சென்னை தி.நகரில் காற்று மாசு பாடு அளவு படிப்படியாக உயர்ந்து கொண்டே
வந்திருப்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. காற்று
மாசு அளவு, அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் இருப்பது, சென்னையில் சுவாசிக்கும்
காற்றின் தரம் குறைந்து வருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
உலகில் பல்லாயிரம் வகை யான ஜீவராசிகள் இருந்தாலும், பரி ணாம வளர்ச்சி
காரணமாக அனைத்து உயிர்களையும் அடக்கி ஆளும் அதிகாரம் பெற்ற தாக மனித இனம்
திகழ்கிறது. ஆரம் பத்தில் தான் உயிர் வாழ பிற உயிரி னங்களை எதிர்க்கத்
தொடங்கி ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொண்ட மனிதர் பிற்காலத்தில் தனது
சொகுசு வாழ்க்கைக்காக இயற்கை வளத்தை அழிக்கத் தொடங்கினர். இதன் விளைவாக மழை
குறைவு, நிலநடுக்கம், சுனாமி, அதிக வெப்பம், குடிநீர் பிரச் சினை என
இயற்கையின் பல சீற்றங்களையும் மனித இனம் சந்திக்கவேண்டியுள்ளது.
தண்ணீரை காசு கொடுத்து வாங் கிக் குடிக்கவேண்டிய நிலை வரும் என்று 50
ஆண்டுகளுக்கு முன்பு யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
ஆனால் இன்று, எல்லோரும் பாட்டில் நீருடன் அலைகிறார்கள்.
இயற்கை வள அழிப்பின் விளை வாக நாம் சந்தித்துவரும் இன் னொரு பாதிப்பு
காற்று மாசு பாடு. பெரும்பாலான இடங்களில் காற்று சுவாசிக்கத் தகுதியற்றதாக
உள்ளது. அந்த அளவுக்கு காற்று மாசுபட்டுள்ளது. இப்போது வாட்டர்
பாட்டிலுடன் சுற்றுவது போல, எதிர்காலத்தில் ஆக்சி ஜன் அடைத்த மினி
சிலிண்டரு டன் சுற்றித் திரியவேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்
கில்லை.
2007-ல் இருந்தே மாசுபாடு
சென்னை மாநகரில் அண்ணா நகர், வள்ளலார் நகர், கீழ்பாக்கம், தி.நகர், அடையாறு
ஆகிய பகுதி களில் காற்றில் கலந்திருக்கும் தூசி அளவை தமிழ்நாடு மாசுக்
கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2007ம் ஆண்டு முதல் மாதந்தோறும் கண்காணித்து
வந்தது. தற்போது அடையாறு, கீழ்பாக்கம், தி.நகர், அண்ணா நகர் ஆகிய
பகுதிகளில் கண்காணித்து வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு முதலே இப்பகுதி கள்
அனைத்திலும் அனுமதிக்கப் பட்ட அளவைவிட அதிகமாகவே காற்றில் தூசி
கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
காற்றில் கலந்துள்ள தூசி அளவு ‘பிஎம்10’ என்று குறிக்கப் படுகிறது. இதன்
மதிப்பு 100 வரை அனுமதிக்கப்பட்ட அள வாகும். தி.நகரில் கடந்த ஜனவரி யில்
அதிகபட்சமாக 141 என்ற அளவில் பிஎம்10 உள்ளது. பிப்ரவரி யில் 119,
மார்ச்சில் 124, ஏப்ரலில் 163, மே மாதத்தில் 148, ஜூன் மாதத் தில் 148 என
இங்கு பிஎம்10 அளவு பதிவாகியுள்ளது. சென்னை சுவாசிக்க தகுதியற்ற பகுதி யாக
மாறிவருவதையே இது காட்டு கிறது.
இவ்வாறு காற்றில் தூசி அதிகம் கலந்திருப்பதால் ஏற் படும் விளைவுகள்
குறித்து சுவாச நோய் பிரிவு மருத்துவர் ஒருவரி டம் கேட்டபோது, ‘‘தூசி கலந்த
காற்றை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், பல்வேறு
நுரையீரல் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளது. தூசி கலந்த காற்றை
சுவாசிப்பதால் ஆஸ்துமா நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள். இது
உயிரிழப்புக்குகூட வழிவகுக்கும்’’ என்றார்.
இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
காற்று மாசுபடுவதால் பல்வேறு பாதிப்புகள் வருவது உண்மை. இதைத் தடுக்க
அரசின் பல்வேறு துறைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். நகரத்தில் வாகனப்
பெருக்கம் காரணமாக அவை வெளியிடும் புகை மற்றும் அவை சாலையில் செல்லும்போது
அங்குள்ள தூசிகள் காற்றில் பறந்து மாசு ஏற்படுகிறது. அத னால் வாகனப்
பெருக்கத்தை குறைக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டத்தை அரசுக்கு பரிந்து
ரைத்தோம்.
மேலும் சாலை அமைக்கும் போது சாலையோரத்தில் மண் பகுதியை விடாமல் கடைசி வரை தார் போடுமாறு அறிவுறுத்தி யுள்ளோம்.
நகரில் ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் நடப்பதாலும் காற்று மாசு
அதிகரிக்கிறது. இதை குறைக்க கட்டுமான நிறுவனங்கள், தடுப்புகள் மற்றும்
வலைகளை அமைத்து பணிகளைச் செய்ய வேண்டும். புழுதி பறக்காத வகையில் தரையில்
அடிக்கடி நீர் தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு
அவர் கூறினார்.
நன்றி = த இந்து
- palani from MUMBAIஇது மிக முக்கியமான ஓன்று. நாம் இதை பற்றி நிறைய சிந்திக்க வேண்டும்..about 6 hours ago · (0) · (0) · reply (0)
- Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limitedதரைக்கு மேலே காற்று மாசுப்பட்டு பல வருடங்களாகி விட்டது. அதே போல் தரைக்கு கீழே தண்ணீரும் மாசுப்பட்டு பல வருடங்களாகி விட்டது. காற்றை சுவாசிக்கமுடியாமலும், தண்ணீரை குடிக்கமுடியாமலும் சென்னை மக்கள் தவிக்கிறார்கள், நோய் வாய்ப்படுகிறார்கள். அம்மா குடிநீர் என்பதுபோல், அம்மா சுவாசக்காற்றும் கிடைக்குமா?Points3030
- பொன்.முத்துக்குமார் Ponnambalam from LIVONIAஏப்ரலில் விடுமுறையில் இந்தியா வந்துவிட்டு திரும்புகையில், ஊரிலிருந்து காரில் விமான நிலையம் வந்தேன். கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம். காற்று வேண்டி, கார் ஜன்னலை ஒரு அரைமணி நேரம் மட்டுமே திறந்து வைத்திருந்து முகத்தை ஜன்னல் விளிம்பில் வைத்து காற்று வாங்கிக்கொண்டே வந்தேன். பிறகு முகத்தை கைக்குட்டையால் துடைத்துப்பார்த்தபோது, கைக்குட்டை கருப்பாக கறை படிந்ததுபோல இருந்தது. உண்மை, கொஞ்சமும் பொய்யில்லை. சென்னை நகர காற்று மாசுபாடு விஷம் என்ற அளவுக்குப்போய்க்கொண்டிருக்கிறது.Points2340satheesh Up Voted
- sasibalan from COIMBATOREபராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் ,ஆட்டோக்கள் ,ஷேர் ஆட்டோக்கள்,லாரிகள் இவை கக்கும் கரும்புகை ஒருபக்கம்,தொழிற்சாலைகள் கக்கும் கரும்புகை மறுபக்கம் இவற்றுள் எதையுமே கண்டுகொள்ளாத அரசு நிர்வாக இயந்திரம் ஊழலில் துருப்பிடித்துப் போனதன் விளைவே காற்றின் மாசுக்கும் தூசுக்கும் காரணம்.Points435
- Anthonimuthu from BANGALOREஎன்னதான் எழுதினாலும், ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டாலும், கண்ணெதிரே அழிவின் ஆரம்பகாலத்தை உணர்ந்தாலும் மனிதனின் பேராசையின் தாகம் இன்னும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் நலன்களை மாத்திரம் பிரதிபலிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் கையில் அதிகாரம். இவர்கள் எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வருங்கால சந்ததியினரை காப்பாற்ற இயலாத பொருளாதார வளர்ச்சி நமக்குத் தேவை இல்லை. மக்களை உஷார்படுத்துவது ஊடகங்களின் கடமையாகும். இந்து பத்திரிகை குழுமம் இதில் முன்னோடியாக இருப்பது ஆறுதலாக உள்ளது.Points2120
- Vasantha from TIRUCHCHIRAPPALதார் ரோடு முடிந்த வரை போடுவதை விட ஓரங்களில் புற்களை வளர்க்கலாம் . பிரேசில் நாட்டின் ஒரு அதிபர் பல திட்டங்களை இதற்கு அறிமுகபடுத்தியும் அவற்றை செயலிலும் செய்து காட்டி உள்ளார் . நான் அதை fox traveller என்ற channel இல் பார்த்தேன் . அவற்றை நாமும் ஏன் பின்பற்ற கூடாது ????about 21 hours ago · (2) · (0) · reply (1)
- சபரிராஜ் ராஜ்இப்பொழுதே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை வாசிகள் பல வகை இன்னல்களுக்கு ஆளாக வேண்டி வரும். இனி வரும் காலத்தில் தமிழகத்திற்க்கு வரும் தொழிற்சாலைகள் அனைத்தையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்று என்னும் வீதத்தில் அமைத்தால் தான் சென்னையிலும் இடநெருக்கடி குறையும். மற்ற மாவட்டங்களும் வளர்ச்சியின் பாதையில் பயணிக்கும். மற்ற மாவட்டங்களில் எத்தனையோ தரிசுநிலங்கள் உள்ளது. அதை பண்படுத்தி உபயோகப்படுத்த அரசு முன்வர வேண்டும். ஆனால் தயவுசெய்து விளைநிலங்களில் கை வைத்து விடாதீர்கள். அப்புறம் எல்லோரும் சோற்றுக்கு திண்டாடவேண்டி வரும்.a day ago · (6) · (0) · reply (0)Anthonimuthu Up Voted
- S.Sampath s from BANGALOREபுதிய Andhra போல தமிழ் நாட்டுக்கு தலை நகரம் மாற்ற வேண்டும். Chennai மட்டுமே தமிழ் நாடு என்ற நிலைமை மாறினால் மட்டுமே சென்னை நகரம், நரகம் ஆகாமல் தடுக்க முடியும்