Showing posts with label சுமதி என் சுந்தரி (1971) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சுமதி என் சுந்தரி (1971) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, July 13, 2023

சுமதி என் சுந்தரி (1971) - தமிழ் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் காமெடி மெலோ டிராமா) @ வசந்த் டி வி

    1967 ஆம்  ஆண்டு  வெளியான நாயிகா சங்க்பாத்  (  நாயகி  நடிகையைப்பற்றிய  செய்தி )  என்ற  பெங்காலி  படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது . ரொமாண்டிக்  காமெடி  மெலோ டிராமா  வகையைச்சேர்ந்தது . சித்ராலயா  கோபு  தான்  இதன்  திரைக்கதையை  எழுதினார் . இதன்  படப்பிடிப்பு  முழுவதும்  கொடைக்கானலில்  படம்  ஆக்கப்பட்டது . இப்படத்தில்  ஒரு  சுவராஸ்ய  தகவல்  உண்டு . இரு  குதிரைகள்  இயக்குநருக்குத்தேவைப்பட்டது , ஆனால் கிடைத்த  இரண்டில்  ஒன்று  நோஞ்சான்  ஆக  இருந்தது  இயக்குநருக்குப்பிடிக்கவில்லை , ஆனால்  அந்த  நேரத்தில்  வேறு  குதிரை  கிடைக்காததால்  நாயகனுக்கு  நல்ல  குதிரை , காமெடியனுக்கு  நோஞ்சான்  குதிரை  என 


வைத்து  அதன்  மூலம்  புதிய  காமெடி  டிராக்    ரெடி  செய்தார்களாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி   பிரபல  சினிமா  நடிகை . ரொம்ப  பிசி , எப்போப்பாரு  ஷூட்டிங்   ஷூட்டிங்  என  அலைச்சல் . அவருக்கு  எல்லா  கமிட்மெண்ட்சையும்  முடித்து  விட்டு  சினிமா  உலகை  விட்டு  விலக  வேண்டும்  என்று  ஆசை , அதனால்  புதுப்பட  ஒப்பந்தம்  எதிலும்  சைன்  பண்ணாமல்  கையில்  இருக்கும்  படங்களை  முடித்துக்கொடுப்பதில்  கவனமாக  இருக்கிறார் 


 நாயகன்  ஒரு  எழுத்தாளர் . நாடகத்துக்கு  கதை  வசனம்  எழுதுபவர் . அவருக்கு  வெளி  உலகம், சினிமா  எதுவும்  தெரியாது . ஒரு  நாள்   நடிகை  ரயில்  பயணத்தில்  எதிர்பாராத  விதமாக  ஒரு  ஊரில்  தங்க  நேரிடுகிறது . அங்கே  நாயகனை  சந்திக்கிறாள் . நாயகனுக்கு  நாயகி  ஒரு  சினிமா  நடிகை  என்பது  தெரியாது 

 இருவருக்கும்  ஏற்படும் நட்பு , காதல்  தான்  மொத்த  திரைக்கதையுமே! 


இது  ஒரு  ஹீரோயின்  ஓரியண்ட்டட்  சப்ஜெக்ட்  என்பதால்  நாயகனை  விட  நாயகிக்குதான்  அதிக  வாய்ப்பு , பிரபல  நடிகை  ஆக   சுமதி  கேரக்டர்லயும்,  சுந்தரி  என்ற  சாதா  கேரக்டர்லயும்  கச்சிதமான  நடிப்பு . 


நாயகன்  ஆக  சிவாஜி . ரொமான்ஸ்  காட்சிகளில்  அற்புதமாக  நடித்திருக்கிறார். நாகேஷ் , கே  ஏ  தங்கவேலு , வெண்ணிற  ஆடை  மூர்த்தி  என  காமெடி  பட்டாளமே  இருக்கிறது 


 எம் எஸ்   விஸ்வநாதன்  இசையில்  ஏழு  பாடல்கள் , நான்கு  ஹிட்   நான்கு  பாடல்களை  கவிஞர்  கண்ணதாசனும்  3  பாடல்களை  கவிஞர்  வாலியும் எழுதி  இருக்கிறார்கள்  138  நிமிடங்கள்  ஓடும்  அளவு   எடிட்டிங்கில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள்  


சபாஷ்  டைரக்டர் (  சி வி  ராஜேந்திரன் ) 

1  டைட்டில் , திரைக்கதை  இரண்டிலும்  இது  ஹீரோயின்  சப்ஜெக்ட்  படம் என்பது  தெளிவாகத்தெரிந்தும்  சிவாஜியை  நடிக்க  ஒப்புக்கொள்ள  வைத்த  சாமார்த்தியம் 


2    கொடைக்கானலில்  ஷூட்டிங்  என்பதால்  கண்ணுக்குக்குளிர்ச்சியான  காட்சிகள்


3   நாயகன் - நாயகி  ரொமான்ஸ்  காட்சிகளில்  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகிய  விதம் 




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ஒரு  ஆலயம்  ஆகும்  மங்கை  மனது  (  ஷூட்டிங்கில்  வரும்  ஓப்பனிங் சாங் ) 

2  எல்லோருக்கும்  காலம் வரும்  சம்பாதிக்கும்  நேரம்  வரும் , அதுவரை  என்ன  கதையோ ?  (  ரயில்  பயணத்தில்  காமெடியன்  சாங் ) 


3   ஓ  ஓராயிரம்  நாடகம்  ( டூயட்) 


4  ஒரு  ஆலயம்  ஆகும்  மங்கை  மனது  ( ரிப்பீட்  ரியல்  லைஃப்  சாங் ) 


5 பொட்டு வைத்த  முகமோ? கட்டி  வைத்த  குழலோ ?  ( டூயட்  சாங்  2 ) 


6  ஏ  புள்ள  சச்சாயி , ஏனுங்க  ஏனுங்க 

7  கல்யாண  சந்தையிலே 


  ரசித்த  வசனங்கள் 


1  கடவுள்  பக்தி  என்பது  இந்த  உலகத்தில்  எல்லோருக்கும்  பொது , ஆனா  ஒரு  நடிகையோட  பக்தி  மட்டும்  ஏன்  நடிப்பாப்பார்க்கப்படுது ? 


2  120  வயசுக்கிழவி  எதுக்குத்தூக்கு போட்டுக்கனும், அதுவா  சாகும்  வயசாச்சே? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  தனது  முகச்சாயலிலேயே  இருக்கும்  தன்  சித்தப்பா  மகனை  ரொம்ப  நாட்கள்  கழித்துப்பார்க்கும்போது    நீங்க  யாரு?னு  தெரியலையே?னு  அந்த  கேரக்டர்  பேசுவது  எப்படி ?  ( வி  கோபால  கிருஷ்ணன்) 

2  நாயகன்  மட்டும்தான்  சினிமா  பார்க்காத  ஆள், அவருக்கு நாயகி  ஆன  நடிகையைத்தெரியாது  ஓக்கே , ஆனால்  ஊரில்  உள்ள  மற்ற  எந்த  கேரக்டர்களுக்குமே  பிரபல  நடிகையை  அடையாளம்  தெரியாதா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   படம்  ஜாலியக  கலகலப்பாகப்போகிறது .  டி வி யில்  போடும்போது  பார்க்கலாம்  ரேட்டிங் 2.5 / 5 


சுமதி என் சுந்தரி
சுமதி என் சுந்தரி.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்சி.வி.ராஜேந்திரன்
மூலம் திரைக்கதைசித்ராலயா கோபு
மூலம் கதைபிரசாந்த தேப்
நடிக்கிறார்கள்சிவாஜி கணேசன்
ஜெயலலிதா
ஒளிப்பதிவுதம்பு
திருத்தியவர்என்.எம்.சங்கர்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
ராம் குமார் பிலிம்ஸ்
வெளிவரும் தேதி
  • 14 ஏப்ரல் 1971
நேரம் இயங்கும்
138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்