று தானே பார்ப்பான். காய்கறி விவசாயி ஒரு கடையை விட அடுத்த கடை கூட விலை தருகிறேன் என்றால் அங்கு தான் விற்பான், 90 கோடி செலவழித்தவர்க்கு அந்த உரிமை இல்லையா? அர்சாங்கம் தன் கையிலிருக்கு என்பதால் அடி மாட்டு விலைக்கு கொடுக்கனும்னு சட்டமா?

 

 

9. தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

ஆக பாட்டியே லெட்டர்பேடு ஆட்களை கூப்பிட்டு தூண்டியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது, இதன் விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தெரியும், இதிலே பாட்டி பிரதமர் கனவு வேறே

 10.தலைமை நீதிபதியிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கியிருக்கிறார்கள், காலை 10.30 வரை திரையிடக் கூடாதென்று... தற்போது உண்மை வெளி வந்து விட்டது.

இது ஜெயலலிதாவின் பழிவாங்கல் நடவடிக்கை, பகடைக்காயாக்கப்பட்டிருக்கிறது முஸ்லிம் சமூகம்.

அப்பாவிகளிடையே பிளவைத்தூண்டி அரசியல் குளிர் காய்வது கட்சிகளின் வழக்கம் என்பது மறுபடியும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

Wednesday, December 26, 2012

இந்திய தேசியக்கொடி உருவான வரலாறு - எஸ் ராமகிருஷ்ணன்

எனது இந்தியா!

தையல்காரர் தயாரித்த கொடி! 


இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடி உருவாக்கப்பட்டதன் பின்னால், பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இந்திய தேசியக் கொடி முதன்முதலாக கல்கத்தாவில் ஏற்றப்பட்டது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அதற்கு முன்பே பெர்லின் நகரில் நடந்த சர்வதேச மாநாட்டில் இந்தியப் புரட்சியாளர் மேடம் காமாவால் 1905-ம் ஆண்டிலேயே ஏற்றப்பட்டது என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


மேடம் காமா தயாரித்த அந்தக் கொடியில் மேலே சிவப்பு, நடுவில் மஞ்சள், கீழே பச்சை என்று மூன்று 
 
 
பட்டைகளும், சிவப்புப் பட்டையில் ஒரு தாமரை மலரும், எட்டு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டு இருந்ததாகவும், மஞ்சள் பட்டையில் நீல வண்ணத்தில் 'வந்தே மாதரம்’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்ததாகவும், பச்சைப் பட்டையின் இடது மூலையில் சூரியனின் உருவமும், வலது மூலையில் பிறை நிலவு இருந்ததாகவும் கூறுகின்றனர். மேடம்  காமா எனப்படும் ருஸ்தம் பிகாஜி கர்மா, 1861-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி பம்பாயில் வாழ்ந்து வந்த செல்வச்செழிப்பு மிக்க பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர்.


 இளம் வயது முதலே தேச விடுதலைப் போரில் அக்கறையுடன் இருந்தார் காமா. அதனால், அவரு​டைய தந்தை 1885-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி ருஸ்தம் காமா என்பவருக்கு மணம்செய்து வைத்தார். ருஸ்தம் காமா, பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிர ஆதரவாளர். ஆனால், மனைவி மேடம் காமாவோ, நேர் விரோதமானவர். அதனால், வீடு அரசியல் களமானது. 


பம்பாயில் பிளேக் நோய் பரவியபோது, நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதில் ஈடுபட்டார் காமா அம்மையார். அதன் விளைவாக, அவருக்கும் அந்த நோய் ஏற்பட்டது. இருப்பினும், தேச சேவையில் தொடர்ந்து பணியாற்றினார். நோய் காரணமாக உடல் நலிந்து பலவீனமாக இருந்ததால், அவரை ஐரோப்பாவுக்குச் சென்று ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் வற்புறுத்தினர். அதனால், மேடம் காமா 1902-ம் ஆண்டு ஐரோப்பாவுக்குச் சென்றார். ஜெர்மனி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மூன்று ஆண்டுகள் தங்கி சிகிச்சை பெற்ற மேடம் காமா, 1905-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார். அங்கே, அவருக்கு ஓர் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. முழு ஓய்வும் சிகிச்சையும் அவரை முழுநலம் பெறச் செய்தது.



அப்போது, லண்டனில் தாதாபாய் நௌரோஜியைச் சந்தித்த மேடம் காமா, சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அவருடைய செயலாளராகப் பணி​யாற்றினார். அந்தக் காலத்தில் லண்டனில் இயங்கி வந்த, 'இந்தியா ஹவுஸ்’ இந்திய விடுதலைக்காகப் பாடு​படுவோரை எல்லாம் ஒன்று திரட்டியது. 



ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, வ.வே.சு.ஐயர், வீர சாவர்க்கர் போன்றவர்களின் நட்பும் மேடம் காமாவுக்குக் கிடைத்தது. 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடந்த சர்வதேச சோஷலிஸ்ட் மாநாட்டில்  இந்திய தேசியக் கொடி ஒன்றை எடுத்து விரித்து உயர்த்திக் ​காட்டிய மேடம் காமா, 'இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பிரதிபலிக்கும் எங்கள் தேசியக் கொடி. இந்தக் கொடி இப்போது வானளாவப் பறக்கிறது'' என இந்தியாவின் முதல் கொடியைப் பறக்கவிட்டார். இந்தக் கொடி உருவாக்கத்துக்கு தனக்கு ஆலோசனை சொன்னவர்கள் வ.வே.சு, ஐயர் மற்றும் வீர சாவர்க்கர் என்று காமா குறிப்பிட்டுள்ளார்.



1917-ம் ஆண்டில் அடுத்த தேசியக் கொடி உருவானது. இதை வடிவமைத்தது திலகரும் அன்னி பெசன்ட் அம்மையாரும். அந்தக் கொடியில் மேலி ருந்து கீழாக ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் மாறி மாறி வரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றின் முதல் ஏழு பட்டைகளில் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன. கொடியின் வலது உச்சியில் வெள்ளை நிற இளம் பிறையும் அதற்கு மேல் ஒரு நட்சத்திரமும் இடம்பெற்று இருந்தன. உச்சியின் இடது மூலையில் பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இணைக்கப்பட்டு இருந்தது.


 இதை, தேச பக்தர்கள் ஆதரிக்கவில்லை. இவ்வளவு பச்சையாகப் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பயந்துகொண்டு அவர்களுடன் நாம் சமரசமாகப் போக வேண்டுமா? என்று பலரும் குமுறினார். அதனால், அந்தக் கொடி கைவிடப்பட்டது. அதன் பிறகு, 1921-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் அனைத்து இந்தியக் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது. 


அப்போது, பிங்காலி வெங்கைய்யா என்பவர் 30 நாடுகளின் கொடியை ஆராய்ந்து முடிவில் தேசியக் கொடி ஒன்றை உருவாக்கி காந்தியிடம் காட்டினார். பிங்காலி வெங்கையா ஒரு தையற் கலைஞர். அவர் உருவாக்கிய தேசியக் கொடியில் இரண்டு பட்டைகள் இருந்தன. மேல்புறம் பச்சையும், கீழ்புறம் சிவப்பும் இருந்தன. பச்சையும் சிவப்பும் இந்தியாவின் இரண்டு பிரதான வகுப்புகளான இந்து முஸ்லிம் இருவரையும் குறிக்கிறது என்றார் பிங்காலி வெங்கையா. அந்தக் கொடியைப் பரிசீலித்த காந்திஜி, அந்த தையற் கலை ஞரை வெகுவாகப் பாராட்டிவிட்டு, கூடுதலாக சில யோசனை வழங்கினார். 




அதை, வெங்கையா மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அன்றே அந்தக் கொடியை உருவாக்கி காந்திஜியிடம் கொடுத்தார். அதுவே பின்னாளில் நமது தேசியக் கொடியாக சில மாற்றங்களுடன் உருக்கொண்டது. நமது தேசியக் கொடிக்கு ஆரம்ப வடிவம் கொடுத்த தையல்காரர் பெங்காலி வெங்கைய்யா, அரசால் எந்த மரியாதையும் செய்யப்படாமல் வறுமையில் வாடி 1963-ம் ஆண்டு இறந்தார். 



அகில இந்திய காங்கிரஸ் கட்சியானது அங்கீகரிப்பதற்கு முன்னரே காந்திஜி இந்தக் கொடியை அங்கீகரித்து விட்டதால் அது மிகவும் பிரபலமடைந்து விட்டது. ஆகவே, காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநா டுகளிலும் அந்த மூவண்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆகவே, பின்னர் அந்தக் கொடியை காங்கிரஸ் அங்கீகரித்துக்கொண்டது. கொடியில் இடம் பெற் றிருந்த நிறங்களின் தத்துவார்த்தம் சம்பந்தமாக இந்து, சீக்கியர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக, சில இடங்களில் சண்டை நடந்தது.


1931-ம் ஆண்டு கராச்சியில் காங்கிரஸ் மகா​சபை கூடியபோது, அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்​தக்க வகையில் ஒரு தேசியக் கொடியை உருவாக்குவது அவசியம் என்றும் அதை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்ட மூவண்ணக் கொடியில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று பட்டைகள் இருக்கும். நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் நீல நிறத்தில் கைராட்டைச் சின்னம் பொறிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. 




அன்று முதல் அதுவே நமது தேசியக் கொடி ஆனது. 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி அதே கொடியைச் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாகவும் இந்திய அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. காங்கிரஸ் கட்சியின் கொடியாகவும் அதுவே இருந்ததால், அரசாங்கக் கொடிக்கும் கட்சிக் கொடிக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக நடுவில் உள்ள கைராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. 



1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி, இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அதன் தலைவராகிய ஜவஹர்லால் நேரு தேசியக் கொடி பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், சம அளவில் அமைந்த மூன்று நீண்ட செவ்வகப் பாகங்கள்கொண்ட நீள்சதுர மூவண்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு சமர்ப்பித்தார். உச்சிப் பாகம் குங்குமப்பூ நிறத்திலும், அடிப்பாகம் பச்சை நிறத்திலும் உள்ளன. மத்தியில் உள்ள பாகத்தின் நிறம் வெள்ளை. இதன் மையத்தில் கருநீல நிறத்தில் அசோகச் சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.




ஆதாரக் கொடியின் மாதிரி ஒன்று இந்தியத் தர நிர்ணயக் கழக அலுவலகத்தில் முத்திரையிட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. தேசியக் கொடிகளைப் பல்வேறு அளவுகளில் தயாரித்துக் கொடுப்பதற்கு ஷாஜஹான்பூர் ராணுவ உடைத் தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நமது கொடியில் உள்ள இரண்டு வண்ணங்களுக்கு 'இந்திய கேஸரி’, 'இந்தியப் பச்சை’ என்று பெயர். உலகில் உள்ள வண்ணத் தர நிர்ணயப் பட்டியல்களில் இந்த இரு வண்ணங்களும் இல்லை. 




 எனவே, இந்தியத் தேசியக் கொடிக்கு என்றே விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய நாட்டின் தேசியச் சின்னம், மூன்று சிங்கங்களின் முகங்கள். இந்தியத் தேசிய வாசகம் 'சத்யமேவ ஜெயதே’. அதன் பொருள், வாய்மையே வெல்லும். இது, முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்று. கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர். அதன் மேல் நான்கு சக்கரங்களைப் பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு. அந்தச் சக்கரங்கள் தர்மச் சக்கரங்கள் எனப்படுகின்றன. அதில் 24 ஆரங்​கள் இருக்கின்றன. இது பௌத்தர்களின் எட்டுக் கோல்களைக்​கொண்ட தர்மச் சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.


சக்கரங்களுக்கு அருகிலேயே நான்கு பக்கமும் சிங்கம், குதிரை, எருது, யானை ஆகியவற்றின் உருவங்கள் அமைந்துள்ளன. முரசின் மேற்பகுதியில் நான்கு சிங்கங்கள் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டி நிற்கின்​றன. சாரநாத்தில், மகான் புத்தர் தமது முதல் போதனையை வெளியிட்ட இடத்தில் அசோ​கச் சக்கரவர்த்தி ஓர் உயரமான கல் தூணை நிறு​வினார். அதுவே, தேசிய சின்னமாகத் தேர்வு செய்யப்​பட்டு இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளிலும், அரசு விழாக்​களிலும் மட்டுமே நாம் தேசியக் கொடியை, தேசிய கீதத்தை முதன்மைப்படுத்துகிறோம். அதுவும்கூட, சம்பிரதாய​மாகவே.



இவை வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. நமது தேசிய அடையாளங்கள். அதன் மகத்துவத்தை நாமே அறிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தப்பட​வேண்டிய உண்மை.


 thanx - ஜூ வி  , எஸ் ராமகிருஷ்ணன்

Saturday, November 24, 2012

அஜ்மல் கசாப்புக்கு டெங்கு என்ற புரளி ஏன்? ஜூ வி கட்டுரை

அஜ்மல் கசாப்பின் கடைசி நிமிடங்கள்!

டெல்லி, மும்பை அரசு மேல்மட்ட அதிகாரிகள் கடந்த வாரம் ரொம்பவே பிஸி. 'சி- 7096' என்று குறிப்பிட்ட ஃபைல் அதிரகசியமாக பல இடங்களுக்கும் சென்றுவந்தது. அது, அஜ்மல் கசாப் ஃபைல் என்பது, அவர் தூக்கில் போடப்பட்ட பிறகுதான் மற்றவர்களுக்குத் தெரியவந்தது. 


மும்பைத் தாக்குதல் தீவிரவாதி கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது நீதிமன்றம். அதன் பிறகு, பல்வேறு கட்டங்களைக் கடந்து, தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யும் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இந்தத் தகவலை கசாப்பிடம் சிறைச்சாலை அதிகாரி பக்குவமாக எடுத்துச்சொல்லி, மரண அறிவிப்பு அறிக்கையில் கையெழுத்து வாங்கினார். 'குப்'பென்று வியர்த்துக்கொட்ட, கைகள் நடுங்க அந்த வாரன்ட்டில் கையெழுத்துப் போட்டாராம் கசாப். 


அந்த நிமிடம் முதல் மரண பீதி அவர் முகத்தில் தொற்றிக்கொண்டது. அதையடுத்து, அவ்வப்போது பிதற்ற ஆரம்பித்தாராம். கடந்த நான்கு வருடங்களாக கசாப்புடன் நன்கு பழகிய சிறைச்சாலை அதிகாரிகளிடம் அவர் சொன்ன விஷயங்களின் சாராம்சம் இதுதான். 'என்னுடன் சேர்த்து 10 பேர் கடல் வழியாக படகில் மும்பைக்குள் நுழைந்தோம். அவர்கள் அனைவரும் 26/11 தாக்குதலில் இறந்துவிட்டனர். அவர்களின் உடல்களை என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. என் உடலையும் அதுபோல செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்சி இருக்கிறார்.



ஏன் என்பதற்குக் காரணம் இருக்கிறது.


மும்பையில் 2008-ம் வருடம் நவம்பர் 26-ம் தேதி திடீரென எட்டு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஒன்பது தீவிரவாதிகள் 60 மணி நேரத் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்​பட்டனர். அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டார். இறந்த ஒன்பது தீவிரவாதிகளின் உடல்களை ரகசியமாக எடுத்துச் சென்று கடலில் அடக்கம் செய்துவிட்டதாக போலீஸ் சொல்கிறது. அது போலவே, தனது உடலையும் கடல் சமாதி செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் கசாப். மதரீதியாக சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பது அவரது விருப்பம். அப்படித்தான் நடந்தது என்று இப்போது சிலர் சொல்கிறார்கள்.

கசாப்பைத் தூக்கில் போடும் ஆபரேஷன் 'எக்ஸ்'ஸின் முதல் கட்டமாக, அவருக்கு டெங்குக் காய்ச்சல் என்று செய்தி பரப்பப்பட்டது. மின்னல் வேகத்தில் அவரின் ரத்த சாம்பிள்கள் சிறைச்சாலைக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக எந்த நேரமும் சிறைக்கு வெளியே காரில் அழைத்துச் செல்லக்கூடும் என்ற தகவலையும் கசியவிட்டனர்.




நவம்பர் 19-ம் தேதி இரவு. ஆர்தர் ரோடு சிறைச்சாலை. தூங்கப்போவதற்கு முன், கசாப் எப்போதும் பிரபல பாடகர் முகேஷ் பாடிய பாடலை தனக்கே உரித்தான குரலில் பாடுவாராம். 'நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என்னை நினைப்பதாக இருந்தால், தயவுசெய்து எனக்காக அழக் கூடாது' என்கிற பாடல் அது. 




அன்றும் இந்தப் பாடலை கசாப் பாடி முடித்தவுடன், சிறைச்சாலை அதிகாரி அவரது செல் உள்ளே எட்டிப்பார்த்து, 'கசாப்... உன்னை புனேயில் இருக்கும் எரவாடா சிறைச்சாலைக்கு மாற்றும்படி மேலிடத்தில் இருந்து திடீர் உத்தரவு. அதிகாலை ரெடியாக இரு. இங்கே இருக்கும் உனது பொருட்களை விட்டுவிடு. இனி அவை உனக்குத் தேவைப்படாது' என்று சொல்லிவிட்டுப் போனார். கசாப்புக்கு நன்றாகவே தெரியும்... எரவாடா சிறைச்சாலையில் தன்னைத் தூக்கில் போடப்போகிறார்கள் என்பது.




நள்ளிரவு நேரம்...



ராணுவ ஹெலிகாப்டர் மத்திய மும்பையின் முக்கியமான இடத்தில் வந்து இறங்கியது. அதிரடித் தாக்குதலில் கில்லாடிகளான தேசியப் பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி) கமாண்டோக்கள் அதில் இருந்து குதித்தனர். மறு உத்தரவுக்காகக் காத்திருந்தனர்.
மரண பீதியில் தூங்காமல் தவித்த கசாப்பை, நள்ளிரவு நேரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் தட்டி எழுப்பி காரில் ஏற்றினர். 



சீறிப் பாய்ந்து இருளில் மறைந்தது கார். இந்தோ-திபெத்தியன் போலீஸ் படையினரின் அணிவகுப்புத் தொடர்ந்தது. கசாப்புக்கு டெங்குக் காய்ச்சல் சிகிச்சைக்காக காரில் அழைத்துச் செல்கிறார்கள் என்ற தகவல் வெளியே கசியவிடப்பட்டது.




அதே நேரம், புனேயில் உள்ள எரவாடா சிறைச்சாலையில் ஏழு அதிகாரிகள் பரபரப்பாக இயங்கிக்​கொண்டு இருந்தனர். 'யாரோ ஒரு தீவிர​வாதியை அழைத்துவரப் போகிறார்கள். அவரை சிறப்பு செல்லில் அடைக்கவேண்டும்'  என்று சிறைச்சாலையின் உயர் அதிகாரி, சக அதிகாரிகள் ஆறு பேரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தனர். டாக்டர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், வீடியோகிராஃபர், போட்டோகிராஃபர், நீதித் துறை அதிகாரி, புனே போலீஸ் கமிஷனர் ஆகியோர் அடுத்தடுத்து சிறைச்சாலைக்குள் வந்து சேர்ந்தனர்.




'ஒரு முக்கிய அசைன்மென்ட். நவம்பர் 21 காலை 7.45 வரை நீங்கள் யாரும் வெளியே போக முடியாது. இங்கேதான் இருக்கவேண்டும்’ என்று விவரங்களை அடுக்கினர். மேலும் அனைவரது செல்போன்களையும் வாங்கிக் கொண்டு, அசைன் மென்ட் முடிந்த பிறகு தருவதாகக் கூறினர்.



அந்த நேரத்தில், தூக்குத் தண்டனை நிறைவேற்றும் நபர் வந்து சேர்ந்தார். 'யாரை அவர் தூக்கில் போடப்போகிறார்?' என்பதைச் சொல்லாமல், ஒரு தீவிரவாதி என்று பொத்தாம்பொதுவாகச் சொன்​னார்கள். இதே நேரத்தில், சிறைச்சாலை ஊழியர்கள் சிலர் ஆறு அடி நீளத்துக்கு குழி ஒன்றைத் தோண்டி இருந்தனர். சிறைச்சாலை முன்னேற்பாடுகளை டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் 'லைவ்'வாகப் பார்க்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.




இது ஒருபுறம் இருக்க... கசாப்பின் குடும்பத்தின​ருக்கு கூரியரில் தபால் அனுப்பியது, பாகிஸ்தான் நாட்டுத் தூதரகத்துக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி உடலை வாங்கிக்கொள்வது பற்றி கருத்துக் கேட்டது போன்ற விவகாரங்களை, இந்திய வெளிவிவகாரத் துறை கனகச்சிதமாய் செய்தது.  



கசாப் இருந்த கார் நேராக ஹெலிபேடுக்குச் சென்றது. அங்கே நின்ற ஹெலிகாப்டரில் கசாப் ஏற்றப்பட்டார். அங்கே இருந்து 120 கி.மீ தொலைவில் புனேயில் உள்ள எரவாடா சிறைச்சாலைக்கு அருகே ஹெலிகாப்டர் இறங்கியது. அங்கு தயாராக நின்ற காரில் கசாப் ஏற்றப்பட்டார். சிறைச்சாலை நோக்கி கார் சென்றது. சிறைச்சாலை வாசல் கதவு திறக்கப்பட்டு, உள்ளே நுழைந்தது கார். சிறப்பு செல் உள்ளே கசாப்பை அழைத்துச்சென்று அடைத்தனர். அங்கேயும், பிரபல பாடகர்கள் முகேஷ், ரஃபி இருவரும் பாடிய பாடல்களைப் பாடியபடி இருந்தார் கசாப்.




தூக்கிலிடுவதற்கு முன் மனம் வெறுத்த நிலையில், செல்லின் சுவரில் தலையை மோதியோ அல்லது வேறு வகையில் உடலில் காயம் ஏற்படுத்திக் கொண்டாலோ, அது சர்ச்சையைக் கிளப்பி​விடும் என்பதால்,  கசாப்பை அருகில் இருந்து கவனித்துக்கொண்டே இருந்தார் சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர். விடிய விடிய இவர் தூங்கவில்லை. 


ஆனால், கசாப் தூங்கியதாகச் சொல்கிறார்கள். எரவாடி சிறைச்சாலைக்கு வந்தது முதல் கசாப்பை எந்தத் தொந்தரவும் செய்யாமல், மௌனம் காத்திருக்கிறார்கள் அதிகாரிகள். சில நேரம் ஏதோ யோசித்தபடி நடந்தாராம். சிறைச்சாலை சாப்பாடுகளை சரிவரச் சாப்பிடவில்லையாம். பசி இல்லை என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்​கொண்டாராம். ஒரு தக்காளிப் பழம் உண்ட​தாகச் சொல்கிறார்கள்.  



நவம்பர் 21. அதிகாலை நேரம்... கசாப்பை சிறைச்சாலை அதிகாரிகள் எழுப்பிவிட்டனர். பிரார்த்தனை செய்தார். டாக்டர்கள் உள்ளே நுழைந்தனர். அவரது உடலைப் பரிசோதித்தனர். 52.5 கிலோ எடை. ரத்த அழுத்தம் 120/80. ஆக, உடல்நிலை நார்மலாக இருப்பதாக சர்ட்டிஃபிகேட் தந்தனர். அதையடுத்து, சிறைச்சாலையில் அதிகாரி கசாப்பிடம் கடைசி ஆசை என்ன என்று விசாரித்தார். 'எதுவும் இல்லை' என்று சிம்பிளாகப் பதில் அளித்தாராம் 



கசாப். அடுத்த சில நிமிடங்களில் தூக்கு மேடை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார். மேடையில் ஏற்றி நிற்கவைத்து, கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டினர். உயர் அதிகாரி சிக்னல் காட்டியதும், மேடையின் லீவர் திறக்கப்பட... ஒரே ஒரு துள்ளலுடன் அடங்கியது கசாப்பின் உயிர். 10 நிமிடங்கள் அதே கயிற்றில் தொங்கியபடி உடல் இருக்க... அதை இறக்கிப் பரிசோதித்த டாக்டர், கசாப் இறந்துவிட்டதாக அறிவித்தார்.



 அடுத்த ஒரு மணி நேரத்தில் மதச் சடங்குகளின்படி சிறைச்சாலையின் உள்ளே அடக்கம் செய்து முடித்தனர் சிறைச்சாலை அதிகாரிகள். அதன் பிறகுதான், கசாப் எரவாடி சிறைச்சாலையில் தூக்கில் போடப்பட்டு இறந்த விஷயம் வெளி உலகுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



சுமார் 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையின் முட்டை வடிவ செல், தற்போது கசாப் இல்லாமல் வெறுமை​யாகக் காட்சி அளிக்கிறது! 


நன்றி - ஜூ வி