ராகவா லாரன்சின் வளர்ச்சி அபாரமானது.டான்ஸ் மாஸ்டராக ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடிட்டுப்போனவர் திடீர்னு ஹீரோ ஆனதும் இதெல்லாம் இவருக்கு சரிப்பட்டு வருமா? என்றவர் ஏராளம்,ஆனால் முனி , காஞ்சனா, காஞ்சனா 2 மூலம் மெகா ஹிட் படங்கள் தந்தவர் என்ற ரேஞ்சுக்கு வந்துட்டார், இவரது லேட்டஸ்ட் மொக்கைப்படமான மொட்டை சிவா கெட்ட சிவா வுக்கு நல்ல ஓப்பனிங் என கேல்விப்பட்டேன். சந்திர முகி படம் தந்த பி வாசு வும் , காஞ்சனா தந்த ராகவா லாரன்சும் புது காம்போ வில் எப்டி படம் தந்திருக்காங்கன்னு பார்ப்போம்
வழக்கமா பேய்ப்படத்துல தன்னை ரேப்பின வில்லனை /கொலை செஞ்ச வில்லனை பொம்பளைப்பேய் பழி வாங்கும், ஆனா இதுல ஆம்பளைப்பேய் பெண் உடலில் புகுந்து பழி வாங்குது. இதுலயும் ஒரு புதுமை . கொலைகாரன் முதுகுப்புறமா நின்னு ரயில்ல இருந்து தள்ளி விட்டதால பேய்க்கே தன்னை யார் கொலை செஞ்சான்னு தெரியல.
ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் , அவரோட புது சம்சாரம் உடம்புல பேய் புகுந்து என்னை கொலை செஞ்சவனை கண்டு பிடிச்சாதான் போவேன் அப்டினு சசிகலா மாதிரி அடம் பிடிக்குது ( அப்போ ஹீரோவோட பழைய சம்சாரம்?னு கேட்கப்படாது )
ஹீரோ எப்டி அந்த கொலை கேசை டீல் பண்றாரு என்பது தான் கதை
படத்தைப்பத்தி பார்க்கும் முன் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் பற்றி சொல்லிடறேன். தியேட்டர்ல பயங்கரக்கூட்டம், ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம், படம் நிச்சயம் ஆல் செண்ட்டர் ஹிட் தான்
ராகவா லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபிக்க கபாலி கட் அவுட் முன் ஓப்பனிங் சாங் போடறார். லிங்கா டைட்டிலை சிவ லிங்கா என உல்டா பண்றார், ரஜினி மேனரிசம் எல்லாம் கூச்சப்படாம ஃபாலோ பண்றார். இதெல்லாம் தேவையே இல்லை, அவரோட ஒரிஜினல் நடிப்பே போதும்
ஹீரோயினா இறுதிச்சுற்று ரித்திகா சிங். முதல் படத்தில் எந்த அளவுக்கு இயற்கையா நடிச்சாரோ அதுக்கு நேர்மாறா இதில் படு செயற்கையான நடிப்பு . என்னதான் மாடர்ன் கேர்ளா இருந்தாலும் பெண் பார்க்க வந்த மாப்ளையிடம் , பெரியவர்கள் முன்னிலையிலேயே அப்டி நடந்து கொள்வார்களா? விட்டா மினி ஃபர்ஸ்ட் நைட்டையே ஹால்ல முடிச்சிருப்பார் போல . சும்மா தியேட்டர்ல கை தட்டலை அள்ள செயற்கையான காட்சிகளை வைக்கக்கூடாது
ஹீரோயின் பேய் ஆன பின் அவரது மேக்கப் கிராஃபிக்ஸ் உதவியில் சுமாரா இருக்கு , சில காட்சிகளில் சகிக்கலை , ஆனா ஜனங்க ரசிக்கறாங்க. இப்போ தமிழ் நாட்டின் சாபக்கேடே திமுக , அதிமுக 2 கட்சிகளும் தான், ஆனா ஜனங்க ஏத்துக்கிட்டாங்க, மாறி மாறி 2 திருடன்களையும் உக்கார வைக்கறாங்க, நாம என்ன பண்ண முடியும்?
காமெடிக்கு வடிவேலு . சந்திர முகி பாணியில் ட்ரை பண்ணினாலும் சில காட்சிகள் சிரிப்பு வருது, பல காட்சிகள் கடுப்பு வருது, ஆனாலும் வடிவேலு படத்துக்கு பிளஸ் தான்
பாடல் காட்சிகள் ஸ்பீடு பிரேக்கர்ஸ் , 2 பாட்டு தேறுது
சபாஷ் இயக்குநர்
1 ஊர்வசியின் கேரக்டர் , கெட்டப் , காமெடி கலக்கல் ரகம் . கோவை சரளா அல்லது ஊர்வசி ராகவா படங்களில் செட் ஆகி விடுவது பிளஸ்
2 ரித்திகா சிங்க் க்கு 5 லட்சம் ரூபா சம்பளம் கொடுத்து 50 லட்சம் ரூபாவுக்கான கிளாமரை காட்ட வைத்த புத்திசாலித்தனம்
3 படத்தில் வசனம் , காட்சிகள் இவற்றில் பல ஏ க்கள் இருந்தாலும் சென்சாரில் சசிகலாத்தனம் செஞ்சு யு சர்ட்டிஃபிகேட் வாங்கிய லாவகம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 நான் சி பி சி ஐ டி போலீஸ்னு யாருக்கும் தெரியக்கூடாதுன்னு ஹீரோ சொல்லிக்கிட்டே சம்சாரம், மாமனார், மாமியார் எல்லார் கிட்டேயும் வரிசையா உளறார்.
2 ரஹீமின் ஆவி “ நான் உயிரோட இருந்த வரை எந்த உயிருக்கும் தீங்கு செஞ்சதில்லை, ஈ எறும்புக்குக்கூட “அப்டினு ஒரு டயலாக் பேசறார்,ஆனா அவர் தொழில் என்னான்னா ஆட்டை வெட்டு பிரியாணி பண்றது. கலைஞரை விட பெரிய கில்லாடியா இருப்பார் போல
3 கோர்ட்டில் ஜட்ஜ் “ ரஹீம் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் “ அப்டினு சொல்லறதுக்குப்பதிலா “ ரஹீம் கொலை செய்திருக்கக்கூடும் “அப்டினு தப்பா சொல்றார் ( ஒரு வேளை அவர் ஒரு கொலை செஞ்சு அது எடிட்டிங்க்ல கட் ஆகிடுச்சொ என்னவோ)
4 ஹீரோ ஒரு கம்பெனி ஓனர் என்று தான் பெண் வீட்டில் இண்ட்ரோ.ஆனா மாமியார் பானுப்ரியா விடம் ஹீரோ ஃபோனில் பேசும்போது “ எனக்கு திடீர்னு லீவ் கிடைச்சுது” என்கிறார், ஓனருக்கு எப்டி லீவ் கிடைக்கும்? எப்போ வேணாலும் லீவ் எடுத்துக்கலாமே? என பானு ஏன் கேட்கலை?
5 ஊரிலிருந்து பதட்டமாக வந்த மாமியார் பானுப்ரியாவிடம் ஹீரோ வாய் வார்த்தையா ஆறுதல் சொன்னா போதாதா? 2 உள்ளங்கையை யும் பிடிச்சு தடவிக்கொடுத்துட்டு இருக்கார் . எந்த ஊர்ல மாப்ளை எந்த மாமியார் கிட்டே அப்டி செய்யறாங்க?
6 க்ளைமாக்சில் படு நாடகத்தனம் . இந்த கூட்டத்துல தான் கொலையாளி இருக்கான் என் கிறார் ஹீரோ , ஹாலில் அத்தனை பேரும் ஆஜர் ஆகி இருக்காங்க , பேய் சம்பந்தப்பட்ட கேஸ் என தெரிந்தும் கொலையாளி அங்கே வந்து தானே சிக்கிக்கொள்வானா?
நச் டயலாக்ஸ்
1 பெத்த அம்மாவை விட்டுட்டு எவன் எல்லாம் தனியாப்போறானோ அவன் எல்லாம் என் பார்வையில் பிணம் #SIVALINGA
2 தப்பு பண்ற ஒவ்வொருவருக்கும் ஆண்டவன் ஏதோ ஒரு விதத்தில் ஆப்பு வெச்சிடறான் #SIVALINGA (சசிகலா ரெப்ரன்ஸ்.4 வருசம்)
4 ஒரு ஃபேம் க்கும் , பேய்க்கும் நடுவுல வந்து மாட்டிக்கிட்டேன்
5 சாவி எங்கே?
தலையணைக்கு அடில ரகசியமா வெச்சிருக்கேன்
ஆமா, ராணுவ ரகசியம், யாராலும் கண்டு பிடிக்கவே முடியாத இடம் பாரு
6 டர்
உருது?
ஆமா தானா வருது
7 என்னோட தரித்திரம் என்னைத்தவிர யாருக்கும் தெரியக்கூடாது #SIVALINGA
8 லெமன் மாதிரி இருக்கற பொண்ணை பூசணிக்காய் போல ஆக்கப்போறே ( மாசமாக்கப்போறாராம்)
9 ஒவ்வொருத்தியும் ரதி மாதிரி இருக்காங்க, இதை எல்லாம் காட்டாம லைஃப்ல சதி பண்ணிட்டாங்க
10 ஏன் ஃபோனை டிஸ் கனெக்ட் பண்ணிட்டே?
லைஃப்ல நாம கனெக்ட் ஆகத்தான்
சி பி கமெண்ட் - சிவலிங்கா - சந்திரமுகி பாணியில் ஜனரஞ்சகமான க்ரைம் இன்வெஸ்டிகேசன் கோஸ்ட் த்ரில்லர்.ஆல் சென்ட்டர் ஹிட்.விகடன்-42.ரே-2.75/5