Showing posts with label சூர்யா. Show all posts
Showing posts with label சூர்யா. Show all posts

Friday, May 31, 2019

NGK -சினிமா விமர்சனம்

ngk hd images માટે છબી પરિણામ

எம் ஜி ஆர் , என் டி ஆர் மாதிரி அரசியலில் 3 எழுத்து இனிஷியல் ஹிட் ஆவதால் படமும் அதே ராசிப்படி ஹிட் ஆகட்டும் என இப்டி டைட்டில் வெச்சிருக்காங்க போல , ஆனா ஹீரோ முழுப்பெயரையும் (அழகான தமிழ்ப்பெயர் என்பதால் )அப்டியே வெச்சிருக்கலாம்


 ஹீரோ ஒரு சமூக சேவகர் , கம்ன்யூனிச சித்தாந்தம் கொண்டவர் . ஊருக்கே நல்லது பண்றார், தமிழருவி மணியன் ரஜினியை உசுப்பி விடற மாதிரி ஒரு ஆள் சாதாரணமாவே நீ இவ்ளோ நல்லது பண்றே ,அரசியலுக்கு வந்தா எவ்ளோ  நல்லது பண்ணுவே என உசுப்பேற்றி விட நம்ம தளபதி  எப்படி  2 வருசமா பகல்  கனவு காண்கிறாரே இதோ ஆட்சி கலைஞ்சிடும், நாம முதல்வர் ஆகிடலாம்னு அதே போல் ஹீரோவும் அர்சியலில் இறங்க முடிவு பண்றார்

 ஒரு அரசியல்வாதி கிட்டே எடுபுடியா சேர்றார், கிட்டத்தட்ட அமைதிப்படை அமாவாசை மாதிரி , அவர் எப்படி படிப்ப்டியா முன்னேறி சி எம் ஆகறார் என்பதே கதை ( கொஞ்சம் காதுல பூ ரகம் தான்)


ஹீரோவா சூர்யா , அவரோட பாடி லேங்க் வேஜ் பிரமாதம் , விரைப்பா நிற்பது , எடுபுடியா ஆக கூச்சப்படுவது , நண்பனை கொலை செய்ய நேர்வது , குற்ற உணர்ச்சி என படம் முழுக்க அவர் நடிப்புக்குத்திஒஇனிதான்


நாயகியா சாய் பல்லவி . புருஷன் மேல சந்தேகப்படுவது , பொசசிவ்னெஸ் என கலந்து கட்டி ஓவர் ஆக்டிங் பண்றார்


 இன்னொரு ரம்பாவின் தொடை அழகு வாரிசு ரகுல் ப்ரீத்தி சிங்  கலக்கறார். அவரோட திமிர்த்தனம் , ஹீரோவைப்பார்த்ததும் ஏற்படும் உடல் மன மாற்றங்கள் , வாசம் பிடிப்பது என ஸ்கோர் பண்றார்.ஒரு டூயட்டில் டான்சில் கலக்கறார்

இளவர்சு குட் ஆக்டிங் 


இடைவேளை வரை வேகமாகப்போகும் திரைக்கதை பின் தடுமாறுது , ஏகப்பட்ட அசிஸ்டெண்ட் டைரக்டரகள் ஆளாளூக்கு ஒரு ஐடியா கொடுத்து கொழப்பி இருக்காங்க போல 


பி ஜி எம் பட்டாசு , பாடல்கள்  ஓக்கே ரகம் 





நச் டயலாக்ஸ்


எனக்கு உன் கிட்ட பிடிச்சதே உன் உடம்புல வர்ற வாசனைதான்

நான் பர்ப்யும் எதுவும் யூஸ் பண்ணலையே?
விவசாயி உடம்புல வர்ற மண்வாசனை ,ஹ்ம்ம்


2 தோற்கும் நேரத்துல உடையாதே!
ஜெயிக்கும் நேரத்தில் உளறாதே


3 இந்த நாட்டுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வித பைத்தியம் ,என் மகனுக்கு நாட்டு மேலயே பைத்தியம்


4 ஆயுதம் வாங்கறதுல இந்தியா முதலிடமா?அங்கங்க கக்கூஸ் போகவே தண்ணி இல்ல


5 தகுதி ,தராதரம் பார்த்து செய்யறது உதவி இல்லை,தேவைக்கு செய்யறதுதான் உதவி


6 அரசியல் ங்கறது சுடுகாடு மாதிரி,உள்ளே போனவன் பிணமாதான் திரும்பி வருவான்

7 கரை வேட்டி ன்னாலே (அரசியல்வாதி)மக்கள் கேவலமாதானே பாக்கறாங்க?


8 படிச்ச புள்ள நீ,இதை முதல்ல புரிஞ்சுக்கோ,அரசியலோ ,எதுவோ எந்த வேலையா இருந்தாலும் படிப்படியாதான் முன்னுக்கு வர முடியும்


9 எந்த ஒரு மிகப்பெரிய விஷயமா இருந்தாலும் அதோட ஆணிவேர்ல இருந்து ஆரம்பிக்கனும்


10 இந்திய நாட்டின் பண்பாட்டை அயல் நாட்டினன் வாங்கிட்டான்


11 என் பொன்மொழிகளை எனக்கே சொல்லிட்டுப்போறான் ,அபாயகரமானவன்


12 எதையாவது பத்த வைக்கனும்னா மேல இருந்தும் பத்த வைக்கக்கூடாது,கீழே இருந்தும் பத்த வைக்கக்கூடாது ,நடுவுல இருந்து பத்த வைக்கனும் ,அப்ப தான் மேலயும் பத்திக்கும் ,கீழேயும் பத்திக்கும்

13 ட்விட்டர் ,FB ல ட்ரெண்ட் ஆகறதை ஜனங்க 2 நாட்கள்ல மறந்துடுவாங்க


14  அதென்னாங்கடி,மாடர்ன் பொண்ணுங்க அடுத்தவ புருசனை கரெக்ட் பண்ண ரெடியா இருக்கீங்க?







தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

கேரளா திருவனந்தபுரம் ஸ்ரீ கிருபா ல 31/5/2019 9.30 am ஷோ சூர்யா ரசிகைகளுக்கான ஸ்பெஷல் ஷோ வாம்,அடேங்கப்பா ,மம்முட்டி ,மோகன்லாலுக்குக்கூட அப்டி நடந்ததா தெரில


கேரளா கோட்டயம் சங்கணாச்சேரி தன்யா ரசிகர் ஷோ 7 am. ஹவுஸ்புல்

தன்யா ரம்யா அப்சரா 3 தியேட்டர்கள்

a






3  போராடறது தப்புன்னா போராடற மாதிரி சூழ்நிலையை உருவாக்கறதும் தப்புதானே? தியேட்டரிக்கல் ட்ரெய்லர் (கே வி ஆனந்த் + சூர்யா + மோகன்லால் )

4 ஹீரோக்கு புரட்சிகர இளைஞர் ,கம்யூனிச சித்தாந்தம் பேசுகிற ,இயற்கை விவசாயி கேரக்டர் ,சூர்யாக்கு சுலபமா செட் ஆகிடுச்சு,இயக்குனர் செல்வராகவன் லைட்டா தடுமாறுகிற மாதிரி தோணுது.காதல்,த்ரில்லர் ,பேன்ட்டசி படங்களில் காட்டிய செய்நேர்த்தி இதுல காட்ட முடியல


5  அரசியல்வாதிக்கு எடுபுடியா வந்து ஹீரோ பண்ற வேலைகளை அவரது ரசிகர்கள் ஜீரணிக்க சிரமப்படலாம்


சூர்யா,ரகுல் ப்ரீத்திசிங்,இளவரசு பங்கேற்ற அந்த ஹால் சீன் அருமை.செ.ரா டச் ,அப்ளாஸ் அள்ளிடுச்சு

7  அதிமுக அமைச்சர் மாட்டிய பாலியல் குற்றச்சாட்டு ,ஆடியோ வெளியீடு பற்றிய முக்கிய காட்சி

8  இடைவேளை வரை படம் குட்.திரைக்கதை அமைப்பு அமைதிப்படையின் சாயல் வராமல் பார்த்துக்கொள்ள இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார் ,பிஜிஎம் பட்டாசு

ஹீரோ இன்ட்ரோக்கள்ல ரசிகர்கள் பேப்பர் துண்டுகளை,லாட்டரி டிக்கெட்களை திரை முன் வீசறாங்க.படம் முடிஞ்சதும் அவங்களையே சுத்தம் பண்ண வெச்சிடனும்


10 இரு நாயகிகளையும் ஓவர் ஆக்டிங்க் பண்ண வைத்திருப்பது செல்வராகவன் கேரியரில் புதுசு,பின்னடைவு.ஆனால் ரகுல் ப்ரீத்தி சிங் சாய் பல்லவிய ஓவர்டேக் கறார் ,அபாரம்


11 கல்யாண மண்டப சீனில் சிஎம் மும் ,எ.க.தலைவரும் பேசும் காட்சியில் எம்ஜியார் கலைஞர் இருவரையும் தாக்கிட்டாரு இயக்குநர்


12 திமுக ,அதிமுக 2 கட்சிகளையும் போட்டுத்தாக்கறாரு − இப்டிப்பேசிப்பேசியே ஜனங்களை ஏமாத்தறாங்க குறியீடு டயலாக்


13 விஜய் ரசிகர்களுக்கு செல்வராகவன் மேல காண்டா?சூர்யா மேலயா? காலைல இருந்து அனத்திட்டே இருக்காங்க?


14 செல்வராகவன் + விஜய் காம்போல வரவேண்டிய படமாம்,சூர்யா கைக்கு கை மாறிடுச்சாம்.இப்பதான் தெரியுது



சபாஷ் டைரக்டர்

 1  வழக்கமா செ. ரா படங்களில் ஒரு பெட்ரூம் சீனும் 4 கிஸ் சீன்களும் இருக்கும், அவை இதில் இல்லை. டீசண்ட்டா இருக்கு படம் 


2  பாட்ஷா படத்தில் ஹீரோ மெடிக்கல் ஷீட் வாங்கும்போது என பேரு மாணிக்கம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற ,மெகா ஹிட் சீனுக்கு நிகரான ஒரு ஹீரோ பில்டப் சீன் இருக்கு , கலக்கல் ரகம், ஆடியன்ஸ் அப்ளாஸ் அள்ளிடுச்சு


3   ரகுல் ப்ரீத்தி கேர்கடர் வடிவமைப்பு





லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)


1  லாஜிக் மிஸ்டேக் 1 − to வசனகர்த்தா செ.ரா

அரசியல் ங்கறது சுடுகாடு மாதிரி,உள்ளே போனவன் பிணமாதான் திரும்பி வருவான்
1 சுடுகாட்ல பிணத்தைப்புதைக்கறப்ப கூட வர்றவங்க உயிரோடதானே வர்றாங்க?
2 பிணமா எப்படி திரும்ப வர முடியும்?அதான் உயிர் இல்லையே?



2 ஒரு மாநில முதல்வரை பப்ளிக் ப்ளேஸ் ல ஜனங்க வேன் ல தீ வெச்சு கொளுத்துவது ஓவர் பூ சுற்றல்


3 சாய் பல்லவியின் ஓவர் ஆக்டிங் பல இடங்களில் எரிச்சல் ., அவருக்கு டூயட் சீனே வழங்காதது பெரிய பின்னடைவு ( படத்துக்கு இல்ல சாய் பல்லவி ரசிகர்களுக்கு)


4 ஒரு கட்சியின் தலைவர் செத்துட்டா அவரது வாரிசு அல்லது அவருக்கு அடுத்த இடத்தில் இருப்ப்பவர் தானே அந்த இடத்துக்கு வர முடியும் ?



சி.பி கமெண்ட்-NGK - முதல் பாதி பரபரப்பு ,விறுவிறுப்பு 2 வது பாதியில் இல்லாதது பெரிய"பின்னடைவு,க்ளைமாக்ஸ் நம்ப முடியல,சூர்யா வுக்கு வெற்றி,செல்வராகவனுக்கு தோல்வி ,பிஜிஎம் ,ரகுல்,குட் .விகடன் 41 ,ரேட்டிங்க் 2.75 / 5

Thursday, August 20, 2015

துருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா, விஜய் விலகியதில் யார் மேல் தப்பு ?-கவுதம் மேனன் உடைத்த ரகசியம்

'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா, விஜய் இருவருடன் நடந்த விஷயங்கள் என்ன என்று விவரித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.
பிரேம் சாய் இயக்கத்தில் நிதின் நடித்திருக்கும் 'கொரியர் பாய் கல்யாண்' படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். இப்படம் தமிழில் ஜெய் நடிக்க 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் தயாராகி வருகிறது.
'கொரியர் பாய் கல்யாண்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் ஈடுபட்டு வந்த கெளதம் மேனன் அளித்த வீடியோ பேட்டியில் 'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்கள் கைவிடப்பட்டது ஏன் என்று கூறியிருக்கிறார்.
'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' குறித்து இயக்குநர் கெளதம் மேனன் கூறியிருப்பது "ஒருவர் என்னிடம் வந்து நாம் நண்பர்களாக இருக்க முடியாது. தொழில்முறையாக மட்டும் பேசிக்கொள்ளலாம் என்று சொன்னால் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்னை நண்பர் என்று சொல்லிவிட்டு என்னை புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் அது எனக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் தான் சூர்யாவிடம் மனக்கசப்பு ஏற்பட்டது.
அவர் என்னிடமிருந்து 50-60 சதவீத கதையைக் கேட்டார். என்னுடன் ஏற்கெனவே 2 படங்கள் பணியாற்றியுள்ளார். நீ எப்படி செய்வாய் என எனக்கு தெரியும், நம்பிக்கை உள்ளது எனக் கூறியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். நிறைய கலந்து ஆலோசித்திருக்கலாம், என்ன செய்யலாம் எனப் பேசியிருக்கலாம். அது மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் நண்பர் என்று சொன்னவர் சட்டென புரிந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமாக இருந்தது.
'யோஹான்' கைவிடப்பட்டது இப்படியல்ல. தனிப்பட்ட முறையில் விஜய்யுடன் எனக்கு பழக்கமில்லை. அவருக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. படப்பிடிப்புக்கு 10 நாட்கள் முன்பு நான் கூறிய கதையைக் கேட்டு அவர் உறைந்து விட்டார். இந்தக் கதை நம்மூருக்கு அந்நியமாக இருக்கிறது என நினைத்தார். நம் மக்களுக்கான பிணைப்பு இல்லையென்று நினைத்தார். ஆனால் எனக்கு அந்த பிணைப்பு தேவைப்படவில்லை. அப்படித்தான் நான் எழுதியிருந்தேன். சர்வதேச தரத்தில் சண்டைக் காட்சிகளுடன், ஜேம்ஸ் பாண்ட் படத்தை போல ஒரு துப்பறியும் படம் எடுக்கதான் நினைத்தேன்.
கண்டிப்பாக உணர்வுப்பூர்வமான பிணைப்பு ரசிகர்களுக்கு வந்திருக்கும். இப்போது 'பாகுபலி'யை எல்லா மாநிலங்களிலும் பார்க்கிறார்கள். அது ஒரு வரலாற்றுப் படம், அது அந்நியமான களம் தான். ஆனால் உணர்வுப்பூர்வமாக மக்கள் அதை ரசிக்கிறார்கள். அப்படித்தான் யோஹானும் இருந்திருக்கும்.
கதைப்படி விஜய் வெளிநாட்டில் வாழ்பவர். அவரது அப்பா, தாத்தா எல்லோரும் இந்தியர்களாக இருந்தாலும் அயல்நாட்டுக்கு குடி பெயர்ந்தவர்கள். விஜய் சிஐஏ-வில் சேருகிறார். லாக்ராஸ் விளையாட்டு விளையாடுகிறார். ஃபாரீன் நாயகிகள் என அனைத்தும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் விலகியதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கு நான் வேலை செய்யும் விதம் பற்றி தெரியாது. என் படங்கள் அனைத்தையும் அவர் பாத்திருக்கிறாரா என்று கூட தெரியாது. எனவே அது புரிந்துகொள்ள முடிகிறது. அதையே சூர்யா செய்யும்போது அது என்னை பாதித்தது. ஏனென்றால் அவருக்கு நான் வேலை செய்யும் விதம் தெரியும்."


நன்றி - த இந்து

Tuesday, May 26, 2015

மாஸ் (எ) மாசிலாமணி -இயக்குநர் வெங்கட்பிரபு நேர்காணல்

‘‘பொதுவாக என் குழந்தைகளை மனதில் வைத்துத்தான் முதலில் கதையை எழுது வேன். அதன்பிறகு அந்தப்படத்தில் அஜித், சூர்யா மாதிரி நாயகர்கள் சேரும் போது கதையை அவர்களுக்கான இமே ஜுக்கு ஏற்றார்போல் மாற்றுவேன். ‘மாஸ்’ படத்தின் கதையும் அப்படித்தான். முதலில் இருந்தே குடும்பம், குழந் தைகளின் உலகம் என்று படம் அவர்களுக் கானதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே உருவாக்கினேன்’’ என்று கலகலப்பாக பேசத்தொடங்குகிறார், இயக்குநர் வெங்கட்பிரபு.
சூர்யா, நயன்தாராவை வைத்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாஸ்’ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவரைச் சந்தித்தோம்.
‘அஞ்சான்’, ‘பிரியாணி’ படங்களுக்கு பிறகு நீங்களும் சூர்யாவும் வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற சூழ் நிலையில் இருக்கிறீர்கள். ‘மாஸ்’ எப்படி வந்திருக்கிறது?
கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் எல்லா போட்டிகளிலும் 100 ரன்கள் எடுக்க முடியுமா என்ன? அப்படித்தான் சினிமாவும். நாங்கள் நிறைய வெற்றி களை கொடுத்திருக்கிறோம். அதே நேரத்தில் சில சமயங்களில் சில விஷயங்களை சரியாக கொடுக்க முடியாமல் போயுள்ளது. நாங்கள், எங் களின் ஏரியா, களம் ஆகியவற்றை உணர்ந்து ‘மாஸ்’ படத்தை எடுத்துள் ளோம்.
வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி என்றால் பாடல்கள் எப்போதுமே தனி அடையாளம் பெற்றுவிடுகிறதே?
சின்ன வயதில் இருந்தே நாங் கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்கள். நான் இயக்குநராக அடையாளம் பெறுவதற்கு முன்பே யுவன் இசையமைப்பாளராக பெரிய கவனத்தை ஈர்த்தவர். ‘சென்னை 28’ படம் வெளிவந்தபோது யுவன் சங்கர் ராஜாவைத் தவிர நாங்கள் எல்லோருமே புதியவர்கள். தியேட் டருக்கு ரசிகர்களை அழைத்து வந்ததே யுவன்தான். தொடர்ந்து நாங்கள் இணையும் போது வெற்றிப் பாடல்களாக அமைவதற்கு கடவுளின் ஆசிர்வாதம்தான் முக்கிய காரணம்.
‘மாஸ்’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால் ஒரு வித கிளாஸியான பார்வை தெரிகிறதே?
படத்தில் எதார்த்தம் அதிகமாக இழையோடும். அதே நேரத்தில் படத்தின் கலர், ஷங்கர் சார் படத்தில் வருவது போல் இருக்கும். அதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். அவருடைய மெனக் கெடல் இந்தப்படத்துக்கு பெரிய பலம். மற்றபடி இது பேய் படமா? ஆக்‌ஷன், திரில்லர் வகையா? என் றெல்லாம் நிறைய சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. அதற் காகத்தான் டீஸரைக்கூட அப்படி, இப்படி இருக்கட்டும் என்று ரிலீஸ் செய்திருந்தோம். எல்லோருக்கும் பிடித்த கமர்ஷியல் விஷயங்கள் கொண்ட படமாக இது இருக்கும்.
படத்தில் நயன்தாராவின் பங்களிப்பு பற்றி அதிகம் தெரியவில்லையே?
திறமையான நடிகை. ‘கோவா’ படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும் என்று போனில் கேட்ட தற்கே, மறுக்காமல் வந்து நடித்து கொடுத்தார். இந்தப் படத்தில் நாய கியாக எந்த அளவுக்கு ‘மாஸ்’ காட்ட வேண்டுமோ, அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் மற்றொரு படத்தின் காப்பியாகவோ அல்லது பாதிப்புடனோ இருக்கிறதே?
தேநீர் கடைக்குச் செல்கிறோம். அங்கே ஒரு விஷயத்தை நான்கு நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். அடுத்து, ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அதில் ஒரு சில இடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத் தும். அதை பெரிதாக்கி நம் வாழ்க் கையோடு இணைத்து ஒரு படைப்பாக கொடுக்க முயற்சிக்கிறோம். இது இயல்புதான். சிறு வயதில் ‘ஜட்ஜ் மெண்ட் நைட்’ என்றொரு படத்தை பார்த்தேன். நான்கு பேர் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொள்வார்கள். அந்தப் படம் அப்படியே மனதில் இருந்தது. ‘சரோஜா’ படம் எழுதியபோது அந்த தாக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. ஆனால், அதை எழுதும்போது மீண்டும் அந்தப்படத்தை பார்க்க வேண் டும் என்று தோன்றவில்லை. சின்ன வயதில் மனதில் பதிந்த அந்த நினைவை மட்டும் வைத்து எழுதி னேன். இங்கே நம் ஸ்டைலில், எப்படி சொல்ல வேண்டுமோ அந்த விதமாக சொன்னோம். இதுவும் ஒருவித இன்ஸ்பிரேஷன்தான்.
பெரிய பட்ஜெட் படங்கள்தான் சிறிய முதலீட்டு படங்களை வெளிவர விடுவதில்லை என்று கோலிவுட்டில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளதே?
சிறிய பட்ஜெட் படங்களை திரை யரங்குக்கு சென்று பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை. அதுதான் முதல் பிரச்சினை. இங்கே மக்களை திரையரங்குக்கு கொண்டு வருவதே பெரிய வேலையாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில் ஒரே நாளில் ஏழெட்டு சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆனால் என்ன செய்ய முடியும். ‘சென்னை 28’, ‘சரோஜா’ படங்களை ரிலீஸ் செய்ய பெரிய சிரமங்களை நாங்களும் எதிர்கொண்டோம். படத்தை விற்க முடியவில்லை. யுவனின் இசை பிடித் திருந்ததால் ரசிகர்கள் உள்ளே வரத் தொடங்கினார்கள். அப்படி உள்ளே வந்தவர்களுக்கு படம் பிடித்ததால் அது சரியான இடத்தை போய் சேர்ந்தது.


நன்றி = த இந்து

Monday, February 23, 2015

யோஹன் அத்தியாயம் 1 டிராப் ஆக இளைய தளபதி சொன்ன காரணம் என்ன? - கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி

  • புதிய படத்தின் படப்பிடிப்பில் சிம்புவுடன் கௌதம் வாசுதேவ் மேனன்.
    புதிய படத்தின் படப்பிடிப்பில் சிம்புவுடன் கௌதம் வாசுதேவ் மேனன்.
  • என்னை அறிந்தால்’ அஜீத், த்ரிஷா
    என்னை அறிந்தால்’ அஜீத், த்ரிஷா
“என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் விளக்கமளித்து 7 வருடங்கள் ஆகிறது. நான் எதையும் பார்க்காமல், படிக்காமல் இருப்பதால்தான் என்னால் அடுத்தடுத்த படங்களில் சுதந்திரமாக பணியாற்ற முடிகிறது” என்று ஆவி பறக்கும் தேநீர் கோப்பையை கையில் பிடித்தபடி சிரிக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.
‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றிக்களிப்பில் இருக்கும் அவரை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
தொடர்ச்சியாக போலீஸ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே. இதற்கான காரணம் என்ன?
நான் இயக்கிய ‘மின்னலே’, ‘விண் ணைத் தாண்டி வருவாயா’, ‘பச்சைக்கிளி முத்துச் சரம்’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்களெல்லாம் போலீஸ் படங்கள் இல்லையே. ஆக்‌ஷன் பாணியில் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கும் போது, போலீஸைச் சுற்றி நடக்கும் விஷயங்களை வைத்து பண்ணுகிறேன்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் குற்றங்கள் என்பது இருக்காது. ஆனால், போலீஸ் அதிகாரி களின் வாழ்க்கையில் குற்றங்கள், ஆபத்து நேரிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஆக்‌ஷன் படங்களைப் பண்ணும் போது போலீஸ் படங்களைப் பண்ணுகிறேன்.
அன்புச்செல்வன், ராகவன், சத்யதேவ். இதில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?
என்னைப் பொறுத்தவரை மூன்றுமே ஒரு கதாபாத்திரம்தான். 28 வயதில் இருக்கிற அன்புச்செல்வன்தான், 38 வயதில் சத்யதேவ். என் மூன்று போலீஸ் அதிகாரி பாத்திரங்களையும் எடுத்துப் பார்த்தால், நிறைய விஷயங்கள் ஒரே மாதிரி இருக்கும்.
‘காக்க காக்க’ படம் முடிந்தவுடன் ‘என்னை அறிந்தால்’ படத்தின் தொடக்கத்தை வைத்தால், இது அங்கிருந்து தொடங்கிய படம் மாதிரிதான் இருக்கும்.
‘காக்க காக்க’ படத்தில் சின்ன வயது சூர்யாவை நான் காட்டவில்லை. ‘என்னை அறிந்தால்’ படத்தில் காட்டியது அவரு டைய சின்ன வயது வாழ்க்கையாக இருந்திருக்கலாம். மாயா இறந்தவுடன் விவாகரத்தான ஒரு பெண்ணை சந்தித்து இருக்கலாம். என் மூன்று போலீஸ் அதிகாரிகள் பாத்திரத்தில் எனக்குப் பிடித்தது சத்யதேவ் தான்.
‘என்னை அறிந்தால்’ இரண்டாம் பாகம் குறித்து நிறைய செய்திகள் வந்துகொண்டு இருக்கிறதே?
‘என்னை அறிந்தால்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக் கிறது. இதில் சத்யதேவுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதை வைத்து இரண்டாவது பாகத்தின் கதையை எப்படி வேண்டுமானாலும் கொண்டு போகலாம். அதை சண்டைப் படமாகவும் எடுக்கலாம்.
உணர்ச்சிபூர்வமான கதை யாகவும் இருக்கலாம். இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எழுதிவிட்டு அதை அஜீத் சாரிடம் கொடுப்பேன். கண்டிப்பாக அவர் அந்தப் படத்தை பண்ணுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
‘துருவநட்சத்திரம்’, ‘யோஹன்’, ‘சென் னையில் ஒரு மழைக்காலம்’ படங்களின் நிலைமை என்ன?
எனக்கே தெரியாது. ‘யோஹன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த 2 நாட் களுக்கு முன்பு ரத்தானது. ‘சென்னை யில் ஒரு மழைக்காலம்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி 25 நாட்கள் நடத்தினோம்.
அப்படத்தைப் பொறுத்தவரை அதில் நடித்தவர்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டும் என்று நினைத்தேன். எங்கேயோ தப்பு நடக்கிறது என்று தோன்றியதால் அதை நிறுத்தினேன். மூன்று படங்களையும் கண்டிப்பாக என்றைக்காவது ஒரு நாள் தொடங்குவேன். அதில் சந்தேகமில்லை.
சூர்யா, விஜய் இருவரிடமும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் ‘துருவ நட்சத்திரம்’ ‘யோஹன்’ படங்களை நிறுத்தியதற்கு காரணமா?
என்னைப் பொறுத்தவரை அவர் களுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. ஒரு நடிகர், கதையை நம்பி படம் பண்ணும் போது அப்படத்தின் கதை அவர்களுக்கு முழுமையாக பிடிக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் கதை விஷயத்தில் கொஞ்சம் உடன்பாடு இல்லை.
‘இந்தக் கதை வேண்டாம் கெளதம். வேற ஒண்ணு பண்ணலாம்’ என்று சொன்னார்கள். எந்த காரணத்துக்காக இதைப்பற்றி சூர்யா வெளியே சொன்னார் என்பது எனக்கு தெரியவில்லை. அது அவர்களுடைய கருத்து. அதில் நான் எந்தத் தப்பும் சொல்லமாட்டேன்.
கெளதம் மேனன் படங்கள் என்றாலே ஏ சென்டரில் மட்டும்தான் நன்றாக ஓடும் என்று ஒரு பேச்சு இருக்கிறதே?
நான் படம் பண்ணும் போது ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர் என்றெல்லாம் நினைத்து படம் பண்ணுவதில்லை. எனக்கு என்ன தெரியுமோ அதைப் பண்ணுகிறேன். நாயகர்கள் கேட்கும் போது அவர்களோடு இணைந்து பண்ணு கிறேன். என்னுடைய வண்டி ஓடிக் கொண்டே இருக்கிறது.
படம் வெளியான பிறகு எந்த சென்டர்களில் படம் சரியாக போகவில்லை என்று நான் கேட்க மாட்டேன். ஏ சென்டரில் மட்டும்தான் என் படம் ஓடுகிறது என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதுதான் என்னுடைய சுபாவம்.
‘வாரணம் ஆயிரம்’, ‘என்னை அறிந் தால்’ உள்ளிட்ட உங்களுடைய படங்கள் மிகவும் நீளமாக இருக்கிறதே. இப்போது கூட 'என்னை அறிந்தால்' படத்தில் சில காட்சிகளைக் குறைத்திருக்கிறீர்கள்?
எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் தயாரிப்பாளராக இருந்தால் கண்டிப்பாக காட்சிகளைக் குறைத் திருக்க மாட்டேன். தயாரிப்பாளர், ‘எனக்கு கொஞ்சம் பயமாக இருக் கிறது, எந்தவொரு இடத்திலும் மெது வாக நகர்கிறது என்று ரசிகர்கள் சொல்லிவிடக் கூடாது’ என்றார். என்னிடம் கேட்டுவிட்டுத்தான் தயாரிப் பாளர் சில காட்சிகளைத் தூக்கினார்.
ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. முதல் 3 நாட்கள் முடிந்தவுடன், வேறு ஒரு தரப்பு மக்கள் இப்படத்தைப் பார்க்க வருவார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டமாக படம் பார்க்காமல் அமைதியாக பார்ப்பார்கள். அவர் களுக்கு இது பிடிக்கும்.
போலீஸ், காதல் இந்த இரண்டையும் தாண்டி வேறு கதைக்களத்தில் எப்போது படம் பண்ணுவீர்கள்?
எனக்கு போலீஸ், காதல் இரண்டை யும் தவிர வேறு தெரியாது. அதுதான் உண்மை. எனக்கு தெரிந்ததைத்தானே சினிமாவாக பண்ண முடியும். ஆக்‌ஷன் என்று இறங்கினால் அது போலீஸ் படமாக இருக்க வேண்டும் என்று நினைக் கிறேன். காதல் என்று இறங்கினால் இப்படித்தான் இருக்கும் என்று நினைக் கிறேன்.
இந்த இரண்டுக்குமே ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது. அவர்களுக்காக படம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். என்றைக்கு அந்த ரசிகர் கூட்டம் குறைகிறதோ அன்றைக்கு வேறு படங்களைப் பண்ணுவேன்.
தற்போது படங்களின் சென்சாரில் நிறைய பிரச்சினைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?
சென்சாரை பொறுத்தவரை அவர்கள் செய்வது சரி என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ‘என்னை அறிந்தால்’ படத்தைப் பொறுத்தவரை குழந்தைகள் பார்க்கலாம், ஆனால் அவர்களுடன் பெற்றோர்கள் இருப்பது நல்லது என்று எனக்கு தோன்றியது.
அதைத்தான் சென்சாரிலும் சொல்லி யிருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத் ததில் எனக்கு எந்தவொரு மாறுபட்ட கருத்துமே இல்லை.
வரிச்சலுகை விஷயங்கள்தான் இன்னும் கொஞ்சம் மாற வேண்டும் என்று தோன்றுகிறது. யு/ஏ என்றால் ஒரு வரி, யு என்றால் ஒரு வரி என்ற நடைமுறை இங்கு மட்டும்தான் இருக்கிறது. வேறு எங்கும் கிடையாது. அதனால் தான் தயாரிப்பாளர்கள் யு சான்றிதழ் பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


நன்றி - த  இந்து

Friday, July 05, 2013

சிங்கம் 2 - சினிமா விமர்சனம்

நாடு பூரா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு போலீஸ் ஆஃபீசர் எந்த மாறு வேஷமும் போடாம  ஒரு சாதாரண ஸ்கூல்ல  என்சிசி மாஸ்டரா ஒர்க் பண்றார். படத்தோட டைரக்டர் தவிர மத்த எல்லாருமே கேனயனுங்களா இருக்கறதால யாரும் அதை கண்டுக்கலை , சந்தேகப்படலை .ஹீரோவோட மாஸ்டர் பிளான் என்னான்னா ஆயுதக்கடத்தல் கும்பலைக்கண்டுபிடிச்சு அவங்களை அழிக்கறது .பொண்ணு பார்க்கப்போறப்போ பொண்ணோட தங்கச்சியை சைட் அடிக்கறதில்லையா? அந்த மாதிரி அவருக்கு மாட்டுனது போதை மருந்து கடத்தல் கூட்டம்.ஹீரோ அந்தக்கூட்டத்தை எப்படி பிடிக்கறார் என்பதே ரெண்டே முக்காஆஆஆல்  மணி நேரம் ஓடும் சிங்கம் 2 படத்தோட திரைக்கதை  .


சும்மா சொல்லக்கூடாது , சூர்யாவுக்கு  போலீஸ் யூனிஃபார்ம் ஒரு கம்பீரத்தைக்கொடுக்குது . காக்க காக்க லெவலுக்கு இல்லைன்னாலும் அவரோட கர்ஜனை , தோரணை எல்லாம் செம . போலீஸ் யூனிஃபார்மில் மிடுக்காக நடப்பதும் , பாடி லேங்குவேஜும்  சூப்பர் . ஆனா வசனம் பேசும்போது மட்டும் பல்லைக்கடிச்சுக்கிட்டு கஷ்டப்பட்டு பேசறார். டூயட் காட்சிகளில் விஜய்யை டச் பண்ணப்பார்க்கறார்.


ஹீரோயின் ஹன்சிகா தான் .பல படங்களில்  கொழுக் மொழுக்  கொழுக்கட்டை மாதிரி அழகாக வந்தவர் இதில் சாதா கட்டை செண்பகமா வர்றார். இதுல இவர் ஸ்கூல் ஸ்டூடண்ட்டாம் . லட்சுமிமேணன்க்கு போட்டியா காட்டிக்கறாரோ என்னவோ? இவரோட காதல்ல ஆழம் இல்லாததால எடுபடலை 




 சைடு ஹீரோயின் அனுஷ்கா . செர்ரிப்பழ உதட்டழகி .நெய்யில் வறுத்த ப்ரெட் அழகுக்கன்ன அழகி . பட்டு சேலை கட்டி  மண மேடையில் அவர் அமர்ந்திருக்கும்போதுதான் நிறைய பேருக்கு கல்யாண ஆசையே வருது .ஆளை அசத்தும் அழகு . பாடல் காட்சிகளில் அவர் செய்யும் முக சேஷ்டைகள் அக்மார்க் அனுஷ்கா சேட்டைகள் 


வில்லனாக யாரோ ஒரு சிங்கள ஆள். ஆஜானுபாகமான தோற்றம். எள்ளலான நடிப்பு. தேறிடுவார். அது போக கண்ணே கனியமுதே , சங்கமம் பட் ஹீரோ ரகு(மான்) இன்னொரு வில்லன். ஓக்கே தான் நடிப்பு 


 படம் செம ஸ்பீடாக போகும்போது மீண்டும் ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்குவது போல் சந்தானம் காமெடி . களை கட்டுகிறது தியேட்டர். கல்லா கட்டுகிறது கவுண்ட்டர் .ஆனா இதுல சந்தானம் போர்ஷன் மட்டும் 2 வருஷம் முன்னாடி எடுத்திருப்பாங்க போல. சந்தானம் ஆள் ரொம்ப இளைச்சிருக்கார், பிரிண்ட்டும் பழசு மாதிரி இருக்கு 


 விவேக் போலீஸ் ஆஃபீசராக வந்து ஒரே  ஒரு இடத்தில் சிரிக்க வைக்கிறார். சந்தானப்புயல் முன் விவேக் காணாமல் போய் விடுவது பெரும் சோகம் . இந்த கேரக்டரில் விவேக் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் 


 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.பொதுவாக தமிழில் பாகம் 2 எடுபடாது. உதா - நாளைய மனிதன் ஹிட், அதிசய மனிதன் பிளாப் , பில்லா சூப்பர் ஹிட், பில்லா 2 சுமார் ஹிட் , அமைதிப்படை மெகா ஹிட் , நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ அட்டர் பிளாப். இந்த செண்ட்டிமெண்ட்டை உடைத்த காஞ்சனா ( முனி 2 ) வரிசையில் சிங்கம்2 வும் சேர்ந்தது , அதுக்கு பக்க பலமாக விறு விறுப்பான திரைக்கதை அமைத்தது 


2. பட்டப்பகலில் கஸ்டம்ஸ் ஆபீசரை கொலை செய்து விட்டு அவசர அவசரமாக தடயத்தை வில்லன்கள் மறைக்கும் காட்சி 


3. சந்தானம் ஒவ்வொரு முறையும் தான் மாட்டிக்கொள்ளும்போது எதிராளியின் காலில் விழுந்து பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே என கெஞ்சுவது  தியேட்டரில் செம சிரிப்பு . ஒரு சாதாரண காமெடியைக்கூட ஒரு நல்ல காமெடியன் நல்ல காமெடி ஆக்க முடியும் என்பதற்கு உதாரணம் . ஒருத்தர் வேட்டையை உருவதும் , ஒரு ரவுடி லேடி சேலை பாவாடையை இழுப்பதும் கொல் சிரிப்பு 


4. ஆபரேஷன் டி  என்பது இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டாதது . அதாவது எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போட்டுத்தள்ளுவது , கிட்டத்தட்ட என்கவு்ண்ட்டர் மாதிரி . இதுல நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு  ( துப்பாக்கில இப்படி ஒரு சீன் வரும் )


 


5. டூயட் காட்சிகளில் அனுஷ்காவை துள்ளிக்குதிக்க வைத்து ஆடியன்சை துள்ளிக்குதியாட்டம் போட வைத்தது . மற்ற காட்சிகளில் அழகுப்பதுமையாய் , சேலையில் வரும் சோலையாய் தென்படும் அனுஷ்  டூயட்டில் மட்டும் இறங்கி ஆடி இருக்கார் , கிறங்க வைக்கும் அழகு  ( கா விட்டதால் அனுஷ்காவிடம் கா விட்டுட்டேன் என பொருள் இல்லை, சும்மா செல்லம் ) இந்தப்படத்துக்கு சாமார்த்தியமாய் சென்சாரிடம் யு சர்ட்டிஃபிகேட் ”வாங்கியதுக்கு”: ஸ்பெஷல் பாராட்டு

6. சிங்கம் டான்ஸ் பாட்டு செம. அனுஷ்காவுக்கு செம சீன்

7. விஸ்வரூபம் கமலை நையாண்டி செய்யும் யாரென்று  தெரிகிறதா சந்தானத்தின் ஃபைட் சீன் அதகளம் . தியேட்டரில் அப்ளாஸ் மழை ( வீட்டில் டி விடியில் பார்த்தால் இந்த சுவராஸ்யம் மிஸ் ஆகும் ) அதே போல் அவரது  ஓப்பனிங்க் காட்சியில் எந்திரன் ரஜினையையும் விட்டு வைக்கலை


8. கண்ணுக்குள்ளே கண்ணை வெச்சு பாட்டு ஹிட் ஆகும் . அந்தப்பாட்டுக்கு டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் ஓக்கே ரகம் 




 இயக்குநரிடம் சில கேள்விகள்  


1.  ஜஸ்ட்  15 வயசு ஆன ( !!!!????)  பத்தாங்கிளாஸ் படிக்கும் பிகரான ஹன்சிகா போலீஸ் ஆஃபீசரான 37 வயசு சூர்யாவை காதலிப்பது எல்லாம் ஓக்கே , அவர் தன் காதலை சூர்யாவிடம் சொல்லும்போது அவர் அப்பவே “ ஏம்மா , நான் ஆல் ரெடி ஒரு ஃபிகரை உஷார் பண்ணிட்டென்” அப்டினு சொன்னா அப்பவே மேட்டர் ஓவர் , அதை கடைசி  வரை சொல்லாம இதெல்லாம் சரிப்பட்டு வராது அப்டினு ஏன் பம்மறார்? சைடுல இதையும் ஓட்டிக்கலாம்னு நினைச்சுட்டாரா?


2. ஹன்சிகா காண்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கார். எக்சாம் கொஸ்டீன் பேப்பரை திருடும்போது  வெறும் 5 கிராம் ஏ 4 பேப்பர் அவர் நெத்தில பட்டு லென்ஸ் விழுமா ? அப்படி விழுந்தா உடனே அவருக்கு அது  தெரியாதா? ஏன் மாட்டிக்கறார்? 



3. அந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் ஹன்சிகா கண்ணாடி போட்டுட்டு வர்றார் . அவரை மாதிரி கண்ணாடி போட்ட ஃபிகருங்க 4 பேர் இருக்கும் போது ஹீரோ கரெக்டா எப்படி ஹன்சிகாவை சந்தேகப்பட்டு உண்மையை கண்டு பிடிக்கறார்? 


4. ஹன்சிகா போலீஸ்க்கு போன் பண்ணி ஸ்கூல்ல கலவரம் நடக்குதுன்னு சொல்றார். போலீஸ் வருது. அவர் தான் யார்னு யார் கிட்டேயும் சொல்லலை , போலீஸ் கிட்டேயும் சொல்லலை , எப்படி சந்தானம் , ஹீரோ 2 பேரும் ஹன்சிகா தான் ஃபோன் பண்ணினார்னு கண்டு பிடிக்கறாங்க? 


5. போலீஸ் ஆஃபீசரான ஒருவர் டியூட்டிக்காக  தற்காலிகமா வேலையை ரிசைன் பண்ணின மாதிரி நடிக்கறார் ஓக்கே , அதை தன் சொந்த அப்பா கிட்டேயே யாராவது சொல்லாம இருப்பாங்களா? சொந்த பொண்டாட்டி கிட்டே கூட அதை சொல்ல மாட்டேன்னு ஹீரோ பஞ்ச் பேசுவது ஓக்கே , பொண்டாட்டிங்கன்னா ஓட்டை வாய்ங்களாத்தான் இருக்கும் , ஆனா அப்பா கிட்டே ஏன் சொல்லலை? அதை சாக்கா வெச்சு வரும் செண்ட்டிமெண்ட் காட்சிகள் உஷ் அப்பா ... 


6.  சாதாரண ஏ சி யான ( அசிஸ்டெண்ட் கமிஷனர் ) ஹீரோ உள்ளே வரும்போது உள் துறை அமைச்சரே எந்திரிச்சு நின்னு மரியாதை தர்றாரே அவர் ரொம்ப சாதாரண துணை நடிகரோ? 




7. வில்லன்க லாட்ஜ்ல ரூமை  வெளிப்பக்கம் பூட்டிக்கிட்டு உள்ளே சீட்டாடிட்டு இருக்காங்க . செல் ஃபோனை வைப்ரேஷன் ஆர் சைலண்ட்ல மோடுல போடாம அப்படியா பெப்பரெப்பேன்னு ஹீரோ கிட்டே மாட்டிக்குவாங்க ?


8. காலியா இருக்கும் குஷன் சேர்ல வில்லன் ஈட்டியால லாங்க்ல இருந்து வீசறார் . அது சக்னு போய் செண்ட்டர்ல குத்தி நிக்குது . நீங்க வேணா செக் பண்ணிப்பாருங்க . காலியா இருக்கும் சேர் மேல 10 அடி தூரம் தள்ளி நின்னு ஈட்டி எறிஞ்சா அந்த சேர் கீழே விழும் . ஆனா அப்படி குத்தி நிக்காது. யாராவது சேரைப்பிடிச்சுக்கிட்டு நின்னாத்தான் அப்படி குத்தும் ( இதை செக் பண்றேன் பேர்வழின்னு எங்க வீட்ல இருந்த ஒரே ஒரு குஷன் சேர் கோவிந்தா )


9. பொண்ணு சமப்ந்தம் பேசும் இடத்தில் அனுஷ்கா & கோ ஏற்பாட்டின்படி அங்கே நடப்பதை அறிய செல்போனில் வீடியோ எடுத்து லைவ் ஷோ பார்க்கறாங்க . அந்த லேடி அப்படி பப்ளிக்கா ஃபோனை கைல பிடிச்சுட்டு நிக்குது. யாருமே அதை கவனிக்கலையா? ஹீரோ போலீஸ் ஆஃபீசர் வேற , அவருக்குமா தெரியலை  ?


10. ஆபரேஷன் டி கேன்சல் ஆகிடுச்சு , உள்துறை அமைச்சர் அந்த லெட்டர் உங்களுக்கு நாளை தான் கைல கிடைக்கும். அதுக்குள்ளே நைட்டே மேட்டரை முடிச்சுடுங்கனு சொல்றார். இந்த மாதிரி அதி முக்கிய அரசாங்க ஆணைகள்  தந்தி மூலமாகவோ , ஃபோன் கால்  மூலமாவோ பிறப்பிக்கப்படும் , எழுத்துப்பூர்வமான ஆணைகள் சு ம்மா ரெக்கார்டிங்க் பர்ப்பஸ்க்கு வேணும்னா வாங்கி வெச்சுக்கலாம். சி எம் ஃபோன் ல ஆபரேஷன் டி கேன்சல் பண்ணியாச்சா? என ஏன் கேட்கலை? 


11. படத்தோட ஓப்பனிங்க்ல வர்ற சாதா அடியாள் தான் மெயின் வில்லன் என்பதை ஆல்ரெடி குருதிப்புனல் , புலன் விசாரனை உட்பட பல படங்கள் ல பார்த்தாச்சே பாஸ் 


12.  ஹன்சிகா - அனுஷ்கா சக்களத்தி சண்டை ரொம்ப கேவலமா இருக்கு. அந்த சீனுக்கு வசனம்  எழுதுனவர் போரிங்க் பைப்ல தண்ணி பிடிக்கும் பொம்ப்ளைங்க ரேஞ்சுக்கு இறங்கி .. உஷ் அப்பா


 13 . ஒரு சர்வதேச  கடத்தல்காரனை லாக்கப்ல போட்ட ஹீரோ வெளில கிளம்பும்போது யாராவது வில்லனை மீட்க வரலாம்னு சந்தேகப்பட்டு  லாக்கப் சாவியை எடுத்துட்டுப்போறார். செம காமெடி . சாவியை எடுத்துட்டா அந்த ரூமை யாராலும் திறக்க முடியாதா? ஹய்யோ அய்யோ





மனம் கவர்ந்த வசனங்கள் 


1.   நான் எல்லாம் டேஞ்சரை டெபாசிட் பண்ணிட்டு அபாயத்தை வம்புக்கு இழுக்கறவன் # சந்தானம்


2. சூர்யா பஞ்ச் - நீ என் வீட்டுக்கு வந்தே.நான் தாங்கிட்டேன்.நான் உன் வீட்டுக்கு வந்தா நீ தாங்க மாட்டே # பக் சீட் பிகர் மேல வி பு சி



3.  தூரத்துல இருக்கற ஆளை 10 ஸெகண்ட்ஸ் ல போட்டுட்டேன்.பக்கத்துல இருக்கற உன்னைப்போட எவ்ளவ் நேரம் ஆகும் ? # நோ டபுள் மீனிங்.ஹீரோ டூ வில்லன் ்


4. வில்லன் ன் கேவலமான பஞ்ச் - நான் கெளுத்தி மீன் இல்ல.வலைல விழுந்தாலும் உலைல விழ மாட்டேன்


5.  தகுதி இல்லாதவன் தமிழ் வாத்தியார்.புத்தி இல்லாதவன் புவியியல் வாத்தியார் .அறிவே இல்லாதவன் அறிவியல் வாத்தியார் # சந்தானம்


6. சந்தானம் - உனக்கு நான் பேர் வாங்கித்தர்றேன்.நீ எனக்கு பீர் வாங்கித்தந்துடு.எப்டி டீலிங்?


7. சந்தானம் - டீச்சர் ஜாக்கெட்ல ஓஜோன்ல ஓட்டை விழுந்த மாதிரி ஏகப்பட்ட பொத்தல்கள் இருக்கே


8. சந்தானம் - அய்யய்யோ.பிரச்சனையை பேரம் பேசி வாங்கிட்டேன் போல


9. பேசாம அவங்க கிட்டே பாவ மன்னிப்பு கேட்டுடு.


 சந்தானம் - பாவ மன்னிப்பு ,பாசமலர் எல்லாம் கேட்க அவங்க என்ன டிவிடி கடை ஓனரா? 


10. இந்த வயசுல பிகர் வர்றதும் ,வயசானா சுகர் வர்றதும் வாழ்க்கைல சகஜம் # சி 2 சந்தானம்

 

11. சந்தானம் - ஸாரி மேடம்.உங்களுக்கு மேரேஜ் ஆகி 3 புருசனுங்க இருக்கற மேட்டரே எனக்கு இப்போ தான் தெரியும்


12. சந்தானம் - என்னய்யா? போலீஸ்னா எல்லாரும் வயித்தில சோத்தை கட்டிட்டே அலைவாங்ளோ? #தொப்பை


13. ஒருத்தரை நமக்குப்பிடிச்சுப்போச்சுன்னா அவங்க மேல நமக்கு இனம் புரியாத ஒரு அன்பு வரும்.அது காதல் இல்லை.இன்பேக்சுவேசன்


14.  சந்தானம் = சார்.பாயே மூடு,பீச்சே மூடுனு சொல்றீங்ளே.பாயை மூடிடலாம்.பீச்சை (BEACH) எப்டி மூடுவீக?


15.  நீங்க அம்மா , அப்பா பேச்சை கேட்பீங்களா 


 அவங்க பேச்சைக்கேட்காம? அவங்க எனக்கு தெய்வம் சார் ( சிவகுமாரை இம்ப்ரெஸ் பண்ண வைக்கப்பட்ட வசனம் போல ம்)


16.  என்னது? நாய் மோப்பம் பிடிக்குமா?


 பின்னே , உன்னை மாதிரி பீடி பிடிக்கும்னு நினைச்சியா?



17. ஏன் என்னைப்பார்த்து நாய் குரைக்குது?

 நாயாவது உன்னைப்பார்க்குதேன்னு சந்தோஷப்படு


18. ஆமா , நீ வேட்டி கட்டி இருக்கியே? ஜட்டி போட்டிருக்கியா? பார்த்துடா, நாய் கவ்விட்டுப்போய்டப்போகுது


19.  ப்ளூ கிராஸ் என்னைப்பிடிச்சுட்டுப்போனாலும் பரவாயில்லை ,  3 நாயையும் கல்லால அடிக்காம விட மாட்டேன்


 2 நாய் தானே இங்கே இருக்கு ?

 அந்த 3 வது நாய் நீ தாண்டா


 20.  மிஸ் ! எங்கே போய் இருந்தீங்க?

 சொல்ல மாட்டேன்


 நீ சொல்லலைன்னா 8 மணி நியூஸ்ல சொல்வாங்களா? அட சொல்லம்மா/








21.  செல் ஃபோன் கனெக்‌ஷனை கட் பண்ணுங்க , கம்யூனிகேஷனை கட் பண்ணாலே நாட்ல பாதிக்கலவரம் குறைஞ்சுடும்



22. இனிமே என் பொண்ணு காய்கறி வாங்கக்கூட சைரன் வெச்ச கார்ல தான் போவா


23. இவங்களை சமாளிக்க க்ளீன் போலீஸ் பத்தாது , கிரிமினல் போலீஸ் வேணும்  ( நாட்டுல 75 % அப்டித்தானுங்க்ணா)


24 விருந்தாளியையே இப்படி ப்வெளுக்கறாங்களே இந்தம்மா  இவங்க புருசனை எப்படி வெளுப்பாங்க


25. காதல்னா  என்ன? நெஞ்சுல வெச்சு நினைப்புல வாழனும்

26. அத்து மீறி மனசுல நுழைய நினைச்சா அது காதல் ஆகிடாது


27. தொகுதிப்பிரச்சனைக்காக என்னைக்காவது பி எம் கிட்டே பேசி இருப்பீங்களா? எம் பி சார். ஒரு பொறுக்கிக்காக இப்படி போன் போட்டு பேசறீங்க?


28. அமலாபால் நடிச்ச படம் மைனா , ஐ ஆம் கமிங்க் ஃப்ரம் சைனா , என்னை விட்டுடு நைனா # சந்தானம்





















படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ் 


1. அய்யய்யோ அனுஷ்கா அழுகுதே.இப்போவே பஸ் ஏறி அனுஷ்காவுக்கு ஆறுதல் சொல்லனும்



2. அழகு ரதி அனுஷ்கா முன்னால பப்ளிமாஷ் பப்ஸ் ஹன்சிகா எடுபடல


3. ஹீரோ சார் ஹரி சார் அது ஏன் சார் வசனம் பேசும்போது பல்லைக்கடிச்சுக்கிட்டே பேசறார் சார்?

4.   சிவப்புக்கலர் ஜாக்கெட் ,மஞ்சள் கலர் பட்டு சேலை அனுஷ்கா திருவாரூர் தேர் தேவதை

5. 50 கிமீ வேகத்துல போகும் ப்ஸ்ஸை ஹீரோ ஓடியே துரத்தி ஏறிட்டாரு # சிங்கம் சிங்கம் துரை துரை  சிங்கம் டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்டட டொய்டங்

6. ஹீரோவோட அப்பா மேரேஜ்க்கு ஓக்கே சொல்றது 6 வது ரீல் ல.அதை ஹீரோயின் தன் அப்பா கிட்டேதகவல் சொல்றது 12 வது ரீல் ல # 6 மனமே 6


7. அனுஷ்காவுக்கு உதடு் மட்டும் இவ்ளோவ் சின்னதா இருக்கே?்



8. டூயட் சீனில் அனுஷ்காவின் முக சேஷ்டைகள் கலக்கல் # அனுஷ் பழம்


9. ஸார்.ஹன்சிகா சார்.பாத்ரூம்ல குளிக்குது ஸார். # சொந்த வீட்ல பாத்ரூம்ல தாழ் போட்டுட்டு குளிக்கும்போது எதுக்கு டர்க்கி டவல்? எப்டி  நம்ம லாஜிக் கொஸ்டீன்? 


10 சந்தானம் - அனுஷ்கா டூயட் கலக்கல் # சூர்யா பாவம் 


11. ஹன்சிகா டென் த் படிக்கற ஸ்டூடண்ட்டாம்.அய்யோ ராமா


12. ஒத்தை ஆள் 10 பேரை அடிச்சா என்ன அர்த்தம்?


 சி பி = 10 பேரும் சொத்தைப்பசங்கனு அர்த்தம் பாஸ் 


13. 120 கிமீ வேகத்துல 4,ஜீப் ஹீரோவைத்துரத்துது.பிடிக்க முடியல.செம ஓட்டம்.கின்னஸ் ரெக்கார்ட்


14. சாமி விக்ரமை மறைமுகமாத்தாக்கறாரு சூர்யா.என்ன தகராறோ?


15. ஓப்பனிங் சீன் அஞ்சலிக்கு குத்தாட்டம்


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் =41

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3 / 5


சி பி கமெண்ட் - ஈரோடு சீனிவாசா வில் படம் பார்த்தேன். காலை 7 மணி ஷோ , என்னை மாதிரியே வெட்டியா ஊர்ல பல பேர் இருக்காங்க போல , பல்லு கூட துலக்காம வந்துட்டாங்க   சிங்கம் 2 - மாமூல் ஆக்சன் ஹரி பிரான்ட் மசாலா - தலைவா வரும் வரை தாங்கும். படம் ஸ்பீடாத்தான் போகுது , ஆனா காது வலிக்குது. அஞ்சலி ஒரு பாட்டுக்கு ஓப்பனிங்க்ல ஓபனா ஒரு குத்தாட்டம் போடுது, அதனால போகனும்னா யாரும் லேட்டா போகாதீங்க

 


Sunday, December 02, 2012

மாற்றான் - சூர்யா நடிக்காமலேயே படமாக்கப்பட்டதா? ஒளிப்பதிவாளர் பேட்டி

அழகியலும் அறிவியலுமாக கலந்துகட்டி அடிக்கிறது சௌந்தர்ராஜனின் கேமரா. மாற்றான் படத்தின் ஒளிப்பதிவுக்காக அதிகமாக பேசப்பட்டவர். காரணம் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவி கதையை நிஜமாக்கியது இவருடைய ஒளிப்பதிவு. கேமரா கோணத்தின் புதிய அம்சங்களோடு புறப்பட்டிருக்கும் சௌந்தர்ராஜனின் எக்ஸ்பிரஸ் ஒளிப்பதிவு பற்றி இங்கே...








.நீங்கள் ஒளிப்பதிவாளரான கதை..






நான் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போதுதான் சினிமா ஒளிப்பதிவில் தீவிர ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு முன்புகூட சினிமா ஆசை இருந்தது. ஆனால் அது சராசரி ரசிகனுக்குரியதுதான். கல்லூரி முடிந்தவுடன் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவர்தான் கே.வி.ஆனந்திடம் சொன்னார். அவரிடம் தொடர்ந்து எட்டு வருடம் இருந்தேன். நான் முதன் முதலில் தனியாக பண்ணிய படம் "சுக்ரன்'. இந்த படம்தான் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் அறிமுகம். கே.வி.ஆனந்திடமே "கனா கண்டேன்' படம் ஒளிப்பதிவு செய்தேன். இதுவரை ஒன்பது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இது தவிர 600 விளம்பரப் படங்களும், சில குறும்படங்களும் செய்திருக்கிறேன்







ஒளிப்பதிவில் இன்றைய தொழில்நுட்பங்கள் பற்றிச் 


சொல்லுங்களேன்?






மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. முக்கியமானது டிஜிட்டல். இந்தமாற்றத்தோடு போட்டி போடாதவர்கள் பீல்டு அவுட் ஆகவேண்டியதுதான். எல்லா ஒளிப்பதிவாளருமே இதற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். பிலிம் டூ டிஜிட்டல் மாற்றம் என்ன செய்திருக்கிறது என்றால் பல பிலிம் கம்பெனிகளையே மூடவைத்திருக்கிறது. 


இப்போது "கொடாக்' கம்பெனி மட்டும்தான் இருக்கிறது. அதுமட்டுமா... இன்று செல்போனிலேயே படம் எடுக்கக்கூடிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அதை தியேட்டரில் வெளியிடும் போதுதான் பெரிய ஒர்க் தேவைப்படுகிறது. காட்சிகளுக்கு விஷுவல் எபெக்ட் சேர்க்கத்தான் ஆள் தேவை. இந்த இடத்தில் விஷுவல் எபெக்டரும் ஒளிப்பதிவாளரும் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாக்கி இருக்கிறது. ஆக இயக்குநரின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு டெக்னிக்கல் விஷயங்களில் புதுமை செய்கிற ஒளிப்பதிவாளர்கள்தான் இப்போதைய தேவை. 








வெளிநாடுகளில் எடுக்கப்படும் திரைப்படங்களில் இருக்கும் தத்ரூபம், சண்டைக் காட்சிகளில் இருக்கும் சாகசம், காட்சியில் இருக்கும் ஸ்டைலிஷ் போன்றவை இந்திய, தமிழ்ப்படங்களில் இல்லையே?






கிடையவே கிடையாது. வெளிநாட்டுப் படங்களுக்கு நம்மூர் டெக்னிஷியன்கள் நிறைய பேர் ஒர்க் பண்ணுகிறார்கள். சந்தோஷ் சிவனை அமெரிக்க திரைப்படவுலம் ஒரு முக்கிய மெம்பராகவே சேர்த்திருக்கிறது. உலக சினிமாவில் பயன்படுத்தப்படும் அத்தனை தொழில்நுட்பங்களும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் இருக்கும் மணிகண்டன், ஆர்.டி.ராஜசேகர், ரவி.கே.சந்திரன் போன்றோர் சர்வதேச தரத்தில் இயங்குகிறார்கள். ஆனால் இங்கே இருக்கும் பிரச்னை என்ன என்று பார்த்தால் கதை. அதுதான் மற்ற விஷயங்களைத் தீர்மானிக்கிறது. ஸ்கிரிப்ட் தான் பைபிள், அதற்குத் துணை நிற்பதுதான் டெக்னிக்கல். இங்கிருப்பவர்கள் "ஸ்கைபால்' செய்தால் அதே வேகத்தில் செய்யப்போகிறார்கள். அது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காது.






 "மாற்றான்' படத்தின் தொழில்நுட்பத்தை வைத்து சூர்யா இல்லாமலே சூர்யா படம் எடுக்க முடியுமாமே... அது பற்றி?






உண்மைதான். ஒருவேளை எம்.ஜி.ஆர் காலத்தில் இந்த டெக்னிக் இருந்திருந்தால் கொஞ்சம்கூட சந்தேகம் வராத அளவுக்கு எம்.ஜி.ஆர் நடித்தது போன்ற படத்தைத் தரமுடியும், அப்படியொரு விஷயம் இது. "மாற்றான்' படத்தில் நான்கு விதமான மெத்தேட் கையாளப்பட்டது. எல்லாம் சோதனை முயற்சிதான் என்றாலும் சிறப்பாக செய்யப்பட்டது.






 முதலில் ரொம்பவும் பக்கத்தில் கேமராவை வைத்து எடுத்தோம். அடுத்து தூரத்தில். மூன்றாவது விஷயம் சூர்யாவின் முகத்தின் எக்ஸ்பிரஷனை மட்டும் எடுத்தோம். இது 3டி முறையில் எடுக்கப்பட்டது. நான்காவதாக முழு உடலையும் ரீப்லேஸ் பண்ணி எடுத்தோம். இந்த நான்கு மெத்தேட்களும் ஐந்து கேமராக்களில் ஷூட் செய்யப்பட்டது. ஒரு சூர்யாவின் காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு, மறுபடியும் முடி எல்லாம் வளர்ந்த பிறகு ஐந்து மாதம் கழித்து அதே ஷாட்களில், அதே வெளிச்சத்தில் மரம், செடி, கொடி எதுவும் மாறாமல் எடுக்கவேண்டும். இதில் இருக்கும் இன்னொரு அட்வான்டேஜ், சூர்யாவின் அசைவுகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் மற்ற கோண கேமராவில் சரி செய்துகொள்ள முடியும்.







உங்கள் பார்வையில் ஒளிப்பதிவுக்கான இலக்கணம் என்ன? 






சினிமாவுக்கு இருக்கும் இலக்கணம்தான் இதற்கும். மனிதனின் கண் எப்படிக் காட்சிகளைக் காண்கிறதோ அதுபோலவே கேமராவின் கண்களும் இருக்கவேண்டும். கண்கள் 180டிகிரி கோணத்தில் ஒரு காட்சியைக் காணுமானால் கேமராவும் அதைத்தான் செய்யவேண்டும். மீறினால் காட்சி கொலாப்ஸ் ஆகிவிடும். கதையை மீறி ஒரு விஷயம் இல்லை. கதையுடன் ஒளிப்பதிவு போட்டி போடலாமே தவிர, கதையை அது மீறக்கூடாது. சினிமா என்பது ஒரு மீடியம். அதற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அந்த மொழிதான் சினிமா மொழி. அதைப் புரிந்து கொண்டால் ஒளிப்பதில் சுணக்கம் இருக்காது. ஆனால் கதை பயணிக்கும் விதத்தில் சில நேரம் இலக்கணத்தை உடைக்கலாம். அதுவும் கூட கன்னாபின்னாவென்று இருக்கக்கூடாது. இலக்கணத்தைப் புரிந்து கொண்டு உடைப்பதாக இருக்கவேண்டும்.






ஒரு படத்தில் ஒளிப்பதிவாளர் பேசப்படும் இடம் என்று குறிப்பிட்ட இடம் இருக்கிறதா?






அந்தக் காலத்தில் சண்டைக் காட்சிகள் வந்தாலே அதைப் பெரிதாக பேசுவார்கள். என்னைக் கேட்டால் ரசிகர்கள் எம்.ஜி.ஆரை அதிகம் விரும்பியதற்கு சண்டைக் காட்சிகள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். கதைக்கு உதவி செய்கிற எந்த ஒளிப்பதிவும் கண்டிப்பாக பேசப்படும். "பீட்சா' ஒரு டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு சுமார் முப்பது நிமிட காட்சிகளை அபாரமாக எடுத்திருந்தார்கள். 


அதே போலத்தான் "மாற்றான்' படத்திலும் ஒட்டிப்பிறந்தவர்களாக இருக்கவேண்டுமே தவிர, ஒட்ட வைத்துப் பிறந்தவர்களாக இருக்காத அளவுக்கு வடிவமைத்திருந்தோம்.




 அதனால்தான் அது பேசப்பட்டது. இதில் இருந்த ஒர்க் மிகப் பெரியது. இது சக ஒளிப்பதிவாளர்களுக்குத்தான் தெரியும். மக்களுக்குத் தெரியாது. அந்த தெரியாத இடம்தான் ஒளிப்பதிவின் வெற்றி.பொதுவாக, ஒரு படத்துக்கு நார்மலாக உழைக்கும் விதத்தைவிட கூடுதலாக இருபது, முப்பது சதவிகிதம் உழைத்தால் அதுவே நல்ல ஒளிப்பதிவுதான்.






நீங்கள் ரசித்து செய்த படங்கள்?





எல்லாமேதான். நான் முதலில் ரசித்தால்தான் அந்தப்படத்தை மற்றவர்கள் ரசிக்கும்படி நன்றாக செய்யமுடியும். இருந்தாலும் தெலுங்கு "பில்லா', "அறை எண் 305ல் கடவுள்', இப்போது "மாற்றான்' இவை நான் அதிகம் இன்வால்வாகி செய்த படங்கள்





.அழகே இல்லாத நடிகைகளைக்கூட படத்தில் அழகாக காட்டுகிறீர்களே ஒளிப்பதிவில் என்ன மேஜிக் செய்கிறீர்கள்? 






நடிகைகளை அழகு படுத்த சினிமாவில் இன்று அதிக வித்தைக்காரர்கள் வந்துவிட்டார்கள். ஏனென்றால் நம் இந்திய சினிமா அப்படியிருக்கிறது. இங்கு அவர்களை சுற்றித்தான் கதைகள். முகம், நகம், முடி என்று தனித்தனி அழகுகலை நிபுணர்கள் இருக்கிறார்கள். 


இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஒளிப்பதிவிலும் நாங்கள் அழகை அள்ளித் தெளிக்கிறோம். ஸ்டார் படம் பண்ணும்போது, நடிகைகளை அழகாக காட்டவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்காக கொஞ்சம் மெனக்கெடுவோம். ஆனாலும் ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு சில பிளஸ் இருக்கும். அதனை மேலும் பிளஸ் ஆக்கவேண்டும். கூடுமானவரை ரியலாகவும் இருக்கவேண்டும். அதற்கு லைட்டிங் கரெக்ஷன் மிக முக்கியம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்






.உங்களைப் பாதித்த சிறந்த ஒளிப்பதிவு படம் எது?





நிறைய இருக்கிறது. வித்ரோ ஸ்டோரா பண்ணிய படங்கள் எல்லாமே என்னைப் பாதித்த படங்கள்தான். பி.ஸ்ரீ.ராம் செய்த "அலைபாயுதே' படம் ரொம்ப பிடிக்கும். "இதயத்தைத் திருடாதே' படத்தின் பனி கூட கேரக்டராக மாறி நடித்திருக்கும். ரசிகர்களுக்கு வெளிப்படையாக இது தெரியாது. ஆனால் அந்தக் காட்சிகள் உள்ளே ஏறியிருக்கும். இயற்கையைச் சேர்த்து கேரக்டராக மாற்றித் தரும் ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கும். இதுதான் சிறந்த ஒளிப்பதிவு. திருவல்லிக்கேணி ரோட்டைக் காண்பித்தால், அந்த ஏரியாவே உங்கள் உள்ளுக்குள் பயணம் செய்யவேண்டும். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு படத்தைப் பார்க்கும் போது அதில் ஒரு இன்ஸ்பிரேஷன் வரும்.






சக ஒளிப்பதிவாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்?





கதிர், மதி, வேல்ராஜ், ஆர்.டி.ராஜசேகர், "பீட்சா' கோபி அமர்நாத், "ஆரண்ய காண்டம்' பி.எஸ்.வினோத் இவர்களுடைய ஒர்க் எல்லாம் எக்ஸலண்ட்டாக இருக்கும். இவர்களுடைய படத்தைப் பார்க்கும் போது எனக்கும் உற்சாகம் பிறக்கும். நாமும் இப்படிப் பண்ண வேண்டும் என்று தேன்றும்







.பெரிய இயக்குநரிடம் ஒரு ஒளிப்பதிவாளராக கதை கேட்கும் போது, பிடிக்காமல் இருந்தால் என்ன செய்வார்கள்?






படம் நன்றாக இருக்காது என்று தெரிந்தால் யாருடைய படமாக இருந்தாலும் விட்டுத்தள்ளவேண்டியதுதான். ஆனால் நல்லவேளையாக எனக்குத் தமிழில் அப்படி அமையவில்லை. தெலுங்கில் இரண்டு படத்தை அப்படி ஒதுக்கியிருக்கிறேன்.






 நீங்கள் லொக்கேஷன் தேர்வு செய்யும் விதம் பற்றி? 







எனக்கு மட்டுமில்லை, எந்த ஒளிப்பதிவாளருக்குமே கதை சொல்லும் போதே அதன் விஷுவல் மனதில் ஓடவேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு மலை உச்சியில் தன்னந்தனியாக ஒரு மரம் இருக்கிறது என்று காட்சியிருந்தால் நாம் அதற்காக நிறைய தேடணும். கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அல்லது கிடைத்ததே கூட காட்சிக்கு பொருத்தமின்றிப் போகலாம். அப்போது செட் போட்டுத்தான் எடுக்க நேரிடும். ஒரு கதையை காட்சியாகவும், அதே நேரம் உயிரோட்டமாகவும், புதுமையாகவும் கொண்டுவரும் வரை லோக்கேஷனுக்கு முடிவே கிடையாது. நாம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் கற்பனை காட்சியாக வரும் வரைக்கும் உழைக்கவேண்டும்.






நீங்கள் கனவு காணும் ஒளிப்பதிவு?







பிரீயட் படம் பண்ணவேண்டும். அது பழமையானதாகவோ, அல்லது 1800களில் இருப்பதாகவோ, சுதந்திர போராட்ட காலத்தியதாகவோ இருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் அந்தக் காலத்து கறுப்பு - வெள்ளை புகைப்படங்களை சின்ன வயதிலிருந்தே நான் ரசிப்பேன். அதனை விஷுவலில் அழகாக அப்படியே கொண்டுவர வேண்டும் என்பது என் ஆசை.





 நீங்கள் ஒளிப்பதிவு செய்த படங்களில் எந்தப் படத்துக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது? 






"கனா கண்டேன்', "பில்லா' (தெலுங்கு), "மாற்றான்'





.இப்போது பணி செய்துகொண்டிருக்கும் படங்கள்?




தமிழில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் "இசை'. தெலுங்கில் இரண்டு படங்கள். 
 நன்றி - தினமணி