ஜீவி முதல் பாகம் செம ஹிட் ஆனதால் சினிமா உலக மரபுப்படி 2வது பாகம் ரிலீஸ் ஆகி இருக்கு ஒரு சின்ன வித்தியாசம் திரைக்கதை மட்டும் வேற ஆள். அதனால அந்த அளவுக்கு இதில் பிரமாதமா சைன் பண்ண முடியலை .
ஸ்பாய்லர் அலெர்ட்
முதல் பாகம் பார்க்காதவங்க மட்டும் இந்த கதைச்சுருக்கத்தை பார்த்துடுங்க . ஹீரோ தன் நண்பனுடன் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்கார். அவரோட காதலி ப்ணம் தான் பெருசுனு அவருக்கு டாட்டா காட்டிட்டு வேற ப்ணக்காரனைக்கட்டிக்கிட்டதால செம காண்ட் ஆகி பணம் சம்பாதிக்க குறுக்கு வ்ழியை தேர்ந்தெடுக்கிறார். அவர் குடி இருக்கற ஹவுஸ் ஓனர் தன் பொண்ணோட மேரேஜூக்கு சேர்த்து வெச்சிருந்த நகையைக்கொள்ளை அடிக்கிறார். முக்கோண விதி , தொடர்பியல் விதி பிரகாரம் அவருக்கு சில சம்பவங்கள் நடக்குது , அதுக்கு பிராயச்சித்தமா ஹவுஸ் ஓனர் பொண்ணையே மேரேஜ் பண்ணிக்கறார்.
2 வது பாகம்
ஹீரோ மேரேஜ் பண்ண்க்கிட்ட ஹவுஸ் ஓனரோட பொண்ணு விழி ஒளி இழந்தவர், ஆனாலும் அவர் மீது அன்போடு வாழ்கிறார். அவருக்கு கண் ஆபரேஷன் பண்ணவும் , குடும்பசெலவுகள் அதிகம் ஆகிட்டதாலும் அவருக்கு பணம் தேவைப்படுது
ஹீரோ முதல் பாகத்துல இருந்த நண்பனுடன் புதுசா ஒரு ப்ணக்கார ந்ண்பன் கூடவும் பழகறார். 3 பேரும் சேர்ந்து தண்ணி அடிக்கற அளவு நெருக்கம் . பணக்கார நண்பனின் வீட்டில் லாக்கர்ல நகை , பணத்தை ஆட்டையைப்போட்டுட்டு ஹீரோ கிளம்பறார். அடுத்த நாள் மாமியார் வீட்ல இருந்து அழைப்பு . அந்த பணக்கார நண்பன் கொலை செய்யப்பட்டு இருக்காப்டி .
தன் மேல் போலீஸ்க்கு சந்தேகம் வந்ததால் தானே அந்த கொலைகாரனைக்கண்டுபிடிப்பது என ஹீரோ முடிவு எடுக்கிறார் அதான் கதை
இந்த 2வது பாகம் பார்க்கறவங்க முதல் 25 நிமிடங்களை கட் பண்ணிடலாம். அதுக்குப்பின் தான் கதை ஆரம்பிக்குது ., மொத்தமே 2 ம்ணி நேரம்தான்
ஹீரோவா எட்டு தோட்டாக்கள் ஹீரோ வெற்றி . முதல் பாகத்தைப்போலவே இதிலும் கச்சிதமான நடிப்பு கோபம் கொள்ளும் காட்சி மட்டும் சரியா ஒர்க் அவுட் ஆகலை
ஹீரோயினா அஸ்வினி . பரிதாபம் ஏற்படுத்தும் தோற்றம் ஒரு உண்மையை சொல்லியே ஆகனும் ஹீரோயினின் அம்மாவாக வரும் ரோகினி ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் ,ரகுவரன் ஆத்மா என்னை மன்னிக்கட்டும்
நண்பரா கருனாகரன் ஓக்கே ஆனா முதல் பாகத்தில் இருந்த முக்கியத்துவம் இதுல இல்ல சும்மா கூடவே வந்து போறார் அவ்ளவ் தான்
போலீஸ் ஆஃபீசராக நடித்திருப்பவர் நடிகர் நாசரின் தம்பியாம். உடல் மொழி எடுபடலை நடிப்பும் சுமார் . ஆள் ஹைட் கம்மி எப்படி போலீஸ் ஆஃபீசர் ஆனாரோ ?
மைம் கோபி ஒரு முக்கிய ரோலில் வர்றார் குட்
பாடல்கள் சுமார்தான். ஓப்பனிங்கில் வரும் பாட்டு சும்மா கிளாமருக்காக வலிய திணிக்கப்பட்டிருக்கு
ரசித்த வசனங்கள்
1 கல்யாணத்துக்கு முன்னே இருக்கற பணத்தை வெச்சு சமாளிச்ட்டு இருந்தோம் இப்போ தேவைகள் கூடிட்டுது
2 மாதா பிதா குரு பணம் அப்டினு ஆகிடுச்சு ப்ணம் இல்லைன்னா யாருமே மதிக்க மாட்டேங்கறாங்க
3 அவன் ஒரு முட்டாள் ஆள் அதனாலதான் நல்லவனா இருக்கான்
4 நல்லவனை இந்த சமூகம் முட்டாள்னு தான் சொல்லும்
5 சாமிக்கே காணிக்கைங்கற பேருல லஞ்சம் குடுக்கறவங்க தான் நாம்
6 கோபப்படறவனைக்கூட நம்பிடலாம் ஆனா நம்ம மனசுல நம்பிக்கை விதைக்கற மாதிரி பேசறவங்களை நம்ப முடியாது
7 பொண்ணுங்களுக்கு மட்டும் ஏன்டா இப்டி நடக்குது..?',
'ஏன்னா அவங்க பொண்ணுங்க'
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 விழி ஒளி இழந்த நாயகி வீட்டில் கிச்சன் ரூம்ல இருக்கார். ஹீரோ தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கார் அவரே தண்ணி முகண்டு குடிச்சிருக்கலாம், ஹால்ல இருந்து கிச்சன் ரூம் வந்து ஏம்மா குடிக்க தண்ணி கொண்டு வா அப்டினு சொல்லிட்டு மறுபடியும் ஹாலுக்குப்போய் உக்காந்துக்கறார் அட விளங்காதவனேனு திட்டத்தோணுது
2 கொலை நட்ந்த இடத்துக்கு போலீஸ் ஆஃபீசர் வர்றார். அவரோட கான்செண்ட்ரேசன் பூரா அவரோட ஃபோன் காலில் தான் இருக்கு . சம்சாரம் கூட பேசிட்டே ஏனோதானோனு டெட்பாடியப்பார்க்கறார்
3 கொலை நடந்த ஸ்பாட்க்கு யாரையும் போலீஸ் அலோ பண்ணாது ஏன்னா கை ரேகை தடயங்கள் சிதைஞ்சிடும், ஆனா இந்த லூஸ் ஆஃபீசர் ஹீரோவையும் நண்பனையும் ஸ்பாட்க்கே வரசொல்லி டெட் பாடி பக்கத்துலயே நிக்க வெச்சு பேசிட்டு இருக்கார் நல்ல வேளை செல்ஃபி ஏதும் எடுக்கலை
4 கொலை நடந்த வீட்டில் சில சாட்சிகளை ச்ந்தேகப்படுபவர்களை விசாரிக்கும் போலீஸ் ஆஃபீசர் கடனுக்கு / க்டமைக்கு விசாரிக்கற மாதிரிதான் இருக்கு . அவங்க சொல்றதை எல்லாம் அப்படியே நம்பிக்கறார் ஒரு க்ராஸ் கொஸ்டீன் கூட இல்லை
5 படத்துல வர்ற மொத்தமா 41 கேரக்டர்ல 38 கேரக்டர்களும் எப்போப்பாரு தம் டிக்குது தண்ணி அடிக்குது டீ குடிக்குது அந்த டைம் ட்யூரேசனை கட் பண்ணாலே 20 நிமிசம் மிச்சம்
6 கொலை செய்யப்பட்ட பணக்கார நண்பனின் இன்னொரு நண்பன் மெக்கானிக் ர்வியைத்தேடி அவர் ஃபோன் நெம்பருக்காக காடு மலை எல்லாம் அலைஞ்சு 500 கிமீ தண்டமா ஹீரோ சுத்திட்டு இருக்கார் . டெட் பாடி கிட்டே இருக்கற செல் ஃபோனை போலீஸ் பர்மிசன்ல வாங்கி காண்டாக்ட் லிஸ்ட்ல மெக்கானிக் ரவி அப்டினு சர்ச் பண்ணா ஈசியா வேலை முடிஞ்சிருக்கும் படத்துல 25 நிமிசம் மிச்சம்
7 போலீஸ் ஆஃபீசர் க்ளைமாக்ஸ்ல போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணி இவரு எங்கே இருக்கார் என எந்தத்தகவலும் சொல்லாம “ அக்யூஸ்ட் மாட்டிக்கிட்டான் உடனே ஸ்பாட்க்கு வாங்க அப்டிங்கறார் உடனே போலீசும் வ்ருது அந்த ஸ்பாட் எப்படி தெரிஞ்சுது ?
8 ஒரு சீன் ல பந்தி ப்ரிமாறி இருக்காங்க எதிர் எதிரே 2 பந்தி இரண்டுக்கும் இடையே ஒரு அடி இடைவெளி கூட இல்லை பந்தி பரிமாறுபவங்க எப்படி அந்த வழில போக முடியும் > செட்டப் பந்தி மாதிரியே இருக்கு
9 ஒரு சீன்ல ஹீரோவும் அந்த அனாதை சிறுமியும் மழைல 5 நிமிசம் நனையறாங்க அப்டியே நடந்து வந்து ரூம்க்கு வரும்போது நனைஞ்ச சுவடே இல்லை
10 போன பாகத்துல ரோகினி என் பொண்ணைக்காட்டாத டாக்டர் இல்லை போகாத ஹாஸ்பிடல் இல்லை ஆனா பார்வை கிடைக்கலைனு சொல்லி இருப்பார் இந்த பாகத்துல ஹிரோ ஒண்ணும் பிரச்சனை இல்லை உனக்கு பார்வை வந்திடும் டாக்டரே சொல்லிட்டார்னு அடிச்சு விடறாரு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுமாரான த்ரில்லர் மூவி பார்க்கனும்னா பாருங்க விக்டன் மார்க் 40 ரேட்டிங் 2/ 5