இப்போ இருக்கும் அரசியல்வாதிகள் அப்படித்தான் நாட்டில் ஏதாவது பிரச்சனை ஓடுச்சுன்னா அதை டைவர்ட் பண்ண வேற ஒரு புதுப்பிரச்சனையைக்கிளப்பி விடுவாங்க நம்ம மக்களும் பழசை மறந்துடுவாங்க . இதை பேஸ் பண்ணி எழுதபப்ட்ட ஒரு பொலிடிக்கல் த்ரில்லர் அல்லது க்ரைம் த்ரில்லர் அல்லது கோர்ட் ரூம் டிராமா எப்படி வேணாலும் சொ9ல்லலாம்
ஸ்பாய்;லர் அலெர்ட்
கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவம் இது . காலேஜில் ஒரு லெக்சரர் மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடக்கிறார். அது சாலை விபத்தா ? ஹிட் அண்ட் ரன் கேசா? என்று தெரியாது ஆனா மீடியாக்கள் ரேப் அண்ட் மர்டர்னு அடிச்சு விடறாங்க . பரபரப்புக்காக ஏதாவது எழுதுவது அவங்க வழக்கம் தானே? இதனால காலேஜில் ஸ்ட்ரைக் வருது போலீஸ் வந்து காலேஜில் கலவரம் வெடிக்குது
கொலையை நேரில் பார்த்த சாட்சி கொடுத்த தகவல் அடிப்படையில் இந்தக்கேசை விசாரிக்கும் போலீஸ் ஆஃபீசர் நாலு பேரை கைது செய்கிறார் . அவங்க என்னடான்னா எகத்தாளம் பேசறானுங்க . சாதா கான்ஸ்டபிள்ட்ட நக்கல் பண்ணாலே பொளந்து கட்டிடுவார் , ஹையர் ஆஃபீசர்னா சும்மாவா? செம கடுப்பாகி என்கவுண்ட்டர்ல 4 பேரையும் போட்டுத்தள்ளறார்
மீடியாக்களும் பொதுமக்களும் போலீஸ் ஆஃபீசரைக்கொண்டாடறாங்க
கோர்ட்ல கேஸ் நடக்குது . அப்போதான் பெரிய ட்விஸ்ட். இதுவரை நாம பார்த்த கேட்ட கதையே வேற அதுக்குப்பின் ஹீரோவான லாயர் எடுத்து வைக்கும் உண்மை நிலையே வேற ஷாக் அண்ட் சர்ப்பரைஸ்
காலேஜில் நடக்கும் பாலிடிக்ஸ் , பாலியல் வன்கொடுமை , அதிகார துஷ்பிரயோகம் பற்றி விலாவாரியாக விளக்குகிறது
போலீஸ் ஆஃபீசரா சுராஜ். என்னா ஒரு ஆக்டிங் . அதிகம் பேசாத உணர்ச்சிகளை முகத்தில் காட்டாத இறுக்கமான நடிப்பு சபாஷ் ஆக்டிங் . மகன் மீது பாசம் காட்டும் போதும் சரி , ட்யூட்டியில் காட்டும் விறைப்பும் சரி , பின் பாதியில் கில்ட்டி ஃபீலிங்கில் தவிப்பதும் சரி அபாரமான நடிப்பு
ஹீரோவா , லாயரா பிரித்விராஜ் . ஒற்றை ஆளாக கோர்ட் வளாகத்தையே லீசுக்கு எடுத்தவர் போல் அவர் கர்ஜிக்கும்போது மிரட்டலான நடிப்பு . கொலை செய்யப்படும் பேராசிரியை ஆக மம்தா மோகன் தாஸ், போராட்ட வீராங்கனையாக புரட்சி பேசும் வசனங்கள் ல மின்னுகிறார்
ஒளிப்பதிவு , இசை, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் முதல் தரம்,
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங்கில் வரும் காலேஜ் ஸ்ட்ரைக் கொஞ்சம் ஓவர் டோசோ என எண்ண வைத்து பின் பாதியில் அதற்கு நியாயம் கற்பிக்கும் திரைக்கதையில் சபாஷ் வாங்குகிறார்
2 சுராஜ் , பிருத்விராஜ் இருவரின் கேரக்டர் ஸ்கெட்ச் அபாரம் , டிரைவிங் லைசென்ஸ் படத்தில் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆன ஜோடியை மீண்டும் இனைத்தது அதை ஓவர் டேக் பண்ணியது எல்லாம் அருமை
3 எடிட்டரின் உதவியோடு இயக்குநர் செய்த நான் லீனியர் கட் திரைக்கதையின் சுவராஸ்யத்தை அதிகப்படுத்துது
4 ஆளும் கட்சி அரசியல் விவகாரத்தை எந்த விதமான மேல் பூச்சுகளும் இல்லாமல் போல்டாக காட்டிய விதம்
5 முக்கியமான கதாபாத்திரங்களின் நடிப்பு , கோர்ட் சீன்கள் அடிபொலி
ரசித்த வசனங்கள்
1 சில முக்கியமான சந்தர்ப்பங்கள் , அரிதிலும் அரிதான வாய்ப்புகள் ரெண்டு தடவை கதவைத்தட்டாது
2 காக்கி டிரசை மானத்தை மறைக்க உடுத்தலை சட்டத்தைக்காப்பாற்ற
3 உண்மையை சொல்லும் மீடியா , மீடியா சொல்றதுதான் உண்மை இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு
4 அரசியல்வாதிகளின் ஆயுதம் எது தெரியுமா? சாமான்ய மக்களின் உணர்ச்சிகள்
5 ஒரு நாயைக்கொன்னாக்கூட கேள்வி கேட்க நாலு பேரு வருவாங்க , ஆனா மனுசங்க நாலு பேரைக்கொலை செஞ்சா கேள்வி கேட்க ஒரு நாயும் வர்றதில்லை
ள
6 கேலரில உக்காந்து கமெண்ட் அடிக்கறது ஈசி , களத்துல இறங்கி போராடுவதுதான் கஷ்டம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள் \\
1 க்ளைமாக்ஸில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் . அதை எல்லாம் ஒரேயடியாக கடைசி 20 நிமிடத்தில் தருவது ஓவர் ஃப்ளோவா பட்டுது
2 ஒரு ஹையர் ஆஃபீசர் சாதா கான்ஸ்டபிள் ஒட்டுக்கேட்பது போல அவளோ அசால்ட்டாகவா மேலிட ஃபோன் உரையாடலை வெச்சுக்குவார் ?
3 என்கவுண்ட்டர்ல சுடறவங்களை முதுகில் பின்னந்தலைல தான் சுடுவாங்க , நெஞ்சில் சுடுவாங்களா?
4 கோர்ட்டில் பிரித்விராஜ் கொஞ்சம் ஓவர் டோசாக ஆர்க்யூ பண்ணுவது மாதிரி தான் தோணுது . ஜட்ஜ் முன் அப்படி எல்லாம் குரலை உயர்த்திப்பேச முடியாது . யதார்த்த சினிமா எடுக்கும் கேரளா இண்டஸ்ட்ரிலயா இப்படி ? ரஜினி , சிரஞ்சீவி படங்களில்னா யாரும் கண்டுக்க மாட்டாங்க
5 ஆளும் கட்சி தலைவரின் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்த ஒரு என்கவுண்ட்டர் எப்படி பயன்படும் ? பொலீஸ் இலாகா முதல்வர் கைல தானே இருக்கு ? அவங்க மேல ஒரு தப்புன்னா அது முதல்வருக்கு கெட்ட பேருதானே ?
சிபி எஸ் ஃபைனல் கமெண்ட் = ரெண்டே முக்கால் மணி நேரம் போர் அடிக்காமல் பர பரப்பான ஒரு த்ரில்லர் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம், நெட் ஃபிளிக்சில் கிடைக்குது ரேட்டிங் 3.25 / 5 .இந்தப்படம் தமிழில் ரீமேக்காகி இதே மாதிரி எடுத்தால் விக்டன் மார்க் 50