Showing posts with label ஜாலி. Show all posts
Showing posts with label ஜாலி. Show all posts

Tuesday, January 08, 2013

மூன்று பேர் மூன்று காதல் - இயக்குநர் வஸந்த் ஜாலி பேட்டி

http://www.starmusiq.com/movieimages/Moondru-Per-Moondru-Kaadhal_B.jpg

அர்ஜுன் எனக்கு சீனியர். சேரன் எனக்குக் கொஞ்சம் ஜூனியர். இந்த சிச்சுவேஷன் எனக்குப் புதுசு. ஏன்னா, இப்போ இருக்கும் அஜித் வேற. 'ஆசை’ சமயத்துல அஜித் வேற. அதே மாதிரிதான் 'நேருக்கு நேர்’ சமயம் விஜய், சூர்யாவும். என் படத்துல நடிச்ச பிறகுதான் பலருக்கு ஸ்டார் அந்தஸ்து வந்துச்சு. ஆனா, ஸ்டார் அந்தஸ்தோட இருந்த ஹீரோவை நான் முதன்முதலா இயக்கினது 'ரிதம்’ படத்தில்தான். அப்ப அர்ஜுன் செம ஆக்ஷன் கிங். ஆனா, 'ரிதம்ல ஆக்ஷன் இருக்காது. ஆக்டிங் மட்டும்தான்’னு ஆரம்பத்திலேயே ஓப்பனா சொல்லிட்டேன்.  



சேரன் எனக்கு ரொம்பப் பிடிச்ச டைரக்டர். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. அது இப்போ அழகா நிறைவேறி இருக்கு. ஓ.கே. எல்லாரும் காதல்பத்திப் பேசலாமே. படத்தோட காதல் இல்லை... அவங்கவங்க காதல்பத்தி!'' என்று சொல்லிவிட்டுக் குறும்பாகக் கண்ணடித்தார் வஸந்த்.    



''இப்பவும் நான் சொல்லிக்கிறேன்... நான்தான் இங்கே ரொம்ப பொடிப் பையன். அதனால, சீனியர் அர்ஜுன் சார் இப்போ பேசுவார். அவரு எதுல சீனியர்னு கேட்கக் கூடாது. எல்லாத்துலயுமே அவர்தான் சீனியர்!'' என்று இப்போதும் விமல் செம ஸ்கோர் செய்து ஒதுங்கிக்கொண்டார்.



''என்ன இப்படி மாட்டிவிடுறீங்க? எனக்கும் ஒரு லவ் இருந்துச்சு. ஆனா, அதை இப்ப சொன்னா வீட்ல மாட்டிக்குவேனே. சரி... பரவாயில்லை. இருபது வருஷத்துக்கு முன்னாடி ஷூட்டிங்ல ஒரு அப்பாவிப் பொண்ணு. பார்த்த நிமிஷமே எனக்குப் பத்திக்கிச்சு. பாரதிராஜா சாரோட 'கல்லுக்குள் ஈரம்’ படத்துல வர்ற மாதிரி. அப்ப நான் ரொம்பச் சின்ன பையன். அது ஒரு கிராமத்துப் பொண்ணு. ரெண்டு மூணு வாரம் க்ரஷ்ல திரிஞ்சேன். அப்புறம் அது அப்படியே மறைஞ்சுருச்சு. இப்ப காதல்னா, அது இந்தியா மேல மட்டும்தான். ஆனா, நான் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடினப்ப 'சினிமாக்காரனுக்குப் பொண்ணு தர மாட்டேன்’னு சொன்னவங்கதான் அதிகம். அந்த விஷயத்துல பரவாயில்லை விமல்... நீ கெட்டிக்காரன். காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட!'' என்று விமல் முதுகில் செல்ல மாகத் தட்டிக்கொடுக்கிறார் அர்ஜுன்.


http://mmimages.maalaimalar.com/Articles/2012/Dec/3fe32aac-d24d-4db5-9c15-377b826bbbdf_S_secvpf.gif



''அதுக்கு நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும். இப்போ வஸந்த் சார் அவரோட காதல்... ஸாரி காதல்கள் பத்திச் சொல்லுவார்!'' என்று விமல் அறிவிக்க, ''கொன்னு... கொன்னு'' என்று ஒற்றை விரல் காட்டி மிரட்டிவிட்டுப் பேசத் தொடங்கினார் வஸந்த்.


''எந்த விஷயத்துல அதீத ஆர்வமா இருக்கீங்களோ அல்லது யார் மேல எல்லாம் அதீத அன்பு செலுத்துறீங்களோ... அதுதான் லவ். அர்ஜுனைப் பாருங்க. சினிமாவுக்கு வந்து இத்தனை வருஷம் கழிச்சும் உடம்பை எவ்ளோ ஃபிட்டா வெச்சிருக்கார். அது அவர் தொழில் மேல அவருக்கு இருக்கிற லவ். சேரனுக்கு டைரக்ஷன் மேல லவ். எந்த நேரமும் எதையாவது யோசிச்சுக்கிட்டே இருக்கார். எனக்கு சினிமா மேல காதல். அது போக, என்ன சொல்ல... பெண்கள் மேல காதலே இல்லைனு சொல்ல முடியாது. ஆனா, அதுக்காக அதை இங்கே சொல்ல முடியாது. என்ன சேரன் கரெக்டா?''



''ரொம்பச் சரி... ஆனா, நீங்க பண்ண இன்னொரு விஷயம் ரொம்ப தப்பு. படத்துல எனக்கும் ஒரு காதல் இருக்குனு சொன்னீங்க. நானும் ஆசை ஆசையா வந்து நின்னா, கடைசி வரை என் ஜோடிகூட ஒரு வார்த்தைகூடப் பேசவிடலை. என் மேல உங்களுக்கு என்ன சார் கோபம்?'' என்று சேரன் பரிதாபமான குரலில் கேட்க, வெடித்துச் சிரித்துவிட்டார்கள் மூவரும்.  


''ஆனா, காதல் எந்த வயசுலயும் வரும். அதுவும் நம்ம கருத்தோட செட் ஆகுறவங்களோட அதிகமா வரும். அம்பது வயசுக்கு மேலயும் வரும். மத்தபடி வாழ்க்கையில ஒரே ஒரு முறைதான் காதல் பூக்கும்கிறதெல்லாம் சும்மா. அது பாட்டுக்கு அப்பப்ப பூத்துக்கிட்டே இருக்கும். அதுவும் வஸந்த் சார் மாதிரி ஆட்களுக்குஎல்லாம் தினம் தினம்கூடப் பூக்கும். ஏன்னா, பூமிக்கு அனுப்பப்பட்ட காதலின் கொள்கை பரப்புச் செயலாளர்கள்ல வஸந்தும் ஒருவர்!'' என்று சேரன் நிறுத்த, அதற்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று புரியாமல் சிரித்த வஸந்த், பிறகு சமாளித்துப் பேசத் தொடங்கினார்.  



''இதுதான் சேரன். மனசுல பட்டதைப் பளிச்னு பேசிடுவார். ரொம்ப ஓப்பன் டைப். எல்லாரும் சேரன் சீரியஸான ஆளு... ஹேண்டில் பண்றது கஷ்டம்னு பயமுறுத்தினாங்க. ஆனா, அவர் என்னைவிட செம ஜாலி பார்ட்டி. நாகர்கோவில்ல ஷூட்டிங். பரபரனு வேலை பார்த்துட்டு இருக் கோம். எனக்குத் தாடியை ட்ரிம் பண்ணக்கூட நேரம் இல்லை. திடீர்னு சேரன் என்னைக் கூப்பிட்டு வம்பா உட்காரவெச்சு, 'அளவா இருந் தாத்தான் அது வஸந்த் தாடி’னு சொல்லிட்டு, அவரே ட்ரிம் பண்ண ஆரம்பிச்சுட்டார். 



இப்போ என்னோட நெருக்கமான நண்பர்கள் பட்டியலில் சேரனுக்கும் ஒரு இடம் இருக்கு!'' என்று நெகிழ்ந்த வஸந்தை இறுக்கி அணைத்துக்கொண்டார் சேரன்.


''ஓ.கே. எல்லாம் சூப்பரா முடிஞ்சிருச்சு. இப்போ அப்படியே வெளியே கிளம்பிப் போய் டீ, காபி, வடை, பஜ்ஜினு சில ஃபார்மாலிட்டீஸ் மட்டும் முடிச்சுட்டா, நான் கிளம்பிருவேன்!'' என்று விமல் எண்ட் கார்டு தட்ட, சட்டெனச் சுதாரித்தார் சேரன்.


http://www.nakkheeran.in/AllImages/Gallerys/33751_1.jpg



''டேய்... நானும் ஆரம்பத்துல இருந்து பார்த்துட்டே இருக்கேன். எஸ்கேப் ஆகிட்டே இருக்கே. நீ இப்ப ஏதாச்சும் உண்மை பேசியே ஆகணும். இல்லைன்னா உன்னை விடுறதா இல்லை!'' என்று சேரன் மிரட்ட,


''சார்...  நான் அவ்ளோ வொர்த் இல்லை சார். நான் பொறந்த ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துல இருந்த தியேட்டருலதான் 'கேளடி கண்மணி’ படம் ஓடிட்டு இருந்துச்சு. கைக்குழந்தையா இருந்தப்ப அந்தப் பட வசனங்கள்தான் எனக்குத் தாலாட்டு. அப்படி வளர்ந்த நான், இப்ப எப்படி டைரக்டர் முன்னாடி பேசுறதுன்னுதான் கூச்சப்பட்டு ஒதுங்கி நிக்கிறேன்!'' என்று விமல் டபாய்க்க,
''அடப்பாவி... நான்லாம் அப்ப பொறக்கவே இல்லையே!'' என்று அர்ஜுன் சதாய்க்க... அப்புறம் அங்கே நடந்தது... நான்கு பேர்... நான்கு மணி நேர அரட்டை!


நன்றி - விக்டன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqx_fST3LZM3AWmPgpU7Y1B46cERZdgo8V4V2ch9gOIBRAUKiNQbyY-YdT51fRWY0QAPA3bjgW0u4IEE3n2AXOd0iUm8ualKLft8_vcRmMjuFKZUeBH72e-meeqDIFPp0RPdEfECH0rBh4/s1600/5.jpg

Tuesday, January 01, 2013

யாருடா மகேஷ்? - இயக்குநர் மதன் ஜாலி பேட்டி

http://news.moviegalleri.net/wp-content/uploads/2012/11/yaaruda_mahesh_tamil_movie_stills.jpg

எங்கடா அந்தக் கதை?

க.ராஜீவ்காந்தி
து ஒரு படத்தின் டிரெய்லர். திரையில் இருள். பின்னணியில் குரல்.


   ''ஏய்... கொஞ்சம் காட்டேன்...''


- ஆண்.

  ''ச்சீய்...'' - பெண்.

  ''கொஞ்சம் காமியேன்...''

  ''போடா!''

  ''யாரும் பார்க்க மாட்டாங்க, நான் மட்டும் பார்த்துக்குறேன்.''


''சரி, பார்த்துத் தொலை!''


காட்சி தெரிகிறது. தேர்வு அறையில் பெண்ணின் விடைத்தாளைப் பார்த்து ஹீரோ காப்பி அடிக்கும் காட்சி. டிரெய்லர் முழுக்கவே குறும்புச் சேட்டைகள். 5 லட்சம் ஹிட்கள் தாண்டிக் கதறடிக்கிறது 'யாருடா மகேஷ்?’ பட டிரெய்லர். படத்தின் இயக்குநர் மதனைச் சந்தித்தேன்.


  ''யாருங்க நீங்க?''



''சும்மா ஜாலி கேலி ஃப்ரெண்ட்ஸ். நான் யார்கிட்டயும் அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கலை. சில விளம்பரப் படங்களில் வேலை பார்த்திருக்கேன். ஒரு கேரக்டர் அடிக்கடி எல்லாத்தையுமே மறந்தா என்ன ஆகும்? இதுதான் படத்தின் ஒன் லைன். இதை ஒரு குறும்படமா பண்ண லாம்னுதான் ஐடியா. ஆனா, அதுக்கான வேலைகள் ஆரம்பிச்சப்போ, சினிமாவே பண்ணிரலாம்னு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துட்டோம். 



 ஹீரோவுக்கு சின்னச் சின்ன மறதிகள். என்ன பரீட்சைன்னே தெரியாம, எக்ஸாம் ஹால்ல போய் உட்காருவான். பயங்கர சோம்பேறி, டெட் ஸ்லோ கேரக்டர். அவனுக்கு ஒரு காதல் வருது. அந்தக் காதல் அவனை எப்படி புத்தி சாலியா மாத்துது. மகேஷ் என்ற கேரக்டரை ஹீரோ இன்டர்வெல்ல தேட ஆரம்பிப்பான். இதுதான் கதை. இன்டர்வெல்லதான் டைட்டில் கார்டே போடுவோம்!''



'' 'ரத்னவேலுவை ராண்டினு சொல்றோம். அப்ப குழந்தைவேலுவை..?’ எந்தத் தைரியத்தில் இப்படி வசனம் வைக்கிறீங்க? சென்சார் பயம் இல்லையா?''
''இந்த வசனம் டிரெய்லர்ல செம ஹிட். ஆனா, படத்துல மியூட் ஆகிடும். படம் முழுக்க ஜாலி சேட்டை மட்டும்தான். யார் மனசையும் புண்படுத்தும் எண்ணம் எங்களுக்குச் சத்தியமா இல்லை. இத்தனைக்கும் முடிஞ்ச அளவுக்கு எங்களை நாங்களே கன்ட்ரோல் பண்ணித்தான் டயலாக் வெச்சிருக்கோம். 



எல்லாக் கிண்டலும் எல்லாரும் ரசிக்கிற மாதிரிதான் இருக்கும்.
ஹீரோ சந்தீப், தெலுங்குல நான்கு படங்கள் நடிச்சிருக்கார். ஹீரோயின் டிம்பிள், புனே பொண்ணு. 'நண்டு’ ஜெகன், சுவாமிநாதன், ஸ்ரீநாத், லிவிங்ஸ்டன்னு பெரிய காமெடிப் பட்டாளமே இருக்கு. 



ஒரு சீன்ல ஜெகன் தூங்கி எந்திரிச்சுப் பார்த்தா, பக்கத்துல ஜட்டியோட ஹீரோ படுத்திருப்பான். அந்த சீன்ல நாங்க டயலாக்கே வைக்கலை. ஆனா, ஜெகன் டைமிங்கா, 'என்னை என்னடா பண்ணே..? நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பையன்டா’னு பேச, அதை டயலாக்ல சேர்த்துட்டோம். ஜெகனுக்கு இந்தப் படம் பெரிய பிரேக்கா இருக்கும்!''




http://mimg.sulekha.com/tamil/yaaruda-mahesh/stills/yaaruda-mahesh-film-029.jpg



''ஹீரோயின் எப்படி டபுள் மீனிங் வசனம் பேச ஓ.கே. சொன்னாங்க?''



''அவங்களுக்குத் தமிழ் புரிஞ்சாதானே கேள்வி கேட்க? அர்த்தத்தை மாத்திச் சொல்லி ஷாட்ல பேசவெச்சோம். யூனிட்ல எல்லாரும் சிரிக்கும்போது கண்டுபிடிச்சுக் கேட்பாங்க. சமாளிச்சுடுவோம். படத்துக்கு யார் வந்தாலும், ஒரு 20 வயசு இளைஞனா நினைச்சுட்டு வந்து பாருங்க. புதுசா எந்த முயற்சியும் பண்ணலை. ஆனா, படம் முழுக்க ஜோக் ஜோக்கா இருக்கும். தவிர, படத்துல கதைனு ஒண்ணு இருந்தா... நீங்களே கண்டுபிடிச்சு எங்களுக்கும் சொல்லுங்க!''

thanx - vikadan



http://kollytalk.com/posters/wp-content/uploads/2012/12/Yaaruda-Mahesh-Songs-Hit-Poster.jpg


நன்றி -விக்டன் 



கலக்கல் ட்ரெய்லர் 




Sunday, September 12, 2010

ஆணியே பிடுங்க வேணாம்னா என்ன அர்த்தம்?

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட ..

கடைசில என்னை வேடிக்கை பார்க்க வெச்சுட்டீங்களே?

两只钉子的故事
两只钉子的故事


ஊடல் எனபது காதலின் சுவராஸ்யம்,கூடல் என்பது ராத்திரி ரகஸ்யம்.

两只钉子的故事

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் மீதே ஆடலாம் பாடலாம்
两只钉子的故事சாம்பியன் ஆகிட்டா இந்தியக்குடிமகன் இல்லைனு சொல்லிடுவாங்களோ?

两只钉子的故事மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா

两只钉子的故事சாமி படம் பாக்க வேணாம்னு சொன்னேன்,கேட்டியா?
两只钉子的故事எந்திரன் படம் ரிலீஸ் அன்னைக்கே கூட்டிட்டுப்போகனுமா?நான் என்ன ஜமீன் பரம்பரையா?
两只钉子的故事

வாழ்க்கைல படிப்படியா முன்னுக்கு வரனும்,காதல்ல படப்படனு முன்னுக்கு வரனும்.
两只钉子的故事

புவனா ஒரு கேள்விக்குறி,பாவனா ஒரு குணச்சித்திரப்பரி