Showing posts with label சுனாமி. Show all posts
Showing posts with label சுனாமி. Show all posts

Wednesday, April 11, 2012

சென்னை உட்பட தமிழகம் முழுக்க ஆங்காங்கே நில நடுக்கம், சுனாமி எச்சரிக்கை






சென்னை: சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டடங்கள் கிடுகிடுவென ஆடின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டும் கட்டடங்களை விட்டும் வெளியேறினர்.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நகரின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, எழும்பூர், நந்தனம், ஆழ்வார்ப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்டபல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர்.

அரசு அலுவலகங்கள் நிரம்பியுள்ள சேப்பாக்கம் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அரசு ஊழியர்கள் பயந்து வெளியேறினர். சில விநாடிகளுக்கு கட்டடங்கள் கிடுகிடுவென ஆடியதால் அவர்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் ஆடியதால் மேசை, சேர்களும் ஆடியுள்ளன. மேலும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் ஆடியதால் அனைவரும் பீதியடைந்தனர்.

யாரோ பிடித்து உலுக்கியது போல கட்டடங்கள் வேகமாக ஆடியதால் ஊழியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.அனைவரும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதேபோன்ற நிலநடுக்கத்தையும், ஆட்டத்தையும் நகரின் பல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்தனர். சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் நகர் முழுவதும் பெரும் பீதி காணப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டும், கட்டடங்கள், அலுவலகங்களை விட்டும் வெளியேறியுள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், கோடியக்கரை உள்பட ல இங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நந்தனம் 8 மாடி கட்டடத்திலிருந்து ஊழியர்கள் ஓட்டம்

நந்தனம் பகுதியில் உள்ள சேவை வரி விதிப்பு (service tax) அலுவலகம் அமைந்துள்ள 8 மாடி கட்டடம் குலுங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.

நில அதிர்வு குறித்து உணர்ந்தவர்கள் கூறியதாவது.

2மணி 15 நிமிடத்தில் கட்டடம் திடீரென்று குலுங்கியது. யாரோ தள்ளிவிட்டது போல உணர்ந்தோம். உடனே பதறியபடி வெளியேறிவிட்டோம் என்று கூறினர்.

சைதாப்பேட்டை, தி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியுடன் அலுவலகங்களையும், வீடுகளையும் விட்டு வெளியேறினர்.இதனால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக ஊழியர்களும் ஓட்டம்

இதேபோல சென்னை தலைமைச் செயலக அலுவலகப் பகுதியிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் ஆடியதால் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

செல்போன் சேவை பாதிப்பு

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சென்னை நகர் முழுவதும் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சென்னையில் பதற்றம் எழுந்துள்ளது.

 காஞ்சிபுரம், ஊட்டி போன்ற இடங்களிலும் நில நடுக்கம்

----------------------


Posted Date : 14:04 (11/04/2012)Last updated : 15:04 (11/04/2012)
சென்னை:இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னையிலும் தாக்கத்தை  ஏற்படுத்தியதால் மக்கள் பீதியடைந்னர்.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று மதியம் சுமார் 2.15 மணியளவில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 8.7ஆக பதிவானதால் நிலநடுக்கம்  மிகக்கடுமையாக உணரப்பட்டது.

இதன் காரணமாக  சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,உதகை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.

சென்னையில் அண்ணாசாலை,மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.இதனால் மக்கள் பீதியடைந்து  வீடுகளை விட்டு வெளியேறினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.கட்டடங்கள், வீடுகளில் இருந்த சேர்கள்,டேபிள்கள் குலுங்கின.இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு  வெளியேறினர்.

சின்ன காஞ்சிபுரம், கலெக்டர் அலுவலக பகுதி, நத்தப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய  பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.மாவட்டங்களிலும் உணரப்பட்டது.

கட்டிடங்கள் குலுங்கியதால் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தோர் பீதியடைந்து  வெளியே ஓடிவந்தனர். அதேப்போன்று ஊட்டியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இதனிடையே தமிழகம் தவிர்த்து இந்தியாவில் புவனேஸ்வர்,கொல்கத்தா,டெல்லி மற்றும்  அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட இந்தோனேஷியா,இந்தியா, இலங்கை, மலேசியா  உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அந்தமான்   தீவுகளில் சுனாமி தாக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.


கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக தாய்லாந்து, இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட இந்திய பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் சுமார் 2,30,000 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 9.1 ஆக பதிவானது.இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவானது.


இது முக்கியம் http://pic.twitter.com/WdTP1L3l -நன்றி - யானை விஞ்ஞானி



1. .எங்கள் ஆட்சியில் தான் சென்னையில் நில நடுக்கம் வந்துள்ளது, ஜெ பெருமிதம்


--------------------------------

2.  கலைஞர், ஜெ, ராம்தாஸ்,  சசிகலா என ஏகப்பட்ட பாவிகள் இருக்கும் சென்னையில் நில நடுக்கம் வந்ததில் ஆச்சரியம் என்ன? பூமா தேவிக்கே பொறுக்கலை போல :((

------------------

3 கூடங்குளத்தில் நில நடுக்கம் லேசாக வந்திருந்தால் ஆட்சியாளர்கள் முகத்திரை அட்டகாசமாய் கிழிக்கப்பட்டிருக்கும்


--------------------------------

4. டியர், இன்னைக்கு நான் பீச்சுக்கு வர மாட்டேன், சுனாமி வர சான்ஸ் இருக்காம்.



 அடடா.. அப்போ நீ வர சான்ஸ் இல்லையா?


---------------------------------------

5.  இரண்டாம் உலகம் படத்தை மிக கஷ்டப்பட்டு எடுத்தேன்.அதை மூன்றாம் உலகத்தில் தான் ரிலீஸ் பண்ண முடியும் போல.- செல்வராகவன் வேதனை


----------------------------

Issued at: 1521 IST Wednesday 11 April 2012
EARTHQUAKE INFORMATION (Revised)
Magnitude (Preferred) : 8.5 M (Great)
Network Magnitude(s): 8.1 (MLv), 8.1 (Mwp), 8.5 (Mw(Mwp)), 8.4 (mB), , 8.7 (Mw(mB)), 7.1 (mb), 8.5 (M)
Depth: 10 km
Date : 11 Apr 2012
Origin Time: 1408 IST
Latitude: 2.4 N
Longitude: 93.07 E
Location: off W Coast of Northern Sumatra
Land/ Ocean: Ocean part
Water Level Depth (if Ocean): 4257 m
EVALUATION
The real time water level Observations from sea level network are reported as following:
Station Latitude Longitude Wave Arrival (IST) Wave Amplitude (m)
STB01(India)6.3N88.8E11-Apr-2012 14:47:510.1
Real-time measurements of wave activity have indicated that a tsunami was generated.

The following is the threat assessment based on revised earthquake information and pre-run model scenarios.
TSUNAMI THREAT FOR THE INDIAN COAST
The list below shows the forecast arrival time (T) of the first wave estimated to exceed 0.2 m amplitude at the beach in each zone, and the amplitude of the maximum beach wave predicted for the zone. Zones where the estimated wave amplitudes are less than 0.2m at the beach are not shown.

The list is grouped by State (alphabetic order) and ordered according to the earliest estimated times of arrival at the beach.

Please be aware that actual wave arrival times may differ from those below, and the initial wave may not be the largest. A tsunami is a series of waves and the time between successive waves can be five minutes to one hour.

The threat is deemed to have passed two hours after the forecast time for last exceedance of the 0.5m threat threshold for a zone. As local conditions can cause a wide variation in tsunami wave action, CANCELLATION of national warnings and ALL CLEAR determination must be made by national/state/local authorities.

PLACE NAME DISTRICT
STATE / UNION TERRITORY
T(IST)
Amplitude(m) Threat Status
PORT BLAIRPORT BLAIR ANDAMAN & NICOBAR11-Apr-2012 15:541.4Alert
HAVELOCKHAVELOCK ANDAMAN & NICOBAR11-Apr-2012 16:030.8Alert
NORTH SENTINEL ISLANDNORTH SENTINEL ISLAND ANDAMAN & NICOBAR11-Apr-2012 16:081.1Alert
DIGLIPURDIGLIPUR ANDAMAN & NICOBAR11-Apr-2012 16:180.7Alert
RANGATH BAYRANGATH BAY ANDAMAN & NICOBAR11-Apr-2012 16:200.9Alert
INDIRA POINTINDIRA POINT GREAT & LITTLE NICOBAR ISLAND ANDAMAN & NICOBAR11-Apr-2012 14:463.2Warning
WEST & LANDFALL ISLANDWEST & LANDFALL ISLAND ANDAMAN & NICOBAR11-Apr-2012 21:050.6Alert
KOMATRA & KATCHAL ISLANDKOMATRA & KATCHAL ISLAND ANDAMAN & NICOBAR11-Apr-2012 14:562.5Warning
FLAT ISLANDFLAT ISLAND ANDAMAN & NICOBAR11-Apr-2012 22:111.3Alert
CAR NICOBARNICOBAR ANDAMAN & NICOBAR11-Apr-2012 15:061.4Alert
LITTLE ANDAMANLITTLE ANDAMAN ANDAMAN & NICOBAR11-Apr-2012 15:311.2Alert
SRIHARIKOTANELLORE ANDHRA PRADESH11-Apr-2012 17:031.1Alert
MACHILIPATNAMKRISHNA ANDHRA PRADESH11-Apr-2012 17:031.5Alert
KOTTAPATNAMPRAKASAM; GUNTUR ANDHRA PRADESH11-Apr-2012 17:071.3Alert
KAKINADAEAST & WEST GODAVARI ANDHRA PRADESH11-Apr-2012 17:081.0Alert
VISAKHAPATNAMVISAKHAPATNAM; VIZIANAGARAM ANDHRA PRADESH11-Apr-2012 17:221.1Alert
KOYYAMSRIKAKULAM ANDHRA PRADESH11-Apr-2012 17:271.0Alert
PANAJINORTH & SOUTH GOA GOA11-Apr-2012 19:410.4Watch
DWARKAJAMNAGAR GUJARAT11-Apr-2012 20:570.2Watch
PORBANDARPORBANDAR GUJARAT11-Apr-2012 20:460.2Watch
AMRELIAMRELI GUJARAT11-Apr-2012 21:480.2Watch
GULF OF KHAMBATBHAVNAGAR; KHEDA; BHARUCH; SURAT; VALSAD GUJARAT11-Apr-2012 22:010.2Watch
KARWARUTTAR KANNADA KARNATAKA11-Apr-2012 19:270.5Watch
MANGALOREUDUPI; DAKSHIN KANNADA KARNATAKA11-Apr-2012 18:520.4Watch
CHANDRAGIRI FORTKASARAGOD KERALA11-Apr-2012 18:380.4Watch
MADAYI KANNURKANNUR KERALA11-Apr-2012 18:340.4Watch
TRIVANDRUMTHIRUVANANTHAPURAM KERALA11-Apr-2012 19:180.9Alert
ALLEPPEY ALAPPUZHAALAPPUZHA KERALA11-Apr-2012 22:581.0Alert
QUILONKOLLAM KERALA11-Apr-2012 23:270.7Alert
COCHINMALAPPURAM; THRISSUR; ERNAKULAM KERALA12-Apr-2012 02:460.5Alert
BEYPOREKOZHIKODE KERALA12-Apr-2012 03:450.6Alert
AMINIAMINI LAKSHADWEEP11-Apr-2012 18:080.4Watch
KAVARATTIKAVARATTI LAKSHADWEEP11-Apr-2012 18:000.3Watch
MINICOYMINICOY LAKSHADWEEP11-Apr-2012 17:380.5Watch
AGATTIAGATTI LAKSHADWEEP12-Apr-2012 01:080.6Alert
ANDROTHANDROTH LAKSHADWEEP12-Apr-2012 01:180.6Alert
MUMBAIMUMBAI; THANE MAHARASHTRA11-Apr-2012 21:300.3Watch
ALIBAG PORTRAIGAD MAHARASHTRA11-Apr-2012 20:580.3Watch
ANJANWELRATNAGIRI MAHARASHTRA11-Apr-2012 20:100.3Watch
MALVAN BAYSINDHUDURG MAHARASHTRA11-Apr-2012 19:450.3Watch
GOPALPURGANJAM ORISSA11-Apr-2012 19:280.6Alert
PURIPURI ORISSA11-Apr-2012 20:330.7Alert
ASTRANGJAGATSINGHAPUR ORISSA11-Apr-2012 21:520.9Alert
PARADIPKENDRAPARA; BHADRAK; BALESHWAR ORISSA11-Apr-2012 22:390.5Alert
CUDDALORECUDDALORE; PONDICHERRY; VILLUPURAM TAMIL NADU11-Apr-2012 16:481.1Alert
MAHABALIPURAMKANCHIPURAM TAMIL NADU11-Apr-2012 16:561.3Alert
NAGAPATTINAMNAGAPATTINAM TO RAMESHWARAM TAMIL NADU11-Apr-2012 16:591.3Alert
CHENNAICHENNAI; TIRUVALLUR TAMIL NADU11-Apr-2012 17:051.2Alert
KANYAKUMARIKANYAKUMARI TAMIL NADU11-Apr-2012 17:420.8Alert
KOODANKULAMTIRUNELVELI TAMIL NADU11-Apr-2012 19:131.0Alert
RAMESWARAMRAMANATHAPURAM SOUTH TAMIL NADU11-Apr-2012 19:540.8Alert
TUTICORINTUTICORIN TAMIL NADU11-Apr-2012 20:150.8Alert
SAGAR & KAKDWIPPURBA MEDINIPUR; SOUTH & NORTH 24 PARGANAS WEST BENGAL11-Apr-2012 18:000.5Watch
ADVICE
For regions under WARNING (RED), public should be advised to move in-land towards higher grounds. Vessels should move into deep ocean.
For regions under ALERT (Orange), public should be advised to avoid beaches and low-lying coastal areas. Vessels should move into deep ocean
For regions under WATCH (Yellow) and NO THREAT (Green), no immediate action is required
This bulletin is being issued as advice. Only national/state/local authorities and disaster management officers have the authority to make decisions regarding the official threat and warning status in their coastal areas and any action to be taken in response.
UPDATES
Additional bulletins will be issued by ITEWC INCOIS for this event as more information becomes available.
CONTACT INFORMATION
Indian Tsunami Early Warning Centre (ITEWC)
Indian National Centre for Ocean Information Services (INCOIS)
Address:"Ocean Valley", Pragathi Nagar (BO), Nizampet (SO),
Hyderabad - 500 090, India.
Tel: 91-40-23895011
Fax: 91-40-23895012
Email: [email protected]
Website: www.incois.gov.in