Showing posts with label சேலம் தொகுதி. Show all posts
Showing posts with label சேலம் தொகுதி. Show all posts

Wednesday, April 16, 2014

சேலத்தில் மோடியிடம் விஜயகாந்த் 7 அம்ச கோரிக்கை

  • சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, தேமுதிக தலைவர் விஜயகாந்த். | படம்: லக்‌ஷ்மி நாராயணன்

    சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, தேமுதிக தலைவர் விஜயகாந்த். | படம்: லக்‌ஷ்மி நாராயணன்
  • கிருஷ்ணகிரியில் தமது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. | படம்: என்.பாஸ்கரன்

    கிருஷ்ணகிரியில் தமது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. | படம்: என்.பாஸ்கரன்
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்வைத்தார்.



தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சேலத்தில் தேமுதிகவுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவரிடம் விஜயகாந்த் ஒரு மனுவை அளித்தார். அதன் விவரம்:
'இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லத் தேவையான நேர்மையும், தைரியமும், தேசப்பற்றும் கொண்ட தலைவர் நீங்கள். நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி. விரைவில் பிரதமராகப் போகும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழகம் வரலாறு காணாத குடிநீர் மற்றும் மின்வெட்டுப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. தண்ணீர்ப் பிரச்சினையால் விவசாயம் நலிந்து விட்டது. மின்சாரப் பற்றாக்குறையால் பல சிறு, குறு தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் முடங்கிவிட்டன. இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்ததால் அவர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.



மேலும், பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை குறைந்து வாழ்கிறார்கள். அதிமுக, திமுக ஆட்சிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இவர்களின் தவறான பொருளாதாரக் கொள்கை, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டது.


விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் ஏழைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளைத் திறந்து, அவர்களை மேலும் பரம ஏழைகளாக மாற்றிவிட்டது.


விரைவில் தங்கள் தலைமையில் அமைய உள்ள மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள கீழ்க்கண்ட முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


* குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யவேண்டும்.


* நதிகளை இணைத்து தேசிய மயமாக்கி, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை உயர்த்தி, விவசாயம் பெருகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் செய்ய வேண்டும்.


* தடையில்லா மின்சாரம் கொண்டு வந்து, தொழில் உற்பத்தியைப் பெருக்கி, படித்த, மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.


* கனிம வளங்களைப் பாதுகாக்க இன்னும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.


* தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.


* அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி, எல்லோருக்கும், எல்லா இடத்திலும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* அரசுப் பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.


இவை மாநில நிர்வாகத்தின் கீழ் வந்தாலும், பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்து, தமிழக அரசின் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துதலை தங்கள் தலைமையில் அமையும் அரசு செய்யவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று அந்த மனுவில் விஜயகாந்த் கூறியுள்ளார்.


thanx - the hindu

  • பதிலுக்கு மோடி ஒரே ஒரு கோரிக்கையை விஜயகாந்த்திடம் வைத்தார். அது, படத்தில் வில்லன்களை அடிப்பதுபோல் நம் கட்ச்சியை எதிர்ப்பவர்களை அடிக்கக்கூடாது என்று!!
    15 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0)
    •  Liyakath Basha Electrical Maintenance at ADNOC from Abu Dhabi
      அப்படியா ? எல்லாம் கெடசிடும்னு சொல்லி இருப்பாங்களே. வைகோ, ராமதாசும் சந்தித்து ஈழம் வேணும்னு கோரிக்கை வைப்பங்கன்னும் நாங்க எதிர் பார்க்கிறோம். பெட்டியும் பதவியும் மட்டுமே கொள்கையா? இதில் பிஜேபி பரவாயில்லை நாசகர கொள்கை இருந்தாலும் அதை விடாது கடைபிடிகிறார்கள்.
      23 minutes ago ·   (2) ·   (0) ·  reply (0)
      •  Sundaram  from Hosur
        இப்படி பட்ட பொது நல நோக்கு எல்லா கட்சி தலைவர்களிடமும் மலரவேண்டும் .தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பாமல் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைக்களை பலரும் அறிய செய்த உக்திக்காக கப்டன் அவர்கள் பாராட்டுக்கு உரியவர். இதனை தமிழ் மக்களும் மனதார வழி மொழிய கடமை பட்டுள்ளனர் .இது போன்ற பொது பிரச்னைகளை முன் நிறுத்துவதில் தேதிமுக இதற்களை முந்திகொள்ளவேண்டும் -.இது மாநிலம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். பேதமின்றி முதல்வரையும் கண்டு முறை இடுவதும் அவசியமானதாகும் மாநில அரசின் அதரவு இன்றி எவரும் ஏதும் சாதிக்க இயலாது -சுந்தரம்
        26 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0)
        •  vimala  
          தேர்தல் கூட்டனிக்காக காங்கிரஸ் /தி மு க /பி ஜே பி என் எல்லாரிடமும் பேரம் பேசிக்கொண்டு /தேர்தல் செலவுககு பணம் உட்பட பேரம் பேசி கட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி /பி ஜே பி இடம் சரண் அடைந்த விஜயகாந்து கண்ணுக்கு மோடி நேர்மையும், தைரியமும், தேசப்பற்றும் கொண்ட தலைவர் ஆக தெரிகிறார்- கொடுமை யா ---பார்ப்போம்-அடுத்த தேர்தலில் என்ன பேச போகிறார் என ??விமலா வித்யா
          about an hour ago ·   (3) ·   (3) ·  reply (0)
          •  jayenness  
            சபாஷ் விஜய்காந்த்! அருமை. தனிமையில் நீங்கள் சதீசுக்கு மந்திரிப்பதவி கேட்டிருக்கலாம். ஆனால் பொதுவில் நாட்டுப்பிரச்னைக்காக வேன்டுகோள் விடுத்திருக்கிறிகர்கள்.நேற்றுவரை அம்மா கட்சிக்கு ஓட்டுப்போடலாம் என்றிருந்த்ஏன். உங்களின் இந்த ஒரு செயலுக்காகவே நான் உமது கட்சி/கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது என்று முடிவுசெய்துவிட்டேன்.
            about an hour ago ·   (13) ·   (0) ·  reply (0)
            Sakthivel  Up Voted
            •  tamil  from Doha
              மன்மோகன் சிங் அவர்களிடம் கொடுத்த கொற்கை மனுவை ஜெராக்ஸ் அடிச்சி வச்சாச்சு போலே