Showing posts with label சிவ கார்த்திகேயன். Show all posts
Showing posts with label சிவ கார்த்திகேயன். Show all posts

Friday, April 04, 2014

மான் கராத்தே - சினிமா விமர்சனம்

 

5 நண்பர்கள்  ( 2 பொண்ணுங்க,3 பசங்க)  கார்ல பிக்னிக் போறாங்க. ஏதோ கிளிகிளுப்பா நடக்கும்னு தமிழன் எதிர்பார்க்கறான் ( இங்கே தமிழன் கறது சாட்சாத் நான் தான் ) ஆனா அவங்க ஒரு கொல்லிமலை சித்தரை சந்திக்கறாங்க. அவர்  என்னடான்னா  எதிர்காலத்தில் வர இருக்கும்  தினத்தந்தி பேப்பரை வர வழைக்கறாரு. ( நல்ல வேளை ,சரோஜா தேவி , விருந்து எல்லாம் வர வைக்கலை )  அதுல   பீட்டர் என்கிற பாக்சரால இவங்க 2 கோடி  ரூபாய் சம்பாதிப்பாங்கனு  நியூஸ் இருக்கு. 


பீட்டரை த்தேடிப்போனா அவர் பாக்சிங்-னா என்னனே தெரியாத பகத்சிங்கா இருக்காரு. அவங்க  தங்கள்  2 கோடியை செயிச்சாங்களா? இல்லையா? என்பதே  கதை .


ஏ ஆர் முருகதாஸ் தான் கதை. அவர் இன்னும் ஏழாம் அறிவு பாதிப்பில்  இருந்து வெளில வர்லை போல . சித்தர் பாபா-னு அள்ளி விட்டுட்டு இருக்கார் 

 ஹீரோ சிவ கார்த்திகேயன் நாளைய இளைய தளபதி என்பதில் சந்தேகமே  இல்லை . நல்ல முன்னேற்றம்.  டான்ஸ் காட்சிகளில் அவர்  உழைப்பு தெரிகிறது . திரைக்கதையில்  தன்  மேடை மிமிக்ரி காட்சிகளை லாவகமாகப்பொருத்தி விடும் சமயோசிதமும்  சூப்பர் . பெண்கள் , குழந்தைகளைக்கவரும் நடிப்பு 




ஹீரோயின்  தர்பூசணிப்பழத்தின்  உள் கலர் மேனி சருமம் கொண்ட முலாம் பழ குளிர் அழகி . குழந்தைத்தனமாக முகத்தைக்காட்டி , கிளாமர்த்தனமாய் தேகத்தைக்காட்டினால் சென்சார்  ஏமாந்து  யு தருவாங்க என்ற   வித்தையை நன்கு தெரிஞ்சு வெச்சிருக்கார். 

சதீஷ்   இன்னொரு சந்தானமாக வரும் வாய்ப்புகள் பிரகாசமாத்தெரியுது . காமெடி பஞ்ச் ஒன் லைனர்கள்  குட் 


 வில்லனாக வரும்  வம்சி கிருஷ்ணா  நல்ல நடிப்பு . அவர் மனைவியாக வரும்  ஃபிகர் நல்லாருக்கு ( வில்லனின் மனைவியையும் சைட் அடிக்கும் பார பட்சம் காட்டா வாலிபர் சங்கம் ) 


சூரி பாக்சிங் நடுவரா வந்து   கொஞ்சம் காமெடி பண்றார் . 

 





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1.  ஒளிப்பதிவு  சுகுமாரன் கலக்கல்  ரகம் .  ஓப்பனிங்கில் வரும் வனம், அருவிக்காட்சிகள் , பாடல் காட்சிகள்  லொக்கேஷன் செலக்சன் எல்லாம் பக்கா 


2 அனிரூத் -ன் இசை துள்ளாட்டம் போட வைக்கிறது . 3 பாடல்கள்  சூப்பர்  ஹிட் . டான்ஸ் மூவ்மெண்ட் விஜய் படங்களுக்கு நிகர் . ஒரு பாட்டில்  அனிரூத் ஆடறார். செம ரெஸ்பான்ஸ்


3 திரைக்கதையில்  போர் அடிக்காமல் காமெடியாக கொண்டு சென்றது . 


4  சிவகார்த்திகேயனை எதார்த்தமான ஆளாகக்காட்டியது , ஓவர் ஆக்டிங் பண்ணாமல்  நல்ல நடிப்பு  , சபாஷ் சி கா 


5  வசனம் செம  காமெடி. ஒரு காமெடி என்ட்டர்டெய்னருக்கு டயலாக் ரொம்ப  முக்கியம் 




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. யாரோ  அறிமுகம் இல்லாத ஆட்களிடம் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் சித்தருக்கு ஏன் வந்தது ? அப்படி ஒரு ஈகோ வந்தால் அவர் என்ன சித்தர் ? 


2  எப்படி  இருந்தாலும்   2 கோடி கிடைப்பது உறுதி எனும்போது அந்த 5 பேரும் ஏன் எப்போதும் அழகிரி மாதிரி டென்சனாகவே  இருக்கனும் ? 


3 அனுதாப ஓட்டு வாங்குவதற்க்காக  ஹீரோ  வில்லன் காலில்  விழுந்து  கெஞ்சுவது , அதுக்கு  வில்லன்  தரக்குறைவாக  ஹீரோ வைப்பேசுவது  தவிர்த்திருக்கலாம்


4  வில்லனின் மனைவி   கணவரிடம்  ஹீரோவுக்காக ஏன் பரிந்து பேசுகிறார் ? 


5  திருக்குறள் 10  ஒப்பிச்சா பொண்ணு உனக்குத்தான் என்பது செம காமெடி . ஊருக்கு 100 பேர் அப்டி வந்துட்டா  என்ன ஆகும் ஹன்ஸ் நிலைமை . 


6   ஹீரோ  பாக்சர்  ஆவது , அதுக்குப்பயிற்சி எல்லாம் பெருசா எடுக்காம  ஜெயிப்பது  எல்லாம் நம்பகத்தன்மை இல்லை  



மனம் கவர்ந்த வசனங்கள்

1. உலகத்துலயே கேவலமான விஷயம் எது தெரியுமா ? நாம வேலைக்கே ஆக மாட்டோம்கற விஷயம் நாம லவ் பண்ற பொண்ணுக்கு தெரிய வர்றது தான் # மா க

2. சி கா டூ ஹன்ஸ் = நான் இப்போ ஆக்சனுக்கு மாறவா? வேணாமா? # உள் குத்து டயலாக்



 3.என்ன ஜூசு? 


ஓசி ஜூசு. அன்னாசி.



இமான் அண்ணாச்சி ஜூசா?,



சூப்பர் ஜோக் சார்.அந்தப்பக்கமா போய் சிரிச்ட்டு வரேன்.இருங்க # மா க 


 

4. சி கா - கூலிங் இருக்கா? னு தெரிஞ்சுக்க பீர் வாங்கும்போதே கன்னத்துல வெச்சுப்பார்த்து வாங்கனும் # மா க



 
5.சதீஷ் டூ சிவா -,என்னடா வைப்ரேட்டிங் மோடுலயே போறே?,நார்மலாவே நடக்க மாட்டியா?,#,மா க





 6.ஹன்ஸ் - எப்டி ஜெயிச்சீங்க ? 


சிவா - சின்சியாரிட்டி ,டெடிகேசன் ,உழைப்பு #,உள் குத்து வசனம் டூ சிவா ஹேட்டர்ஸ்




 7.காமத்துப்பால் னா என்ன ? 


ஆண் பால் + பெண் பால் + பாதாம் பால்








9. என்ன அனிமல்ஸ் எல்லாம் ஐ பேடு வெச்சிருக்கு ? #,மா க



10. நெய்க்குழந்தை மாதிரி கும்முனு இருக்கீங்க.உங்களுக்கு பாய் பிரண்டு இல்லையா?,


ஆமா.சிங்கிள் தான். சரி டபுள்ஸ் ஆக்கிடுவோம் #,மா க






11.டெய்லி லொட லொட னு பேசிட்டிருந்தவன் டக் னு பேசாம இருந்தா பொண்ணுங்க டிஸ்டர்ப் ஆவாங்க # மா க



12.  ஹன்சிகா ரொம்ப இளைச்சிடுச்சே! சிம்பு கை வண்ணமா? # மா க




13.  கடல் வத்தி கருவாடு திங்கலாம்னு நினைச்சா கொக்கு குடல் வத்தி செத்துப்போய்டும்டா.#,சிகா பஞ்ச் @ மா க




14.  டேய் 20 ரூபா இருந்தா இவ கிட்டே எறி. 



அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்கே போவேன் ?,# மா க




15.  ஹன்சிகா ஓப்பனிங் சீன் - என் ஐஸ் க்ரீமை லிக் பண்ணுனியா? 



 அய்யய்யோ இல்லீங்க # டபுள் மீனிங் @ மா க




16.  டேய்.அந்த் பொண்ணு சூப்பரா இருக்குடா



.அடேய் அது என் மாமியார்டா.ஆனாலும் சூப்பர்தான் இல்ல?# மா க





17. நீ என்னை விட்டுட்டுக்குடிக்கலாமா? சொல் குடிக்கலாமா? # செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? பாணி 



18. அடிச்சு ஜெயிக்கறது அவன் பாலிசி.அடிக்காமயே ஜெயிக்கறது இந்த மான் கராத்தே பீட்டர் பாலிசி # மாக சிவா பஞ்ச் 


 

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1. ட்ரெய்லரில் கலக்கிய டா டிகிடா ஆத்தாடி பாட்டு டான்ஸ் ஸ்டெப் பை விட லொக்கேசன் செலக்சன் ,கேமரா அள்ளுது # மா க

2.சூரி இன்ட்ரோ.அடேங்கப்பா.என்னா அப்ளாஸ்!

3.அனிரூத்க்கு இளையராஜாவை விட ரஹ்மான் தான் பிடிக்கும் போல.பாபா தீம் இசை சுட்டிங்

4. ஜாலியாப்போகுது .டைம் பாஸ் @ மான் கராத்தே இடைவேளை. ஓடிய நேரம் 1.11 மணி நேரம். இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ? நமோ நாராயணா ;-)




5. மாஞ்சா பொண்ணு தான் பாட்டு செம ஹிட்டு .ஒளிப்பதிவு கலக்கல்.டான்ஸ் மூவ்மென்ட் கொஞ்சமா வெச்சு நாயகி க்ளோசப் அதிக்மா வெச்சுட்டாங்க # அனிரூத்




6. ரம்பா வுக்கே சவால் விடும் ஹன்சிகாவின் துக்ளியூன்டு டிரவுசர் #,ரசிகர்களு க்கு THIGHபூச வாழ்த்துகள்




7.  தமிழ் நாட்டின் அடுத்த இளைய தளபதி ஓப்பனிங் சாங் # சுறா மாதிரி கடல் கரையில் டான்ஸ்



8.  சந்தானத்துக்கு இணையான சதீஷின் கவுன்ட்டர்ஸ் டயலாக்ஸ் # மா க



9.  பாபா ல வர்ற மாதிரி ஒரு சித்தர் # என்னய்யா கலர் கலரா ரீல் விடறீங்க?



10.  ஒரு நல்ல சிறுகதை முதல் வரியிலும் ,நல்ல சினிமா முதல் காட்சியிலும் கதையை சொல்ல ஆரம்பிச்சுடனும் # மா க குட் ஓப்பனிங்



11.  11 மணி ஷோ 10 22 க்கே போட்டாச் # ஹவுஸ்புல்



12.  அஜித் ,விஜய் படங்களுக்கு இணையான கூட்டம.ஆனா டிக்கெட் ரேட் கவுன்ட்டர் ரேட் தான் # மான் கராத்தே்



13 10 திருக்குறள் சொன்னா பொண்ணு கட்டித்தரேன்னு சொன்னதும் 10 மிமிக்ரி குரல் தரும் காட்சி அப்ளாஸ்.மழை # மா க





சி பி கமெண்ட் -மான் கராத்தே - நம்ப முடியாத கதை ,நம்ப வைக்க முயற்சிக்கும் மேஜிக் ரியலிச திரைக்கதை ,- டைம் பாஸ். மீடியமா ஹிட் ஆகிடும் . ஏ சென்ட்டரில்  50 நாள் ஓடிடும்


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41


குமுதம் ரேட்டிங்க் =ஓக்கே


 ரேட்டிங் = 2.5  / 5


ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்




ஈரோடு அபிராமி யில்
Embedded image permalinkஅ\\


டிஸ்கி 1 -மான் கராத்தே - வீடியோ விமர்சனம் பை சி பிஎஸ்-

2  ஒரு கன்னியும் ,மூன்று களவாணிகளும் - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2014/04/blog-post_896.html


டிஸ்கி 3 - ஒரு கன்னியும் 3 களவாணிகளும் - வீடியோ விமர்சனம் பை சி பி எஸ் -

https://www.youtube.com/watch?v=5aEaCr89cVA

Thursday, December 27, 2012

எதிர்நீச்சல் - சிவ கார்த்திகேயன் கலக்கல் பேட்டி , பாடல்கள் , ட்ரெய்லர் வீடியோ

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_121030112136000000.jpg 
"நயன்தாராவைப் பிடிக்கும்!"

சிலிர்க்கிறார் 'சி'னா 'கா'னா!
ஆ. அலெக்ஸ் பாண்டியன்
ஹீரோ சாயலில் சார் நடித்த 'மெரினா’ படம் வெளியாகி ஒரு வருடம்கூட ஆகவில்லை. தடதடவென ஐந்து படங்கள் முடித்துவிட்டார் 'ஹீரோ’ சிவ கார்த்திகேயன். ''அப்ப இனிமே உங்களை டி.வி-யில் பார்க்கவே முடியாதா?'' என்று கேட்டால், ''ஏங்க முடியாது..? 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’னு நான் நடிச்ச படம் எல்லாம் போடுவாங்களே... அப்ப பார்க்கலாம்!'' என்கிறார் அதே 'சினா கானா’ பிராண்ட் கிண்டலோடு.


''உங்களை ஹீரோவா வெச்சு 'எதிர்நீச்சல்’ படம் தயாரிக்கிற அளவுக்கு தனுஷ§டன் எப்படி க்ளோஸ் ஆனீங்க..?''
  ''அவர் மனசுல இடம் பிடிக்கணும்னு எல்லாம் நான் எதுவுமே பண்ணலை. நான் தனுஷோட ரசிகன். 'காதல் கொண்டேன்’ படம் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்தப் பட க்ளைமாக்ஸ் வசனத்தை காலேஜ்ல படிச்சிட்டு இருந்தப்போ, மிமிக்ரி பண்ணுவேன். அப்போ திருச்சி பக்கம் நான் மட்டும்தான் தனுஷ் குரலை மிமிக்ரி பண்ணதால, அது எனக்குத் தனி அடையாளம் கொடுத்துச்சு.



எதிர் காலத்துல அவர்கூடவே நடிப்பேன்னு அப்ப தெரியாது. '3’ படம் முடிச்சதுமே, 'படம் நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்’னு சொல்லிட்டு, 'எனக்கு ஒரு படம் பண்ணித் தர்றீங்களா?’னு கேட்டாரு. ஜோக் அடிக்கிறார்னு நினைச்சேன். பார்த்தா, அடுத்த பத்து நாள்ல படத்துக்கான வேலை ஆரம்பிச்சு, ஷூட்டிங்கே போய்ட்டோம். இவ்வளவுதாங்க 'நடந்தது என்ன’ டீடெய்ல்!''





''சென்னைக்கு முதன்முதலா வரும்போது உங்க லட்சியம் என்ன?''



''அப்ப எனக்கு இருந்த ஒரே லட்சியம்... சென்னைல இருக்கிற தியேட்டர்கள்ல நிறையப் படம் பார்க்கணும்கிறதுதான். ஏன்னா, எங்க ஊரு தியேட்டர்ல எல்லாம் இன்டர்வெல்லோட ஏ.சி-யை அமத்திருவாங்க. கேன்டீன்ல எதுவுமே வாங்கிச் சாப்பிட முடியாது.  அப்புறம் மீடியா வேலைக்கு வந்ததும் ஆசைகள், ஆர்வங்கள் அதிகமாச்சு. கிடைக்கிற வாய்ப்புகளை நல்லபடியாப் பயன்படுத் திக்கணும்னு இழுத்துப் பிடிச்சு ஓடிட்டு இருக்கேன்!''



''ஒரு காமெடியனாத்தான் சினிமாவில் அறிமுகம் ஆனீங்க. இப்ப நீங்க காமெடியனா, ஹீரோவா?''



''காமெடி ஹீரோனு வெச்சுக்கங்களேன். நடுவுல கொஞ்சம் எமோஷ னும் சேர்த்துக்கணும்னு ஆசை. காமெடியையும் ஒரே மாதிரி பண்ணாம, ஒவ்வொரு படத்துலயும் வித்தியாசமாப் பண்ணணும்!''



''வடிவேலு பல வருஷம் காமெடி யனா நடிச்ச அப்புறம்தான் ஹீரோவா நடிச்சார். சந்தானம் இன்னும் யோசிச் சுக்கிட்டே இருக்கார். ஆனா, நீங்க ரெண்டாவது படத்துலயே ஹீரோ... ரொம்பத் துணிச்சலா?''  



''ஐயோ... அப்படி இல்லைங்க. ஆரம்பத்துல என்னை ஹீரோவா ஏத்துக்கு வாங்களானு மத்த யாரையும்விட எனக்குத்தான் ரொம்ப சந்தேகமா இருந்துச்சு. ரொம்ப யோசிச்சு, சீனியர்கள்கிட்ட பேசுனப்ப, நம்ம லிமிட் தாண்டாம நடிச்சா நிச்சயம் ஏத்துக்குவாங் கனு நம்பிக்கை வந்துச்சு. அதைச் சரியா பண்ணேன். க்ளிக் ஆகிடுச்சு!''



''பிடிச்ச ஹீரோயின் யார்?''


''கேத்ரீனா கைஃப். தமிழ்ல சொல்லுங்கன்னு கேப்பீங்கள்ல! அதுக்கும் பதில் வெச்சிருக்கேன். நயன்தாரா. ஷூட்டிங்ல ஒரு நாள் அவங்களை நேர்ல சந்திச் சேன். வெளியே அவங்களுக்கு இருக்கிற ஸ்டார் இமேஜை மனசுல ஏத்திக்காம ரொம்ப சிம்பிளா இருந்தாங்க!''



''ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ்... அந்த மாதிரி பவர் ஸ்டார் - சிவகார்த்திகேயன் காம்பினேஷன் எதிர் காலத்தில் கலக்குவாங்களா?''



''ஐயையோ... அவர் யாரு? அவர்கூட என்னை கம்பேர் பண்ண முடியுமா? அவர் ரேஞ்ச் என்ன... பவர் என்ன? அவரை தியாகராஜ பாகவதர் கேட்டகரில வைக்கணும்ங்க!''



''இப்போ டி.வி. காம்பியரிங் பண்றவங்கள்ல யாரைப் பிடிக்கும்?''



''சிவகார்த்திகேயன்னு ஒருத்தர் நல்லாப் பண்ணிட்டு இருந்தார். அவர்தான் நம்ம ஃபேவரைட். ஆனா, இப்ப அவர் பண்ண மாட்டேங்கிறாரு. இப்போ வித்தியாசமான டைமிங் சென்ஸோட காமெடி பண்ற மா.கா.பா. ஆனந்த் பிடிக்கும். அப்புறம் எப்பவுமே நம்ம கோபிநாத் அண்ணனைப் பிடிக்கும்!''



''ஷூட்டிங் ஸ்பாட்லயும் காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா?''


''என்னை வெச்சுதாங்க எல்லாரும் காமெடி பண்ணிட்டு இருக்காங்க. 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’ல நானும் விமல் அண்ணாவும் ரயில்வே டிராக்ல சண்டை போடுற மாதிரி சீன். உச்சி வெயில். டிரெயின் பாஸிங் வேணும்கிறதால நாலு மணி நேரமா விதவிதமா பத்துப் பதினஞ்சு ஷாட் எடுக்குறாரு பாண்டிராஜ் சார்.




 சீன்ல விமல் அண்ணா என்னை அடிக் கணும். வெயில், வெக்கை கடுப்புல நிஜமாவே என்னை டம்மு டம்முனு அடிக்கிறாரு. 'சார்... போதும் சார்... முடியலை... வலிக்குது’னு கெஞ்சுறேன்... கதர்றேன். 'அப்பதான் ஸ்க்ரீன்ல இயல்பா இருக்கும்’னு வெச்சு வெளுத்து வாங்கிட்டாங்க. ரொம்ப நொந்துட்டேன். டப்பிங்ல பார்த்தா, அந்த சீன் பத்தே நொடியில பாஸ் ஆகிருச்சு. என் மேல அவங்களுக்கு ஏதோ கோபம்னு மட்டும் புரிஞ்சுக்கிட்டேன்!''



''ப்ரியா ஆனந்த், ரெஜினா... ரெண்டு ஹீரோயின்கள்கூடவும் கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கு?''



''பிரமாதமா வொர்க்-அவுட் ஆகி இருக்கு. ரெஜினாட்ட 'முருகா’னு சொல்லச் சொன்னா, 'முர்க்கா’னு சொல்வாங்க. இப்படி அவங்க வசனங்களைக் குதாம் பண்றதாலேயே, கேமரா ரோலிங்ல இருக்கிறப்பக்கூடச் சிரிப்பை அடக்க முடியாமச் சிரிச்சுடுவேன். ப்ரியா ஆனந்த் செம கலாட்டா பார்ட்டி. ஸ்பாட்ல காமெடி பண்ணி சீனைக் கலாய்ச்சுவிட்ருவாங்களோனு பயந்துக்கிட்டே இருப்போம். இப்படித்தான் ஒரு நாள் ஸ்பாட்ல ஒரு தாத்தாவைப் பார்த்து, 'தாத்தா... என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?’னு கேட்டாங்க. அவர் அலறி அடிச்சுட்டு ஓடிட்டார். விசாரிச்சா, அவர் இன்னும் பேச்சுலராம். அதான் தெறிச்சு ஓடிட்டாரு!''



''இந்தப் புது வருஷ சபதம் என்ன?''


''இப்போதைக்குப் புதுசு புதுசாப் படம் பண்ணணும். உடம்பை, மனசை ஃபிட்டா வெச்சுக்கணும். அவ்ளோதான். ஆனா, இந்த தேசிய விருது வாங்கணும், ஆஸ்கர் வாங்கணும்கிறதெல்லாம் அடுத்த வருஷ சபதமா எடுக்கலாம்னு வெச்சிருக்கேன்!''

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120609101458000000.jpg



''மறக்க முடியாத வெற்றி, தோல்வி, ஏமாற்றம், சந்தோஷம், கத்துக்கிட்ட பாடம்?''



'' 'மெரினா ரிலீஸ் ஆயிடுச்சு, அடுத்தடுத்து இவனுக்குப் படம் கமிட் ஆயிடுச்சு. சந்தோஷமா இருக்கான்’னு வெளில இருந்து பார்க்கிறவங்களுக்குத் தெரியும். ஆனா, அதுக்குப் பின்னாடி எவ்வளவு கஷ்டம், வருத்தம், துரோகம், சோகம் எல்லாம் இருக்குன்னு எனக்குத்தான் தெரியும்.


எங்க டீம்லயே ஒரு படம் எடுக்கலாம்னு பிளான் பண்ணி பக்காவா ரெடி ஆனோம். ஆனா, 'ஒரு பெட்டர் ஹீரோ வேணும்’னு என்னைக் கழட்டிவிட்டுட்டாங்க. ஆனா, அதே நேரம் தனுஷ் சார் கூப்பிட்டு, 'நீதான் ஹீரோ... இதுதான் டீம்’னு சொல்லி, 'எதிர்நீச்சல்’ மூலமா பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கார். சுத்தி நல்லவங்களை மட்டுமே வெச்சுக்கணும்னு பாடம் கத்துக்கிட்டேன். அதே சமயம், வெற்றி பயம் தருது. அடுத்து என்னன்னு திகிலா இருக்கு. ஆனா, எல்லாத்தையும் தாண்டித்தானே போகணும்!''

http://reviews.in.88db.com/images/Priya-Anand-unseen-2012/Priya-Anand-unseen-2012-photo-shoot.jpg



நன்றி - விக்டன்


Ethir Neechal Making | Sivakarthikeyan - Priya anand - Dhanush | Anirudh | Latest Tamil Movie




a



Ethir Neechal - Promo Songs [HQ]






a



Ethir Neechal - Title Song - Anirudh ft. Yo Yo Honey Singh, Aadhi 

 

 

Ethir Neechal - Sathiyama Nee Enakku MP3