Showing posts with label சைரன் (2024) = தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சைரன் (2024) = தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, February 20, 2024

சைரன் (2024) = தமிழ் - சினிமா விமர்சனம் ( ரிவஞ்ச் த்ரில்லர் )


2022  ல்  ஷூட்டிங்  நடத்தி 2023  டிசம்பரில்  ரிலீஸ்  ஆவதாக  இருந்த  இந்தப்படம்  போஸ்ட்  புரொடக்சன் ஒர்க்  டிலே  ஆனதால் 16/2/2024  அன்று  ரிலீஸ்  ஆகி  இருக்கிறது .பொன்னியின்  செல்வன்  பாகம்  1  பாகம்  2  ஹிட்  ராசி  தொடர  தனி  கதாநாயகன்  ஆக  ஜெயம்  ரவி  நடித்த ஒரு வெற்றிப்படம்  நீண்ட  இடைவெளிக்குப்பின்  அவருக்கு  அமைந்ததில்  மகிழ்ச்சி 



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  ஆம்புலன்ஸ்  டிரைவர். நாயகி  ஹாஸ்பிடலில்  நர்ஸ். செவித்திறன்  அற்ற  பேசும்  திறன்  அற்ற  மாற்றுத்திறனாளி . இருவரும்  காதலித்துத்திருமணம்  செய்து  ஒரு  பெண்  குழந்தை  உண்டு . நாயகனின்  நண்பன்  ஒரு  பிற்படுத்தப்பட்ட  இனத்தைச்சேர்ந்தவன். அவன்  ஒரு  போலீஸ்  இன்ஸ்பெக்டரின் தங்கையைக்காதலிக்க  அவர்  ஆள்  வைத்து போட்டுத்தள்ள  முயற்சிக்கிறார். நாயகன்  நண்பனைக்காப்பாற்ற  வர  அவர்  மீது  காண்டான  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  மேலும்  சில  அரசியல்வாதிகள்  துணையுடன் நாயகனின்  மனைவியைக்கொலை  செய்து  விடுகிறார்கள் . நாயகன்  தான்  தன்  மனைவியைக்கொலை  செய்ததாக  ஃப்ரேம்  செய்து  ஜெயிலில்  தள்ளுகிறார்கள் . நாயகனுக்கு  ஆயுள்  தண்டனை  கிடைக்கிறது


14  வருடங்கள்  ஜெயிலில்  இருந்த  நாயகன்  இப்போது  தனது  அப்பா  உடல்  நிலை  சரி  இல்லாமல்  இருப்பதால்  அவரைப்பார்ப்பதற்காகவும், தன்  மகளைக்காணவும்  14  நாட்கள்  பரோலில்  வருகிறான். அவன்  வெளியே  வந்த  சில  நாட்களில்  நகரில்  அடுத்தடுத்து  சில  கொலைகள்  நடக்கின்றன. அந்தக்கொலைகள்  எல்லாம்  2005 ல்  ஏற்கனவே  நடந்த  கொலை  பேட்டர்னில்  நடக்கின்றன. அதனால்  குழம்பும்  போலீஸ்  நாயகன்  மீது  சந்தேகப்படுகிறது


இதற்குப்பின்  போலீசுக்கும், நாயகனுக்கும்  நடக்கும்  யுத்தம்  தான்  திரைக்கதை 


 நாயகன்  ஆக  ஜெயம்  ரவி   செந்தூரப்பூவே  விஜயகாந்த்  கேரக்டர்  மாதிரி  அடித்தொண்டையில்  பேசுவது  அருமை ,.இளமையான  கெட்டப்பை  விட  வயதான  கெட்டப்பில்  மனம்  கவர்கிறார்


போலீஸ்  ஆஃபிசர்  ஆக  கீர்த்தி  சுரேஷ். அவரிடம்  சிடு  சிடு  முகம்  இருந்தாலும்  வைஜெயந்தி  ஐபிஎஸ்  விஜயசாந்தி   மாதிரி  போலீஸ்  கம்பீரம்  இல்லை . ஆனால்  முடிந்தவரை  சமாளித்து  இருக்கிறார்


நாயகனின்  காதல்  மனைவியாக அனுபமா  பரமேஸ்வரன்  நாயகனுக்கு  சித்தி  மகள்  மாதிரி  இருக்கிறார். ஜோடிப்பொருத்தம்  ஒட்டவில்லை. ஆனால்   அழகான  முகம்,அவருக்கு  காட்சிகள்  அதிகம்  வைத்திருக்கலாம்


மெயின்  வில்லன்  ஆக சமுத்திரக்கனி, சைடு  வில்லன்களாக  அஜய் , அழகம்  பெருமாள்   வருகிறார்கள் . வில்லன்  கேரக்டர்கள்  இன்னும்  வலுவாக  அமைத்திருக்கலாம்


 காமெடியன்  ஆக  வரும்  யோகி  பாபு  க்டைசி  வரை  காமெடி  எதுவும்  செய்யவில்லை நாயகனின்  மகளாக  வரும்  யுவினா  பார்த்தவி  நடிப்பு  குட் 


நான்கு  பாடல்களுக்கு  இசை  அமைத்து  இருக்கிறார்  ஜி வி  பிரகாஷ் . அவற்றில்  இரண்டு  பாடலகள்  ஹிட் . பின்னணி  இசை  சாம்  சி எஸ் . காது  வலிக்கும்  அளவு  படம்  பூரா  ரெஸ்ட்  கொடுக்காமல்  டொம்  டொம்  என அதகளம்  பண்ணி  இருக்கிறார்


ரூபனின்  எடிட்டிங்கில்  படம் இரண்டரை  மணி  நேரம்  ஓடுகிறது.  எஸ்  கே  செல்வகுமார்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கச்சிதமாகப்படம்  ஆக்கப்பட்டுள்ளன.


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஆண்டனி  பாக்யராஜ். இவர்  விஸ்வாசம்  படத்தின்  உதவி  திரைக்கதை  ஆசிரியர்   என்பதால்  அதே  அப்பா  மகள்  செண்ட்டிமெண்ட்  சீனை  காட்சிப்படுத்தி  இருக்கிறார். மேலும்  பாரதிராஜாவின்  ரசிகர்  என்பதால்  மெயின்  கதையை  ஒரு  கைதியின்  டைரியில்  இருந்து  எடுத்து  பட்டி  டிங்கரிங்  செய்து  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்

1  நீண்ட  இடைவெளிக்குப்பின்  ஜெயம்  ரவிக்கு  ஒரு  மீடியம்  ஹிட்  படம்  கொடுத்தது


2  ஏகப்பட்ட  படங்களில்  அடித்துத்துவைத்துக்காயப்போட்ட  ரிவஞ்ச்  ஆக்சன்  த்ரில்லர்  ஸ்டோரிதான்  என்றாலும்  போர்  அடிக்காமல்  திரைக்கதை  அமைத்ததில்  வெற்றி 


  ரசித்த  வசனங்கள் 


1   அவர்  அப்பாயிண்ட்மெண்ட்  இல்லாம  யார்ட்டயும்  பேச  மாட்டாரே? 


 நான்  பேசனும்னு  சொல்லலையே? விசாரிக்கனும்னு  தான்  சொன்னேன்


2  காத்திருப்பும், நிதானமும்  ரொம்ப  முக்கியம் 


3  அந்த  நர்சுக்கு  கல்யாணம்  ஆக்கிடுச்சா?


 டேய்  லூசு . அவங்களுக்குக்கல்யாணம்  ஆனதாலதானே  இவ  பிறந்தா , இவளுக்கு  இன்னும்  மேரேஜ்  ஆகல


 சரி . பண்ணிடுவோம்


4  வில்லன்  =  நான்  குத்திட்டுப்போறேன், நீ  தூக்கிட்டுப்போ 


 நாயகன் = நான்  தூக்கிட்டுப்போறேன், நீ  முடிஞ்சா  குத்திப்பாரு 


5  உயிரைக்காப்பாத்தறதுதான்  டாக்டர்கள்  வேலை , வேலை  போயிடுமேங்கறதுக்காக  உயிர்  போக  விடக்கூடாது 


6  கோபத்துல  கொலைகாரன்  எடுக்கும்  கத்தியை  விட போலீஸ்  எடுக்கும்  லத்தில  தான்  ஆபத்து  அதிகம்


7  போலீஸ்னா  தப்பை  தட்டிக்கேட்கலாம்,ஆனா  இங்கே  போலீஸ்  தட்டிக்கேட்கும்  விஷயமே  தப்பா  இருக்கே? 


8  உன்  பாட்டனுக்குப்பாட்டன்  காலத்துல  இருந்தே  ஜாதி  இருக்கு , இப்ப  வந்து  அதை  மாத்தனும்னு  நினைக்காத


  உண்மைதான், என்  பேரனுக்குப்பேரன்  காலத்துல  கூட  அதை  மாத்த  முடியாதுன்னா    எப்படி ?


சாதி இல்லன்னு ஒருத்தன் சொன்னா அவன் எந்த சாதினு தேடறத விடுங்க”


10  தினமும்  எமனைத்தோளில்  போட்டு  வேலை  செய்யற  எங்களை பயமுறுத்தலாம்னு  நினைச்சா  எப்படி ?


11   தீ  தொட்டா  சுடுமா?னு  தெரியாது  , ஆனா  சாம்பல்  சுடும் 


12 நான் ஜெயில்ல இருக்குறது தான் என் பொண்ணுக்கு சந்தோஷம்னா அவளுக்காக நான் அதையும் பண்ணுவேன்”

13   அடிக்கிறவனை  விட்டுட்டு  அவனை  எதுவும்  சொல்லாம  திருப்பி  அடிக்கிறவனை  மட்டும்  கேள்வி  கேட்பது  சரியா? 


14  நான்  நல்லவன்னு  தெரிஞ்சு  நான்  ஜெயிலுக்குள்  இருப்பதை  நினைத்து  என்  மகள்  துடிப்பதை  விட  நான்  கெட்டவன்னு  நினைச்சு  நான்   ஜெயிலுக்குள்  இருப்பதை  நினைத்து  என்  மகள் சந்தோஷப்படுவது  நல்லதுதான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  காமெடியன்  யோகிபாபு  போலீஸா  வர்றார். ரெண்டு கிலோ  தொப்பையோட  வர்றது  கூட  தேவலை  நாலு  கிலோ  புசு  புசு  தலையோட  வர்றாரே? போலீஸ்  கட்டிங்க்னா  என்னன்னே  தெரியாதா?


2 நாயகன்  ஒரு  பேச்சுக்கு  சாப்பிட  வா  என  கூப்பிட்டதும்  காமெடியன்  பூட்ஸ்  காலோட  கிச்சன்  ரூம்க்கு  வர்றாரே?


3  ஆம்புலன்ஸ்  வண்டியில்  சைரன்  வைத்திருப்பதே  மக்கள்  அதற்கு  வழி  விடத்தான், ஆனால்  நாயகன்  வழி  விடுங்க , உள்ளே  குழந்தை  இருக்குனு  சவுண்ட்  குடுத்துட்டே  ஆம்புலன்ஸ்  ஓட்றாரே?  எந்த  ஆம்புலன்ஸ்  டிரைவர்  அப்படி  சவுண்ட்  குடுத்துட்டே  வண்டி  ஓட்றார்?


4  ஆம்புலன்ஸ்  வேனில்  பேஷண்ட்  கூடவே  ரிலேடிவுஸூம்   நர்சும் இருப்பாங்க . நாயகனே  ஆம்புலன்ஸூம்  ஓட்டி  , பேஷண்ட்டையும்  தூக்கிட்டு  வர்றார். டபுள்  ட்யூட்டி 

5  நாயக்ன்  வில்லன்களில்  ஒருவனைக்கொலை  செய்ய  பாலீதீன்  கவரை  யூஸ்  பண்ணி  அதை  அங்கேயே  அனாமத்தா  விட்டுட்டுப்போறான், அதில்  இருக்கும்  கை  ரேகையை  ட்ரேஸ்  பண்ணி  இருந்தாலே  கொலைகாரன்  இவன் தான்  என்பது  தெரிந்து இருக்கும், இடைவேளையோடு  படத்தை  முடிச்சிருக்கலாம், 7  ரீல் மிச்சம்  ஆகி  இருக்கும் 


6  பொதுவாக   சாட்சி யை  முகத்தை  மறைத்து  அடையாள  அணிவகுப்புக்கு  அழைத்துச்சென்று  குற்றவாளி  யார்? என்பதை  அடையாளம்  காட்டச்சொல்வார்கள் . ஆனால்  20  போலீஸ்காரர்களை  நிற்க  வைத்து  நாயகி  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  சாட்சியிடம்  இந்த  போலீஸ்காரங்களில்  யார்  குற்றவாளி  என  கேட்கிறார். சாட்சியின்  முகம்  ஓப்பனாகத்தெரியும்போது  அவன்  எப்படி  பயம்  இல்லாமல்  அடையாளம்  காட்டுவான் ? 


7   காமெடியன்  ஆன  யோகிபாபு  சாதா  கான்ஸ்டபிள். ஒரு இடத்தில்  ஹையர்  ஆஃபீசர்  ஆன    நாயகியிடம்  தனியாகப்பேசனும்  என்னும்போது  கூட  இருந்த  இன்ஸ்பெக்டர்  நகரவில்லை. மேனர்ஸ்  தெரியாதவன்  என  முணுமுணுக்கிறார். ஒரு  சாதா  காப்  ஒரு  இன்ஸ்பெக்டரை  அவன்  இவன்  என்று  சொன்னால்  சும்மா  விடுவார்களா? 


8  நாயகன்  காமெடியனிடம்  அந்த  மேடம்  டேபிளில்  இருக்கும்  போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட்  எனக்கு  வேண்டும்  என்கிறான். உடனே  காமெடியனும்  அந்த  ஃபைலை  எடுத்துத்தருகிறான், அது  எவ்ளோ  பெரிய  ரிஸ்க்? போஸ்ட்மார்ட்டம்  ரிப்போர்ட்டை  செல்  ஃபோனில்  ஃபோட்டோ  எடுத்துத்தருவதுதானே  ஈசி , ? பாதுகாப்பு ? 


9  நாயகன்  லவ்  ஃபெய்லியர்  கிடையாது , சோம்பேறியும்  இல்லை , கஞ்சா  கேசும்  இல்லை . ஏன்  மேரேஜ்  அன்னைக்குக்கூட  தாடியோட  இருக்கார்? ஏதாவது  மறைக்க  வேண்டிய  வெட்டுத்தழும்பு  இருக்கா? 


10  நாயகனின்  நண்பனை  வில்லன்  க்ரூப்  10  பேர்  துரத்துகிறார்கள் . ஒரு  குடோனில்  ஒளிந்து  இருக்கும்போது  அவர்கள்  அவனை  கார்னர்  பண்ணி  தேடுகிறார்கள் . அப்போது  செல்  ஃபோனை  சைலண்ட்  மோடில்  போட  மாட்டாரா?  ரிங்க் டோன்  வந்து  காட்டிக்கொடுக்கிறது . இதுவரை  ஒரு  லட்சம்  படங்களில்  இப்படி  சீன்  வைத்தாயிற்று. புதுசா  யோசிங்களேன்பா 


11  நாயகன்  மேல்  போலீஸ்க்கு  சந்தேகம்  வந்த  பின்பும்  மீண்டும்  மீண்டும்  ஏன்  காமெடியன்  யோகிபாபு வையே நாயகனுக்கு  பாதுகாவலாய்  அமார்த்த  வேண்டும்? ஆள்  மாற்றலாமே?


12   தகரத்தை  தரையில்  தேய்த்தால் அந்த  கர்ண  கடூர  சத்தத்தில்  காதில் ரத்தம் வந்து  இறப்பது  எல்லாம்  ஓவர்  காதில்  பூ  சுற்றல்


13  நாயகி  கீர்த்தி சுரேஷ்  மீது  லாக்கப்  டெத் விசாரணை  நடப்பது  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது , மேலும்  அது  விஷூவலாகக்காட்டப்படாமல்  வெறும்  வசனமாகவே  கடந்து  போவதால்  பாதிப்பு  அதிகம்  ஏற்படுத்தவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒரு  கைதியின்  டைரி , விஸ்வாசம்  இந்த  இரண்டு  படங்களையும்  பார்க்காதவர்கள் , ஜெயம்  ரவி  ரசிகர்கள்  படம்  பார்க்கலாம் . போர்  அடிக்காமல்  போகிறது . ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க்  42 ,  குமுதம்  ரேட்டிங்  ஓக்கே . அட்ரா  சக்க  ரேட்டிங்   2.5 / 5 


Siren
Theatrical release poster
Directed byAntony Bhagyaraj
Written byAntony Bhagyaraj
Produced bySujatha Vijayakumar
Starring
CinematographySelvakumar S. K.
Edited byRuben
Music by
Production
company
Home Movie Makers
Distributed byRed Giant Movies
Release date
  • 16 February 2024
CountryIndia
LanguageTamil