தமிழன் கிட்டே உள்ள பொதுவான அம்சம் என்னான்னா தனக்கு ஏதாவது நல்லது நடந்தா உடனே அதுக்குக்காரணமா இருந்த கடவுளுக்கு நன்றி சொல்வான் . கிராமங்கள் ல நேர்ந்துக்குவாங்க . எட்டாம் கிளாஸ் ல பாஸ் ஆன 108 தேங்கா உடைப்பேன்பான் . அந்த மாதிரி ஒரு கிராமத்துல ஒரு பெரிய குடும்பம் . வருசா வருசம் ஏதாவது விசேஷம்னா எல்லாம் ஒண்ணு கூடுவாங்க . கட்சில ஏதாவது பிரச்சனைன்னா செயற்குழுவைக்கூட்டும் திமுக மாதிரி .
ஒரு பெரிய வாகன விபத்துல இருந்து கடவுள் புண்ணியத்துல தப்பிக்கறாங்க . அப்போ அந்த வீட்டில் வளர்த்த அல்லது வளர்ந்த சேவலை நேர்ந்துக்கறாங்க. கருப்பனுக்கு படையல் போட்றத வேண்டிக்கிட்ட சேவல் மேட்டரை அப்புறமா அவங்க மறந்துடறாங்க
அதுக்குப்பின் எதேச்சையா குடும்பத்தில் நிகழும் சோக சம்பவங்களுக்கெல்லாம் அந்த சேவல் பலி குடுக்காததேனு இவங்களா நினைச்சுக்கறாங்க .
சரி , பலி கொடுத்துடலாம்னு நினைக்கும்போது குடும்பத்துல உள்ள ஒரு சின்னபொண்ணு அந்த சேவலை ஒளிச்சு வைக்குது . தாங்களே ஊழலைபண்ணிட்டு ஊழலை ஒளிப்போம்னு குரல் கொடுத்த காங்கிரஸ் மாதிரி தங்கள் வீட்டுக்குள்ளேயே சேவல் இருப்பது தெரியாம ஊரெல்லாம் தேடறாங்க . அந்த காமெடித்தேடல் தான் படத்தின் கல கலப்பான திரைக்கதை .
அமலபாலின் புத்தம்புது கணவர் இயக்குநர் விஜய் வாழ்கையிலேயே முதல் முறையாக சொந்தக்கதையுடன் களம் இறங்கி இருக்கார் . வாழ்த்துகள் .
நாசர் தான் ஊர் பெருசு . தாத்தா கெட்டப் . ஒப்பனை அருமை . நடிப்பு பற்றி சொல வேண்டுமா> இயல்பான நடிப்பு
மொத்தபடத்தையும் தாங்கி நிற்பது மழலை சாரா . கல்க்கல் நடிப்பு . தெய்வத்திருமகள் ல் ஓவர் ஆக்டிங்க் ஆங்காங்கே . ஆனால் இதில் கச்சிதமான நடிப்பு
நாசரின் மகன் பாஷா -இதில் அறிமுகம் . இளமை அள்ளும் முகம் . முதல் படம் என்ற அளவில் ஓக்கே
நாயகி துவார தேசாய். சோளக்கருது ( சோளக்கதிரின் பிஞ்சு விதையில் பால் ஊற்றி வேக வைத்தது போன்ற அழகிய நிறம் . ரொம்ப பிஞ்சு மூஞ்சி . பார்த்துட்டே இருக்கலாம் போன்ற அழகு . இவருக்கு க்ளோசப் ஷாட் சரியாக வைக்காதது ஏனொ ?
போலி சாமியாரக வரும் சண்முகராஜன் , வேலைக்காரராக வருபவர் நடிப்பு கலக்கல் ரகம் .
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. ஓபனிங்க் ஷாட்டில் ஒரு மரத்தை தோகை விரித்து ஆடும் மயில் போலவே காட்டியது
2 பனை மரங்களை இவ்வளவு அழகாக வேறு எந்த தமிழ்படங்களிலும் பார்க்கலை , கேமர கலக்கல்
3 காணாமப்போன சேவலைக்கண்டு பிடிக்க மூவர் குழு ஒவ்வொரு வீடாகபோய் என்ன சமையல். ? என விசாரிக்கும் காட்சி காமெடி கலக்கல்
4 ஸ்கூல் பியூன் - 2 சம்சாரம் சண்டை சக்களத்தி சண்டை இரண்டும் பிரமாதம்
5 சரவண்ன் - இது அபா வெச்சது . ஸ்ரவன் -இது நானா வெச்சுக்கிட்டது என அலப்பறை பண்ணும் பையன் நடிப்பும் அருமை
6 பல படங்களில் இருந்து சுட்டிருந்தாலும் ஜி வி பிரகாஷ் பிஜிஎம் அருமை . கிராமீய இசை
7 கடைசியில் கதைக்கான இன்ஸ்பிரேஷன் தன் சொந்த அம்ம வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் என டைட்டில் கார்டில் அம்மாவுக்கு மரியாதை செய்தது குட்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 . வீட்டின் பரணில் பல நாட்கள் சேவலை ஒளிச்சு வைக்க முடியுமா? அது கொக்கரக்கோ என கத்தாதா? யாருமே எபடி கவனிக்கலை ?
2 என்னதான் கலகலப்பான படம் என்றாலும் படம் முழுக்க சேவல் தேடும் படலம் அலுக்கிறதே ?
3 படம் பூரா எல்லோரும் தோப்புக்கரணம் போடுவது செயற்கை
4 சைவம் - அசைவம் சம்பந்தபட்ட வலுவான வசனங்கள் வைக்கும் வாய்ப்பு இருந்தும் அதை தவிர்த்தது ஏனோ ?
5 மூட நம்பிக்கை , கிராம சகுன பழக்கம் ,. சாமி படையல் போன்றவற்றை நையாண்டி செய்ததில்; ஆழம் பத்தலை . ரொம்ப லைட்டா இருக்கு
6 அமல பால் லை கவுரவ வேடத்தில் வர வைக்காதது ஏனொ ? அட்லீஸ்ட் மேரெஜ் ஃபோட்டோ வாவது போட்டிருகலாம்
மனம் கவர்ந்த வசனங்கள்
1 சேவல் பேரு பாப்பாவா? புதுசா இருக்கே?
அது சின்னதா இருக்கும்போது கோழியா?சேவலா?னு தெரியாம பொத்தாம்பொதுவா பாப்பா னு வெச்ட்டோம் # சைவம்
2
விவசாயி ன்னா எவன் மதிக்கறான்? தொழில் விவசாயம் னு சொல்லவே வெட்கப்படும் கால கட்டம் இது #,சைவம்
விவசாயி ன்னா எவன் மதிக்கறான்? தொழில் விவசாயம் னு சொல்லவே வெட்கப்படும் கால கட்டம் இது #,சைவம்
3 எப்போ ஊருக்கு வந்தாலும் "விசேஷம்" இருக்கா? உண்டாகிட்டியா?னு கேட்பதால் தான் ஊர் ல எந்த விசேஷத்துக்கும் வர்றதே இல்லை # சைவம்
4 ஹேய்! ஓல்டு மேன்.வாட் ஈஸ் கம்மாய் ( கண்மாய்)?
பீச்.
ரியலி.?
ம்.ஸ்மால் பீச் #,சைவம்
5 படிக்கற புள்ள எங்கிருந்தாலும் படிக்கும்.அது கிராமமா இருந்தாலும் # சைவம்
6 இன்ஸ்பெக்டர் அய்யா.எங்க வீட்டு சேவலைக்காணோம்.
ஓ.உங்க ஊர்ல எல்லாருமே ஓடுகாலிகளா? # சைவம்
7 எங்க வீட்டு வெத்தலை ல மை போட்டுப்பாத்தா தெரியுமா?
சாமியார் = வெத்தலை எந்த வீட்டுதுனு முக்கியம் இல்லை.மை தான் முக்கியம் # சைவம்
a
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1 . ஒளிப்பதிவு வித்தகர் நீரவ் ஷாவின் மேஜிக் கேமரா வில் பாப்பா சாரா வுக்கான க்ளோஷப் ஷாட்கள் கவிதை # சைவம்
2
அமலா பால் ன் கணவர் இயக்குநர் விஜய் வருசம் 16 படத்தை உல்டா அடிக்கப்போறார் என அவதானிக்கிறேன்.#,சைவம்
அமலா பால் ன் கணவர் இயக்குநர் விஜய் வருசம் 16 படத்தை உல்டா அடிக்கப்போறார் என அவதானிக்கிறேன்.#,சைவம்
3 சிந்து பைரவி ல வரும் இசையை அழகா சுட்டுட்டார்.ஜி வி பிரகாஷா? கொக்கா? # சைவம்
சி பி கமெண்ட் -
சைவம் - கலகலப்பான திரைக்கதை ,120 நிமிட குடும்பக்கவிதை கிராமிய மணத்துடன் - இன்னும் அழுத்தமாகசொல்லி இருக்கலாம்
சைவம் - கலகலப்பான திரைக்கதை ,120 நிமிட குடும்பக்கவிதை கிராமிய மணத்துடன் - இன்னும் அழுத்தமாகசொல்லி இருக்கலாம்
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 43
சிபி மார்க் = 45
சிபி மார்க் = 45
குமுதம் ரேட்டிங்க் = நன்று
ரேட்டிங் = 3 / 5
diSki அதிதி - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2014/ 06/blog-post_616.html
pic.twitter.com/26B3L8S56b
கரூர் எல்லோரா