பெரிய தொழில் அதிபரோட பொண்ணு ஒரு பொறம்போக்கை லவ்வுது. அப்பாவின் சொத்துக்கள் வேண்டாம்னு உதறிட்டு அவன் வீட்டுக்கு வருது. அந்த தத்தி “எனக்கு உன் மேல ரியல் லவ் எல்லாம் இல்லை , சொத்துக்குத்தான் ஆசைப்பட்டேன்னு உளறிடறான்.அவ உடனே ஜெர்க் ஆகி நிக்கறா. அவன் கூட இருக்கும் ரவுடிங்க வேஸ்ட்டா போகக்கூடாது ,டேஸ்ட் பார்த்துடலாம்னு சொல்றாங்க . அவ ஓடறா , அவங்க துரத்தறாங்க . இப்போ ஹீரோ எண்ட்ரி
ஃபைட்ல அந்தப்பொண்ணு தலைல அடி பட்டு கோமா ஸ்டேஜ்க்கு போய்டறா. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றாங்க .நர்ஸ் ஹீரோவை அந்த பொண்ணோட புருஷனா நினைச்சு ஃபார்ம்ல சைன் வாங்கறா.பொண்ணோட அப்பா வர்றாரு . அவர் கிட்டேயும் அந்த பொய்யை ஹீரோ மெயிண்ட்டெயின் பண்றாரு .
அந்தப்பொண்ணுக்கு ஒரு தங்கச்சி .அதை ஹீரோ லவ் பண்றாரு . அக்கா புருஷன்கற நினைப்பு எதுவும் இல்லாம அந்த கேனமும் ல்வ்வுக்கு ஓக்கே சொல்லுது
ஊரார்க்கு அக்காவை லவ்வற ஹீரோ தனி டிராக்ல தங்கச்சியை லவ்விட்டு இருக்கும்போது அக்காவுக்கு நினைவு திரும்புது . என்ன ஆகுது? என்பது தான் மிச்ச மீதி மொக்கை கதை
விஜயை கலாய்க்கும் காட்சி
நல்ல காமெடி ஸ்கோப் உள்ள கதையை அநியாயமா மொக்கை படம் ஆக்குவது எப்படி?ன்னு ஏ வெங்கடேஷ் கிட்டே எல்லாரும் கத்துக்கனும் .
ஹீரோ சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்ல ஹீரோவா வந்த தமன் . மொக்கையான திரைக்கதை என்றாலும் இவரால் முடிஞ்ச அளவுக்கு சமாளிச்சி நடிக்கறார். 2 ஹீரோயின் இருந்தும் இவருக்கு ஒண்ணுல கூட கெமிஸ்ட்ரியோ , பிசிக்ஸோ ஒர்க் அவுட் ஆகலை
நிஜ ஹீரோ பவர் ஸ்டார் தான் . காமெடி வில்லனா வர்றார், இவர் விஜயை கலாய்த்து நடனம் ஆடுவது , ரஜினியை நக்கல் அடித்து பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் ஆரவாரம் . தியேட்டர் அல்லோலகல்லோலப்படுகிறது .ஆனால் பவர் ஸ்டார் கொஞ்சம் நடிக்கவும் கத்துக்கனும் , சீக்கிரம் போர் அடிச்சுடும்
ஹீரோயின்ஸ் 2 பேரு , அர்ச்சனா , விபா அப்டின்னு . 2ம் தேறாது . 50 மார்க் போடலாம். லோ பட்ஜெட் படம் இல்லையா? அதான் சுமாரா இருந்தா போதும்னு நினைச்சிருப்பாங்க போல
ஈரோடு மகேஷ் படத்துக்கு வசனம் . சந்தானம் மாதிரி படம் பூரா வர்றார் ஆனா ஒரு சீனில் கூட அவரால் ஆடியன்ஸ் கிட்டே கை தட்டல் வாங்க முடியல . ரெண்டரை மணி நேரம் ஓடும் படத்துல தனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பை ஈரோடு மகேஷ் தவற விஒட்டுட்டார் . ஒரு வசனகர்த்தாவா வும் சரி , ஒரு காமெடியனாவும் சரி வேஸ்ட் பண்ணிட்டார்
இயக்குநர் ஏ வெங்கடேஷ் ஹீரோயின்க்கு அப்பாவா வரும் கேரக்டர் ரோல் . ஓக்கே ரகம் . தம்பி ராமைய்யா , அழகர் சாமியின் குதிரை நாயகன் அப்புக்குட்டி , வெண்ணிற ஆடை மூர்த்தி என வீணடிக்கப்பட்ட கலைஞர்கள் பட்டியல் நீளம் .
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1., ஸ்டார் வேல்யூவுக்காக பவர் ஸ்டாரை புக் பண்ணியது , கதைக்கு சம்பந்தமே இல்லைன்னாலும் பவருக்கு பவர் ஃபுல் போர்ஷன் ஒதுக்கினது
2. லோ பட்ஜெட் படம்னாலும் , 3 ஹீரோயின்கள் இருந்தும் லோ லெவல்க்கு இறங்காம 3 பெரையும் கண்ணியமா காட்டியது
3. பாடல்கள் சொதப்பலா இல்லாம சி செண்ட்டர் ஆடியன்சை கவரும் வகையில் படம் ஆக்கியது , பவர் ஸ்டாருக்கு 2 பாட்டு தந்தது

4. நினைத்ததை முடிப்பவன் நான் தான் துணிச்சலை வளர்த்தவன் நான் தான் பாட்டுக்கு பவரின் ஆட்டம் , விஜய்யை கலாய்த்து நடன ஸ்டெப்ஸ் விஜய் ரசிகர்களையே கவர்வது
1. நர்ஸ் எந்த வித ஆதாரமும் இல்லாம எடுத்த எடுப்புல ஹீரோவை அந்த பொண்ணோட புருசன்னு எப்படி நினைக்குது? பேஷண்ட்டுக்கு நீங்க என்ன முறை வேணும்? அப்டினுதானே வழக்கமா கேட்பாங்க ?
2. ஹீரோ , தம்பி ராமையா , ஈரோடு மகேஷ் 3 பேரும் பேண்ட் , டி சர்ட் போட்டு இன் பண்ணி தான் எப்பவும் நைட் டைம்ல தூங்கறாங்க , அது ஏன் ? ஒரு சீனில் நடு இரவில் எதோ சத்தம் கேட்டு 3 பேரும் எழுந்து ஓடி வர்றாங்க . அவ்ளோவ் ஃபிரெஷா இண்ட்டர்வ்யூக்குப்போறவங்க மாதிரி இருக்காங்க
3. ஹீரோயினுக்கு என்ன விதமான கோமான்னு டாக்டர் கூட கடைசி வரை சொல்லவே இல்லை . ஏதோ பெக்கூலியர் டைப் ஆஃப் கோமான்னு ஒரு டாக்டரே பொத்தாம்பொதுவா சொல்வாரா?
4. ஹீரோவுக்கு 25 லட்சம் ரூபா தேவைப்படுது . அதை பல காட்சிகளில் மகேஷ் சொல்றார். ஆனா மாமனார் வெங்கடேஷ் எவ்வளவு பணம் வேணும்னு கேட்கும்போது 3 லட்சம் போதும்னு ஹீரோ சொல்றாரே, எப்படி?
5, ஹீரோ தான் ஒரு அநாதைன்னு தேவை இல்லாம ஏன் பொய் சொல்லி மாட்டிக்கனும் ? அம்மா இருக்காங்க , ஆனா அவங்களூக்கு எங்க லவ் மேட்டர் தெரியாதுன்னு சொல்லி ஈசியா சமாளிச்சிருக்கலாமே?
6. கட்டிலுக்கு அடியே ஒரு டெட் பாடி இருக்கு , அப்போ அங்கே வரும் ஹீரோயின் ஏதோ துணியை கீழே போட்டுடறா. அதை எடுக்க சும்மா குனிஞ்சா போதாதா?” முட்டி போட்டு உக்காரனுமா? தரையை சாணியால மெழுகுறவங்க தான் அப்படி உக்காருவாங்க
7. ஒரு சீன்ல ரோட்டோரமா ஹீரோயின் கார் அருகில் நிக்கறா. கார் பிரேக் டவுன் ஆகிடுச்சுன்னு ஹீரோ கிட்டே சொல்றா. பிரேக்கே இல்லைன்ன எப்படி காரை ஓரமா நிறுத்த முடியும் ? மரத்துல இடிச்சுத்தானே நிறுத்த முடியும் ? அதுக்குப்பேசாம கார் பஞ்சர்னு சொல்லி இருக்கலாம்
8, ஹீரோ - ஹீரோயின் லவ் மலர்ந்த டுபாக்கூர் கதைக்கு ஒரு புது சிச்சிவேஷன் கூடவா யோசிக்க முடியல? பாட்ஷா ரஜினி - நக்மா கதையை அப்டியேவா சுடுவாங்க? கற்பனை வறட்சி?
9. ஹீரோ தன் மச்சினி கிட்டே எந்த உணமையும் சொல்ல்லை. இதெல்லாம் டிராமான்னு சொல்லலை , மேரேஜ் பண்ணிக்கவே இல்லைன்னும் சொல்லலை, ஆனாலும் ஹீரோவோட லவ்வை ஏத்துக்கறாரே எப்படி?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. LIFE ல FRAUD பண்ணுனா எதிர்காலம் BROAD டா இருக்கும்
2. பவர் -நான் எப்போ வருவேன் , எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது.
3. இந்த கதைல என்னவோ இடிக்குதே ?
உன் தொப்பை தான் இடிக்குது
4. பவர் - நான் தாண்டா உனக்கு வில்லன்
உன் பேர் என்ன?
வில்லன் பேர் எல்லாம் சொல்ல மாட்டாண்டா
5. அக்னி நட்சத்திரம் கதை உங்க கதையை உல்டா பண்ணி இருக்கு, நீங்க ஏன் மணிரத்னம் மேல கேஸ் போடக்கூடாது ?
பவர் - நான் ஏன் அவர் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போடனும்?
6. யூ ஆர் லுக்கிங்க் ஸோ ஸ்மார்ட்னு அவ சொன்னாளே?
அவ ஆஸ்திரேலியாக்காரி , கங்காருன்னா ரொம்ப பிடிக்கும் , நீ பார்க்க கங்காரு மாதிரியே இருக்கியா அதான்
7. இங்கே பாரு , நீ என்னை ரிஜக்ட் பண்ணிட்டே , அதுக்குப்பின் என்னை

திட்டும் உரிமை உனக்கு கிடையாது
8. ஐ லவ் யூ
ஒரு நிமிஷம் இரு .. தம்பி இங்கே வா , நான் யாரு?
அக்கா
இவர் யாரு?
பெரியப்பா
பார்த்தியா , ஒரு பெரியப்பா எப்படி அக்காவை லவ் பண்ண முடியும் ?
9. செஸ் போர்டு முன்
பாஸ் , மூவ் பண்ணுங்க
ஐயோ செஸ் போர்டை மூவ் பண்ணச்சொல்லலை . சிப்பாய் , ராணி ஏதாவது மூவ் பண்ணுங்க
10. வெ ஆ மூர்த்தி = இதென்ன மசாஜ் கிளப்னு போர்டு போட்டிருக்கு , பிசையற இடம் ஆச்செ>? இங்கே எதுக்கு வரச்சொன்னானுவ?
11. என்னை விட்டு எப்பவும் ஒரு அடி தள்ளியே நில்லுன்னு எப்பவும் சொல்வேன் , இப்போ சொல்றேன், என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட தள்ளி நிக்கக்கூடாது , ஐ லவ் யூ

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்-35
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்
ரேட்டிங் = 2.25 / 5