Showing posts with label சொய் சொய் ?மியூஸிக் டைரக்டர். Show all posts
Showing posts with label சொய் சொய் ?மியூஸிக் டைரக்டர். Show all posts

Sunday, February 17, 2013

கும்கி , மைனா -ஜிங்சிக்கா, சொய் சொய் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?மியூஸிக் டைரக்டர் இமான் பேட்டி


பாடல் சக்சஸ்க்கு திரைக்கதை காரணம்!

ராகவ்குமார்

இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார் மியூஸிக் டைரக்டர் இமான். இதைப்பற்றி அவரிடம் கேட்டால், வலது கை செய்வதை, இடது கைக்குத் தெரியாதிருக்கட்டும் என கர்த்தர் சொல்லி இருக்கிறார். ப்ளீஸ்... பப்ளிஸிடி வேண்டாமே..." என்கிறார் அடக்கமாக.
சேவை எண்ணத்துக்கு நீங்கள் சார்ந்துள்ள மதம் தான் காரணமா?
மதமும் ஒரு காரணம். சேவை செய்ய மனிதனாக இருந்தால் போதும். எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன."
உங்கள் பாடல்களில் வரும் ஜிங்சிக்கா, சொய் சொய் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?
இந்த வார்த்தைகள் குழந்தைகளை அதிகமாக ஈர்க்கின்றன. இதுக்கெல்லாம் அர்த்தம் கேட்கக் கூடாது. ரொம்ப சந்தோஷமாய் இருக்கும்போது வரும் வார்த்தைகள் இது."
ரொம்ப டச்சிங்கா காதல் பாட்டுக்கு ட்யூன் போடுறீங்களே சொந்த அனுபவமா?

குத்துப்பாட்டுக்கு ட்யூன் போட்டால் டான்ஸ் ஆடிக்கிட்டே ட்யூன் போட்டீங்களான்னு கேட்பீங்களா? எந்த ஒரு ட்யூனும் சக்ஸஸ் ஆக திரைக்கதைதான் காரணம். காதல் என்ற உணர்வு மனிதர்களையும் தாண்டி மற்ற உயிரினங்களில் கூட இருக்கே. ஸோ, காதல் பாட்டுக்கு டச்சிங்கா ட்யூன் போடறது பெரிய விஷயம் கிடையாது."
நிறைய ஹிட் கொடுத்தும், .ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போல உங்கள் மியூஸிக் ரீச் ஆகலையே?
இதற்கான சூழல் எனக்கு அமையலை. எவ்வளவு பெரிய ஹீரோ படமாக இருந்தாலும், மியூஸிக் டைரக்டரா சக்ஸஸ் ஆக, டைரக்டரும், திரைக்கதையும் முக்கியம். விஜய் நடிக்கும்ஜில்லாபடத்துக்கு மியூசிக் பண்றேன். அது எனக்கு வேறொரு இடத்துக்குக் கொண்டு போகும்."
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, விஸ்வநாதன்- இளையராஜா மாதிரி இணைந்து இந்தத் தலைமுறையினர் ஏன் மியூஸிக் பண்றதில்லை?

அன்றைக்கு இருந்த டைரக்டர்ஸ் நம்பிக்கையோட இணைந்து வொர்க் செய்ய வாய்ப்பு தந்த மாதிரி, இன்றைய டைரக்டர்கள் தந்தா நான் யாருடனும் சேர்ந்து மியூஸிக் செய்ய ரெடி."
வொய் திஸ் கொல வெறிபோல உங்க பாட்டு எப்ப சாதனை பண்ணப் போகுது?
சாட்டைபடத்தில்சகாயனேபாடல் நிறைய பேரால் கேட்கப்பட்டு சாதனை செய்தது உங்களுக்குத் தெரியாதா? கின்னஸ் சாதனை செய்வதை மட்டும் மனத்தில் வைத்து கம்போஸ் செய்ய முடியாது. எனது இசை, மக்களில் பலரின் ரசனையோடு ஒத்துப் போகும்போது பெரிய அளவில் ஹிட் ஆகிறது."
சினிமாவில் நடிக்கறதா கேள்விப்படறோமே?

இமான் அண்ணாச்சிதான் சினிமாவில் நடிக்கிறார். இந்த இமான் இல்லை. நிறைய பேர் நான் தான் சினிமாவில் நடிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு எப்ப பெரிய ஸ்க்ரீனில் பார்க்கலாம்ன்னு கேட்குறாங்க. என்னைப் பற்றிய தகவல்களை அப்டேட் செய்யவும், பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இமான் கம்போஸர். காம் என்ற பெயரில் புதிய வெப்சைட்டை தொடங்கியுள்ளேன். என்னைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்டேட் செய்து, அனைவரும் பார்க்க வழி செய்துள்ளேன். "
கும்கிபடத்துக்காக பழங்குடி இசைக் கருவிகளைப் பயன்படுத்தினீர்களா?
மக்களிசையில் முக்கிய வாத்தியமானபறையை பயன்படுத்தியுள்ளேன். பறை இசை மக்களின் மகிழ்வு, கோபம், சோகம், வீரம் என பல உணர்வுகளை வெளிக்கொணரும் ஆற்றல் பெற்றது. தவிர மதுரையில் இருந்து, செயல்பட்டு வரும் நாட்டுப்புற, பழங்குடி இசையை மக்களிடையே பரப்பும்சமர் கலைக்குழுஎன்ற குழுவினரின் மக்கள் இசையையும்கும்கியில் பயன்படுத்தினேன்."
உங்கள் வெற்றிக்கு எது காரணம்?
இன்னைக்குசிட்டின்னு சொல்லப்படற இடத்தில் பெரும்பான்மையானவர்கள் கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவங்கதான். நகரம் பல கிராமத்தினர் சேர்ந்து வசிக்கும் இடம். நகரங்களில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான். எனது இசை மண்சார்ந்து இருப்பதால் இவர்களைச் சென்றடைந்து வெற்றி பெறுகிறது."

நன்றி - கல்கி