ஷாலினியின் சகோதரர் ரிச்சர்டு ரிஷி யை காதல் வைரஸ் படத்தில் பார்த்தது நினைவு இருக்கும்/அவர் வில்லனாக நடித்த படம் இது . கேரளாவில் ரேடியோ ஜாக்கியாக இருந்து தயாரிப்பாளர் கம் நடிகை ஆன புன்னகைப்பூ கீதா நாயகி ஆக நடித்து தயாரித்த படம் இது. ஒன்றரை மணி நேரத்தில் பார்த்து விடக்கூடிய குயிக் வாட்ச் படமான இது க்ரைம் த்ரில்லருக்கே உரித்தான் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உடன் இருந்தது . ஏ சர்ட்டிஃபிகேட் இருந்தாலும் கண்ணியமான காட்சிகள் கொண்ட படம் தான்
இது முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டது .. படத்தில் வரும் ஐந்து பாடல்களை ஐந்து வெவ்வேறு இசை அமைப்பாளர்களைக்கொண்டு இசை அமைக்கப்பட்டது
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு காஸ்மடிக் டாக்டர். அவருக்கு வரும் பேஷண்ட்ஸ் எல்லாம் பிரபலமான நடிகைகள் , மாடலிங்க் கேர்ள்ஸ் , செல்வச்சீமாட்டிகள்
வில்லனின் மனைவி தான் நாயகி . ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி.சமூக சேவகி .ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி வசூல் செய்து தருவது , நீதி வழங்க முயற்சி செய்வது இவை தான் இவரது பணி .கணவருக்கும் உதவியாக இருக்கிறார்
வில்லன் பெண்கள் விஷயத்தில் வீக். சாரி ரொம்ப ஸ்ட்ராங்க். பேஷண்ட்டாக தன்னைக்காண வந்த ஒரு மாடலிங்க் கேர்ளை லவ் பண்ணுவதாக சொல்லி வைத்திருக்கிறார்
மனைவி வீட்டில் இல்லாதபோது தன் கள்ளக்காதலியுடன் வில்லன் இருக்கும்போது குடி போதையில் ஓவர் டோசாக போதை மருந்து எடுத்துக்கொண்ட கள்ளக்காதலி திடீர் என இறந்து விடுகிறாள்
டெட் பாடியை டிஸ்போஸ் பண்ண முயற்சிப்பதற்குள் நாயகி வீட்டுக்கு வந்து விடுகிறாள். பிறகு ஒரு வழியாக நாயகிக்குத்தெரியாமல் வில்லன் டெட் பாடியை டிஸ்போஸ் பண்ணி விடுகிறான்
அடுத்ததாக வில்லனுக்கு புது சிக்கல் , இறந்து போன கள்ளக்காதலிக்கு ஒரு தங்கை இருந்திருக்கிறாள் , அது வில்லனுக்கு முதலில் தெரியாது. இப்போது வில்லனுடன் கள்ளக்காதலி இருக்கும் ஃபோட்டோக்களைக்காட்டி வில்லனை மிரட்டுகிறாள்
இதற்குப்பின் வில்லன் என்ன செய்தான் என்பது மீதி திரைக்கதை . எதிர்பாராத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் உண்டு . ராஜேஸ்குமார் , பிகேபி , சுபா கதைகள் , நாவல்கள் ரெகுலராகப்படிப்பவர்களுக்கு ட்விஸ்ட் எதிர்பார்த்ததாக இருக்கும்
வில்லன் ஆக ரிச்சர்டு. நடிப்பு வருதோ இல்லையோ நல்லா உடம்பு வந்து விட்டது. சரத்குமாருக்கு அண்ணன் போல இருக்கிறார். மச்சினர் அஜித் குமாரை விட வெயிட் போட்டிருக்கிறார். பொதுவாக தாடி வைத்த ஆண்களை , குடுமி வைத்த ஆண்களை எனக்கு பர்சனல ஆகப்பிடிக்காது . இவர் இரண்டும் வைத்திருக்கிறார்., சோ நோ கமெண்ட்ஸ்
நாயகி ஆக புன்னகைப்பூ கீதா கச்சிதமான நடிப்பு ,கணவன் ஒரு துரோகி என அறியும்போது அதிர்ச்சி காட்டுவதில் நல்ல நடிப்பு
கள்ளக்காதலி ஆக யாஷிகா ஆனந்த் சுமாரான தோற்றம், மிக சுமாரான நடிப்பு .நாயகி ஒரு தயாரிப்பாளர் என்பதால் அவரை விட அழகான பெண்ணை படத்தில் புக் பண்ணுவார் என எதிர்பார்க்க முடியாது
கள்ளக்காதலியின் தங்கை ஆக வருபவரும் சுமாரான முகம், மிக சுமாரான நடிப்பு தான்
படத்தில் , நாயகனோ , போலீசோ இல்லாதது ஒரு குறை
ஷைஜால் எடிட்டிங்கில் 90 நிமிடங்களில் ஷார்ப் ஆக கட் பண்ணி இருக்கிறார். அபிமன்யூ சதானந்தன் ஒளிப்பதிவு. நாயகியை அழகாகக்காட்டி இருக்கிறார். அப்படிக்காட்டினால் தான் சம்பளம் என தயாரிப்பாளர் சொல்லி இருக்கக்கூடும்
திரைக்க0தை எழுதி இயக்கி இருப்பவர் வினய் பரத்வாஜ்
சபாஷ் டைரக்டர்
1 வில்லன், நாயகி , வில்லி 1 , வில்லி 2 என நான்கே கேரக்டர்களை வைத்து மொத்தப்படத்தையும் முடித்த லாவகம்
2 தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த நாயகியான அவரை விட வில்லி 1 வில்லி 2 இருவரையும் சுமாரான அழகில் , காம்ரா கோணங்களிலும் சுமாராகக்காட்டிய சாமார்த்தியம்
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
ரசித்த வசனங்கள்
1 காலேஜ் ல நான் பெஸ்ட் ஸ்டூடண்ட் , பெஸ்ட் ப்ளேயர் , பெஸ்ட் பாய்
அண்ட் ஆல்சோ பெஸ்ட் லையர் ?
வாட்?
ஸ்டூடண்ட் நெட்ம்பர் ஒன்க்கு கோபம் வந்துடுச்சு போல
2 இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் டைமா?
நான் பார்க்காத பொண்ணுங்களா? ஆனா உலகத்துலயே அழகான பொண்ணோட இதுதான் ஃபர்ஸ்ட் டைம்
3 அன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்குள்ள நடந்த சம்பவம் ஒரு ஆக்சிடெண்ட் அவ்ளோ தான்
சரி , ஆனா ஆக்சிடெண்ட் ஒரே ஒரு டைம் தான் ந்டக்கனும்னு விதி இருக்கா என்ன?
4 யூ ஆர் ஃபைன்
நான் பெஸ்ட்டா இருக்கனும்னு ஆசைபப்டறேன், என் மாடலிங் தொழில்ல ஃபைனை வெச்சுக்கிட்டு குப்பை கொட்ட முடியாது
5 அவன் வெறும் கல் தான், அந்த சிலையை செதுக்கின சிற்பி நான் தான்
6 ரியாலிட்டி ஈஸ் டேஞ்சர் தன் ஃபிக்சன்
7 உன்னை இவ்ளோ அழகாப்பார்த்து எத்தனை நாட்கள் ஆச்சு ?
நீ என்னைப்பார்த்தாத்தானே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பணம் கேட்டு மிரட்டும் வில்லி ஓப்பன் ஆக தன்னை யார் என்று காட்டிக்கொண்டா மிரட்டுவார்?
2 டெட்பாடியை டிஸ்போஸ் செய்யும் முன் வில்லன் பாக்சை ஓப்பன் பண்ணி டெட் பாடி இருக்கிறதா? என செக் செய்ய மாட்டாரா?
3 பஞ்ச தந்திரம் படத்தில் வரும் ஒரு ட்விஸ்ட் இதிலும் வருகிறது
4 பொதுவாக ஆண்கள் திருந்துவது வரலாறு, சரித்திரத்தில் இல்லை , அதுவும் பெண் பித்தன் ஆன வில்லன் க்ளைமாக்ஸில் நாயகியிடம் தான் திருந்தி விட்டதாக சொல்வது காமெடி
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - ஏ என்றாலும் யூ தான்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் மிஸ்ட்ரி த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் ரேட்டிங் 2.75 / 5
Sila Nodigalil | |
---|---|
Directed by | Vinay Bharadwaj |
Written by | Vinay Bharadwaj |
Produced by | Punnagai Poo Gheetha |
Starring |
|
Cinematography | Abhimanyu Sadanandan |
Edited by | Shaijal P V |
Music by |
|
Production company | Esquire Productions |
Release date |
|
Country | India |
Language | Tamil |