Showing posts with label சுவர் இல்லாத சித்திரங்கள் - கே பாக்யராஜ். Show all posts
Showing posts with label சுவர் இல்லாத சித்திரங்கள் - கே பாக்யராஜ். Show all posts

Thursday, November 08, 2012

சிவப்பு ரோஜாக்கள்,சுவர் இல்லாத சித்திரங்கள் ஷூட்டிங்க் ஸ்பாட் சுவராஸ்யங்கள் - கே பாக்யராஜ் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTTmRm3dmualMBJTxqI3ZMwIKj8-A7YnuQdgTVf3q4o3rKaDthXAuyX_vftggluBoS8Hd5CulO0FyWi8L6t0D3SR1UYzpK1_gIudw9UujZRZQHErqWwD2h76QEWYqAuBcM5993aaPMZCg/s1600/Vaanga-Cinema-Pathi-Pesalam-on-Vijay-TV.jpg 

'தமிழக எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் கருத்து?'' 


 
 ''தன்னம்பிக்கையோட துணிச்சலா கட்சியை ஆரம்பிச்சாரு... மக்களோட மட்டும்தான் கூட்டணினு சொன்னாரு. அதுவரைக்கும் பரவாயில்லை... பாராட்டலாம்!


ஆனா, அப்புறமா குட்டையில ஊறின மட்டையா ஒரு கூட்டணி வெச்சாரு. ஜெயிச்ச பிறகு, ஆளும் கட்சியைத் திட்டினாத்தான் நமக்கு மவுசு கூடும்னு வம்புச் சண்டை போட்டுட்டு வெளியே வந்துட்டாரு. இது எல்லாத்துக்கும் மகுடமா, 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே என்னாலதான்’னு மிகப் பெரிய ஒரு உண்மையைக் கண்டுபிடிச்சாரு.


 கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே, 'தடையற்ற மின்சாரத் துக்கு நான் ஒரு வித்தியாசமான ஐடியா வெச்சிருக்கேன்... வெளியில சொன்னா, கலைஞர் காப்பி அடிச்சுடுவாரு’னு சொன்னாரு. அ.தி.மு.க- வோட கூட்டணி வெச்சப்பவாவது அந்த ரகசியம் என்னன்னு சொல்லியிருக்கலாம். அப்பவும் சொல்லலை. இப்ப ஜனங்க இவ்வளவு கஷ்டப்படுறாங்க... இப்பவும் சொல்லாம மின்வெட்டுக்கு எதிராப் போராடுறேன்னு இவரும் கௌம்பி நிக்கிறாரு. இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க... என்னெல்லாம் காமெடி பண்ணுவாருனு பொறுத்திருந்து பார்க்கத்தானே போறோம்!''


நா.ராஜா, திருத்தங்கல்.
 ''டி.வி. ஷோல ஆரம்பிச்சு கிராமத்து மேடைகள் வரை மிமிக்ரி பண்றவங்க உங்க குரல் இல்லாமப் பண்றதே இல்லை. அதை எப்படி எடுத்துக்குறீங்க?'' 




 ''நாங்க அண்ணன் தம்பிங்க மூணு பேரு. எங்கம்மா முதல் பிரசவ சமயத்துல 'வீட்டுக்கு செல்வம் ரொம்ப அவசியம். அதனால முதல்ல ஆண் குழந்தை பொறந்தா, செல்வராஜ்னு பேர் வைப்போம். பொண்ணா இருந்தா செல்வினு பேர் வைப்போம்’னு நெனச்சாங்க. ஆணா இருந்ததால, செல்வராஜ். பெரிய அண்ணன். அடுத்த முறை குழந்தை உண்டானப்போ, 'செல்வம் இருக்கு... தனம் வேணும். ஆணா இருந்தா தன்ராஜ், பெண்ணுன்னா தனலட்சுமினு நினைச்சாங்க. என் ரெண்டாவது அண்ணன் தன்ராஜ். மூணாவதா நான் உண்டானதும் 'நமக்கு செல்வம், தனம் ரெண்டும் இருக்கு... இனி பாக்யம் ஒண்ணு மட்டும் போதும்’னு பாக்யராஜ், பாக்யலட்சுமினு முடிவுபண்ணி வெச்சிருந்தாங்க. இப்படித்தான் பாக்யராஜ் ஆனேன். 




ஆக,
எங்கம்மாவோட ஆசை, ஆசி காரணமா புரட்சித் தலைவர் வாயால கலையுலக வாரிசுங்கற வரம் வாங்கினேன். அதே பாக்யம்தான்... அமிதாப்ஜி, சிவாஜி சார் போன்றவங்களை இயக்கும் வரை என்னை அழைச்சுட்டுப் போச்சு. அதே பாக்யம்தான் இன்னைக்கும் எல்லா மிமிக்ரி கலைஞர்களோட வாயாலயும் அன்போட அப்பப்ப பேசப்படுறேன். மக்களும் அதை அவ்வளவு ரசனையா ரசிக்கிறாங்க. இதை நான் பெரும் பாக்யமாத்தான் நினைக்கிறேன்!'



'
எம்.ராஜநாராயணன், சென்னை-24.
 ''முருங்கைக்காய் போன்ற சமாசாரங்களை அப்பவே லேடீஸை ரசிக்கவெச்சீங்களே... எப்படி?'' 




 ''ஆதாம் - ஏவாள் காலத்துல இருந்தே ரசிச்சி, ருசிக்கப் போய்தானே... இன்னும் அது தொடர்ந்துட்டு இருக்கு. நாம குழந்தைகளுக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா, செரிலாக்னு ஊட்டச்சத்து தர்ற மாதிரி, கடவுள் தன்குழந்தை களுக்குத் தந்த ஒரு ஊட்டச்சத்துதான் - முருங்கைக்காய். அதனால அது கன்னித்தீவு சிந்துபாத் கதையா தொடரும்!''




ஆர்.கீதா, திருச்சி. 

 ''உங்களுக்கு டான்ஸ் கத்துக்கொடுத்த மாஸ்டர் யார்?'' 



 ''ரகசியமா வெச்சுக்கங்க... வெளியே யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. அவரு பேரு மணி. எங்க ஹை ஸ்கூல் ட்ரில் மாஸ்டர்!''



எம்.ஜி.ராம்குமார், திருநெல்வேலி. 



 ''கதாசிரியர் ஆக வேண்டித்தான் நீங்கள் சினிமாவுக்கு வந்ததாகப் படித்திருக்கிறேன். இயக்குநர் ஆகும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?'' 



 ''ஆமாங்க... கதாசிரியர் ஆகணும்னு ஆசைப்பட்டு, கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கினப்ப, யாருமே நம்மளைக் கண்டுக்கலை. அந்த நேரம்தான் பாலகுரு சார்  '16 வயதினிலே’ படத்துல அசோசியேட்டா சேர்ந்திருந்தாரு. அவர்கிட்ட என்னைப் படத்துல உதவி இயக்குநரா சேர்த்துவிடச் சொல்லி கேட்டுட்டு இருந்தேன். இதுக்காகத் தினமும் அவர் வீட்டுக் குப் போயிருவேன். அப்படி ஒரு தடவை போனப்ப பாலகுரு சார் அம்மன் கிரியேஷன்ஸ் ஆபீஸ் போயிருக்கார்னு சொன்னாங்க. 



அங்கே எனக்கு முன்னாடியே ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். ஆளைப் பார்த்தா பெரிய படிப்பாளி மாதிரிலாம் தெரியலை. அதனால கொஞ்சம் அல்டாப்பு காமிச்சு அசத்தலாம்னு, 'சார்... எக்ஸ்கியூஸ்மி’னு அவரைக் கூப்பிட்டேன். அவரும் 'சின்னவீடு’ படத்துல எனக்கு அப்பாவா நடிச்ச கே.கே.சௌந்தர் மாதிரி கெத்தா 'யெஸ்ஸ்...’ன்னாரு. 'ஷெல் ஐ மீட் மிஸ்டர் பாலகுரு’ன்னேன். 'ஐ திங் ஹீ வென்ட் அவுட்சைட்’னு பதில் வந்தது. 'ஓ.கே... சார், தேங்க்யூ. ஐ வில் மீட் ஹிம் ஆஃப்டர்வேர்ட்ஸ்’னு சொல்லிட்டு, நான் வெளியே வர திரும்புறேன்.



.. 'ஹலோ... டெல் மீ யுவர் நேம். இஃப் பாலகுரு கம்ஸ் ஐ வில் இன்ஃபார்ம் ஹிம்’னாரு. நான் உடனே, 'நோ நோ சார்... ஐம் நாட் சச் ஏ பிக் ஷாட். ஐ வில் வெயிட் அவுட்சைட் அண்ட் மீட் ஹிம்’னு சொல்ல, அவர் இப்ப சட்டுனு தமிழுக்கு மாறி, 'அதில்லைய்யா... பாலகுரு யாரோ ஒரு பையனுக்கு அசிஸ்டென்ட் டைரக்டர் வேலை வேணும்னு கேட்டுக்கிட்டே இருந்தார். ஐம் திஸ் ஃபிலிம் டைரக்டர் பாரதிராஜா. அதான் கேட்டேன்’னார். 



நான் அதிர்ச்சில உறைஞ்சு, 'சார்... சார்... நான்தான் அந்தப் பையன். எனக்குத்தான் அந்த வேலை வேணும் சார்’னு கெஞ்ச, 'காலேஜ்லாம் படிச்சிருக்கியா?’னு கேட்டாரு. நானும் மொட்டையா, மேலோட்டமா 'காலேஜ் படிச்சிருக்கேன்’னு சொன்னேன். 'நாளைக்குக் காலையில ஏவி.எம். ஸ்டுடியோவுல ஸாங் ரிக்கார்டிங். வந்து ஜாயின் பண்ணிக்க’ன்னாரு. துள்ளிக் குதிச்சேன். இதுதான் என்னை இயக்குநர் ஆக்கிய திருப்புமுனை. அப்புறம் அப்புறம் பேசிக்கிட்டப்ப தெரிஞ்சது, இங்கிலீஷ்ல நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மீறின கில்லாடிகள்னு!''




ஜி.குப்புசாமி, விழுப்புரம். 


 'படப்பிடிப்பு சமயம் உங்கள் குரு பாரதிராஜாவுடன் 'முட்டல்-மோதல்-உரசல்’ ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா?'' 



  ''ஐயோ நிறையங்க. ஆனா, அதை முட்டல்-மோதல்னு சொல்ல முடியாது. ஒரு சீன் நல்லா வரணும், வசனத்தை இன்னும் பெட்டர் பண்ணலாம்னு நான் சண்டை போடுவேன். அவர் முதல்ல திட்டிவிட்டுருவாரு. அப்புறம் அதுல நியாயம் இருந்தா ஏத்துக்குவாரு.



 'சிவப்பு ரோஜாக்கள்’ படத்தில் ஸ்ரீதேவி இருக்கிற கவுன்டர்ல கமல் ஒவ்வொரு தடவையும் கர்ச்சீப் கேப்பாரு. ஸ்ரீதேவி எடுத்துத் தருவாங்க. ஒரு தடவை கமல் வர்றதைப் பார்த்ததுமே, ஸ்ரீதேவி கர்ச்சீப் எடுத்துவெச்சிருப்பாங்க. ஆனா, கமல் வம்புக்குனு 'எனக்கு கர்ச்சீப் வேண்டாம்... பனியன்தான் வேணும்’னு சொல்லு வாரு. 'கைவெச்ச பனியன் வேணுமா... கை வைக்காதது வேணுமா’னு ஸ்ரீதேவி கேட்க, கமல் குசும்பா ஸ்ரீதேவி முகத்துல இருந்து கழுத்துக்குக் கீழே கொஞ்சம் லுக்கை டவுன் பண்ணிப் பார்த்துட்டு, 'யூஷ§வலா நான் எப்பவும் கை வைக்காததைத்தான் லைக் பண்ணுவேன்’னு பேசற மாதிரி யோசிச்சு எழுதிஇருந்தேன்.



 ஸ்பாட்ல அந்த ஷாட் எடுக்கும்போது டைரக்டர் ரெண்டு பேரும் நேருக்கு நேரா பார்த்துட்டு நிக்கிற புரொஃபைலா இடுப்பு வரைக்கும் ரேஞ்ச் இருக்கிற மாதிரி லாங் ஷாட்டா வெச்சுட்டாரு. அப்ப நான், 'சார்... இந்த சீன்ல ஸ்ரீதேவி, கமல் ரெண்டு பேர் முகமும் டைட் க்ளோஸப்ல இருக்குற மாதிரி போல்டா வெச்சு எடுப்போம். அப்போதான் கமல் சார் அந்த டயலாக்கை ஸ்ரீதேவியை மேலும் கீழும் பார்த்து ஒரு மாதிரி சில்மிஷமா சொல்றப்போ, ஜனங்க நல்லா என்ஜாய் பண்ணுவாங்க. தியேட்டர்ல க்ளாப்ஸ் பறக்கும்னு சொன்னேன்.




 இதைக் கவனிச்சுட்டு இருந்த கமல் சாரும் குஷி ஆகிட்டாரு. ஆனா, டைரக்டர் 'யோவ்... எல்லாம் புரியுதுய்யா. ஆனா, கடைல 12 மணி வரைதான் ஷூட்டிங் பண்ண பர்மிஷன் கொடுத்திருக்காங்க. அதுக்குள்ள அவ்வளவு கட் ஷாட்ஸ்லாம் வெச்சு எடுக்க முடியாது’னு சொல்லிட்டாரு. எனக்குச் சட்டுனு கோபம் வந்துருச்சு, 'அப்ப நான் எதுக்கு இவ்வளவு மண்டையை உடைச்சு எழுதணும்... சீன் பிடிக்கணும்’னு சொல்லிட்டு கோபமாக் கடையைவிட்டு வெளியே வந்துட்டேன்.



இந்தத் தகவல் புரொடியூஸருக்குத் தெரிஞ்சு, 'பாரதி... இன்னொரு நாள் வேணும்னாலும் கடையை புக் பண்ணிக்கலாம். பொறுமையா நீங்க யோசிச்ச மாதிரியே எடுங்க’னு டைரக்டர்கிட்ட சொல்லிட்டாரு. அப்ப அவர் என்கிட்ட வந்து, 'தேங்க்ஸ்யா... நீ மூஞ்சியத் தூக்கிவெச்சுக்கிட்டதுனாலதான் இப்போ எனக்கு ரிலாக்ஸா வொர்க் பண்ண வாய்ப்பு கிடைச்சது’ன் னாரு. இப்படித்தான் எங்களுக்குள்ள முட்டல்-மோதல்லாம் வரும்!''



பி.ஆறுமுகம், முசிறி. 


''ஆரவாரமா தனிக் கட்சி ஆரம்பிச்சீங்க. ஆனா, ஏன் அப்படியே பின்வாங்கிட்டீங்க?'' 




 ''எவனாலயும் அவனோட நிழலைவிட்டு எப்பவும் பிரிய முடியாதுனு சொல்லுவாங்க. என் முட்டாள்தனத்துக்கு நான் சப்பைக்கட்டு கட்ட விரும்பல. நான் உசுப்பப்பட்டதைச் சீக்கிரமே உணர்ந்து ஒதுங்கிட்டேன். அவ்வளவுதான்!''

http://1.bp.blogspot.com/_lIsRD3VCy1s/TPjIq4uTp0I/AAAAAAAADig/prKERORBWpQ/s1600/9110_big.jpg


என்.அத்வித், சென்னை-83. 



 ''கமல் மாதிரி நடிக்கவோ, டான்ஸ் ஆடவோ மாட்டீங்க. ரஜினி போல ஸ்டைலும் இல்லை, விஜயகாந்த் போல ஆக்ஷனும் பண்ண மாட்டீங்க, கார்த்திக் போல ரொமான்டிக் அடையாளமும் இல்லை... ஆனா, இவங்கள்லாம் இருந்தப்ப எப்படி தமிழ் சினிமாவுல உங்க 'ஹீரோயிசம் மூலமா’ ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்குனீங்க?'

'
 ''என் கேரக்டரும் சரி, என்னைச் சுத்தி இருக்கிறவங்க கேரக்டர்ஸ் சம்பவங்களும் சரி... மக்களோட யதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கோ, அங்கே யார் யாரெல்லாம் இருக்காங்களோ, அங்கே என்ன நடக்குதோ... அதைத்தான் பிரதிபலிக்கும். 


'சுவர் இல்லாத சித்திரங்கள்’ல கல்லாப்பெட்டி சிங்காரம் என் அப்பா. வீட்ல யாரும் இல்லைனு தைரியமா உட்கார்ந்து தம் அடிச்சிட்டே ஏதோ எழுதிட்டு இருப்பேன் நான். டக்குனு அப்பா வந்ததும் ஒரு மரியாதைக்காக அவர் கண்ணுல சிகரெட் பட்டுரக் கூடாதுனு பின்னால மறைப்பேன். ஆனா அவரு, 'ஏண்டா அழகு... கேவலம் அஞ்சு காசு சிகரெட்டு. எங்கே நான் கேட்ருவனோனு மறைக்கிறியே... நீ எல்லாம் பெத்த அப்பனுக்கு நாளைக்கு என்னடா செய்யப்போறே?’னு அழ ஆரம்பிச்சிடுவாரு.




 இப்படியான நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் மனிதர்களையும் என்னைச் சுத்தி வெச்சுக்கிட்டதாலதான், சினிமா ஹீரோயிசம் தாண்டிய ரசிகர் கூட்டம் என்னை  அரவணைச்சுக் கிட்டாங்க!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFAGYEdqthlhRp5_55-m7jdSQ6nqAUEhxgNco-WdHOdcj21VSA_6E4t1MUTd2wo5CuN1sb2cChLrby05VHRHEvUuLogidY9pYLwY7dsNLLU29KqWrHZy6xxJS0OUpqYJHlXtPkOfYcmP4/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%2587.%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AF%258D.jpg




டிஸ்கி - பாகம் 1 படிக்க

கே பாக்யராஜ் பேட்டி @ ஆனந்த விகடன் 

http://www.adrasaka.com/2012/10/blog-post_7561.html

நன்றி - விகடன்

 பாகம் 2

தமிழ் சினிமாவின் டாப் 10 படங்கள் - கே பாக்யராஜ் பேட்டி 

http://www.adrasaka.com/2012/10/10.html

 பாகம் 3

 இந்தியாவின் டாப் 11 திரைக்கதை ஆசிரியர்கள் - கே பாக்யராஜ் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2012/10/11.html




http://180.179.36.240:82/Articles/2010/Dec/0b737521-c632-4c0b-a5ab-9521e7db4aa5_S_secvpf.gif