Showing posts with label சோ. Show all posts
Showing posts with label சோ. Show all posts

Wednesday, March 07, 2012

துக்ளக் சோ அவர்கள் மனைவி திருமதி சௌந்தரா. பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4AiCDOCQ_dT6i50rl0h-YRWhyphenhyphenGnpU04A28B-jw5xwpMYOmRuYHy4JAM7wigW6Qxc1qfHwP0_KbAqIi8pN9lbJHIpBwCud19WTxrIK4BAe71Yj741yS8rb8qaS0Zhn5Jm9QZzBb8nmjpY/s400/jeyacho.bmp 

நான் துக்ளக் பத்திரிகையின் ரசிகை!'' என்கிறார் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் திரு. சோவின் மனைவி திருமதி சௌந்தரா.


சி.பி - அடடா.. நான் பெண் வாசகிகளை மதிப்பதும் இல்லை, அவர்களை கண்டு கொள்வதும் இல்லைன்னு சோ சொன்னாரே.. அது உங்களைவெச்சுத்தானா?

 
 ''அவர் அஷ்டாவதானிபோல் பல தொழில்களில் ஈடுபட்டு இருந்தாலும், எனக்கு என்னமோ பத்திரிகை ஆசிரியரா அவர் ஈடுபட்டு இருப்பதுதான் நிறைவைத் தருகிறது. அதிலும் அவர் ஆளும் கட்சியை நாசூக்காகக் குத்திக்காட்டி எழுதும் பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!'' 



சி.பி - என்னங்க இப்படி சொல்லீட்டீங்க? எனக்கென்னவோ அவர் நாடக் ஆசிரியரா, காமெடி வசனம் எழுதறவரா இருக்கறதுல தான் அதிக திறமை வெளிப்படுத்துன்னு தோணுது..  பத்திரிக்கைல என்ன பண்றார்? கலைஞரை, காங்கிரசை திட்டி ஜெவை, பி ஜே பியை ஆதரிக்கறார்.. அது ஈசி வேலை ஆச்சே.? 



''துக்ளக் பத்திரிகை வந்தவுடன், முதலில் எதைப் படிக்க ஆவலாக இருப்பீர்கள்?''


''அட்டைப் பட கார்ட்டூனை ரசித்துவிட்டு, நான் பரபரப்புடன் பக்கங்களைத் தள்ளிப் பார்ப்பது கேள்வி-பதில் பகுதியைத்தான். நான் மிகவும் ரசித்துப் படிக்கும் பகுதி அது.''


 சி.பி - அதானே? சமையல் குறிப்புத்தான் வர்றதில்லையே? அடுத்தவங்க என்ன பேசிக்கறாங்க அப்படின்னு ஒட்டுக்கேட்கறதுலதான் பெண்களுக்கு எவ்வ்வள்வு ஆர்வம்? துக்ளக் சத்யாவின் கார்ட்டூன் கிண்டல்கள் தான் பெரும்பாலான வாசகர்களின் முதல் சாய்ஸ்


'' 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்நாடகத்தைப் பார்த்தீர்களா?'' என்று கேள்வி கேட்ட உடனேயே, ''! நான்கூட சுதந்திய தாகம் டாமா பாத்தேன்...'' என்று மழலை மொழியைச் சிந்தியபடி நடந்து வருகிறாள் சோவின் மகள் சிந்துஜா.


''டிராமாவிலே அப்பா எப்படி வர்றார்?''


''உம்... உம்... கையில பூ கட்டிண்டிருக்கா. மேக்-அப் போட்டுப்பா... டாமாவிலே உள்ளே போவா... வெளியே வருவா...'' என்று அவள் சொல்லச் சொல்ல, திருமதி சோ தன் மகளைப் பெருமையுடன் அணைத்துக்கொள்கிறார்.


''இவள் அப்பா மாதிரியே... இன்டெலிஜென்ட்... சுறுசுறுப்பு எல்லாமே. சிந்துஜா, அப்பா மாதிரி 'துக்ளக்நடை நடந்து காட்டு'' என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னரே, ''அப்பா இப்படித்தான் நடப்பா...'' என்று குதித்து நடந்து காண்பிக்கிறாள்.


''ஆபட்ஸ்பரியில் நடந்த துக்ளக் கருத்தரங்குக்கு வந்திருந்தீர்களா?''

http://www.vinavu.com/wp-content/uploads/2012/02/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B.jpg


''ஓ... வந்தேனே. ஆனா, கடைசியிலதான் என்னால வர முடிஞ்சது. கருத்தரங்குக்கு வந்திருந்தவங்களைப் பார்த்துப் பிரமிச்சுட்டேன். இந்தச் சின்ன வயசுல அவருக்கு இவ்வளவு பெரிய அளவில் மக்களின் அன்பு இருக்கிறதைப் பார்த்துதான் பூரிச்சுப்போயிட்டேன். பெருமையும்படறேன். ஆனால் அதே சமயத்திலே, ''இனிமே இவர் இன்னும் இது மாதிரி கருத்தரங்குகள் நடத்தணும்... நிறையக் கூட்டம் வரணும்... யார் கண் திருஷ்டியும் படாம இருக்கணும்னு உடனே ஆண்டவனை வேண்டிக்கிட்டேன். இன்னமும் வேண்டறேன்.


துக்ளக் இன்னும் நல்லா... தமாஷா இருக்கணும். லேடீஸைப் பொறுத்தவரை இது எல்லாருக்கும் பிடிச்சிருக்கு... இங்கிலீஷ்ல வெளி வந்தாக்கூட நல்லதுதான். மொத்தத்துல இது ஒரு அகில உலகப் பத்திரிகை ஆகணும்னு எனக்கு ரொம்ப ஆசை.''


சி.பி - அதுக்கு சோ ஆல் ஓவர் வோர்ல்டு பெருந்தலைகளை திட்டனும். அவருக்கு கலைஞரை திட்டவே டைம் பத்த மாட்டேங்குது. 

''துக்ளக் பறிமுதலைப் பற்றி...''


''என்னவோ பண்ணப்போறாங்கனு இரண்டு நாளைக்கு முன்னாடியே வதந்திகள் நிறைய வந்தன. பறிமுதல் செய்த அன்னிக்கு இவர் விடியற்காலையிலேயே எழுந்து போயிட்டார். இவர் தீர்மானிச்சு செய்ற எந்தக் காரியமும் நல்ல படியா முடியும்கிற நம்பிக்கை எங்க எல்லாருக்கும் உண்டு. அதனால நாங்க கொஞ்சம்கூடப்  பயப் படலை!'' என்று கணவர் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் திருமதி சோ.


''நிறைய டெலிபோன் கால்கள் வந்துஇருக்குமே?''


''லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட பத்திரிகை ஆசிரியராயிற்றே... வராமலா இருக்கும்? ஒரு நிமிஷத்துக்கு ஒரு போன் கால் வந்துட்டே இருக்குது. அதிலும் குறிப்பா நிறைய லேடீஸ்தான் போன் பண்றாங்க. அவங்க என்னைக் கூப்பிட்டுச் சொல்றதெல்லாம், 'இதுக்கு சரியான 'ஆக்ஷன்எடுக்கணும்’, 'இது ரொம்ப அநியாயம்...’ எல்லாரும் தவறாம சொல்ற ஒரு வார்த்தை: 'உங்க கணவரை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க!’ அவர்களுடைய அன்பை நினைத்துக் கண் கலங்கினேன்...'' என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார் திருமதி சோ.




''மொத்தத்திலே துக்ளக்கைப் பறிமுதல் செய்ததால, அவருடைய பத்திரிகைக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. தமிழ்நாடு மட்டும்அல்ல, வட நாட்டிலே உள்ள எல்லாப் பத்திரிகையிலேயும் இதைப் பற்றி வந்திருக்கு. இப்போ அவர் அகில இந்தியாவுக்கும் தெரியற 'பிக் பெர்சனாலிட்டிஆயிட்டாரு. இந்தச் சமயத்துல இன்னும் இரண்டு மூன்று புதிய பகுதிகளைச் சேர்த்து, துக்ளக் பக்கங்களை அதிகமாக்கிக் கொண்டுவரலாம்!'' என்று சொல்லிக்கொண்டே எழுந்திருக்கிறார்.


அவரிடம் விடைபெற்று வருகிறோம். வழியில் ஒரு விதமான கலக்கத்துடன் சோவின் தாய் திருமதி ராஜம்மாவைச் சந்திக்கிறோம்.

http://savetnfishermen.files.wordpress.com/2011/06/cho-kalaignar.jpg?w=300


''எல்லோரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டைக் கட்டியிருக்கான். ஆனால், அவனே காலையில போனா ராத்திரி நேரம் கழிச்சுதான் வரான். அவன் வந்து சேர்ற வரை மனசு 'திக்திக்குனு அடிச்சுக்கறது. அவனோட டிராமா, சினிமாவெல்லாம்கூட நான் பார்த்தது இல்லை. ஊரிலே அவனைப் பத்தி எல்லாரும் பெருமையா பேசிக்கறானு சொல்றா. ஜெயமிருக்கும் வரை பயமில்லை - அவன் நன்னாயிருக்கணும்!'' என்கிறார் ஒரு துணிவு மிக்க பத்திரிகையாசிரியரை நமக்குத் தந்த திருமதி ராஜம்மா.

சி.பி - விகடன் பொக்கிஷம் பகுதில பல வருடங்களுக்கு முன்பு வந்த பேட்டி இது

Friday, January 27, 2012

துக்ளக் சோ திடுக் பேட்டி- நான் அரசியல் தரகரா? - விகடன் - காமெடி கும்மி

http://suriyantv.com/wp-content/uploads/2011/12/%E0%AE%9A%E0%AF%8B.jpg 

மிழகத்தைத் தாண்டி பேசப்படும் மனிதராக மாறி இருக்கிறார் சோ. 'துக்ளக்’ ஆண்டு விழாவில், அத்வானியையும் மோடியையும் ஒரே மேடையில் வைத்துக்கொண்டே, ''மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்'' என்று சோ பேசியது, டெல்லி அரசியல் பார்வையாளர்களைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது.

 சி.பி - இதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல, ஏன்னா அத்வானிக்கு தமிழ் தெரியாது, அவருக்கு மொழி பெயர்த்து சொல்றப்ப அந்த மேட்டரை மட்டும் கட் பண்ணிட்டு கூட சொல்லி இருக்கலாம், யாருக்கு தெரியும்? ஹி ஹி

இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா என்ற செயல்திட்டத்தை சோ தொடக்கிவைத்து இருக்கும் நிலையில், வட இந்தியப் பத்திரிகைகள் அவரை 'முதல்வர்களின் ராஜ குரு’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கின்றன. என்ன நடக்கிறது இங்கே?

 சி.பி - இப்படித்தான் சசிகலாவையும், நடராஜனையும் ஜெவின் ராஜ குருக்கள்னாங்க. பொதுவா அரசர்கள் பரம்பரை பரம்பரையா அமைச்சர்களை, மதி யூகி மந்திரிகளை கறி வேப்பிலையா யூஸ் பண்ணிக்கிட்டு தன்னை விட வளருவாங்க என்ற எண்ணமோ, அச்சமோ தோண்றப்ப நைஸா கழட்டி விடுவாங்க..மன்னர்கள் என்றைக்கும் மன்னர்களாகவே இருக்காங்க, ஆலோசகர்கள் என்றென்றும் ஆலோசகர்கள் தான், நீ நல்லா ஆலோசனை கொடுத்துட்டே நன்றி, ஒரு வருடம் நாட்டை ஆண்டு கொள்னு எந்த அரசரும் விட்டுக்கொடுத்ததில்லை


 1. ''சோவுக்கு கிங் மேக்கர் ஆகும் ஆசை வந்துவிட்டதா?''


சி.பி - அண்ணன் ஓப்பனிங்க் கேள்வியே  தப்பா கேட்டுட்டாரு .. க்யூன் மேக்கர் ஆகும் ஆசையா?ன்னு கேட்கனும் ஹி ஹி 


''நான் கிங் மேக்கர் என்றால், கிங் யார்? நீங்கள் மோடியையும் ஜெயலலிதாவையும் மனதில் வைத்துக்கொண்டு கேட்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், ஒருவர் கிங், இன்னொருவர் க்வீன் அல்லவா? (சிரிக்கிறார்).


நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைக் கூறி இருக்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்கு வதில் முட்டுக்கட்டை ஏற்பட் டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!''

சி.பி - குஜராத்தின் வளர்ச்சியை  கணக்கில் கொண்டு மோடியை முன் மொழிவதைக்கூட ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம்.. எந்த அடிப்படைல  எதேச்சதிகாரப்போக்கும்,எவரையும் மதிக்காத ஒரு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், அதீத தன்னம்பிக்கை உள்ள ஜெ வை பரிந்துரைக்கிறார்?இந்த மாதிரி இவர் பேசறப்ப தான் பிராமணர் என்பதாலா? என்ற கேள்வி எழுகிறது.. 


2. ''இந்தியா போன்ற பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு நாட்டின் பிரதமர் நாற்காலியில் அமர மோடி தகுதி ஆனவர் என நினைக்கிறீர்களா?''

சி.பி - அடிமைக்கலாச்சாரமே போதும்னு நினைக்கற சிங்குக்கு இவர் மோசமைல்ல.. 
''குஜராத்தும் பன்மைக் கலாசாரம் மிக்க ஒரு மாநிலம்தான். அங்கும் பல்வேறு மதத்தவர்கள், பல்வேறு சாதியினர் இருக்கத் தான் செய்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக குஜராத்தை மோடி மாற்றி இருக்கிறார். மோடியின் சாதனைகள்தான் அவரை முன்னிறுத்துகின்றன.''


சி.பி - இந்த கருத்துக்கான எதிர் வாதத்தை  யாராலும் முன் வைக்க முடியாது என்று நினைக்கிறேன், குஜராத்தின் வளர்ச்சி பிரமிப்பானது.. 


3. ''மோடி பிரதமரானால், குஜராத்தில் நடந்த வெறியாட்டங்கள் இந்தியா முழுக்க நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?''  


''மதக் கலவரங்கள் என்பது குஜராத்தில் மட்டும்தான் நடந்தது என்பது போல் பேசுவது போலித்தனம். இந்தியப் பிரிவினையில் தொடங்கி எடுத்துக் கொண்டால், எல்லா மாநிலங்களிலும், எல்லாக் கால கட்டங்களிலும் மதக் கலவரங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைக் காட்டிலும் மோசமான கலவரங்கள், அதற்கு முன்போ, பின்போ நடந்தது இல்லை. கோத்ரா ரயில் எரிப்பை மறந்துவிட்டு குஜராத் கலவரங்களைப் பற்றிப் பேசுவது அர்த்தம் அற்றது. அந்தக் கலவரங்கள் கண்டிக்கத் தக்கவை. ஆனால், அதற்குக் காரணம் மோடி அல்ல. கலவரங்களை அடக்கத் துளியும் தாமதிக்காமல் ராணுவத்தை அழைத்தவர் அவர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!''


சி.பி - அதெப்பிடி மோடி காரணம் இல்லைன்னு சொல்ல முடியும்? ஒரு நல்லது நடந்தா அதுக்கு அவர் தான் காரணம்னு பாராட்ற மாதிரி , ஒரு அல்லது நடக்கறப்ப ( கெட்டது) அதுக்கும் அவர் தானே பொறுப்பு? உலகக்கோப்பையை ஜெயிச்சப்ப ஆஹா ஓஹோன்னு பாராட்டுன அதே ஜனங்க, அவர் சில தோல்விகளை சந்திச்சப்ப எதிர் வாதங்களை வைக்கலையா?

http://moonramkonam.com/wp-content/uploads/2011/12/vijayakanth_jayalalitha_59.jpg

4. ''அத்வானியை வைத்துக்கொண்டே மோடியைப் பிரதமராக்க நீங்கள் விடுத்த அழைப்பு, உங்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ். விடுத்த மறைமுகச் செய்தியா?''


''ஆர்.எஸ்.எஸ். அத்வானியிடம் எதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், அதைச் சொல்ல அவர்களிடமே எவ்வளவோ தலைவர்கள் இருக்கிறார்கள். போயும் போயும் என்னிடம் சொல்லி அனுப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.''


சி.பி - காதலை நேரடியா சொல்றதுக்கு முன்னால ஒரு தோழன், அல்லது தோழி மூலமா ஒரு தூது விட்டு ஆழம் பார்க்கறதை  தமிழன் தான் முதல்ல கண்டு பிடிச்சான், அந்த மாதிரிதான் இதுவும்..

5. ''ஒருகாலத்தில் ஊழல் அற்ற நிர்வாகம் என்று சொல்லித்தான் பா.ஜ.க-வை முன்னிறுத்தினீர்கள். ஆனால், இன்றைக்கு நாட்டிலேயே மோசமான முன்னுதாரணமாக கர்நாடகத்தை மாற்றிவிட்டது பா.ஜ.க. இனியும் எப்படி பா.ஜ.க-வைத் தாங்கிப் பிடிப்பீர்கள்?''


''பா.ஜ.க-வில் நீங்கள் இப்படி ஓரிருவர் மீதுதான் குற்றம்சாட்ட முடியும். இந்த நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்தை வழங்கும் குஜராத்தை ஆள்வதும் பா.ஜ.க- தானே? சட்டீஸ்கரில் அவர்கள் மீது புகார்கள் உண்டா? பா.ஜ.க-வின் பெரும் பான்மைத் தலைவர்கள் எந்த ஊழல் புகார் களிலும் சிக்காதவர்கள். ஆனால், காங்கி ரஸில் அப்படிச் சொல்ல முடியாது.''


சி.பி - காங்கிரஸ் பழம்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க கட்சி.. அதனால ஊழல்ல பெஸ்ட்டா விளங்கறாங்க, பி ஜே பிக்கு நாம வாய்ப்பு கொடுத்தா அவங்களும்  பெஸ்ட்டா ஊழல் பண்ணுவாங்க.. அதனால யாரும் காங்கிரஸ் அளவு பி ஜே பி ஊழல் பண்ண முடியலைன்னு  வருத்தப்பட தேவை இல்ல.. 


6. ''சரி, ஜெயலலிதாவை எந்த அடிப்படையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துகிறீர்கள்?''


சி.பி - இது பொதுவான மனிதப்பண்பு தான், தன் ஜாதிக்காரங்க, தனக்கு பழக்கமானவங்களை முன் நிறுத்தறதுல என்ன தப்பு இருக்கு? 
''இந்தியாவில் ஒருவர் பிரதமராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. ஆனால், ஜெயலலிதாவிடம் தேசியச் சிந்தனை இருக்கிறது. ஒருமைப் பாட்டின் மீது அவருக்கு நம்பிக்கை இருக் கிறது. பல மொழிகளை அறிந்தவர் அவர். அதிகாரிகளே மெச்சும் சிறந்த நிர்வாகி. உள்நாட்டுப் பாதுகாப்பிலும் வெளியுறவு விவகாரங்களிலும் அவருக்குத் தீர்க்கமான பார்வை இருக்கிறது. நினைத்ததைச்  சொல்லும், செய்யும் ஆற்றல் இருக்கிறது. மக்களை ஈர்க்கும் ஆளுமை அவரிடம் இருக்கிறது. இப்போது உள்ள பிரதமரிடம் இவற்றில் எத்தனை தகுதிகள் இருக்கின்றன என்பதை நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.''     


சி.பி - மொழி அறிவு தான் பிரதமர் ஆகத்தேவை என்றால் இந்த நாட்டில் பல துபாஷ் ( மொழிபெயர்ப்பாளர்)களே பிரதமர் ஆகி இருப்பார்கள்.. பிரதமர் ஆக முக்கியத்தேவை 1. பொறுமை  2 . நிதானம் 3. மற்ற பெரியவர்கள்,அதிகாரிகள்,கருத்துக்களை காது கொடுத்துக்கேட்டு நிலைமையை சீர் தூக்கி பார்த்து முடிவெடுத்தல் 4 , மற்ற கட்சிகளை அரவணைத்து செல்லும் பாங்கு..இவைகள் தான்.  எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற குணம் கொண்டவர்களெல்லாம் பிரதமர் ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நாளே தாஜ்மஹாலை இடம் மாற்றனும், கேட் வே ஆஃப் இண்டியாவை மூடனும்னு ஏதாவது அச்சு பிச்சு வேலை ந்டந்தா இந்த உலகம் நம்மை பார்த்து கை கொட்டி சிரிக்கும்.. 


http://www.vikatan.com/news/images/muthu_toon.jpg

7. ''ஜெயலலிதாவின் கடந்த 9 மாத ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?''


''ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. அதற்கு ஓர் ஓட்டுநரை அமர்த்துகிறீர்கள். அவர் அந்த வண்டியின் இன்ஜினைக் குட்டிச் சுவர் ஆக்குகிறார். போதாக்குறைக்கு அவருடைய குடும்பத்தினர் வண்டியின் மற்ற பாகங்கள் அனைத்தையும் பாழாக்குகிறார்கள். வண்டி நகரவே மறுக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வண்டியை ஓட்ட இன்னொரு ஓட்டுநரை நியமிக்கிறீர்கள். அவர் எப்படி வண்டியை உடனே ஓட்டுவார் என்று எதிர்பார்க்க முடியும். அவர் முதலில் பழுதுபார்க்க வேண்டும் அல்லவா? அந்தப் பணிதான் இப்போது நடக்கிறது.''

சி.பி - சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்  விருது சோவுக்குத்தான் ஹி ஹி 


8. ''தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர்க் கல்வி, அண்ணா நூலக மாற்றம், விலைவாசி உயர்வு, அமைச்சர், அதிகாரி கள் மாற்றக் குளறுபடிகள்... எல்லா வற்றையும் இப்படித்தான் பார்க்கிறீர் களா?''


''ஆமாம். தலைமைச் செயலக மாற்றம் நிர்வாகரீதியில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. ஆனால், அண்ணா நூலக மாற்றம் தேவையற்றது. அதனால், பலர் பயன் அடைந்துவருகிறார்கள். சமச்சீர்க் கல்வியைப் பொறுத்த அளவில் அது சமச்சீர்க் கல்வி அல்ல; சமத் தாழ்வுக் கல்வி என்று ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன். அது நிச்சயம் மாற்றப்பட வேண்டியதுதான். விலைவாசி உயர்வுக்காக இன்றல்ல; என்றைக்குமே மாநில அரசுகளை நான் விமர்சித்தது இல்லை.


கலைஞர் ஆட்சி உட்பட. ஏனென்றால், விலைவாசியைத் தீர்மானிக் கும் முக்கியக் காரணிகள் மத்திய அரசிடம் இருக்கின்றனவே தவிர, மாநில அரசுகளிடம் அல்ல. அதிகாரிகள், அமைச்சர் கள் மாற்றம் என்பது ஒரு நிர்வாகத்தைச் செம்மையாக்குவதற்காக ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கை. பரம்பரைக் குத்தகைதாரர்கள்போல, தி.மு.க. ஆட்சியில், ஜில்லாவுக்கு ஓர் அமைச்சர், தன் தலைவரைப் போலவே அந்தந்த ஜில்லாக்களில் அவர்கள் பதவிக்குக் கொண்டுவரும் தன்னுடைய வாரிசுகள், அவர்களுக்கு ஏற்ற அதிகாரிகள்... இப்படித்தான் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்குப் பொருத்தமானவர் ஜெயலலிதா அல்ல!''


சி.பி - கஜானா காலி என்றால் அரசன் மணி மகுடத்தை  துறக்க வேண்டும் , மக்களிடம் கை ஏந்தக்கூடாது.. தொழில் அதிபர்கள், பெரும்பணக்காரர்களிடம் அதிக வரி வசூலிக்கலாம், டாஸ்மாக், சிகரெட் போன்றவற்றி டபுள் மடங்கு வரி விதிக்கலாம், அதை எல்லாம் விட்டு விட்டு நடுத்தர மக்களிடம் கை ஏந்துவது வெட்கக்கேடானது.. 


9. ''ஜெயலலிதா எப்போதுமே தமிழ்த் தேசியவாதி கள், ஈழத் தமிழ்ப் போராளிகள் ஆகியோருக்கு எதிராகவே இருந்திருக்கிறார். ஆனால், அவருடைய சமீப கால நடவடிக்கைகள் அப்படி இல்லை. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''


''தனித் தமிழ்நாடு வேண்டும் என்றோ, இலங்கை பிரிய வேண்டும் என்றோ, விடுதலைப் புலிகள் சரி என்றோ, வன்முறை தீர்வு என்றோ அவர் கூறிவிடவில்லை. தமிழர்கள் நலன் முக்கியம் என்று பேசுகிறார் அவ்வளவுதானே? இதில் என்ன நிலைப்பாடு மாற்றம் இருக்கிறது?''


சி.பி - எப்பவுமே ஒரு விஷயத்தை நாம உன்னிப்பா கவனிக்கனும், உள்ளாட்சித்தேர்தல் டைமிலோ, இடைத்தேர்தல் வரும் டைமிலோ எடுக்கும் முடிவுகள் உள் நோக்கம் கொண்டவை.. உண்மையிலேயே ஜெ நேர்மையான முதல்வர் என்றால் பஸ் கட்டண உயர்வை உள்ளாட்சித்தேர்தல்க்கு முன்பே அறிவித்திருக்கலாமே? 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisinTrMcmu6LOO-xHSMfOp-O9Af96HQc8qUZPt-UArCtZtNp_SPsXgmqhyphenhyphenfhw2J1oNn339vxnByh4v794CsIN0qDoqEcm-1SiXoq0CpOB3UN6wQE8VNRV3X8saOqLcOR2iIgsD-PRDhIBj/s320/cho_azhagiri.jpg


10. ''ஜெ.- சசி பிரிவு உண்மைதானா?''


''அது உண்மை என்றே அவர்களுடைய கட்சிக்காரர்களும் அவர்களைச் சுற்றி இருப்ப வர்களும் சொல்கிறார்கள். நம்புகிறார்கள்.''


சி.பி - அண்ணே, சோ அண்ணே, நிருபர் கேட்டது உங்க கருத்தை, கட்சிக்காரங்க கருத்து எங்களுக்கே தெரியும், நாங்களும் பேப்பர் படிக்கறோம்.. ஹி ஹி 


12. ''சசிகலா நீக்கத்துக்கு என்ன காரணம்?''

சி.பி - பெங்களூர் கோர்ட்டில்  சொத்துக்குவிப்பு வழக்கில் வரப்போகும் தீர்ப்பு ஜெவுக்கு பாதகமாக வரப்போகுதுன்னு தெரிஞ்சிடுச்சு.. அதனால எல்லாத்துக்கும் காரணம் சசி தான், எனக்கு எதுவுமே தெரியாது, அப்பாவி என்ற இமேஜை மக்களிடமும், கொஞ்சம் ஏமாந்தா ஜட்ஜ் இடமும் பதிவு செய்யவே இந்த நாடகம் என்பது பலரது கருத்து 



''எனக்குத் தெரியாது. நான் ஜெயலலிதா வையோ, அ.தி.மு.க-வையோ தூரத்தில் இருந்துதான் பார்க்கிறேன். அந்தப் பார்வையில் எனக்குத் தெரிவது... கட்சியைச் சீராக்கவும் நிர்வாகத்தைச் செம்மையாக் கவும் அரசியல் சட்டத்துக்கு அப்பாற் பட்ட சக்திகள் ஆட்சியில் குறுக்கிடுவதைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடடிக்கை யாக இது இருக்கலாம்.''

 சி.பி - எங்கண்னனுக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்தி.. தி முக -  த மா க உறவு ஏற்பட்ட போதும், ரஜினியின் த மாக ஆதரவு நடந்தப்பவும் இப்படித்தான் சொன்னாரு..

13. ''ஜெயலலிதாவையும் ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான 'பார்ப்பன லாபி’யின் சதிதான் சசிகலா நீக்கம் என்றுசொல்லப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


''நீங்கள் சொல்வதுபோல வைத்துக் கொண்டால், நான் அ.தி.மு.க-வைக் கைப் பற்றிவிடுவேன். அவர்களுடைய தலைவனாகிவிடுவேன். அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் என்னைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படி எல்லாம் நான் நம்ப வேண்டும். நீங்களே சொல்லுங் கள்... அவ்வளவு பெரிய மடை யனா நான்?

ஒரு லாபி என்றால், அதில் சில பேர் இருக்க வேண்டும். அப் படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்? நான் பிராமணன். அதுவும் இன்றைய பிராமணன்தான். அசல் பிராமணன் இல்லை.


மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., வாஜ்பாய்... இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தவன் நான். இவர்கள் எல்லோருமே பிராமணர்களா? அப்போது எல்லாம் இந்தப் 'பார்ப்பன லாபி’ குற்றச் சாட்டு எங்கே போனது? இப்போது மட்டும் அது எங்கிருந்து முளைக்கிறது?''


http://epaper.timesofindia.com/Repository/getimage.dll?path=TOIBG/2010/12/09/9/Img/Pc0090900.jpg

14. ''சோ ஓர் அரசியல் விமர்சகர் என்று இருந்த நிலை மாறி, அவர் ஓர் அரசியல் தரகர் என்று உங்களைப் பற்றிப் பேசப்படுவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''எதைவைத்து இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. என்றாலும், சில சமயங்களில் அரசியல் கூட்டணிகள் அமைய நான் பணியாற்றி இருக்கிறேன் என்ற அடிப்படையில் பேசுகிறார்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். ஆனால், இந்த வேலை நான் இப்போது தொடங்கியது அல்ல. காமராஜர் காலத்திலேயே செய்தது.


மத்தியில் ஜனதா, ஆந்திரத்தில் என்.டி.ஆர்., கர்நாடகத்தில் ஹெக்டே, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, மூப்பனார், ஜெயலலிதா என்று எத்தனையோ பேருக் காக கூட்டணியை உருவாக்க உழைத்திருக்கிறேன். 

இதற்கு என்ன அடிப்படை என்றால், ஒரு வாக்காளனாக நான் விரும்பும் ஆட்சி வர நான் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று சொல்லலாம். உங்கள் நண்பர் விரும்பும் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக அவர் உங்களிடம் வாக்கு கேட்டால், அவரைத் தரகர் என்று நீங்கள் கூறுவீர்களா... எனக்குத் தெரியாது. ஆனால், தரகில் நல்ல காரியம் நடந்தால், நான் செய்வது தரகு வேலையாகவே இருக்கட்டும். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், துரோக வேலை செய்யாதவரை நீங்கள் என்னைக் குறைகூற முடியாது!''


15. ''வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?''


''எதிர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!''