Showing posts with label சுட்ட கதை - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சுட்ட கதை - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, October 27, 2013

சுட்ட கதை - சினிமா விமர்சனம்

டைட்டிலைப்பார்த்ததும் வழக்கமா ஏ எல் விஜய் ,மிஷ்கின் வகையறாக்கள் ஹாலிவுட் ,  கொரியப்படங்களை சுட்டு கதை பண்ணுவாங்களே அந்த மாதிரின்னு நினைக்கத்தோணும், ஆனா இது ஒரு ஆளை துப்பாக்கியால ஒருத்தன் சுட்ட கதை. கொலையாளி யார்? என்பதை கண்டு பிடிக்கும் டிடெக்டிவ்  காமெடி ஸ்டோரி 


மலைவாழ் மக்கள் வாழும் ஒரு கிராமம். அங்கே இருக்கும் எல்லாரும்  திருட்டுப்பசங்க அங்கே  இருக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல  புதுசா வேலைக்குச்சேரும் 2 கான்ஸ்டபிள்கள் மலைவாழ் மக்களின் தலைவனின் மகள் லேடி ஜெட்லீ மாதிரி இருக்கும் பொண்ணை காதலிக்கறாங்க. 

அந்த பொண்ணு கிட்டே தங்கள் காதலை வெளிப்படுத்தி 2 பேர்ல யாரோ ஒருவரை காதலிக்கனும்னு சொல்றாங்க . அந்த டைம்ல அந்தப்பொண்ணோட அப்பாவை யாரோ கொலை பண்ணிடறாங்க . பொண்ணு அப்பாவைக்கொன்னவங்களை  பழி வாங்க நினைக்குது .அந்த 2 போலீஸும் உதவறாங்க . யார் கொன்னது ? எதுக்கு கொன்னாங்க ? என்பதே மீதிக்கதை . 


 தமிழில் ஒரு வித்தியாசமான காமெடி கதையை , புதியதா ஒரு திரைக்கதை வடிவத்தை காட்டனும்கற ஆர்வம் இயக்குநருக்கு அபாரமா இருக்கு , ஆனா ஆர்வம் இருந்த அளவு அவர் ஹோம் ஒர்க் பண்ணலை . அதனால திரைக்கதை தடுமாறுது . 110 நிமிடம்  கூட ஓடாத சின்னப்படம் தான் ஆனா  ரொம்ப இழுக்குது . 




பாலாஜி , வெங்கடேஷ்  இருவரும்  ஹீரோக்கள் . நாகேஷ் , சந்திரபாபு பாணியில் நடிக்க முயற்சி பண்ணி  இருக்காங்க .பாராட்டத்தக்க  முயற்சி .2 பேருக்கும் பாடி லேங்குவேஜ் நல்லா வருது . வடிவேலுக்குப்பின் காமெடி நடிகர்களில் பாடி லேங்குவேஜில் யாரும் கலக்க வில்லை . அந்தக்குறையை இவர்கள் தீர்த்து வைக்க வாய்ப்பு இருக்கு 

ஹீரோயினாக லட்சுமிப்ரியா .இவர் ஆல்ரெடி கவுரவம் படத்தில் நடித்தவர் . இந்தியன் கிரிக்கெட்  டீமில்  இருந்தவர் . நஸ்ரியா பாணியில்  மிகக்கறாராக ஆடை விலகாமல் கண்ணியமாக வந்து போகிறார்.  தமிழ் சினிமா இவரைப்பயன்படுத்திக்கொள்வது நலம் 


நாசர்  மகளிர் மட்டும் படத்தில் வருவது போல் ஒரு முழு நீளக்காமெடிப்படத்தில் சைன் பண்ணிட,லாம் என கணக்குப்போட்டு இருக்கிறார். பாதிக்கிணறு கூடத்தாண்டவில்லை , ஆனால் அவர் அளவில் நடிப்பில்  குறை சொல்ல முடியாது . குட் 


எம் எஸ் பாஸ்கர் , ஜெயப்ரகாஷ்  லட்சுமிராமகிருஷ்ணன் என ஏகப்பட்ட கேரக்டர்கள் . வந்த வரை  ஓக்கே ரகம் 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1. சாம்பசிவம் காமிக்ஸ் காட்சிகள் படத்தில்  ஒரு புதுமை . படத்தில்  ஹீரோக்கள் துப்பறியும் காட்சிகளில்  காமிக்ஸ் காட்சியை இணைத்தது நல்ல ஐடியா . தமிழ் சினிமாவில் யாரும் இதுவரை காட்டாத காட்சி 


2.  படத்தின்  பின்னணி இசை அபாரம் . ஒரு காமெடிப்படத்துக்கு இசையால் சிரிக்க வைப்பது  ரொம்ப  முக்கியம் . அதை இந்தபப்டம் பரிபூரணமா நிறைவேத்தி இருக்கு . மேட்லீ ப்ளூஸ் தான் இசை . செம . ஆங்காங்கே எம் எஸ் விஸ்வநாதன் இசையை பயன் படுத்தி இருப்பது அடடே ரகம்


3 கான்ஸ்ட;பிள் சிங்காரம் வரும் காட்சிகளில் எல்லாம் தண்ணி டேங்க் சத்தத்தை பின்னணி இசையாக கொடுத்த காட்சிகள் செம காமெடி 2 ஹீரோக்களில்   ஒருவருக்கு நினைத்தாலே இனிக்கும்  ரஜினி மாதிரி எதையாவது திருடும் குணம் இருப்பதும் , இன்னொரு ஹீரோவுக்கு ஒன் சைடு காது டமாரம் என்பதையும் வைத்து அமைக்கப்பட்ட காமெடிக்காட்சிகள் ஓக்கே  ரகம் ( இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளை வைத்து காமெடி பண்ணுவதை இனி தவிர்க்கலாம் ) 


4  இரு ஹீரோக்களும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டிருக்கும்போது  காட்டில் புலி உறுமுவதும்  உடனே அவர் “ உஷ் , பேசிட்டு இருக்கோமில்ல ? “ என புலியை அப்பாவித்தனமாய் அதட்டுவதும் அல்லோலகல்லோலக்காமெடி . தியேட்டரே அதிர்ந்தது கைதட்டலால் 


5 போலீஸ் ஹீரோக்கள் இருவரும் மாஸ் சீன் வேணும் என  கடலையைத்தட்டி விட்டு இண்ட்ரோ  கொடுக்கும் காட்சி செம நக்கல் 


6  வீடு வாடகைக்கு வேண்டும் என கேட்கப்போன இடத்தில் அந்தப்பொண்ணு போலீஸ் மாமா கிட்டே பிடிச்சுக்கொடுத்துடுவேன் என குழந்தைக்கு சோறு ஊட்டும் இடம் 


7  மலைவாழ் மக்களின்  உப தலைவன்  ஆசீர்வாதம் செய்யும் சீனில் அவர் கூல் என சொல்லி அனுப்ப குஞ்ஞானி என ஆட்கள் சொல்லுவதும் செம சிரிப்பு 



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. கதையோடு ஆடியன்ஸ் ஒன்றி விட வேண்டும் எனில்  முதல்ல கேர்கடர்களை அந்நியோன்யமா காட்டிடனும். யார் எவர்னே தெரியாத ஆள்  கொலை செய்ய்ப்படுதல் , ஹீரோயின்  யாரையும் லவ்வலை  என்பதெல்லாம் சுவராஸ்யம் குறைந்த காட்சி அமைப்புகள் 


2  கதை நடக்கும்  கால கட்டம் 1970 என்பது போல் காட்டறாங்க . ஆனா ஹீரோயினை ஹீரோக்கள் நீ விஜய சாந்தி மாதிரி  இருக்கே  என சொல்வது எப்படி ? 


3 கல்வி மந்திரி தன் நெருங்கிய சொந்தத்துக்கு வேலை வாங்கித்தரனும்னா  கமிஷன்ருக்குத்தான் போன் போட்டு  சொல்லச்சொல்வார் , அதுவும் தன் பி ஏ , மூலமா . இப்படி ஒரு சாதா இன்ஸ்பெக்டருக்கு லெட்டர் எல்லாம் எழுதிட்டு இருக்க மாட்டார் 


4 காட்டுக்குள் இரவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் லைட்டிங்க் ஓவர் . ரொம்ப செயற்கை . இயற்கையான ஒளிப்பதிவு முக்கியம் . கொடைக்கானலில் அத்தனை லைட் ஏது ?



5 படத்தில் ஏதாவது  திருப்பம் வந்தால் ரசிகர்கள் பார்த்துக்குவாங்க , படத்தில் வரும் கேர்கடர்களே மூச்சுக்கு முன்னூறு தடவை ட்விஸ்ட் வருது , என்ன ஒரு ட்விஸ்ட் , செம ட்விஸ்ட் என  பாராட்டிக்கொள்வது கலைஞரின் நமக்கு நாமே பாராட்டுத்திட்டம் மாதிரி எரிச்சலைக்கிளப்புது


 
மனம் கவர்ந்த வசனங்கள்


  1. கல்வித்துறை மந்திரி ஒரு கை நாட்டு . விளங்கிடும்


  1. இது உங்க வீடு மாதிரி


ரொம்ப தாங்க்ஸ் சார்

உங்க  வீடுன்னா சுத்தமா வெச்சிருக்க மாட்டீங்க,? க்ளீன் பண்ணுங்க

சார்!!

3 ரோந்து வேலை பார்க்கச்சொன்னா  ரோமியோ வேலை பார்த்துட்டு இருக்கீங்களா?


4 மிஸ்! சாகறதுக்கு முன்னால அங்க்கிள் என்ன பண்ணிட்டு இருந்தாரு?


உயிரோட  இருந்தாரு


5 உங்களுக்கு டாஸ்மாக் அனுபவம் இதுதான்  ஃபர்ஸ்ட் டைமா?

 ஆமா, எப்படி தெரியும் ?

 ஒரு குவாட்டர்  பீர் ஆர்டர் பண்றீங்களே? பீர்-னா ஃபுல் தானே? 




6         நீ துப்பாக்கியை வெச்சுத்தானே சுடுவே? நான் துப்பாக்கியையே சுடுவேன் ஐ மீன் லபக்கிடுவேன்


7         என் புருஷனால  குறி பார்த்து எதையும்  சுட முடியாது , கண் வீக்கு , ஆனா இதை சொன்னா கோபம் மட்டும் வந்துடும்

8 சிலந்தி   தன் வேலை முடிஞ்சதும் தன் காதலனையே கொன்னுடும் 

 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-40


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 2.75  / 5



சி பி கமெண்ட்  - வித்தியாசமான காமெடிப்படம் பார்க்கும் ஆர்வம் உள்ள ரசிகர்கள் பார்க்கலாம், பெண்களூம் பார்க்கும் தரத்தில் தான் படம் இருக்கு . ரொம்ப சின்னப்படம் என்பதால் நெளிய வைக்கவெல்லாம் இல்லை .ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் . படம்  முழுக்க ஆடியன்ஸ் ரசிச்சு சிரிச்சாங்க . ஏ செண்ட்டர்ல் ஓரளவு ஓடிடும்